பலி ஆடுகளும், சிலப்பதிகாரமும்
பொறுப்பு அறிவித்தல் : எச்சரிக்கை இலக்கிய இடுகை
பலின்னு சொன்னா பழி தீர்க்க பலியானவர்களை சொல்லலாம், இயற்கை மரணம் இல்லாமல் பாதியிலே போனவர்களைஎல்லாம் பலி ஆனார்கள் என்று சொல்லலாம்.ஆனா நாம பார்க்க போறது பலி ஆடுகள் என்கிற பரிதாப பட்ட ஜீவன்களை பற்றி பேசுகிறது இந்த கருப்பு ஆடு.கருப்பு ஆடுன்னு ஏன் எல்லோரும் சொல்லுறோம், அது எங்கே இருந்து வந்தன்னு முழம் போட்டு விளக்க மணி அண்ணன் இருப்பதாலே, அவரு என்னன்னு விளக்கம் கொடுப்பாரு, நான் சொல்ல வந்த கதைக்கு திரும்ப வாரேன்.
ஏன் பலி பன்னிகள், பலி கழுதை, பலி குரங்கு, பலி சிங்கம், பலி புலி ன்னு சொல்லுறது இல்லை, கிராமங்களிலே கோவிலுக்கு பலி கொடுப்பதற்கு கடா வளர்ப்போம்.பலி போட்டு, ஆட்டு ரத்தம், கிட்னி, குடல் எல்லாத்தையும் பொரியல் பண்ணி சாப்பிடுவோம்.ஆமா மனுசனா இருக்கிற பலி ஆடுகள், தங்கள் வாழ்கையை தியாகம் செய்து அடுத்தவர் வாழ வழி செய்கிறார்கள்.
இந்த பலி ஆடுகள் எங்கே இருக்கிறது, அதைப்பற்றி இலக்கியத்திலே என்ன சொல்லுறாங்கன்னு பார்க்கலாம்.
கல்யாணம் ஆனா புதுசிலே
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
என்று கண்ணகியை புகழ்ந்த கோவலன், கொஞ்ச நாள் கழிச்சி வீட்டு சாப்பாடு பிடிக்காம, கடை பக்கம் போனவன் மாதவியை பார்த்து துண்டு போட்டு உட்கார்ந்து விடுகிறார்.
கோவலன் மாதவிக்கு உதட்டு சாயம், முகச்சாயம் ஆடை அணிகலன்கள் வாங்கின செலவு, பிசா, பர்கர் சாப்பிட்ட செலவிலே,வெள்ளை துண்டு போட்டுக்கிட்டு போன மனுஷன், கடைசியிலே மஞ்ச துண்டு போட வேண்டிய நிலை வந்தது.
இங்கே இன்னொரு உண்மையும் சொல்ல வேண்டிய இருக்கு, கோவலனுக்கும்,மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை ன்னு மணிமேகலையை எழுதிய சீத்தலை சாத்தனார் சொல்லுறாரு, கோவலன் மாதவியை திருமணம் செய்து இருந்தால், மாதவி கோவலனை வஞ்சித்து மஞ்ச துண்டு போட வைத்தாளா என்று தெரியலை.
இங்கே பலி ஆடாய் முதலிலே கண்ணகி இருப்பதாக தோன்றினாலும், உண்மையான பலி ஆடு கோவலனே, போன மச்சான் எப்படியும் திரும்பி வருவான்னு நம்பிக்கையோடு காத்து இருந்தாள் கண்ணகி.அவ நம்பிக்கை வீண் போகலை,அடிச்சாலும் பிடிச்சாலும் தங்கமணியே தெய்வமுன்னு திருப்பி வந்தார், கல்லானாலும் பொண்ணாட்டி, புல்லானும் புருசி என்கிற மாதிரி, அவரு திருந்தி வந்தாரான்னு இல்ல வேற வழி இல்லாம திரும்பி வந்தாரான்னு
எனக்கு தெரியலை. இளங்கோவடிகள்ட தான் கேட்கணும்
திரும்பி வந்த கோவலனுக்கு நல்ல ஒரு ருசியான விருந்து கொடுத்து கண்ணகி அவனை எரித்து இருந்தால், இன்றைக்கு சென்னை கடற்கரையிலே இருக்கும் சிலையானது அகில உலகமெங்கும் பரவி நியூயார்க் சுதந்திர தேவி சிலையே இன்றைக்கு கண்ணகி தேவி சிலையாக மாறி இருக்கும்.நாமும் பாரதி கண்ட புதுமைப் பெண் என்று சொல்லி இருக்க மாட்டோம், இளங்கோ கண்ட புதுமைப் பெண் என்று சொல்லி இருப்போம்(?).
சிலப்பதிகாரத்தின் கதை ஆசிரியர் ஏன் அதை செய்யலைன்னு தெரியலை, ஒருவேளை அரியணைக்கு தகுதியாக இருந்தும் தம்பி சேரன் செங்குட்டுவனுக்காக துறவு வாழ்க்கை மேற்கொண்டு தியாகம் செய்த காரணமோ என்னன்னு தெரியலை.வாழ்க்கையை தியாகம் செய்த அவருடைய படைப்பின் பாத்திரத்தையும் தியாகி ஆக்கி இருக்கலாம்.எழுத்தாளரின் படைப்பிலே நிஜ வாழ்வின் தாக்கம் இருக்கும் என்பதை உறுதியா சொல்லலாமா?
முதல் பாதியிலே குத்தாட்டம், களியாட்டம் எனச்செல்லும் கதையிலே, நாயகனின் பணமும் கரைந்து கழைத்து விடுகிறார்.பாட்டுக்கு அந்த காலத்திலேயே வெளி நாடு போயிருப்பாங்களோ?. இரண்டாம் பாதியிலே வயத்து பொழைப்புக்கு வழி இல்லாம, கண்ணகி காலிலே சரணம் அடைந்து(?) விட,புண்ணியவதி பெரிய மனசு பண்ணி கோவலனை மீண்டும் சேர்த்து கொள்கிறாள். (நடப்பு நடைமுறைக்கு சாத்தியப் படாத நிகழ்வு, முயற்சி செய்தது பார்க்க வேண்டாம், விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பு அல்ல)
வந்தவனை வீட்டு செலவுக்கு பணம் ஏற்பாடு பண்ண மதுரைக்கு தன்னோட கால் சிலம்பை கொடுத்து சேட்டு கடையிலே அடகு வைத்து/வித்து பணம் வாங்கி வர அனுப்பிய கண்ணகியின்
நகைகள் கட்டாயமாக கழட்டப் பட்டது.போனவர் ஒரேயடியாய்ப் போய் விட்டார்.கணவன் இறந்ததுக்கு காரணமானவர்களை பழி வாங்கும் நோக்கிலே மதுரையையே பலி வாங்கி விட்டாள். பழி வாங்கும் கதையின் கருக்கள் எல்லாம் இங்கே இருந்து வந்தவையா(?).
கணவன் அகால மரணத்திற்கு காரணமான மதுரை மண்ணையும், மன்னனையும் சுடு காட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள்.
ஏன் கண்ணகி மதுரையை எரிக்க வேண்டும், நியாமாகப் பார்த்தல் கண்ணகி எரிக்க வேண்டியது மாதவியே, கோவலன் சாவுக்கு மூல காரணம் யார் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.சிலப்பதிகார கதையின் ஆசிரியர் சேர நாட்டை சேர்ந்தவர், ஆனால் கதைகளம் அமைக்கப் பட்டது சோழ, பாண்டிய நாட்டிலே, தன்னோட தம்பி சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே என்ற ஆதங்கத்தை
வைத்து கதையின் முடிவில் மதுரையை எரித்து இருக்கலாம்(?).
மாதவியும் தன்பால் சேர்ந்த ஒரு பெண் என்றால், மதுரை எரியும் போது அங்கும் அநேக பெண்கள் இருந்து இருக்க வேண்டும்.இதற்கு ஊள் வினை, மண் வினை, மச்சி வினை காரணமான்னு தெரியலை.ஆனால் கண்ணகியின் கோபத்துக்கு மதுரை மக்கள் பலி ஆடுகள் ஆகி இருக்கிறார்கள்.அதனாலேயே என்னவோ இன்னும் மதுரை பெரிய கிராமமாக இருக்கிறது(?).
இலக்கியங்களிலே மட்டுமல்ல நிஜ வாழ்கையிலே நிறைய பலி ஆடுகள் இருக்கிறது, பலி ஆடுகள் இல்லாவிட்டால் பணிக்கு இடம் இல்லை. இப்போதைக்கு ஆராய்சி இவ்வளவு தான், இனிமேல ஏதாவது யோசித்தா(?) சொல்லி அனுப்புறேன்.
29 கருத்துக்கள்:
//கண்ணகி காலிலே சரணம் அடைந்து(?) விட//
சிலம்பை முதல்லேயே நோட்டம் விட்டுட்டுத்தானே?....
கதை இலக்கியம் வெகு முக்கியம்!!!
ஏன் ஏன் மதுரையை என்ற கேள்வி எனக்கும் உண்டு. உங்களுக்கு யாராவது விளக்கம் கொடுத்தாலும் நானும் கேட்டுக் கொள்கிறேன்.
//கல்லானாலும் பொண்ணாட்டி, புல்லானும் புருசி என்கிற மாதிரி//
புதுப்பதிகாரம்:)
படிச்சிகிட்டே வந்தா சிலப்பதிகாரம் படிச்சிருப்பீங்க போலதான் தெரியுது:)
முத்துப்பரல்கள்,மாணிக்கப்பரல்கள் வரையே வரவில்லை.அப்புறம் எங்கே மஞ்சள் பரல்கள் வரை வரப் போறீங்க?
/கோவலன் மாதவியை திருமணம் செய்து இருந்தால், மாதவி கோவலனை வஞ்சித்து மஞ்ச துண்டு போட வைத்தாளா என்று தெரியலை./
இது என்ன குழப்பம். :)
/மாசறு பொன்னே வலம்புரி முத்தேகாசறு விரையே கரும்பே தேனே
/
அட போங்கண்ணாச்சி. கரும்பே தேனேன்னு கொஞ்சினது பொன்னையும் முத்தையும் ஆட்டைய போடுறதுக்குன்னு கதாசிரியர் சூசகமா சொல்லியிருக்காரு. :))
/மஞ்ச துண்டு/
/இன்னும் மதுரை பெரிய கிராமமாக இருக்கிறது(?)/
அமெரிக்காக்கு ஆட்டோ வராதுன்னு தெனாவட்டா?
ஊருக்கு வந்தா மதுரைய தாண்டிதானே போகணும்:)))
கோவலன் என்ற கேவலனை முதலில் எரிச்சு இருக்கணும்.
மனைவியை விட்டுட்டு வீடுகள் செட்டப் செஞ்சால் **** துண்டுதான் கிடைக்கும் என்பது நீதி!
இன்னும் கொஞ்சம் யோசிச்சு அப்புறமா வர்றேன்.
//பிசா, பர்கர் சாப்பிட்ட செலவிலே...// அப்பவே இதெல்லாம் இருந்திருக்கா என்ன? :)
சிலப்பதிகாரத்தை இப்படியும் கதாகாலேட்சபம் பண்ணலாமே...
அட...அட..அட என்னாச்சு நசர்.ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறமாதிரி இருக்கு இண்ணைக்கு.இலக்கிய
ரசனையோட எழுத்து.
நேத்து குழந்தைநிலாவில துண்டு நீங்க போட வாலு துப்பட்டாவா எடுத்துக் குடுக்க...அந்தத் தொடரோ மஞ்சள் துண்டு இண்ணைக்கு.எங்க அந்த வாலு...காணோம்.
பலி ஆடுகளும் பழி வாங்கலும் சந்தர்ப்பத்தில் சடார்ன்னு ஆகுது.
முன்னமேதிட்டம் போட்டு பழி வாங்குறதா தெரில.விசைக்கு நிச்சயம் புறவிசை இருக்கும்தானே !
சிலப்பதிகாரத்தின் கதை ஆசிரியர் ஏன் அதை செய்யலைன்னு தெரியலை, ஒருவேளை அரியணைக்கு தகுதியாக இருந்தும் தம்பி சேரன் செங்குட்டுவனுக்காக துறவு வாழ்க்கை மேற்கொண்டு தியாகம் செய்த காரணமோ என்னன்னு தெரியலை.வாழ்க்கையை தியாகம் செய்த அவருடைய படைப்பின் பாத்திரத்தையும் தியாகி ஆக்கி இருக்கலாம்.எழுத்தாளரின் படைப்பிலே நிஜ வாழ்வின் தாக்கம் இருக்கும் என்பதை உறுதியா சொல்லலாமா?
.....சூப்பர் அப்பு! கலக்கிட்டீங்க!
மனசு விட்டு குலுங்கி,குலுங்கி சிரித்த இடுகை நசர்.
எந்த நைப்பும் இல்லாமல் வெள்ளந்தியா(உண்மையில்? :-) ) பேசுகிற குரல்களே, இப்போ ரொம்ப ஆறுதல்.
//
மனசு விட்டு குலுங்கி,குலுங்கி சிரித்த இடுகை நசர்.
//
அண்ணே அப்ப இதுவும் சிரிப்பு இடுகைதானா !!
மதுரை பெரிய கிராமமாக இருப்பதால்தான் இன்னும் அங்கு தமிழ் கலாச்சாரம் 80 சதவீதமாவது `மிஞ்சி`யிருக்கிறது அதற்காகவேணும் கண்ணகிக்கு நன்றி சொல்லவேண்டும்...
ஜூனியர் சோழர் ஒருத்தர் அமெரிக்காவில பிறந்த உடனே பாண்டியர்களுக்கெல்லாம் என்னமோ ஆயிடுச்சு :)
ஜூனியர் சோழர் ஒருத்தர் அமெரிக்காவில பிறந்த உடனே பாண்டியர்களுக்கெல்லாம் என்னமோ ஆயிடுச்சு :)
அண்ணே நீங்க எங துண்டு போட்டு வச்சிருக்கீங்க
//தன்னோட தம்பி சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே என்ற ஆதங்கத்தை வைத்து கதையின் முடிவில் மதுரையை எரித்து இருக்கலாம்(?).//
ஓ.. இப்ப புரியிது... யப்பா என்னமா யோசிக்கிறாய்ங்க..
அட்டகாசமான அலசல்.. ஆணித்த்ரமான வாதங்கள்.. ;))
சிலபதிகாரம் ஆராய்ச்சி மிக அமர்க்களம்.
பலிஆடு ஆராய்ச்சியும் நல்லாதான் இருக்கு.
செம ஆராய்ச்சிங்க...எப்படி இந்த இடுகையை மிஸ் பண்ணேன்?! :))) உங்களுக்குள்ளே இவ்ளோ திறமை இருக்கா!! (நான் கேக்கலை..இளங்கோவடிகள்ங்க!!)
/ கல்லானாலும் பொண்ணாட்டி, புல்லானும் புருசி/
யப்பாஆஆஆ!!
/பாட்டுக்கு அந்த காலத்திலேயே வெளி நாடு போயிருப்பாங்களோ?. /
ஹிஹி...
/இளங்கோ கண்ட புதுமைப் பெண் என்று சொல்லி இருப்போம்(?)/
ச்சே..வட போச்சே...இளங்கோவடிகள் செம ஃபீலிங்ஸ்...:))
தாங்கள் இன்னும் இது போன்ற இலக்கிய ஆராய்ச்சிகளை செய்து செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அப்படியே, ஆங்கில..லத்தீன் அமெரிக்க இலக்கியங்களையும் ஒரு கை பார்க்குமாறு வேண்டுகோள் வைக்கிறோம். (ஏதோ..நம்மாலானது!) :)))
//தன்னோட தம்பி சேரன் செங்குட்டுவன் பாண்டிய நாட்டை பிடிக்க முடியலையே என்ற ஆதங்கத்தை
வைத்து கதையின் முடிவில் மதுரையை எரித்து இருக்கலாம்(?).//
கலக்கறிங்க!
சிலப்பதிகாரத்தை இப்படி ஒரு நடையில் நான் படித்தது இல்லை. ஆனா இதுவும் நல்லா இருக்குங்க.... எனக்கும் கூட புரியும் படி. இதை கதைன்னு சொல்றதை விட விமர்சனம்னு சொன்னா இன்னும் சரியா இருக்கும்னு தோணுது.... ஏன்னா நீங்க நெறைய எடத்துல சன் டிவில கால் மேல கால் போட்டு உக்காந்துட்டு ஒருத்தர் விமர்சனம் சொல்லுவாரே... அதே போல "இருக்கலாம்" "சொல்லலாம்" "செய்யலாம்" னு சொல்றீங்க... ரெம்ப டிவி பாப்பீங்களோ... நான் ரெம்ப பேசறனோ... சரி சரி... போய்டறேன்...
ஆனா ஸ்கூல்ல படிச்சா செய்யுள் எல்லாம் கண்ணு முன்னால கொண்டு வந்துடீங்க...
"நீர் வார் கண்ணாய் எம் முன் வந்தோய்... யாரையோ நீ மடகொடியோ.........................." ஒகே ஒகே மீ எஸ்கேப்...
//இப்போதைக்கு ஆராய்சி இவ்வளவு தான், இனிமேல ஏதாவது யோசித்தா(?) சொல்லி அனுப்புறேன்//
வேண்டாங்க ப்ளீஸ்.... நாங்க எல்லாம் பாவம்... விட்டுடுங்க.... (நீ எழுதற ஈ அடிச்சான் காப்பிக்கு இது 200 % மேல்னு நீங்க திட்ட ஆரம்பிக்கறதுக்குள்ள நான் ஓடிடறேன்...ஹ ஹ ஹ)
Post a Comment