Wednesday, February 10, 2010

மார்கழி மாத அதிகாலை

"மெய்யப்பா இங்கே வா.. இங்கே வா ..." என்ற குரலை கேட்டு மெய்யாகவே கலங்கி போனார், குரல் வந்த திசையிலே சாமியார்

"ஐயா நீங்க யாரு?"


"என்னைய தெரியலையா, அம்மன் கோவிலே இருக்கிறேன். பெயரிலே மெய் வச்சி கிட்டு பொய் சொல்லுறியே" 

 
"கவனிச்சதில்லை சாமி"

"நீ கவனிக்கலைனாலும் நான் உன்னை கவனிச்சிக்கிட்டு தான் இருக்கேன், உன்னோட மனக்கவலை எல்லாம் காத்தாகப் போகுது, வீட்டிலே போய் சொம்பு தண்ணி குடிச்சிட்டு படு, எல்லாம் சரியாகும்"

வீட்டுக்கு வந்த மெய் அப்பன் சாமியார் நினைவுகளிலே தூங்கி போனார், அதிகாலையிலே குடுகுடுப்பையின் சத்தம் "நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது" என்று கேட்ட ஞாபகத்திலே மீண்டும் நித்திரைக்கு சென்றார்.  

மற்ற மாதங்களில் எப்படியோ ஆனா மார்கழி வந்துவிட்டால் எங்கள் வீட்டிலே கொண்டாட்டம்,கோவில்களில் அதிகாலை ஆராதனைக்கு தெய்வங்களை அலங்கரிக்க பூக்கள் எங்கள் வீட்டிலே இருந்து செல்லும்,படிப்புக்கு   தகுந்த வேலையிலே  இருந்தாலும் என் தந்தைக்கு உதவியாக நானும் பூக்களை பட்டுவாடா செய்வேன்.

அன்றும் அப்படித்தான்,அவசரமா போக இருந்த என்னை பூசாரி ஒரு மாலை கட்டி கொடுக்க  சொன்னார்.நான் பூக்களை தேடி எடுக்கும் போது,பூக்கள் பொதிந்த ஒரு தேவதையை கண்டேன்.நான் பூக்களை தொடுத்து மாலையான போது, என் மனதிலே இருந்த காதல் முத்துக்கள் கோர்க்கப்பட்டு காதல் மாலையாகி அவளுக்கு முடி சூட தயாராக இருந்தது. அம்மனோட சேர்த்து என் காதல் அம்மனையும் தரிசித்து விட்டு வீட்டுக்கு சென்றேன், அணுக்களை பிளக்கும் போது உள்ள வேகத்தை விட வேகமாக காதல் தீ பரவியது.


பகல் முழுவதும் அவள் நினைவிலே இருந்த நான் அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.அவளைப் பற்றிய அனைத்து குறிப்புகளையும் சேகரித்து கொண்டேன்.எனக்கும் திருமணதிற்கு பெண் பார்த்து கொண்டு இருந்த அதே நேரத்திலே என் வீட்டிலே அவளைப் பற்றி சொன்னேன். மறுப்பு ஏதும் சொல்லாமல் மறுநாளே பெண் கேட்டு சென்றனர்.


"என்னங்க பெண் கேட்டு வந்தவங்க கிட்ட என்ன சொல்ல?" இதே கேள்வியை பலமுறை கேட்டும் அவரின் பதில் என்ன என்று தெரிந்தும், இந்த கேள்வியை கேட்க மட்டும் தயங்கியதில்லை.



"உங்க விருப்படியே செய்யுங்க?"

"உண்மையாவா சொல்லுறீங்க?"

"ம்ம்.. ஆக வேண்டிய வேலையை பாருங்க"

அந்த ஒரு பதிலிலே  எங்கள் திருமணமும் முடிந்து நாங்கள் முதலிரவு அறைக்கு சென்று விட்டோம்.ஓய்வில்லா அலைச்சலில் களைத்து போய் இருந்த எனக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்த மனைவியின் கைகளை பிடித்து கொண்டு நெஞ்சிலே கை வைத்து விழுந்தேன் தரையிலே.

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகு

என்னங்க நம்ம பொண்ணும் என்னையே மாதிரி, கல்யாணத்துக்கு ரெம்ப கஷ்டபடுவா போல இருக்கே, எனக்காவது எங்க அப்பாவுக்கு சாமியாடியும், குடுகுடுப்பையும் சொன்னதாலே தைரியம் வந்து, எனக்கு இருந்த தோஷங்கள்  எல்லாம் சரியாகிடுமுன்னு நம்பிக்கையிலே என்னோட கல்யாணத்துக்கு சம்மதித்தார்,ஆனாலும் நம்மோட கல்யாணத்து அன்றைக்கு நீங்க மயங்கி விழுந்ததை பார்த்து எங்களுக்கு எல்லாம் உசிரே இல்லை.


"உங்க அப்பாவோட நம்பிக்கையை சாமி காப்பாத்தி விட்டது, ஆனா இப்ப நம்ம பொண்ணோட நம்பிக்கையை யாரு காப்பாத்த?"

"நம்ம மாரியாத்தான்னா பரவா இல்லை, இவ எதோ வேற சாமியை கும்பிடுற பையனை காதலிக்கிறாள், இந்த பையனோட அப்பா முடியவே முடியாதுன்னு அடம் பிடிக்கிறாராம்."    

"எல்லா மனுசனுக்குள்ளேயும் சாமி இருக்கு,உங்க அப்பா சாமியாரை பார்த்து சாமியானார்,அதே மாதிரி அவரும் ஒரு நாள் சாமி ஆவார்."

"சீக்கிரம் நடந்தா சரிதான், இந்த பிரச்சனையிலே நம்ம பொண்ணு படுற கஷ்டம் என்னால தாங்க முடியலை"    

"நடக்கும், நீ எனக்கு கொஞ்சம் காபி எடுத்திட்டு வாயேன்"

 காபி எடுக்க உள்ளே சென்ற என்  மனைவிக்கு, நான் அதன் பின் பேசியது காதிலே விழ வாய்ப்பு இல்லை.

சில மனுசங்க சாமியை உணரலைனா,நாம  உணர்த்தணும், உணரவைக்கணும் என்று பேசிய நான் பழைய நினைவுகளை அசைபோட்டேன், திருமணதிற்கு முன் என் மனைவியை கோவிலே பார்த்த உடனே, அவளைப் பற்றி விசாரித்த போதுதான்,அவளுடைய ஜாதகத்திலே ஏதோ தோஷம் இருப்பதாக தெரிந்து கொண்டேன் .

"இந்தாங்க காபி" என்ற கையிலே இருந்து காபியை வாங்கி கொண்டு வீட்டுக்கு  வெளியிலே   இருந்த நாற்காலியிலே அமர்ந்து யோசித்தேன்.

அன்றைக்கு என்னோட சாமி வேஷம் போட்டு, நான் நினைச்சதை சாதித்தேன், இன்றைக்கு வேற சாமி வேஷம் போட்டு என் பொண்ணு நினைச்சதை சாதிக்க வைக்கிறேன், வைப்பேன் என்ற என் மன உறுதிக்கும், தன் நம்பிக்கைக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பதை என் ஆள் மனது உணர்த்தியது. 


21 கருத்துக்கள்:

பழமைபேசி said...

உங்க நம்பிக்கை வெல்லும் தளபதி!

Chitra said...

அன்றைக்கு என்னோட சாமி வேஷம் போட்டு, நான் நினைச்சதை சாதித்தேன், இன்றைக்கு வேற சாமி வேஷம் போட்டு என் பொண்ணு நினைச்சதை சாதிக்க வைக்கிறேன், வைப்பேன் என்ற என் மன உறுதிக்கும், தன் நம்பிக்கைக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பதை என் ஆள் மனது உணர்த்தியது.


..............மன உறுதி, தன் நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை - மூன்று முகங்கள். நல்ல பதிவு.

அது சரி(18185106603874041862) said...

//
வீட்டுக்கு வந்த மெய் அப்பன் சாமியார் நினைவுகளிலே தூங்கி போனார், அதிகாலையிலே குடுகுடுப்பையின் சத்தம் "நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது" என்று கேட்ட ஞாபகத்திலே மீண்டும் நித்திரைக்கு சென்றார்.
//

குடுகுடுப்பை அங்கயும் வந்துட்டாரா?? :0)))

ஹேமா said...

இப்பிடியெல்லாம் நடக்குதா !இதையா சொன்னாங்க ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடக்கும்ன்னு.
கற்பனை நல்லாவே இருக்கு.எதற்கும் நம்பிக்கையும் துணிவும் வேணும்.
அதானே நசர் !

Unknown said...

வெற்றி, வெற்றி...

எங்க தளபதி ஒரு ஸ்பெல்லோ கூட இல்லாம ஒரு பதிவு போட்டுட்டாரு....

கதை சூப்பர் தல..

வில்லன் said...

////
வீட்டுக்கு வந்த மெய் அப்பன் சாமியார் நினைவுகளிலே தூங்கி போனார், அதிகாலையிலே குடுகுடுப்பையின் சத்தம் "நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது" என்று கேட்ட ஞாபகத்திலே மீண்டும் நித்திரைக்கு சென்றார்.
//

குடுகுடுப்பை அங்கயும் வந்துட்டாரா?? :0)))//

குடுகுடுப்பைக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம்.... சோத்துக்காக எதவேனும்னாலும் சொல்லுவாங்க செய்வாங்க..... நான் சொல்லுறது உண்மையான குடுகுடுப்பைங்க..... நம்ம தில்லாலங்கடி அண்ணாச்சி குடுகுடுப்பை (குடுகுடுப்பை சோழன்) இல்ல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பித்தனின் வாக்கு said...

நன்று.

வில்லன் said...

//முகிலன் said...


வெற்றி, வெற்றி...

எங்க தளபதி ஒரு ஸ்பெல்லோ கூட இல்லாம ஒரு பதிவு போட்டுட்டாரு....

கதை சூப்பர் தல..//
கதை புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...... எதுக்கும் திரும்ப ஒரு தடவ படிச்சுட்டு வரேன் இருங்க....உண்மையாவே கதை அப்படி எழுதி இருக்காரா இல்ல நான் குடிச்ச "பனம்பாலன்னு" நாளைக்கு காலைல சொல்லுறேன்...

வில்லன் said...

இப்பல்லாம் "குடுகுடுப்பைகிட்ட" கேக்காம "தல" நசரேயன் எதுவுமே பண்ண மாட்டாரு......எதுல "உள்குத்து" எதுவும் இல்லப்பா.....அப்புறம் பின்னூட்டத்துல என்ன வாங்கு வாங்குன்னு வந்கிராதிங்க.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

present

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை நசரேயன்.

//எல்லா மனுசனுக்குள்ளேயும் சாமி இருக்கு//

அருமை.

வில்லன் said...

//பகல் முழுவதும் அவள் நினைவிலே இருந்த நான் அவளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன்.அவளைப் பற்றிய அனைத்து குறிப்புகளையும் சேகரித்து கொண்டேன்.//

இங்க ஒரு சோக பாட்டு "சேது" பட பாடல் போல........

மாலை தன் வேளையை கூட்டுதடி.....காதல் தன் வேலையை காட்டுதடி.....

//நான் பூக்களை தேடி எடுக்கும் போது,பூக்கள் பொதிந்த ஒரு தேவதையை கண்டேன்//

இங்க ஒரு பாடல்....."தேவதையை கண்டேன்" பட பாடல் போல........
தேவதையை கண்டேன்!!!!! காதலில் விழுந்தேன்!!!!!என் ஊயீருடன் கலந்துவிட்டாய்

வில்லன் said...

//அன்றைக்கு என்னோட சாமி வேஷம் போட்டு, நான் நினைச்சதை சாதித்தேன், இன்றைக்கு வேற சாமி வேஷம் போட்டு என் பொண்ணு நினைச்சதை சாதிக்க வைக்கிறேன், வைப்பேன் என்ற என் மன உறுதிக்கும், தன் நம்பிக்கைக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பதை என் ஆள் மனது உணர்த்தியது. //

இங்க ஒரு பாட்டு.....பழைய பாடல்......புது மெட்டில்....

எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டிலே.....
ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாத்தலாம் இந்த நாட்டிலே......

வில்லன் said...

//அதிகாலையிலே குடுகுடுப்பையின் சத்தம் "நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது"//

இந்த குடுகுடுப்பைன்களே இப்படிதான்....காசுக்காக/சோத்துக்காக என்ன வேணாலும் பொய் சொல்லுவாங்க......என்னப்போல அப்பாவி மனுசங்க அத கேட்டுட்டு நாயா பேயா அலைய வேண்டியது.....நம்ம குடுகுடுப்பை எங்க வீட்டுக்கு வந்து ஆட்டுக்கறி கோழிகறியை விட நல்லதுன்னு ஒரு கதைய விட்டுட்டு ஆட்டுக்கறி பிரயாணி சாப்டுட்டு போயிட்டாரு....

Anonymous said...

நம்பிக்கையும் மன உறுதி முயற்சி என்றும் வீண்போகாது....எளிமையாய் தீட்டப்பட்ட ஓவியம்...

vasu balaji said...

அடங்கப்பா..என்னா கலக்கு கலக்கிட்டாரு அண்ணாச்சி.
/முகிலன் said...

வெற்றி, வெற்றி...

எங்க தளபதி ஒரு ஸ்பெல்லோ கூட இல்லாம ஒரு பதிவு போட்டுட்டாரு..../

அல்லோ. இளைய பாண்டியரே. நான் சந்தேகமாவேதான் படிச்சிட்டு வந்தேன். அண்ணாச்சியா இல்ல ப்ராக்ஸியான்னு. கடைசில வெச்சாரு பாருங்க கையெழுத்து. அப்புரம்தான் அண்ணாச்சின்னு நம்புனேன்.

/என் ஆள் மனது உணர்த்தியது. /

இங்க இருக்காரு அண்ணாச்சி. ஸ்பெல்லோ இல்லையாம்ல:))

Anonymous said...

விதியை மதியால் வெல்ல நினைக்கணும்.
குடுகுடுப்பை எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிரார் :)

வால்பையன் said...

இதுதான் குடுகுடுப்பையின் ரகசியமா!?

கார்த்திகைப் பாண்டியன் said...

Ok..:-)))))

சாந்தி மாரியப்பன் said...

//எங்க தளபதி ஒரு ஸ்பெல்லோ கூட இல்லாம ஒரு பதிவு போட்டுட்டாரு..../

அல்லோ. இளைய பாண்டியரே. நான் சந்தேகமாவேதான் படிச்சிட்டு வந்தேன். அண்ணாச்சியா இல்ல ப்ராக்ஸியான்னு. கடைசில வெச்சாரு பாருங்க கையெழுத்து. அப்புரம்தான் அண்ணாச்சின்னு நம்புனேன்.

/என் ஆள் மனது உணர்த்தியது. /

இங்க இருக்காரு அண்ணாச்சி. ஸ்பெல்லோ இல்லையாம்ல:))//

சந்தேகம் வரக்கூடாதுன்னுதான் கையெழுத்து வெச்சீங்களா நசரேயன்.:-))

சாமியாரும்,குடுகுடுப்பையும் ஒரே ஆளான்னு இப்ப சந்தேகமா இருக்கு.:-)

Radhakrishnan said...

எப்படியோ வேஷம் போட்டுத்தான் வாழ்க்கையில சாதிக்க வேண்டிக்கிடக்கு நசரேயன் ;)