Thursday, July 21, 2011

தற்கொலை தடுப்பு சேவை மையம்


தற்கொலை தடுப்பு வாசகர் சேவைக்கு அழைத்து இருக்கும் வாடிக்கையாளரே நீங்க ஏற்கனவே டிக் 20, இல்ல மூட்டை பூச்சி மருந்து குடித்து இருந்தால் உடனே சவ ஊர்தி வண்டிக்கும், மருத்துவ மனை ஆம்புலன்ஸ் க்கும் அழையுங்க,நீங்க மண்டையப் போடாம இருந்தா திரும்பி வந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் எண் ரெண்டை அழுத்துங்க.

ரெண்டை அழுத்துனத்துக்கு நன்றி, உங்களுக்கும், தற்கொலை தடுப்பு சேவை அதிகாரிக்கும் இடையே உரையாடல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படும்,காரணம் எங்க ௬ட பேசிய பிறகு நீங்க எங்கையாவது போய் மண்டையபோட்டா, உங்களுக்கு சங்கு ஊத நாங்கள் காரணம் இல்லை என்று எங்களை தற்பாதுகாத்துகொள்ள இந்த உரையாடலை சேமித்து வைக்கிறோம் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன், உங்கள் பெயரை உச்சரித்து எங்களின் விரிவான சேவை பிரிவுகளுக்கு செல்லலாம். தயவு செய்து உங்கள் பெயரி உச்சரிக்கவும்

"என் பெயர் ......."

மன்னிக்கணும் உங்கள் பெயர் புரியவில்லை, மீண்டும் ஒரு முறை ௬றவும், "என் பெயர் ..." , மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம், உங்க பேரு புரியலை, மறுபடி ஒரு தடவை சொல்லுங்க.. என் பெயர் ... இல்ல புரியலை.. என் பேரு .. புரியவே இல்ல, அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு பொறுமை இழந்த வாசகர்  

உங்க பெயர் இன்னும் புரியலை என்று தானியங்கி குரல் கேட்ட கேள்விக்கு

"அட எளவெடுத்த சனியனே"

நன்றி "அட எளவெடுத்த சனியனே" உங்கள் பெயர் நல்ல பெயர், தயவு செய்து எங்களின் விரிவான சேவைகளை ௬ர்ந்து கேளுங்கள், உங்களுக்கு வேலை வெட்டியே இல்ல, எப்போதுமே சும்மாதான் இருப்பீங்கன்னா எண் ஒன்றை அழுத்துங்கள், வேலைப்பணி அதிகமா இருக்கு, அதனாலே மன அழுத்தம் அதிகமா இருந்தா ரெண்டை அழுத்துங்கள். யோசிக்க எதுவும் இல்ல, அதனாலே உங்களுக்கு தற்கொலை பண்ணுகிற யோசனை இருந்தா எண் மூன்றை அழுத்துங்கள். காதல் தோல்வி இல்ல காதல்கள் தோல்வி இருந்தா எண் ஐந்தை அழுத்துங்கள், கணவன் மனைவி பிரச்சனை, கள்ளக்காதல் பிரச்சனயா இருந்தா எண் எழு, இப்ப சொன்ன எல்லா பிரச்சனையும் இருந்தா 
பூஜ்ஜியம், பிரச்னை எதுவுமே இல்லைனா, தொலைபேசிய கீழே வச்சிட்டு நாங்க அணிப்பி வைக்கிற சேவை கட்டண பணத்தை பார்த்து மாரடைப்பு வராமல் இருந்தா நலம்.

     
 உங்களுக்கு எல்லா பிரச்சனையும் இருக்கிறதா சொல்லி இருக்குகீங்க அட எளவெடுத்த சனியனே, உங்க பிரச்சனையின் வீரியம் அறிந்து உங்களுக்கு சேவை செய்ய ஒரு குழு இருக்கிறது உங்களுடன் உரையாட, அதனாலே நீங்க மனம் விட்டு தாராளமா பேசுங்க. சொல்லுங்க திரு அட எளவெடுத்த சனியன்.

"எப்படி சொல்லன்னு தெரியாம துக்கம் தொண்டைய கவ்வி பிடிக்குது"

"ஐயா கவ்வின கழுதையை எறக்கி வைக்கத்தானே நாங்க இருக்கோம்,நீங்க கவலைய மறந்து அள்ளிப்போடுங்க"

"வாழ்க்கையிலே மண் விழுந்துபோச்சி"

"சோத்திலே விழுந்த மண்ணுக்கும், மனசிலே இருக்கிற புண்ணுக்கும் ஒரே வழிதான், ரெண்டையும் எடுத்து வெளியே போட்டுட்டு பொழைப்பை பார்க்கணும்"

"குத்துவசனம் கேட்க நல்லா இருக்கு,ஆனா நடைமுறைபடுத்த முடியலை"

"வசனத்தையே வாழ்க்கையா பாருங்க, வழி தான்னாலே பிறக்கும்."

"நீங்க எப்போதுமே இப்படி வெட்டியாத்தான் பேசுவீங்களா?"

"ஐயா நீங்க இப்பவரைக்கும் உங்க பிரச்சனை என்னன்னு சொல்லவே இல்ல"

"சொல்லுறேன்.. இவ்வளவு நாளா என் உள்ளத்திலே சுவிஸ் வங்கியிலே ஒளித்து வைத்து இருந்த கருப்பு கள்ளப்பணம் மாதிரி மறைத்து வைத்த எல்லாத்தையும் சொல்லுறேன்"

அரைமணி நேர கொசுவத்திக்கு அப்புறமா மிஸ்டர் அட எளவெடுத்த சனியன் உங்க பிரச்சனைய எப்படி தீர்க்கிறதுன்னு யோசிக்கிறோம். உங்க கோரிக்கைய எப்படி நிறைவேத்துவதுன்னு,ஆனா நீங்க எதிர்பார்க்கிற விஷயம் நடக்குமான்னு தெரியலையே

"வாசகர் சேவை,எல்லாத்தையும் காப்பாத்துவோமுன்னு சொன்னீங்க,என்னைய காப்பாத்துங்க"

சரி எங்க மின் அஞ்சல் முகவரிக்கு உங்க புகைப்படம் அணிப்பு வையுங்க, தசவல் சொல்லுறோம்.அடுத்த நாள் காலையிலே தற்கொலை வாசகர் சேவையிலே இருந்த மணமாகாத பெண்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

பின் குறிப்பு :

கொசுவத்தியிலே நடந்த சம்பவம் என்னன்னு சொல்ல நான் கடைமைபடலை இருந்தாலும் சொல்லவேண்டியது என்னோட கடமை,அதாகபட்டதவது தற்கொலை வாசகர் சேவையை அழைத்த அந்த மாமனிதன், தங்களின் சேவையிலே உள்ள அனைத்து பிரச்சனைகளும் எதிர் காலத்திலேயே எனக்கு வர வாய்ப்பு இருப்பதாலே,அடிக்கடி உங்கள் சேவைக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, உங்கள் தற்கொலை தடுப்பு சேவையிலே வேலை செய்யுற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்னோட வாழ்கையிலே வெளிச்சம் கிடைக்கும்,அதனாலே உங்கள் சேவையிலே இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டார்.சேவை அதிகாரிகளும் அந்த மாமனிதனின் புகைப்படத்தை அனுப்ப சொல்ல, அதை பார்த்த அனைத்து பெண்களும், இப்படி ஒரு அழகான வாலிபருக்கு எதிர் காலத்திலேயே பிரச்சனையா என்று ஏங்கி தற்கொலை செய்துகொண்டனர்.அந்த மாமனிதர் யாரென்றும்,அவர் புகைப்படம் எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை     


12 கருத்துக்கள்:

vasu balaji said...

கொலைகரப்பாவி=))))

சாந்தி மாரியப்பன் said...

//"சோத்திலே விழுந்த மண்ணுக்கும், மனசிலே இருக்கிற புண்ணுக்கும் ஒரே வழிதான், ரெண்டையும் எடுத்து வெளியே போட்டுட்டு பொழைப்பை பார்க்கணும்"//

சொலவடை ஜூப்பரு :-))

ஓலை said...

ஆஹா! அட்டகாசம். மற்ற கால் சென்டர்ஸ் க்கும் ஒரு கால் போட்டீங்கன்ன கொஞ்சம் உதவியா இருக்கும்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்ட தேதியெல்லாம் சரியாத்தான் இருக்குது.அப்ப புதுசுதான்:)

ராஜ நடராஜன் said...

பின்னாடி குறிப்பு....ம்ம்ம்!

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் said...

கொலைகரப்பாவி=))))//

சேருவாரோட சேர்ந்தா இப்படித்தான் கால் கடிக்கும்:)

பழமைபேசி said...

அண்ணே... வணக்கம்.. ஊர்ல எல்லரும் நல்ல இருக்காங்கலா??

ஹேமா said...

இது அமெரிக்க அனுபவம் நசர்.எந்த ஒரு அலுவலுக்கும் அலுவலகங்களோடு தொடர்பு கொண்டால் இலக்கம் 3 ஐ அழுத்துங்கள்.அப்புறம் 4,5 ன்னு சொல்லிட்டிட்டே போவாங்க அப்புறம் கொஞ்சம் இருங்க யாரோ பேசுவாங்கன்னும் சொல்லுவாங்க.
பாத்திட்டே இருக்கணும் பாட்டுத்தான் கேக்கும்.அவங்க பிஸி பிஸின்னும் நடுவில சொல்லிக்குவாங்க.இப்பிடி இருந்தா நஞ்சு மருத்து குடிச்சவங்க நிலைமை!!!!!

"அட எளவெடுத்த சனியனே" இல்ல....சொல்லிப் பாத்தேன் நசர் !

vasu balaji said...

///வானம்பாடிகள் said...

கொலைகரப்பாவி=))))//

சேருவாரோட சேர்ந்தா இப்படித்தான் கால் கடிக்கும்:)/

=))))

நட்புடன் ஜமால் said...

@ஹேமா - ஹா ஹா ஹா

@நஸர் - அது உங்க போட்டோன்னு நெனச்சேன், பின்னூட்ட பெட்டிய திறந்தவுடன் வேற ஆள்ன்னு தோனுதே - :P

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்...ம்...

Aathira mullai said...

பிரச்சனைக்குரிய நபரின் பெயர் அழகோ அழகு.

"குத்துவசனம் கேட்க நல்லா இருக்கு,ஆனா நடைமுறைபடுத்த முடியலை"

"வசனத்தையே வாழ்க்கையா பாருங்க, வழி தான்னாலே பிறக்கும்."//
அழகோ அழகு