Wednesday, December 30, 2009

விமானத்திலே வெள்ளை அழகியுடன்

அலுவலகத்திலே இருந்து பணி நிமித்தமாக கனடா சொல்ல வேண்டியது இருந்தது, விமானம் எங்க ஊருக்கு மேல போகும் போது அதையே கொட்டாவி விட்டு பார்த்ததோட சரி,விமான நிலையம் குறித்து நண்பர்கள் முலமாக அறிந்து கொண்டதாலே அங்கே ஏதும் குழப்பமே இல்லை.

விமானம் வழக்கம் போல தாமதம் எனக்கு ஒரு பயம் எங்க அலுவலலகத்திலே இருந்து போன் பண்ணி என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவாங்களோன்னு, நல்லவேளை அப்படி ஏதும் நடக்கலை,தாமத விமானம் தட தட ன்னு  புறப்பட்டது,   என் இருக்கைக்கு  பக்கத்திலே யாருமே இல்லை


விமானம் கிளம்பி ஒரு மணி நேரம் கழித்து பக்கத்திலே ஒரு வெள்ளையம்மா பொட்டிய மேல வைக்க முடியாமல் தடுமாறி கொண்டு இருந்தார்கள்,உடனே அவங்களுக்கு உதவிக்கரம்  நீட்டி  இனாமா ஒரு நன்றியை வாங்கிகிட்டேன்.என் பக்கத்திலே இருந்த வெள்ளையம்மா கொஞ்ச நேரத்திலே வந்த பணிப்பெண்னிடம் என்னோவோ சொன்னாங்க ஆங்கிலத்திலே, அவங்களும் ஒரு கிளாஸ்ல கொண்டு வந்து கொடுத்தார்கள், தண்ணியிலே எழிமிச்சம் பழம் ஓரமா ஓட்டிகிட்டு இருந்தது, அதை  சாறு பிழிந்து போட்டுட்டு தண்ணியை மண்ட ஆரம்பித்தாள். குடிக்கிற தண்ணியிலே எலுமிச்சம் பழமா? யோசித்திகிட்டே இருந்தேன். வெள்ளையம்மா ஒரு நாலு ரவுண்டு போட்டாங்க,அது வரைக்கும் அமைதியா இருந்த வங்க என்கிட்ட பேச்சி கொடுத்தாங்க. 


அவங்க பேச ஆரம்பித்த அப்புறம் தான் தெரிந்தது மருந்து(உபயம் வால்பையன்)  குடிச்சி இருக்காகங்ன்னு, என்னையே உத்து பார்த்தாங்க, நான் பார்த்த இங்கிலிபிசு   படங்களிலே வசனம் பேசும் முன்னே உதட்டிலே உதட்டை வச்சி உள்நாக்கு வெளிநாக்கை எல்லாம் கடிப்பாங்க, அப்படி ஒரு வாய்ப்பு எனக்கும்  மருந்து மூலமா கிடைக்குதேன்னு நானும் பல்லை காட்டிட்டு இருந்தேன்.ஆனா அவங்க"உங்க பல் ரெம்ப அழகா இருக்கு" ன்னு சொன்னாங்க.


வெளிநாட்டு போற ஆர்வத்திலே புது பற்பசையிலே பல் விளக்கினது ரெம்ப உதவியா இருக்கு, வெள்ளையம்மாவுக்கு பிடிச்ச சோப்பு போட்டு குளிச்சி இருந்தா என்னையும் பிடிச்சி இருக்குமேன்னு நினைச்சேன்.


"பல்லு மட்டும் தானா?"


"உங்க பால் வடியுற முகத்திலே பால் போல இருக்க பல்லு தான் பிடிச்சி இருக்கு."

ஊரிலே படிக்காம பல் மருத்துவர்ன்னு சொல்லிக்கிட்டு திரிந்தவன்  கிட்ட பல் கட்டினதை கண்டு பிடிசிட்டாங்களோ எனக்கே சந்தேகமா போச்சி, என்னை இப்படி எல்லாம் இது நாள் வரைக்கும் யாரும் பாராட்டியது இல்லை.


நீங்க சிரிச்சா முத்தா இருக்குக்கு சொல்லிட்டு என் முகத்து கிட்டே வந்த வெள்ளையம்மா, என்னை முத்தம் கொடுக்க தான் வாராங்கன்னு நினைத்து நான் கண்ணை மூடினேன்,ஒண்ணும் கொடுத்த மாதிரி தெரியலை,கொஞ்ச நேரத்திலே கண்ணை திறந்து பார்த்தா ஆளையும் காணும்


நானும் தேடித் பார்த்தேன் கண்டு பிடிக்க முடியலை, அப்படியே எழுத்து நடைப் பயிற்சி செய்யுற மாதிரி தேடினேன், விமானத்தோட பின் இருக்கையிலே மட்டை ஆகி படுத்து கிடந்தாங்க, சரக்கின் சதியை நினைத்து மனசு பத்தி எரிந்தாலும் வேற வழி இல்லாம நான் இருக்கைக்கு வந்தேன்.


வந்தவன் நல்லா தூங்கிட்டேன்,முணு மணி  நேரம் கழித்து பக்கத்திலே ஆள் இருப்பதை உணர்ந்து எழுந்தேன். வெள்ளையம்மா பக்கத்திலே இருந்து உதட்டு சாயம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. விட்டதை பிடிக்கணுமுன்னு நானே பேச்சை ஆரம்பித்தேன்.

"எப்படி இருக்கீங்க?"

அவங்க என்னைய பார்த்து "யாரு நீ?"

இப்படி ஒரு கேள்வியை தாங்குற அளவுக்கு இதயம் ரெம்ப கடினமா இருந்தாலே தப்பிச்சேன்.


"நான் அதே பல் அழகன் தான்"

"பல்லை உடைச்சி புடுவேன், யாரு பல் அழகன்?, பக்கி மாதிரி இருக்க?"


இதோட விடலை.. இன்னும் நல்லா நாலு திட்டு திட்டிபிட்டு அவங்க பொட்டிய  எடுத்துகிட்டு, அந்த மட்டை இருக்கைக்குபோய்ட்டாங்க.ஒரு காதலனை காதலி பிரிஞ்சி போற மாதிரி துக்கம் தொண்டையை அடைத்து விட்டது


வெள்ளையம்மா போறதைப் பார்த்த பெருசு ஒண்ணு என்ன பிரச்சனை ன்னு கட்டப் பஞ்சாயத்து பேச வந்தது, அவர்ட்ட ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டு உட்கார்ந்தேன். இப்படி ஒரு அவமானத்தை சந்தித்த பின்னே சும்மா இருக்க முடியலை. அந்த பக்கமா வந்த விமான பணிப்பெண் கிட்ட என் பக்கத்திலே இருந்த வெள்ளையம்மாவுக்கு  என்ன கொடுத்தீங்கன்னு கேட்டேன்.


அவங்க எதோ புரியாத பெயரைச் சொன்னங்க, நான் எனக்கு அதையே கொடுங்கன்னு சொன்னேன் 


எப்பேர்பட்ட ஒரு நல்ல உள்ளத்தை சரக்கை வைத்து கல் எறிஞ்சிட்டு கலவரப் படுத்திட்டு  போன வெள்ளையம்மாவை நினைத்து  நானும் மண்ட ஆரம்பித்தேன், வாங்கி வாங்கி குடித்தேன், ஆறு ரவுண்டு போச்சி ஒண்ணுமே புரியலை, சரக்கு அடிச்ச ஒரு அருகதையே இல்லை, சந்தேகத்திலே பணிப்பெண்னிடம்

"எனக்கு மட்டும் ஏன் எலுமிச்சை சாறு கொடுத்தீங்க?"

"நீ தானே சொன்னே அவங்க குடிச்சது  வேண்டுமென?,
இருந்த எலுமிச்சம் பழத்தை எல்லாம் காலி பண்ணிட்டியே"


இருக்கையிலே அமர்ந்து  மனசிலே எழுந்த பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கலை  


 • வெள்ளையம்மா ஏன் தண்ணியிலே எலுமிச்சை பழம் கலந்து குடிச்சாங்க 

 • என்னைய பல் அழகன்னு சொல்லிட்டு, அப்புறமா பக்கின்னு சொன்னங்கன்னு

 • ஏன் அவங்க என் பக்கத்திலே வந்தாங்க, பின்னாலே என்னை ஏன் திட்டிட்டுபோனாங்கன்னு 
 
கிடைத்த கேள்விகளுக்கு என்னோட யூகமான பதில், வெள்ளையம்மாவோட விமான  இருக்கை என் பக்கத்திலே இருந்து இருக்காது, அவங்க மட்டையாகி கிடந்த இடமே அவங்களோட உண்மையான இடமா இருந்து இருக்கும், அங்கே இருந்து நல்லா சரக்கு அடித்து விட்டு,தெரியாத்தனமா என்னோட பக்கத்திலே வந்து போதையிலே என்னோட பல் அழகிலே மயங்கி இருக்கலாம்.போதை தெளிந்ததும் என்னோட உண்மையான கருப்பழகிலே மயங்கி மறுபடியும் அவங்க இடத்திற்கே திரும்பி போய் இருக்கலாம்.


Tuesday, December 29, 2009

தாமதமாய் வந்தேன்

அன்பே,


இனிமேலும் என்னால் தாமதிக்க முடியாது, உன்னை கண்ட நாள் முதலா உன்னோட தாமத எண்ணத்தாலே தடுமாறி உன் காதல் வலையிலே விழுந்தேன், காதலுக்கு வேகத்தடை அவசியம், அதற்காக தாறு மாறான தாமத தடைகளை என்னால் இனிமேலே சகித்து கொள்ள முடியாது, ஐந்து மணி என்பதை அதிகாலை ஐந்து என்று பொருள் கொண்டு ஒரு கள்வன் போல என் வீட்டு கதவை தட்டி நாயிடம் கடிபட்டு, அடிபட்டு ஓடிப்போன உனக்கு துண்டு போட்டு இருக்கிறேன் என்று வெளியே ௬ட சொல்ல முடியவில்லை.

உன்னோட தாமதங்களை வரிசைப் படித்ததினால் இந்த கடிதம் முடிவில்லாமல் போகும், ஒரு சிலவற்றை உன் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். காதலியை தெரிந்தெடுக்க, காதலை சொல்ல, குறித்த நேரத்திலே காதலியை சந்திக்க, அலைபேசி ரீ சார்ஜ், காதல் படி உள்ளிட்ட பல விசயங்களில் பொறுத்து கொண்டேன், இனிமேலும் என்னால் காத்து இருக்கும் அளவுக்கு பொறுமைஇல்லை.

இப்பவும் உனக்காக ரெண்டு மணி நேரம் காத்து இருக்கேன், நீ தாமதமா வந்தாலும், இந்த கடிதம் உனக்கு சீக்கிரம் கிடைக்கும்    
 

முக்கிய குறிப்பு :

நீ ரெம்பா நாளா கேட்டது கடிதத்தின்  கீழே இருக்கு

***************************************************************************


"என்னங்க கடிதத்துக்கு கீழே என்ன இருந்தது, அதைப் பத்தி சொல்லவே இல்லை"

"அது ஒண்ணும்மில்லை"

"ஒண்ணுமில்லாத விஷயத்தை யாரவது முக்கிய குறிப்பிலே எழுதுவாங்களா?"

"நான்  எதையுமே  தாமதமா செய்வதாலே, எனக்கு கிடைக்க வேண்டிய காதல் முத்தம், கடைசி வரைக்கு கிடைக்கவே இல்லை, அதனாலே அதை கடிதத்திலே உதட்டு சாயம் தடவி கொடுத்து இருந்தா?"

"காதலனுக்கு கிடைக்க வேண்டிய ஓசி முத்தம் கிடைக்கவில்லையே.. எனக்கு ரெம்ப அழுகையா வருது"

"இதுகெல்லாம் அழலாமா, அந்த முத்தம் அவளோடது  இல்லை, பக்கத்திலே இருந்த கிழவிகிட்ட கடிதத்தை கொடுத்து, கடன் வாங்கிய முத்தம்"

"இப்படிப்பட்ட ஒரு தெய்வீக காதலை விட்டுட்டு என்னை கை பிடித்த உங்களை எப்படி பாரட்டுறதுன்னு தெரியலையே?"

"உன்னையை மாதிரி ஒரு தங்கமான மணிக்கு கரம் நீட்டத்தான், என்னோட தாமத காதல் ஜெயிச்சி இருந்தா உன்னோட தங்க மனசு எனக்கு கிடைத்து இருக்குமா?"

இப்படியே கதை முடிந்து இருந்தால் எவ்வளவு சந்தோசமா இருக்கும், அப்புறம் நடைபெற்ற சம்பவங்களை சொல்லலன்னா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை.

மூன்று மதங்களுக்கு பிறகு :

என்னங்க 5 மணிக்கு வாரேன்னு 6 மணிக்கு  வந்து இருக்கீங்க?

ஹி.. ஹி .. ஹி

உங்க தாமத காதல் மாதிரி இதையும் நினைச்சி பிட்டீங்களா ?

ஆறு மதங்களுக்கு பிறகு :

"போன்ல யாரு இந்த நேரத்திலே?"

"என் நண்பன்"

"நண்பனா? இல்ல தாமத காதலியா ?"

"என்ன சொன்ன  ??"

"ஹும் .. சோத்துக்கு உப்பு இல்லைன்னு சொன்னேன், இந்த மாதிரி அர்த்த ராத்திரியிலே யாரு௬ட கள்ள கடலை போடுறீங்க"

"அடிப்பாவி இவன் என் ௬டப்படிச்சவன்"

"எங்கே நான் பேசுறேன் கொடுங்க"

"இல்லை கட் பண்ணிட்டான்"

"என்னைய கட் பண்ணிட்டு வா ன்னு சொன்னாங்களா?" 

"உன்கிட்ட தெரியாத்தனமா உண்மையை சொல்லிட்டேன்"

"அதனாலே தான் இப்ப எல்லாம் மறைமுகமா நடக்குதோ?"

ரெண்டு வருடம் கழித்து :

"என் வீட்டுகாரரு கல்யாணத்துக்கு ௬ப்பிட்ட எழவு  வீட்டுக்கு தான் வருவாரு,இப்ப ௬ட பார் 6 மணிக்கு அலுவலகம் விட்டா எழு மணிக்கு வாராரு, தாமதமா வாரத்திலே அவரு கில்லாடி"

"அடியே, உலகம் புரா என் புகழ் பாடி என்னை சந்தி சிரிக்க வைக்கனுமுன்னு கொலை வெறியோட இருக்கியே ஏன்?"

"நான் என்ன உங்க பழைய கதையையா சொன்னேன்?"

"ஒரு உண்மைய சொல்லுறேன் கேளு, என்னோட முன்னாள் காதலி பையன் ஸ்கூல் க்கு போய்கிட்டு இருக்கான்"

"இம்புட்டு விவரம் தெரிஞ்சு இருக்கா?, இன்னும் நிறையை சொல்லுங்க கேட்க ரெம்ப ஆவலா இருக்கேன்"


"அவளை எங்கே பார்த்தீங்க? எப்படி பார்த்தீங்க?"

..........................................

.........................................

25 ஆண்டுகள் கழித்து :

"எங்கே உங்க வீட்டுகாரர் ?"

"அவரு கொஞ்சம் தாமதமாத்தான் வருவாரு?"

"டாக்டர், இவ பல்லை மட்டுமல்ல, நாக்கையும் பிடிங்கி போடுங்க" 

"உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? ....ஒன்னும் பதிலே இல்லை ...ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க"

"அவரு கொஞ்சம் தாமதமாத்தான் கணக்கு பண்ணுவார், நான் சொல்லுறேன்"   

"எட்டு,ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ"

பல்லை பிடிங்கியாச்சி, நீங்க போகலாம்

எட்டு டாக்டர்.. எட்டு

நான் சொல்லலை அவரு தாமதமாத்தான் பதில் சொல்லுவார்ன்னு


Monday, December 28, 2009

அக்ரகாரத்து அழகு

மஹா கிட்ட பேசணுன்னு எல்லோரும் தவமா தவமிருக்கும் போது எனக்கு என்னவோ  அவளிடம் பேச வேண்டும் ஆர்வம் இல்லை, ஒருவேளை அவளிடம் பேசினால் நானும் மற்றவர்கள் மாதிரி அவள் அழகுக்கு அடிமை ஆகி விடுவேன் என்ற பயமாக இருக்கலாம், அப்படி இருந்ததாலோ என்னவோ என்னிடம் இந்த பொறுப்பை மகா ஒப்படைத்தாள்.


நான் சின்ன வயசிலே பாம்பு என்று பெயரை கேள்வி பட்டு ரெண்டு நாள் மயங்கி இருந்ததா சரித்திரம், அப்படி இருக்கும் போது என்னிடம் இந்த பொறுப்பை மஹா ஒப்படைத்ததாலே என்னவோ, இதை நானே தனியாளாக செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுத்தேன்.


 வேற யாரும் என்னோட ௬ட்டா இதை செய்தால், அவனுக்கும் அவளோட அன்பு கிடைக்குமே என்று நினைத்து, நானே இதை தனியாக செய்தேன். அவள் என்னிடம் கேட்டதை எடுத்துகொண்டு சைக்கிளை அழுத்தினேன், அவர்கள் வீடு இருக்கும் திசையை நோக்கி, போகும் வழியிலே என்னோட பெரியப்பா சொன்னது நினைவிலே வந்தது

"அவங்க வீட்டு பக்கம் எல்லாம் நான் சின்ன வயசிலே போய் இருக்கேன், அவங்க வீட்டு உள்ளே போனது கிடையாது,போகவும் முடியாது, அவங்களை எல்லாம் சாமி ன்னு தான் ௬ப்பிடுவோம், அவங்க முன்னாடி கையை  கட்டிக்கொண்டுதான் பேசுவோம்"

இப்ப நிலைமை எப்படின்னு தெரியலை, இருந்தாலும் அவளாக ௬ப்பிட்டதாலே எனக்கு கொஞ்சம் தைரியம் இருந்தது.இப்படியே நினைத்து கொண்டு மஹா வின் தெருவிற்கு வந்து விட்டேன். அந்த தெருவிலே ஆள் நடமாட்டம்  குறைவாக இருந்தது, பெரும்பாலான வீடுகள் பூட்டப் பட்டு இருந்தது, அங்கு மக்கள் வசிக்கும் அறிகுறியே தென்படலை.

வீடுகள்  எல்லாம் பாழடைந்து இருந்தது.என்னிடம் முன்றாம் வகுப்பிலே படித்த கிச்சா இதே தெருவிலே இருந்துதான் பள்ளிக்கு வந்தான், அதற்கு பின்னே ஊரை விட்டு போனவன் இன்றும் திரும்ப வில்லை.இந்த மாதிரி அக்கிரகார தெருவை விட்டு சென்றவர் எல்லாம் திரும்பி வராததாலே இந்த வீடுகள் இன்னும் பூட்டி கிடக்கிறது.எனக்கு பிடிச்ச மஹா இருக்கும் போது நான் ஏன் இவங்களை பத்தி கவலைப் படனும்

மஹா வீடு வந்தது, எப்படி அவளை ௬ப்பிடுவதுன்னு தெரியலை.. சைக்கிள் மணியை அடித்தேன்,  ஒரு பாட்டி வெளியே வந்து பார்த்தாங்க, என்கிட்டே எதுவுமே பேசலை, மறுபடி உள்ளேபோய்டாங்க.

கொஞ்ச நேரத்திலே மஹா வெளியே வந்தாள், என்னைப் பார்த்து கை யை காட்டிவிட்டு, என்னை இறங்கி வரச்சொன்னாள், நானும் அவள் பின்னால் போனேன், என்னை வீட்டிருக்கு பின் புறம் செல்லும் இடுக்கு வழியாக ௬ட்டி சென்றாள்.

"பிடிசிட்டியா?  எப்படி பிடிச்சே?"

"எங்க வீட்டிலே எலி இல்லாத இடமே கிடையாது, இதிலே உனக்கு ஒரு எலியை பிடிக்க கஷ்டமா?"

"எங்கே காட்டு?"

௬ண்டில் அடைபட்டு கிடந்த எலியை ரெம்ப ஆர்வமா பார்த்தாள், நான் அவளைப் பார்த்தேன்,இந்த பொறியிலே இருக்கும் எலியை வைத்து அவளோட மனசுக்கு பொறிவைக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து எனக்கு சந்தோசம்.

"எலிக்கு என்ன சாப்பாடு கொடுக்கணும்?"

"ஒன்னும் தேவையில்லை நான் ஒரு தேங்காய் துண்டு போட்டு இருக்கும், நாளைக்கு நீ உயிரியல் ஆய்வு ௬டத்திற்கு எடுத்து வரும் வரை அதையே சாப்பிடும் " 


"சரி.. சரி அதை அப்படியே ஓரமா வச்சிடு, என்னோட வீட்டுக்குள்ளே எடுத்திட்டு போக முடியாது, நீ நாம வந்த வழிய முன் வாசல் பக்கம் வா, நான் பின் வாசல் வழியா வந்து முன்னாலே வாரேன்"

முன் வாசல் வந்தேன்,வீட்டு உள்ளே பேசும் குரல்கள் கேட்டது, என்னோட பெயரும் அடிபட்டமாதிரி இருந்தது, ஒருவேளை என்னை தீவிரமா காதலிக்கிறதா மஹா சொல்லிட்டு இருக்காளோ என்று நினைத்து நானும் கேட்டேன்.

"யாரு,எந்த ஆத்து பையனோ, அவனை வீட்டு வரைக்கும் ௬ட்டிட்டு வந்து இருக்கே?,கண்ட ஆத்து பசங்க நம்ம வீட்டுக்கு வர௬டாதுன்னு தெரியாதா ?"

"நம்ம ஆத்திலே எலி பேரை சொன்னாலே எரிஞ்சு விழுறேள், உயிரியல் ஆய்வு௬டதிற்கு இல்லாம போன வாத்தியார் திட்டுவார்"

"அவா மாதிரி ஆட்களையெல்லாம் ௬ட்டிட்டு வாறது இது கடைசியா இருக்கணும்?"

அதற்கு மேலே அங்கே நிற்க  மனம்   இல்லமாமல் வேகமாக வெளியே வந்து சைக்கிளை அழுத்தினேன் என் வீட்டை நோக்கி,நான் போகும் போது அவள் வீட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டாலும், என்னால் திரும்பி பார்க்க மனம் இல்லை.


வரும் வழியிலே  பெரியப்பா சொன்ன சாமி ஞாபகம் வந்தது, மஹா இருந்த மனசிலே எங்க குலதெய்வம் சாமியை நினைத்தேன், இப்ப எல்லாம் மஹா கிட்ட  பேச பயமே இல்லை. மனசிலே கனம் இருந்தாதானே பேசுவதற்கு பயம் இருக்கும்.


Sunday, December 20, 2009

How to import large blog

பொறுப்பு அறிவித்தல்:
மொக்கையை தொழில்நுட்பரீதியிலே எப்படி கையாள முடியுமுன்னு யோசிச்சப்ப வந்தாத்தான் விபரீத விளைவு தான், கீழே இங்கிலிபிசு தாறு மாறா தடுமாறி இருக்கு, அதனாலே கடைப்பக்கம் வாரவங்க மன்னிக்கவும், வழக்கமான மொக்கைகள் மீண்டும் தொடரும்.Whoever is  tryed to import large blog would have faced problems in importing their blog, because,as of now google does not importing large blog, but if we split the blog posts and import them separately,we can upload large blog posts.Using GData API and Microsoft.NET a windows application is created to have smooth run on import and export.


Steps to install:

Download and Install BlogsplitterSetup.zip from the below link, if you are .Net developer, source code Blogsplitter.zip.The main features of the utility.

1. Exporting blogs posts
2. Splitting the exported ATOM xml files into chunks, i.e each posts and corresponding comments will have xml.
3. All the xml posts will be imported into another blog.


Exporting Blogs:

• Start--->Program files-->Shortcut to Primary output from Blogsplitter (Active) • Select “Export Blogger blog” and “go”

 •  The user name and password fields are one which we used to login to blogger.
 •  If you don’t know you blog id, just leave the blog id field empty
Blogger Splitter:

 •  In the main screen Select “Split blogger Export XML”• If we leave the max post size field empty 1000 kb is default

 • Click on "Exit" buttonBlogger Splitter:  •  In the main screen select “import blog”
 •  Blogname, the name of the blog to be imported
 •  User name and password to login to google accounts
 •  Blogid can be left blank, if you don’t know.
 •  Select folder is the folder where we have selected “destination folder” in blog splitter. • Please wait till you see completed message. • Login to blogger.com, you should be able to see all the imported posts, if you don't see them, please let me know with the details.

Capacity and limitations:

 • It can process the blog size up to 2 GB.
 • Google has limitation of importing blog size has more than MB, it limits till 1 MB.

Important note:

This utility will not be valid after Google resolves issues with importing large blog.
Sunday, December 13, 2009

இதயத்தை தந்தேன்

இன்று மாலை 3 மணி
*************************
டாக்டர் சீக்கிரம் வாங்க அந்த நோயாளிக்கு மூச்சி வாங்குது.

நான் உடனே வாறன்.(அடுத்த ஐந்து நிமிடத்திலே)

பல்ஸ் எப்படி இருக்கு, குறைந்து கொண்டு வருது


சரி சீக்கிரமா அறுவை சிகிச்சை அறைக்கு எடுத்திட்டு வாங்க


மூன்று மாதம் முன்பு
*************************
டாக்டர்   இதயத்திலே உங்களுக்கு ஒரு கோட்டையை கட்டி வச்சி இருக்கேன்.விட்டா வணிக வளாகம் கட்டி வாடைக்கு விடுவீங்க போல,மக்கள் எல்லாம் விவசாயம் செய்ய இடம் இல்லாம தவிக்கிறாங்க, மானாவாரியா இடம் இருந்தா சொல்லுங்க வரப்பு வெட்டி நாத்து நடலாம்.


நான் சொல்லுறது உங்களுக்கு புரியலைன்னு நினைக்கிறேன்.புரியுது, அவ்வளவு தெரியாம இவ்வளவு பெரிய படிப்பு எல்லாம் படிக்க முடியுமா?, எத்தனை நாளுக்கு இப்படி வசனம் பேசி காலம் தள்ளுவீங்க.


நீங்க யாராவது டாக்டரை காதலிக்கிறீங்களா?


உங்களுக்கு தேவை இல்லாத கேள்வி!!


கண்டிப்பா நீங்க யாரையும் காதலிக்கலைன்னு தெரியுது

எப்படி?காதலிச்சா சீக்கு வந்த கோழி மாதிரி தலையை மேசையிலே தொங்கபோட்டுகிட்டு இருப்பீங்க, எதாவது போன் வந்தா மருத்துமனையை இழுத்து மூடிட்டு முக்காடு போட்டு பேசிகிட்டு இருப்பீங்க.


காசையும், காலத்தையும் விரயம் பண்ணுறதுதான் காதலா?


நான் பார்த்த வரைக்கும் அப்படித்தான்.


இன்று மாலை 4 மணி

********************************
 
பல்ஸ் ரெம்ப குறைஞ்சி போச்சி,இப்ப என்ன செய்யலாம்?ஷாக் கொடுக்கலாமா?


எதாவது நம்பிக்கை இருக்கா?


எதுவுமே இல்லாத பட்சத்திலே செய்யுறதை நம்புறதை தவிர வேற வழியே இல்லையே. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு
***********************************
டாக்டர் இதயத்தை எப்படி இடம் மாத்துறது?ஒரு ஆறு மணி நேரம் ஆகும் இடம் மாத்த, ஏன் இந்த கேள்வி


இதயத்தை இடம் மாத்தினாத்தான் காதல் வருமாமே?


கண்டிப்பா பாடை தான் வரும், ஆனா காதல் வராது.


தானத்திலே சிறந்த தானம் எது டாக்டர்செய்யுறவங்களைப் பொறுத்தது, நீங்க என்ன நினைக்குறீங்க?


தனமாகிய உங்களுக்கு தானம் பண்ணுறது தான்.


ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தீங்கன்னா நம்பி இருப்பேன்.


காதல் வசனம் சொல்லி சந்தோஷ படுற அளவுக்கு நீங்களும் நானும் இன்னும் வாலிப புள்ளைங்க இல்லை?காதலுக்கு வயசு இல்லையே, கல்யாணம் ஆகாதவங்களை காதலிகிறது தப்பும் இல்லை.  


நாளை  இரவு பத்து மணி

**************************************
 
என்கிட்டே மருத்துவ பிரச்சனைக்கு வரும் போது எல்லாம் இதயம், மனசு ரெண்டையும் எடுக்குறது கொடுக்குறது பத்தி தான் பேசுவாரு, ஆனா இன்னைக்கு அவரோட இதயம், கல்லிரல், ஒரு கிட்னி, பெருங்குடல், ரெண்டு கண்ணு எல்லாத்தையும் நானே எடுக்க வேண்டிய நிலைமை.டாக்டர் கணக்கு ஒண்ணு குறையுது, ரெண்டு கிட்னி யல்லவா இருக்கணும்?


ஒண்ணு கொஞ்சம் அடி அதிகமா வாங்கி இருக்கு


அதனாலே எடுக்காம விட்டுடீங்களா?


எடுத்து மருத்துவ கல்லூரிக்கு ஆய்வு ௬டத்திற்கு அனுப்பி வைத்து இருக்கேன். (சொல்லிட்டு அவங்களுக்கு வந்த அழுகையை அடக்க முடியலை)அழாதீங்க டாக்டர், ஒரு கிட்னி வீணா போனதுக்காய், அடுத்த முறை வரும் போது கொஞ்சம் ௬டுதல் கவனம் செலுத்துங்க.

இப்ப ஒரு நல்ல இதயம் உள்ள மனுசனை எங்கே தேடுவேன்?வழி இருக்கு, எடுத்த இதயத்தை ஒரு நல்ல வாட்ட சாட்டமான ஆளுக்கிட்டே வைக்க சொல்லலாம்.


அவரோட மனசு இருக்குமான்னு தெரியலை, அதனாலே எடுத்த இதயத்தை திருப்பி கொடுத்து விட்டேன்.என்ன சொல்லுறீங்க?


ஆமா அவரோட இதயத்தை எடுத்திட்டு என் இதயத்தை கொடுத்து விட்டேன்.


என்ன டாக்டர் கடையிலே அரிசியை கொடுத்து விட்டு பருப்பு வாங்குற மாதிரி சொல்லுறீங்க?


அவரா கொடுக்கும் போது எடுக்கிற நிலைமையிலே நான் இல்லை, ஆனா இருக்கும் போது எடுக்காமலும் இருக்க முடியலை.


இதயம் மட்டும் தான் இடம் மாறுச்சா,இல்லை கிட்னி சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் இடம் மாறிடுச்சா?

அவரோட இதயம் மட்டுமே போதும். இப்படி ஒரு காதல் காவியம் இன்னும் உலக சினிமா வரலாற்றிலே யாரும் இன்னும் எடுக்கலை, என்னோட கதையும் எதிர் காலத்திலேயே எல்லோரும் பாடமா படிப்பாங்க என்கிற நம்பிக்கை இருக்கு.

இதை கேட்டு என்னால அழாம இருக்க முடியலை, நான் கொஞ்ச நேரம் அழுதிட்டு வாரேன்.உங்களை இப்படி எல்லாம் யோசித்து செய்ய வச்சவன் மட்டும் கையிலே கிடைச்சா கைமா பண்ணிடுவேன்.அதனாலே படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கும் என்னோட விலாசம் தெரிஞ்சா ௬ட வெளியே சொல்ல வேண்டாம். 


Wednesday, December 9, 2009

மிக்கேலு சான்சரு ஆட்டம்

"மாப்ள கல்லூரியிலே இருந்து நடனபோட்டிக்கு கோவை போக அனுமதி கொடுத்து இருக்காங்க, நீயும் கலந்துக்குற, நாம ரெண்டு பேரும் போறோம்."

"டேய் எதாவது தெரிஞ்ச விஷயம் சொல்லு
கவிதை?,கதை?,கட்டுரை? எழுதுற மாதிரி "

"நீ கருப்பு மைக்கல் ஜாக்சன் மாதிரி இருக்க?,
அதனாலே எழுதி கொலை பண்ணாதே"

"அம்புட்டு அழகாவா இருக்கேன்"

"டேய் நிறத்திலே
தான் ஜாக்சன் உன்னைமாதிரி இருந்தாரு ,அப்புறமா ஒரு வெள்ளப்பன்கிட்ட தோலை கடன் வாங்கிட்டு என்னைய மாதிரி அழகா மாறிட்டாரு , நீ வந்தா நாமக்கு ரெண்டுநாள் விடுமுறை கிடைக்கும்."

"கல்லூரிக்கு போகாம இருக்க, நான் என்ன வேண்டுமுனாலும் செய்றேன்டா"

"முன்ன பின்ன நடனம் ஆடி இருக்கியா?"

"எங்க ஊரு நாடகத்திலே நான் தான் நடன புயல்"

"எங்க ஆடிக்காட்டு?"

நான் ஆடின ஆட்டத்தை பார்த்து,

"டேய் உன்னையப்பார்த்தா ஆட்டம் ஆடினவன் மாதிரி தெரியலை, திருவிழாவிலே ஆடுறவங்களுக்கு ஒரு ரூபா மாட்டி விடுற பையன் மாதிரியே இருக்கு.நான் உன்னைய எப்படி நடன புயலா மாத்தி காட்டுறேன்னு,இப்ப என்னைய பாருன்னு"

சொல்லிட்டு அவன் ஆடின ஆட்டத்திலே புழுதி எல்லாம் கிளம்பி என்னைய நல்ல நிறமாக்கி விட்டதுதான் மிச்சம்.
ஆடி முடிச்சதும் ரெண்டு பேரும் எங்கே நிற்கிறோம்முன்னே தெரியலை.அவன் வேத்து விறுவிறுத்து போய் நின்னான், நான் அவன் கிட்ட

"மச்சான், கொஞ்சம் சுலபமா இருக்கிற முறைய சொல்லி
க்கோடு"

சரிடா, ரெண்டே
ஸ்டெப், நல்லா கவனின்னு

அவன் ஆடினது, எனக்கு அடிபம்ப்ல தண்ணி அடிக்கிற மாதிரியும், பைப் பிடிச்சி நடக்குற மாதிரியும் எனக்கு இருந்தது.

மச்சான், இது எனக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு, தண்ணிய பைப்ல குடிக்கிற மாதிரியே இருக்கு.

கிறுக்குபயலே, இது மூன் வாக் நடன அசைவு

ஒ.. தண்ணி அடிச்சவன் மாதிரி ஆடினா, மூன் வாக்கா!!!!, மக்சான், நீ ஒண்ணும் கவலைப் படதே,நவீன மைக்கல் ஜாக்சன் பட்டம் எனக்குதான்.

ஆட்டத்துக்கு எங்களோட சில நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள், எல்லோரும் சேர்ந்து கல்லூரி முடிந்ததும் பயிற்சி செய்ய போனோம், என்னோட நடன திறமையபார்த்து
எங்க நடனகுழுவிலே இருந்த இன்னொரு நண்பன், அவன் உண்மையிலே ஆட்டக்காரன், நான் ஆட்டத்திலே இருந்தா அவன் ஆட்டைக்கு வரலைன்னு சொல்லிட்டான். அவன் கையிலே காலிலே விழுந்து எனக்கு கடைசி வரிசையிலே நின்னு ஆட ஒரு இடம் வாங்கி கொடுத்தான் சென்னைக்காரன்.

"எதுக்கு மச்சான் என்னைய மாப்ளை வரிசைக்கு மாத்தீட்டீங்க?"

"டேய் நீ மைக்கல் ஜான்சன் மாதிரி ஆடுன்னு சொன்னா, மிக்கேலு ஜான்சா மாதிரி ஆடுறியாம், அதனாலே உன் இடத்தை மாத்த வேண்டிய இருக்கு."


"சும்மா வந்து போய்கிட்டு இருந்த உன்னை கட்டை பீடி அடிக்கவும், கள்ளு குடிக்கவும் கத்து கொடுத்த எனக்கு நல்லாவே திருப்பி செய்யுறடா "

"மாப்ள நீ ஒன்னும் கவலைப் படாதே நான் உன்னை ஆடும் முன்னாடி மேடையிலே மைக்ல மைக்கல் ஜாக்சன் சொல்லிடுறேன்?"

"ஆனா நான் கடைசி வரிசையிலே நிற்ப்பேனே?"

"அதுக்கும் ஒரு யோசனை வச்சி இருக்கேன், நான் எல்லோருக்கும் சைக்கிள்ள காத்து அடிக்கிற மாதிரி ஒரு ஸ்டெப்
சொல்லி கொடுத்து இருக்கேன், அவங்க எல்லாம் காத்து அடிச்சிகிட்டு இருக்கும் போது நீ அந்த பைப் பிடிச்சி வார ஸ்டெப் போட்டு, அப்படியே முன்னாலே வந்திடு.அவங்க காத்து அடிச்சி முடிச்ச உடனே, நீ அடி பம்பிலே அடிக்க ஆரம்பித்துவிடு , நானும் உன்கிட்ட பைப் பிடிச்சி வந்து, அப்புறமா நாம ரெண்டு பெரும் சேர்ந்து கழுவுற மாதிரி ஒரு ஸ்டெப் இருக்குல்லா, அதை வச்சி ஆட்டத்தை தொடரலாம்."

"மச்சான் இதையெல்லாம் ஞாபகம் வச்சிக்க ரெம்ப கஷ்டமா இருக்கே."

"நல்லா கேட்டுக்கோ மூணு வரி, காத்தடி, பைப்புடி, பாத்திரம் கழுவுறது இது போதும் உனக்கு "

ஒரு வழியா பயிற்சி எல்லாம் முடிச்சி நடன போட்டிக்கு கோவை சென்றோம்,எனக்கு எல்லாம் நல்ல பெயிண்ட் அடிச்சி நிறத்தை மாத்தி, முடியை எல்லாம் முள்ளம்பன்னி மாதிரி மாத்தி விட்டாங்க,ஆட்ட நேரம் வந்தது என்னிடம் வந்த சென்னை நண்பன் மாப்ள ஆடும் போது சட்டைய நல்லா பறக்க விடனும், அப்பத்தான் காத்தை விட நீ வேகமா ஆடுற மாதிரி ஒரு உணர்வுவரும்.

"அதை பத்தி கவலை வேண்டாம், எப்படியும் நான் ஆடும் போது சட்டையும் நீங்க அடிச்ச பெயிண்டும் தானே தெரியும்."

மைக்கல் ஜாக்சன் ஆல்பத்திலே இருந்து ஒரு பாட்டை போட்டு ஆட்டத்தை ஆரம்பித்தோம், ஆட ஆரமித்த கொஞ்ச நேரத்திலே, பசங்க சைக்கிள்க்கு காத்து அடிக்கிற ஸ்டெப் போட ஆரம்பிச்சாங்க, நானும் பைப் பிடிச்சி முன்னாடி வந்தேன், சென்னை நண்பனும் என் ட வந்து சேர்ந்தான்.
நானும், சென்னைக்காரனும் நடனம் ஆடிட்டு இருக்கும் போதே கிழே இருந்து சத்தம், ஒரே ச்சல், என்னன்னு புரிபடலை, நான் கொஞ்சம் ர்ந்து கவனிச்சதிலே அவங்க

டேய் கழுவுறதை நிப்பாட்டு.. கழுவுறதை நிப்பாட்டு.. ன்னு ஒரு கத்தல்.


நான் அப்படியே ஆடிகிட்டு நண்பனை பார்த்தேன், அவன் நீ ஆடு மாப்ள கண்ணாலே சொன்னான். நான் உடனே மறுபடி ஆட ஆரம்பித்தேன், கொஞ்ச நேரத்திலே கிழே இருந்து தண்ணி
பாக்கெட் வீசுனாங்க, என் மேல விழல, பக்கத்திலே ஆடி கிட்டு இருந்த என் நண்பன் மேல விழுந்தது.

அவனை பார்த்திட்டு நான் திரும்புறதுக்குள்ளே, என் மேல ஒரு ஐம்பது தண்ணி பாக்கெட் விழுந்தது, எல்லாமே என் முகத்திலே விழுந்தது, உடைஞ்ச ரெண்டு மூணு பாக்கெட் இருந்து வந்தது குடிக்கிற தண்ணி மாதிரி இல்ல, நண்பன் ஒண்ணோட ஓடிபோயட்டான், நான் சும்மா நடந்து போனா மேடை நாகரிகமா இருக்காதேன்னு மறுபடி பைப் பிடிச்சி நடக்கிறது மாதிரியே போனேன், முதுகிலே வசமா விழுந்தது, விழுந்த வேகத்திலே கயறு அறுந்து ஓடுற கோயிலே காளையை மாதிரி ஓடியே போனேன்.

மேடைய விட்டு வெளியேஓடிவந்து
மைக்கல் ஜாக்சன் மேக்அப்ல பார்த்தா என்னைய கொலையே பண்ணிடுவாங்கன்னு, சட்டைய கழட்டி போட்டுட்டு ஒரு ஓரமா உட்கார்ந்து கட்ட பீடி அடிச்சி கிட்டு உட்கார்ந்தேன், சென்னைக்காரனும் எறிந்த தண்ணி பக்கெட்ல இருந்த தண்ணியை குடித்து கொண்டு வந்து சேர்ந்தான்.அவன் கிட்ட நான்

"எப்படா டிரஸ் மாத்தின?"

"ஓடின வேகத்திலே எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு புதுசு போட்டுட்டேன்,
கிறுக்கு பயலே அடி விழுதுன்னு தெரிஞ்சா ஓட வேண்டியதானே, அங்கே என்னடா பண்ணினே?"

"மாப்ள நாலு திசையிலே இருந்து வீசுறாங்க, நான் என்ன செய்ய?நான் உன்னைய திரும்பி பார்க்கும் முன்னே, என்னைய போட்டு தாக்கிட்டாங்க, நம்ம கும்பல்ல அவங்க வேற யாரையும் குறிவைக்கலைடா, உனக்கும் எனக்கும் மட்டும் தான் தண்ணி அடி, மதத்தவங்க எல்லாம் ஆடி முடிச்சிட்டு தான்வந்தாங்க"

"நாம ஆடி இருந்தா, முதல் பரிசு நமக்கு கிடைச்சி இருக்குமுன்னு பொறாமையா இருக்கும்,
ஆமா உன் மேல ஏன்டா பிண நாத்தம் அடிக்குது?" ன்னு சொல்லிட்டு தண்ணி பக்கெட் ல இருந்த தண்ணிய எல்லாம் குடிச்சி முடித்தான்

"தண்ணி பக்கெட் என்ன கலந்து எ
றிஞ்சாங்கன்னு தெரியலை மச்சான்"

"அட எழவு எடுத்தவனே, இதை நான் தண்ணியை குடிக்க முன்னாடியே சொல்ல வேண்டியாதானே"

"இல்லை மச்சான், எனக்கு அடிச்ச தண்ணியத்தான் உனக்கு அடிச்சாங்களுன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு சும்மா இருந்தேன், உனக்கும் அதே தண்ணிதான்."

"நாதாரி இரு உன்னைய வந்து கவனிச்சிக்குறேன்னு போனவன், ரெண்டு நாள் ஒரே வாந்தி"

திரும்பி வந்து ஒரு மாசத்து மேல கல்லூரியிலே இதை பத்தி ஆராட்சி, ஆனா இன்னைய வரைக்கும் கண்டு பிடிக்க முடியலை, அந்த தண்ணி
பாக்கெட் என்ன கலந்து இருந்தாங்கன்னு,அதோட நான் போட்ட ஆட்டம் எல்லாம் அடங்கி போச்சி,ஆனா இன்னும் இடுகைகள்ல போடுற ஆட்டம் அடங்கலை.


Monday, December 7, 2009

இந்தியாவின் தாய்மொழி இந்தி?

தமிழ் நாட்டை விட்டு வெளியே போனால் ஹிந்தி இல்லாம தண்ணி ௬ட கிடைக்காதுன்னு நினைச்சா, வடக்கூர்காரங்க எல்லாம் நம்ம ஊரிலே பத்து வருசமா இருக்கிறவங்க எல்லாம் "எனக்கு தமிழ் நகி மாலும்" ன்னு மட்டுமே சொல்லியே பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்காங்க.இங்கே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை இருந்தும் அவங்க ஊருக்கு போய் ஓட்டு போட்டுட்டு வந்துடுறாங்க.ஆனா இங்கே தமிழ் நாடு எக்ஸ்ப்ரெஸ்ல போக இந்தி தெரியலையேன்னு வருத்தப்பட வேண்டிய நிலை,இது ஊரு நாட்டு கதை இப்ப நம்ம கதைக்கு வருவோமா


போன மொக்கையிலே அமெரிக்க பொருளாதாரம் சரிய ஆரம்பித்ததும், என்னையும், நான் தமிழ் சொல்லி கொடுத்த வடக்கூர்காரிக்கும் வேலைக்கு சங்குஊதிட்டாங்க, அவள் ஆண் நண்பியோட மும்பைக்கே போய்ட்டா, நானும்பொழைப்பை ஓட்ட மைசூர் போயிட்டேன், அங்கே பெரும்பாலும் கன்னட மொழிதான், அதனாலே
அதை கத்துகிட்டேன்.நான் தமிழ் எப்படி எழுதுறனோ, அதேமாதிரி பேசுவேன், ஒரு வருஷம் பொருளாதாரம் மேல வரும் வரைக்கும் பன்னிகுட்டி மாதிரி மைசூர்ல இருந்தேன்.

மறுபடி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்த உடன மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு பெங்களூர்ல ஒரு கம்பனிக்கு வந்தேன்,
அறிமுகப்படலம் மனித வள மேம்பட்டு துறையாலே கொடுத்தாங்க, எல்லாம் முடிஞ்ச உடனே கடைசியிலே முக்கிய விஷயம் கண்டிப்பா அலுவலகத்துக்குள்ளே இருக்கும் போது இங்கிலிபிசு தவிர வேற எந்த மொழியும் பேசக்௬டாது சம்ஜே ன்னு சொன்னாங்க.

அவங்க சொல்லிட்டு போன அப்புறமா எனக்கு ஒரே யோசனை சம்ஜே அப்படின்னு இங்கிலிபிசுல வார்த்தை இருக்கான்னு சந்தேகம், கூகிள்
ஆண்டவர்ட்ட கேட்டேன், அவரு சமோசா இருக்கு, ஆனா சம்ஜே இல்லன்னு சொல்லிட்டாரு

மனித வளம் எதுக்கு என்னைய சமோசா சாப்பிட சொல்லுறாங்கன்னு யோசித்தேன், ஒண்ணும் புரியலை, சென்னைக்காரன்னு
க்கு போன் போட்டேன்.

"மச்சான் சம்ஜே இங்கிலிபிசுல இருக்கா"

"கிறுக்குபெயலே சம்ஜேன்னா இந்திடா, அப்படின்னா புரியுதான்னு அர்த்தம்"

"அப்புறம் எதற்கு மனித வளம் இங்கிலிபிசு பேசனுமுன்னு ஹிந்தியிலே சொல்லுறாங்க"

"மாப்ள பொட்டி தட்டி விதிகளை ஆக்குறதும் அவங்கதான், உடை
க்கிறதும் அவங்க தான், அதனாலே அவங்க எது சொன்னாலும் கையை கட்டி காதை நீட்டி கேட்டுக்கணும்."


சரி மச்சான், நான் அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டு முடிச்சேன், அடுத்தநாள் நான் சந்திக்க வேண்டியவ
ரிடம் என்னை அறிமுகப் படுத்தினர் , நான் எங்கே இருக்க வேண்டும் என இருப்பிடத்தை சொன்னார், சொல்லிட்டு போனவரு அதற்கு அப்புறம் ரெண்டு வாரத்துக்கு என் பக்கத்திலே வரலை, என்னைத் தவிர எல்லாருடம் கொஞ்சி குலவிகிட்டு இருந்தாரு.

ஒரு கடின உழைப்பாளி, செய்யும் தொழிலை தெய்வத்துக்கு மேலக மதிக்கிற நான்,
வேலை இல்லாமல் எப்படி இருக்கன்னு நான் நினைக்கலை, வேலையே கொடுக்காம வச்சி இருந்து பொட்டியை கட்டிட்டு வீட்டுக்கு போக சொல்லிடுவாங்களோன்னு பயந்து
அவர்ட்ட போனேன்

"ஹலோ மிஸ்டர் யார் எப்படி இருக்கீங்க"

"அவரு உடனே யாரு யாரு?"

நான் உடனே " பெரிய பொட்டி தட்டி கம்பெனியிலே அமெரிக்க துர மார்கள் மாதிரி கடைசி பெயரை வச்சி ௬ப்பினடுமுனு
நினைச்சி உங்களை யார் சொல்லி ௬ப்பிட்டேன், மன்னிச்சிடுங்க சாலே"


"என்னது சாலேயா? "

"நீங்க சல்லியா ?"

"என் பேரு யாரும் இல்லை,சாலேயும் இல்லை,சல்லியும் இல்லை"

"அப்புறம் ஏன் உங்க ௬ட பேசின எல்லோரும் யார்ன்னு கடைசியிலே முடிக்கிறாங்க, முதல்ல சாலே ன்னு ஆரம்பிக்கிறாங்க"

"நீ தமிழ் நாடா ?"

"எப்படி தெரியும்?"

"சாலே,யாரு ன்னு பேரு இருக்குன்னு யோசிக்கும் போதே இந்த முகர கட்டை தமிழ் நாட்டிலே இருந்து வந்து இருக்குன்னு
தெரியுது "

தமிழ் வாழ்கன்னு நினைச்சிகிட்டேன்.

இந்தியாவோட தாய்மொழி இந்தி தெரியாம எப்படி இருக்கீங்க ன்னு ஒரு அணுகுண்டு கேள்வியை கேட்டுபுட்டார்.

தமிழ் தாயே நீ இருக்கும் போது ஓர் மாற்றாளை தாய் என சொல்லுகிறானே, இந்திய தாய்மொழி இந்தி என்றால் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொரு மாநிலத்திலும் இரு மொழி கொள்கை, மும் மொழி கொள்கை இருக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி பல கேள்விகள் வந்தாலும் வழக்கம் போல கேட்கலை.அதை இங்
கிலிபிசில கேட்கத்தெரியாது என்பது வேற விஷயம்

நான் "ஒ அப்படியா என்கிட்டே சொல்லவே இல்லை" ன்னுசொன்னேன்.
என்னை இளக்காரமா பார்த்துட்டு

"உனக்கு சீக்கிரம் வேலை கொடுக்கிறேன், நீங்க உங்க இடத்துக்கு போகலாமுன்னு சொன்னாங்க.திரும்பி வந்துட்டேன்"

நான் எப்போதுமே தொலைபேசியிலே பேசினால் நாலு ஊருக்கு கேட்கிற மாதிரி பேசுவேன், அப்படித்தான் என்னோட இருக்கையிலே இருந்து அரை மணி நேரம் பேசினேன் நண்பனிடம், பேசி முடித்து விட்டு போன் வைத்த திரும்பி பார்த்தா மொத்த ௬ட்டமும் என்னையே பார்க்குது.அவங்க பார்த்த பார்வையிலே நான் எதோ தப்பு பண்ணின மாதிரி எனக்கே ஒரு உணர்வு. நான் பேசினதை மனிதவளமும் கேட்டு கிட்டு இருந்து இருக்கு அவங்க நேர என்னிடம் வந்து

"நீங்க பிராந்திய மொழி எல்லாம் பேசக்
டாது, இங்கே தமிழ் தெரியாதவங்க நிறைய பேர்
இருக்காங்க, அவங்களுக்கு எல்லாம் தொந்தரவா இருக்கும்"

"தில் சாத்தாகே,டீ குடியேகே, ஆயகே, போயகேன்னு இங்கே நிறைய பேரு பேசுறதும் எனக்கு புரியலை, இருந்தாலும் நானும் சகிச்சுகிறேன்"

"அவங்க எல்லாம் இந்தியிலே பாத் காரங்க, அது எல்லோருக்குமே புரியும்"

"அப்படின்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி?,
நான் இந்தி கார பாத் கிடையாது "

"இப்ப என்ன செய்யன்னும்முன்னு சொல்லுறீங்க ?"

"மணிரத்தினம் டைரக்சன்ல கமல் நடிச்ச நாயகன் பாத்து இருக்கீங்களா?"

"ஆமா இந்தி டப்பிங் பார்த்து இருக்கேன், அதுக்கு என்ன இப்ப ?"

"அவங்களை நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்."

நான் ஏதோ அலுவலக விதிய பிடிச்சிட்டேன்னு நினைச்சாங்களோ, இவன் தலைய அப்புறம் கட்டலாமுன்னு நினைச்சாங்களோ, அமைதியாகிட்டாங்க, என்கிட்டே

"நீங்க தமிழ் நாட்டிலே எந்த ஊரு."

"நெல்லை பக்கம்"

"ஒ. நாங்களும் தஞ்சாவூர் பக்கம்தான், நாங்க ரெம்ப நாளைக்கு முன்னே மும்பைக்கு போய்ட்டோம், எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்,
எனக்கு கொஞ்சம் தமிழ் கத்துகொடுக்க முடியுமான்னு கேட்டாங்க"

மனித வளமே பாடம் படிக்க தயாரா இருக்கும் போது, வேண்டாமுன்னு சொல்ல முடியலை, நல்ல வேளை அவங்க என்னை எழுத படிக்க சொல்லி கொடுக்க சொல்லலை. பாடம் எப்படி போச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.


Sunday, December 6, 2009

வாலிப காதலில் வண்ணத்து அழகி

பாலுக்கும், கள்ளுக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கமுடியாத வயசு, இப்பவும் அப்படித்தான் இருக்கேன் ஆனா வயசு வகையில்லாம ஏறிபோச்சி, அப்படி ஒரு வெள்ளந்தியா இருந்த காலத்திலேயே என் மனதை வங்ககடல் புயலை போல கடந்து சென்றவள்,இந்த பச்ச புள்ளை நெஞ்சிலே பசுமரத்தாணி போல பதிந்த நினைவுகள்,இந்த எழவு எடுத்தவன் சொல்ல வந்ததை சுருக்குன்னு சொல்லாம, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிகிட்டு இருக்கான்னு ஆட்டோ எடுக்க தயாராகும் அன்பர்கள் நிற்க.

காதலிக்கிறவங்க எல்லாம் அவங்க காதலிகளை எங்கே பிடிச்சாங்கன்னு தெரியலை, நான் அவளை பார்த்தது எங்க வீட்டிலே அவள் பேசி நான் கேட்ட முதல் வார்த்தை

"யம்மா சோறு போடுங்க"

இந்த காதல் கதை நடந்த காலத்திலே எங்க ஊரிலே துணிகளை துவைப்பதற்கு என்று ஒரு ௬ட்ட மக்கள் இருந்தார்கள்,இன்னும் ஒரு சில கிராமங்களில் இருக்கலாம், ஆனா இப்ப எங்க ஊரிலே இல்லை.

அவளின் குரலை கேட்டு தீவிரமாக பரிச்சைக்கு படித்து கொண்டு இருந்த என்னைப் பார்த்து என் அம்மா,

"டேய் இந்த சோத்தை அவ கிட்ட கொடுத்திட்டு, துணி எப்ப எடுத்திட்டு போறான்னு கேளு" ன்னு சொன்னாங்க, நானும் சோத்தை எடுத்துகிட்டு வெளியே வந்தேன், நல்ல இருட்டு நேரம், நான் நடந்து வரும் போது இருட்டு எது நான் எதுன்னு கண்டு பிடிக்க ரெம்ப சிரம பட வேண்டியது இருக்கும்.

ஆனா அவ இருட்டிலேயும் பளீர்ன்னு தெரியும் நிறம், நான் அவ கிட்ட போய் "இந்தா சோறு" ன்னு சொன்னது தான் எதோ காத்து கருப்பு தான் பேசுதோன்னு பயந்து அரண்டு போய்ட்டா, அந்த நேரம் பார்த்து என் அம்மா முன் வீட்டு விளக்கை போட்டார்கள், வெளிச்சத்திலே என்னை பார்த்து அவளை அறியாமலே சிரிப்பு, இந்த கருவாலி என்னை கதிகலங்க வச்சிட்டான்னு நினைச்சி இருப்பா போல அப்படி ஒரு சிரிப்பு

அவள் சிந்திய சிரிப்பு அலைகளிலே என் மனம் சிக்குண்டு தீக்குச்சியாக இருந்த என் உடம்பிலே காதல் தீ பத்திகொண்டது.கரிகட்டை மாதிரி இருந்த நான் காதல் தீ வந்து கருஞ்சிகப்பு நிறமா மாறிட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க.அவளின் அழகுக்கு அழகு சேர்த்த அவள் முத்து பல் வரிசை என்னை அழுக்கன் ஆக்கியது. பஞ்சனை வைத்து தூங்கி பழகிய நான் அவள் நெஞ்சனையிலே வந்ததும் தூக்கத்தை ஆள் விட்டு தேடும் அளவுக்கு வந்து விட்டேன்.

சோறு வாங்கிய உடனே "துணிகளை எல்லாம் எப்ப எடுக்க வருவாய்" ன்னு கேட்டேன், நான் எல்லா வீட்டுக்கும் போயிட்டு வந்து வீட்டுக்கு போகும் போது வாரேன்.

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமா வீட்டை விட்டு வெளியே போகாமல் குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வந்தேன், அவளும் வந்து சேர்ந்தாள் அடுத்த ஒரு மணி நேரத்திலே,எடுத்து வைத்து இருந்த துணிகளை ஒன்று ஒன்றாக எடுத்து கொடுத்தேன், மொத்தமா அள்ளிப்போட்டா சீக்கிரம் போயிடுவான்னு,துணிகளை கொடுக்கும் சாக்கிலே அவள் கையை தொட்டேன்.

துணிகளை துவைக்கும் கையை நான் தொட்டதாலே என் மனசும் துவை பட்டது, அவளின் கரங்களின் சுத்தம் என் மனசை கரை படுத்தியது. அவள் என்னவோ சாதாரணமாக இருந்தாலும் நான் என்னவோ சிறகு இல்லாமல் வானில் பறந்து கொண்டு இருந்தேன். நான் இப்படி எல்லாம் நினைக்கிறேன் என்று அவளுக்கு தெரிந்து இருந்தா வாங்கின துணியாலே என் முதுகிலே ரெண்டு போட்டு இருப்பா.

அதற்கு அப்புறம் அவள் எப்ப வருவான்னு வழிமேல இந்த கருப்பு விழியை வைத்து காத்து இருப்பேன், அவ வருகிற நேரம் நெருங்கி விட்டால் என்னோட இதய துடிப்பு அதிகம் ஆகிடும், என்னோட இதயத்துக்கு மட்டும் மூளை இருந்தா கிறுக்குபய துண்டு போடவும் மாட்டான் எடுக்கவும் மாட்டான், நான் பாட்டுக்கு சும்மா லப் டப் ன்னு அடிச்சி ஆணி புடுங்குற என்னையும் ஒழுங்கா வேலையை செய்ய விடாம ,என்னைய போட்டு குடைச்சல் கொடுக்கிறான், இவனை எல்லாம் நின்னு சாகடிக்க ௬டாது, வெடிச்சி சாகடிக்கனுமுன்னு நினைத்து இருக்கும்.

அவள் ஒருநாள் வரலைனாலும் அன்னைக்கு சோறு தண்ணி இறங்காது, அடுத்த நாள் எப்படியாவது அவள் வசிக்கும் தெருவுக்கு போவேன்,எப்படியாவது அவளை பார்த்து விட்டுத்தான் வீட்டுக்கு திரும்ப வருவேன்.இப்படி ஒருதலையா துண்டு போட்டு கொஞ்ச நாள் ஓடிச்சி, அவளை தினமும் பார்த்து, துணி அள்ளி போட்டு சந்தோசமா இருந்தாலும், நான் அவளைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்று சொல்ல தைரியம் வரலை.

கொஞ்ச நாள் கழிச்ச அப்புறம் அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதாகவும், இன்னும் கொஞ்ச நாள் கழித்து அவள் வேற ஊருக்கு செல்ல இருப்பதாகவும் அம்மாவின் மூலம் தெரிந்து கொண்டேன்.என்னவோ அதை கேட்டதும் எனக்கு அழுகையே வரலை, எனக்கு பதிலா இயற்கை இடியோடு எனக்காக அழுதாள். அடுத்த நாள் காலையிலே எழுந்து அவள் இருக்கும் தெருவுக்கு சென்றேன். அவள் வீட்டு முன்னால் பெரிய ௬ட்டம் எட்டி பார்க்க ஓடினேன், அங்கே எல்லோரும் அழுது புலம்பி கொண்டு இருந்தார்கள், அவளும் அவர்களோட சேர்ந்து அழுது கொண்டு இருந்தாள். விசாரித்தலிலே அவளுடைய மணமகன் அவன் இருந்த மண் வீடு நேற்றைய மழையிலே இடிந்து விழுந்து மண்ணோட மண்ணாகி விட்டான் என்பதை தெரிந்து கொண்டேன்.

அதை கேள்வி பட்டு என்னை விட உலகிலே சந்தோசப்பட்ட ஜீவன் இருக்க முடியாது. நான் வானத்தை பார்த்து மனசிலே கடவுளே நீ இல்லை..இல்லை என்று சொல்லும் போது எல்லாம் எதாவது ஒரு ரூபத்திலே நீ உன் இருப்பை உறுதி செய்கிறாய் . நான் நினைக்கிறது மேல போனவருக்கு தெரிஞ்சா என்னையும் ௬ட ௬ட்டிட்டு போய் இருப்பாரு.

காதல் மரத்தை வெட்டிட்டாங்கன்னு நினைத்த எனக்கு இயற்கை உரம் போட்டு இருப்பதை நினைத்து ஒரே ஆனந்தம், மறுபடியும் காதல் கிளிக்கு ரெக்கை முளைச்சி விட்டது என நினைத்து வீட்டுக்கு போயிட்டேன்.

ஒரு மாதம் வரை மனதை கட்டி போட்டு கொண்டு அவள் வரவை எதிர் பார்த்து காத்து இருந்தேன், அடுத்த மாதத்திலே புது ஆள் ஒருவர் வந்து என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தார், என்னை பார்த்ததும்

"இனிமேல இவன் தான் துணி எடுக்க வருவான், துவைக்க உன் துணியை எல்லாம் எடுத்துப் போடு"

இதை கேட்டதும் பிரகாசமா இருந்த என் வாழ்கையிலே, இருட்டின் ஆதிக்கம் அதிகமாச்சி, என்னோட துணிகளை எல்லாம் எடுத்து கொடுத்து விட்டு அம்மாவிடம்

"எதுக்குமா புது ஆள், அவங்களே நல்லாத்தானே துவைச்சாங்க."

"அவங்க எல்லாம் ஊரை விட்டு அவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க"

"எங்க இருக்கு?"

"தெரிஞ்சி என்ன கோட்டையை கட்டப்போற?.. போய் வேலைய பாரு"

அதற்கு மேல கேட்டாலும் பதில் வராதுன்னு தெரியும், நான் ஒண்ணும் பேசாம மாடிக்கு போயிட்டேன்.மேல வானத்தை பார்த்தேன். கடவுள் இல்லை.. கடவுள் இல்லைன்னு மனுசுக்குள்ளே சொல்லி கொண்டேன். அன்றைய தினத்திலே இருந்து இது நாள் வரையும் அவளை நான் இன்னும் பார்க்க வில்லை.அவளும் இன்றைக்கு என்னை மாதிரி கல்யாணம் எல்லாம் ஆகி சந்தோசமா இருப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது, அவளை பற்றி இவ்வளவு நினைவு இருக்கும் எனக்கு இன்றும் அவள் பெயர் தெரிய வில்லை.


Thursday, December 3, 2009

கவுஜ வாங்கலையோ கவுஜ

யோவ் என்ன வேலை நடக்குது..


ஒரு மனுசனை நிம்மதியா வேலை பார்க்க விட மாட்டீங்களே, இப்ப என்ன விவகாரம்?

தலைவரே எதோ கவுஜ போட்டி இருக்காம், அதிலே கலந்துக்கலாமா யோசிக்கிறேன், தனியா போக ௬ச்சமா இருக்கு, அதான் உங்களையும் துணைக்கு ௬ப்பிடுறேன்.

யோவ் நீ என்ன பொண்ணா பார்க்க போற..

இதுநாள் வரைக்கும் இந்த எழுத்தாளர் (?)

என்னது எழுத்தாளரா யாரு எங்க.. எங்க..

நான் என்னையை சொன்னேன்..

சொல்லிட்டு சொல்லணும் , எனக்கு ரத்த கொதிப்பு அதிகம், எதுக்கும் எழுத்தாளருக்கு முன்னாடி ஒரு மொக்கைய போடுங்க

சரி.. ஒரு மொக்கையன் என்ற முறையிலே, ஒரு எட்டு போய் பார்க்கலாமுன்னு

நீங்க எட்டிக்கிட்டு போங்க, இல்லை எட்டாம போங்க, ஆனா என்னை ஆளை விடுங்க, எனக்கு வீட்டிலே ரெண்டு கிலோவுக்கு வேலை இருக்கு.

அது என்ன ரெண்டு கிலோ வேலை

ம்ம்.. அரை கிலோ உளுந்து, ஒண்ணரை கிலோ அரிசி யாரு ஆட்டுவா?

அங்கேயும் அப்படித்தானா!!!, நான் இப்பத்தான் ஒரு கிலோ முடிச்சேன்.நம்ம தோசை மாவு ஆணியை விடுங்க, நீங்களும் பின்நவினத்துவ கவஜ எல்லாம் எழுதி இருக்கீங்க.

முகத்துக்கு பின்னாடி இருக்கிற முதுகை பத்தி எழுதினேன், அதை நீங்க பின்னவினத்துவமுனு நினச்சா என் முதுகை எங்கே போய் சொறிய?, போட்டி நல்லா நடக்கனுமுனா, நீ, நான் எல்லாம் அந்த பக்கம் தலையே வச்சி படுக்க ௬டாது.

ஆர்வத்திலே ஒண்ணு எழுதுட்டேன்.

ஒழுங்காத்தானே துண்டு போட்டுக்கிட்டு இருந்தீங்க, நாம எல்லாம் களத்திலே குதிக்காத வரையிலே பதிவுலகம் நல்லாவே இருந்தது, பதிவுலத்துக்கு ஏழரை ஆரம்பித்ததே நாம எல்லாம் எழுத வந்த பிறகு தான்.

தலைவரே நான் அந்த காலத்திலேயே கவுஜ எல்லாம் எழுதி பரிசு எல்லாம் வாங்கி இருக்கேன்.

இப்ப என்ன சாமி உன் பிரச்சனை, சொல்லி தொலை, மனுசனை நிம்மதியா மாவட்ட விட மாட்டீங்களே.

உன்

மை விழி பார்வையிலே மயங்கினேனே

மது உண்ட மாதுவை போல.

உன்

௬ந்தல் காட்டிலே என்

மூச்சி காற்றால் புல்லாங்குழல்

வாசிக்க, வசிக்க விரும்புகிறேன்.

எப்படி இருக்கு, நாம்ம சரக்கு

எல்லாம் சரிதான், குழல் வாசிக்கும் போது கொஞ்சம் எட்டியே நில்லு, அங்கே உள்ள பேன் எல்லாம் உன் வழுக்கை தலைக்கு வரப் போகுது.கவுஜ எழுதும் போது எதையும் நேர சொல்ல௬டாது, இன்னும் ஏதும் சரக்கு இருக்கா??

இல்லை இனிமேல தான் வாங்கணும், காலி ஆகிடுச்சி.

யோவ் நான் உன் கவுஜ சரக்கை சொல்லுறேன்.

இருகிறதிலே நல்ல சரக்கு இதுதான். இனிமேல யோசிக்கணுமே!!!!

பூமி தாயே

உன் கோபக்கனலாலே

உன் ரத்தம் கொதித்து

உன்னை வெப்பமாக்காதே

நான் விட்டு விடுகிறேன்.

எழுதுறதையா ? இல்லை மூச்சையா, இன்னைக்கு என் முகத்திலே முழிச்சது தப்பா போச்சி, உங்க கவுஜை கேட்டு நான் மேல போயிருவேன் போல இருக்கே, கவுஜைன்னா நீ கவுஜன்னு சொல்லுற வரைக்கும் அடுத்தவங்களுக்கே தெரியக்௬டாது

யோவ் இம்புட்டு வாய் கிழிய பேசுற நீங்க ஒரு கவுஜ சொல்லுங்க.

எனக்கு பின்நவினத்துவம் தான் தெரியும், நல்லா கேட்டுக்கோ

"இரும்படிக்கிற இடத்திலே ஈ க்கு என்ன வேலை"

ஈ இருக்கட்டும் கவுஜ சொல்லுங்க.

அதான் சொன்னேன்லா

யோவ் உன் பின் மண்டையிலே போடணும்

விளக்கம் சொல்லுறேன், நாம்ம மணி அண்ணன் மாதிரி
இரும்படிக்கிற பிரிச்சா இரு + படிக்கிற அப்படின்னு ஒரு பொருள் வரும்.ஆக இன்னொரு முறையிலே இருந்து படிக்கிற இடத்திலே ஈ க்கு என்ன வேலை.

ரெம்ப சரிதான், ரெண்டு விளக்கம் நல்ல இருக்கு, ஆமா இது நீங்க என்ன சொல்லவாறீங்க?

அந்த ஈ ங்கிறது நீயும் நானும் தான், அவனவன் உயிரை பிழிஞ்சி, உண்ணாம தின்னாம கவுஜை எழுதினா, நீ அங்கே போய் மொக்கை அடிப்ப, என்ன எழுதி இருக்காங்கன்னு புரிஞ்சி இருந்தா நல்லா இருக்குன்னு நீ சேவ் பண்ணி இருக்கிற பின்னூட்ட பதில்ல இருந்து ஒண்ணு போட்டு இருப்ப, கவுஜை எல்லாம் நல்லத்தான் போய்கிட்டு இருக்கு, அதனாலே அதிலே கால் வைக்காம வீட்டிலே போய் தோசைக்கு சட்னி வைக்க வழியை பாரு

இனிமேல கவுஜ எழுதுறேன்னு சொன்ன ஆட்டோ இல்ல அணுகுண்டு தான் வீடு தேடி வரும்.

.......................................................

யோவ் என்ன பேச்சி மூச்சை காணும்.

ஒண்ணும் இல்லை, அளவுக்கு அதிகமா வசனம் பேசிட்டீங்க, அதனாலே அதை வேகமா தமிழ்ல பதிவு செய்ய நேரம் ஆகி விட்டது.

பதிவு செஞ்சி என்ன செய்ய???

கலையிலே எழுந்து என் கடைப் பக்கமா வாங்க தெரியும்.

பொறுப்பு அறிவித்தல் :
இந்த உரையாடலில் கலந்து கொண்ட பதிவர்களை கண்டு பிடித்து கொடுபவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு


Sunday, November 22, 2009

காதல் துடிப்பு

ஹாய்


ஒ.. ஹே.. எப்படி இருக்க

ம்ம்.. எதோ சொல்லனுமுன்னு சொன்ன.

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை, நம்ம வாத்தியார் digital signal processing எடுக்கிற மாதிரி ஒண்ணுமே புரியலை.

அது எப்படி புரியும் அவரு இங்கிலீஷ் ல பாடம் எடுக்கிறாரு.

நான் அவரை பத்தி சொல்லலை, நம்ம ரெண்டு பேரை பத்தி சொல்லுறேன்.

சொல்ல என்ன இருக்கு, நீ மாப்பிள்ளை பெஞ்ச், நான் மச்சினிச்சி பெஞ்சி, இதை தவிர வேற என்ன இருக்கு.


ஹேய் இன்னைக்கு நீ தலைக்கு குளிச்சியோ

இது என்ன கேள்வி, நான் தினமும் தான் தலைக்கு குளிக்கிறேன்.

இல்லை நீ தலைக்கு குளிச்சி ஒரு மாசம் ஆச்சி.போன மாதம் ஆறாம் தேதி அது சனிக்கிழமை.

ஷ்ஷ்ஷ்... மெதுவா பேசு.. ஊரை ௬ட்டி சொல்லுவா போல இருக்கு, ஆமா ரெம்ப நாளைக்கு அப்புறம் தலைக்கு குளிச்சேன். இதை எல்லாம் எப்படி கணக்கு பண்ணுவ.

குளிச்ச தலைக்கு பின்னல் போட மாட்ட, கொஞ்சம் அழகா தெரிவ, ஆனா குளிகலைனா அழகை ௬ட்டனுமுன்னு மூஞ்சியிலே அரை இன்ச்சிக்கு மேக் அப் இருக்கும்.

நீ கணக்கிலே 200/200 மார்க் வாங்கினாயா?

எப்படி சரியா சொன்ன?

எல்லாம் கணக்கு தான், ஆக நீ என்னைய கணக்கு பண்ணுற

உண்மைதான், எனக்கு ஏன் அப்படி உன் மேல அக்கறையா இருக்கனுமுன்னு தெரியலை, உன்௬ட பேசணும், உன்கிட்ட எதுவுமே ஒளிவு மறைவு இருக்க ௬டாதுன்னு.

என்னை மன்னிச்சுடு, உனக்கு இப்படி எண்ணம் வர காரணமா இருந்த குளியலை இனிமேல நிறுத்திடுறேன்.

நீ கொஞ்சம் நேரம் தாமதமா வந்தா உனக்கு என்னவோ, எதோ ஆகிட்டு நெஞ்சம் துடிக்குது, நீ வீடு போகும் போது உன்௬டவே வரணுமுன்னு நினைக்கிறேன். நீ கல்லூரி வரைலைன்னா ஆளுனருக்கு போன் போட்டு உன்னை காணவில்லைன்னு புகார் கொடுக்கணும் போல தோணுது.

ஏன் முதல்வர், பிரதமரை எல்லாம் விட்டுட்ட.

நம்ம இந்தியாவிலே வேலை வெட்டி இல்லாம உசத்தி சம்பளம் வாங்குகிற வங்களில் அவங்களும் ஒருத்தர்,சரி.. சரி பேச்சை மாத்தாதே. எனக்கு ஏன் இப்படி நினைக்க தோணுது.

இப்போதைக்கு என் கிட்ட பதில் இல்லை, ரெண்டு வாரம் கழிச்சி சொல்லவா?

இப்பக்௬ட பாரு உனக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்து இருக்க சொல்லுது.

அதிகம் ரெண்டு வாரம் போதும், எங்க மாமா மனநல மருத்துவர், அவட்ட உன் பிரச்னையை சொல்லி கேட்கிறேன்.

என் மனநிலையை தீர்த்து வைக்கும் மருத்துவர், நீ இருக்கும் போது உன் மாமன் வளுக்கையன் கிட்ட என் போகணும்.

நீ என்னைய காதலிக்கிறாயா?

உன்னையே பத்தி நினச்சி, உன் ௬ட பேசனுமுன்னு நினச்சா, அது காதல்னு நீ எப்படி முடிவு பண்ணலாம், என்னோட நண்பர்கள் ௬டேயும் நான் இப்படித்தான் பேசுறேன், காதலுக்கும், நட்புக்கும் உள்ள வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத உன்னோட பழகிறதே தப்பு, சந்கேதப்பட்டு நீ பார்க்கிற பார்வை எல்லாம் சங்கத்திலே முடியும்.

நான் சனிக்கிழமை குளிச்சதை கணக்கு எடுத்தவன், எங்க மாமா வளுக்கையன்னு சொன்னது, போகும் போதும் வரும் போதும் நாய் குட்டி மாதிரி கூடவே வரணுமுன்னு நினைக்கிறதை என்னனு சொல்ல, பாசம்னு சொல்லனும்மா, விருப்பமுனு சொல்லனுமா?

அன்றைக்கு எதேர்ச்சையா உன்னை கோவில்ல பார்த்தேன், நீ போன வண்டியிலே பின்னாடி செஞ்சிலுவை சங்க குறியீட்டை போட்டு மனநல மருத்துவருன்னு போட்டு இருந்தது, அந்த ஆளைப் பார்த்தாலே உங்க மாமா மாதிரி இருந்தார். குளியல் விஷயம் நான் பள்ளிகுடம் படிக்கும் போதே இருக்கு.

இப்ப நீ என்னதான் சொல்ல வார?

ஒரு நட்பு பாத்திரத்திலே நஞ்சை கலந்திட்டே.

...............
.............

(மேலே நடந்த சம்பவத்திற்கு பின் ஒரு மணி நேரம் கழித்து )

என்னடி எப்பவுமே அவன் கிட்ட பேசிட்டு வந்தா மூஞ்சி, வாய் எல்லாம் சிவந்து பெங்களூர் தக்காளி மாதிரி வருவ, காவிரி தண்ணி வராம காஞ்சி போன நெல் நாத்து மாதிரி வார.நீ துண்டு போடுறதை சொல்லுறதுக்கு முன்னே அவன் துண்டு போட்டுட்டானா?

அவன் என் கழுத்திலே துண்டு போட்டுட்டான். காதல் பல்ஸ் பார்க்கலாமுன்னு, கொஞ்சம் விட்டு பிடிக்கலாமுன்னு நினைச்சா என் பல்லை பிடிங்கிட்டான்.

ஆமா நீ காதல் பல் டாக்டர், அவன் காதல் பல் நோயாளி, நீ அவனுக்கு பல்ஸ் பார்த்து உன் பல்லை உடைச்சி கிட்ட

அவன் என்னை பறக்க வெட்டி மாதிரி பார்க்கும் போது, என்னைப் பார்க்க வரும் போது, இருக்கிறதிலே நல்ல பேன்ட், சட்டையை ஓசியிலே போட்டுட்டு வரும் போது, கிளி காதல் பாட்டு பாட வருதுன்னு நினச்சேன், இப்படி கடைய காலி பண்ணிட்டு போவான்னு நினைக்கவே இல்லை.

கடைசியிலே என்னதான் சொன்னான்.அந்த கட்டையிலே போற பய

ஹேய் அவனுக்கு சென்னை, அங்கே கட்டை எல்லாம் கிடைக்காது, அதனாலே எரிப்பாங்கன்னு நினைக்கிறேன்.

அடியே.. இது ரெம்ப முக்கியம்.. விசயத்துக்கு வா

"இனிமேல நான் உன்௬ட பேசினா என் நாக்கை அறுத்து நடு சந்தியிலே போட்டுடுவேன், இனிமேல நீ யாரோ நான் யாரோ" ன்னு சொல்லிட்டு போய்ட்டான்

அவன் பேசுறது உனக்கு மட்டும் தான் புரியும், உன்௬ட பேசலைன்னா, அவன் நாக்கை அறுத்து காக்கைக்கு போட வேண்டியதான்.

சரி விடு ஒரு சனியன் விட்டு ஒழிந்ததுன்னு நினைச்சி தலைய முழுகு.

(அடுத்த அரைமணி நேரத்தில்)

என்னடா மாப்ள எப்போதும் திருட்டு விட கோழி தின்னவன் மாதிரி இருப்ப சூப்பி போட்ட பனங்கொட்டை மாதிரி இருக்க

எல்லாத்துக்கும் அவ தான் காரணம், ஒரு மனுஷன் எத்தனை தடவை இலை மறைவா சொல்லுறது,அவ எதுவுமே தெரியாத மாதிரி மங்குனி மாதிரி இருக்கா,எவ்வளவு தடவை தான் இதயத்தை திறந்து காட்டுறது, ஒண்ணுமே புரியாத மாதிரி பேசினா அவ என்னை காதலிக்கலைன்னு தானே அர்த்தம்.

எனக்கே இப்பத்தான் தெரியும் நீ அவளைக் காதலிக்கிறன்னு, அப்படி என்ன தான் சொன்னா?

ஒண்ணுமே சொல்லலை

அதனாலே

நல்லா திட்டுபிட்டு வந்தேன், இனிமேல உன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன்.

டேய் அவ தினமும் நம்ம வகுப்புத்தான் வருவா, அவ மூஞ்சிலே முழிக்காமல் முதுகிலே மூழிப்பியோ, துண்டு போட நாயா பேயா அலைய வேண்டியது, கிடைக்கலைன்னு அலைந்த கோபத்தை எல்லாம் காட்டி திட்ட வேண்டியது.

மாப்ள, நான் என்னை அவ காதலிக்கலைன்னு திட்டலை, நான் அவளை காதலிக்கிறன்னொன்னு சந்தேகப் பட்டத்துக்கு திட்டிவிட்டு வந்தேன்.

என்ன மாப்ள ஒரு தடவை இதயத்தை பிச்சி அள்ளி வெளியே எடுத்து போட வேண்டியதானே, ரெண்டிலே ஒரு முடிவாது தெரிஞ்சு இருக்கும்.

டேய் இல்லைன்னு சொல்லுமுன்னு வேண்டாமுன்னு சொல்லிடனும், தோல்வி நிச்சயமுன்னு தெரிஞ்சா ஆட்டைய கலைச்சிடனும்

டேய் கேட்கதுக்கு ரெண்டு காது பக்கத்திலே இருக்கு என்பதற்காக இப்படி எல்லாம் பேசி என்னை கொல்லப்புடாது.கிழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலைன்னு சொல்லுற

ஆமா .. ஆமா

டேய் நான் இன்னைக்கு தண்ணி அடிக்க காரணமே இல்லாம திண்டாடிக்கிட்டு இருந்தேன், கடவுளாப் பார்த்து ஒரு நல்ல காரணம் கொடுத்திட்டாரு. வா மாப்ள போகலாம். ஒரு முக்கிய மான விஷயம், தண்ணி அடிச்ச உடனே அவளை நினைச்சி நீ அழல்லாம் கூடாது.

கண்டிப்பா, சும்மா போறோம். போதையிலே வாறோம்.


Wednesday, November 18, 2009

தள தளத்த தமிழும், கவர்ச்சி இந்தியும்

உலகத்திலே ரெண்டாவதாக அதிக அளவிலே பேசப்படும் மொழி(அப்படித்தான் சொல்லுதாங்க), இந்தியாவிலே அதிக மக்கள் பேசப்படும் மொழி, இந்திய தேசிய மொழி(?) இத்தனை பெருமையுடை மொழி இந்தி மொழி, இப்பேர்ப் பட்ட மொழியை படிக்க முடியாமல் படிக்க முடியாமல் இழந்ததை எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்லும் அளவுக்கு திறமையுள்ள கணினி இன்றளவும் கண்டு பிடிக்கப் படவில்லை. இப்பேற்பட்ட அறிய மொழியை படிக்காமல் அழிந்து போன ஒரு ஆத்மாவின் கதை, இதை படித்து விட்டு உங்கள் கண்களிலே தாரை தாரையா கண்ணீர் வந்தா அது உலகத் தரம் வாய்ந்த இந்திக்கே சமர்ப்பணம்.நான் கல்லூரி படித்து கொண்டு இருந்தேன், அப்பத்தான் இந்தி மொழி யைப் பத்தி நிறைய கேள்வி பட்டேன், அதற்கு முன்னாடி எல்லாம் எங்க ஊரிலே மும்பை வரைக்கும் போய் தாக்கரே குடும்பத்தோட தடி அடியை தாங்க முடியாமல் திரும்ப ஓடி வந்தவர்களின் முடி வெட்டும் கடைகளிலே மீசை இல்லாமல் வைத்திருக்கும் புகைப் படங்களிலே மட்டுமே பார்த்து இருக்கிறேன்.

கல்லூரி நண்பன் சென்னைக்காரன் துண்டு போட்டு உசார் பண்ணிய எங்கள் வகுப்பு தோழியோட இந்திப் படம் பார்க்க திருச்சி போவான்,சும்மாதானே இருக்கேன்னு என்னை துணைக்கு ௬ப்பிடமாட்டான், நானே போய் இலவசமா இணைஞ்சுக்குவேன், அவனும் வேற வழி இல்லாம என்னை ஒரு நாள் ௬ப்பிட்டு போனான்.

படம் போட்ட ஒரு மணி நேரத்திலே வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு வெளியே வந்து, அவன் ஆளை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு என்னிடம்
"கிறுக்கு பெயலே கொஞ்சமாவது அறிவு இருக்கா, நானே நம்ம ஆளுங்க ௬ட்டம் குறைவா வருமுன்னு, ஹிந்தி படம் பார்க்க வந்து கடலை போடனுமுனா, நீ ஏன்டா லோட லோட ன்னு நச்சரிச்சு கிட்டு இருக்க"

"மச்சான், அவங்க படத்திலே வாயை திறந்த மூட மாட்டங்குறாங்க, அப்படி என்னதான் அம்புட்டு நீளமா பேசுவாங்கன்னு தெரியாம மண்டை குழம்பி விட்டது"


அதற்கு அப்புறமா அவன் எங்கே போனாலும், என்னை ௬ப்பிடுறதே இல்லை.அதோட போச்சு ஹிந்தி படிப்பு, ஒரு வழியா ரெம்ப கஷ்டப்பட்டு முன்னாடி பின்னாடி இருந்தவர்களை பார்த்து தேர்வு எழுதி வகுப்பிலே கடைசியிலே இருந்தாலும் இருந்தாலும் முதல் வகுப்பிலே தேர்ச்சி அடைந்தேன்.


படிப்பு முடிந்து ரெண்டு வருஷம் சென்னை சாலைகளை அளந்து விட்டுசொல்லாம கொள்ளாம பெங்களூர்க்கு ஓடி வந்தேன் , ரெம்ப ஊரை சுத்தாமவேலையும் கிடைத்தது . ரெம்ப நாள் மறந்து போய் இருந்த ஹிந்தி மறுபடியும் பரிச்சயம் ஆனது, காரணம் புதுசா கம்பெனிக்கு வடக்கூர் பெண்ணாலே, அவங்க சேர்ந்த புதிசிலே அவளுக்கு தனியா பொட்டி தட்ட கணனி இல்லாததாலே நாங்க ரெண்டு பெரும் ஒரு பொட்டிய பகிர்ந்து கிட்டோம்.

இங்கே ஒரு உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம், சத்தியமா அவளுக்குநான் துண்டு போடலை, காரணம் அவ அளவு கடந்த அழகா இருந்ததாள்.சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்.

அலுவலக வேலை விசயங்களை பத்தி உரையாடும் போது என்ன சொல்ல வாறேன்னு நான் பேசின அரைகுறை இங்கிலிபிசு அவளுக்கு புரியலை, அவ பேசின முழு இங்கிலிபிசு எனக்கு புரியலை.வெறுத்து போன அவள் ஒரு நாள் "நீ ஏன் இந்தி படிக்க டாதுன்னு, எங்க அப்பா மராட்டி, ஆனா இந்தி வாத்தியாரு, நானும் ஒரு குட்டி வாத்தியார் தான்னு சொன்னா"

அம்புட்டு அழகா இருக்கவகிட்ட முடியாதுன்னு சொல்ல மனசு வரலை,
இந்தியோட சேர்த்து காதல் பாடமும் வராதன்னு நப்பு ஆசையிலேயும், ஒரு பாடத்திலே ரெண்டு பரிச்சையிலே தேர்வு அடைவோம் என்ற நம்பிக்கையிலும், சம்மதம் சொன்னேன்.

ஒருவாரம்,ரெண்டு வாரம், மூனு வாரம் போச்சி நான் "நமஸ்தே" யை தாண்டலை, "அவ என்ன மச்சான் எப்படி இருக்கன்னு" நமிதா அக்கா மாதிரி டமில் பேச ஆரமிச்சிட்டா.

ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தமிழ் பாட்டு போட்டு காட்டினேன், மின்னலே வசீகரா பாட்டை கேட்டுட்டு, பாடல் ரெம்ப நல்லா இருக்குன்னு சொன்னா ,
அதையே சாக்கா வச்சி பிரண்ட்ஸ் படம் பார்க்க ௬ட்டிட்டு போனேன், வடிவேலு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சவா, தமிழ் நாட்டிலே எவ்வளவோ திறமைகள் இருக்கு, எனக்கெல்லாம் தெரியாம போச்சி, நான் இது நாள் வரைக்கும் சூரியன் உதிக்கிறதும், மறையறதும் மும்பையிலே தான்ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.

பூனை கண்ணை மூடி கிட்டு பால் குடிச்சா, உலகமே இருட்டுன்னு நினைக்குமாம் என்ற பழமொழி ஞாபகம் வந்தாலும், அரை மணி நேரமா இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்ல ன்னு யோசித்து முடியாம விட்டுட்டேன்.

அதன் பின் நிறைய தமிழ் வார்த்தைகள் சொல்லி கொடுத்தேன்.ஒரு நாள் என்னோட பெயருக்கு என்ன அர்த்தமுன்னு கேட்டா

"ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா, அடுத்த ரெண்டு நாள் அலுவலகம் வரலை, என் அழகை பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோன்னு நினைச்சேன், ரெண்டு நாள் கழிச்சி வந்தவகிட்ட "என்னாச்சி" ன்னு கேட்டேன்.

மாரடைப்பு வருகிற மாதிரி ஒரு தகவலை தந்தா, என்னாலே எப்படி அதிர்ச்சியை தாங்க முடியும்.
அவளோட அழகை ட அவ கிட்ட பேசவே இல்லை அதற்கு அப்புறம்.இப்படி நாங்க பாடம் படிச்சி கிட்டு இருக்கும் போதே அமெரிக்க பொருளாதாரம் சரிய எங்க பாடத்திலே மண்ணை அள்ளி போட்டுட்டாங்க, அடுத்த வாரத்திலே ஒரு நாள் எங்க டமேஜெர் ௬ப்பிட்டாரு என்ன நடந்ததுன்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.

பொறுப்பு அறிவித்தல் : (உபயம் வால்பையன்) இந்த கதையை சம்பந்தம் உள்ளவர்கள் படித்தால், இது கற்பனை என கொள்கSunday, November 15, 2009

குடும்பச் சண்டை

அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவங்க வீட்டிலே குடும்ப சண்டை நடக்கும், அவனோட அப்பா அந்த குடும்பத்திலே நடு, கிராமங்களில் மழை இல்லாமல் போன மனசு கொள்ளாது, அதுவரையிலே அவரவர் வேலையை செய்தவர்கள், விளை நிலங்களின் வெப்பம் பார்த்து கொதித்து போனவர்கள்,தங்களோட கோபத்தை கொட்ட வழி இல்லாமல்குடும்பத்திலே சண்டை ஆரம்பிக்கும்.மூவரில் யாராவது ஒருத்தர் சண்டைக்கு திறப்பு விழா வைப்பார்கள், அதன் பிறகு அண்ணன், தம்பியும் இணைந்து மூவரும் இடையில்லாமல் வான் மழை இல்லாத பஞ்சத்தை வசவு மழைகளால் நிரப்புவார்கள்.இவர்களோட சண்டையை வேடிக்கை பார்த்து விலக்கு தீர்க்க வந்தவர்களுக்கும் சில சமயங்களில் சண்டையிலே ஐய்கியம் ஆகி விடுவார்கள்,சில சமயங்களில் கணவன் மார்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும்,அவரவர்களின் மனைவி மார்கள் தனியாக சண்டை போடுவார்கள், குடுப்ப தலைவர்கள் தங்கள் சண்டையை வாயோடு முடித்து கொண்டாலும், தலைவிகளின் சண்டை குடுமிகளோடு நீண்ட நேரம் நடக்கும்.குடும்ப தலைவர்கள் வாய் சண்டையில் மட்டுமல்ல குடியிலேயும் மன்னர்கள், சண்டை ஓய்ந்ததும் மூவரும் தனித்தனியே சாராய கடையை நோக்கி போவார்கள், குடியின் ஆரம்பத்திலே கோபத்தின் விளிம்பிலே இருந்தவர்கள், இறுதியிலே பாசத்தில் பிணைந்து சாராய கடையிலே இருந்து வரும்போது மூவரும் தோளிலே கைகளை போட்டு கொண்டு வருவார்கள். முன்பு இவர்களை வேடிக்கை பார்த்த அதே ௬ட்டம் இப்போதும் வேடிக்கை பார்க்கும்.அவர்களின் மது மயக்கத்தின் பாசம், அது தெளியும் வரை மட்டுமே நிலைக்கும்,அதன் பின் மூவருமே அந்த சம்பவம் நடந்த சாயல் தெரியாமல் நடந்து கொள்வார்கள்.ஒவ்வொரு முறை சண்டை நடக்கும் போதும் இது ஒரு வாடிக்கையான விஷயம்.அவன் பள்ளி முடிந்ததும், நண்பர்களோடு விளையாடி விட்டு வரும்போது ஒரு வித பயத்திலே வருவான், வீட்டின் முன் ௬ட்டம் ௬டி இருந்தால் மீண்டும் விளையாட போய் விடுவான், அந்த நேரம் வீட்டிற்கு போனாலும் அவனை வரவேற்க ஆட்கள் இருந்தாலும் அவர்களின் கவனம் இவன் மேல் இருக்காது.


சிலசமயங்களில் அவன் விளையாடும் இடத்திற்கே விஷயம் வந்து விடும் வீட்டிலே சண்டையென்று, இந்த சம்பவங்களினால் அவன் பாதிக்க பட்டு, பின் பழக்கப் பட்டு விட்டான், இது அவன் அப்பாவை வெறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் சொன்னதற்கு எதிராகவே செய்து அதிலே ஆனந்தப் படுவான். நாட்கள் நகர்வது போல குடும்பச் சண்டையும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது, அவர்களின் சண்டையைப் பார்த்து சலித்துப் போனவன், யாரிடமும் சண்டை போடுவதில்லை. அவர்களின் சண்டையிலும் தலையிடுவதில்லை.

காலம் கடந்தது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு போக தயார் ஆனான், அவன் தந்தை விருப்பத்திற்கு மாறான ஒரு பாடத்தையும், இடத்தையும் தேர்ந்து எடுத்தான், குடும்பச் சண்டையின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், இல்லாமல் இல்லை. இதற்கு பயந்தே கல்லூரி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதில்லை.

கல்லூரி சென்றது முதல் அவனின் தேவையை எல்லாம் அம்மாவிடம் சொல்லியே பெற்று கொண்டான், தந்தையிடம் பேசுவதை குறைத்து கொண்டான்,எதாவது கேட்டால் பதில் மட்டும் சொல்லுவான், சில சமயங்களில் அதை சட்டை செய்யாமல் கடந்து சென்று விடுவான்.


ஒரு நாள் கல்லூரி விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான், அவன் அப்பா ௬ப்பிட்டாரு , வேண்டா வெறுப்பா அவர் பக்கத்திலே உட்கார்ந்தான் ,அவர் அவனோட மடியிலே படித்து "இனிமேல அம்மா ஒருகண்ணு, தங்கச்சி ஒருகண்ணு" ன்னு சொல்லிட்டு அவரால வந்த அழுகையை அடக்க முடியலை. அவர் செய்தது பைத்தியக்கார வேலையா இருந்தது, வெறுப்பின் உச்சத்துக்கே போய் விட்டான்.ஏதும் பேசாமல் கல்லூரிக்கு போய் விட்டான்.


அவன் போய் ஒருமாதத்திலே நள்ளிரவிலே நண்பர்கள் அவனை எழுப்பினார்கள்,


"டேய் மச்சான் எழுந்திரி, நாம உங்க ஊருக்கு போகணும்.. சீக்கிரம் கிளம்பு" என்றவனை


"என்னடா சொல்லுற?"


"உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம்"


"சரி, அதனாலே என்ன.. காலையிலே வீட்டுக்கு போன் பண்ணி கேட்கலாம்" என்று ௬றியவனை விடாப்படியாக கிளப்பினார்கள்,அவர்களின் அவசரத்தை பார்த்ததும் எதோ நடந்து இருக்கு உணர்ந்தான்.பேருந்திலே அவனையும் ஏற்றி விட்டு, அவனோடு அவன் நண்பர்களும் ஏறினார்கள், அவர்களும் அவனோடு ஊருக்கு வருவதாக கூறினார்கள்.

அவன் சந்தேகம் வலுவடைந்து


"எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சி?"


"உடம்புக்கு ரெம்ப முடியலையாம்"


"மச்சான், உண்மையை சொல்லுங்கடா" முதலில் சொல்ல மறுத்தாலும், அவனது வற்புறுத்தலின் காரணமாக உண்மையை சொன்னார்கள், அவனால் அழமுடியாமல் ஏதோ ஒன்று நெஞ்சை அடைத்துக்கொண்டது.வீட்டுக்கு சென்ற அவனைப்பார்த்ததும் சொந்தம் எல்லாம் மீண்டும் அழ ஆரம்பித்தார்கள், அதை கேட்கும் நிலையிலே அவனும் அவன் தந்தையும் இல்லை. ஈம சடங்குகள் எல்லாம் முடிந்த அடுத்த வாரத்திலே தந்தையை நம்பி கடன் கொடுத்தவர் எல்லாம் நெருக்க ஆரம்பித்தார்கள், வேறு வழி இல்லாமல் இருந்த நிலத்தில் பாதியை விற்று கடன் அடைத்தார்கள்.இழப்பின் வலியை உணர ஆரம்பித்தான்.அது வரை பணம் பற்றி கவலை இல்லாத குடும்பத்திலே அதுவே பிரதான கவலையானது.


அதுவரையிலே நடந்த சண்டையும் அறவே நின்று போனது. கஷ்டப்பட்டு கல்லூரியை முடித்தான். முதல் ஆளாய் சென்னைக்கு ஓடினான், கால் கடுக்க நடந்து ஒரு வேலையைப் தேடிபிடித்தான். ஆயிரம் ரூபாயிலே இருந்து இன்று முப்பதாயிரம் ரூபாய் வாங்கும் வரை உயர்ந்து விட்டான். பழைய கடன்களை எல்லாம் அடைத்து இழந்த பூர்விக நிலத்தையும் மீட்டு கொண்டார்கள். ஒரு முறை விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருந்தான்.

பள்ளித்தோழர்களை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான்.


நீண்ட நாட்களுக்கு பின்பு அவன் வீட்டுக்கு முன் ௬ட்டம் ௬டி இருந்தது, நின்றவர்களை விலக்கி விட்டு வீட்டுக்கு சென்றான், அவன் தாய்

"என்ன ஐயா, பக்கத்து ஊருக்கு போய் உன் ௬ட படிச்சவனை பார்க்க போறேன்னு சொன்ன, போகலையா?"


அதற்கு பதில் சொல்லாமல் "வெளியே என்ன?"


"உங்க சித்தப்பனும், பெரியப்பனும், ரெம்ப நாளைக்கு பிறவு, ௬த்து கட்டுறாங்க" ஏதோ நினைவு வந்தவளாய் ஒரு பெருமூச்சோடு சமையல் அறையை நோக்கி நடந்தாள்.அவனும் வெளியே வந்து எந்நாளும் இல்லாமல் சண்டையை வேடிக்கைபார்த்தான், மேலே வானம் வெறுமையா இருப்பதைப் பார்த்தான், இந்த சண்டையை எங்காவது ஒரு இடத்திலே இருந்து அவன் தந்தை வேடிக்கை பார்ப்பதைப் போல உணர்ந்தான். அவனை அறியாமலே அவன் கண்கள் கலங்கின, கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே நடந்தான்.