Friday, July 22, 2011

வாசகர் கடிதம்

அன்புள்ள மூத்த பதிவர் நசரேயன் அவர்களுக்கு,

வணக்கம். வெகுநாட்களாக உங்களுக்கு மடல் வரைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், மூத்த பதிவராகிய தங்களைப் பாராட்டும் தகுதியோ வயதோ எனக்கில்லை என்பதால் தயக்கமாகவே இருந்தது. பல நாட்கள் மனப் போராட்டத்துக்குப் பின், தங்களின் கொலவெறி இடுகையைப் படித்தவுடன் இனிமேலும் பாராட்டாமல் இருந்தால் இந்த மெய்நிகர் உலகம் என்னை மன்னிக்காது என்பதால் துணிந்து எழுதுகிறேன்.

நான் வலையுலகத்துக்கு அடி எடுத்து வைத்தவுடன் என் கண்ணில் தென்பட்டது உங்கள் வலைத்தளம் ‘என் கனவில் தென்பட்டது’. அந்தச் சிலிர்ப்பிலே படிக்கத்துவங்கியவுடன் கண்ணில் பட்டது, ’தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்’ என்ற உங்கள் பொன்மொழி. இது கல்வெட்டிலே செதுக்கி புளியங்குடி வரவேற்கிறது என்ற போர்டுக்கு அருகிலே வைக்க வேண்டியது எனக் கருதுகிறேன். உங்கள் இடுகைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகே, படிக்கும்போது பிழையாக எழுதுவதால், உனக்கு கணக்கன் உத்தியோகம் கூட கிடைக்காது, எருவமாடு மேய்க்கப்போ என்று என் தன்னம்பிக்கையை குலைப்பதை வகுப்புதோறும் நிறைவேற்றிய ஆசிரியர்களின் கடமையால் தாழ்வு மனப்பான்மையோடு இருந்துவந்தேன். எங்கே கையெழுத்துப் போட்டால் பிழை வந்துவிடுமோ என்று, கைநாட்டு வைத்துவந்தேன். உங்கள் இடுகைகள் தந்த ஊக்கத்தால் இன்று பிழையின்றி வானம்பாடிகள் என்று கையெழுத்துப் போட முடிகிறது. இதற்கான பெருமை முழுதும் உங்களையே சாரும். இதற்காக நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

நானும் பல வலைத்தளங்களைப் படித்து வருகிறேன். ஆனாலும், இந்தச் சமூகத்தில் காதல் தோல்வியால் இளைஞர்கள் தாடிவைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டு நாசமாய்ப் போவதை சகிக்காமல், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, காதல் நிலையானதல்ல, துண்டே நிலையானது என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்து இன்று பல இளைஞர்களை துண்டும் கையுமாக அலையவிட்டிருப்பதிலே உங்களின் சமூக அக்கரையும், இளைஞர்கள்பால் உங்கள் நம்பிக்கையையும் எந்த ஒரு அரசியல் கட்சிக் கூட செய்ததில்லை.

அதே போல், அமெரிக்காவில் தாங்கள் பணிபுரிந்த காலத்தில், நொங்கு தின்னும் கலாச்சாரத்துக்கு எதிராக பொங்கி, நகைச்சுவையோடு அதனை விமரிசததை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு கொள்ளாமல் விட்டதை நினைக்கும்போது மனம் கனத்துப் போகிறது. கருவண்டு, எருவமாடு போன்ற சொற்களை சொல்லுக்கடங்கா மன உறுதியுடன் எதிர்கொண்டு, துரைசானிகளுக்கு துண்டு வீசி சமத்துவத்தை நிலை நாட்டி, ‘சமச்சீர் துண்டு’ப் புரட்சி செய்ததை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

படிப்படியாக பதிவுலகம் என்பது மொய் சார்ந்த மெய்யுலகம் என்பதையும் உங்கள் மூலம்தான் கற்றுக் கொண்டேன். ஒரு நாளில் எத்தனை இடுகைகளைப் படித்துப் பின்னூட்டமிடுகிறார் என்ற வியப்பு, உ.த அண்ணனின் ஒன்னரை குயர் இடுகைக்கு பதிவிட்ட ஒரு நிமிடத்தில் ‘ம்ம்’ என்ற உங்கள் மறு மொழி பார்த்ததும்தான் பதிவுலகில் யார் பதிவெழுதினாலும், எந்திரன் ரோபோ போல் ஒரே பார்வையில் ஸ்கேன் செய்யும் திறனிருப்பதை அறிய முடிந்தது. தங்களைப் பின்பற்றி நானும் பல இடங்களில் மொய் விருந்து வைக்கக் கற்றுக் கொண்டேன்.

இப்படி இருக்கும்போதே கூகிள் பஸ்ஸில் தங்களின் ஒன்னு கீழ ஒன்னு போட்டிருக்கேன், என்னான்னு சொல்ல வேண்டியதில்லை என்ற தன்னடக்க அறிவிப்புடன் வந்தவைகளைப் படித்து கிலியாகி, கவுஜ என்ற ஒன்று தமிழ் இலக்கியத்தில் இருப்பதை அறிந்தேன். அந்த மகிழ்ச்சியில் என் பள்ளி ஆசிரியர்களிடம் கவுஜ என்று ஒன்று இருப்பதைச் சொல்லிக் கொடுக்காமல் விட்டதற்காக சண்டை போடப் போய், அவர்கள் கீழ்ப்பாக்கத்துக்கு பிடித்துக் கொடுத்த போது, அந்த மருத்துவரிடம் உங்கள் கவுஜ ஒன்றைச் சொன்ன உடன் அவரே போய் ஒரு செல்லில் அடைந்து கொண்டு நான் இருக்கும் வரை வெளியே வரமாட்டேன் என்று ஒளிந்து கொண்டதையும், பிறகு மருத்துவத்துறை செயலாளர், அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கி, வெளிநடப்புச் செய்தேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நேற்று, தற்கொலையைத் தடுக்க ஒரு சேவை மன்றம் அவசியம் என்ற உங்கள் இடுகையை வாசித்தவுடன் புல்லரித்துப் போயிற்று. அதிலும் கடைசியாக நீங்கள் சொன்ன புதிர் இராத்தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது. நமது மாண்புமிகு முதல்வர் உடனடியாக இந்தத் திட்டம் செயலாக்கப்பட வேண்டும் என்றும் உலக அளவில் இது குறித்தான ஆலோசனை மையம் அமைத்து ஆலோசனை அளிப்பதற்கு வழி செய்யவேண்டுமென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிந்தேன். இந்தத் துறைக்கு உங்களைத் தலைவராக அழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் சேவையைப் பாராட்டி, ஜனாதிபதி அவர்களும், ஒபாமா அவர்களும் ‘நசுங்குன சொம்பு நசரேயன்’ என்ற விருது அளிக்கப் போவதாகவும், அந்த விழாவுக்கான பாடலை, கவிஞர். பா.ரா. எழுதி, ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவரப்போவதை தாங்கள் ஏன் சொல்லவில்லை? எப்படியோ, தாங்கள் குற்றாலம் போகவிருப்பதாக அறிகிறேன். ஒரு பதிவர் கூட்டம் ஏற்பாடு செய்து, உங்கள் தோட்டத்திலிருந்து எலுமிச்சம்பழம் இலவசமாகக் கொடுத்து குளிக்கவைத்தால், உங்கள் பதிவின் பாதிப்பு சற்று மட்டுப்படலாம்  என்ற அவாவோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.

அன்புள்ள
வானம்பாடிகள்





பொறுப்பு அறிவித்தல்:

இதெல்லாம் ஒரு பொழப்பு போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டறுக்கப்பட்டது


14 கருத்துக்கள்:

நசரேயன் said...

நானும் ரௌடிதான்

vasu balaji said...

உங்கள் பதிவில் என் கடிதத்தைப் பிரசவித்து சை பிரசுரித்து கெளறிவைத்தமைக்கு அய்யோ கௌரவித்தமைக்கு நன்றி.

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா இதெல்லாம் நிஜமா. கனவான்னு தெரியலையே..ஏன்னா

இதுல வானம்பாடிகள் ஸ்டையிலு தெரியுது. நசரோட குறும்பு தெரியுது. நானும் என் கனவில் தென்பட்டதைப் படிக்கிறேன்னு தெரியுது.. ஆனா இதெல்லாம் உண்மையான்னு விளக்குங்க பாலா சார்.:)

ஓலை said...

எனது பாராட்டுகள் கூட.

டிஸ்கி: இனி தளபதியின் பதிவில் எழுத்துப் பிழை இல்லை என்று அறிவிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அவர் அவர்களது கணினியில் உள்ள லோக்கல் அகராதியில் ஏற்றிக் கொள்ளவோ அல்லது திருத்தம் செய்து கொள்ளவோ வேண்டிக் கொள்கிறோம்.

ILA (a) இளா said...

இதெல்லாம் ஒரு பொழப்பு?...

அமுதா கிருஷ்ணா said...

இதுவும் ஒரு பொழப்பு..நானும் ரெளடி தான்.

ஹேமா said...

நசருக்கு அடிக்கடி பட்டமளிப்பு விழா நடக்குது இப்பல்லாம் !

அமுதா கிருஷ்ணா said...

பட்டத்தின் பெயர் அம்சமாய் இருக்கிறது.

நட்புடன் ஜமால் said...

சொ.செ.பா

சாந்தி மாரியப்பன் said...

:-))))))

'பரிவை' சே.குமார் said...

//இதுல வானம்பாடிகள் ஸ்டையிலு தெரியுது. நசரோட குறும்பு தெரியுது.//

Correct.

ராஜ நடராஜன் said...

தளபதி நசர்ஜி!கட்ட்ளையிடுங்கள்

ஆட்டோவா சுமோவா?

துண்டு போடுவோர் கழகத்தைக் கேட்காமல் யாரது புதுப்பதவி கொடுத்தது?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஐ... இப்படி கூட போஸ்ட் போடலாமா? "நசுங்கின சொம்பு" அடைமொழி நல்லா இருக்குங்க... தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள வரை உங்க புகழ் ஒடுங்குக ச்சே... ஓங்குகனு சொல்லிக்கரனுங்க...:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))