Monday, March 30, 2009

ஐ.டி யின் அவலம் - அழிச்சாட்டியம்

முதல் பாகம் வேணுமுனா இங்கே

நீ கிழிக்க கிழிப்புக்கு இதுவே போதும்னா அப்பிடியே கீழே
************************************************************
ரெண்டு நாள் கழித்து மின் அஞ்சல் வந்தது, தொலைபேசியிலே தொலை நேர்முகத்தேர்வுக்கு நாள் கேட்டு பதில் வந்தது,


மச்சான் பதில் போட்டாங்கடா!!!

நான் தான் சொன்னேன் இல்லை, அவங்களும் வேலை செய்யுற மாதிரி நடிக்கவேண்டாமா, அதுதான் கொஞ்சம் தாமதமா அனுப்பி இருப்பாங்க.

நாளை மறுநாள் ஆறு மணிக்கு மேல ௬ப்பிடுங்கன்னு பதில் போடு

அப்படியே செய்து விட்டு, "மச்சான் இன்டெர்விவுக்கு எப்படி தயார் பண்ணுவது"

"அதோ அந்த புத்தகத்தை எடுத்து படி உனக்கு தெரியும்"

"இவ்வளவு பெரிய புத்தகமா, இதை படிச்சி முடிக்க பத்து வருஷம் ஆகுமடா அதும்இல்லாம இப்ப ஒரு வாரமாத்தான் கம்ப்யூட்டர் பொட்டிய பாத்து இருக்கேன், நான்இப்பத்தாம் அதை எப்படி ஆன் பண்ணுறதுன்னு கத்து இருக்கேன்.எனக்குயோசனை தோனுது சொன்னா கோவிச்சுக்க மாட்டியே?"

௬ச்சப்படமா சொல்லு

எப்படியும் போன்ல மூஞ்சி தெரியாது, அதனாலே எனக்கு பதிலா நீயேஇன்டெர்விவு கொடு

என்னது..ஆள் மாறாட்டமா?!!!!.மச்சான் எனக்கு பொய் சொல்ல தெரியாது

இது வரைக்கும் சொன்ன பொய்க்கு
மாட்டுனா 10 வருஷம் உள்ளதான், முழுக்கநினைச்சதுக்கு அப்புறம் முக்காடு எதுக்கு

சரி, எதோ நீ சொல்லுறன்னு பண்ணுறன், உனக்காக என் அமெரிக்கன் நடைபேச்சை கொஞ்சம் மாத்தி பேசுறேன்

இன்டெர்விவு அன்னைக்கு ஒரு இருபது பேப்பர் கொண்டு வந்தான், என்னை அந்தபேப்பர்
எல்லாம் எடுத்து தயாரா வைக்க சொன்னான், அவங்க சொன்னநேரத்துக்கு போன் வந்தது அவங்க கிட்ட என் முழு விபரமும் சொல்லி,கேள்விகேட்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கேள்விக்கு ஒரு நம்பர் சொல்லுவான், நான்அந்த பக்கத்தை எடுத்து காட்டுவேன், அதை அப்படியே படிச்சி பதிலாசொல்லுவான். அப்படியே அவங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில்சொல்லிட்டான்.அவங்களும் முடிச்ச உடனே வழக்கம் போல "எங்க ஹெச்.ஆர்சீக்கிரம் ௬ப்பிடுவாங்கனு சொல்லிட்டு வச்சி புட்டாரு

எல்லாம் முடிந்த உடனே நான் மச்சான் நீ பிட்டு அடிக்கிற பழக்கத்தை விடவேஇல்லையா!

"அப்ப அடிச்ச பிட்டுக்கு பாஸ், இப்ப அடிச்ச பிட்டுக்கு காசு "

அடுத்த நாளில் மெயிலில் வேலைக்கு சேர வேண்டிய உறுதி சான்றிதல் அனுப்பிஇன்னும் ஒரு வாரத்திலே வந்து சேரும் படியும், நான் முன்பு சம்பாத்திததை விட
500 மடங்கு அதிகம் சம்பளம் கிடைத்தது


வேலைக்கு சேரும் நாளில் மெயில்லில் வந்த
உறுதி சான்றிதழைஎடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றேன், அதிலே தொடர்பு கொள்ளவேண்டிய பெண்ணை வரவேற்ப்பு அறையிலே சொன்னதும் என்னைஅமரச்சொன்னர்கள். கொஞ்ச நேரத்திலே ஒரு அழகு பதுமை,அப்படி ஒரு அழகு, அவள் அழகை ரசித்த நானே கொஞ்சம் அழகனாகி விட்டதாக நினைத்தேன். அவள்என் பெயர் சொல்லி அழைத்தாள், நான் இன்னும் அவள் அழகை ரசித்து முடிக்காதநிலையிலே அவள் பேசிய ஏதும் என் காதிலே விழவில்லை.

மீண்டும் மிஸ்டர் நாசாரேயா..நாசாரேயா

வடக்கூர் காரியா இருப்பா போல என் பேரை கொலை பண்ணினாள், அவ என்பேரை மட்டுமல்ல என்னை கொன்னாலும் அழகுதான்,அதற்குள் நண்பன்சொல்லிய குல தெய்வம் ஞாபகம் வரவும் ரசிப்பை நிறுத்தினேன், அவளிடம்என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவள் என்னை அழைத்தாலே அவள்பின்னாலும், அழைக்காமலே அவள் அழகின் பின்னாலும் சென்றேன். இவங்களைஎல்லாம் பேஷன் ஷோ விலே இன்டெர்விவு பண்ணுவாங்க போல என் மனதிலேநினைத்து கொண்டேன்.அடிக்கடி குலதெய்வம் கண்ணுக்கு வரவே என் மனசுலேஉள் ஒதுக்கீடுக்கு வழி இருந்தும்
வெளி நடப்பு செய்தேன்.

அலுவலக விதி முறைகள் அடங்கிய நிரல் ஒன்றை குடுத்து படிச்சிட்டுகையெழுத்து போடுங்க என்று சொன்னாள். அதிலே இருந்த இங்கிலிபிசு ஏதும்புரியாம ஆர்வமா எழுத்து ௬ட்டி படிச்சேன், ஒரு வரி படிச்சி முடிக்கும் முன்னாடிஅஞ்சு நிமிஷம் ஆகிப்போச்சு.இதுக்கு மேலும் தாமதிச்சா உண்மை தெரிஞ்சுபோகுமுன்னு கைஎழுத்து போட்டு கொடுத்தேன், அவள் என்னை நேராகப்ராஜெக்ட் டமாஜரிடம் அறிமுகபடுத்து விட்டு சென்றாள். அவள் போனாலும்அவள் மனுசுல ஏற்படுத்திய அலை ஓய அரை மணி நேரம் ஆச்சி .பல் இருக்கவன்பக்கடா தின்பான்னு நான் என்னை சாந்தப்படுத்தி அமைதியானேன்

அடுத்த அரை மணி நேரத்திலே டமஜெர் அழைத்தார், உங்களுக்கு html தெரியுமா?

எனக்கு டமில் மட்டும்தான் தெரியுமுனா சொல்ல முடியும், என்ன கேட்டாலும்தெரியுமுன்னு சொல்லுன்னு நண்பன் சொன்னதாலே ஆமா என தலைஆட்டினேன்


ஒரு டேபிள் போட்டு ரெண்டு இன்புட் பாக்ஸ் போட்டு, ஒரு பட்டன் போடுன்னு சொன்னார்.எனக்கு இது கம்ப்யூட்டர் கடையா இல்லை தையல் கடையானு ஒரே சந்தேகம் .சுத்தி முத்தி பார்த்தேன் டேபிள் பக்கத்துஅறையிலே இருந்தது, பட்டனை வெளியே போய் தையல் கடையிலே வாங்ககிளம்பினேன், போகும் போது வாசலில் இருந்த அட்டை பொட்டிய எடுத்து கிட்டேன்இன்புட் பாக்சுக்கு. என் அலைபேசி ஒலித்தது

எதிர் முனையில் நண்பன் எடுத்ததும் "மச்சான் முதல் நாள் வேலை எப்படி?"

"ஹும்..எதோ போகுது, நான் அட்டை பெட்டியை எடுத்துகிட்டு தையல் கடைக்குபட்டன் வாங்க போறேன்"

"என்னடா சொல்லுறா?"

"ஆமா மச்சான் கேமேல் தெரியுமான்னு கேட்டாரு டமஜெரு, ஆமான்னுசொன்னவுடனே டேபிள் போட்டு ரெண்டு பெட்டி வச்சி பட்டன் போடசொல்லிட்டாரு, ஒட்டகம் தெரிஞ்சா டேபிள் லும்,பெட்டியும் பட்டனும்போடனுமா? , இங்க ஒட்டகப்பால் காச்சுவாங்கனு சொல்லவே இல்லை

"அட கிறுக்கு பயலே..கிறுக்கு பயலே, நீ எடுத்து வச்சி இருக்க பொட்டிய கீழேபோடு,சரியான மாங்க மடையன் நீ அவரு சொன்னது html , நான் உன் மெயில்லுக்கு ஒன்னு அனுப்புறேன், அதை அப்படியே அவரிடம் கொடு"

போட்டியை கீழே போட்டுவிட்டு அலுவலகம் சென்று நண்பன் அனுப்பியதுஅவரிடம் காட்டினேன்.

அவரு "ரெம்ப நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்" வேலையே செய்யாம பாராட்டுஎல்லாம் பலமா கிடைத்தது.ஒரு வழியாக அன்றை பொழுது கழிந்தது, அடித்து பிடித்துவீட்டுக்கு ஓடினேன்.என் நண்பன் ஏற்கனவே வீட்டிருக்கு பாட்டிலோடு வந்துஇருந்தான்,நான் கையில் வைத்து இருந்த சாப்பாடு முடிச்சை பார்த்து

"என்ன மச்சான் சாப்பாடு கட்டி கொண்டு வந்து இருக்கே"

கொஞ்சம் பசியா இருந்தது,அதான் வாங்கிட்டு வந்தேன்.

என்னது

இட்லி

நீ இனிமேல இட்லி எல்லாம் கனவுல ௬ட சாப்பிட ௬டாது, பிசா, பர்கேர் தான் சாப்பிடனும், தண்ணி குடிக்க ௬டாது, இதே மாதிரி உயர் தர குளிர் பானம் தான் குடிக்கணும் .அது தான் .டி நாகரிகம்


நாம்ம அரசாங்க ஆஸ்பத்திரியிலே வாங்கி குப்பையிலே போடுதை பொட்டியிலே வச்சி கொடுகிறதையும், இந்த பூச்சி கொல்லி மருந்தையும் குடிகிறதுதான் நாகரிகமா?

ஆமா, இனிமேல நீ லுங்கி கட்டாதே, அரை டவுசர் போடு

இவ்வளவு இருக்கா, இதையே ஒரு பாடமா வச்சா ௬ட தேவலாமுனு தோனுது.

தண்ணியை போட்டுட்டு தூங்கினாலும் நாளைக்கு நடக்க போறதைநினைத்து வயத்தை கலக்கி கொண்டு இருந்தது, நான் எதிரி பார்த்த மாதிரியே
மறுநாளும்

(நாளையும் வரும்)


Wednesday, March 25, 2009

ஐ.டி யின் அவலம்

ஐ.டி கம்பெனி வளாகத்திலே புல் மேயுற ஆடு,மாடு எல்லாம் அமெரிக்கா போகுதுன்னு பி.ஈ முடிச்சுட்டு மொபைல் கம்பெனி டவர் ல தொங்கி கிட்டு இருந்த நான் வேலையை விட்டு புட்டு ஐ.டி யிலே வேலை தேட ஆரம்பித்தேன். என் கல்லூரியிலே படித்த நண்பன் ஐ.டி யிலே கொடி நட்டி கோட்டை கட்டிக்கொண்டு இருந்தவன் எனக்கு உதவி செய்வதாக உத்திரவாதம் கொடுத்தான்.அவனை பார்க்க அவன் தங்கி இருந்த இடத்திற்கு போனேன்.

வா மச்சான் இப்பத்தான் வாரியா?

ஆமா மச்சான், உன்னையை நம்பி இருந்த வேலையும் விட்டுபுட்டேன், வேலை கிடைக்குமா?

"வேலையே செய்யாம, வேலை கிடைக்கிற ஒரே இடம் ஐ.டி டா,நான் உன்னை தயார் படுத்திற அழகிலே ஹெச்.ஆர் எல்லாம் உன்னை தேடி வருவாங்க "

ஹெச்.ஆர் யாருடா?

வடச்மென் கிட்ட ரெசியும் கொடுத்து வேலை வாங்கின உனக்கு ஹெச்.ஆர் பத்தி தெரியாது தான்.உள்நாக்கிலே ஆங்கிலமும் கொஞ்சம் சரக்கும் இருந்தா நீ டெவ்லப்பர், சரக்கே இல்லாம நுனி நாக்கிலே ஆங்கிலம் மட்டுமே இருந்தா அவங்க ஹெச்.ஆர், ஆனா அவங்கதான் கம்பெனி க்கு குல தெய்வம்,அவங்க இல்லன அஸ்திவாரமே ஆட்டம் கண்டுடும்"

"சரக்குன்னு சொன்னதும் எனக்கு சரக்கு ஞாபகம் வந்து விட்டது"

"மச்சான் இனிமேல நீ டாஸ்மாக் ல எல்லாம் சரக்கு அடிக்க ௬டாது, இரவு நடன விடுதியிலே தான் குடிக்கணும், அப்பத்தான் விரலுக்கு ஒரு பெண்ணை தேத்த முடியும்."

"எனக்கு இருபது வேண்டாம், ரெண்டு போதும் மச்சான்"

"டேய் நான் கை விரலை சொன்னேன்"

"நான் விஜய் மாதிரி நடனம் ஆடுவேன், அதனாலே காலையும் சேத்துகிட்டேன்"

"அப்ப நான் வார்த்தைய வாபஸ் வாங்கிக்கிறேன்"

"இல்ல மச்சான் நான் அஜித் மாதிரி ஆடிக்கிறேன்"

"மச்சான் ரெசுயும் எப்படி தயார் பண்ணனும்"

"ரெம்ப சுலபமான வேலை அதும், என் ரெசுயும் ல என் பேரை அடிச்சிட்டு உன் பேரை போட வேண்டியத்துதான்"

"முன் அனுபவ சான்றிதழுக்கு என்ன செய்ய?"

"அதிலேயும் என் பேருக்கு பதிலா உன் பேரை போடலாம்.டேமஜர் போன் நம்பர் மட்டும் நாம் டீ கடை நாயர் நம்பர் கொடுப்போம், அவன்கிட்ட சொல்லிவிடுவோம், யாரு இங்கிலீஷ் ல பேசினாலும் பிஸி மட்டும் சொல்லுஅவனே பிஸி யா இருக்கும் பொது, நீ உலக பிஸி யா இருந்து இருப்பாய் ன்னு நினைச்சு குவாங்க"

"மச்சான் நீ தான்டா என் குல தெய்வம், உனக்கு நயன்தாராவுக்கு பக்கத்திலே சிலை வைக்கிறேன் வேலை கிடைச்சா"

"இன்னொரு முக்கியமான விஷயம், நீ இனிமேல தமிழ் நாட்டுலே பிறந்த திரிசா எப்படி மருந்த்துக்கு ௬ட தமிழ் தெரியாத மாதிரி நடிக்கிராங்களோ,அதே மாதிரி நடிக்கணும், ஹாலிவுட் படம் தான் பார்க்கணும், அந்த நடிகையோட முன்னுராவது கல்யாணம், யாரோட எப்ப நடந்தது, இந்த புள்ளி ராஜா விவரம் எல்லாம் தெரியனும்"


"கட்ட வண்டிய கட்டிக்கிட்டு கார கொட்டைக்கைக்கு படம் பார்க்க போன நான் கண்டம் விட்டு கண்டம் பாயனும்னு சொல்லுற"

"ஆமா..ஆமா..வா ரெசுயும் தயார் செய்து அனுப்பலாம்" அடுத்த அரை மணி நேரத்திலே எல்லோருக்கும் அனுப்பி விட்டேன். அடுத்த நாளில் இன்டெர்விவுக்கு வர நாள் கொடுக்கும் படி பதில்கள் வந்து இருந்தது.

"மச்சான் நாலு இடத்திலே இருந்து தேதி கேட்டு பதில் அனுப்பி இருக்காங்க, என்னடா செய்ய?,அடுத்த திங்கள் வாரேன்னு சொல்லவா?"

"மாப்ள நீ என்னைக்கும் இன்டெர்விவுக்கு நேரிலே போக ௬டாது, ப்ராஜெக்ட் ரீலீஸ் இருக்கு, நான் நேரிலே எல்லாம் வரமுடியாதுன்னு சொல்லு, அப்பத்தான் நீ கம்பெனி க்கு மாடு மாதிரி வேலை பார்க்கிறாய், நீ வேலை கொடுத்தா பின்னி படல் எடுப்பன்னு நினைப்பாங்க,பதிலிலே உன் போன் நம்பர் கொடுத்து கால் பண்ண முடியுமான்னு கேளு"

"வேலை வெட்டி இல்லாத எனக்கு இவ்வளவு அலும்பு தேவையா?"

"அலும்பு பண்ணலை உனக்கு உண்மையிலே வேலை தெரியாதுன்னு நினைப்பாங்க, போகிற வழி முக்கியமல்ல, பொய் சேருற இடம் தான் முக்கியம், இதை பத்தி வள்ளுவர் என்ன சொல்லுராருனா?"

"பாவம்டா அவரு, அவரை விட்டுடு"

"சரி..சரி.. போன் நம்பர் கொடுத்து மெயில் அனுப்பு."

அவன் சொன்ன மாதிரி பதில் எழுதி அனுப்பிட்டு இலவு காத்த கிளி மாதிரி காத்து இருந்தேன்.மெயில் அனுப்பி ரெண்டு நாள் ஆச்சி பதில் வரவே இல்லை.

"என்னடா போன் பண்ண சொல்லி அனுப்பி ரெண்டு நாள் ஆச்சி, ஒரு பதிலும் வரலை?"

"எருமை மாதிரி பொறுமையா இருக்கணும் கண்டிப்பா வரும், நான் ஹாலிவூட் படம் பார்க்க போறேன், நீ வாறியா?"

"இல்ல மச்சான், நீ போ வேலை கிடைக்க வரைக்கும் நான் தமிழ் படமே பாத்துக்கிறேன்"
****************************************************************************
பாகம் 2, பாகம் 3

****************************************************************************
(அழிச்சாட்டியம் தொடருமுன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே)


Monday, March 23, 2009

ரயிலில் மஞ்சள் அழகியுடன்

நான் பெரும்பாலும் ரயில் பயணங்களில் யாரிடமும் பேசுவதில்லை, ஏன்னா நான் பேச ஆரம்பித்த உடனே அவங்க பேச முடியாது, நான் போடுகிற மொக்கையிலே அடுத்த ரயில் நிறுத்ததிலே பயணத்தை ரத்து செய்துட்டு வீட்டுக்கு போய்டுவாங்க.அதனாலே சாப்பிடவும், கொட்டாவி விடவும் வாய் திறப்பேன்.

அன்றைக்கு பெங்களூர்ல இருந்து சென்னைக்கு ரெண்டாம் வகுப்பிலே பயணம் செய்து கொண்டு இருந்தேன்.நான் எழுதுகிற பதிவுக்கு வருகிற மாதிரி ௬ட்டம் குறைவாத்தான் இருந்தது.ரயில் கிளம்பும் போது நறுமண வாசனையோடு ஒரு வசந்த காற்று வந்தது, அந்த பக்கம் நான் பார்க்கும் போது மஞ்சள் நிற உடையிலே திறந்த தலை முடியுடன் ஒரு பெண் எனக்கு எதிரே இருந்த இருக்கைக்கு எதிரே வந்து அமர்ந்தாள், பாண்டிய மன்னனுக்கு வந்த பெண்ணின் ௬ந்தலின் மணம் இயற்கையா செயற்கையா என்கிற சந்தேகமே எனக்கு வரவில்லை.

சாதரணமாகவே என்னை விட கொஞ்சம் நிறம் அதிகம் இருக்கும் பெண்கள் எல்லாம் அழகியாக தோன்றும் எனக்கு அவள் பேரழகியாக தோன்றினாள்.அதனாலே படிக்கிறவங்க யாரவது இருந்தால் கொஞ்சம் எதிர் பார்ப்பை குறைத்துக் கொள்ளவும். நான் என்ன செய்ய என் ரசனை அப்படி !!.இப்படி ஒரு அழகிக்கு எவ்வளவு பேரு துண்டு போட்டு காத்து கிட்டு இருக்காங்களோ!! என் மனசுலே நினைத்து கொண்டு நான் அமைதியானேன்.ஆனால் என் மனது அலை பாய்ந்தது

சிறிது நேரம் கழித்து "ஹலோ"

மீண்டும் ஹலோ.. ஹலோ என்றவள் என் முகத்தின் முன் அவள் காந்த கைகள் மேலும் கீழும் ஆடிக்கொண்டு இருந்தது.


"நீங்க என்னைத்தான் ௬ப்பிட்டீர்களா, நான் நீங்க யாரிடமோ கைபேசியிலே பேசுகிறீர்கள் என் நினைத்தேன்" .அவள் தங்க நிற கையிலே ஒரு ஆங்கில புத்தகம் இருந்ததையும் கவனித்தேன்.

"இந்த தண்ணி பாட்டிலை கொஞ்சம் திறந்து கொடுக்க முடியுமா?"

அதை வாங்கி திறந்து அவள் கையிலே கொடுத்தேன், அவள் குடித்து விட்டு

நான் இங்கிலீஷ் நாவல் நிறைய படிப்பேன், அதிலேயும் சிட்னி ஷேல்டோன் எழுதியது, நீங்க ஏதாவது அவரோடது படிச்சி இருக்கீங்களா? என்னிடம் கேட்டாள்.

படிச்சி இருக்கேன்னு சொல்லி மானம் போகிறதை விட உண்மையை சொல்லலாமுன்னு

"எனக்கு சட்னி தான் தெரியும் சிட்னி ஷேல்டோன் எல்லாம் தெரியாது"

ஒரு சிரிப்பு சிரித்து விட்டு "யு ஆர் சோ பன்னி"

"நல்லவேளை நீங்க என்னை பன்னினு சொல்லலை"

மீண்டும் சிரித்து விட்டும் "உங்களுக்கு நகைசுவை உணர்வு அதிகம், ஐ லைக் யு"

அதை கேட்டதும் மனசு கொஞ்சம் தடம் புரண்டு தான் போச்சு, என் மனசுலே இடமே இல்லாவிட்டலும் தக்கல்ல அவள் என் மனதிலே இடம் பிடித்தாள்.

"எனக்கு பிடிச்ச நாவல் பொன்னியின் செல்வன், சிவகாமின் சபதம், ஹும்.. அதோட அருமை எல்லாம் உங்களுக்கு எல்லாம் தெரியாது"

"இங்கிலீஷ் நாவல் படிச்சா தமிழ் நாவல் படிக்க மாட்டாங்கன்னு நீங்களே முடிவு பண்ணினா எப்படி?"

நந்தினிக்கும், குந்தவைக்கும் உள்ள வித்தியாசத்தை கல்கி ரெண்டு வரியிலே அழக சொல்லி இருப்பார், அது தெரியுமா?

"நரகத்துக்கு போகிறவனை சொர்கத்துக்கு கொண்டு போய் சேர்ப்பாள் குந்தவை, நரகத்தையே சொர்க்கம் என்று நம்ப வைப்பாள் நந்தினி "

"கைய கொடுங்க ரெம்ப சரியா சொன்னீங்க" கை யை என் முன் நீட்டினாள்.

அவள் மனசைத்தான் தொட முடியாது, கையாவது தொட்டுக்கலாமுன்னு கையை கொடுத்தேன். அவள் கையை தொடும் முன் இன்னொரு கரம் என்னை தொட்டது,

"என்னங்க இந்த பொண்ணுகிட்ட ரெம்ப கலாட்டா பண்ணுறீங்க"

"அடப்பாவி நான் கடலை வருக்கிறது, அதுக்குள்ளேயும் உனக்கு பொறுக்க முடியலையா?" அப்படின்னு சொல்லவந்து

"நாங்க சும்மா பேசிகிட்டு இருக்கோம்" னு சொன்னேன்.

"ஒரு பெண்ணு தனியே இருந்தால், உடனே ஆரம்பிச்சுடுவீங்களே, இவன் தான் காவலிப்பய, உனக்கு எங்கே போச்சு புத்தி"

என்னை மட்டுமல்ல அவளையும் திட்ட ஆரம்பித்தான்.

பெண்கள் முன்னால் வீரத்தை காட்டும், ஆண்களுக்கு நானும் விதி விலக்கு அல்ல என்பதை போல கொஞ்சம் குரலை உயர்த்தி

"உன் வேலையை பாத்துகிட்டு போ" அதுக்கு பதில் வாயாலே சொல்லலை, என் கண்ணத்திலே ரெண்டு பளார்..பளார் ன்னு போட்டான். நான் கண்ணத்தை தடவி கொண்டு அரண்டு போய் நின்றேன்.

பரத் என்ன காரியம் பண்ணுறீங்க, ஐ ஹெட் யு..ஐ ஹெட் யு.. என்று சொல்லி விட்டு

இவரு என் காதலன், எங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு சின்ன பிரச்சனை, அதை எப்படி சரி செய்யன்னு யோசிச்சப்ப உங்களைப்பார்த்தேன்.நீங்க ஒரு மஞ்ச மாக்கான் மாதிரி இருந்தீங்க, நிலக்கல்லுக்கு புடவை கட்டிவிட்டாக் ௬ட நாலு மணி நேரம் நின்னு ரசிக்கிற மாதிரி யான ஆளு,காதலை கனவுல ௬ட காணாத காஞ்ச மாடு மாதிரி. உங்க கிட்ட பேசினால் போறமையிலே மறுபடி என் கிட்ட பேசுவான்னு நினைச்சேன்.

"இதுக்கு நீங்க என்னை செருப்பாலே அடித்து இருக்கலாம்"

"என்னை மன்னிச்சிடுங்க அண்ணா"

எனக்கு எங்கயோ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படம் பார்த்த ஞாபகம் வந்தது.என் மூஞ்சிலே அம்புட்டு விவரம் இருக்குன்னு அன்றைக்கு தான் எனக்கே தெரிஞ்சது.

இனிமேல அங்கே இருந்தால் அவள் மேலே கோபம் தான் வருமென நினைத்து, அந்த இடத்தை விட்டு வெளியேறினேன், போகும் முன் அவள் காதலன் பரத்துக்கு ஒரு அறை விட்டேன், இந்த முறை நான் அடித்தது என் வீரத்தை காட்ட மட்டுமே.

தக்கலில் வந்தவள் தன்னாலே வெளியே போனாள்,அடுத்த ரயில் நிறுத்ததிலே நான் இறங்கி பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்ப பெங்களூர்க்கு நான் திரும்பி போனேன்


Friday, March 20, 2009

பம்பாய் படமும் அதன் விளைவும்

பம்பாய் படம் வெளிவந்த நேரம் நான் கல்லூரியிலே குப்பை கொட்டி கிட்டு இருந்தேன், நண்பர்கள் எல்லோரும் ௬ட்டமா படம் பார்க்க ஓசியிலே என்னையும் ௬ட்டிட்டு போனாங்க, படம் பாத்து விட்டு வந்த உடனே எனக்கு மட்டுமல்ல எங்க நண்பர்களுக்கு எல்லாம் காதல் வெறி கொலை வெறி ஆகிவிட்டது.நான், ராமநாதபுரம் நண்பர்,சென்னைக்காரன் எல்லோருக்கும் காதல் சுரம் வந்து விட்டது, சென்னைக்காரன் கல்லூரியிலே புதுசா தேத்துன பெண்ணோட பேச போய்விட்டான்.ராம்நாடு ராஜாவுக்கு அப்பத்தான் ஒரு தலை காதல் முளைச்சி இருந்தது, அதை எப்படி ரெண்டு தலையா மாத்துறதுன்னு யோசனை பண்ணி கொண்டு இருந்தான்

நான் வழக்கம் போல ஆள் கிடைக்காததாலே மனசுல முன் பதிவு செய்த என்னோட பள்ளி காதலியை நினைக்க ஆரம்பித்தேன். நாங்க அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசனை பண்ணி கொண்டு இருந்த நேரம், சேலம் நண்பன் ஒருத்தர் கையிலே துண்டை போட்டு கிட்டு வந்தாரு, நாங்க அவனை நிறுத்தி

"என்ன மச்சான் ஆச்சி"

"பம்பாய் படம் பார்த்து எனக்கு காதலி போதை அதிகமாகி தேய்ப்பு பொட்டியை வச்சி அவ பேரை கையிலே எழுதிகிட்டேன், அந்த எழுத்து அழியக் ௬டாதுன்னு கையிலே துண்டு போட்டு இருக்கேன் னு சொன்னான் "

உடனே நான் "மச்சான் பசங்க எல்லாம் அடாவடியா நடவடிக்கை எடுத்து கிட்டு இருக்காங்க, நாம எதாவது செய்யணும்"

ராம்நாடு நண்பன் "டேய் கரி பால் டி, நீ ஏற்கனவே தீயில் இருந்து வந்தவன் மாதிரி தான் இருக்கே, உனக்கு இதெல்லாம் தேராது,அந்த பெண்ணோட கல்லூ ரிக்கு வேணுமுனா ஒரு காதல் கடிதம் எழுதலாம்"

மச்சான் ஒரு தலையா காதலிச்சாலும், ரோமியோ மாதிரி யோசனைடா னு நான் சொன்னேன்,உடனே ஒரு பேப்பர் எடுத்து நாலு பக்கத்து காதல் மழை பொழிஞ்சு புட்டேன்,அப்ப இப்பவிட கொஞ்சம் பரவாஇல்லாமல் எழுத்து பிழையோட எழுதினேன்.கடிதம் எழுதி கொரியர்ல அனுப்பி போய் சேர்ந்த அத்தாட்டியும் வாங்கி விட்டேன், அந்த பெண் கையெழுத்து போட்ட சீட்டை ரெண்டு மாசம் தலையிலே வச்சி தூங்கினேன்.தப்பி தவறி மழை வந்து நான் நினைஞ்சாலும் ரசிது நினையாம பாத்துக்குவேன்

கல்லூரி விடுமுறையிலே ராம் நாடு,சென்னை, தூத்துக்குடி நண்பர்கள் எல்லோரும் குற்றாலம் செல்ல எங்க வீட்டுக்கு வந்தாங்க,தூத்துக்குடி நம்பனுக்கு புதுசா பீடி அடிக்க கத்து கொடுத்து இருந்தேன். அவன் எங்க ஊருக்கு போனதும் வீட்டிலே பையை போட்டு விட்டு உடனே வெளியே போய் புகை பிடிக்கணுமுன்னு சொன்னான்.நான் வழக்கமா போற டீ கடைக்கு போனேம், கடைக்காரன் என்னை பார்த்து முறைச்சி கிட்டே டீ போட்டான்.

கொஞ்ச நேரத்திலே கடைக்கு முன்னாடி ஏகப்பட்ட ௬ட்டம், நான் கடைகாரரிடம்

அண்ணே, "இன்னைக்கு ௬ட்டம் களை கட்டுது"

அவரு "அவங்க டீ குடிக்க வரலை, உன் முதுகிலே டின் கட்ட வந்து இருக்காங்க, பேசாம புற வாசல் வழியா ஓடிப்போடு, உன்னால உன் நண்பர்களும் அடி வாங்க
௬டாதுன்னு சொல்லுறேன்"

அதை கேட்டு அப்பவே எனக்கு காய்சல் வந்து, அங்கே ஓடின ஓட்டம், நேர வீட்டுல சுருண்டு படுத்து கிட்டேன்

மாலையிலே என்னை பார்க்க வந்த உள்ளூர் நண்பனிடம் விவரம் கேட்டேன்.

உன்னையெல்லாம் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி கழுதை மேல எத்தி ஊருக்குள்ளே வலம் வர உடனும், நீ அந்த புள்ள படிக்கிற கல்லூரிக்கு எழுதின கடிதத்தை உடைச்சி பிரிச்சி படிச்ச கல்லூரி வார்டன், அதை பிரின்சிபல் கிட்ட காட்டி, அந்த பெண்ணை ஆறு மாசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.காதல் கொய்யப்பழம் மாதிரி தானா கனியனும், நீயா கனிய வைக்க முடியாது.


இப்படி அறிவுரை வசனம் எல்லாம் பேசினான், எல்லாம் முடிஞ்ச பின்ன, கடிதத்தோட விட்டியா அந்த பெண்ணோட வீட்டுக்கு தினமும் 100 போன் கால் பண்ணி இருக்கிறாய்.

ராம் நாடு நண்பன் " டேய் இதெல்லாம் சொல்லவே இல்லை, இப்பத்தானே தெரியுது எப்படி ரூம் ல இருந்த காசு எல்லாம் காணாம போகுதுன்னு"

"இல்லை மச்சான், நான் பன்னலை"

உள்ளூர் நண்பன் "பனை மரத்துக்கு கிழே நின்னுகிட்டு, நீ பால் தான் குடிக்கன்னு சொன்னா எப்படி?

நான் "இப்ப என்னடா செய்ய?"

"நீ கொஞ்ச நாள் ஊருக்கு வெளியே தலை காட்டாம இரு, இல்லை உன் தலை யை எடுத்து புடுவாங்க"

"சரி.. சரி விபரம் சொன்ன எனக்கு சரக்கு அடிக்க காசு கொடு " என்று என்னிடம் 100
ரூபாய் வாங்கிட்டு போய்ட்டான்

ராம் நாடு நண்பன் "அட ங் கொய்யால, இவன் கொய்யப் பழ கதை இதுக்கு தான் சொன்னனா?"

ஒரு தப்புக்கு ஒன்னு தப்பு போனஸ் மாதிரி இதுவும் சேர்ந்து விட்டது.நான் கால் பண்ணலன்னு சொல்லுவதை நம்ப ஆள் இல்லை, இன்றை வரைக்கும் அது உண்மையத்தான் இருக்கு.அதுக்கு அப்புறம் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை, நண்பர்களை எல்லாம் குற்றாலம் தனியே அனுப்பி விட்டு கல்லூரிக்கு ஓடினவன் தான் ஆறு மதத்துக்கு ஊருக்கு வரலை.அதன் பின் வந்தாலும் நாடு ராத்திரிலே வருவேன், போவேன்.அந்த சம்பவத்திற்கு பின் நானும் ஒரு முடிவுக்கு வந்தேன், இனிமேல காதலை கடிதத்துல சொல்லக் ௬டாதுன்னு

இன்றைக்கும் என் வீட்டிலே நான் போன் பன்னலைனா "யார் யாருக்கோ 100 கால் போடுவீங்க,எனக்கு ஒரு கால் போடமுடியாதா?


Thursday, March 19, 2009

தற்கொலைக் கடிதம்

காதலின் இறுதி கட்டத்திலும் தோல்வி அடைந்த நான் தோல்விகளால் துவண்டு விட்ட எனக்கு வாழ்க்கையும் தோல்வி ஆகி விட்டது, நான் காதலில் விளம்பை விட்டு விட்டு மரணத்தின் விளிம்பை தொடப்போகிறேன் .இந்த முடிவில் நீ என்னை தோற்கடிக்க முடியாது, அதிலே நான் நிச்சயம் உன்னை வெல்வேன்.


இந்த வெற்றியில் என்னை மலர் மாலை சூடி வழி அனுப்பினாலும், இம்முறையும் நான் தனியே போவேன்,உன்னை மீண்டும் துணைக்கு ௬ப்பிட போறதில்லை.உன்னைக் கண்டேன், உன்னையே கண்டேன், என்னில் உன்னை கண்டேன்,கண்டு உன்னை வைக்க என்னை நினைவை தொலைத்தேன், என்னையும் தொலைத்தேன், என் என்பையும் தொலைக்கப்போகிறேன்


கரைப்பார் கரைய கல்லும் கரையும் என்பதை மனதில் கொண்டு கல்லான உன் மனதை கரைக்கத் துணிவேடுத்தேன், துணிவு துச்சமாகி துவண்டு அச்சமாகி, ஐயமாகி, முடியாத ஒரு முடிவாகிவிட்டது.எனவே நான் என்னை முடிக்க முடிவெடுத்தேன்.

மனம் உன்னை வெறுக்க வில்லை, என்னை வெறுத்தது, தன்னை வெறுத்தது, தன் நினைவை வெறுத்தது, ஆதலால் நான் என்னை வெறுத்தேன், என்னை தொலைக்க முடிவெடுத்தேன்


"டைரக்டர் சார்.. டைரக்டர் சார்.. கதாநாயகி மயங்கி விழுந்துட்டாங்க."

"காட்சி படி இந்த கடிதம் படிச்ச உடனே அவங்க மயங்கி விழனும்"

"அவங்க விழுந்த வேகத்தைப் பார்த்தால் மண்டைய போட்ட மாதிரி இருக்கு"

"நானே கதாநாயகியோட நடிப்பை பார்த்து பிரமிச்சி போய் நிற்கிறேன், நீ வேற விவரங்கெட்ட தனமா பேசிகிட்டு இருக்கே.நிச்சயம் இதுக்கு ஆஸ்கார் கிடைக்கும்."

"ஆஸ்கார் கிடைக்குதோ இல்லையோ உங்களுக்கு களி கிடைக்கும்"

"என்ன சொல்லுறீங்க"

"ஆமா உண்மையைத்தான் சொல்லுறேன், கதா நாயகி கதையை விட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே போய்ட்டாங்க"

கதாநாயகி யின் அம்மா
"அடப்பாவி பேயலை.. என் பொண்ணு தமிழ் படத்திலே கதாநாயகி க்கு வேலையே இருக்காதுன்னு நினைச்சி நடிக்க வந்தா பக்கம் பக்கம் மாக எழுதி என் மகளுக்கு பாடை கட்டிட்டுயே"

டைரக்டர் "யாரவது டாக்டர்ரை ௬ப்பிடுங்க"

"நான் இங்கேயே தான் இருக்கேன், ஒரு வாரமா"

"ஒரு வாரமா வா?!!! "

"உங்க கதை இணைய தளத்திலே வெளியான நாளில் இருந்து, நானும் காத்து கிட்டு தான் இருக்கேன், இதுல நடிக்கும் போதே யாராவது மண்டையை போடுவாங்கன்னு, இன்னைக்கு தான் நடந்து இருக்கு"

"வயத்துல புளியை கரைக்காம, பாத்து சொல்லுங்க டாக்டர்"

"பாக்க தேவை இல்லை, மேல டிக்கெட் வாங்கியாச்சி"

"எதோ பஸ் டிக்கெட் வாங்கின மாதிரி சொல்லுறீங்க"

நான் சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை, நீதி பதிதான் சொல்லுவாரு

நீதிபதி "டைரக்டர் நசரேயன் மேல, என்ன குற்றம்?"

அரசாங்க வக்கீல் "ஐயா, இவரு எழுதின வசனத்தை படிக்க முடியாம, கதாநாயகி இறந்துட்டாங்க" இதோ அந்த வசனம்


வசனத்தை வாங்கி பார்த்த நீதிபதி "இந்த வசனத்தை எழுதிய உங்களுக்கு" ன்னு சொல்லி முடிக்கலை, நீதிபதியும் காலாவதி ஆகி விட்டார்

மத்திய சிறை ஜெயில் அறையில்

"என்ன எம டைரக்டர் நசரேயன், உங்க கடிதத்தை படிச்சா, செலவே இல்லாம சங்கு ஊது வாங்கலாமே, நாட்டுல மக்கள் தொகையை குறைக்க அரசாங்கமே உங்க கடிதத்தை அரசுடமை ஆக்க திட்டம் போடுறாங்களாம் "


ஜெயிலர் ஐயா நடந்த சம்பவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, ஒரே நேரத்தில் நடந்ததால் நான் உள்ள இருக்கேன்.இது ஒரு Coincidence .

ஜெயிலர் ஐயா, ரெண்டு நாளைக்கு முன்னாடி இவரு கடிதம் படிச்ச பக்கிரி மேல போய்ட்டான்

"ஐயா கடிதம் எழுதின எனக்கு இன்னும் ஒன்னும் ஆகலை, அப்படி இருக்கும் போது இதை எப்படி நம்ப முடியும்"

உங்க கேள்வி நியாயம் தான், ஆனா சட்டத்துக்கு அது தெரியாது, உங்க மேல இருக்கிற வழக்குகளை இருந்து விடுதலை ஆக இன்னும் கன காலம் இருக்கு, அதுவரைக்கும் கதை, வசனம்னு சொல்லி எங்க குடியை கெடுக்காம இருங்க.நாங்க கொஞ்ச காலமாவது நிம்மதியா இருந்துகிறோம்



Tuesday, March 17, 2009

ஆவிகள் இருப்பது உண்மை

நான் காதல் கடிதம் கொடுக்க ஆரம்பித்த காலம் அதாவது நான் மூனாவது படிக்கும் போது எங்க குடுபத்திலே பாதியிலே மேலே போனவங்க எல்லோரையும் வரவழைச்சி அவங்க கருத்துக்களை கேட்பது வழக்கம்.இதை எல்லாம் செய்வது எங்க தத்தா,பாட்டி தான் அவங்க இன்னைக்கு எங்க ௬ட இல்லை, இருந்தாலும் அவங்களை ஞாபகப்படுத்த இந்த ஒரு கொசு வத்தி தான் இருக்கு

சாதரணமாவே கிராமத்து ஆளுங்களுக்கு கல்யாண பத்திரிக்கையும் கொடுத்து குறைஞ்ச பட்சம் ஒரு நாப்பது தடவையாவது ௬ப்பிடலைனா அவங்க கல்யாணத்துக்கு வர மாட்டாங்க
, அப்ப கிராமத்து பேய்களை ௬ப்பிடுறது எப்படி இருக்கும். அவங்களுக்குன்னு பெரிய நடை முறை இருக்கு, அவங்களுக்கு தேவையான பொருட்கள் பொறி கடலை, பத்தி, தேங்காய்,வாழை பழம், சுருட்டு, சாராயம்,இளவயசுல அதாவது முப்பதுக்கு கீழே இறந்தவங்களுக்கு சுருட்டு,சாராயம்,தேங்காய். முப்பதுக்கு மேலே பொறி கடலை, வாழப்பழம் ஏன்னா அவங்களுக்கு பல் இருக்காதாம், இது எந்த சூத்திரம் ன்னு தெரியலை

சரி ஆவிக்கு தேவையானதை வாங்கியாச்சி எப்படி ஆவியை ௬ப்பிடுவது,

பாட்டியோட சித்தப்பா மகள், அவங்க பேரு "பேய்" பாட்டி அவங்க தான் இதிலே நிபுணர்,ஆவிகள் ௬ட பேசுற அன்னைக்கு மட்டும் அவங்க எலிசபெத் ராணி மாதிரி,அவங்களுக்கு அன்னைக்கு கறி சோறு கிடைக்கும், அடுத்த நாள்ல இருந்து கேப்பை களி தான் சோறு. ஆவி பிடிக்கிற அன்னைக்கு பேய் பாட்டி இரவு 8 மணிக்கு வந்துவிடும், வெள்ளி கிழமை தான் ஆவிக்கி ஏத்த நாள், வாரம் முழுவதும் அவங்களும் கடினமா வேலை செய்வாங்களோ என்னவோ அவங்களை வெள்ளி கிழமை தான் ௬ப்பிட முடியும்


பேய் பாட்டி வந்து படையலை எல்லாம் வட்டமா வச்சி ஒரு ஓரத்திலே துண்டை போட்டு உக்காருவாங்க. பேய் ௬ட பேச குடும்பமே உக்காந்து யாரு கிட்ட என்ன பேசனும் எல்லாம் விவாதம் நடக்கும்


பேய் பாட்டி இருந்து கொண்டு எதோ வாய்க்குள்ளே முணங்கு வாங்க, தலையை எல்லா திசையிலும் ஆட்டுவாங்க, திடீர்னு ஆட்டம் நிக்கும், சாராயத்தை எடுத்து ஒரு பெக் போடுவாங்க, அவங்க சுருட்டு எடுப்பாங்க, அதுதான் அறிகுறி எதோ ஒரு பேய் சிக்கி விட்டதுன்னு,உடனே வீட்டிலே எல்லோரும் உசார் ஆகிடுவாங்க, சிக்கின ஆவி யாருன்னு பார்க்க.அப்புறமா அகப்பட்ட ஆவி விவரத்தை சொல்லும், அது தங்கி இருக்கிற இடம் எல்லாம் கேட்டு, இடத்தை மாத்த பரிகாரம் இருந்தா கேட்டு கிட்டு அதை செய்ய முயற்சி எடுப்பாங்க

முதல்ல வார வங்கதான் கொஞ்சம் தாமதிச்சு வருவாரு, அதற்க்கு அப்புறம் எல்லோரும் அடிச்சி பிடிச்சி ஓடி வருவாங்க, சில சமயம் ரெண்டு பேரு சேர்ந்தே வருவாங்க, அவங்க ஆவிக் காதல்கள், இப்படி ஒரு ரெண்டு மணி நேரம் நடக்கும் அதுக்குள்ளேயும், சாராயமும், படையல் சாப்பாடுகளும் காலியாகிடும்.சில சமயம் வந்த ஆவிகள் என்னை பார்த்து பயந்து " யார் இந்த குட்டி பிசாசு" ன்னு கேள்வி கேட்க்கும்


இப்படித்தான் ஒரு நாள் ஒரு ஆவி கஞ்சா குடிச்சாத்தான் பேய் பாட்டியை விட்டு போவேன்னு அடம் பிடிச்சது, ஆவியோட கொஞ்சி ௬த்தாடி பாத்தாங்க ஒன்னும் தேரலை, ஆவி, பேய் பாட்டியை துணைக்கு ௬ட்டிட்டு போவேன்னு சொன்னதாலே, வேற வழி இல்லாம கஞ்சா வாங்க போனே எங்க கருப்பு மாமா ஒரு வருஷம் கழிச்சு தான் வந்தாரு, வாங்கின கஞ்சா நல்லா இருக்கானு ருசி பாத்தவரை காவல் துறை கவ்வி கிட்டு போயிடுச்சி
. அன்றைக்கு கொஞ்சம் விஸ்கி கொடுத்து பேய் பாட்டியை காப்பாத்திடோம்.காதலில் தோல்வி அடைஞ்ச ஆவிகளுக்கு கஞ்சா தான் மருந்தாம்


பாட்டி உயிரோடு இருக்கிற வரைக்கும், இந்த சம்பவங்கள் அடிகடி நடக்கும், பேய் பாட்டி காலமான உடனே ஆவிகள் எல்லாம் காலாவதி ஆகிடுச்சி, அது வரைக்கும் ஆவிகளை கேட்டு வேலைகளை செய்த எங்க குடும்பம், இன்னும் அவங்க அவங்க வேலையை செய்து கிட்டு தான் இருக்காங்க.
ஆவிகளோட பேச்சி கேட்டு நடக்கும் போது கேப்பை களி சாப்பிட்ட எல்லோரும் இப்ப ஆவி இல்லாம ஆவியிலே இட்லியும், புட்டும் செஞ்சு சாப்பிடுறாங்க

இதெல்லாம் மூட நம்பிக்கையா இல்லை மூடு விழா நம்பிக்கையான்னு இன்னும் புரிபடலை.செத்தாதான் ஆவியாவோமுனு இல்லாமா, பார்க்கிற கண்களுக்கு ஒரு மனுஷன் எப்படி தெரிவானோ,அதை பொருந்து தான் அவன் மனுசனா இருக்கதும் ஆவியா இருக்கதும்.

கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது நான் ரெம்ப சிகப்பா இருக்கேன்னு அரை இஞ்சிக்கு வெள்ளை அடிச்சு ஏமாத்தி கல்யாணம் முடிச்சிட்டேன். இந்த உண்மை விரைவில் தெரிய வர என் மாமனார் நான் அவங்க வீட்டுக்கு போகும் போது எல்லாம்

"
எங்க மாப்பிள்ளை குரல் மட்டும் கேட்குது ஆளையே காணும்னு"

சொல்லுவாரு.நான் இருப்பதே அவருக்கு தெரிவதில்லை, ராத்திரியிலே இருட்டிலே எழுந்தாலே ரெண்டு நாள் தங்கமணி பேய் பிடித்தவள் மாதிரி ஆகி விட்டாள். இப்படி உயிரோடு இருக்கிற நானே பேயா இருக்கும் போது ஆவி இல்லன்னு சொல்ல முடியுமா?

நம்ம சாதி சனத்தை அழிப்பதற்காகவே கொலை வெறியோடு சுத்தி கொண்டு இருக்கும் சிங்கள பேய்கள் எல்லாம் உயிரோட தான் இருக்கு. பச்சக் குழந்தைகளை கொன்று குவித்த கொலை/காம வெறிப்பிடித்த பேய் நொய்டா சிங்கமும் இன்னும் இருக்கு. பதவிப்பேய், பணப்பேய் பிடித்து அலையும் மனுசங்களும் உண்டு,செத்தாத்தான் ஆவின்னு எந்த சட்டமும் சொல்லலை, உயிரோடு இருந்தா மனுசனுன்னு எந்த சட்டத்திலேயும் சொல்லலை


Monday, March 16, 2009

மருமகள் சம்பாதிச்சா?

இரவு 9 மணி :

"என்னதான் நினைச்சுகிட்டு இருக்காங்க,ஒரு பெண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சாஅவ என்ன அந்த வீட்டோட அடிமையா?"

மாறன் எதோ சொல்ல வாய் எடுக்க

"பேசாதீங்க நீங்க எதுவும், உங்க அம்மா செய்யுறது சரி இல்லை,என்ன நான்சொல்லுறது கேட்குதா?,இப்ப மட்டும் காது கேட்காதது மாதிரி இருப்பீங்களே"

"இப்பத்தானே என்னை பேசக் ௬டாதுன்னு சொன்ன" சொல்லிவிட்டுஅமைதியானான்

"இன்னைக்கு கலையிலே என்ன நடந்ததுன்னு தெரியுமா?"

காலை 9 மணி :

"நிலா, இந்த ரசிது கிழே கிடந்தது, உன் பேரு இருக்கு இதிலே" என்றாள் மாறனின்தாய்.

"ஆமா அத்தை என்னதுதான்"

"மாசா மாசம் அனுப்புறீயா?"

அவள் எதை பற்றி சொல்கிறாள் என்பது தெரிந்தும்,

"நீங்க எதை சொல்லுறீங்க அத்தை?"

"நான் எதப்பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியும்"


"ஆமா நான் மாச மாசம் என் வீட்டுக்கு பணம் அனுப்புறேன்"


"நீ இப்ப எது செய்தாலும் எங்களை கேட்டு செய்யுறது நல்லது"


"எங்க வீட்டுக்கு பணம் அனுப்புவதற்கு நான் உங்களிடம் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை, தகவல் வேணுமுனா சொல்லலாம், அது இப்பஉங்களுக்கும் தெரிஞ்சு போச்சு" கோபம் அவள் கண்களில் மட்டுமல்ல பேச்சிலும்தான்.

"எதோ மனசுல பட்டது சொல்லிட்டேன், அப்புறம் உன் விருப்பம்"

"நான் என் விருப்படி தான் செய்வேன், உங்களுக்கு விருப்பமுனா இருங்க, இல்லன போகலாம்"

மாறனின் தாய் அதற்க்கு மேல் பேச விரும்பாமல் அந்த இடத்தை விட்டுவெளியேறினாள்


மீண்டும் 9 மணி :

நான் என்ன பண்ணுறேன்னு உங்களுக்கு மட்டும் தான் சொல்ல முடியும், ஊரை ௬ட்டி சொல்ல முடியாது. இனிமேல் யாரவது நான் என் வீட்டுக்கு பணம் அனுப்புவதை பத்தி கேட்டால் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது

அதற்க்கு தலையை மட்டும் ஆட்டினான்.

நீங்க இப்படியே ஊமை கொட்டான் மாதிரி இருந்தால், நான் செய்யுறது எல்லோருக்கும் தப்பா தெரியுது

இன்னும் வேகமா தலை ஆட்டினான்

பக்கத்து அறையில் இருந்து மாறனின் தாய் இருமல் சத்தம் கேட்டது

வயசான காலத்திலேயே மகன், மருமகளோடு சந்தோசமா இருக்கிறதை விட்டு தேவை இல்லாத விசயங்களை பேசி எதுக்கு உடம்பை கெடுத்துக்கணும்

காலையிலே உங்க அம்மாவை மருத்துவ மனைக்கு ௬ப்பிட்டு போகணும்

அதையும் நீயே செய்யலாமே!!"

என்னாலே எப்படி முடியும், என்னை பத்தி ஒரு முடிவுக்கு வந்து இருப்பாங்க, இனிமேல் நான் எது செய்தாலும் அவங்களுக்கு நல்லதா படாது

அவள் ௬றியது மாலையிலே நடந்த ஒரு விஷயத்தை நினவு ஊட்டியது

மாலை 3 மணி :

மாறனின் கைபேசி சிணுங்கியது எடுத்து " என்ன அம்மா என்ன விஷயம், திடிர்னு போன் பண்ணுறீங்க"

"ஒன்னும் இல்லை சும்மாதான்"

சும்மா போன் பண்ண மாட்டீங்க, நிலா ஏதும் சொன்னாளா?

சற்றே தயங்கிய வாரே காலையில் நடந்ததை ௬ றினாள்

எல்லாம் முடித்து விட்டு "நீ ஏதும் அவளிடம் இதை பத்தி பேசவேண்டாம், அவ ரெம்ப நல்லவ டா"

"இதை நீங்க அவளிடமே சொல்லி இருக்கலாமே"

"என்னாலே எப்படி முடியும், என்னை பத்தி ஒரு முடிவுக்கு வந்து இருப்பா, இனிமேல் நான் எது செய்தாலும் அவளுக்கு நல்லதா படாது"

அவங்க ரெண்டு பெரும் மனசுல உள்ளதை பேச முடியாததாலே, இவனும் மனசு இருந்தும் வாய் பேச முடியாத ஊமை ஆகிவிட்டான்


Wednesday, March 11, 2009

முன் நவினத்துவம் - ஆரம்பம்

முன்னுரை : இந்த கதை பின்னொரு காலத்திலேயே நடப்பதாக ஒரு கற்பனை.



ஜி வீட்டிலே பெரிய விவாதம் ஓடிக்கொண்டு இருந்தது, அது அவரோட தலைமையிலே நடந்து கொண்டு இருந்தது.அந்த காலத்திலேயே அனைவரும் தங்கள் பெயர்களை சுருக்கி ஒரு வரியில் வைத்து கொள்வது நடைமுறை.

"எனக்கு இந்த "லாட்டோ சேன்ஜ்*" சுத்தம்மா பிடிக்க வில்லை"

ஜி மனைவி, "அங்கே வேலை செய்யுற எனக்கே பிடிக்க வில்லை, இருந்தாலும் அரசாங்க விதியை மீற முடியுமா?"


"அதிலே வெளிவரும் பட்டியலை திருட முடியுமா?"


"இந்த கேள்வியை எத்தனை தடவை கேட்டாலும், இதே பதில் தான், அந்த பட்டியல் தயாரிக்கிறது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர், அதிலே இருந்து வெளிப்படும் தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைத்திருக்கும், அது இந்திய அரசாங்க அதிகாரிகளின் பார்வைக்கு நேரடியாக செல்லும், அனைத்து உத்தரவுகளும் அங்கிருந்தே வரும்"


"சரி.. சரி எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்.." வாசல் வரை சென்றவள், திரும்பி வந்து


"எங்கே என் ஷூ மோட்டார்*" என் கேட்கும் போது வாசலில் வாகன சத்தம் வருகிறது, ஷூ வை கழட்டி விட்டு வீட்டுக்குள்ளே ஜோ நுழைகிறாள்.


ஜோ அம்மா "எத்தனை தடவை சொல்லுவது என் ஷூ எடுத்திட்டு போகாதேன்னு"


ஜோ, அம்மாவின் அர்ச்சனைகளை காதில் வாங்கி கொள்ளாமல் வீட்டிற்குள் சென்று பிரிட்ஜ் லே இருந்து காலரி மாத்திரைகளை* எடுத்து விழுங்கினாள்.


"அம்மா, நீ இன்னைக்கு அலுவலகத்துக்கு லேட், அதனாலே உன் சம்பளம் கட்டு"


இதற்க்கு பதில் ஏதும் ௬றாமல் தன் ஷூ வை மாட்டி கொண்டு விரைந்தாள்.


என்னம்மா நீ டெல்லிக்கு போகலையா?"



அப்பா தெரிஞ்சு பேசுகிறாரா, இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்ற குழப்பத்துடன்


"நான் போகலை"


"கல்லூரிக்கு?"


"என் ஷூ மோட்டரை சரி பண்ணிட்டு போகணும் "


"சரியாத்தான் இருக்கு"


அப்படியா!! என்ன பிரச்சனை? எப்படி சரி பண்ணுனீங்க?


என்று அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கொடுத்தார்
"உன்னோட அவரசர பிரச்சனைதான்,நீ போகிற அவசரத்திலே சரியா கவனிக்கலை"


ஜோ வுக்கு இருந்த குழப்பம் சந்தேகமாக மாறியது, நான் வெளியே போக ௬டாது என்பதற்காக போடப்பட்ட சதியா என்று என்ன ஆரம்பித்தாள்

"புளியங்குடியிலே இருந்து டெல்லிக்கு விமான நேரம் 15 நிமிஷம்"

"ஹும் என்னப்பா"

"புதுசா விமான சேவை விட்டு இருக்காங்க, அது பேப்பர் ல போட்டு இருக்குன்னு சொல்லுறேன்."


இன்னைய தேதிக்கு எங்க ஊருல ரயில்லே இல்லை பிற்காலத்திலே விமானம் எல்லாம் வருமுன்னு சொன்னா என்னை மாதிரி எருமை எல்லாம் யாரோ ப்ளைன் ஓட்டுதுன்னு சொன்னா நம்பவா முடியும்


ஜி ௬றியதை எல்லாம் காதில் வாங்காமல் எதோ நினைத்தவளாய் கல்லூரிக்கு கிளம்பினாள் ஜோ.


அவள் விரல் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது, அதை எடுக்காமல் விட்டு விட்டாள், மீண்டும் அழைப்பு வந்தது இம்முறை ஜி க்கு வந்தது


************************************************************************

*காலரி மாத்திரை : அந்த காலத்திலேயே விவசாயம் எல்லாம் அழிந்து உணவு பொருட்கள் மாத்திரை வடிவிலே வந்தது

*ஷூ மோட்டார்:காலில் மாட்டி கொண்டு செல்லும் வாகனம்

(மீண்டும் சந்திப்போமா அடுத்த பாகத்தில்)


மாணவர்களுக்கு எச்சரிக்கை

நான் படிச்ச கல்லூரி திருச்சி க்கு பக்கத்திலே ஒரு குக் கிராமம், அங்கே எங்களுக்கு குடிக்க தண்ணி கிடைக்காதேன்னு நான் நண்பர்களை வற்புறுத்தி பக்கத்திலே இருக்கிற எங்க ஊர் மாதிரி ஒரு பெரிய ஊரிலே வாடகைக்கு அறை எடுத்து தங்கினோம், அங்கிருந்து கல்லூரி க்கு பேருந்திலே பயணம் செய்வோம், நாங்க 8 பேர் தங்கி இருந்தோம்

நாங்க ௬ட்டமா போகிறதும், வாரதும், சத்தம் போடுறதும் எல்லாம் உள்ளூர் தாதாக்கள்னு நினைச்சிகிட்டு இருந்தவங்க காதுல லேசா புகைய ஆரம்பித்தது.

என்னோட சென்னை நண்பர் கொஞ்சம் துடிப்பானவரு, அவரு அலப்பறை தண்ணி போட்டவன் அலப்பறையை விட ரெம்ப அதிகமா இருக்கும், பேருந்துல போகும் போதும் வரும் போதும் திருச்சி செல்லும் கல்லூரி மாணவிகளை கேலி பண்ணுவது எங்க பொழுது போக்கு. நான் என்னதான் அழகு கிளியா இருந்தாலும் என்னை வழக்கம் போல யாரும் சட்டை பண்ணுவதில்லை. நாங்க கிண்டல் பண்ணின மாணவிகளில் ஒருவர் உண்மையான உள்ளூர் தாதாவின் தங்கை, அவங்க லேசா தாதாகிட்ட வத்தி வச்சிட்டாங்க


தாதா வோட அல்லக்கைகள் ஒரு நாள் எங்களை சந்தித்து "தம்பி பேருந்துகளில் கலாட்ட பண்றது நல்லா இல்லை, படிக்க வந்த வேலையை மட்டும் பார்க்கணும்னு" அந்த படிக்காத மேதைகள் அறிவுரை சொன்னார்கள்.


நான் வழக்கம் போல ச்சின்ன பையன் மாதிரி கேட்டு கிட்டு நல்லா தலையை ஆட்டினேன், ஆனா சென்னை நண்பர் வாயை கொஞ்சம் அதிகமா திறந்து.

"
என் மேல யாரவது கைவச்சா என்னை சாகடிச்சிடனும், இல்லேன்னா என்னை தொட்டவங்களுக்கு உசுரு இருக்காது" தலைவர் ரஜினி மாதிரி ஒரு குத்து வசனத்தை பேசி புட்டாரு. அதை கேட்டு எனக்கு வயத்தை கலக்க ஆரம்பித்தது, இன்னைக்கு சங்கு நமக்குத்தான்னு நினைச்சேன்.ஆனா அன்றைக்கு அப்படி ஏதும் நடக்கலை


ரெண்டு நாள் கழிச்சி திருச்சி நண்பன் ஒருத்தர் என்னிடம் "என்ன மச்சான் எதாவது பேசினா குத்திடுவேன்னு குத்து வசனம் எல்லாம் பேசி இருக்க ரெம்ப பெரிய ஆளுடா நீ"


"நான் எப்படா சொன்னேன்?"


"அதாண்டா உள்ளூர் அழகியை சைட் அடிச்ச விவகாரத்திலே"


சும்மா வேடிக்கை பார்த்த என்னையே இப்படி சொன்னவங்க, சென்னை நண்பன்

"
உள்ளூர் தாதாவை போட்டு தள்ள கத்தியோடு சுத்துறதா" அவரிடம் சொல்லி இருக்காங்க.

இதுக்கு மேல சும்மா இருந்தால் அவரு பட்டத்துக்கு ஆபத்து வந்திடுமுன்னு எங்களை கட்டம் கட்ட நாள் குறிச்சிட்டாங்க.

ஒரு நாள் மாலையிலே சென்னை நண்பன் இன்னொரு நண்பர் குழு தங்கி இருந்த வீட்டுக்கு சரக்கு அடிக்க காசு தேத்த போன வேளையிலே ஒரு கும்பல் எங்க வீட்டுக்குள் வந்தது, நானும், ராம் நாடு நண்பனும் கட்டை பீடி அடிக்க வெளியே போய் இருந்தோம், அறையில் இருந்த போனஸ் நண்பனிடம் சென்னைக்காரன் பத்தி விசாரித்தனர், அவன் இன்னொரு நண்பன் வீட்டு சென்று இருப்பதாக அந்த வீட்டு விலாசத்தையும் கொடுத்தான். நாங்கள் வீட்டுக்குளே வந்தவுடன் போனஸ் நண்பன் விவரம் சொன்னான்.

எங்களுக்கு புரிஞ்சு போச்சு, சென்னைக்காரன் மாட்டினால் சங்கு தான் என் நினைத்து நண்பனை காப்பாற்ற தாதா கும்பலுக்கு முன்னால் அங்கே செல்ல திட்ட மிட்டு ஒரு மிதி வண்டியை எடுத்தோம்.கிளம்புறதுக்கு முன்னாடியே திருச்சி
நண்பனும், ராமநாதபுரம் நண்பனும்

"மாப்பிள்ள நீ மட்டும் உன் வாய் திறந்து ஒரு வார்த்த பேசக் ௬டாது என்ன நடந்தாலும் நாங்க பாத்துகிறோம்"

நானும் வேண்டா வெறுப்பா "சரிடா" ன்னு சொன்னேன். நாங்க மிதி வண்டிய எடுத்துகிட்டு வேகமா சென்னை நண்பன் தங்கி இருந்த வீட்டுக்கு தாதா கும்பல் வரும் முன்னே போய் விட்டோம், அவனிடம் விவரத்தை சொல்ல ஆரம்பித்த உடனே போட்டிருந்த சட்டை, பேன்ட்டோடு சென்னைக்கு கிளம்பிட்டான். அவன் அடிச்சி பிடிச்சி ஓடின ஓட்டத்தை ஒலிம்பிக்குல ஓடி இருந்தால் தங்கம் வாங்கி இருப்பான்

அவன் ஓடவும் தாதா கும்பல் வரவும் சரியா இருந்தது, நாங்க எல்லோரும் சென்னை நண்பன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தோம், வந்த கும்பல் எங்களிடன்

"
சென்னைக்காரனை எங்கே டா" உடனே

"
திருச்சி நண்பன் சட்டை பையிலே தேடுற மாதிரி தேடினான்"

கும்பல் மறுபடியும்

"
டேய் இப்ப ஒழுங்க அவன் எங்கன்னு சொல்லலை உங்க எல்லோருக்கும் சுளுக்கு எடுத்து புடுவோம்"

ராம் நாடு ஜில்லா நண்பன்

"
பாஸு இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு, அவன் ஊருக்கு போய்ட்டான்"

உடனே திருச்சி நண்பன்

"
அவங்க என்னவோ அடிப்பேன், பிடிப்பேன் ன்னு சொல்லுறாங்க, நீ என்ன மாப்பிள்ளை கெஞ்சிகிட்டு இருக்க, கை யை வைக்கட்டும் பார்ப்போம்" ன்னு சொல்லி முடிக்கலை

அடுத்து ஒரு அஞ்சி நிமிசத்துக்கு எந்திக்க முடியலை அப்படி அடி இடி மாதிரி விழுந்தது. அடி மழை லேசா ஓய்ந்த உடனே எந்திரிச்சி பார்த்தால் அடிச்சவங்க கையிலே எல்லாம் கை குட்டை இருக்கு, திரும்பி என்னைப் பார்த்தால் நான் டவுசரோட நிற்கிறேன், அவங்க கையிலே இருப்பது எல்லாம் நான் போட்டு இருந்த சட்டையும்.லுங்கியும். என்னை மட்டுமல்ல அங்கு நின்ற எல்லா நண்பர்களையும் ஒரு காட்டு காட்டி விட்டு போய் விட்டார்கள்.

எல்லோருக்கும் வீரத் தழும்புகள், எனக்கு மட்டும் ஊமை அடி, தழும்புக்கு மருந்து எல்லாம் போட்டு விட்டு கொஞ்ச நேரம் கழித்து

ராமநாதபுரம் நண்பன்

"டேய் உன்னை அடிச்சது ௬ட பெரிய விஷம் இல்லை, உன் சட்டைய கிழிச்சி பிட்டாங்களே"

திருச்சி நண்பன் "சட்டை மட்டுமல்ல லுங்கியும் தான் போச்சு"

போனஸ் அடி வாங்கிய இன்னொரு நண்பன் "டேய் அவனே விழுந்த அடியிலே அரண்டு போய் இருக்கான், நீ சட்டை லுங்கி ன்னு கவலைப் பட்டு கிட்டு இருக்கீங்க"

ராம் நாடு நண்பன் " பின்ன நான் கவலை படமால் இருக்க முடியுமா?, அவன் போட்டு இருந்தது என் சட்டை டா, நான் 10001 ரூபா என் ஆளுக்கு செலவு பண்ணிட்டேன்னு என் காதலி பரிசா எடுத்து கொடுத்த 50 ரூபா சட்டை"

திருச்சி நண்பன் "அவன் போட்டு இருந்தது என் லுங்கி"

போனஸ் அடி நண்பன் "இவன் போட்டு இருக்கும் டவுசர் ஓடிப்போன சென்னைகாரனோடது. மொத்தத்திலே இவன் வாங்கின அடியை தவிர எதுவும் இவனிதில்லை "


நான், "இப்ப தெரிஞ்சி போச்சுடா நீங்க ஏன் பேசக் ௬டாதுன்னு சொன்னீங்கன்னு"


அந்த சம்பவத்திற்கு அப்புறமா நாங்க எல்லாம் முதியோர் மட்டும்னு போர்டு வைக்காத பஸ்ல தான் போவேம் வருவோம்