Friday, January 7, 2011

மரபுச்சண்டை

மருத்துவமனையின் வாசலிலே திருவோடு இல்லாமால் தெருவை நோக்கி இருந்த ஒரு பெண்ணின் மனதிலே ஏன் இந்த சோகம், உள்ளே சென்ற தனது காதலன் நிலைமை என்னாச்சின்னு நினைத்து எண்ணையிலே வேகாத வடை மாதிரி, மனதை வறுத்து எடுக்கிற அளவுக்கு சோகம் இருந்தாலும், எதையும் வெளிகாட்டி கொள்ளாமால் உதட்டுக்கு சாயம் பூசிக் கொண்டு இருந்தாள்.

"கருப்பு நிற உதட்டு சாயம் போடும் சிகப்பழகியே, அப்படியே கொஞ்சம் பல்லுக்கும் போட்டா இன்னும் நல்லா இருக்கும்"

"சகிக்கலை உன் வர்ணனை"

"இதை வர்ணன்னைனு வெளியே சொல்லாதே கல்லை கொண்டு எறியப்போறாங்க"

"அதெல்லாம் இருக்கட்டும், மருத்துவ அறிக்கை எங்கே?"

"எல்லாமே நல்லாவே இருக்கு, எனக்கு எய்ட்ஸ்,புற்றுநோய் எல்லாம் இல்லை, இதயத்தை நீ ஆட்டையப் போட்டாலும்,கிட்னி நல்லமுறையிலே இயங்குகிறது, இதை  நான் சொல்லலை, இந்த அறிக்கை சொல்லுது"

"கொடு என்கிட்டே" என்று சொல்லிவிட்டு அவன் கையிலே இருந்து அறிக்கையைப் பிடிங்கி வேகமாக புரட்டிப் பார்த்தாள்.ஒரு தடவைக்கு மேல் பல தடவை பார்த்தாள்.

"அறிக்கை படிக்கிற வேகத்தை படிக்கிறதிலே காட்டினால், நீயும் மருத்துவராகி இருக்கலாம்"

"உன்னோட மரபணு அறிக்கை சரியா, வேற யாரோட பெயரும் தவறுதலா வந்து இருக்கா?"

"சத்தியமா என்னுதுதான், சந்தேகம் இருந்தால் மருத்துவரை கேளு"

"ஒன்னு குறையுதே"

"அது உன்னோட அறிவு"

"இல்ல உன்னோட மரபணு படம் சின்ன கோணலா இருக்கு"

"வாய் கோணமா இருக்குல்ல, அப்புறம் என்ன ?"

"பிரச்சனை அது இல்ல, அந்த ஒரு மரபணுவிலேதான் முக்கியமான தகவல் இருக்கு"

"அப்படியா என்ன தகவல் இருக்கு?"

"மக்களை ஆளுகை செய்யும் திறமை, எங்க மரபிலே இருந்து வந்தவங்க தான் உலகத்திலே எண்பது சதவீதக்கு மேல நாடுகளை ஆளுறாங்க"

"மத்த இருபது சதவீதம் என்னாச்சி?"

"அந்த நாடுகள் எல்லாம் இன்னும் வறுமை கோட்டை தாண்டலை, நம்ம நாடு வல்லரசாக  காரணமே எங்க மரபு வழி வம்ச தலைவர்களாலே என்பது சமிபத்திய ஆய்வு சொல்லுது"

"இப்ப ஏன் வரலாற்றை பத்தி பாடம் எடுத்து வாத்திச்சி மாதிரி பேசுறியே ?"

"புரியாம பேசாதே, நாம ரெண்டு பெரும் கல்யாணம் செய்தால்,நமக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் இந்த மரபணு இல்லாம நாட்டை ஆள முடியாம போய்ட்டா, ஒரு சந்ததியே வீணாப்போகும், நம்ம நாடு மறுபடியும் ஏழை நாடு ஆகிடும், அப்படி ஒரு நிலைமைய நினைச்சே பார்க்க முடியலை,இந்த மருத்துவ அறிக்கை எனக்கு சாதகமா வரணுமுன்னு, தீச்சட்டி எடுத்தேன், தோப்பு கரணம் போட்டேன், கோயில் கோயிலா ஏறினேன்"

"அடியே ஆடே அறுக்கலை, அதுக்குள்ளையும் தலைக்கு பறந்த கதையா இருக்கு நீ சொல்லுறது"

"நம்ம நகர எங்க மரபணு சாதி சங்க வாலிபி தலைவி நான், ஒரு ஆளைப் பார்த்தா உடனே, அவங்க மரபணுவை படமா வரைவேன். என்னோட கணிப்புக்கு பரிசா மரபணு கண்ட மாதரசி பட்டம் கொடுத்து இருக்காங்க.என்னோட கணிப்பு உன்னோட விசயத்திலே எப்படி தப்பா போச்சினு தெரியலையே !!!"

"என்னவோ நோபல் பரிசு கிடைச்ச மாதிரி சொல்லுற,ரெம்ப காலத்துக்கு முன்னாடி சாதி, மதமுன்னு சண்டை போட்டோம், அதெல்லாம் ஓய்ந்து முடிஞ்ச இப்ப எல்லோரும் மரபு பேரை சொல்லி சண்டை போடுறோம்.சண்டை போடுறதுக்குன்னே புதுசு புதுசா கண்டு பிடிப்பீங்களோ,வம்சம் விருத்தி ஆகின காலம் போய், இப்ப மரபு வம்சம் விருத்தி அடைய முயற்சிகள் நடக்கு"

"உனக்கு வேணா இது சாதாரணமா இருக்கலாம், ஆனா என்னோட மரப விட்டு வெளியே வர முடியாது"

"இப்ப ௬ப்பாடு போடுற நீ என்னை காதலிக்கும் முன்னே மூளைய முதுகிலேயா  இருந்தியோ"

"அதான் சொன்னேனே அப்பவே"

"முடிவா நீ என்ன சொல்ல வார, நான் உங்க மரபு சாதி இல்லாததாலே நாம கல்யாணம் பண்ணமுடியாது, அதுக்கு தானே இந்த பாடு"

"ம்ம்ம்"

"எனக்கும் உன்னைய மாதிரி மரபு சாதிவெறி பிடிச்சவ வேண்டாம்"

"வெட்டிக்கலாமா"

"அதான் வெட்டி விட்டுட்டியே,போய் உங்க ஆள்கள்ள நல்ல ஆண்பிளையா பார்த்து வளைய விரி,உன்னை காதலிச்ச பாவத்தை நான் ௬வம் ஆத்திலே போய் குளிச்சி
தீர்த்துக்கிறேன்"

(அடுத்த அரை மணி நேரம் கழித்து குட்டி சுவரில்)

"மாப்ள நீ கொடுத்த யோசனை நல்லாவே வேலை செய்தது"

"நான் தான் அப்பவே சொன்னேன், அவ ஒரு மரபு சாதி வெறி பிடிச்சவ, அதை வச்சி அவளை கழட்டிவிடாலமுன்னு, மருத்துவ மனையிலே எப்படி மரபு சான்றிதழை மாத்தினே"

"அங்க வேலை செய்யுற ஒருத்தரைப் பார்த்து அவரை வச்சி மாத்திட்டேன்,ஆனாலும் மரபணு விசயத்திலே அவ கணிப்பு சரிதான், இருந்தாலும் இப்ப கிடைச்சி இருக்கிற ஆளு, இவளைவிட கொஞ்சம் நிறமா அழகா இருக்கா, அதான் பழையன கழிதலும் புதியன
புகுதலும்(தமிழ் எதுக்கெல்லாம் பயன்படுது பாருங்க) மாதிரி பழசு போய் புதுசு வந்து விட்டது..வந்துகிட்டே இருக்கு"

"எங்கடா?"

"போயிட்டு வந்து சொல்லுறேன்"


10 கருத்துக்கள்:

எல் கே said...

இப்படியும் நடக்கலாம்

பழமைபேசி said...

மரபை மீறிய செயல்!

பழமைபேசி said...

ஒஃகுவேவே ஒஃகுவேவே.. கந்தசாமிதான் டாப்பு... ஒஃகுவேவே...ஒஃகுவேவே...

அமெரிக்க மரபு மண்ணாப் போச்சி...
மண்ணாப் போச்சி...ஒஃகுவேவே...ஒஃகுவேவே...

யோவ்...வெள்ளிக்கிழமை சாயுங்கலாம் இடுகை போட்டா எப்புடிவே? குகு மட்டுந்தான் வாசிப்பாரு...

ஜோதிஜி said...

கனவில் வந்தது ரொம்பவே வித்யாசய இருக்கு.

vasu balaji said...

ங்கொய்யால சைன்ஸ் ஃபிக்‌ஷன்னாலும் தப்பு தப்பாதானா:)) மூளை முதுகுல இருந்தியோவாம்.:)))

ஹேமா said...

அடக் கடவுளே...ஒரு நாளைக்கு மாட்டிக்கிட்டு முழிக்கிறதையும் எழுதுவீங்க.நசர்...மூளையா இல்ல என்னதான் வச்சிருக்கீங்க தலைக்குள்ள!

Thenammai Lakshmanan said...

அடக் கடவுளே..:))

பா.ராஜாராம் said...

மறத்தமிழா! :-)

Anonymous said...

எனக்குப் புரிஞ்சிட்டது. இது டாக்டர் ஷாலினியின் கட்டுரைக்கு எழுதப்பட்ட எதிர்வினை. ஒரு பொண்ணு புத்திசாலித்தனமா ?? மரபணுவில சிறந்த ஆணைத் துணையாகத் தேர்ந்தேடுக்கனும்ன்னு நினைச்சதைப் புரிஞ்சுகிட்ட ஒரு புத்திசாலி ?? ஆண், நைசா எஸ்கேப் ஆகி அவளையே கழட்டி விட்டுடறான். உங்க நக்கலுக்கு அளவே இல்லையா?

சத்ரியன் said...

அடச்சாமீயளா...! ஆரம்பிங்கப்பா உங்க சண்(டி)டைய.

எப்புடியெல்லாம் பீர் போட்டூட்டு யோசிக்கிறாய்ங்க.!