Tuesday, April 7, 2009

ஐ.டி அவலம் - சங்கு

மொத ரெண்டு பாகம் பாகம் 1,பாகம் 2
மத்தபடி மொக்கை கிழே
***************************************************************
காலையிலே அலுவலகம் கிளம்பும் போது வயறு புளி சாதம் கிண்ட முடியாத புளியை கரைக்கும்.ஆனாலும் கடமை தவறாம செல்வேன், அன்றைக்கு போன உடனே ஹெச்.ஆர் அழகி என்னைப்பார்த்து வணக்கம் சொன்னங்க. நானும் வணக்கம் சொல்லி விட்டு போக போனேன், மறுபடி என்னை ௬ப்பிட்டு

"உங்க பழைய டாமேஜர் எப்போதும் பிஸி யா?"
நாயர் கடைக்கு போன் போய் இருக்கு, அவன் சொன்ன மாதிரியே செய்து இருக்கிறான். அவனுக்கு நல்ல கடையிலே டீ வாங்கி கொடுக்கணும்

"ஆமா, சில சமயம் எனக்கே சந்தேகம் வரும், அவரு உண்மையிலே தூங்கு வாரான்னு"

"உனக்கு ஒன்னு தெரியுமா, அவன் என்னோட முன்னாள் டாப் 10 பாய் பிரண்டுல ஒருத்தர்"

இப்படி ஒரு தர வரிசையை நான் அப்பத்தான் கேள்வி பட்டேன், நானும் துண்டு போடலாமுனா, பத்து குள்ள வர ஒரு பத்து வருசமாவது ஆகும்.ஹும்.. என்ன செய்ய "பல் இருக்கவன் பக்கடா தின்பான்."

அவரு பேரை சொல்லி "ரெம்ப நல்ல மனுஷன்"

நான் அவரை கனவுல ௬ட பாத்தது கிடையாது, இருந்தாலும் அவங்களுக்கு ஆமா சாமி போட்டு வச்சேன், நான் அடுத்த முறை போன் பண்ணினால் உங்களை பத்தி சொல்லுறேன்.

"சோ ஸ்வீட்"

அதை கேட்டு மனசு காரமாகி போச்சி, அப்படியே பொடி நடையா இருக்கைக்கு சென்றேன்.அடுத்த அரை மணிநேரத்திலே அலுவலகம் பிஸி ஆகிவிட்டது, டேமேஜர் என்னிடம்

"நான் ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் ,மெயில் அனுப்பிய லிங்க்ல இருக்கிற பயிலை டவுன்லோட் பண்ணி சேவ் பண்ணுங்க"

இந்த அட்டு கருப்புலேயும் நான் சேவ் பண்ணாது தெரிஞ்சு போச்சேன்னு ரெம்ப அவமான போச்சு, முதல்ல போய் சேவ் பண்ணிட்டு வருவோமுனு கடைக்கு போய் சேவ் பண்ணிட்டு வந்தேன்.

நான் திரும்பி வந்த பத்து நிமிசத்திலே டாமேஜர் என்னிடம்

"பையில் என்ன ஆச்சி?"

"சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"

என்ன!!!

நான் திருப்பி சொன்னேன் "சேவ் பண்ணிட்டேன், ஆனா பையில் டவுன்லோட் பண்ணலை?"

வேகமா என் பக்கத்திலே வந்தாரு.

நான் கண்ணத்தை தடவி கொண்டு "பாருங்க சேவ் பண்ணிட்டேன்"

அவரு எதுவும் பேசாமல் என்னை ரூம் க்குள்ளே வரச்சொன்னார்

உள்ளே போனதும்

உங்களுக்கு asp தெரியமா?

ம்ம்..தெரியும்

என்ன அது ?

a..s..p.

அப்பவே கண்டு பிடிச்சிட்டாரு நான் பொட்டி கடையிலே ௬ட வேலை பார்க்கவில்லைனு,நீ இந்த இடத்தை விட்டு வெளியே வராதேன்னு சொல்லிட்டு வெளியே போனார், கொஞ்ச நேரத்திலே அலுவலக செக்யூரிட்டி வந்தார்.

"சார், உங்க பைய எடுத்து கிட்டு நீங்க கிளம்பலாம்,உங்களை வேலையை விட்டு தூக்கியாச்சி"

நான் என்னத்தை சொல்ல அவரு ௬ட பையை எடுத்து கிட்டு கிளம்பினேன், நான் போகும் போது யாரவது என்னைப் பார்கிறார்களான்னு எல்லோரும் உலக பிஸி யா வேலை செய்து கொண்டு இருந்தனர்


சட்ட சபையிலே குண்டு கட்டா தூக்கி போடுற மாதிரி எல்லாம் செய்யலை, மரியாதையா கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினாங்க, வெளியே வரும் போது வேலை தேடி நின்று கொண்டு இருந்த பெண்கள் என்னை பரிதாபமா பார்த்தாங்க, வேலை போனதை விட அது பெரிய அவமானமா இருந்தது.

இப்ப என்ன செய்ய வீட்டுக்கா?? சரக்கு அடிக்கவா ??
ஒரு சோக வெறி மனப்போரட்டம். கையை ஆட்டி யோசனை செய்து கொண்டு இருந்த என்னை பார்த்த ஒரு ஆட்டோ நண்பர்

"சார், ஆட்டோ வேணுமா"?

ஆட்டோ விலே ஏறிவிட்டேன்

"எங்கே போனும்"

"தண்ணி அடிக்க"

"எந்த பார்?"

"எதோ ஒன்னு" வழியிலே ஒரு இடத்திலே நிறுத்தி

"சார், இங்க நல்லா இருக்கும்"

"போகலாம் அண்ணே, நான் தனியா அடிக்க மாட்டேன், நீங்களும் வரணும்"

அடுத்த ரெண்டாவது வினாடி, நானும், ஆட்டோ நண்பரும் அரை குவாட்டரை காலி பண்ணி விட்டோம்.என் கதையை கேட்ட அவரு சோக மலை ஆகிவிட்டார், அடுத்த ரவுண்டுக்கு என்னை காசு கொடுக்க விடலை, என் கிட்ட காசு வேற இல்லை என்பது வேற விஷயம். அடுத்த அரை மணி நேரத்திலே அவருக்கு 500 ரூபாய் காலியாகி விட்டது, கொஞ்ச நேரத்திலே கடைக்கு வாரவங்க, போறவங்ககிட்ட கிட்ட எல்லாம் என் சோகத்தை சொல்லி ஒப்பாரி, அவரோட ஒப்பாரிலே யாருக்கு வேலை போச்சுன்னு எனக்கே சந்தேகம் வந்தது.

ஆட்டோ காரர் பணத்தை எல்லாம் சரக்கு முழுங்கி விட, நாங்க ரெண்டு பேரும் தள்ளாடி வெளியே வந்தோம், வெளியே வந்து பிரிவு உபச்சாரமா இலவச அழுகை காட்சி காட்டினோம், எங்க பாச மலரை பார்த்த வங்க எப்படி எங்களை அடிக்காம விட்டாங்கன்னு இன்னும் எனக்கு சந்தேகம்.

ஆட்டோ காரர் என்னை வீட்டிலே விடாம போகமாட்டேன்னு ஒரே அடம், தண்ணி பாசத்தை கட்டு படுத்த முடியுமா, நானும் சரி சொல்லி ஆட்டோ பக்கம் போனோம், ஆட்டோ நின்ன இடத்திலே ஒரு தெரு நாய் படுத்து இருந்தது, ஆடோவை எவனோ ஆட்டையை போட்டுட்டு போய்ட்டான், தண்ணி அடிக்கிற அவசரத்திலே சாவியை எடுக்க மறந்து போய்ட்டார்

ஆட்டோ சோகத்துக்கு மறுபடியும் ஒப்பாரி, போதை தெளிஞ்சா ஆட்டோ காரார் என்னை காலி பண்ணிடுவருன்னு அவரை மல்லாக்க படிக்க வைத்து விட்டு நான் வீட்டு ஓடி வந்தேன்.அறைக்கு சென்ற நான் கண்ட காட்சி என்னை உண்மையிலே அதிர்ச்சி படுத்தியது.

(மறுபடியும் வரும் அதிர்ச்சி )


Thursday, April 2, 2009

எனக்கு வேலை போய்டுச்சு

அலுவலகத்திலே காலையிலே ரெம்ப சுறு சுறுப்பா கடினமா வேலை பார்க்கிற மாதிரி நடித்து கொண்டு ரம்யா ஓசியிலே ஊட்டி போனதை ஏ.சி அறையிலே இருந்து போட்ட பதிவை படித்து கொண்டு இருந்தேன்.


டமேஜர் என்னை அழைத்தார், நான் பதிவை படித்து முடிக்காத நிலையில் அவரிடன் "ஒரு முக்கியமான வேலை ஐந்து நிமிஷம் கொடுக்க முடியுமா?""சரி முடிச்சிட்டு என் அறைக்கு வாங்க"

பதிவை படிச்சுபுட்டு கும்மி அடிக்க முடியலைன்னு வருத்ததிலே
டமேஜர் அறைக்கு சென்றேன், உள்ளே போனா அவரோடு பெரிய தலைகள் ரெண்டும், நுனி நாக்கு ஆங்கிலகாரியும் இருந்தாங்க, கதவை திறந்த நான்


"மன்னிச்சுடுங்க, நான் அப்புறம் வருகிறேன்"

"இல்லை.. உங்களுக்காத்தான் எல்லோரும் காத்து கிட்டு இருக்கோம்."௬ட்டமா தேடுற அளவுக்கு நான் ஏதும் நல்லது செய்யலையே ன்னு நினைத்து நாற்காலியிலே உட்கார்ந்தேன். நுனி நாக்கு ஆங்கில அம்மணி "நாங்க உங்க கிட்ட நம்ம கம்பெனி விதி 3000 , அதன் உள்பிரிவு 1001 படி பேச போறோம்"


"கம்பெனி யிலே இவ்வளவு விதி இருக்குன்னு தெரியாம போச்சே, எல்லாம் என் தலை விதி"


"நாங்க ஏன் இதை சொல்லுறோமுனா நாங்க விதி படிதான் நடப்போம்"


"போன மாசம் நிரந்தர வேலை பார்த்த நூறு பேரை சொல்லாம கொள்ளாம தூக்கி வீசுனீங்க, அந்த எந்த விதின்னு சொல்ல முடியுமா?"அந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லன்னு தெரியாம, சில பதிவை படிச்சிட்டு புரியாம இல்லாத தலை முடியை பிச்சுகிற மாதிரி அமைதியா இருந்தாங்க, உடனே

"நான் கொஞ்சம் ஓட்டை வாய், அதனாலே இப்படி ஒரு கேள்வியை கேட்டேன்,நீங்க ௬டி வந்த விசயத்தை சொல்லுங்க"

௬டி
இருந்த பெருசுல ஒன்னு"உங்க மேல புகார் வந்து இருக்கு, அதை பத்தி விசாரிக்கணும்"


அலுவலகத்திலே வேலை பார்க்காம பதிவை படிச்சு மொக்கை போடுறது இவங்களுக்கு தெரிஞ்சு போச்சு போல இன்னைக்கு சங்குதான்னு நினைச்சுகிட்டு, தெரியாத மாதிரி

போன மாதம் தானே "புகார் இல்லா ஆணி பிடிங்கி" ன்னு ஒரு விருது கொடுத்தீங்க, இப்ப புகார்னு சொல்லுறீங்க,
என் மேல வந்த புகார் என்ன?"

"அதை எப்படி சொல்லுறதுன்னு தெரியலை"

"நேர் முக உரையாடலுக்கு அழைச்சி தந்தி அடிச்சா சொல்ல முடியும், சும்மா சொல்லுங்க"

"உங்க மேல இண்டிசென்ட் ப்ரோபோசல் புகார் வந்து இருக்கு"" என்னால டீசெண்டா ப்ரோபோசல் எழுதவே தெரியாது, நீங்க என்னவோ சொல்லுறீங்க? ஆமா இண்டிசென்ட் ப்ரோபோசல் னா என்ன?"
"இன்னொருத்தர் துண்டு போட்ட இடத்திலே,அவங்களுக்கு தெரியாம நீங்க துண்டை போடுறது"


ஒ.. நீங்க அப்படி வாறீங்களா, நான் யாருக்கும் தெரியாம துண்டு போட்டேன்னு சொன்னது யாரு

"கம்பெனி விதி 20090 கீழ் 2 இன் படி அதை சொல்ல முடியாது"

"இ. பி.கோ விதியை கொடுமையா இருக்கு, எத வச்சி சொல்லுறீங்க"

"நீங்க ரெண்டு பெரும் அரசல், புரசலா பேசிக்கிறீங்க"

"ஐயா, ஆறு மாசத்துக்கு முன்னாடி, வேலை செய்யுற இடமா, இல்லை மெரீனா கடற்கறையானு சந்தேகமா இருந்தது, காசே வாங்காம இலவச திருமணம் பண்ணி வச்சீங்க, இப்ப என்னவோ பார்சல வந்த பிங்க் ஜட்டியை விற்கும் போது பிடிபட்ட ஆள் மாதிரி பேசுறீங்க,நீங்க எப்ப கலாச்சார காவல் சட்டத்தை கையிலே எடுத்தீங்க "

"இதோ பாருங்க உலகப் பொருளாதாரம் மந்தமா இருக்கு, நம்ம கம்பெனி யிலேயும் நிறைய பேருக்கு வேலை இல்லை,அதனாலே ஒவ்வொரு தொழிலாளியா ௬ப்பிட்டு நாங்க ரீவிவியு பண்ணுறோம்.

ஒ..உங்களுக்கு வேலை இல்லன்னா இப்படி ஒரு
வேலையை உருவாக்கி விடுறீங்க,எங்களை மட்டும் வேலையிலே இருந்து கடாசி விடுறீங்க

கம்பெனி லாபம் 50 சதவீதம் இருந்தது, இப்ப 49.9 சதவீதம் ஆகிப்போச்சி

அதுக்காக என் மேல இப்படி ஒரு வீண் பழி போடனுமா?

"இது வீண் பழியல்ல, எங்க கிட்ட ஆதாரம் இருக்கு, நீங்க எழுதின மெயில் எல்லாம் நாங்க பார்த்து இருக்கிறோம், இதோ பாருங்க மெயில் உங்க அனுமதி இல்லாம எடுத்தது, இதோ உங்க புது ஆளு போட்டோ"

போட்டோவை என்னிடம் காட்டினார்கள், அந்த போட்டோவை பார்த்த உடனே எனக்கு கொலை வெறி கோபம் வந்தது.

"அறிவாளிகள் நிறைந்த இடம்ன்னு பெருமை அடிச்சிகிட்டு, அறிவு ஒன்னை தவிர எல்லாம் இருக்கிற மாதிரி பேசினா எப்படி?, நீங்க காட்டின போடோவிலே இருக்கிறது என் புருஷன்"

"என்னது உங்க புருசனா?"

அவரு தான் என் புருஷன், இதோ கட்டின தாலி, நான் வளையல் செய்து போட்டு கிட்டேன், மனசுல வச்ச அடிகடி அவங்க அம்மா வீட்டுக்கு ஓடி போய்டுறாருனு குடுமி பிடியா கையிலே வச்சி இருக்கேன், இப்படி நகமும் சதையுமா இருக்கிற எங்களை அறுவை சிகிச்சை இல்லாம பிரிக்க நினைக்கிறது எப்படி நியாயம்

"நம்புற மாதிரி இல்லையே"

"அவரு கள்ளு புல்லா குடிச்சாலும், புல்லை புல்லா குடிச்சாலும் என் புருஷன் தான், இதோ எங்க திருமண சான்றிதல்.

"இவ்வளவு நேரமும் விதியை பத்தி பேசுனீங்க, இந்த விதியை கேளுங்க
என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, வீண் பழி சுமத்தின உங்களை எல்லாம் விதி 320 ன் கீழ் 2 ன் படி தண்டிக்க போறேன்"

"அப்படி ஒரு விதி நம்ம கம்பெனியிலே இல்லை"

"நான் சொல்லுறது இ.பி.கோ விதி"

"அம்மா தாயே எங்களை மன்னிச்சுடுங்க, நாங்க தப்பு பண்ணிட்டோம், அதற்க்கு பரிகாரமா உங்களுக்கு ரெண்டு வாரம் விடுமுறை தாரோம்"

"என் வீட்டுகாரக்கு?"

"நாங்களே உங்க வேலைக்கு கல்தா கொடுக்க முடியலையேன்னு கவலையா இருக்கோம்"

"என்னோட குடித்தனம் பண்ணுற என் புருஷன், நான் எங்க அம்மா வீட்டுக்கு போய்ட்ட குடியோட குடித்தனம் பண்ணுவாரு, எல்லாம் என் விதி"

பெருசு எதோ பேச வந்தவரை அமர்த்திய அம்மணி, ஒரு பெண் மனசு பெண்ணு க்கத்தான் தெரியும்,நீங்க உங்க புருசனோட ரெண்டு வாரம் விடுமுறையை கொண்டாலாம், இந்த கம்பெனி விதியல்ல மனி(சி)தாபிமான விதி.உங்களுக்கு சம்பளத்தோட வேலை போச்சி ரெண்டு வாரத்துக்கு