Thursday, November 20, 2008

பாரதி ராஜாவிடம் கதை சொன்னேன்!!

ஒரு பெரிய இயக்குநரிடம் கதை சொல்ல போறோம் என்கிற பயமும் மரியாதையும் எனக்கு இருந்தது, பாரதி ராஜாவின் அலுவலக வரவேற்பு அறையில் இருக்கும் போது,

ஒவ்வொரு நொடியும் நூறு யோசனைகளை செய்து கொண்டு
இருந்தது.யோசித்துக்கொண்டு இருக்கும் போது அவரோட உதவியாளர் வந்து,

"சார் உங்களை ௬ப்பிடுராங்க நீங்க போங்கோ"

எனக்கு உடம்பு எல்லாம் வேர்த்து விட்டது, கதவை திறந்தால் என்னோட கை ரேகை வியர்வை கதவில் பதிந்தது.

பாரதி ராஜா யாரிடமோ தொலை பேசியில் பேசிக்கொண்டு இருந்தார், என்னை பார்த்தும் உட்கார் என்று செய்கை செய்தார், என்னால் அமர முடிய வில்லை.
உரையாடலை முடித்து விட்டு என்னிடம் நேராக வந்து

"நீங்க தானே நசரேயன், வாங்க தம்பி உக்காருங்க"
என என் தோள் மீது கை போட்டு என்னை இருக்கையில் அமர வைத்தார்.

மனசிலே ஓரளவு தைரியம் வந்தது,குடிக்க ஜூஸ் வரவழைக்கப்பட்டது, குடித்து விட்டு கிட்டத்தட்ட சாதாரண நிலைக்கு வந்து விட்டேன்.கதைச்சுருக்கம் எழுதி வைத்த நோட்டை அவரிடம் நீட்டினேன்.

"இருக்கட்டும் நீயே கதையை சொல்லு"

தொண்டையை கனைத்து விட்டு கதையை சொல்ல ஆரமித்தேன்.

கதையோட ஆரம்பம் 1975 வது வருசத்துல, சங்கரன்கோவில் ஆடிதவசு திருவிழாவுக்கு ஏற்பாடுகள் சிறப்பா நடந்து கிட்டு இருக்கு, வழக்கம் போல சாதி வாரியா திருவிழாவுக்கான தேதிகளை பிரிச்சு விடுறாங்க, தேர் இழுக்கவும் யார் எங்க நிக்கனுமுனுன்னு பேச்சு வார்த்தைகள் நடக்கு.

எப்பவும் இல்லாத புது முறையா தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்களும் தேர் இழுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள், அது பொறுக்க முடியாமல் அனைத்து மேல் சாதி மக்களும் ஒன்னு சேர்ந்து, ஊரிலே இருந்த எல்லா கீழ் சாதி மக்களையும் ஊரை விட்டு அடிச்சு விரட்டி விடுறாங்க.அந்த அத்தியாயத்தை அங்கே முடித்து விட்டு, நிகழ் காலத்திற்கு கதையை சென்னைக்கு கொண்டு வருகிறோம், பொறியியல் கல்லூரியில் 3 ம் ஆண்டு படிக்கும் மாணவன் கதிர், அவன் கல்லூரிக்கு புதுசா வந்து சேருகிற ஷீலாவை
கண்டவுடன் காதல் கொள்கிறான்.

ஷீலா ஒரு கிறிஸ்தவள், இவன் ஒரு இந்து, ஷீலா எப்படியாவது தன்னை காதலிக்க வைக்க வேண்டுமென படாத பாடு படுகிறான் கதிர், முடிவில் வெற்றியும் பெறுகிறான், ஷீலா ஒரு நிபந்தனை விதிக்கிறாள், முதலில் தன் தந்தை சம்மதிக்க வேண்டும்.

ஷீலாவின் தந்தையை பார்க்க அவளது வீட்டுக்கு செல்கிறான், அங்கு செல்லும் கதிர், ஷீலாவின் தந்தையின் பூர்விகம் தெரிய வருகிறது. கதையை மறுபடியும் பின்னால இழுத்திட்டு போறோம், சங்கரன்கோவிலில் 1975 வருஷம் நடந்த கலவரத்திலே தாழ்த்தப்பட்ட சாதி தலைவர் தான் ஷீலாவின் தந்தை, அந்த கலவரதிலே வீடு வாசல் கலை இழந்து ஊரை விட்டு ஓடும் போது, ஒரு கன்னியாஸ்தரி இவர்களை காப்பாற்றி சென்னைக்கு அழைத்து வருகிறார், ஷீலாவின் தந்தைக்கு கோவிலில் மணி அடிக்கும் வேலையும் கொடுக்கிறார், இப்படியாக அவர் கிறிஸ்தவ மதத்திற்கு வருகிறார்.

1975 கலவரத்தை முன் நின்று நடத்திய ஊர் பெரியவரின் மகன் தான் கதிர் என்பது ஷீலாவின் அப்பாவிற்கு தெரிய வருகிறது. ஷீலாவின் அப்பாவும் ஒரு நிபந்தனை விதிக்கிறார், தன் மகளோட திருமணம் ஊர் அறிய நடக்கணும், எல்லா பெரியவங்க வாழ்த்துதளோடு நடக்கணும். இதோட இடைவேளை விடுறோம்

(டீ,காபி,சிகரட் குடிகவங்க, குடிச்சுபுட்டு வாங்க)

சங்கரன்கோவிலுக்கு திரும்பி வருகிறார்கள் கதிரும், ஷீலாவும், ஷீலா தன் ஒன்னு விட்ட சித்தப்பா வீட்டிலேயும், கதிர் தன்னோட வீட்டுக்கும் செல்கிறார்கள்.ஷீலா புளியங்குடி பொறியியல் கல்லூரிக்கு மாற்று வாங்கி மீண்டும் தனது படிப்பை தொடர்கிறாள் . தனது வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் கதிர் முதலில் தன் அம்மா, பின் படிப்படியாக தனது காதலில் அடுத்த அடி எடுத்து வைக்கிறான். கதிரின் தந்தைக்கு தெரியாமல் இவ்வளவும் நடக்கிறது.

கதிரின் தந்தை ஊரில் உள்ள தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்ய முடிவு செய்கிறார். இதனை தடுக்க முடியாத நிலையில் தன் காதலை அவன் தந்தையிடம் சொல்ல்கிறான். தனது எதிர்ப்பை வெளிக்காட்டாவிட்டாலும், அவரால் சாதி கலவரத்தை மீண்டும் தூண்ட முடியாத நிலையில் மதக்கலவரத்தை தூண்டி விடுகிறார்.அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.

அதோடு கதையை முடிக்கிறோம் எல்லாத்தையும் கேட்டுட்டு ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுட்டு, பாரதி ராஜா என்னை பார்த்து தம்பி கதையோட முடிவுல காதலன் காதலி சேருகிற மாதிரி இருந்தா தான் ஒரு புரட்சிகரமா இருக்கும்.
எதிர் பாக்காத இந்த கேள்விக்கு பதில் சொல்ல கொஞ்சம் தயங்கி அப்புறமா

"நாம புரட்சி பண்ணினா மட்டும் போதுமா?

படம் பார்கிறவங்க அதை நடை முறை படுத்தலைன்னா?

திரை படங்களை பார்த்து யாரும் திருந்தினதா வரலாறு இல்ல சார்,அதனாலே உண்மையை உள்ளபடியே சொல்லிவிடுவோம். "

"நீ சொல்லுவதும் உண்மைதான், படத்திலே புரட்சி பண்ணி அரசாங்க
நடைமுறைகளை மாத்த முடியுமா?முடிவை மாத்த வேண்டாம்.கதைக்கு திரைக்கதை எல்லாம் தயாரா இருக்கா?"

"எல்லாம் இருக்கு"

பதில் சொல்லி விட்டு என் திரைக்கதை புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
வாங்கி கொண்டு

"தம்பி,தமிழ் ஈழ பிரச்சினையிலே தலையிட்டு இருக்கிறதாலே, இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் ஓயட்டும், ரெண்டு மாசம் கழிச்சு என்னை வந்து பாரு, நாம மத்த விசயங்களை பத்தி பேசலாம்"

நெடு நாள் கனவு நனவு ஆனதிலே ஆட்டம் போட்டேன் ரெண்டு நாளைக்கு, அப்புறமா வழக்கம் போல வேலையை ஆரமித்து விட்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு நாள் செய்தி தாள்களில் பாரதி ராஜாவின் புதிய பட அறிவிப்பு வெளியானது.

எனக்கு ஒரே குழப்பம்,சரியா தூங்க முடியலை, அதை பத்தி யோசிச்சே அலுவலகத்துல வேலையும் ஓடலை, பாரதி ராஜாவை நேரிலே பார்க்க முடிவு பண்ணி அலுவலகத்துக்கு போனா, அவரை பத்தி யாரும் சரியா தகவல் சொல்ல வில்லை. குறைந்த பட்சம் ஒரு மாதமாவது அவரை தேடி அலைந்து இருப்பேன்.

நண்பர்களிடம் இந்த விவரங்களை சொன்னேன், என்னை நல்ல திட்டி புட்டு நீதி மன்றத்துக்கு போகலாம்னு சொன்னாங்க.எனக்கு என்னவோ அதிலே உடன்பாடு இல்லாவிட்டலும், நானும் அதை பத்தி தீவிரமா யோசித்தேன்.

"வழக்கு போடலாமா?.. வேண்டாமா?.."

"வழக்கு போடலாமா?.. வேண்டாமா?.."

"போட்டாச்சு.. போட்டாச்சு.."

"போட்டாச்சு.. போட்டாச்சு.."

"என்ன வழக்கு போட்டாச்சா?.."

"டீ போட்டாச்சு.. டீ போட்டாச்சு எந்திரி..குடிச்சு புட்டு ஆபீஸ் க்கு போற வழிய
பாரு."

எங்க வீட்டுல என்னை இவ்வளவு மரியாதையா யாரு ௬ப்பிடுவாங்கன்னு எனக்கு தெரியும்.

88 கருத்துக்கள்:

பழமைபேசி said...

பதிவப் படிச்சயா?
படிச்சாச்சு!

ஓட்டு போட்டியா?
போட்டாச்சு!!

பின்னூட்டம் போட்டியா?
போட்டுட்டே இருக்கேன்!

குடுகுடுப்பை said...

அலைகள் ஒய்வதில்லை கதை மாதிரி இருக்கு, நசரேயன் தாத்தா வாழ்க

குடுகுடுப்பை said...

டீ போடும்போது என்ன கனவு வேண்டி கெடக்கு

துளசி கோபால் said...

நல்லாத்தான் கதை சொன்னீங்க போங்க:-))))

அது சரி(18185106603874041862) said...

நல்ல கிளைமாக்ஸ்...

படம் முழுக்க ஜாலியா காமிச்சிட்டு, கிளைமாக்ஸ சோகமா முடிச்சா தாய்க்குலத்தோட ஆதரவ அள்ளிடலாம்..அப்பிடியே மூஞ்சில தாடியும் கையில பீடியும் வச்சிக்கிட்டு இருக்கிற காலேஜு பசங்களையும் கரெக்ட் பண்ணிரலாம்..

படமா எடுக்க ட்ரை பண்ணுங்களேன்...எனக்கு தெரிஞ்ச குடுகுடுப்பைக்காரரு ஒருத்தரு கையில கேஷா வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம டவுசரா வாங்கி கிழிச்சிக்கிட்டு இருக்காரு...அவர வேணும்னா ஃபைனான்ஸ் பண்ண கேட்டு பார்க்கலாம் :0))

கபீஷ் said...

நீங்க கனவுன்னு சொல்லவே தேவையில்ல ஹி ஹி

//
குடுகுடுப்பை said...
டீ போடும்போது என்ன கனவு வேண்டி கெடக்கு
//
அதே

கபீஷ் said...

//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார். //

ஏன் இந்த கொலவெறி

Anonymous said...

//ஏன் இந்த கொலவெறி//

ரீப்பீட்டேய்

குடுகுடுப்பை said...

//படமா எடுக்க ட்ரை பண்ணுங்களேன்...எனக்கு தெரிஞ்ச குடுகுடுப்பைக்காரரு ஒருத்தரு கையில கேஷா வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம டவுசரா வாங்கி கிழிச்சிக்கிட்டு இருக்காரு...அவர வேணும்னா ஃபைனான்ஸ் பண்ண கேட்டு பார்க்கலாம் :0))//

அப்படி பண்ணிருந்தாலாவது ரெண்டு பேரு இப்படி ஒரு படத்துக்கு பைனான்ஸ் பண்ணவன் புண்ணியவான் யாருடான்னு திட்டியிருப்பாங்க அதுவாவது மிஞ்சியிருக்கும்.

Anonymous said...

நிஜம்னு நம்பிட்டேங்க...

முரளிகண்ணன் said...

super story (in both ways)

கிரி said...

//துளசி கோபால் said...
நல்லாத்தான் கதை சொன்னீங்க போங்க:-))))//

ரிப்பீட்டேய் :-))))

Anonymous said...

//தாழ்ந்த சாதி தலைவர் //

இதை தாழ்த்தப்பட்ட சாதின்னு மாத்திடுங்க. அதுதான் பொலிட்டிக்கலி கரெக்ட்டான வார்த்தை.

நசரேயன் said...

/*
//தாழ்ந்த சாதி தலைவர் //

இதை தாழ்த்தப்பட்ட சாதின்னு மாத்திடுங்க. அதுதான் பொலிட்டிக்கலி கரெக்ட்டான வார்த்தை.
*/
அடடா.. நல்ல தகவல் அனானி ஐயா, உங்கள் கருத்துக்கு நானும் உடன் பட்டு மாத்தி விட்டேன்

முகவை மைந்தன் said...

சிறப்பான இடுகை. விறு, விறுப்பான நடையில் அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துகள்.

S.R.Rajasekaran said...

இது ஒரு வித்தியாசமான கத .தமிழ் சினிமா வரலாற்றில இது மாதிரி ஒரு கத வந்ததே இல்ல .இது கலை உலகின் ஒரு மைல் கல் .இதில் கதா நாயகனாக நடித்திருக்கும் போண்டா சாமி அந்த கதா பத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் .இது தமிழ் சினிமா வை உலக அரங்கில் கொண்டு செல்லும் ஒரு படம் ,இதற்கு கதை வசனம் எழுதிஇருக்கும் நசரேயன் அவர்கள் ஒரு சிறு வேடத்தில் நடிக்கவும் செய்கிறார் இப் படத்தின் இயக்குனர் ராஜசேகரன் அவர்களுக்கு இது ......

யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன் இன்னும் என்னையா போர்வைய மூடிகிட்டு...

குடுகுடுப்பை said...

தொண்டையை கனைத்து விட்டு கதையை சொல்ல ஆரமித்தேன்.

ஏன் தொண்டைய கனைக்காம சொல்ல மாட்டியளோ

நசரேயன் said...

/*
பதிவப் படிச்சயா?
படிச்சாச்சு!

ஓட்டு போட்டியா?
போட்டாச்சு!!

பின்னூட்டம் போட்டியா?
போட்டுட்டே இருக்கேன்!
*/
நானும் பதில் சொல்லிட்டேன்
நானும் பதில் சொல்லிட்டேன்

நசரேயன் said...

/*அலைகள் ஒய்வதில்லை கதை மாதிரி இருக்கு, நசரேயன் தாத்தா வாழ்க
*/
ம்ம்..ஹும்
அலைகள் ஒய்வதில்லை பாகம் 2

நசரேயன் said...

/*
நல்லாத்தான் கதை சொன்னீங்க போங்க:-))))
*/

வாங்க துளசி டீச்சர், நீங்க சொன்ன மாதிரியே எழுதி படிச்சு ஓரளவு எழுத்து பிழையை திருத்தி விட்டேன்

நசரேயன் said...

/*நல்ல கிளைமாக்ஸ்...

படம் முழுக்க ஜாலியா காமிச்சிட்டு, கிளைமாக்ஸ சோகமா முடிச்சா தாய்க்குலத்தோட ஆதரவ அள்ளிடலாம்..அப்பிடியே மூஞ்சில தாடியும் கையில பீடியும் வச்சிக்கிட்டு இருக்கிற காலேஜு பசங்களையும் கரெக்ட் பண்ணிரலாம்..

படமா எடுக்க ட்ரை பண்ணுங்களேன்...எனக்கு தெரிஞ்ச குடுகுடுப்பைக்காரரு ஒருத்தரு கையில கேஷா வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம டவுசரா வாங்கி கிழிச்சிக்கிட்டு இருக்காரு...அவர வேணும்னா ஃபைனான்ஸ் பண்ண கேட்டு பார்க்கலாம் :0))
*/
வாங்க அதுசரி.
குடுகுடுப்பை கோவணத்தை பிடுங்கத்தான் இவ்வளவு ஏற்ப்பாடு

நசரேயன் said...

/*//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார். //

ஏன் இந்த கொலவெறி
*/

வாங்க கபீஷ்..
ஒரு வித்தியாசமான முயற்சிதான் இந்த கொலை வெறி.
அடிக்கடி வாங்க கொலை பண்ணாமலே கொலைகாரன் ஆகலாம்

நசரேயன் said...

/*
//ஏன் இந்த கொலவெறி//

ரீப்பீட்டேய்
*/
வாங்க சின்ன அம்மிணி.
முடிவை மாத்தி புடுரங்க

நசரேயன் said...

/*
நிஜம்னு நம்பிட்டேங்க...
*/
நீங்க சொன்னதை நானும் நம்பிட்டேன்

நசரேயன் said...

/*
super story (in both ways)
*/
வாங்க முரளிகண்ணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ம்ம் உங்களுக்கு தெரியுது தயாரிப்பாளருக்கு தெரியலையே

நசரேயன் said...

/*
//துளசி கோபால் said...
நல்லாத்தான் கதை சொன்னீங்க போங்க:-))))//

ரிப்பீட்டேய் :-))))
*/
வாங்க கிரி
கருத்துக்கு மிக்க நன்றி

விலெகா said...

மொக்கை படிச்சுயா,
படுச்சுட்டு பின்னுட்டம் போட்டியா
போட்டுட்டு திரும்பி பாக்காம ஓடிடு சாமீ
நசரேயன் உன்னிடமும் கதை சொல்லிருவாரு:))))))))))

நசரேயன் said...

/*
சிறப்பான இடுகை. விறு, விறுப்பான நடையில் அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துகள்.
*/
வா மாப்ள, அடுத்து தயாரிப்பாளரை பிடிக்கிறது தான் வேலையா?

வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

நசரேயன் said...

/*
இது ஒரு வித்தியாசமான கத .தமிழ் சினிமா வரலாற்றில இது மாதிரி ஒரு கத வந்ததே இல்ல .இது கலை உலகின் ஒரு மைல் கல் .இதில் கதா நாயகனாக நடித்திருக்கும் போண்டா சாமி அந்த கதா பத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் .இது தமிழ் சினிமா வை உலக அரங்கில் கொண்டு செல்லும் ஒரு படம் ,இதற்கு கதை வசனம் எழுதிஇருக்கும் நசரேயன் அவர்கள் ஒரு சிறு வேடத்தில் நடிக்கவும் செய்கிறார் இப் படத்தின் இயக்குனர் ராஜசேகரன் அவர்களுக்கு இது ......

யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன் இன்னும் என்னையா போர்வைய மூடிகிட்டு...
*/
மாப்ள இந்த கதைக்கு நீதான் வில்லன், அதை மறந்துடாதே

நசரேயன் said...

/*
தொண்டையை கனைத்து விட்டு கதையை சொல்ல ஆரமித்தேன்.

ஏன் தொண்டைய கனைக்காம சொல்ல மாட்டியளோ
*/
உங்க பழக்கம் எனக்கு தொத்தி கிச்சு என்ன செய்ய!!

நசரேயன் said...

/*
மொக்கை படிச்சுயா,
படுச்சுட்டு பின்னுட்டம் போட்டியா
போட்டுட்டு திரும்பி பாக்காம ஓடிடு சாமீ
நசரேயன் உன்னிடமும் கதை சொல்லிருவாரு:))))))))))
*/
கதை சொல்ல ஆளு இல்லன்னு நினச்சேன், நல்ல வேளை ஒருத்தர் சிக்கிட்டாரு

நசரேயன் said...

/*:-)))) */
உங்க புன்னகைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா

நசரேயன் said...

/*
அப்படி பண்ணிருந்தாலாவது ரெண்டு பேரு இப்படி ஒரு படத்துக்கு பைனான்ஸ் பண்ணவன் புண்ணியவான் யாருடான்னு திட்டியிருப்பாங்க அதுவாவது மிஞ்சியிருக்கும்.
*/
இதை திட்டி குறைந்த பட்சம் நூறு பதிவாவது வரும்

மோகன் கந்தசாமி said...

////தம்பி,தமிழ் ஈழ பிரச்சினையிலே தலையிட்டு இருக்கிறதாலே, இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் ஓயட்டும்,////

'அலைகள் ஓய்வதில்லை' படமாக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஈழப்பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஓயவும் போவதில்லை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கனவு மாதிரியே தெரிலீங்கன்னா

அப்படியே நெசம் மாதிரியே இருந்தீச்சுங்கண்ணா, அப்படியே கேமராவ உங்க தங்கமணிக்கிட்டே கொண்டு போனீங்க பாருங்கன்னா

அந்த க்ளைமேக்ஸ் தாங்கன்னா நல்லா இருந்துச்சு.

(அடி வுழறதுக்குள்ள எந்திரிச்சுடுங்க்ன்னா)

coolzkarthi said...

/*
யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன் இன்னும் என்னையா போர்வைய மூடிகிட்டு...

*/ha ha ha....

http://urupudaathathu.blogspot.com/ said...

திருந்துறமாதிரி எதுனா ஐடியா இருக்கா இல்லியா??

http://urupudaathathu.blogspot.com/ said...

புரட்சி இயக்குனர், கொலைவெறி நசரேயன் வாழ்க

http://urupudaathathu.blogspot.com/ said...

கருத்து கதாசிரியர், கந்த்ரகோல கவிஞர் நசரேயன் வாழ்க

http://urupudaathathu.blogspot.com/ said...

கனவு கண்டே, காணாமல் போன நசரேயன் வாழ்க

http://urupudaathathu.blogspot.com/ said...

கதை சொல்ல வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு வ???

http://urupudaathathu.blogspot.com/ said...

///எங்க வீட்டுல என்னை இவ்வளவு மரியாதையா யாரு ௬ப்பிடுவாங்கன்னு எனக்கு தெரியும்.///

எனக்கு தெரியாதே?? ஆமா யாருங்க அது ??

http://urupudaathathu.blogspot.com/ said...

பதிவப் படிச்சயா?

படிச்சிட்டு புத்தி பேதளிச்சி போய் கிடக்குறேன் ..

ஓட்டு போட்டியா?
எனக்கு இன்னும் வயசு பத்தாது ..( இருந்தாலும் கள்ள ஓட்ட, நல்ல ஓட்டா தான் போட்டேன் )

பின்னூட்டம் போட்டியா?
இதுல , இது வேறயா?

http://urupudaathathu.blogspot.com/ said...

///முகவை மைந்தன் said...

சிறப்பான இடுகை. விறு, விறுப்பான நடையில் அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துகள்.////

ஆமாம், இவரு இந்த பதிவுக்கு தான் இந்த பின்னூட்டத்த போட்டாரா??
நம்ப முடியலயே ??
பின்னூட்டதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியே ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///குடுகுடுப்பை said...

அலைகள் ஒய்வதில்லை கதை மாதிரி இருக்கு, நசரேயன் தாத்தா வாழ்க///

இந்த கருத்தை சொன்ன குடுகுடுப்பை கொள்ளு ( கொல்லு இல்லை ) தாத்தா வாழ்க

http://urupudaathathu.blogspot.com/ said...

///நசரேயன் said...
குடுகுடுப்பை கோவணத்தை பிடுங்கத்தான் இவ்வளவு ஏற்ப்பாடு////

அதுக்கு இவ்ளோ பெரிய ஏற்ப்பாடு எல்லாம் எதுக்குங்க??
கேட்டா அவுரே குடுத்திட போறாரு ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///குடுகுடுப்பை said...

டீ போடும்போது என்ன கனவு வேண்டி கெடக்கு///

ஏனுங்க நீங்க சமைக்கும் போது கனவு காணும்போது இவரு டீ போடும் போது கனவு கண்டா தப்பா??

http://urupudaathathu.blogspot.com/ said...

/// நசரேயன் said...
வாங்க கபீஷ்..
ஒரு வித்தியாசமான முயற்சிதான் இந்த கொலை வெறி.
அடிக்கடி வாங்க கொலை பண்ணாமலே கொலைகாரன் ஆகலாம்///

இது எப்போ ? எப்போ இருந்து இந்த சைடு பிஸிநெஸ்?

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்பாடி இந்த 50க்கு தான் இத்தன கஷ்ட்டம் ...

யாருப்பா அங்க? எதுனா சரக்கு இருந்த கொண்டு வாப்பா .

நசரேயன் said...

/*
////தம்பி,தமிழ் ஈழ பிரச்சினையிலே தலையிட்டு இருக்கிறதாலே, இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் ஓயட்டும்,////

'அலைகள் ஓய்வதில்லை' படமாக்கப்பட்ட ஆண்டிலிருந்து இன்று வரை ஈழப்பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஓயவும் போவதில்லை.
*/

மறுக்க முடியாத உண்மை மோகன்

நசரேயன் said...

/*
யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன் இன்னும் என்னையா போர்வைய மூடிகிட்டு...

*/ha ha ha....
*/

வாங்க கூல்கார்த்தி ..

வந்து சிரிச்சுட்டு போனதுக்கு நன்றி

முகவை மைந்தன் said...

//அடுத்து தயாரிப்பாளரை பிடிக்கிறது தான் வேலையா?//

உருப்படாத அணிமாவைக் கவுத்துட வேண்டியது தான். ரொம்ப ஆர்வமா இருக்காரு :-)

@உருப்படாதது_அணிமா

//ஆமாம், இவரு இந்த பதிவுக்கு தான் இந்த பின்னூட்டத்த போட்டாரா??
நம்ப முடியலயே ??
பின்னூட்டதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியே ??//

நம்புங்க, என் அளவு அவ்வளவுதாம்பு. இப்படிலாம் எதிர்பின்னூட்டம் போட்டா உங்களுக்கும் இதே பின்னூட்டம் போட்டுருவேன்... :-(

நசரேயன் said...

/*
கனவு மாதிரியே தெரிலீங்கன்னா

அப்படியே நெசம் மாதிரியே இருந்தீச்சுங்கண்ணா, அப்படியே கேமராவ உங்க தங்கமணிக்கிட்டே கொண்டு போனீங்க பாருங்கன்னா

அந்த க்ளைமேக்ஸ் தாங்கன்னா நல்லா இருந்துச்சு.

(அடி வுழறதுக்குள்ள எந்திரிச்சுடுங்க்ன்னா)
*/
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா, வருகைக்கு நன்றி.
அடி வுளுன்குல்லையா?..
பின்னாடி நடந்தை எழுத முடியாத அளவுக்கு அடியோ அடி

நசரேயன் said...

/*
திருந்துறமாதிரி எதுனா ஐடியா இருக்கா இல்லியா??
*/
சத்தியமா இல்ல

நசரேயன் said...

/*
///முகவை மைந்தன் said...

சிறப்பான இடுகை. விறு, விறுப்பான நடையில் அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துகள்.////

ஆமாம், இவரு இந்த பதிவுக்கு தான் இந்த பின்னூட்டத்த போட்டாரா??
நம்ப முடியலயே ??
பின்னூட்டதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியே ??
*/
ஏன் இந்த கொலை வெறி பின்னூட்டம் ஒரு மனுஷன் உண்மைய சொன்ன பிடிக்காதே

நசரேயன் said...

/*
//அடுத்து தயாரிப்பாளரை பிடிக்கிறது தான் வேலையா?//

உருப்படாத அணிமாவைக் கவுத்துட வேண்டியது தான். ரொம்ப ஆர்வமா இருக்காரு :-)

@உருப்படாதது_அணிமா

//ஆமாம், இவரு இந்த பதிவுக்கு தான் இந்த பின்னூட்டத்த போட்டாரா??
நம்ப முடியலயே ??
பின்னூட்டதுக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியே ??//

நம்புங்க, என் அளவு அவ்வளவுதாம்பு. இப்படிலாம் எதிர்பின்னூட்டம் போட்டா உங்களுக்கும் இதே பின்னூட்டம் போட்டுருவேன்... :-(

*/
ஆமா, மாப்புளைஎல்லாம் கும்மியில கலந்திட்டா உங்க பாடு ரெம்ப திட்டாம் தான்

நசரேயன் said...

இங்கு கும்மி அடித்த எங்கள் பின்னூட்ட பிரபு அணிமா அவர்களுக்கு மிக்க நன்றி

Aero said...

//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.////

ippathan sankarankoil -a koncham pirachani illama iruku..athu pidikaliya...thirumpa ratham iluka vachi,pirachanaiya kilappi kummy adichitatha da....

எல்லாம் கனவுல தான் நடக்கும், அதனாலே என்னை தவிர யாருக்கும் பாதிப்பு இருக்காது

S.R.Rajasekaran said...

மாப்பிள்ள இந்த கதைய டாம் குரூஸ்- கிட்ட சொன்னா எடு படும்னு நினைக்கிறேன்

நசரேயன் said...

/*
மாப்பிள்ள இந்த கதைய டாம் குரூஸ்- கிட்ட சொன்னா எடு படும்னு நினைக்கிறேன்
*/
ஊருல ஒழுங்கா நாடகம் போட்டு இருந்தா இதெல்லாம் நான் எழுத முடியுமா?
புதுசா இருக்க எதாவது ஹாலிவூட் நடிகர்கிட்ட சொல்லலாம், உன் பின்னூட்டதுல அடுத்த பதிவுக்கு கரு கெடைச்சி போச்சு

குடுகுடுப்பை said...

ஒரே கனவ எத்தன பேருகிட்ட சொல்றது

நசரேயன் said...

அடுத்த கதையோட தலைப்பு "குடுகுடுப்பையிடம் கதை சொன்னேன்" நல்லா இருக்கா?

Divya said...

Wow!!!!!!!!

அட்டகாசமான எழுத்து நடை :))

கடைசி வரி வரைக்கும்....விறுவிறுப்பிற்கும், சுவாரஸியத்திற்கும் பஞ்சமில்ல!!!

ரொம்ப ரசிச்சு படிச்சேன் உங்க பதிவை!!!

RAMYA said...

எங்க காசு குடுக்காமே ஒரு அருமையான் காதல் கதை சொல்லி இருக்கீங்க, சுவாரசியமா படிச்ச சேரின் நுணிக்கு வந்து, கைகளில் உள்ள நகங்கள் காணாமல் போயி, என்னா என்னா இது? டீக்கு போய்யா? நல்ல தான் இருக்கு எதுக்கும் நம்ம பாக்கியரஜாவை பொய் பார்க்கலாமா? அவுரு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு. கண்டிப்பா உங்க பேரு போடுவாரு. ச்சே ச்சே அவர் பேரை போட்டுக்க மாட்டாரு.

ரம்யா

நசரேயன் said...

/*
Wow!!!!!!!!

அட்டகாசமான எழுத்து நடை :))

கடைசி வரி வரைக்கும்....விறுவிறுப்பிற்கும், சுவாரஸியத்திற்கும் பஞ்சமில்ல!!!

ரொம்ப ரசிச்சு படிச்சேன் உங்க பதிவை!!!
*/
வாங்க திவ்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உங்களை விட ஒன்னும் நல்லா எழுதின மாதிரி தெரியலை

நசரேயன் said...

/*
எங்க காசு குடுக்காமே ஒரு அருமையான் காதல் கதை சொல்லி இருக்கீங்க, சுவாரசியமா படிச்ச சேரின் நுணிக்கு வந்து, கைகளில் உள்ள நகங்கள் காணாமல் போயி, என்னா என்னா இது? டீக்கு போய்யா? நல்ல தான் இருக்கு எதுக்கும் நம்ம பாக்கியரஜாவை பொய் பார்க்கலாமா? அவுரு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு. கண்டிப்பா உங்க பேரு போடுவாரு. ச்சே ச்சே அவர் பேரை போட்டுக்க மாட்டாரு.

ரம்யா
*/
வாங்க ரம்யா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒரு திகில் படம் பார்த்த பாதிப்பு இருக்கா?

Anonymous said...

Very very nice & funny...esp, the ending gave a v.good laugh !! - Mona

நசரேயன் said...

/*
Very very nice & funny...esp, the ending gave a v.good laugh !! - Mona
*/
வாங்க மோனா,
அனானியா வந்து கருத்துகளை தெரிவிச்சதுக்கு நன்றி

புதுகை.அப்துல்லா said...

நான் இங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன்!!! அது என்னாச்சு காக்கா தூக்கிட்ட்டு போய்ருச்சா???

நசரேயன் said...

/*
நான் இங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன்!!! அது என்னாச்சு காக்கா தூக்கிட்ட்டு போய்ருச்சா???
*/
சத்தியமா இல்லண்ணே, எனக்கு தெரியாம காக்கா தூக்க முடியாதுன்னு, அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்ப்பாடு பலமா இருக்கு இங்கே.

rapp said...

super:):):)

rapp said...

நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டிராக்கெல்லாம் எழுதறவராச்சே, இன்னும் ஜாஸ்தி உங்க பாணில கலக்குங்க:):):) காத்துக்கிட்டு இருக்கோம்:):):) எனக்கு மேடை நாடகங்களில் எப்டி செயல்படுவாங்க, என்ன எதுன்னு தெரிஞ்சிக்க விருப்பம்:):):) நெறைய அது சம்மந்தமா எழுதுங்க:):):)

rapp said...

me the 75th:):):)

முகவை மைந்தன் said...

//நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டிராக்கெல்லாம் எழுதறவராச்சே, இன்னும் ஜாஸ்தி உங்க பாணில கலக்குங்க:):):) காத்துக்கிட்டு இருக்கோம்:):):) எனக்கு மேடை நாடகங்களில் எப்டி செயல்படுவாங்க, என்ன எதுன்னு தெரிஞ்சிக்க விருப்பம்:):):) நெறைய அது சம்மந்தமா எழுதுங்க:):):)//

இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு தெரிஞ்சா 15 ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிய நற்பணி மன்றத்தை சேச்சே இயக்கத்தை தொடர்ந்து நடத்தி இருப்பேனே!!!

இப்பமும் ஒண்ணும் கெட்டுப் போகலை. மோகன் பதிவுல சிரிச்சமேனிக்கு இருக்க படத்தைப் போட்டுத் துவங்கிடலாம். 5 வேள்ளிகள் உறுப்பினர் கட்டணம் கொடுத்து சேருங்ங்ங்கோவ்!

நசரேயன் said...

/*
நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டிராக்கெல்லாம் எழுதறவராச்சே, இன்னும் ஜாஸ்தி உங்க பாணில கலக்குங்க:):):) காத்துக்கிட்டு இருக்கோம்:):):) எனக்கு மேடை நாடகங்களில் எப்டி செயல்படுவாங்க, என்ன எதுன்னு தெரிஞ்சிக்க விருப்பம்:):):) நெறைய அது சம்மந்தமா எழுதுங்க:):):)
*/
வாங்க ராப், எழுதிட்டா போச்சு

நசரேயன் said...

/*
இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு தெரிஞ்சா 15 ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிய நற்பணி மன்றத்தை சேச்சே இயக்கத்தை தொடர்ந்து நடத்தி இருப்பேனே!!!

இப்பமும் ஒண்ணும் கெட்டுப் போகலை. மோகன் பதிவுல சிரிச்சமேனிக்கு இருக்க படத்தைப் போட்டுத் துவங்கிடலாம். 5 வேள்ளிகள் உறுப்பினர் கட்டணம் கொடுத்து சேருங்ங்ங்கோவ்!
*/
மாப்ள ஈரோ வா வாங்கு அதுக்கு தான் ரூபா மதிப்பு அதிகம்

Anonymous said...

யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன்

Comment
========
நசரேயன் ரொம்ப Decent ta எழுதிருக்கார். எனக்கு தெரியும் விட்டுல என்ன மரியாதை அவருக்குன்னு.

ஒருமைல இல்ல எருமைன்னு தானே உங்க வீட்டுல குபிடுவங்க இல்லையா.

சாரி. உண்மைய சொன்னதுக்கு மன்னிக்கவும் நசரேயா

Anonymous said...

அமிர்தவர்ஷினி அம்மா
======================

Romba Nandri.

கனவு மாதிரியே தெரிலீங்கன்னா

அப்படியே நெசம் மாதிரியே இருந்தீச்சுங்கண்ணா, அப்படியே கேமராவ உங்க தங்கமணிக்கிட்டே கொண்டு போனீங்க பாருங்கன்னா

அந்த க்ளைமேக்ஸ் தாங்கன்னா நல்லா இருந்துச்சு.

(அடி வுழறதுக்குள்ள எந்திரிச்சுடுங்க்ன்னா)

Comments.
==========

அப்படியே தங்கமணியோட நிருதிட்டறு. அனிதா பக்கம் போஎருந்த வீட்டுல டின்னு கட்டிஎருப்பங்க. அப்புறம் கவுண்டமணி மாதிரி அருவாள தூக்கிட்டு எதிர்புறம் ஓட வேண்டியதுதான். தப்ப முடியாது.

Sorry Nasareya. Unmaya sollurathukku.

Anonymous said...

//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.////

கொஞ்சம் கதைய மாத்திருங்க.

//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் ஷீலா தங்கையை pickup செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.////

எல்லாருக்கும் சுபம். கதையும் Positive வா முடிஞ்சிரும். Producerkkum சந்தோசம்

சுரேகா.. said...

என்னமோ தெரியலை!
முதல் வரியிலேயே முடிவை யூகிச்சாச்சு!

ஆனா...சொன்ன விதம் சூப்பர்..!
இடையில் ஒரு அழகான கதையும் வந்து போனது
இன்னும் சூப்பர்!

கண்டிப்பா பண்ணலாம் கதைக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால்

நசரேயன் said...

/*
யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன்

Comment
========
நசரேயன் ரொம்ப Decent ta எழுதிருக்கார். எனக்கு தெரியும் விட்டுல என்ன மரியாதை அவருக்குன்னு.

ஒருமைல இல்ல எருமைன்னு தானே உங்க வீட்டுல குபிடுவங்க இல்லையா.

சாரி. உண்மைய சொன்னதுக்கு மன்னிக்கவும் நசரேயா
*/
இந்த பதிவுக்கு உண்மையான வில்லன் நீங்க தான்

நசரேயன் said...

/*
என்னமோ தெரியலை!
முதல் வரியிலேயே முடிவை யூகிச்சாச்சு!

ஆனா...சொன்ன விதம் சூப்பர்..!
இடையில் ஒரு அழகான கதையும் வந்து போனது
இன்னும் சூப்பர்!
*/
வாங்க சுரேகா, வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கனவுல எடுத்த படத்துல மருந்துக்கும் கனவுக்காட்சிக்காக வெளிநாடு போகாம . கனவிலயும் சொந்த ஊரை கிராமத்தை மறக்காத .. கனவில் சரியான ராஜாவிடம் தான் கதை சொல்லி இருக்கீங்க..

நசரேயன் said...

/*
கனவுல எடுத்த படத்துல மருந்துக்கும் கனவுக்காட்சிக்காக வெளிநாடு போகாம . கனவிலயும் சொந்த ஊரை கிராமத்தை மறக்காத .. கனவில் சரியான ராஜாவிடம் தான் கதை சொல்லி இருக்கீங்க..
*/
சொந்த படம் அதனாலே செலவு குறைவு :)

ILA (a) இளா said...

:)
இந்த மாதிரி ஸ்மைலி போட்டா பதிவு மொக்கையா இருக்குன்னும் அர்த்தம்.
:( இப்படிப் போட்டா டீ குடிக்க இவ்வளவு மரியாதையா எழுப்பறாங்களேன்னு பொறாமையா இருக்கு.

நசரேயன் said...

/*
:)
இந்த மாதிரி ஸ்மைலி போட்டா பதிவு மொக்கையா இருக்குன்னும் அர்த்தம்.
:( இப்படிப் போட்டா டீ குடிக்க இவ்வளவு மரியாதையா எழுப்பறாங்களேன்னு பொறாமையா இருக்கு.
*/
தகவலுக்கு நன்றி,குறிச்சுகிட்டேன்