Monday, January 31, 2011

எனது ஓட்டு கலைஞருக்கே

பொறுப்பு அறிவித்தல்:
ISO தர சான்றிதழ் பெற்ற அரசியல் இடுகை 

இணைய உலகத்திலே தற்போதைய சூழ்நிலையிலே கலைஞரை பத்தி குறை சொல்லி ரெண்டு திட்டு திட்டாம போய்விட்டால் தமிழினத்துரோகி என்ற அவப்பேருக்கு
ஆளாகக்௬டும் என்று நினைத்து இந்த இடுகையை எழுத வேண்டிய கட்டாயம். ஆப்பிரிக்காவிலே கொசு கடித்தாலும் காரணம் கலைஞர் என்று ஒரு மாயை உருவாகி இருப்பது உண்மை. இணையத்தின் எதிர்ப்பு புரட்சி தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா இல்ல தமிழக மக்களின் மனநிலைய இணையம் பிரதிபலிக்கிறதா என்று தெரியவில்லை.

அடிப்படைய கலைஞரை திட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் அவரு பதிவுலகிலே இல்லை என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை, பதிவுலகிலே இருக்கும் ஒருவரை இப்படி எல்லாம் திட்ட முடியுமான்னு தெரியலை. பச்சைத்துரோகி, கிழபாடு என்பதெல்லாம் சாதாரணமா அவருக்கு கிடைக்கிற மரியாதைகள், கலைஞரை ஓட்டுப் போடக்௬டாது என்றால் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.தமிழ் நாட்டிலே இருக்கிறதே ரெண்டு பெரிய கட்சி, இதை விட்டா வேற யார் ஆட்சிக்கு வருவார்கள்.

பதிவுலக ஆதரவு வரலாறு சற்று திரும்பி பார்த்தோமானால், இலங்கையிலே போர் உச்ச கட்டத்திலே இருக்கும் போது, திருமாவளவனுக்கு ஒரு மிகப்பெரிய ஆதரவு படை கிளம்பியது, காங்கிரஸ் தமிழகத்திலே ஒழிய வேண்டும் என்று வீர சபதம் எடுத்து வெறி கொண்ட சிறுத்தையை வலம் வந்தவர். அவரது தலைமையிலே மாற்று அணி அமைய வேண்டும் என்று மனுப்போட்டு நின்ற நேரம் அவன் இந்திய ரயிலை விட மிக வேகமாக தடம் புரண்டு மறுபடியும் ஒட்டிகொண்டார். இப்படிப்பட்ட தன்மானம் மிக்க தலைவர்கள்  எல்லாம் இப்ப இன்னும் அதே நிலையிலே தான் இருக்காங்க, ஆனா இன்னும் இவர்களை நம்புறோம்(?).

கலைஞருக்கு மாற்று சக்தியாக இருக்கும் புரட்சி தலைவின் வராலாறுகளை புரட்டி பார்த்தோமானால், பொடாவை உருவாக்கிய மத்திய அரசை விட அதிக முறை பயன் படுத்தியவர் என்று விருது கொடுக்கும் அளவுக்கு உபயோகித்தவர்.தமிழர்க்காகவே  வாழும் அண்ணன் தன்மானத்தமிழன் வைகோ இப்போது வெளியே இருந்து இருந்தா புத்தகம் எழுத நேரமில்லை என்று அம்மா உள்ளே தள்ளிவிட்டதாக நினைத்துகொண்டு வேற எங்கும் போக வழி இல்லாமல் இன்னும் இருந்த இடத்திலே இருக்கிறார், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று கலைஞர் சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

புரட்சி தலைவி ஆட்சியிலே இருந்து இருந்தா, ஒரு வேளை இலங்கைக்கு படை எடுத்துப் போய், அவர்களை தோற்கடித்து அங்கே ஆட்சியப் பிடித்து இலங்கையை இந்தியாவுடன் இணைத்து இன்னொரு மாநிலம் ஆக்கி இருப்பார் என்று சொல்லமுடியுமா?, யார் ஆட்சியிலே இருந்தாலும், இந்த கொடுமைகள் தொடரும் என்பது மட்டும் உறுதி, இப்போது ஆட்சியிலே கலைஞர் இருக்கிறார், அதனாலே அவரை திட்டுகிறோம், இதே நிலையிலே தலைவி இருந்து இருந்தாலும் இதையே தான் செய்து இருப்போம்.மேலும் தமிழரின் ஒற்றுமைக்கு பதிவுலகமே ஒரு சான்று, இங்கு ஒற்றுமை என்பது அடுத்தவர் என் சட்டையப் பிடிச்சி இழுத்துவிட்டார் என்று இன்னொருவர் குறை சொல்லும் வரை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கலைஞரை திட்டுவதாலே நமக்கு மனநிம்மதி கிடைக்கும் என்பதை தவிர வேறு ஏதும் பலன் இருப்பதாக தெரியவில்லை, இதை எல்லாம் சொன்னேன்னேனு எனக்கும் வேணா ரெண்டு திட்டு கிடைக்கலாம், இப்படி மக்களின் மன அமைதிக்கு மருந்தாக இருக்கும் அன்பு தலைவர் கலைஞருக்கு எனது ஓட்டு என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறேன்.

இப்படிக்கு,
பஞ்சம் பிழைக்க அயல் நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழன்.


24 கருத்துக்கள்:

Anonymous said...

இணையத்தின் எதிர்ப்பு புரட்சி தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா இல்ல தமிழக மக்களின் மனநிலைய இணையம் பிரதிபலிக்கிறதா என்று தெரியவில்லை.

whats the difference??? :)

Unknown said...

நானும் பல பின்னூட்டங்களில் எழுதி வருவது போல சும்மா ஓட்டு போடுவது உனது பிறப்புரிமை கடமை என்றெல்லாம் சொல்லி நம்மை உசுப்பேத்தி அவனுங்க சம்பாரிக்கதான் நாம் வழி வகுக்கின்றோம். ஆகையால் நமது இந்திய நாட்டின் படித்த முட்டாள்களே, படிக்காத முட்டாள்களே ஓட்டுச் சாவடியில் போய் 49 ஓ கேட்டு வாங்கி நமது எதிர்ப்பை தெரிவிப்போம். எத்தனை தேர்தல் வந்தாலும் பரவாயில்லை நமக்காக இல்லை என்றாலும் நமது வருங்கால சந்ததியாவது நவீன இந்தியா காண வழி காண்பிப்போம். ஸ்பெச்ற்றம் கொள்ளையை விட மறு தேர்தலுக்கு ஒன்றும் பெரிய செலவு ஆகிவிட போவதில்லை. அன்பர்கள் உடனே எனக்கு எதிராக அம்புகள் விடாமல் ஆற அமர யோசித்து ஏதாவது எழுதுங்கள் நன்றி

Chitra said...

இப்படி மக்களின் மன அமைதிக்கு மருந்தாக இருக்கும் அன்பு தலைவர் கலைஞருக்கு எனது ஓட்டு என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறேன்.


......உங்கள் ஓட்டு.... உங்கள் உரிமை.....

'பரிவை' சே.குமார் said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

உங்கள் ஓட்டு.
உங்கள் உரிமை.

ஹேமா said...

நசர்...இந்தப் பதிவுக்கான ஓட்டுப் போட்டாச்சு !

அமுதா கிருஷ்ணா said...

சரி சரி நீங்களும் பதிவர் தான் ஒத்துக் கொள்கிறோம்.

பழமைபேசி said...

//எனக்கும் வேணா ரெண்டு திட்டு கிடைக்கலாம்//

ஆகா... மொத்துக் கிடைக்கிறதுல இருந்து தப்பிக்கிறதுக்கு இப்படியும் ஒரு வழி இருக்கா? இது தெரியலையே எனக்கு?!

Unknown said...

"ISO தர சான்றிதழ் பெற்ற அரசியல் இடுகை" வேற.

எப்பிடி தளபதி ஜாக்கிரதையா கருத்த சொல்றது.

தமிழக மக்கள் திமுக அல்லது அதிமுக கூட்டணியல தான் ஒரு ஆட்சி அமைக்கிற நிலைமயில இருக்காங்க. வேற வழியில்லை. அதனால குறைந்த பட்சம் இவர்கள் இருவரது ஆட்சியில எவரது ஆட்சி மக்கள் விரோத கொள்கைகளில் சிறந்து விளங்குகிறாங்க என்று பார்க்கும் போது, என்னத்த சொல்ல, எங்கிட்டு போய் நிக்கறாங்கன்னு பாருங்க.

பல்வேறு திட்டங்கள் வருது, ஆனால் பலன் மக்களை அடைவதை விட ஆட்சியில் இருப்பவருக்கு தான் அதிகம். இந்த தடவ எதிர்ப்பு அலை ஜாஸ்தியா தானிருக்கு.

ஏன் தளபதி உங்க ஊரில வேட்பாளர் மனு கொடுக்கப் போறீகளா? பார்த்து.

பழமைபேசி said...

//இந்த கொடுமைகள் தொடரும் என்பது மட்டும் உறுதி//

அப்படி எல்லாம் இல்ல... தொகுதிக்கு 10000 ஓட்டு, தமிழனப் பற்றாளனுக்கு விழற மாதிரி இருந்தா இந்நிலை வராது... தமிழன், தமிழ்ப் பற்றாளனா இல்ல.... அதான் மூல காரணம்!

எத்தனை நாளைக்குதான் மூடி வெச்சி, மூடி வெச்சி, நம்மை நாமே ஏமாத்திக்கப் போறோம்?!

வருண் said...

பதிவு தலைப்புல சொன்ன மாரி ஓட்டுப் போட்டுடுங்க. இல்லைனா உங்களுக்கும், இதுபோல் தலைப்பு போட்டு பொய் சொல்லிக்கிட்டு திரியும் சிலருக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும்!

எனக்கு ஓட்டுரிமை இல்லை! அதனால நல்லதாப்போச்சு!

அன்புடன் நான் said...

அண்ணே....
என்னை பொறுத்தவரை... வயது முதிர்ந்த கலைஞரை திட்டுவதில் உடன்பாடு துளியும் இல்லை.

ஆனால் மீனவர் பிரச்சனையில் ஒரு முதல்வர் கம்பீரமான முடிவை எடுக்க முடியாத “கூட்டணி” சூழல்.

அதனால்தான் ... இந்திய அரசையும்....
தமிழக அரசையும் கண்டித்து எழுத வேண்டிய சூழல்..... அது வயதான கலைஞரை அல்ல. அவர் சுமக்கும் பதவியை!

நான் பல கண்டன கருத்துகளை எழுதியுள்ளேன்.... ஆகையால் கலைஞரை திட்டுவதாக எடுத்து கொள்ள கூடாது.
அது கலைஞர் எடுக்கும் முடிவையும்.... மெளனத்தையும்.... என புரிந்துகொள்ல வேண்டும்...
இந்த சூழலில் யார் முதல்வராக இருந்தாலும்.... அவர்களை கண்டிப்பது உணர்வுள்ளவனால் தவிர்க்க முடியாது....

மற்றபடி கலைஞர் தனிப்பட்டவருக்கு எதிரியல்ல!

பகிர்வுக்கு நன்றி நண்பரே...

பதிலை எதிர்பார்க்கிறேன்.

இனியா said...

இணையத்திலேயே மிக எளிய விஷயம் கலைஞரை திட்டுவதுதான்.
ஆஹா எவ்வளவு திட்டுகள். பலருக்கு கலைஞரை திட்டாமல்
தூக்கம் வருவதில்லை. என் ஓட்டும் கலைஞருக்கே!!!

நசரேயன் said...

கருணாகரசு அண்ணே,

மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படவேண்டிய ஒன்று அதிலே எந்த மாற்று கருத்தும் இல்ல, ஆனால்
கலைஞர் இடத்திலே வேறு யாரவது இருந்தால் இவ்வளவு திட்டுக்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே.
என்னைபொறுத்த வரையிலே மற்ற தலைவர்களுக்கு கலைஞர் எவ்வளவோ மேல்.
தமிழக அரசியலே ௬ட்டணிகளை வைத்தே ஆட்சி நடத்துகிறது, தற்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் அவங்களா ௬ட்டணியிலே இருந்து விலகாவிடில் இந்த ௬ட்டணி தொடரும்.

ஜீவன்சிவம் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்..மாற்றங்களை நாம் விரும்புவதில்லை. ஆனால் மாற்றங்கள் ஒரு இரவில் நடந்து விடுவதில்லை. அதற்க்கு தொடர்ந்த முயற்சியும் விழிப்பும் வேண்டும்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ISO தர சான்றிதழ் பெற்ற அரசியல் இடுகை//

Congrats....:))))

Anonymous said...

அண்ணே எனது வாக்கு 2 பேருக்கும்(அணிக்கும்) இல்லை.

ஆமா நீங்க வாக்கு செலுத்த இந்தியாவுக்கு பயணபடமாட்டோம்னு தெகிரியமா இடுகைய போட்டீங்களா? உங்க் தெகிரியம் யாருக்கும் வராதுன்னே.

கபீஷ் said...

செம காமெடி :))

ராஜ நடராஜன் said...

பச்சப்புள்ள நசரேயன் கூட ISI,CIA,KGB அக்மார்க் அரசியல் பதிவு நேற்று ஏன் போட்டாருன்னு இப்பத்தானே எனக்குப் புரியுது:)


மேலே சொன்னது வருண்கிட்ட சொன்னது.அவரு கூடயெல்லாம் சேராதீங்க:)

ராஜ நடராஜன் said...

3 மணி நேர உண்ணாவிரதம்

ஈழப்படுகொலைகள் நிகழ்ந்தாலும் மத்திய அரசின் நிலையே எனது நிலைமென்ற சுயநலம்

முதுகு வலிச்சாலும் பதவி கேட்க டெல்லி பயணம்

போலிசுக்கும்,வக்கீலுக்கும் சண்டை மோத விட்டுப் பார்ப்பது

எனக்குத் தெரியாதா மாணவர்களின் பலம்!நியாயத்துக்கு குரல் கொடுத்தாலும் கல்லூரிக்கு லீவுதான்

இப்போதைய தேர்தல் நேரத்து மீனவர் சித்து விளையாட்டு

திருடிட்டு ஜெயிலுக்குப் போனாலும் குற்றவாளியில்லை என்ற போதனை

ஸ்பெக்ட்ரம்ன்னா என்னவென்றே தெரியாத குழந்தைதனம்

வேணுமின்னா 8 மணிநேரமின்னாலும் காத்துக்கிடப்பேன்.கோபம் வந்தா பிரதமரை வரவேற்க கூட போகமாட்டேன்

டாடா கைப்பட எழுதி கைப்பட கொடுத்த கடிதமே வந்து சேரவில்லை என்ற துணிச்சல்

மக்கள் நலனுக்கு முன் என் மக்கள் நலம் முன்னுரிமை

என்ற பல் இளிக்கும் அத்தனை பொதுநலத்துக்கும் சேர்த்தே ஓட்டு போடுங்க!

ராஜ நடராஜன் said...

//மீனவர்கள் பிரச்சனை தீர்க்கப்படவேண்டிய ஒன்று அதிலே எந்த மாற்று கருத்தும் இல்ல, ஆனால்
கலைஞர் இடத்திலே வேறு யாரவது இருந்தால் இவ்வளவு திட்டுக்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே.
என்னைபொறுத்த வரையிலே மற்ற தலைவர்களுக்கு கலைஞர் எவ்வளவோ மேல்.//

இப்படித்தான் நிறைய பேர் நம்பிட்டு மோசம் போகிறோம்.தமிழகத்தின் அரசியல் தகுடுதத்தங்களுக்கு துவக்கப்புள்ளியே கலைஞர்தான் என்ற புரிதல் வேண்டும்.

திட்டங்களை ஆலோசிக்கும் திறன் இருக்கிறது அவரிடம்.ஆனால் அவற்றில் கிடப்பில் போடப்படுவதே அதிகம்.சென்னை சாலைகள்,பாலங்கள் பற்றியெல்லாம் பெருமிதப்படவும்,சிங்கார சென்னையென்று குதுகலிப்பவர்கள் மணிக்கு 150 கிலோ மீட்டரில் இயல்பாக பயணம் செய்யாதவர்கள் மட்டுமே.

எண்ணித்துணிக கர்மம் என்ற தொலைநோக்கு இல்லை.

எழுத்தும்,வாய்ச்சொல் திறனும் அவரது தனிச் சொத்து என்பேன்.ஆனால் அவை மக்களிடம் பரவலாக போய்ச் சேர்ந்த காலம் போய் இப்பொழுது பாராட்டு விழாக்களுக்கு மட்டுமே பயன்படுகிறது.

உறங்குவது சுகமாகத்தான் இருக்கும்.நெம்புகோலால் மலை உருட்டுவது மட்டுமே சாதனை:)

Unknown said...

MMM.

WHAT TO SAY...

ஜோதிஜி said...

அன்பார்ந்த பெரியோர்களே, சபையோர்களே

இடம் மாறி வந்து விட்டீர்களோ என்று சந்தேகப்படும் அளவிற்கு கருத்துரையை நம்ம அமெரிக்காவின் விடிவெள்ளி எங்க பித்தளைச் சொம்பு நசர் உரையாற்றியதை பொருட்படுத்தக்கூடாது என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

யாரோ ஒருவர் தவறாக நம்ம நசரேயன் அவர்களை சூடேற்றி கொதி நீராக மாற்றியுள்ளார்கள் என்பதை நினைக்கும் போது சற்று வருத்தமாக இருக்கிறது.

ஆனாலும் பதிவுலகம் என்றால் என்னவென்றே தெரியாத இந்த பல கோடி தமிழர்கள் மத்தியில் இந்த உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதும் என்று சொல்லி நான் போடும் முல்லைப் பூ மாலையை முகம் சுழிக்காமல் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிபிபி போடுகின்றேன்.

என்னங்க இம்பூட்டு சிரியஸ்?

VJR said...

நன்றி.நன்றி.நன்றி.

எனக்கும் இதே சிந்தனையே.