Tuesday, November 25, 2008

ஏன் என்று தெரியவில்லை!!!

நான்
உன்னை மட்டும் தானே
தேடி வந்தேன்
ஏன்
என்னை மட்டும் ஊரே தேடுது
-------------------------------------------------------------
அடி சறுக்கி
விழுந்து விட்டாயாயென
உன்னை தடுக்க வந்த
என்னை ஏன்
அடி அடியை அடித்தார்கள்
--------------------------------------------------------------
மொத்தமா கொடு
என்று நீ சொன்னதிற்கு
முத்ததையா என கேட்ட
என்னை ஏன்
மொத்து
மொத்தினார்கள்
-----------------------------------------------------------------
நீ
வைத்திருக்கும் நாயை
நாய் என்றதற்கு
ஏன் என்னை
நாயாய் அடித்தார்கள்
---------------------------------------------------------------
[மேல இருக்கதுக்கு காரணம் தெரிஞ்சா சொல்லிபுட்டு போங்கோ, இப்படி எல்லாம் கவுஜ எழுதி "அஞ்ச நெஞ்சன்" பழமைபேசியை தொட முடியாதுன்னு எனக்கும் தெரியும்]


Thursday, November 20, 2008

பாரதி ராஜாவிடம் கதை சொன்னேன்!!

ஒரு பெரிய இயக்குநரிடம் கதை சொல்ல போறோம் என்கிற பயமும் மரியாதையும் எனக்கு இருந்தது, பாரதி ராஜாவின் அலுவலக வரவேற்பு அறையில் இருக்கும் போது,

ஒவ்வொரு நொடியும் நூறு யோசனைகளை செய்து கொண்டு
இருந்தது.யோசித்துக்கொண்டு இருக்கும் போது அவரோட உதவியாளர் வந்து,

"சார் உங்களை ௬ப்பிடுராங்க நீங்க போங்கோ"

எனக்கு உடம்பு எல்லாம் வேர்த்து விட்டது, கதவை திறந்தால் என்னோட கை ரேகை வியர்வை கதவில் பதிந்தது.

பாரதி ராஜா யாரிடமோ தொலை பேசியில் பேசிக்கொண்டு இருந்தார், என்னை பார்த்தும் உட்கார் என்று செய்கை செய்தார், என்னால் அமர முடிய வில்லை.
உரையாடலை முடித்து விட்டு என்னிடம் நேராக வந்து

"நீங்க தானே நசரேயன், வாங்க தம்பி உக்காருங்க"
என என் தோள் மீது கை போட்டு என்னை இருக்கையில் அமர வைத்தார்.

மனசிலே ஓரளவு தைரியம் வந்தது,குடிக்க ஜூஸ் வரவழைக்கப்பட்டது, குடித்து விட்டு கிட்டத்தட்ட சாதாரண நிலைக்கு வந்து விட்டேன்.கதைச்சுருக்கம் எழுதி வைத்த நோட்டை அவரிடம் நீட்டினேன்.

"இருக்கட்டும் நீயே கதையை சொல்லு"

தொண்டையை கனைத்து விட்டு கதையை சொல்ல ஆரமித்தேன்.

கதையோட ஆரம்பம் 1975 வது வருசத்துல, சங்கரன்கோவில் ஆடிதவசு திருவிழாவுக்கு ஏற்பாடுகள் சிறப்பா நடந்து கிட்டு இருக்கு, வழக்கம் போல சாதி வாரியா திருவிழாவுக்கான தேதிகளை பிரிச்சு விடுறாங்க, தேர் இழுக்கவும் யார் எங்க நிக்கனுமுனுன்னு பேச்சு வார்த்தைகள் நடக்கு.

எப்பவும் இல்லாத புது முறையா தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்களும் தேர் இழுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள், அது பொறுக்க முடியாமல் அனைத்து மேல் சாதி மக்களும் ஒன்னு சேர்ந்து, ஊரிலே இருந்த எல்லா கீழ் சாதி மக்களையும் ஊரை விட்டு அடிச்சு விரட்டி விடுறாங்க.அந்த அத்தியாயத்தை அங்கே முடித்து விட்டு, நிகழ் காலத்திற்கு கதையை சென்னைக்கு கொண்டு வருகிறோம், பொறியியல் கல்லூரியில் 3 ம் ஆண்டு படிக்கும் மாணவன் கதிர், அவன் கல்லூரிக்கு புதுசா வந்து சேருகிற ஷீலாவை
கண்டவுடன் காதல் கொள்கிறான்.

ஷீலா ஒரு கிறிஸ்தவள், இவன் ஒரு இந்து, ஷீலா எப்படியாவது தன்னை காதலிக்க வைக்க வேண்டுமென படாத பாடு படுகிறான் கதிர், முடிவில் வெற்றியும் பெறுகிறான், ஷீலா ஒரு நிபந்தனை விதிக்கிறாள், முதலில் தன் தந்தை சம்மதிக்க வேண்டும்.

ஷீலாவின் தந்தையை பார்க்க அவளது வீட்டுக்கு செல்கிறான், அங்கு செல்லும் கதிர், ஷீலாவின் தந்தையின் பூர்விகம் தெரிய வருகிறது. கதையை மறுபடியும் பின்னால இழுத்திட்டு போறோம், சங்கரன்கோவிலில் 1975 வருஷம் நடந்த கலவரத்திலே தாழ்த்தப்பட்ட சாதி தலைவர் தான் ஷீலாவின் தந்தை, அந்த கலவரதிலே வீடு வாசல் கலை இழந்து ஊரை விட்டு ஓடும் போது, ஒரு கன்னியாஸ்தரி இவர்களை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார், ஷீலாவின் தந்தைக்கு கோவிலில் மணி அடிக்கும் வேலையும் கொடுக்கிறார், இப்படியாக அவர் கிறிஸ்தவ மதத்திற்கு வருகிறார்.

1975 கலவரத்தை முன் நின்று நடத்திய ஊர் பெரியவரின் மகன் தான் கதிர் என்பது ஷீலாவின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. ஷீலாவின் அப்பாவும் ஒரு நிபந்தனை விதிக்கிறார், தன் மகளோட திருமணம் ஊர் அறிய நடக்கணும், எல்லா பெரியவங்க வாழ்த்துதளோடு நடக்கணும். இதோட இடைவேளை விடுறோம்

(டீ,காபி,சிகரட் குடிகவங்க, குடிச்சுபுட்டு வாங்க)

சங்கரன்கோவிலுக்கு திரும்பி வருகிறார்கள் கதிரும், ஷீலாவும், ஷீலா தன் ஒன்னு விட்ட சித்தப்பா வீட்டிலேயும், கதிர் தன்னோட வீட்டுக்கும் செல்கிறார்கள்.ஷீலா புளியங்குடி பொறியியல் கல்லூரிக்கு மாற்று வாங்கி மீண்டும் தனது படிப்பை தொடர்கிறாள் . தனது வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கதிர் முதலில் தன் அம்மா, பின் படிப்படியாக தனது காதலில் அடுத்த அடி எடுத்து வைக்கிறான். கதிரின் தந்தைக்கு தெரியாமல் இவ்வளவும் நடக்கிறது.

கதிரின் தந்தை ஊரில் உள்ள தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இதனை தடுக்க முடியாத நிலையில் தன் காதலை அவன் தந்தையிடம் சொல்ல்கிறான். தனது எதிர்ப்பை வெளிக்காட்டாவிட்டாலும், அவரால் சாதி கலவரத்தை மீண்டும் தூண்ட முடியாத நிலையில் மதக்கலவரத்தை தூண்டி விடுகிறார்.அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.

அதோடு கதையை முடிக்கிறோம் எல்லாத்தையும் கேட்டுட்டு ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுட்டு, பாரதி ராஜா என்னை பார்த்து தம்பி கதையோட முடிவுல காதலன் காதலி சேருகிற மாதிரி இருந்தா தான் ஒரு புரட்சிகரமா இருக்கும்.
எதிர் பாக்காத இந்த கேள்விக்கு பதில் சொல்ல கொஞ்சம் தயங்கி அப்புறமா

"நாம புரட்சி பண்ணினா மட்டும் போதுமா?

படம் பார்கிறவங்க அதை நடை முறை படுத்தலைன்னா?

திரை படங்களை பார்த்து யாரும் திருந்தினதா வரலாறு இல்ல சார்,அதனாலே உண்மையை உள்ளபடியே சொல்லிவிடுவோம். "

"நீ சொல்லுவதும் உண்மைதான், படத்திலே புரட்சி பண்ணி அரசாங்க
நடைமுறைகளை மாத்த முடியுமா?முடிவை மாத்த வேண்டாம்.கதைக்கு திரைக்கதை எல்லாம் தயாரா இருக்கா?"

"எல்லாம் இருக்கு"

பதில் சொல்லி விட்டு என் திரைக்கதை புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
வாங்கி கொண்டு

"தம்பி,தமிழ் ஈழ பிரச்சினையிலே தலையிட்டு இருக்கிறதாலே, இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் ஓயட்டும், ரெண்டு மாசம் கழிச்சு என்னை வந்து பாரு, நாம மத்த விசயங்களை பத்தி பேசலாம்"

நெடு நாள் கனவு நனவு ஆனதிலே ஆட்டம் போட்டேன் ரெண்டு நாளைக்கு, அப்புறமா வழக்கம் போல வேலையை ஆரமித்து விட்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் செய்தி தாள்களில் பாரதி ராஜாவின் புதிய பட அறிவிப்பு வெளியானது.

எனக்கு ஒரே குழப்பம்,சரியா தூங்க முடியலை, அதை பத்தி யோசிச்சே அலுவலகத்துல வேலையும் ஓடலை, பாரதி ராஜாவை நேரிலே பார்க்க முடிவு பண்ணி அலுவலகத்துக்கு போனா, அவரை பத்தி யாரும் சரியா தகவல் சொல்ல வில்லை. குறைந்த பட்சம் ஒரு மாதமாவது அவரை தேடி அலைந்து இருப்பேன்.

நண்பர்களிடம் இந்த விவரங்களை சொன்னேன், என்னை நல்ல திட்டி புட்டு நீதி மன்றத்துக்கு போகலாம்னு சொன்னாங்க.எனக்கு என்னவோ அதிலே உடன்பாடு இல்லாவிட்டலும், நானும் அதை பத்தி தீவிரமா யோசித்தேன்.

"வழக்கு போடலாமா?.. வேண்டாமா?.."

"வழக்கு போடலாமா?.. வேண்டாமா?.."

"போட்டாச்சு.. போட்டாச்சு.."

"போட்டாச்சு.. போட்டாச்சு.."

"என்ன வழக்கு போட்டாச்சா?.."

"டீ போட்டாச்சு.. டீ போட்டாச்சு எந்திரி..குடிச்சு புட்டு ஆபீஸ் க்கு போற வழிய
பாரு."

எங்க வீட்டுல என்னை இவ்வளவு மரியாதையா யாரு ௬ப்பிடுவாங்கன்னு எனக்கு தெரியும்.


Wednesday, November 19, 2008

தமிழ் மண "ம" திரட்டியை உங்கள் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

யோசனை ரெம்ப கேவலமா இருந்ததுன்னா மன்னிச்சுகோங்க, கால் டாக்ஸி எடுத்துகிட்டு வீட்டுக்கு வரவேண்டாம், நல்ல இருந்ததுன்னா டாக்டர் பட்டமும் வேண்டாம்.ரெம்ப காலமா எனக்கு கஷ்டம்மா இருந்ததுன்னு நான் சொல்ல முடியாது, ஏன்னா இது காத்து வாங்குற கடை. சொல்ல வந்ததை சொல்லுடுறேன்.


தமிழ் மண சாம்பவாங்க மறுமொழி "மா" திரட்டிக்கு போய் ஒவ்வொருதடவையும் அவிங்களோட இணைய தள முகவரிய கொடுத்து மறுமொழி திரட்ட வேண்டிய இருக்கு, இதுக்காக அவங்க செலவழிக்கிற நேரத்துல்ல ரெண்டு பதிவு போட்டுடுவாங்க. அவிங்க கஷ்டத்தை போக்க கண்டுபிச்ச குறுக்கு வழி தான் இது.


1.உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)

2.Click on layout

3)Click on Add a Gadget4)Click on HTML/JavaScript5) In the "Configure HTML/JavaScript", Place the below script "Content" text
<a href="http://www.tamilmanam.net/ping_feedback.php?url=http://yesuvadian.blogspot.com" target="_blank">தமிழ் மண "ம" திரட்டி</a>

from the above instead of "http://yesuvadian.blogspot.com", place your blog name for example, if kudukudppai is going to add, he should have the script like below.

<a href="http://www.tamilmanam.net/ping_feedback.php?url=http://kudukuduppai.blogspot.com" target="_blank">தமிழ் மண "ம" திரட்டி</a>
6) Your Gadget will appear in your blog main page, just click the newly added to link to refresh your commentsலாபம்:

தமிழ்மணம் இணையத்தளத்துக்கு வந்து உங்கள் பதிவின் மறுமொழி திரட்ட வேண்டிய அவசியம் இல்ல

நஷ்டம் :

தமிழ்மணம் மறுமொழி திரட்டும் முறையை மாத்தினால் இதை குப்பையிலே போட வேண்டியவரும்

ping_feedback.php பக்கத்தின் பெயரையோ மாத்தினால் நாமும் மாத்த பக்கத்தின் பெயரை மாத்த வேண்டிய வரும்

இவ்வளவுதான் நான் சொல்லவந்தது, இனிமேல நீங்க தான் சொல்லணும் (ஆங்கிலம் அதிகம் கலந்ததுக்காக வருத்தம் தெரிவிச்சுகிறேன்)


Saturday, November 15, 2008

சிறகு விரித்தால்-கல்லூரியில் முதல் பரிசு பெற்ற கவுஜ


கதிரவன் சிறகு விரித்தால்

தாமரை மலரும்

சந்திரன் சிறகு விரித்தால்

அல்லி மலரும்

மொட்டுக்கள் சிறகு விரித்தால்

மலர்கள் மலரும்

மலர்கள் சிறகு விரித்தால்

மணம் மலரும்

கன்னியின் கடைக்கண் பார்வை சிறகு விரித்தால்

காதல் மலரும்

இதயம் சிறகு விரித்தால்

மனித நேயம் மலரும்

மனித நேயம் சிறகு விரித்தால்

ஒற்றுமை மலரும்

முக்கிய அறிவிப்பு : இது ஒரு மீள்பதிவு


தீவிரவாதியா? பைத்தியாமா?

முன் குறிப்பு:
தயவு செய்து இலக்கிய மனசுக்காரங்க கிழே போங்கோ, இளகிய மனசுக்காரங்க மேல போகலாம்.

குண்டு வைக்கவில்லை
வெடி குண்டு
குண்டு வைக்கவில்லை
பொட்டியை தூக்கவில்லை
ஒட்டு
பொட்டியை தூக்கவில்லை
பிரிக்க சண்டை போடலை
நாட்டை
பிரிக்க சண்டை போடலை

பேசச்சொன்னேன்
தமிழ்
பேசச்சொன்னேன்

தீவிரவாதின்னு சொன்னார்கள்
என்னை
தீவிரவாதின்னு சொன்னார்கள்

பைத்தியமுன்னு சொன்னார்கள்
என்னை
பைத்தியமுன்னு சொன்னார்கள்
பின் குறிப்பு: என்னை கவுஜ எழுத சொன்ன குடுகுடுப்பையை யாரும் தொட்டா அமெரிக்காவே அதிரும்


Tuesday, November 11, 2008

சூழ்நிலை கைதி

திவால் ஆகி போனே லேஹ்மான் பிரதர்ஸ் ல கண்ணன் வேலை செய்து கொண்டிருந்த காலம், மதியம் மணி 1.30 பசி இல்லையானாலும் சாப்பிட போக வேண்டிய கட்டயாம்.

அலைபேசியில் மணி ஒலித்தது, எடுத்து விட்டு யாருக்கும் கேட்காத படி தமிழில் இதோ கிளம்பி விட்டேன் இன்னும் 5 நிமிசத்துல இருப்பேன், "ஐயம் ஸ்டார்டிங் நவ்" என சத்தமா சொல்லிட்டு கிளம்பினான், அவன் அலுவலகத்திற்கு பின்னால் இருக்கும் உத்சவ் உணவு விடுதியை அடைந்தான், சுற்றும் முற்றும் தேடினான், தான் சந்திக்க வேண்டிய பெண்ணை கண்டதும், அவளை பார்த்து கை அசைத்தான், அவளும் பதிலுக்கு கை அசைத்து விட்டு இவனை நோக்கி வந்தாள். புகை படத்திலே பார்த்ததை விட மிக அழகாக தோன்றினாள்

இருவரும் அறிமுகம் செய்து கொண்டும், சாப்பாட்டு தட்டுகளை எடுத்து விட்டு தேவையான உணவு வகைகளை எடுத்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்தார்கள்.அங்கே நிலவிய சிறு மவுனத்தை உடைத்த கவிதா
"இந்த ரெஸ்டாரன்ட்ல சாப்பாடு நல்லாவே இல்லை"
"ம்ம்.. என்ன சொன்னீங்க"
"ஒரு அழகான பெண் உங்க முன்னாடி இருக்கும் போதே உங்கள் கவனம் இங்கே இல்லையே?உங்க உள்ளத்தை கொள்ளை கொண்டு போன அந்த கள்ளி யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா ?"

"நீங்க புகை படத்தை விட நேரில் அழகாக இருக்குறீர்கள், அதை சொல்லத்தான் யோசித்து கொண்டிருந்தேன்.நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை,உங்களை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு, உங்களை கல்யாணம் பண்ணுறதுல எனக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை,இனி முடிவு உங்கள் கையில்"
"ம்ம்..நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஆளாக தான் இருக்கிறீர்கள், நீங்க சொன்னது எல்லாம் உண்மையா? கற்பனை கலந்த உண்மையா?"
"நான் சொன்னது எல்லாம் அக்மார்க் உண்மை, உண்மை தவிர வேறோன்றும் இல்லை"
"நான் என் முடிவை நேத்தே எடுத்தாச்சு,நான் கல்யாணத்திற்கு பார்க்கிற கடைசி மாப்பிள்ளை நீங்கதான்"
எப்படி சொல்லுறீங்க ?
"என்னைய கட்டிக்கிட்டு கஷ்டப்படப் போறது நீங்கதான்."
கண்ணன் வயறும் மனசும் நிறஞ்சது அந்த கடைசி வார்த்தையிலே
"இருந்தாலும் நீங்க அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு வரவேண்டும், எங்க அப்பா,அம்மா எல்லோரும் உங்களை சந்திக்கணுமுன்னு விரும்புவாங்க"
"கண்டிப்பாக"
"உங்களுக்கு போன் பண்ணி சொல்லுகிறேன் அப்புறமா.."
சாப்பாட்டுக்கான பில்லை கண்ணன் கட்டியவுடன் இருவரும் கிளம்பினர், கண்ணன் அலுவலகத்திற்கு வந்து வேண்டா வெறுப்பாக வேலை யை தொடர்ந்தான்.
கவிதாவின் அலை பேசி ஒலித்தது, எடுத்து
"ஹலோ சொல்லுங்க அப்பா"
மறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு ம்ம்... ஆமா.. இவைகளை தவிர ஏதும் மறுமொழி தெரிவிக்க வில்லை. கடைசியாய் பொறுமை இழந்தவளாய் "எத்தனை தடவை சொல்வது ஒரே விசயத்தை" அவள் முடிக்கு முன் மறுமுனை இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது
அடுத்த இரண்டு நாள்களுக்கு அலுவலக நிலைமை பற்றி யோசிப்பதிலே நேரம் செலவானது, மூன்றாம் நாள் கவிதாவிடம் இருந்து போன் வந்தது, வரும் ஞாயிற்று கிழமை அவளது வீட்டுக்கு வரச்சொன்னாள்.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனை வாசலில் நின்று கொண்டிருந்த நளினியின் அலைபேசி அலறியது, எடுத்தவள் "சொல்லுடி" என்றவள் சொல்லாமலே அழுதாள்,
மறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில்களை சொன்னாள்."திங்கள் கிழமை ஆபரேஷன்" அடுத்தது
"இன்னும் ரெண்டு லச்சம் வேணும்" அடுத்தது
"எப்படி ஏற்பாடு பண்ணுவாய்" அடுத்தது
"என்னது நீ ஞாயிற்று கிழமை இங்க வாரியா?"
அதோடு மறு முனை தொடர்பு துண்டிக்க பட்டது .
ஞாயிறு கலையிலே சுறுசுறுப்பாக இருந்தான் கண்ணன்,அவன் கவிதாவை சந்திக்க அவள் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தான்.
அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அவளிடம் தகவல் சொல்லாமலே போய்கொண்டுருந்தான், ரயில் நிலையத்தை வெளியே வந்த உடனே கவிதாவின் விலாசத்தை கை எடுத்துக்கொண்டு பார்த்தபோது அந்த வீடு எதிரிலே இருப்பதாய் அறிந்து கொண்டு அங்கெ போய் அழைப்பு மணியை அழுத்தினான்.
ஒரு ஸ்பானிஷ் தம்பதிகள் வெளியே சண்டை போட்டு கொண்டே வந்தார்கள். அவர்களை பார்த்து "நான் கவிதாவை பார்க்கணும்" என்று ஆங்கிலத்திலே கேட்டான். அவர்களுக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலே "இங்கு அப்படி யாரும் இல்லை" என்றார்கள்.
மீண்டும் ஒரு முறை விலாசத்தை காட்டியும் பலன் இல்லை, எங்கள் வீட்டிலே யாரும் வாடகைக்கும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, வெளியே வந்து கவிதாவின் அலைபேசியை தொடர்பு கொண்டான், அந்த எண் வாய்ஸ் மெயில் க்கு சென்றது. அதற்க்கு பிறகு ஒரு இருவது முறையாவது முயற்சி செய்திருப்பான். வெறுத்துபோய் வீட்டிற்க்கு திரும்பி வந்தான்
சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் நளினியும்,கவிதாவும்,அவளின் தந்தையும் பேசி கொண்டு இருந்தனர், கவிதா அப்பா
"நளினி ஆபரேஷன்னுக்கு வேண்டிய எல்லா பணத்தையும் கட்டியாச்சி, நாளைக்கு காலையிலே ஆபரேஷன், எல்லாம் நல்ல படியா நடக்கும், நீ ஒன்னும் கவலைப்படாதே "
"கவி நீ மட்டும் இல்லேன்னா" அதற்கு மேல பேச முடியலை நளினிக்கு.
"அமைதியா இரு எல்லாம் நல்ல படியா நடக்கும்".
நேற்றைய ஏமாற்றத்தை மறக்க முடியாமல், அலுவலகம் வந்து சேர்ந்தான் கண்ணன். வந்தவுடன் தான் தெரிந்து அலுவலகம் திவால் ஆகிவிட்டது என்பதையும் அவன் வேலை செய்யும் ப்ராஜெக்ட் ல இருந்து அனைவரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க, அவனுக்கு கொடுத்த அரை மணி நேரத்திலே அவனுக்கு வேண்டியதை எடுத்து விட்டு மறுபடியும் வீட்டு க்கு கிளம்பினான்.
போகும் வழியில் அலைபேசி அழைப்பு வந்தது, அதை எடுத்தவுடனே "கவிதா எங்க போனீங்க, நீ ஏன் போன் எடுக்கவே இல்லை ஞாயிற்று கிழமை."
மறுமுனையில் பேசியவர் தான் கண்ணன் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே இருந்து பேசுவதாகவும், அவன் வங்கி கிரெடிட் கார்டு லே இருந்து சமார் 10000 ஆயிரம் டாலர் எடுத்து இருப்பதாகவும், பணம் அளவு ஓவர் ட்ரபிட் ஆனதினாலே அதை தெரிவிக்க போன் செய்ததாகவும் சொன்னார்
அதே நேரம் அப்பல்லோ மருத்துவ மனை சென்னை யிலே, நளினி கவிதாவிடம்
"ஆபரேஷன் நல்ல படிய முடிஞ்சது, இனிமேல் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு மருத்துவர் சொல்லி விட்டார், போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருக்கு"
"நளினி நீ உங்க அப்பாகிட்ட இரு நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன்" கிளம்பி கான்டீன் சென்றாள், அங்கு கவி அப்பா நின்று கொண்டு இருந்தார்.
"அப்பா இனி நளினிக்கு நல்ல காலம் தான்"
"உனக்கு எந்த காலம்", "நீ பண்ணின காரியத்திலே எனக்கு உடன் பாடே இல்லை"
"அப்பா,இது நானா எடுத்த முடிவு இல்ல சூழ்நிலை எடுத்தமுடிவுக்கு நான் கட்டு படவேண்டிய காட்டயாம். நளினி மாதிரி எவ்வளவோ பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை களை நம்பி திருமணம் நிச்சயிக்க பட்டு ஏமாற்ற படுகிறார்கள். சட்டம் எல்லைகளை கடந்து சொல்ல முடியாமல் தவிக்கிறது. சட்டம் செய்ய முடியாதை மனு தர்மம் செய்ய வேண்டிய கட்டாயம். "
"நளினியோட அப்பா இந்த நிலைக்கு காரணமானவனை தண்டிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது, அதனாலே அவனை பின் தொடர்ந்து கல்யாண வலைக்கு வரவழைத்து அவனுடைய கிரெடிட் கார்டு நம்பர் யை என மொபைல் லில் படம் பிடித்தேன் ஹோட்டல் லிலே, அதை வைத்து அவன் பணத்தை திருடினேன்"
என்னதான் சட்டம் பேசினாலும் தன் மகளை நினைத்து பெருமை பட்டார்.
"அப்பா எனக்கு ரெம்ப பசிக்குது நான் ஏதாவது சாப்பிட வங்க போறேன்".அவள் போகிறதை எதோ புதிதாய் அவள் நடை பயில்வதை போல சந்தோசமாக பார்த்து கொண்டு இருந்தார்.

மறுநாள் நியூ யார்க் மருத்துவமனை யிலே கண்ணன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான், மருத்துவர்கள் அவன் நண்பர்களிடன் மிகுந்த மன அழுத்தத்தால் அவன் தன்னினலை மறந்து விட்டான்.
(முற்றும்)


Friday, November 7, 2008

சிலையா? அது சேலையா?

இந்திய மக்கள் தொகைக்கு ஏறக்குறைய சமமா இருக்கிறது நம்ம ஊருல இருக்கிற அரசியல் வாதிகளின் சிலைகள். இந்த காலசாரத்தை நாமளா கண்டு பிடிச்சோமா இல்ல வழக்கம் போல வெளி நட்டுகாரன்கிட்ட கடன் வாங்கிட்டு வந்தோம்னு தெரியலை.ஒரு ஒய்வு பெற்ற நிதிபதி தலைமையிலே விசாரணை கமிசன் வச்சாலும் விடை கிடைப்பது ரெம்ப கஷ்டம்.

ஏற்கனேவே இருக்கிற சாமி சிலைகளை பறக்கும் படை, அதிரடி படை இப்படி பல படைகளை வைத்து காப்பாத்த கடுமையா கஷ்டப்பட்டு கிட்டு இருக்கோம்.அரசியல் தலைவர்களின் சிலையை வைத்து அவர்களுக்கு அரசியல் சாயமும் சாதி சாயமும் பூசி வைத்து விடுகிறோம்.ஆள் பற்ற குறையால, இருக்கிற சிலைகளை பாது காக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்து பன்னாட்டு படைகளை வரவச்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்லை


இந்திய மக்கள் மதம்,இனம்,மொழி இதெல்லாம் தவிர்த்து அதிகமாக குரல் கொடுக்கிற ஒரு விஷயம் சாதி.வீட்டிலே அடுத்த வேலை சாப்பாடுக்கு வழி இல்லை என்றாலும் சாதி என்று வந்துவிட்டால் மார்தட்டி கொண்டு சண்டைக்கு போகதும், சேறு தண்ணி இல்லாம சாதியை பற்றி பேசுவதும், தாய் தந்தை பாசத்தை விட சாதி பாசத்தையே பெரிதாக நினைகிரவங்க நிறைய பேர். இப்பேர்பட்ட ஆளுங்களின் தலைவர்களின் சிலைகளை அவமரியாதை செய்தால் விட்டுடுவாங்களா ?

கடை அடைப்பு, பஸ் கொளுத்துதல்,கல் எரி, மண்டை உடைப்பு இப்படி பல திரு விழாக்களை நடத்தி விடமாட்டோம்


வெளியூர் கார ஆளுங்களுக்கு அரசியல் சாயம் கலந்த சிலை, உள்ளூர் கார ஆளுங்களுக்கு அரசியலும், சாதியும் கலந்த சிலை.சிலைகளை வச்சதோட விடுறோமா, அதுக்கு மலை மரியாதையை, கெட வெட்டி பொங்கல்,படையல் எல்லாம் பண்ணுறோம்.


இது எல்லாம் பிடிக்காமால, இல்ல மாலை வாங்க காசு இல்லாம செருப்பு மலை போடுறாங்களா என்னன்னு தெரியலை. இங்க ஆரமிச்ச பிரச்சனை தமிழ் நாட்டுல மூலை முடுக்கெல்லாம் பரவி நாட்டுல எல்லா சிலையிலேயும் போகி பண்டிகை கொண்டாடுறோம்.


தமிழ் நாட்டு காவல் துறை பொது மக்களை பாது காக்கும் வேலைகளை விட்டு விட்டு சிலைகளை பாதுகாக்க கிளம்ப வேண்டிய இருக்கு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிற காவல் உயிர் அற்ற சிலைகளை காபாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால் உயிர்லுள்ள மக்களை எப்படி காப்பாத்து வாங்க?
நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சுன்னு எதை வச்சு கொடி பிடிக்கமுடியும்?

ஒரு மனிதன் இறந்த பின்பும் அவர்களை நிம்மதியாக தூங்க விடாமல் அவர்களை சிலையாய் எழுப்பி அவங்களை அவமானப்படுத்திற ஒரே ஊர் நம்ம ஊரா தான் இருக்கும் ன்னு நினைக்கிறேன்

தொண்டர்களாகிய நாம் தலைவர்களுக்கு மனதில் சிலை வைத்தால் நாட்டில் நடக்கும் பாதி பிரச்சனை தீர்ந்து விடும், மீதி பிரச்சனை அதுவாவே தீர்ந்திடும், காவிரி, ஒகேனகல்,தமிழ் ஈழம் தவிர

(மேற் கூறிய அனைத்து கருத்துகளும் எனக்கும் பொருத்தும் என்பதை மிக தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.)


Thursday, November 6, 2008

பாட்டி சுட்ட வடையும், Dora வும்

பாட்டி வடை சுட்ட கதை நம்ம எல்லோருக்கும் தெரியும். அந்த கதையிலே வாற வடையும், காக்கவும்,நரியையும் வச்சு அமெரிக்கா காரன் மூளை எப்படி எல்லாம் வேலை செய்யுது பாருங்க என்னை மாதிரி ஆளுங்களை போண்டி ஆக்கி,ஓட்ட ஆண்டியாகி மஞ்ச கடிதம் கொடுக்க அளவுக்கு போய் விட்டது.


சரி கதைக்கு வருவோம், பாட்டி வடை சுட்ட கதையிலே வார காக்காவை மண்டச்சி யாக்கி(டோரா) , அந்த வடை பிடுங்க அலையுற நரியை அப்படியே நரியாவே(ச்வைப்பர்) வச்சு,ஒரு வீணா போன கதைய பண்ணி, அதை பொடுசுகளை பாக்க வச்சி, என்னை மாதிரி ஆளுங்களை பைத்தியம் ஆக்கி விடுறாங்க.

நரி மண்டச்சி கிட்ட இருந்து பொருளை பிடிங்கி எங்கயாவது போட்டு விடும், அதை மண்டச்சி கண்டுபிடிக்க அவளோட நண்பர்கள் குட்டி குரங்கு (பூட்ஸ்) ரெண்டு பெரும் சேர்ந்து அதை தேட போவாங்க வழியிலே அவங்களுக்கு உதவி செய்ய உருப்படாத ஒரு பன்னி, அணில் இவங்க எல்லாம் வருவாங்க, கடைசியிலே நரி பிடிங்கி போட்ட பொருளை தேடி கண்டு பிடிப்பாங்க. இது தான் கதை.


அடப்பாவி மக்க இந்த இத்துப்போன கதைக்கு மாசத்துல நாலு டிவிடி வெளியிட்டு, அதை ஒன்னு விடாம வாங்க வச்சுருடாங்க. இந்த கர்மம் எல்லாம் எனக்கு எப்படி தெரியுமுன்னு நினைக்காதீங்க, எங்க வீட்டுல இருபத்தி நாலு மணிநேரமும் இதுதான் ஓடுது

கதையோட முடிவுல "we did it" ன்னு மண்டச்சி சொல்லி ஒரு குத்தட்டாம் வேற வரும், அதை பாத்துட்டு எங்க வீட்ல அத மாதிரி ஆட்டம் வேற, இதுல கொடுமை என்னன்னா நானும் சேர்ந்து அந்த குத்தட்டாம் ஆடனும், ஆடலைனா எனக்கு அடி வேற

இப்ப நான் எப்படி ஓட்டை ஆண்டி ஆகுறேன்னு சொல்லுறன், டிவிடி யோட தொல்லை விட்டதுன்னு சோகமா சந்தைக்கு அதாவது ஷாப்பிங் மாலுக்கு போன, அந்த கையில,காலுல, தலையிலே,உடம்புல,கண்ணுல போடுற எல்லாத்திலேயும் மண்டச்சி பல்ல காட்டி கிட்டு இருப்பா, சனியன் டிவிடி யோட நில்லம்மா பனியன் வரைக்கும் வருதேன்ன்னு நினச்சு முடிக்கு முன்னாடி, ஒரு ௬டைக்கு துணி மணியை அள்ளி போட்டு வந்து

"அப்பா நான் எல்லா டோராவையும் வாங்கிட்டேன்ப்பா, பில் போட்டு வாங்கிட்டு வந்து காசு கொடுப்பா" ன்னு ஒரு குரல் வரும்.

என்னால விக்கவும் முடியாம விழுங்கவும் முடியாம பாக்கா வேண்டியது வரும், அதெல்லாம் வாங்க முடியாதுன்னு சொன்ன, என் மகள் வைக்கிற ஒப்பாரியை அடக்க ரெண்டு நாளாவது ஆகும், நம்ம ஊருல சின்ன புள்ளைகளை எங்க வச்சி வேணாலும் நாலு சாத்து சாத்தலாம், ஆனா இங்க கைய வச்சா, நம்மளை கைமா பண்ணி, குறைஞ்சது ஒரு பத்து வருசமாவது உள்ளே தள்ளிடுவாங்க.


தலை விதியை நினைச்சுகிட்டு பில் போட போன, நீங்க 600 டாலர் க்கு வாங்கி இருகீங்க, உங்களுக்கு தள்ளுபடி போக 500 டாலர்னு சிரிச்சுகிட்டே சொல்லுவாங்க. நானும் பதில்லு வேண்டா வெருப்ப்பா பல்லை காட்டிகிட்டு வருவேன்.இது ஒரு தொடர்கதையா இன்னும் போய்கிட்டு இருக்கு

என் குடிய கெடுத்தவங்க படத்தையும் பாருங்க

மண்டச்சி
குட்டி குரங்கு
குள்ள நரி


Monday, November 3, 2008

வலை பதிவால் சந்தித்தவைகள்

பொழுது விடிஞ்சு பொழுது போன, இதே வேலைய போச்சு, வீட்டுல என்ன நடக்கு, ஏதாவது வேணுமா, இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?ஏன் எல்லாம் நல்லா தானே போகுது.அலுவலகத்திலே இருந்து வந்த உடனே கணனி முன்னாடி உக்கார்ந்து கிட்டா வீட்டுல செய்ய வேண்டிய வேலை எல்லாம் யாரு செய்வார்?

இல்லை இதெல்லாம் படிச்சுட்டு கருத்து சொல்லலைனா யாரும் சம்பளம் கொடுக்கமாட்டாங்களா?நாங்க இணைய தளம் வழியா தமிழ் வளர்க்கிறோம், ஏன் உனக்கு பிடிக்கலையா?ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் திருட்டு தனமா எல்லா படத்தையும் டவுன்லோட் பண்ணி பார்க்கிறேன். நீங்க ஒரு தனி உலகத்திலே இருகீங்க, எங்களை பத்தி கவலை படறதே இல்லைன்னு சொன்ன. அதனாலே உங்களை எல்லாம் தொந்தரவு பண்ண ௬டாதுனு பதிவு எழுத ஆரமிச்சேன்அதுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை .
நான் தெரியாம தான் கேட்கிறேன், வீட்டு வந்தா மக்க மனுசன்கிட்ட ஒரு நாலு வார்த்தை பேசனும்ன்னு தோணலையா?
நீ என்ன வேலை செய்த?

வீட்டுல இருக்க சின்னது என்ன பண்ணுது?
இப்படி ஏதாவது கவலை இருக்கா?
நான் ஒருத்தி மாடு மாதிரி கத்திகிட்டு இருக்கிறது காதிலே விழுதா?


ஹும் .. என்ன சொன்ன?ஹும்.. சோத்துக்கு உப்பு இல்லன்னு சொன்னேன்.இப்ப நீங்க எழுந்து வரலை, நான் கம்ப்யூட்டர் யை ஆப் பண்ணிடுவேன் .சரி சொல்லு கேட்கிறேன், என்ன பிரச்சனை உனக்கு?நீங்க குடும்பம் நடத்துற லட்சனம் இதுதானா?வீட்டுல காய்கறி இல்லை, அரிசி இல்லை, துணி துவைக்க வில்லை, பாத் ரூம் கழுவலை இதெல்லாம் யாரு செய்ய?ஏன் எல்லாம் காலி ஆகிடுச்சா?நாம கடைக்கு போய் ரெண்டு மாசம் ஆச்சு, போனாதானே எல்லாம் வங்க முடியும். நீங்க கம்ப்யூட்டர் கழுத்தை கட்டி கொண்டு கிடந்தால், நான் என்ன செய்ய முடியும்?

உங்களுக்கு ஆபீஸ் ல சம்பளம் இதுக்கு தான் கொடுக்கிறார்களா?

இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும், யாரு இந்த வீட்டுல இருக்கனுமுன்னு, நானா இந்த கம்ப்யூட்டர் யா?ஏன் இப்படி கொலை வெறி கோபத்திலே இருக்க இப்ப, நான் எதோ கொலை குத்தம் பண்ணின மாதிரி கேள்வி கேட்குற?எனக்கு வார ஆத்திரத்திலே என்ன செய்யணுமுன்னு தெரியலை, உங்களை மாதிரி தமிழ்ல எழுதுற எல்லோருமே இப்படி குடும்பத்தை கவணிக்காம தான் இருக்காங்களா?இந்த கேள்விக்கு மட்டும் என்கிட்டே பதில் இல்லைஎன்னவோ நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒன்னு விடாம பதில் சொல்லி தவிச்சுட்டீங்க.நீ ரெம்ப சூடா இருக்க, சுட சுட ஒரு காபி கொடு, குடிச்சுகிட்டே பேசுவோம்.வீட்டுல பால், சர்க்கரை எல்லா தீர்ந்து ரெண்டு வாரம் ஆச்சு, உங்க பாணியிலே சொன்ன சரக்கு தீர்ந்து போச்சு .இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும். யாரு முக்கியமுன்னு நானா? கம்ப்யூட்டர்யா ?

வர வர உனக்கு எது ௬ட போட்டி போடுறதுன்னு ஒரு வரம்பே இல்லாம போச்சு, அது ஒரு வாயில்லா பூச்சி.

கம்ப்யூட்டர் ரால நான் தான் வாயில்லா பூச்சி ஆகிவிட்டேன்.ஹலோ நான் இங்க பேசிகிட்டு இருக்கேன், மறுபடியும் அங்கே என்ன பாத்து கிட்டு இருகீங்க உங்களை... ( கன்னம் இரண்டியும் பிடித்து கிள்ளு, தலை முடியை இழுத்து ஆட்டு, இவ்வளவும் பண்ணி மடி கணினியை யும் ஆப் செய்து விட்டாச்சு)