Saturday, February 26, 2011

துரைமார்களும், தொப்பியும்



தமிழிலே அலை கடலாக ஓயாமல் ஆராய்ச்சி மணி அடிச்சி தவிச்சி போன கை இப்ப சொம்பு மணி அடிக்கிறது இங்கலிபிசுக்கு, அதாகப்பட்டதாவது துரைமார்களிடம் இருந்து கத்துகொண்ட கொண்ட பாடத்தை அப்படியே மனப்பாடம் பண்ணி, நாம பேசுறப்ப கொஞ்சம் முளகாய், காரம் தூவி அப்படியே பேசுவதிலே நம்மவர்களுக்கு இணை நம்மவர்களே என்பதற்கு எனக்கு தெரிந்த இந்த இரண்டு வார்த்தைகள் ஒரு உதாரணம், அதாவது ஹட்ஸ் ஆப், பைட் தி புல்லெட். நான் ஆரம்ப காலத்திலேயே இந்த வார்த்தைகளை கேட்டதும் அரண்டு போய் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிட்டேன்.

முதல்ல ஹட்ஸ் ஆப்னு கேட்டவுடனே, இவரு எதுக்கு சம்பந்தம் இல்லாம தொப்பிய கழட்ட சொல்லுறான்னு யோசித்தேன், ஆனா வார்த்தையிலே இருக்கிற உள்குத்து பெரிய குத்தா இருக்குன்னு கண்டுபிடிச்சி முடிக்கும் முன்னே எனக்கு சொன்னவரு காணாம போயிட்டாரு,தொப்பி விவரம் எப்படினா(?) இவன் எல்லாம் விளங்கமாட்டான்னு என்னையப் பார்த்து சொன்னவங்க எல்லாம் இன்னைக்கு மூக்கு மேல விரலை வச்சி பார்க்கிற மாதிரி சாதனை செய்தால், அவங்களைப் பார்த்து ஹட்ஸ் ஆப் டு யூன்னு புண் பட்ட மனசுக்கு ரெண்டு கட்டு பீடியும், ஒரு பீரும் வாங்கி கொடுத்து மனசை தேத்த சொல்லுவாங்க(?).

சாதனை செய்பவர்களை மீண்டும் சாதனை செய்ய தூண்டுவது,உடலையும்,மனசையும் முதலீடு பண்ணி நொங்கு எப்படி திங்கனுமுன்னு சொல்லி கொடுத்தவரை, நோகாம நொங்கு தின்னுகிட்டு பாராட்டுவது இந்த ஹட்ஸ் ஆப் டு யூ,இந்த சொல் எப்படி வந்து இருக்கும் என்று கால சக்கரத்திலே ஏறாம கொசுவத்திய சுத்தி பார்த்தோமானால், துரைமார்கள் அந்தகாலத்திலே முடி கொட்டினது, முடி கொட்டிகிட்டு இருக்கது, முடி முளைக்காத எல்லோரும் தொப்பிய வச்சி இருந்து இருப்பார்கள், அந்த காலத்திலேயே சாதனையாளர் வரும் போது, தொப்பிய கழட்டி காட்டி அவருக்கு மரியாதை செய்து இருக்கலாம்(?). அதன் பின் நாகரிகம் மாறி தலைக்கு விக் வச்சாலும்,ஆனா ஹட்ஸ் ஆப் டு யூ மாறலை, காலம் மாறினாலும் கருத்து மாறலை என்பதை நிலைநாட்ட சொற்கள் அப்படியே இருக்குன்னு சொல்ல முடியாது, ஏன்னா துரைமார்கள் இன்னும் புதுச்சொல் கண்டு பிடிக்கலை, கண்டு பிடித்து இருந்தால் ஹேர் ஆப் டு யூ ன்னு சொல்லி ரெண்டு தலை முடியை பிடிங்கி வச்சி இருப்போம்

இணையத்திலே இந்த தூய தமிழ் சொல்லாடல் அடிக்கடி பயன்படுத்துவதை நாம் பார்த்து இருப்போம்,அதாவது ஹட்ஸ் ஆப் டு யூ பார் யுவர் கும்மி, ரெண்டு பேருக்கிடையே அறச்சீற்றம்(வசனம் உதவி பாலா அண்ணன்) வரும் போது, நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்லிக்கிட்டு ஒத்தை காலிலே நிக்கும் போது, அதுக்கும் ஒரு ஹட்ஸ் ஆப் டு ஆல். கோவமா பேசினாலும் தொப்பிய கழட்டு, மொக்கயா பேசினாலும் தொப்பிய கழட்டு. ஆணியே பிடுங்காம ஆணி அடிச்ச மாதிரி ஆணித்தரமா கருத்து சொன்னா தொப்பிய கழட்டனும், ஆனா எதுவுமே பேசாம இருந்தா முக்காடு போடணுமா, இதையெல்லாம் கேட்காம விட்டா காலைக்கடன் முடிக்கதுக்கு ௬ட ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்ல வேண்டிய நிலை வரலாம்(?).

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்னு சொல்லுறதை விட்டுவிட்டு தொப்பியப்போடு, தொப்பிய கழட்டுன்னு பீட்டர் விட்டு பசும்பால் குடிக்கிற காலத்திலேயே   பயமுறுத்து வச்சி இருந்தாங்க.பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழுக்கு மட்டும் தானா, இங்கிலிபிசுக்கு கிடையாதா, ஆயிரத்திலே பேசினதை, ஆயிரத்து தொள்ளாயிரத்திலும், இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சும் ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்லிக்கிட்டு இருக்கனுமா?

தொப்பி விசத்திலே கொலை வெறி எதிர்ப்பு தெரிவிக்க இன்னொரு சிறப்பு காரணம் இருக்கு, தொப்பி பொரும்பாலும் ஆண்கள் வைக்கிறது, ஆனா பெண்களும் சேர்ந்து இப்ப தொப்பிய கழட்டுறேன்னு சொல்லுறது ஆணாதிக்கத்தை சமுகத்தை பெண்களும் ஆதரிக்கிறார்கள் என்ற நுண் கருத்தை தொலை நோக்கு பார்வையிலே அணுக வேண்டிய இருக்கு, பெண்ணியக்க போராளின்னு பட்டம் வாங்க என்ன பாடு படவேண்டிய இருக்கு, இந்த பொழப்புக்கு நாலு டெக்ஸ்சாஸ் பசு மாடு வாங்கி மேய்க்கலாம்.தாய்குலங்களுக்கு நன்மை(?) செய்யும் பொருட்டாக, இனிமேல ஒரு பூவையோ, ரோசாவை தவித்து, அந்த பூவை காதலர்கள் ஒட்டுமொத்தமா கட்டுக்குத்தகை எடுத்து இருக்காங்களாம். இல்ல தங்க மோதிரமோ கொடுத்து, தொப்பி விசயத்தையே கழட்டி விட்டா மிகவும் நல்லதா இருக்கும், திறைமைக்கு பாராட்டுக்கு பதிலா மொய் வச்சி பரிசு கொடுத்தா சந்தோசம் தானே, அதனாலே இனிமேல பழைய சொற்களை கழித்து விட்டு, புதிய சொற்களைப் பயன்படுத்துவோம் என்று சொல்லி வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

பொறுப்பு அறிவித்தல்: துப்பாக்கி குண்டை கடி என்ற சொல்ல பிறகு ஒரு நாளிலே பார்க்கலாம்.  



12 கருத்துக்கள்:

சின்ன அம்மிணி said...

ஹாட்ஸ் ஆப் டு யூ தளபதி

சின்ன அம்மிணி said...

இன்னும் கலைஞர் கருணாநிதி ஆட்சிதான் தமிழ்நாட்ல. (லேபிள்ல ஆராட்சி??ன்னு கேட்டிருக்கீங்களே)

பா.ராஜாராம் said...

:-)) செரி..செரி..இப்ப என்ன சொல்ல வர்ரீறு?

//இன்னும் கலைஞர் கருணாநிதி ஆட்சிதான் தமிழ்நாட்ல. (லேபிள்ல ஆராட்சி??ன்னு கேட்டிருக்கீங்களே)//

:-))

//பொறுப்பு அறிவித்தல்: துப்பாக்கி குண்டை கடி என்ற சொல்ல பிறகு ஒரு நாளிலே பார்க்கலாம்.//

ஆராவது வந்து ஆராட்சி பண்ணி சொன்னதுக்கு பிறகு வந்து ஆராட்சிக்கிறேன்... (ஆராச்சியாட்டி தல வெடிச்சுரும் போல இருக்கு) :-((

நசரேயன் said...

அம்மணி வலையிலே இருக்கீங்களா , இன்னும் கடை காணாமப் போன சோகத்திலே இருந்து வரலையா ?

ராஜாராம் அண்ணே ரெம்ப ஆழமா படிச்சி இருக்கீங்க !!!

vasu balaji said...

முதல்ல உம்ம தொப்பிய கழட்டுறான் வெள்ளைக்காரன். அன்ரிஜிஸ்டர்ட் டொமெய்ன். ரிஜிஸ்டர் அட் இமேஜ்ஷாக்னு. அங்கங்க ஐஸ்கட்டிக்குள்ள தவளைப் படம் வேற.:)). அதப்பாரும் முதல்ல. அப்புறம் ஆராட்சி பண்ணலாம்.

பழமைபேசி said...

தொப்பின்னவுடனே, நான் ஆடிப் போய்ட்டேன்...

ராஜ நடராஜன் said...

உங்க ஸ்டைல ம் மட்டும் இப்போதைக்கு போட்டுக்குறேன்:)

ராஜ நடராஜன் said...

//ஹேர் ஆப் டு யூ //

போகலாமுன்னுதான் நெனச்சேன்.முடியல:)

ராஜ நடராஜன் said...

//பெண்ணியக்க போராளின்னு பட்டம் வாங்க என்ன பாடு படவேண்டிய இருக்கு, இந்த பொழப்புக்கு நாலு டெக்ஸ்சாஸ் பசு மாடு வாங்கி மேய்க்கலாம்.//

மொக்க போடுறவங்களும்,கவிதை பாடுறவங்களும் ரொம்போ நல்லவங்கன்னு அடைப்பானுக்குள்ள இருக்குற ஒரு அக்கா! ஏற்கனவே சர்டிபிகேட்டு கொடுத்திடுச்சு:)

ஓலை said...

Ithu thoppi thookki paarai pakkam poivittu vantha effectungala?

சின்ன அம்மிணி said...

தளபதி , வலைக்கு எப்பவாச்சும் வர்றேன். பஸ்ஸுக்கு அப்பப்ப வருவேன். ஆபீஸுலயும் வேலை. வீட்டுலயும் வேலை. நிம்மதியா ப்ளாக் போட்டோம் சாப்பிட்டோம் தூங்கினோம்னு இருக்க முடியுதா :):)

ஹேமா said...

நசர்...அட...அட என்ன ஒரு ஆராய்ச்சி.இப்பிடி ஆராய்ச்சி பண்ணியே உங்களுக்கு முடி கொட்டப்போகுது.இல்லாட்டி கொட்டிடிச்சா.

அப்பிடிக் கொட்டினவங்கதான் தங்கள் அனுபவ காலத்தை வெளியில் காட்ட தொப்பியக் கழட்டிக் காட்டியிருப்பாங்களோ !