Thursday, June 4, 2009

திருவிழா நாடகங்கள்

இயல், இசை, நாடகம் என்ற முன்று கலைகளை ஒரு கலவையா கலக்கி மேடை நாடகங்களிலே கொடுத்த காலம் இப்ப மலை ஏறிப்போச்சி,கலை ரசிகர்கள்,ரசிகைகள் எல்லாம் நெடுந்தொடரிலே கவனம் சொலுத்த மேடை நாடகங்கள் இப்ப எல்லாம் பார்ப்பதே குதிரை கொம்பா இருக்கு. என்னைப்போன்ற மொக்கை எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தாளர்களையும் இந்த உலகிற்கு அறிமுகப்படித்திய நாடகம் ஒரு காலத்திலேயே நாடித்துடிப்பா இருந்து.எனக்கு விவரம் தெரிந்த நாளிலே இருந்து எங்க ஊரு திருவிழாவிலே நாடகம் நடக்கும்.நாடக அனுபவத்தை வைத்து பிற்காலத்திலே ஒரு டைரக்டர் ஆகி, ஒரு நடிகை கையை பிடிச்சாவது, நடிப்பு சொல்லி கொடுக்கலாம் என்கிற கனவுல அலைந்த காலம் எல்லாம் இருக்கு,நான் டைரக்டர் ஆகாம தமிழ் திரைவுலகையும், சினிமா ரசிகர்களையும் காபாற்றியதுக்கவாது எனக்கு ஒரு விழா எடுத்தா தேவலாம்.

தணியாத கலை ஆர்வம் கொண்டதினாலே நான் மேடை நாடகங்களை பார்க்க போவேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டீங்க என்பதாலே, நாடக நடிகைகளை பார்க்கவே முதலில் நாடகம் பார்க்க ஆரம்பித்தேன்.அவங்க குதிரை வண்டியிலே வரும் போது அதற்க்கு பின்னால் குதிரைக்கு சமமான ஓட்டத்திலே ஓடி அவங்களை பார்த்த ஒரு பொற்காலம் அது, இப்ப அது கடைப்பக்கம் வாரவங்களுக்கு பொல்லாத காலம் ஆகிவிட்டது.நாடக நடிகைகள் ௬ட உள்ளூர் நடிகர்கள் பாட்டுக்கு ஆடிப்பாடும் போது எனக்கு இப்படி ஒரு பொன் நாள் எப்ப மலரும் என்று ஏங்கிய நாள்கள் உண்டு.

என்னையும் ஆட்டத்திலே சேர்க்க கேட்கும் போது

"ஏலே.. முளைச்சி மூனு இல்லை விடலை, அதுக்குள்ளே நாடகமா, ஓடிப்போ பிஞ்சு" (முளைச்சி மூனு இல்லை விடலை:மணி அண்ணன் இதுக்கு ஏதும் விளக்கம் இருக்கா உம்மகிட்ட)

அவங்களுக்கு தெரியுமா நான் பிஞ்சிலே பழுத்தவன்." என்று

உள்ளூர் நாடகத்திலே நடிகர் எல்லாம் சொந்தக்காரங்க தான் இருப்பாங்க, கதாநாயகன் ஆகனுமுனா அதிகமா காசு கொடுக்கணும், இப்படி ஒவ்வொரு வேசத்துக்கு காசு கொடுத்து நடிப்பாங்க, குத்தாட்ட பாட்டு ஆட தனி கணக்கு, இப்படித்தான் நடிகர்களை தேர்ந்து எடுப்பார்கள்.இதெல்லாம் போக வசூல் நோட்டு அச்சி அடிச்சி கொடுப்பாங்க நன்கொடை வாங்க, ஊரிலே இருக்கிற பெரிய தலைகளிடம் நன்கொடை வசுல் பண்ணுவாங்க. அதிகமா கொடுத்தா நாடக நோட்டீஸ் ல பேரு வரும், காசு கொடுக்கலைனா காமெடி காட்சி ஒன்னு தாயார் செய்து அவங்களை கலாய்ப்பாங்க, அதனாலே நாடகத்திலே நடைச்சுவை உள்ளூர் காரங்களை ஓட்டுவதுக்கு தான்.

கொஞ்சம் அழகான நடிகை ஜோடியா கிடைத்து விட்டா, அவங்க ௬ட நடிப்பவருக்கு வாயெல்லாம் ஜொள்ளா இருக்கும். இப்படித்தான் ஒரு தடவை தன்னோட ரங்கமணிக்கு கொஞ்சம் வயசான நடிகையை ஜோடியா நடிக்க வைத்ததும், அவரோட தங்கமணிக்கு வந்த கோபத்திலே

"நீங்க எல்லாம் குமரிகளோடு நடனம் ஆடனும், என் புருஷன் என்ன இளக்காரமா கிழவியை ஜோடியாக்கி இருக்கீங்க"

நாடக பொறுப்பாளர் உடனே "உன் புருஷன் குமரி ௬ட நடனம் ஆட ஆயிரம் ரூபா வேண்டும், அவங்க எல்லாம் காசு அதிகமா கொடுத்தவங்க".

அந்த பெண்மணி கோபத்திலே தன தாலியை அடகு வச்சி ஆயிரம் ரூபா ௬டுதலா கொடுத்து கணவரோட மானத்தை காப்பத்திட்டாங்க.நான் கல்யாணம் முடிக்க இதுவும் ஒரு காரணமா இருந்தது, இப்படி பிற்காலத்திலே என் மானமும் காக்கப்படும் என நினைத்து கல்யாணம் முடிச்சி பாதிக்க பட்ட ஜீவ ராசிகளில் நானும் ஒருத்தன்.

நாடக ஒலி, ஒளி அமைப்பாளர் தான் நாடக நடிகைகளை அழைத்து வருவது , நாடகத்திற்கு செய்யும் வசுலிலே பாதியை இவர்க்கு கொடுப்பார்கள், கொஞ்சம் மேடை அமைப்பவர்க்கு செல்லும்,வசூல் பணத்திலே மிச்சம் ஏதும் வந்துவிட்டால் அடுத்த வருஷம் நாடகம் நடிக்கும் வரைக்கும் சண்டை நடக்கும், அந்த காசை என்ன பண்ணலாம் என்று.

குச்சி மிட்டாய் வாங்கி திங்க காசு இல்லாத காலத்திலேயே குருவி ரொட்டிக்கு எங்கே போக,நாடக நடிகைகளை பக்கத்திலே இருந்து பார்க்க முடியலையே என்கிற ஏக்கத்திலே கரிச்சான் குஞ்சு மாதிரி இருந்தா நான் துரும்ப இளைச்சி கருவா குஞ்சு மாதிரி ஆகி விட்டேன்.இருந்தாலும் முயற்சியை தளரவிடலை,காசு கொடுக்காம நடிகையோட நடிக்கனுமுனா நாடகத்தை நடத்துபர்கள் தயவு வேணும், அதை எப்படி பிடிக்கிறதுன்னு கண்டு பிடிப்பிலே இறங்கினேன்.உலகத்திலே ஆராட்சி செய்ய எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கா, என் புத்தி எப்படி போகுது பாருங்க.

நாடகத்துன்னு ஒரு பெரிய நோட்டு இருக்கும், அதிலே நாடகத்தோட முழுகதையும், திரை கதை, வசனத்துடன் இருக்கும், அதிலே இருந்து ஒவ்வொரு நடிகருக்கும் அவர்களுடைய கதாபாத்திரம் பேசும் வசனங்களை மட்டும் ஒரு சின்ன நோட்டிலே காட்சி வாரியாக எழுதுவார்கள்.அந்த காட்சியிலே கதாபாத்திரத்தின் வசனங்கள் அப்படியே இருக்கும், அவரை அடுத்து பேசும் கதா பாத்திரத்தின் வசனத்தின் முதல் வரியும், கடைசி வரியும் இருக்கும்.

உதாரணத்துக்கு காதநாயகனுக்கு கதா பாத்திரத்துக்கு வசனம் எழுதினால் இப்படி இருக்கும்.

காதாநாயகன் : கண்ணே, நான் வந்தது உனக்கு பிடிக்க வில்லையா, நான் வரும் முன் சுட, சுட வாங்கி வந்த நெல்லை அல்வா போல இருந்த உன் முகம், என்னைப் பார்த்ததும் உன் மலர் கைகைகளுக்குள் அகப்பட்டு கசக்கி, பிழிந்து நீ வடை என நினைத்து செய்த முறுக்கைப் போல சுருங்கி விட்டதே...(நாயகியை கையை தொட முயற்சி செய்கிறார், அவள் அவனுக்கு விலகி)

காதாநாயகி : (கோபத்துடன்..) போடா வெண்ணை, எவ்வளவு நேரம்.................................. இனிமேல என்னைப்ப் பார்க்க வரவேண்டாம்.

காதாநாயகன் : நான் எனக்குள் உன்னைத்தானே பார்க்கிறேன், நீயும், நானும் தாம்பத்தியத்தை தவிர அனைத்திலும் ஒன்றர கலந்து விட்டோம் என்பது உனக்கு தெரியாதா ? அடி கள்ளியே..

காதாநாயகி : ஹும்.. அரளி விதையை அரைச்சி ................................................................ இனிமேல உங்களிடம் நான் பேசுவதிலே நான் வருகிறேன்(கதாநாயகி கிளப்ப முற்ப்படுகிறாள், அவள் கால் இடறி கிழே தடு மாறி விழ, நாயகன் அவளை தாங்கி பிடிக்கிறான்)

சினிமாவா இருந்தா நாயகியை பிடிச்ச உடனே வெளிநாட்டிலே பாட்டு வரும், ஆனா நாடகத்திலே அந்த காட்சி முடிஞ்சாத்தான் பாட்டு, ஆக இப்படி வசனம் இருக்கும் ஒவ்வொரு பாத்திரத்திருக்கும்.என் தலைஎழுத்து தான் நல்லா இல்லை, ஆனா கையெழுத்து என்னைத்தவிர மத்தவங்க படிக்கிற மாதிரி இருக்கும், இதைப் பயன் படுத்தி நான் வசனம் எழுதி கொடுக்க முடிவு எடுத்து, நாடக அமைப்பாளரிடம் சென்றேன். அவர் என்னை மேலும், கீழும் பார்த்தார், நான் வந்த விஷயத்தை சொன்னேன், சுத்தி, முத்தி பார்த்தாரு மூலையிலே இருந்த விறகு கட்டையை எடுத்துகிட்டு என்னை பார்த்து வந்தார்.

(வந்தவரு என்ன செய்தார், அடுத்த மொக்கையிலே பார்க்கலாமா )


42 கருத்துக்கள்:

பழமைபேசி said...

நடக்கட்டு, நடக்கட்டு..

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

ஆ.ஞானசேகரன் said...

//உலகத்திலே ஆராட்சி செய்ய எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கா, என் புத்தி எப்படி போகுது பாருங்க. //

ஊர் நாடகத்தைப் பத்தி நல்லாதான் சொல்லுரீங்க நண்பா.... நடக்கட்டும்

சந்தனமுல்லை said...

:-))))
//அவங்க குதிரை வண்டியிலே வரும் போது அதற்க்கு பின்னால் குதிரைக்கு சமமான ஓட்டத்திலே ஓடி அவங்களை பார்த்த ஒரு பொற்காலம் அது, இப்ப அது கடைப்பக்கம் வாரவங்களுக்கு பொல்லாத காலம் ஆகிவிட்டது.//

:-))

புதியவன் said...

//நாடக நடிகைகளை பார்க்கவே முதலில் நாடகம் பார்க்க ஆரம்பித்தேன்.//

இப்போ நம்புறோம்...

புதியவன் said...

//நாடக நடிகைகளை பக்கத்திலே இருந்து பார்க்க முடியலையே என்கிற ஏக்கத்திலே கரிச்சான் குஞ்சு மாதிரி இருந்தா நான் துரும்ப இளைச்சி கருவா குஞ்சு மாதிரி ஆகி விட்டேன்.//

அண்ணே...இப்படி ஒரு உவமையை யாராலும் சொல்ல முடியாது...

புதியவன் said...

//சுத்தி, முத்தி பார்த்தாரு மூலையிலே இருந்த விறகு கட்டையை எடுத்துகிட்டு என்னை பார்த்து வந்தார்.//

அடுத்த பகுதியை வெகு ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்...

ராமலக்ஷ்மி said...

சபா நாடகங்களை அறிவோம். திருவிழா நாடகங்களைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன்:))!

vasu balaji said...

நாடகத்துக்குள்ளே சினிமாவே ஓடுது? சஸ்பென்ஸ் தாங்கல.

வேத்தியன் said...

நான் டைரக்டர் ஆகாம தமிழ் திரைவுலகையும், சினிமா ரசிகர்களையும் காபாற்றியதுக்கவாது எனக்கு ஒரு விழா எடுத்தா தேவலாம்.//

ஆஹா இது வேறயா???
:-)

வேத்தியன் said...

அவங்களுக்கு தெரியுமா நான் பிஞ்சிலே பழுத்தவன்." என்று//

அதானே....

வேத்தியன் said...

ரசித்தேன்...

வால்பையன் said...

//அவங்களுக்கு தெரியுமா நான் பிஞ்சிலே பழுத்தவன்." //

அது எப்படிங்கண்ணா புகை போட்டு பழுக்க வச்சிங்களா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

தணியாத கலை ஆர்வம் கொண்டதினாலே நான் மேடை நாடகங்களை பார்க்க போவேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டீங்க என்பதாலே,

செம லொள்ளு :)-

ஆதவா said...

ஹாஹா வித்தியாசமான அனுபவம்.... நாடகத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம். அது பேசவேண்டாம். அதுசரி, அதென்ன காதாநாயகி.. காதாநாயகன்...

அந்த அல்வா சுருங்கின மேட்டர் ரொம்பவே சிரிப்பான பகுதி. இதை நாடகமா நடிச்சிருந்தால் எல்லாருமே விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாங்க.

தொடருங்கள்.

sakthi said...

/நாடக நடிகைகளை பக்கத்திலே இருந்து பார்க்க முடியலையே என்கிற ஏக்கத்திலே கரிச்சான் குஞ்சு மாதிரி இருந்தா நான் துரும்ப இளைச்சி கருவா குஞ்சு மாதிரி ஆகி விட்டேன்.//


ஹ ஹ ஹ ஹ

எப்படி இப்படி எல்லாம்

sakthi said...

ஒரு டைரக்டர் ஆகி, ஒரு நடிகை கையை பிடிச்சாவது, நடிப்பு சொல்லி கொடுக்கலாம் என்கிற கனவுல அலைந்த காலம் எல்லாம் இருக்கு,நான் டைரக்டர் ஆகாம தமிழ் திரைவுலகையும், சினிமா ரசிகர்களையும் காபாற்றியதுக்கவாது எனக்கு ஒரு விழா எடுத்தா தேவலாம்.

கண்டிப்பா எடுக்க சொல்லிடறோம்...

sakthi said...

"ஏலே.. முளைச்சி மூனு இல்லை விடலை, அதுக்குள்ளே நாடகமா, ஓடிப்போ பிஞ்சு" (முளைச்சி மூனு இல்லை விடலை:மணி அண்ணன் இது ஏதும் விளக்கம் இருக்கா உம்மகிட்ட)

அவங்களுக்கு தெரியுமா நான் பிஞ்சிலே பழுத்தவன்." என்று


அதானே சொல்லி இருக்கலாமே

sakthi said...

உள்ளூர் நாடகத்திலே நடிகர் எல்லாம் சொந்தக்காரங்க தான் இருப்பாங்க, கதாநாயகன் ஆகனுமுனா அதிகமா காசு கொடுக்கணும், இப்படி ஒவ்வொரு வேசத்துக்கு காசு கொடுத்து நடிப்பாங்க, குத்தாட்ட பாட்டு ஆட தனி கணக்கு, இப்படித்தான் நடிகர்களை தேர்ந்து எடுப்பார்கள்.

தகவலுக்கு நன்றிங்க அண்ணா

sakthi said...

"நீங்க எல்லாம் குமரிகளோடு நடனம் ஆடனும், என் புருஷன் என்ன இளக்காரமா கிழவியை ஜோடியாக்கி இருக்கீங்க

நியாயமான கேள்வி

sakthi said...

அந்த பெண்மணி கோபத்திலே தன தாலியை அடகு வச்சி ஆயிரம் ரூபா ௬டுதலா கொடுத்து கணவரோட மானத்தை காப்பத்திட்டாங்க.

வாழ்க தாய்குலம்

sakthi said...

சுத்தி, முத்தி பார்த்தாரு மூலையிலே இருந்த விறகு கட்டையை எடுத்துகிட்டு என்னை பார்த்து வந்தார்.

(வந்தவரு என்ன செய்தார், அடுத்த மொக்கையிலே பார்க்கலாமா )

கண்டிப்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//இப்படி பிற்காலத்திலே என் மானமும் காக்கப்படும் என நினைத்து கல்யாணம் முடிச்சி பாதிக்க பட்ட ஜீவ ராசிகளில் நானும் ஒருத்தன்.//

கல்யாணம் பண்ண இப்படி ஒரு காரணமா..அவ்வ்வ்வ்வ்..

அ.மு.செய்யது said...

திருவிழா நாடகங்களை எப்பவுமே மறக்க முடியாதது.

அதவுட, அந்த பாட்டுக் கச்சேரிகள் ?? எங்க ஏரியா அதுக்கு ரெம்ப ஃபேமஸீங்கோ..

சூப்பர் கொசுவத்தி நசரேயன்.

ப்ரியமுடன் வசந்த் said...

அய்வா

ஊர் நாடகம் பாத்து எம்புட்டு நாளாச்சு?

("ஏலே.. முளைச்சி மூனு இல்லை விடலை, அதுக்குள்ளே நாடகமா, ஓடிப்போ பிஞ்சு" )

Joe said...

//
நான் டைரக்டர் ஆகாம தமிழ் திரைவுலகையும், சினிமா ரசிகர்களையும் காபாற்றியதுக்கவாது எனக்கு ஒரு விழா எடுத்தா தேவலாம்.
//
கண்டிப்பா செஞ்சிருவோம்னே!

நசரேயன் said...

நன்றி பழமைபேசி
நன்றி T.V.Radhakrishnan ஐயா
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி சந்தனமுல்லை
நன்றி புதியவன்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி பாலா
நன்றி வேத்தியன்
நன்றி வால்பையன் --> தனி பதிவு போட்டு சொல்லுறேன்
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி ஆதவா
நன்றி sakthi --> கும்மிக்கு ஒன்னொரு நன்றி
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி அ.மு.செய்யது
நன்றி பிரியமுடன்.........வசந்த்
நன்றி Joe --> விழாவிலே பொன்னாடை எல்லாம் வேண்டாம், பொன்னா கொடுங்க

வழிப்போக்கன் said...

நல்ல பகிர்வு...
:)))

RAMYA said...

//
என்னைப்போன்ற மொக்கை எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தாளர்களையும் இந்த உலகிற்கு அறிமுகப்படித்திய நாடகம் ஒரு காலத்திலேயே நாடித்துடிப்பா இருந்து.
//

சரியாச் சொன்னீங்க, தாமதத்திற்கு மன்னிக்க!

RAMYA said...

//
எனக்கு விவரம் தெரிந்த நாளிலே இருந்து எங்க ஊரு திருவிழாவிலே நாடகம் நடக்கும்.நாடக அனுபவத்தை வைத்து பிற்காலத்திலே ஒரு டைரக்டர் ஆகி, ஒரு நடிகை கையை பிடிச்சாவது, நடிப்பு சொல்லி கொடுக்கலாம் என்கிற கனவுல அலைந்த காலம் எல்லாம் இருக்கு,நான் டைரக்டர் ஆகாம தமிழ் திரைவுலகையும், சினிமா ரசிகர்களையும் காபாற்றியதுக்கவாது எனக்கு ஒரு விழா எடுத்தா தேவலாம்.
//

ஆமா இந்த மாதிரி ஆசையெல்லாம் இருந்ததா?

அது சரி நல்ல காலம் கதாநாயகிகள் எல்லாம்... :-)

RAMYA said...

//
தணியாத கலை ஆர்வம் கொண்டதினாலே நான் மேடை நாடகங்களை பார்க்க போவேன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டீங்க என்பதாலே, நாடக நடிகைகளை பார்க்கவே முதலில் நாடகம் பார்க்க ஆரம்பித்தேன்.
//

இல்லே இல்லே நம்பிட்டோம் :-)

RAMYA said...

//
அவங்க குதிரை வண்டியிலே வரும் போது அதற்க்கு பின்னால் குதிரைக்கு சமமான ஓட்டத்திலே ஓடி அவங்களை பார்த்த ஒரு பொற்காலம் அது, இப்ப அது கடைப்பக்கம் வாரவங்களுக்கு பொல்லாத காலம் ஆகிவிட்டது.
//

படிச்சிட்டு ஒரே சிரிப்பா இருந்தது !

RAMYA said...

//
நாடக நடிகைகள் ௬ட உள்ளூர் நடிகர்கள் பாட்டுக்கு ஆடிப்பாடும் போது எனக்கு இப்படி ஒரு பொன் நாள் எப்ப மலரும் என்று ஏங்கிய நாள்கள் உண்டு.
//

ஒன்னும் கஷ்டம் இல்லே இப்போ கூட முயற்சிக்கலாமே?

RAMYA said...

//
நீங்க எல்லாம் குமரிகளோடு நடனம் ஆடனும், என் புருஷன் என்ன இளக்காரமா கிழவியை ஜோடியாக்கி இருக்கீங்க"

நாடக பொறுப்பாளர் உடனே "உன் புருஷன் குமரி ௬ட நடனம் ஆட ஆயிரம் ரூபா வேண்டும், அவங்க எல்லாம் காசு அதிகமா கொடுத்தவங்க".
//

கொடுமைடா சாமி, இதெல்லாம் வேறேயா?

RAMYA said...

//
அந்த பெண்மணி கோபத்திலே தன தாலியை அடகு வச்சி ஆயிரம் ரூபா ௬டுதலா கொடுத்து கணவரோட மானத்தை காப்பத்திட்டாங்க.நான் கல்யாணம் முடிக்க இதுவும் ஒரு காரணமா இருந்தது, இப்படி பிற்காலத்திலே என் மானமும் காக்கப்படும் என நினைத்து கல்யாணம் முடிச்சி பாதிக்க பட்ட ஜீவ ராசிகளில் நானும் ஒருத்தன்.
//

ரொம்ப பாவம்ங்க :((

RAMYA said...

//
குச்சி மிட்டாய் வாங்கி திங்க காசு இல்லாத காலத்திலேயே குருவி ரொட்டிக்கு எங்கே போக,நாடக நடிகைகளை பக்கத்திலே இருந்து பார்க்க முடியலையே என்கிற ஏக்கத்திலே கரிச்சான் குஞ்சு மாதிரி இருந்தா நான் துரும்ப இளைச்சி கருவா குஞ்சு மாதிரி ஆகி விட்டேன்.
//

ஹையோ ஹையோ தாங்க முடியலை சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது போங்க :-)

RAMYA said...

//
இருந்தாலும் முயற்சியை தளரவிடலை,காசு கொடுக்காம நடிகையோட நடிக்கனுமுனா நாடகத்தை நடத்துபர்கள் தயவு வேணும், அதை எப்படி பிடிக்கிறதுன்னு கண்டு பிடிப்பிலே இறங்கினேன்.உலகத்திலே ஆராட்சி செய்ய எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கா, என் புத்தி எப்படி போகுது பாருங்க.
//

புரிஞ்சா சரி, புரிஞ்சது ரொம்ப தாமதமோ :-)

RAMYA said...

நல்ல கனவு நெல்லைப் புயலே! சும்மா சொல்லக்கூடாது, ரொம்ப வேகமா போயிருக்கு கனவு :-)

ராஜ நடராஜன் said...

உங்கள் திறமைக்கான காரணம் எனக்கு இந்த பதிவில்தான் புரிந்தது(இடுகை!இடுகை!இல்லன்னா பழமையண்ணன் கோவிச்சுக்குவாரு).

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
உங்கள் திறமைக்கான காரணம் எனக்கு இந்த பதிவில்தான் புரிந்தது(இடுகை!இடுகை!இல்லன்னா பழமையண்ணன் கோவிச்சுக்குவாரு).
//

இன்னும் முளைச்சி ஒரு மூணு இலை கூட விடலைக்கு விளக்கம் தேடிட்டு இருக்கேன் நானு... இஃகிஃகி!

வில்லன் said...

//ஒரு டைரக்டர் ஆகி, ஒரு நடிகை கையை பிடிச்சாவது, நடிப்பு சொல்லி கொடுக்கலாம் //

நடிகை கையை பிடிச்சு நடிப்பா இல்ல வேற எதவதுமா

வில்லன் said...

//காதாநாயகன் : கண்ணே, நான் வந்தது உனக்கு பிடிக்க வில்லையா, நான் வரும் முன் சுட, சுட வாங்கி வந்த நெல்லை அல்வா போல இருந்த உன் முகம், என்னைப் பார்த்ததும் உன் மலர் கைகைகளுக்குள் அகப்பட்டு கசக்கி, பிழிந்து நீ வடை என நினைத்து செய்த முறுக்கைப் போல சுருங்கி விட்டதே...(நாயகியை கையை தொட முயற்சி செய்கிறார், அவள் அவனுக்கு விலகி)//

தப்பு தப்பு

காதாநாயகன் : கண்ணே, அவள் (தங்கமணி) வந்தது உனக்கு பிடிக்க வில்லையா, அவள் வரும் முன் சுட, சுட வாங்கி வந்த நெல்லை அல்வா போல இருந்த உன் முகம், அவளைப் பார்த்ததும் ரோடுரொலெர் ஏறின டப்பா மாதிரி நசுங்கி போச்சே ...(நாயகியை கையை தொட முயற்சி செய்கிறார், அவள் அவனுக்கு விலகி ஒரு உடு விட்டாள்)