Sunday, January 30, 2011

விடுமுறை கால விருந்தும், மருந்தும்

ஒரு காலத்திலேயே மருந்தை தண்ணியா குடிச்சவன், கடந்த ஆறு வருசமா மருந்துன்னு தாளிலே எழுதி அதைதான் குடிச்சிக்கிட்டு இருக்கேன்,கடந்த  வருட விடுமுறை கொண்டாட்டத்திலே (நடந்து ரெண்டு மாசம் எழுத நேரமும் இல்ல, நடந்ததும் ஞாபகம் இல்ல) எனக்கு படி அளக்கிற பகவான் விருந்தும்,மருந்தும் பரிமாறப்படும் என்று அறிவித்தார்கள், அறிவிப்பு கேட்ட நாளிலே இருந்து மருந்தின் மலரும் நினைவுகள் மனதை கவ்வி கவுத்துப் போட்டது, அவங்க சொன்ன நாளிலே இருந்து கனவிலே விதவிதமான மருந்துகள் தென்பட்டது.

விருந்து கொடுக்கிற நாளன்று காலையிலே ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கெல்லாம் அலுவலகம் செல்ல தயாராகிட்டேன்.சும்மாவே பகல்ல என் முகம் தெரியாது, ஆனா அன்றைக்கு என் முகத்திலே அப்படி ஒரு பிரகாசம், காலையிலே எழு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று,சென்றதுமுதல் சாயங்காலம் விருந்து நடைபெறும் இடத்தை குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வந்தேன்.மதிய சாப்பாடும் இறங்கலை. மாலைக்கு சேமித்து வைக்க கொஞ்சம் இடம் வேணுமுன்னு மொத்தமா விட்டு வச்சேன்.

மாலையிலே முத ஆளா அரங்கத்திற்குள் நுழைந்தேன், ரெண்டு ௬ப்பன் கொடுத்தாங்க மருந்து வாங்க, கொடுத்த அடுத்த நிமிசத்திலே ரெண்டு ௬ப்பனையும் கொடுத்து வயிறை நிறைத்தேன்.நம்ம ஊரா இருந்தா மருந்து கொடுக்கிறவருக்கு பத்து ரூபாயைக் கொடுத்து ௬ப்பன் இல்லாமலே ரெண்டை புட்டி ஆட்டயப்போடலாம், ஆனா இங்க துரைமார்கள் ரெம்ப கண்டிப்பானவங்க,விருந்து உபசரிப்பு விதிப்படி நடப்பவர்கள், என்ன செய்யலாமுன்னு யோசனையா இருந்தப்ப, நம்ம ஊரு தாய்குலங்கள் மூணு பேரைப் பார்த்தேன்.அவங்க எல்லாம் மருந்து குடிக்க மாட்டாங்க என்று நம்பிக்கையிலே நேர அவங்ககிட்ட போனேன்.

"உங்களுக்கு எல்லாம் குடிக்கிற பழக்கம் இல்லன்னு தெரியும், அதனாலே உங்ககிட்ட இருக்கிற மருந்து ௬ப்பனை கொடுக்க முடியுமா?"

"ஒ.. தாராளமா" என்று நாலு ௬ப்பைனை கொடுத்தார்கள், ஆறு இருக்கணுமே, நாலு தானே இருக்கு என்றேன், என்கிட்டே இருந்த ரெண்டை ஒரு மனவாடு அப்பவே ஆட்டையப் போட்டுவிட்டான் என்று ஒருத்தங்க  சொன்னாங்க.அந்த மனவாடு என் ௬ட வேலைபார்க்கிற மனவாடா இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே வாங்கின நாலிலே ரெண்டை காலி செய்தேன். குடிப்பவர்கள் சிரமப்படுவார்களே என்று படி அளக்கிற பகவான் நிறைய நொறுக்கு தீனிகள் ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள், அதையும் நாம இருக்கும் இடம் தேடி வந்து, எங்க ஊரு திரை அரங்கிலே முறுக்கு விற்பதைப் போல கையிலே ஏந்திக் கொண்டு வந்தார்கள். நொறுக்கு தீனியிலே கவனம் செலுத்த எனக்கு நேரம் இல்லாத காரணத்தினாலே அடுத்த ௬ப்பைனை கொடுத்து ஒரு பாட்டிலை வாங்கி கையிலே வைத்து இருந்தேன்.பின்னாலே இருந்து ஒருவர் என்னை தட்டினார், அவரு என்னோட வேலைபார்க்கிற மனவாடு என்பதை தெரிந்து கொள்ள ஒரு நிமிஷம் ஆகிப்போச்சி. அவர் என்னிடம்

"எத்தனை போய் இருக்கு?"  
    
"ஏழாவது, உனக்கு?"

"எட்டு முடிந்துவிட்டது, இனிமேல ௬ப்பன் இல்ல, ஒரு நாய் நாலு ௬ப்பனை ஆட்டயப் போட்டுட்டான், உங்க சாம்பார் பெண் ஒருவரிடம் ரெண்டு ௬ப்பனை உசார் பண்ணிட்டு,உங்க தோழிகள் யாரவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்லி வைத்து இருந்தேன், நான் ஓசி ௬ப்பனை காலி பண்ணிட்டு போகுமுன்னே எவனோ ஆட்டயப்
போட்டுட்டான்,அது நான்னு தெரியாமலே, அவன் ௬ட சேர்த்து எனக்கு நாலு திட்டு திட்டிவிட்டு ௬ப்பனுக்கு ஆட்களைத்தேடி இருவரும் போனோம், போகும் முன்னே மனவாடு, ரெண்டு பேரும் போய் நடனமேடைப்  பக்கம் போகலாம் என்று சொன்னார்.

நான் உடனே "நடனமேடைப் பக்கம் போனால், என்னால ஆடமா வரமுடியாது" என்றேன்

"நீங்க ஒரு நடனகாரன்னு சொல்லவே இல்லை"

"கல்லூரியிலே நான் போடாத ஆட்டமே இல்ல,நான்தான் எங்க கல்லூரி மைக்கல்
ஜாக்சன்"

"நீ கண்டிப்பா ஆடியே ஆகணும்,வா போகலாம்"

ரெண்டு பேரும் நடனமேடைபக்கம் போனோம்.அங்க வெள்ளையம்மாக்களும்,
வெள்ளையப்பன்களும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். சாதாரண நேரமா இருந்தா துரைமார்களை பார்த்து சிரிக்கவே மாட்டேன், பதிலுக்கு இங்கலிபிசுல பேச ஆரம்பிச்சிட்டா பதில் சொல்ல முடியாதுன்னு ஒதுங்கியே போவேன், ஆனால்
அன்றைக்கு ஆடுற எல்லோரிடமும் உலக பீட்டர் விட்டேன். அடுத்த அஞ்சு நிமிசத்திலே மனவாடு ஒரு சிலுசிலுப்பு சட்டைய கொண்டு வந்து என்னையப் போடச்சொன்னான், மாப்ள பாசமா சட்டையகொடுக்கான்னு நானும் போட்டுகிட்டேன். அடுத்த பாட்டு வரும் போது, இப்போது இந்திய மைக்கல் ஜாக்சன் நடனனமாடுகிறார் என்று அறிவிப்பு வந்தது.

நானும் அந்த முகரையப் பார்க்கணுமுன்னு திரும்பினா எல்லோரும் என்னையப் பார்த்துகிட்டு இருந்தாங்க, அப்பத்தான் எனக்கு தெரியும் நான் தான் அதுன்னு, என்ன செய்யன்னு தெரியலையே, யோசிக்க நேரமில்லை, சுத்தி இருந்த ௬ட்டம் எல்லாம் கை தட்டி ஆரவாரம் பண்ணினாங்க,மனவாடு மண்ணை கவ்வ வச்சிட்டானேன்னு,எனக்கு  தெரிஞ்ச ஆட்டத்தை போட்டேன், அதாவது கையையும் காலையும் உதைச்சி உடற்பயிற்சி செய்தேன்.என்னோட ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடமே ௬ட்டம் கலைய ஆரம்பித்து, அடுத்த நிமிசத்திலே ஒரு வெள்ளையம்மா வந்து என்னோட சிலுசிலுப்பு சட்டைய கழட்டிட்டு இனிமேல இந்த பக்கம் வந்த அடி பிச்சிருவேன்னு சொல்லிட்டாங்க, அதோட பாட்டையும் மாத்திட்டாங்க.

பக்கத்திலே இருந்த மனவாடு "நீ என்னைக்காவது ஆட்டம்னு தாள்யாவது எழுதிபார்த்து இருக்கியா, உன்னைய மைக்கல் ஜாக்சன் சொன்னதுக்கு என்னையும் மேடை பக்கம் வராதேன்னு சொல்லிட்டாங்க. சும்மா இருந்தா உண்மையச்சொல்லி இருப்பேன், மருந்து உள்ள போனதாலே மலையே புரட்டுற பலம் இருப்பதாலே, அவன்கிட்ட மேடை சரியில்லைன்னு சொன்னேன். அவன் என்கிட்டே உன் மூஞ்சியிலே என் பீச்சாங்கைய
வைக்கன்னு சென்னை பாசையிலே திட்டிட்டான்.

நடனமேடைய விட்டு வெளியே வந்த நாங்க ரெண்டு பேரும், வடக்கூர்காரட்ட ஆட்டையப் போட்ட ௬ப்பனை வைத்து, மறுபடியும் ஒரு பாட்டிலை ஏத்திட்டு மீண்டும்  நடனமேடைப் பக்கம் போனோம். அங்க நாங்க முதல்ல ௬ப்பன் வாங்கின பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள், அவங்க நடனத்தை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். என்னனு தெரியலை திடிர்ன்னு ஒரு ஞானோதயம், பெண்ணிய போராளிய மாறனுமுண்ணு மனசிலே எண்ணம் வந்து விட அவங்ககிட்ட போய் நீங்களும் நடனம் ஆடலாமேன்னு சொன்னேன். அவங்க எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க, அரைமணி நேரத்துக்கு பெண்ணுரிமை காவலர்கள் எழுதியதை சொன்னேன்,என்னோட  தொல்லை தாங்க முடியாமல் அவங்களும் மேடை ஏறி ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினாங்க.

பாட்டு முடிஞ்சதும் அவங்க கீழே இறங்க ஆரம்பிக்கும் போது, இன்னும் ஒரே ஒரு பாட்டுன்னு கெஞ்சி மறுபடியும் மேல போகவச்சேன்,இப்படியே சொல்லி சொல்லி, பத்து பாட்டு முடிஞ்சி போச்சி, களைப்பிலே மயங்கி விழுற மாதிரி ஆகிட்டாங்க, இருந்தாலும் நான் ஒரு பாட்டுன்னு சொன்னேன்.அவங்க பக்கத்திலே நின்ற மனவாடைப் பார்த்தது ஏதோ சைகையிலே சொன்னாங்க, அவன் என் கிட்ட மாப்ள என்கிட்டே  இன்னும்  ரெண்டு ஒசிக்௬ப்பன் இருக்குன்னு சொன்னதும், ஓடியே போயிட்டேன். அடுத்த ஒரு பாட்டிலையும் காலிபண்ணிட்டு வந்து பார்த்தால்,அந்த மூணு பெண்களை காணும், உடனே அறை முழுவதும் தேடிப்பார்த்தேன், கண்ணுக்கு தென்படலை. உடனே மனவாடுக்கிட்ட

"அந்த பெண்களை எங்கன்னு கேட்டேன்"

"டேய் நீ அவங்களுக்கு பண்ணின கொடுமைக்கு, உன்னையெல்லாம் நடுத்தெருவிலே நிக்க வச்சி சுடனும்"

"மகளிர் உரிமை காவலனா மாற நினச்சது தப்பா?"

"நம்ம ஊரா இருந்தா, உன்னைய மகளிர் காவல் நிலையத்துக்கு ௬ட்டிட்டு போய் இருப்பாங்க, எத்தனை பாட்டுக்கு தான் அவங்க ஆடுவாங்க,மேடைய விட்டு வெளிய போக இருந்தவங்களை கை எல்லாம் பிடிச்சி மேடையிலே மறுபடி ஏத்தி விட்ட,உன்னையெல்லாம் சங்கிலியிலே கட்டிபோட்டுதான் குடிக்க சொல்லணும்,இனிமேல பெண்களை முன்னேத்துறேன்னு நினைச்சி இந்த மாதிரி அழிச்சாட்டியம் பண்ணின, உன் தலையிலே கல்லைத்தூக்கி போட்டுருவேன்"

"இவ்வளவு நடந்ததா எனக்கு தெரியவே இல்லையே!!!!"

"நீ உன் நிலையிலே இருந்தாதானே தெரியும்"

"நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் நாளைக்கு"

"நீ உண்மையிலே நல்லது செய்யணுமுன்னு நினைச்சா, இந்த சம்பவம் நடந்ததா வெளிக்காட்டதே, குடி போதையிலே உங்க சாம்பார்வாடு என்ன செய்யுறேன்னு தெரியாம,உங்களை கொடுமைப்படுத்திட்டான்னு நான் அவங்க கிட்ட சொல்லி சமாளிக்கிறேன்"

"இப்ப என்ன செய்ய?"

"பெட்டிய கட்டிட்டு வீட்டுக்கு போகலாம் வா"

வீட்டுக்கு வந்து சேர நடுநிசி ஆகிப்போச்சி, இவ்வளவு நேரமும் வீர வசனம் பேசிகிட்டு வந்த  நான் வீட்டுக்கு வந்த உடனே வாயே திறக்கமுடியலை,பெண் உரிமை காவலனா, பெண்ணியக்க போராளியா மாற நினச்ச எனக்கு அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டிலே கஞ்சி இல்லாம போச்சி.இப்ப எல்லாம் மருந்து கனவிலே ௬ட வருவதில்லை.  


12 கருத்துக்கள்:

Chitra said...

பெண் உரிமை காவலனா, பெண்ணியக்க போராளியா மாற நினச்ச எனக்கு அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டிலே கஞ்சி இல்லாம போச்சி


....ஹா,ஹா,ஹா,ஹா.... கஞ்சி இல்லாம போனாலும், எங்களுக்கு சிரிப்புதான் வருது....

pudugaithendral said...

:))

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா... ஹா....

ஹேமா said...

இவ்ளோ நல்லவரா நசர் நீங்க.
யாரும் உங்களைப் புரிஞ்சுக்கல....
அநியாயமா ஒரு பெண்ணியக்கக் காவலனை இழந்திருக்கிறோம் !

க ரா said...

ஹா.ஹா. ஹா...

Unknown said...

ஏன் உண்மையிலேயே கஞ்சி கொடுக்கலையா அல்லது ரோடுலேயே நிப்பாட்டிடாங்களா.

நீங்க கூட கார் பின்னாடி தானா எடுக்கற வரை நவர மாட்டேன்னு சொல்லியிருக்கணும்.

ILA (a) இளா said...

குடிச்சுபுட்டு கும்மாளம் போட்டதுமில்லாம அந்தப் பச்சப் புள்ளங்களை விரட்டி வேற விட்டுருக்கீங்க..

அமுதா கிருஷ்ணா said...

மருந்தா? உடம்பு சரியில்லையா சார்??
உடம்பை பார்த்துக்கோங்க சார்.வெளியூரில் இருக்கீங்க..

Unknown said...

யோவ்! அவங்க போட்டா ஆட்டத்தை விட நீ போட்ட ஆட்டம் பெருசுதான் போல!

கயல் said...

மருந்து?????

ம்ம்.. அண்ணாச்சி ஆரோக்கியமா இருக்கதுக்கு ஏன் இப்டி அலுத்துக்கறாருண்ணு பார்த்தா...ஓகோ...

சாமி சரக்கடிச்சிட்டு சாமியாடினதா?

சரி சரி...

Unknown said...

/ஏன் உண்மையிலேயே கஞ்சி கொடுக்கலையா அல்லது ரோடுலேயே நிப்பாட்டிடாங்களா/
அப்படித்தான் இருக்கு! பாவம்! அதையெல்லாம் பப்ளிக்ல சொல்ல முடியுமா என்ன?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டிலே கஞ்சி இல்லாம போச்சி//

appadaa...post feel complete now only...:)