Monday, March 16, 2009

மருமகள் சம்பாதிச்சா?

இரவு 9 மணி :

"என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க,ஒரு பெண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சாஅவ என்ன அந்த வீட்டோட அடிமையா?"

மாறன் எதோ சொல்ல வாய் எடுக்க

"பேசாதீங்க நீங்க எதுவும், உங்க அம்மா செய்யுறது சரி இல்லை,என்ன நான்சொல்லுறது கேட்குதா?,இப்ப மட்டும் காது கேட்காதது மாதிரி இருப்பீங்களே"

"இப்பத்தானே என்னை பேசக் ௬டாதுன்னு சொன்ன" சொல்லிவிட்டுஅமைதியானான்

"இன்னைக்கு கலையிலே என்ன நடந்ததுன்னு தெரியுமா?"

காலை 9 மணி :

"நிலா, இந்த ரசிது கிழே கிடந்தது, உன் பேரு இருக்கு இதிலே" என்றாள் மாறனின்தாய்.

"ஆமா அத்தை என்னதுதான்"

"மாசா மாசம் அனுப்புறீயா?"

அவள் எதை பற்றி சொல்கிறாள் என்பது தெரிந்தும்,

"நீங்க எதை சொல்லுறீங்க அத்தை?"

"நான் எதப்பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியும்"


"ஆமா நான் மாச மாசம் என் வீட்டுக்கு பணம் அனுப்புறேன்"


"நீ இப்ப எது செய்தாலும் எங்களை கேட்டு செய்யுறது நல்லது"


"எங்க வீட்டுக்கு பணம் அனுப்புவதற்கு நான் உங்களிடம் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை, தகவல் வேணுமுனா சொல்லலாம், அது இப்பஉங்களுக்கும் தெரிஞ்சு போச்சு" கோபம் அவள் கண்களில் மட்டுமல்ல பேச்சிலும்தான்.

"எதோ மனசுல பட்டது சொல்லிட்டேன், அப்புறம் உன் விருப்பம்"

"நான் என் விருப்படி தான் செய்வேன், உங்களுக்கு விருப்பமுனா இருங்க, இல்லன போகலாம்"

மாறனின் தாய் அதற்க்கு மேல் பேச விரும்பாமல் அந்த இடத்தை விட்டுவெளியேறினாள்


மீண்டும் 9 மணி :

நான் என்ன பண்ணுறேன்னு உங்களுக்கு மட்டும் தான் சொல்ல முடியும், ஊரை ௬ட்டி சொல்ல முடியாது. இனிமேல் யாரவது நான் என் வீட்டுக்கு பணம் அனுப்புவதை பத்தி கேட்டால் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது

அதற்க்கு தலையை மட்டும் ஆட்டினான்.

நீங்க இப்படியே ஊமை கொட்டான் மாதிரி இருந்தால், நான் செய்யுறது எல்லோருக்கும் தப்பா தெரியுது

இன்னும் வேகமா தலை ஆட்டினான்

பக்கத்து அறையில் இருந்து மாறனின் தாய் இருமல் சத்தம் கேட்டது

வயசான காலத்திலேயே மகன், மருமகளோடு சந்தோசமா இருக்கிறதை விட்டு தேவை இல்லாத விசயங்களை பேசி எதுக்கு உடம்பை கெடுத்துக்கணும்

காலையிலே உங்க அம்மாவை மருத்துவ மனைக்கு ௬ப்பிட்டு போகணும்

அதையும் நீயே செய்யலாமே!!"

என்னாலே எப்படி முடியும், என்னை பத்தி ஒரு முடிவுக்கு வந்து இருப்பாங்க, இனிமேல் நான் எது செய்தாலும் அவங்களுக்கு நல்லதா படாது

அவள் ௬றியது மாலையிலே நடந்த ஒரு விஷயத்தை நினவு ஊட்டியது

மாலை 3 மணி :

மாறனின் கைபேசி சிணுங்கியது எடுத்து " என்ன அம்மா என்ன விஷயம், திடிர்னு போன் பண்ணுறீங்க"

"ஒன்னும் இல்லை சும்மாதான்"

சும்மா போன் பண்ண மாட்டீங்க, நிலா ஏதும் சொன்னாளா?

சற்றே தயங்கிய வாரே காலையில் நடந்ததை ௬ றினாள்

எல்லாம் முடித்து விட்டு "நீ ஏதும் அவளிடம் இதை பத்தி பேசவேண்டாம், அவ ரெம்ப நல்லவ டா"

"இதை நீங்க அவளிடமே சொல்லி இருக்கலாமே"

"என்னாலே எப்படி முடியும், என்னை பத்தி ஒரு முடிவுக்கு வந்து இருப்பா, இனிமேல் நான் எது செய்தாலும் அவளுக்கு நல்லதா படாது"

அவங்க ரெண்டு பெரும் மனசுல உள்ளதை பேச முடியாததாலே, இவனும் மனசு இருந்தும் வாய் பேச முடியாத ஊமை ஆகிவிட்டான்


34 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

உங்கம்மாவும் மனைவியும் ரொம்ப நல்லவங்கதான்.

குடுகுடுப்பை said...

ஊமைக்கொட்டான் பதிவு நல்லா எழுதுறார்.

- இரவீ - said...

அப்ப எது சொன்னாலும் - சும்மா தலைய ஆட்டி வைக்க வேணுமா ???
பின்னாடி உதவும் நோட் பண்ணிக்கறேன்.

- இரவீ - said...

இதுல உள்குத்து எதுவும் இல்லையே ???

வில்லன் said...

அடடா இதெல்லாம் உங்க கனவில தென் பட்டது. இப்படியே எல்லா மாமியாரும் மருமகளும் நெசத்துல இருந்துட்டா நம்ம வேல ரொம்ப ஈஸியா போய்டுமே. ரொம்ப சந்தோசமா பதிவு போடலாம். நல்லா நேரம் கெடைக்கும்.

வில்லன் said...

// Ravee (இரவீ ) said...
இதுல உள்குத்து எதுவும் இல்லையே ???//

என்னது உள்குத்து எதுவும் இல்லையே வா!!!!!!!!!!!!!!!!!!!! இதுவே கனவுல தென் பட்டது தான!!!!!!!!!!!!!!! அப்புறம் என்ன உள்குத்து வெளிகுத்து!!!!!!!!. நெசத்துல நடந்தா தலைவேரோட நெறைய பதிவ வலைப்பதிவில் பாக்கலாம். இப்படி கடை ஈயாடாது.

S.R.Rajasekaran said...

\\\அவங்க ரெண்டு பெரும் மனசுல உள்ளதை பேச முடியாததாலே, இவனும் மனசு இருந்தும் வாய் பேச முடியாத ஊமை ஆகிவிட்டான்\\\கதை டாக்கு டக்கரு மாப்பு !!!!!

S.R.Rajasekaran said...

உண்மைலே இந்த மாதிரி நடந்தா திரும்பவும் கூட்டு குடும்ப வாழ்க்கை அநேக குடும்பங்களில் மலரலாம்

நட்புடன் ஜமால் said...

நீங்க மட்டும் தான் நல்லவங்கன்னு நினைத்தேன் ...

அடடடே நீங்க ஏன் இம்புட்டு நல்லவர்ன்னு இப்ப தான் தெரியுது

அது சரி(18185106603874041862) said...

அம்மா, மனைவி இப்படி ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்களா இருக்கதுனால தான் சில பேரு அரை பீருக்கு நாப்பதாயிரம் செலவு வச்சாலும் தப்பிச்சிடறாங்க....நீங்க இது பத்தி என்ன நினைக்கறீங்க?? :0))

பழமைபேசி said...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....

பழமைபேசி said...

அடுத்த கதையில, பக்கத்து குலையில இருக்குறதுக்குமா?? இஃகிஃகி!!

ஹேமா said...

நசரேயன்,பயமுறுத்தாம நல்ல நீதிக் கதையெல்லாம் எழுதுறீங்க.
நல்லாயிருக்கு.

ஆதவா said...

ஹாஹா........ உங்க அனுபவமா... நல்லா இருந்தது! ரெண்டு பேருகிட்டவும் ஆப்புவாங்கிட்டு இப்படி நிக்கிறீங்களே!

பாராட்டுக்கள் ஊமைக்கொட்டான்... ஓ சாரி. நசரேயன்

ஆதவா said...

இப்ப ரெண்டு பேரையும் எப்படி சேர்ப்பீங்க....???

குழப்படி செய்யும்
ஆதவா

Anonymous said...

நல்லாயிருக்கு...

வல்லிசிம்ஹன் said...

அடடா. இருவரும் பேசிக்கொள்ளக்கூடாதா. நல்ல கதை. வாழ்க்கை இப்படியே (பேசினால்)இருந்தால் நல்ல நிலைமைக்குப் போகும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாயிருக்கு.

அ.மு.செய்யது said...

நல்லா இருந்துச்சுங்க உங்க சிறுகதை...

எழுத்தாளர் நசரேயன் கிளம்பிட்டாருய்யா..

புல்லட் said...

கதை நல்லாருக்கு ஆனா அந்த மருமகளை கண்டிக்காததை வன்மையாக கண்டிக்கிறேன்...
புருசன் ஒரு உதவாக்கரை..சொந்தக்தையாயிருந்தால் மன்னிக்கவும் ;) )

Rajeswari said...

உங்க ஆசையெல்லாம் கதையா வந்திருக்கு போல.. கதை சூப்பர்.

சந்தனமுல்லை said...

// குடுகுடுப்பை said...

ஊமைக்கொட்டான் பதிவு நல்லா எழுதுறார்.//

:-)))) வழிமொழிகிறேன்!

சந்தனமுல்லை said...

//அவங்க ரெண்டு பெரும் மனசுல உள்ளதை பேச முடியாததாலே, இவனும் மனசு இருந்தும் வாய் பேச முடியாத ஊமை ஆகிவிட்டான்//

ஆகா..இதுதான் நச்-னு முடிக்கறதா!! நல்லா இருக்குங்க கதை..சுவாரசியம்!

Anonymous said...

போட்டு தாக்குங்க தலைவா? அனல் பறக்குகிறது.

Anonymous said...

me the 25

ராஜ நடராஜன் said...

மாமியார் மருமகள் யதார்த்த மவுனம்.இப்படித்தான் பெண்களின் மனக் கோபங்கள் வீடுகளில் பிரதிபலிக்கிறதோ?

Poornima Saravana kumar said...

குடும்பப் படம் மாதிரி, குடும்பக் கதை:)

Poornima Saravana kumar said...

லேபிளில் குடும்பக் கதைனே போட்டிருந்தா இன்னும் நல்லா இருக்கும்!

அப்துல்மாலிக் said...

நல்லாருக்கு தல‌
பட் இப்படி நடுவுலே ஊமையாயிருப்பது காலுலே சுடுதண்ணீ ஊத்தினாப்போல இருக்கும்லே

கஷ்டம்தான் திருமண வாழ்க்கையில்லே

Mahesh said...

சொந்தக் கதையா? கனவா?

புதியவன் said...

கதை நல்லா இருக்கு இது உண்மையிலேயே உங்க சொந்த அனுபவமா...?

பட்டாம்பூச்சி said...

கதை இயல்பா இருக்கு :)).

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படியும் நடந்தா நல்லாதான் இருக்கும்.

அத்திரி said...

//உங்கம்மாவும் மனைவியும் ரொம்ப நல்லவங்கதான்//

??????????!!!!!!!!!!
.