சரக்கு தீர்ந்து போச்சு -பாகம் 3(வாரிசு அரசியல்)
தமிழகத்திலே இப்ப கொஞ்ச நாளா அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாரிசுகளை முன்னணி பத்தி அரசியல் நடத்துவதிலே ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள்.
வாரிசு புயல் தமிழகம், இந்தியா, உலக அரசியலில் எல்லாம் புகுந்து ஆட்டி படைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வாத்தியார் புள்ளை வாத்தியார், மருத்துவர் புள்ளை மருத்துவர், சினிமா காரன் புள்ளை சினிமாகாரன் இதை எல்லாம் நாம ரெம்ப சந்தோசமாக ஏற்றுகொள்கிறோம். ஆனா அரசியல் வாதி புள்ளை அரசியல் வாதின்னு சொன்ன ஏற்க்க மனம் மறுக்கிறது.
அரசியல் வாதியும் ஒருமனிதனே அவர் ஒன்னும் நாட்டுக்கு நேந்து விடப்பட்ட கோவில் காளை இல்லை. அவருக்கு அவருக்கும் மனைவிகள் குழந்தை குட்டிகள் இருக்கிறது, அவர்களுக்கு ஒரு பொறுப்பான அப்பனாக இருக்க வேண்டியது அவர்களது கடமை.ராஜ்ஜியம் ஆளுகிரவர்க்கு மனைவி மக்களை ஒழுங்காக ஆட்சி செய்யலைனா பொது வாழ்கையிலே நுறு மதிப்பெண் சொந்த வாழ்கையிலே பூஜ்ஜியம் வாங்கி இருக்காருன்னு கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவிச்சி அவங்க மனம் நொந்து போகிற மாதிரி செய்வோம்.
பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இவங்க எல்லாருக்கும் நேரடி வாரிசுகள் கிடையாது. அதனாலே தான் நாம்ம ஊருல அவர்களுடைய வாரிசுகளா தங்களை காட்டி கொள்வதற்கு மல் உத்தமே நடந்து கிட்டு இருக்கு. உண்மையிலே வாரிசு இருக்க தலைவர்களுக்கு வாரிசு உரிமை கொண்டாடினால் கையையும் காலையும் கட்டி நாடு கடல்ல போட்டு இலங்கை கடற்படை யை வச்சு போட்டு தள்ளிருவாங்க.
நேரு மண்டைய போட்ட உடனே இந்திராவாலதான் நாட்டை காப்பத்த முடியும்னு அவங்க கையிலே நாட்டை கொடுத்தாரு காமராஜர்.அப்புறமா அவங்க புள்ள ராஜிவ் காந்தி. இவங்க ரெண்டும் அல்ப ஆயிசுல மண்டைய போட்ட உடனே, குடும்ப அரசியல் ஒழிஞ்சதா நினனச்சு சந்தோசபட்ட நேரத்துல, பார்க் பீச்ன்னு பெண் நண்பி கூட சுத்திகிட்டு இருதந்தவரை நாற்காலியில உக்கார வச்சாச்சு. இப்படி நாட்டுக்காக ஒரு குடும்பமே வாழையை வாழையா வரிஞ்சு கட்டிக்கிட்டு வேலை செய்யுது. ராகுல் அகில இந்தியா காங்கிரஸ் பொது செயலாளரா நியமிச்சப்ப எந்தனை பேரு தந்தி அனுப்பி எதிர்ப்பு தெரிவிசோம்.தீபாவளி மாதிரி வெடி போட்டு கொண்டாடினோம்.தேசிய அரசியலில் வாரிசு களம் இறங்கினா குத்து பாட்டு போட்டு கொண்டாடுற நாம மாநில அரசியலிலே வாரிசு வந்தா குத்தி குத்தி பேசுறோம்.
அவங்க எல்லாம் நாட்டுக்கு என்ன நல்லது செய்தாங்கனு நம்ம ஊரு காங்கிரஸ் காரர்களிடம் கேட்டால் பதில் சொல்லி முடிக்க குறைஞ்சது ரெண்டு வருஷம் ஆகும். ஏன்னா அவ்வளவு கோஸ்டிகள் இருக்கு தமிழ் நட்டு காங்கிரஸ்ல.
மன்னர் ஆட்சி இல்லை மக்கள் ஆட்சி யாரு வேண்டுமானாலும் மந்திரியாகலாம், மந்திர வாதியாகலாம், முதல் மந்திரி ஆகலாம்.அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் அடிப்படை குடிமகன்களில் ஒருவர், நமக்கு இருக்கிற எல்லா உரிமையும் அவர்களுக்கும் இருக்கிறது. வாரிசுகளை களம் இறக்கும் போது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய நாம அவங்க படத்தை காருல ஒட்டி கட்ட பஞ்சாயத்து பண்ண கிளம்பி விடுகிறோம்.தொண்டர்களாகிய நாம் வாரிசுகளை ஏற்று கொள்ளும் போது, அவர்களின் கட்சி ஆட்சிக்கு வரும்போது தமிழக மக்களும் அவர்களின் தலைமையை ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் நன்றாக ஆட்சி புரிந்தால் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்படின்னு பெருமை அடிகத்தான் செய்வோம்.
அரசியல் என்பது பொதுநலம் என்றாலும் அதிலே பங்கேற்கும் நாம எல்லாரும் ஏதாவது ஒரு வழியிலே சுய நலக்காரர்களே.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் கவலை இல்லை என்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.
வாரிசு ஆண்டாலும் அரசியல் வாரிசு ஆண்டாலும் மின்வெட்டு,கைவெட்டு,கால்வேட்டுனு இல்லாம நாட்டுக்கு நல்லது நடந்தா சரிதான்
15 கருத்துக்கள்:
வருங்காலப்பதிவர் சின்ன நசரேயன் வாழ்க.
:-))))
ஏம்ப்பா உனக்கு ஒரு இளைஞன் பிரதம மந்திரி ஆனா புடிக்காதோ. 70 க்கு மேல இருந்தான் PM இருக்க முடியுமோ. மேடைலக்குட ஏற முடியாம. அப்படியே பழகி போட்சு நம்ம ஆளுங்களுக்கு. திருத்த முடியாது உங்கள என்னபாடு பட்டாலும். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நசரேயா வெளிய தள கட்ட முடியாது. ஆமா. சொல்லிபுட்டேன். சட்டசபை, நாடாளுமன்றம் வெளிநடப்பு செஞ்சாலும் செய்வோம் இதைவச்சு
என்னது இது??
பெரிய அரசியல் பதிவர் ஆயிடுவீங்க போல இருக்கே??
மேலும் சில வார்த்தைகள் கொஞ்சம் தடித்து இருப்பதை போல் உணர்கிறேன்..( தயவு செய்து அதை தவிர்த்து விடுங்கள்)
//மேலும் சில வார்த்தைகள் கொஞ்சம் தடித்து இருப்பதை போல் உணர்கிறேன்..( தயவு செய்து அதை தவிர்த்து விடுங்கள்)//
நானும் வழி மொழிகிறேன்.
உருப்புடாதது_அணிமா குடுகுப்பையரின் இருவரின் கருத்துக்கு நானும் உடன் பட்டு கட்டுரை தணிக்கை செய்யப்பட்டு விட்டன. தகவலுக்கு நன்றி. தணிக்கை செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தால் கருத்துக்களை மறு பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன் :)
/*வருங்காலப்பதிவர் சின்ன நசரேயன் வாழ்க.*/
பிற்காலத்துல நான் கட்சி ஆரமிச்சா யாரும் கேட்க மாட்டாங்கனு இப்பவே தயார் ஆகிவிட்டேன் :)
*/:-))))*/
மர்ம புன்னகையா? :)
*/
ஏம்ப்பா உனக்கு ஒரு இளைஞன் பிரதம மந்திரி ஆனா புடிக்காதோ. 70 க்கு மேல இருந்தான் PM இருக்க முடியுமோ. மேடைலக்குட ஏற முடியாம. அப்படியே பழகி போட்சு நம்ம ஆளுங்களுக்கு. திருத்த முடியாது உங்கள என்னபாடு பட்டாலும். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.
*/
ஒரு இளைஞன் வரவேண்டும்னு தான் இந்த முயற்சி
/*என்னது இது??
பெரிய அரசியல் பதிவர் ஆயிடுவீங்க போல இருக்கே??
மேலும் சில வார்த்தைகள் கொஞ்சம் தடித்து இருப்பதை போல் உணர்கிறேன்..( தயவு செய்து அதை தவிர்த்து விடுங்கள்)
*/
கனவுல அதுதான் வருது :)
ippa ne ennathan solla vara
Namma samy(joker)-ya pathi Oru katturai
/*ippa ne ennathan solla vara*
யாரு வந்தாலும் உருப்படியா செஞ்சா சரிதான்னு சொல்ல வந்தேன் :)
/*Namma samy(joker)-ya pathi Oru katturai*/
எழுதிட்டா போச்சு
Post a Comment