Monday, March 8, 2010

சாக்கடை கவிஞன்

மூணாம் வகுப்பு படிக்கும் போதே தெருவிலே பேப்பர் பொறுக்கிட்டு அலைவேனா, அப்ப எல்லாம் என்னையைய பார்ப்பவர்கள் இவன் கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க.

நான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா அப்படின்னு ஏங்கி இருக்கேன்.நீங்க கேட்பீங்கன்னு எதிர் பார்த்து இருந்தா இப்ப நான் சுத்துற கொசுவத்திய எப்படி சுத்த முடியும்.இவ்வளவு நாள் குப்பை தொட்டியா மனசுல புதைந்து மல்லிகைப்பூ போல நறுமணம் வீசிக்கிட்டு இருக்கிற உள்ள எரிமலை எப்படி வெடிக்கும்? 


ஒரு பிஞ்சி மனசிலே விழுந்த இந்த (க)விதை தான் அது, அன்றைக்கு ஒழுங்கா தண்ணி  ஊத்தி இருந்தா இன்றைக்கு வானம் பார்த்த பூமியா நான் ஏன் கஷ்டப்படனும், நானும் ஒரு வில்லியம் ப்ளக் (ஆளு பேரு தான் அப்படி, ஆனா வெள்ளைகார துரையாம்)  மாதிரி ஒரு பெரிய கொலைவெறி கவிஞன் ஆகி, அவரு ஒரு விஷ மரத்தை கொடுத்து மாதிரி, நான் ஒரு கள்ளிச்செடியையாவது பரிசு அளித்து இருப்பேனே!!


கீதாலஞ்சலி கொடுத்து நோபல் பரிசு வாங்கின தாடி தாகூர் மாதிரி நானும் ஒரு கும்மியாஞ்சலி கொடுத்து, எனக்கும் ஒரு கபாலி விருது(?) கொடுத்து இருப்பாங்க.நான் மூணாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கவுஜை எழுதினேன்.


 மழையே வா 

எருவமாடு 
பூமி தாகமா இருக்கு 
எருவமாடு 

எருவமாடு.. எருவமாடுன்னு ரீங்காரம் செய்கிறது நான் இல்லை எங்க அம்மா, நான் எழுதிய அந்த காப்பியம் எனது மதிப்பெண் அட்டையிலே, அப்புறமா கவிதை தாயை தரிசிக்க முடியவில்லையே என்று நான் அழலை, என் தாய் அடித்த அடி தாங்காம வலியிலே அழுதேன், அதற்காக நீங்களும் அழக்௬டாது.ஒரு உலக கவியாக மாறவேண்டிய நான் அங்கே கிள்ளி எறியப்பட்டேன்.

இப்படி முத கவுஜையிலே சோர்ந்து போனாலும், அடுத்து ஆறாம் வகுப்பு படிக்கும் போது 



அம்மு இங்கே வா வா 
ஆசை முத்தம் தா  

கடைப்பக்கம் வாறவங்களுக்கு நல்லாவே தெரியும், இது வாத்தியாருக்கு தெரியுமா? அவரு, நான் ௬ட படிக்கிற புள்ளையத்தான் சொல்லுறேன்னு ஒரு வட்டம் போட்டு என் கால்ல கம்பை வச்சி நல்லாவே கட்டம் போட்டாரு.தேசியகவி அங்கேயே மண்டைய போட்டுட்டாரு.அதோட விடலை விதி வலியது ன்னு சொல்லுற மாதிரி

வில்லயம் ஜக்கு பீர் சானட் எழுதி ரெம்பவே கலவர படுத்தினார்னு கேள்விப்பட்டு பன்னிரண்டு முடிச்ச உடனே  வெட்டியா சுத்திகிட்டு இருக்கேன் வீட்டுக்கு போன காஞ்சி கிடைக்காதுன்னு தெரியும், சாக்கடையிலே விளையாடி கொண்டு இருந்த பன்னி குட்டிகளை பார்த்து  ஒரு கவுஜ கிடைத்தது.

நீங்க சிக்கனமா இருந்தா
நாங்க ஏன் சாக்கடையிலே 


அப்படின்னு  பொல்லாத கொலைவெறி தத்துவத்தை சொல்லிபுட்டேன்னு பக்கத்திலே போய்க் கொண்டு இருந்த வாகனம் என் மேல சகதியை அள்ளி வீசிட்டு போயிட்டது, கொஞ்ச நேரத்திலே பன்னி எது நான் எது கண்டு பிடிக்க மக்கள் ரெம்பவே சிரமப்பட்டு இருக்காங்க. 

ஜக்கு பீர், ப்ளக், தாடி தாகூர் தலை தெறிக்க ஓடிட்டாங்க, சரி கவிப்பேரசு மாதிரி சினிமாக்கு பட்டு எழுதலாமுன்னு போட்டேன் ஒரு மெட்டு  

நானும் தட்டினேன்
நீயும் தட்டின
சத்தமே வரலை
நான் உன்னை தட்டினேன்
நீ என்னை தட்டினா
சத்தமே வரலை
ரெத்
மா வருதே !!!!!!! 


இப்படி ஒரு கலவரப் பாட்டு எழுதினேன்.தமிழகத்தின் தேசிய கீதமாக ஒலிக்க வேண்டிய பாட்டை கிழிச்சி போட்டுடாங்க, அது சொல் பிழையா, பொருட் பிழையா, நான் விடுற எழுத்துப் பிழையான்னு ௬ட சொல்லலை.என்ன காரணமுனா இந்தி பாட்டு படிக்கிறவங்க இதை தமிழ்ல பாட முடியாதாம், இந்தியிலே படிக்கிறவங்க தமிழ்ல படிக்க முடியாதான்னு கேட்டேன், அவங்களுக்கு இந்தி மட்டும் தானே தெரியும், அதனாலே அவங்க படிக்கிற மாதிரி கை, சை, காபீர், குபீர் ன்னு மாத்துங்கன்னு சொல்லிட்டாங்க.கொலைவெறி கோபம் வந்து விட்டது,நான் சொன்னேன்   


"சகானா சாரல் தூவுதோ"

எழுதினா இந்தாளு

"சகானா சாறல் தவ்வுதோ"

எதோ இவரு வீட்டுக்கு கட்டடம் கட்ட சாறல் அடிச்சா மாதிரி படிக்காரு.

"அன்பா..வாளை எடு அழகைச் சாணையிடு!"

அப்படின்னு எழுதினதை

"அன்பாய் வாளி எடு அதிலே சாணியை எடு"

என்னய்யா இது,வாளியை எடு சாணியை அள்ளுன்னு. போர் களத்திலே படிக்க வேண்டிய பாட்டை இப்படி வைக்கப்போர் களத்திலே படிக்கிற மாதிரி படிக்கிறவங்களை வச்சி எதற்கு படிக்க சொல்லனுமுன்னு கேட்டேன்.நவநாகரிகம் தெரியாத ஆளுக்கு இங்கே வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க.வந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாமுன்னு புதுப் பாட்டு எழுதி கொடுத்தேன்.

வள வலய வாயில் போடு
பல பலய பையிலே போடு

கொல கொலையை கொல்லையில் போடு
அட அடையை அடுப்புல போடு

மல மலைய மடியில போடு
தல தலைய தலைல போடு

சல சலய சாக்குல போடு
கரு கருவ கண்ணுல போடு

துரு துருவ தூக்கி போடு
இதை எழுதுணவனை எண்ணைல போடு

படிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு
மல மலனு மண்டைய போடு

எழுதி கொடுத்த உடனே இந்த வருசத்தோட இமாலய வெற்றி பாட்டு இது ன்னு சொல்லிட்டாரு.அந்த பாட்டு வெளிவந்த உடனே தான் நிறைய கவுஜ எழுதனுமுன்னு இன்னும் காத்துகிட்டு இருக்கேன்.


28 கருத்துக்கள்:

கபீஷ் said...

வேற வழியே இல்ல. கைய ஒடச்சிட வேண்டியது தான். கொட்டேஷன்ஸ் வரவேற்கப்படுகிறது

சாந்தி மாரியப்பன் said...

//அம்மு இங்கே வா வா
ஆசை முத்தம் தா//

அப்பவே துண்டு போட ஆரம்பிச்சாச்சா!!!ம்ம்ம்..நடத்துங்க.

Anonymous said...

//நானும் தட்டினேன்
நீயும் தட்டின
சத்தமே வரலை
நான் உன்னை தட்டினேன்
நீ என்னை தட்டினா
சத்தமே வரலை
ரெத்தமா வருதே !!!!!!! //

யம்மாடி நிறைய அடி வாங்கிருப்பீங்க போலிருக்கு

Unknown said...

கபீஷை வழி மொழிகிறேன்..

கபீஷ் - எவ்வளவானாலும் பரவாயில்ல, பாத்து சொல்லுங்க, நான் ஒரு ஷேர் எடுத்துக்கிறேன்.

Chitra said...

கவுஜ கண்ணாயிரம், வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லவேளை வில்லியம் ப்ளாக்குன்னு சொல்லல...

யோவ் நசரு கீதாஞ்சலிய்யா
கீதலாஞ்சலியில்ல...

எருவமாடா எருமமாடா?

ஷேக்ஸ்பியர்க்கு நல்ல பேரு வச்சீரய்யா நீர்...

//நானும் தட்டினேன்
நீயும் தட்டின
சத்தமே வரலை
நான் உன்னை தட்டினேன்
நீ என்னை தட்டினா
சத்தமே வரலை
ரெத்தமா வருதே !!!!!!! //

:)))))))))))))

சின்னப் பையன் said...

எருவமாடு - :-)))))))))))))))

அரங்கப்பெருமாள் said...

நீ ஒரு இலக்கியவாதிண்ணே!!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நயந்தாராவின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு ஏதும் வந்துள்ளதா தல..,

சந்தனமுல்லை said...

படிக்க படிக்க கிலி அடிக்குது...அவ்வ்வ்.உங்க இடுகையை படிச்ச எஃபெக்ட்லே நானே கவிதை எழுதிடுவேனாட்டம் இருக்குது! :-)

சந்தனமுல்லை said...

தலைப்பிலேயே கொன்னுட்டீங்க...கவிஞனை!! :-)))

சந்தனமுல்லை said...

/வில்லயம் ஜக்கு பீர்/

அவ்வ்வ்வ்! ஆங்கிலப்புரவலர்கள் பார்த்தா டெரராகிடப்போறாங்க :))

சந்தனமுல்லை said...

/அந்த பாட்டு வெளிவந்த உடனே தான் நிறைய கவுஜ எழுதனுமுன்னு இன்னும் காத்துகிட்டு இருக்கேன்/

ஆகா...எஸ்கேப்!! :-)

Jerry Eshananda said...

எழுதுங்கப்பு,நிறைய கவுஜ எழுதுங்கப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

aahaa...;)))

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு நாள் குப்பை தொட்டியா மனசுல புதைந்து மல்லிகைப்பூ போல நறுமணம் வீசிக்கிட்டு இருக்கிற உள்ள எரிமலை எப்படி வெடிக்கும்?

ஆஹா! செம டெரர்ரா இருக்கே

ரெத்தமா வராம என்ன செய்யும் கவிஞ்சனே

ஈரோடு கதிர் said...

கவிஜரே வணக்கம்

vasu balaji said...

குடுகுடுப்பைக்கு நீர் போட்டதுதான் உமக்கும்.

அடங்க மாட்டியரா?:))

கலகலப்ரியா said...

//அப்ப எல்லாம் என்னையைய பார்ப்பவர்கள் இவன் கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க//

இப்போ மட்டும் என்ன சொல்லுறாய்ங்க... கழுதை அவுட் ஆப் ஃபேஷன் போல....

படிச்சவன் பாடையில... பக்கத்தில ப்ராக்கெட்ல என்னமோ இருக்கே... அது எதுக்கு...

உங்க அம்மாவோட... எதிர்ப்பாட்டு.. எருவமாடுதான் செமத்தியா இருக்கு... எருமையோ ... சே... அருமையோ அருமை...

கபீஷ் said...

//கபீஷ் - எவ்வளவானாலும் பரவாயில்ல, பாத்து சொல்லுங்க, நான் ஒரு ஷேர் எடுத்துக்கிறேன்//

டாங்கீஸ் முகிலன் பத்து பவுண்டுக்கே ஆள் கிடைச்சாச்சு. (கொசுவை அடிக்க எதுக்கு இவ்ளோ அமவுண்ட்னு கேக்கறாங்க) இருந்தாலும் இந்த அளப்பரிய செயலுக்கு காசு கொடுப்பது நம் கடமையல்லவா.

ராஜ நடராஜன் said...

எதிர் கவிஜய விட இது ரொம்ப டெரரா இருக்குது.தொடருங்கள்.

அன்புடன் நான் said...

//அம்மு இங்கே வா வா
ஆசை முத்தம் தா//
அப்பவேவா???

அப்புறம்... கபீஷ்... முகிலன் கூட சேர்ந்துக்கிறேன்.

thiyaa said...

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்

வில்லன் said...

//அம்மு இங்கே வா வா

ஆசை முத்தம் தா //

ஆஹா ஆறாம் வகுப்பு படிக்கும் போது இப்படி ஒரு அற்புதமான கவிதை படைப்பா நம்பவே முடியலே...... யாரந்த அம்மு.... உங்க டீசெரா இல்ல கூட படிச்சா பொண்ணா????????????

இதுக்கு உங்க அம்மா எப்படி எசப்பாட்டு பாடினாங்கன்னு சொல்லவே இல்லையே.... ஒருவேளை இப்படி பாடி இருப்பாங்களோ....

பெரம்பை கொஞ்சம் எடுத்து....
முதுகை பதம் பார்கிறேன்.....
கொஞ்ச நேரம் பொறுத்திரு....
கேவலம் புடிச்ச மகனே.....

அண்ணாச்சி குடுகுடுபையே உங்க எதிர் கவுஜய கொஞ்சம் எடுத்து விடுங்க பாப்போம்.....

வில்லன் said...

//நான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா அப்படின்னு ஏங்கி இருக்கேன்.//

கேட்டு தெரியவேண்டியதில்லை.... பேப்பர் பொருக்கி பீடி வாங்கினதை !!!!!!

வில்லன் said...

//படிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு//

நல்ல வேலை படிச்சவனை பாடைல போடுன்னு எழுதாம போனீரே? அந்த மட்டும் சந்தோசம்........

நசரேயன் said...

நன்றி கபீஷ் :- கொலைவெறியோட தான் இருக்கீங்க போல, எதுக்கும் உளவுத்துறைகிட்ட சொல்லி பாதுகாப்பு பலப் படுத்திகிறேன்.

நன்றி அமைதிச்சாரல் :- நான் ரெம்ப
நல்ல பையன் நம்புங்க

நன்றி சின்ன அம்மிணி :- அடி கொஞ்சம் அதிகம் தான்

நன்றி முகிலன் :- மேல பதில் சொல்லி இருக்கு

நன்றி Chitra டீச்சர்

நன்றி பிரியமுடன்...வசந்த் :- வசந்த் பேரை மாத்திடாங்க என்கிட்டே சொல்லாம

நன்றி ச்சின்னப் பையன் :- நீங்க என்னைய திட்ட மாட்டீங்கன்னு தெரியும்

நன்றி அரங்கப்பெருமாள் :- தலைவரே அதுக்கு இன்னும் ரெம்ப தூரம் போகணும்

நன்றி SUREஷ் (பழனியிலிருந்து) :- தெரியலையே கேட்டு சொல்லுறேன்

நன்றி சந்தனமுல்லை :- இடுகையை விட உங்க பின்னூட்டம் ரெம்ப டமேஜ்

நன்றி ஜெரி ஈசானந்தா. ஐயா

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி ஈரோடு கதிர்

நன்றி எம்.எம்.அப்துல்லா அண்ணே

நன்றி வானம்பாடிகள் அண்ணே :- இனிமேல எழுதலை போதுமா

நன்றி கலகலப்ரியா :- டமேஜ் அதிமா இருக்கு எனக்கு

நன்றி ராஜ நடராஜன்

நன்றி சி. கருணாகரசு :- பதில் சொல்லியாச்சி

நன்றி தியாவின் பேனா

நன்றி வில்லன் கும்மிக்கு

அது சரி(18185106603874041862) said...

//
மூணாம் வகுப்பு படிக்கும் போதே தெருவிலே பேப்பர் பொறுக்கிட்டு அலைவேனா,
//

அப்பாடா...நீங்க மூணாங்கிளாஸ் வரை படிச்சிருக்கீங்கன்னு சரித்திரத்துல பதிவு செஞ்சாச்சு...:0))))