Tuesday, December 21, 2010

உங்க பையன் உருப்படமாட்டான்

"என்னடா சேட்டை பண்ணினா, பள்ளிக்௬டம் சேர்ந்து ஒரு வாரத்திலே வாத்தியாரு வந்து பார்க்க சொல்லி இருக்காரு"

"அப்பா, நீ சொல்லித்தான் எனக்கே தெரியும், நான் சேட்டை பண்ணி இருக்கேன்னு" என்று சொன்னவனுக்கு பதில் சொல்லும் முன்,பள்ளி முதல்வர் அறையிலே இருந்து அவரது உதவியாளர் என்னை உள்ளே வரச்சொன்னார்.

முதல்வர் அறையிலே

"எங்களோட பள்ளி வரலாற்றிலே சேர்ந்த ஒரு வாரத்திலே இவ்வளவு புகார் யாருக்குமே கிடைத்ததில்லை, உங்க பையனோட நடவடிக்கை சரி இல்லை"

"நானும் அதைதான் கேட்கிறேன் என்னன்னு சொல்லவே இல்லை, நீங்களாவது சொல்லுங்களேன்"

"வகுப்பிலே பாடம் சொல்லி கொடுக்கும் போது கவனிக்கவே இல்லையாம், மணி அடிச்ச உடனே எல்லோரையும் தள்ளி விட்டுட்டு ஓடிப்போய்டுறான். வகுப்பிலே நோ தமிழ்னு சொன்னாலும், கேட்காம தமிழிலே பேசுறான், இவனோட சேர்ந்து எல்லா புள்ளைகளும் தமிழ்ல பேசுறாங்க, எங்க பள்ளிக் ௬டம் பாழா போகுது,எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கிறதில்லை"

"ஏன்டா இப்படி, அம்மா மாதிரியே இருக்க"

"அப்பா, ௬ட படிக்கிற பசங்க எல்லாம் மாதவரம், பெரம்பூர்ல இருந்து வாராங்க, அவங்க கிட்ட எல்லாம் தமிழ்ல பேசாம, இங்கிலாந்திலே இருந்து வந்தவங்க மாதிரி இங்கிலிபிசு பேசணுமா?"

"நியாயமாத்தானே ஐயா இருக்கு,தமிழரிடம் தமிழ் பேசுவதிலே என்ன தப்பு?"

"நீங்க ஒரு பொறுப்பான அப்பான்னு நினைச்சேன், நீங்களும் உங்க புள்ளைக்கு சொம்பு அடிக்குறீங்களே"

"இது வெண்கல சொம்பு இன்னும் நசுங்கலை,நீங்க மேல சொல்லுங்க"

"வகுப்பிலே பேச ஆரமிச்சா நிறுத்தவே முடியலை, ஓட்டை வண்டி மாதிரி ஒரே சத்தம், இவன் வாய்க்கு எல்லாம் சோர்வே வராதா?"

"அப்படியா!!!!!!!"

"ஆமா வகுப்பிலே பாடம் சொல்லி கொடுக்கிற டீச்சரை விட அதிகமா பேசுறான் உங்க பையன்"

"கேட்கவே ரெம்ப சந்தோசமா இருக்கு, கல்யாணத்துக்கு முன்னாடி, நானும் இப்படித்தான் பேசிக்கிட்டு இருந்தேன், கல்யாணம் முடிஞ்சதோட வாய மூடி விட்டு காதை திறந்தவன்தான், இன்னும் அப்படியே தான் இருக்கேன்,   எங்க என் புள்ளையும் ஊமை பூச்சியா போயிடுமோன்னு பயந்தேன், நல்ல வார்த்தை சொல்லி நீங்க என் மனசிலே பால் சொம்பு அடிச்சிட்டீங்க"

"நீங்க குறைய கேட்க வந்தீங்களா?, பாராட்ட வந்தீங்களா?"

"உங்களுக்கு குறையா தெரியுறது, எனக்கு பெருமையா இருக்கு"

"அப்படியே உங்க புள்ளைக்கு மத்திய சிறையிலே ஒரு இடம் வாங்கி வையுங்க, எதிர் காலத்திலே அங்கதான் போவான்"

"இவன் சிறை அதிகாரியானா எனக்கு பெருமைதான்,நீங்க மேல சொல்லுங்க எஜமான்"

"பாடம் சொல்லி கொடுக்கிற டீச்சர் சடை முடியப் பிடிச்சி இழுத்து இருக்கான்"

"அப்பா அது சவரி முடி, இழுத்த உடனே கையிலே வந்துருச்சு"

"வீட்டிலேயும் இப்படித்தான், இவங்க அம்மா சடை முடிய பிடிச்சி இழுப்பான், வீட்டிலே தான் இவ்வளவு தைரியசாலின்னு நினைச்சேன், என் மானத்தை காப்பாத்திட்டான்"

"என்ன சார் நீங்க, உங்க புள்ள மேல அடுக்கடுக்கா புகார்களை அள்ளி வீசிக்கிட்டு இருக்கேன், கொஞ்சம் ௬ட சுரணையே இல்லாம இருக்கீங்க"

"சொல்லுற உங்களுக்கே இல்லாத சுரணை எனக்கு எப்படி வரும்?"

"உங்க பையனாலே வகுப்பிலே இருக்கிற மற்ற பசங்களும் கெட்டுப்போக நிறைய வாய்ப்புகள் இருக்கு,எங்க பள்ளியிலே படிச்ச பசங்கள்ள பெரும்பாலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆவுஸ்திரலியா போய் இருக்காங்க"

"அமெரிக்காவிலே ஆணி பிடிங்குனாத்தான் அறிவாளிங்க, உள்ளுரிலே இருக்கிறவங்க
எல்லாம் உதாவாக்கறையா?, இந்திய மதரை ஒரு தமிழ் தாடி அவமானப்படுத்திட்டீங்க"

"எங்கள் பள்ளி உலகத்தரத்துக்கு நிகரானது, இங்க உங்க பையன் படிக்கனுமுன்னா விதி முறைகளை கடை பிடிக்கணும், பையனை விட அவங்க அப்பாவுக்கும் நிறைய விதி
முறைகள் இருக்கு அதையும் கடை பிடிக்கணும், நீங்களும் உங்க பையனும் அடிக்கிற கும்மிக்கு இங்க இடம் கிடையாது"

"ஐயா என் பையனுக்கு கல்வி கிடையாதா?"

"கிடைக்கிற இடத்திலே போய் வாங்கிக்கோங்க, போகும்முன்னே இந்த மாத குறை கட்டணத்தையும் கட்டிட்டுப் போங்க"

வேற வழி இல்லாமல் தனது மூன்று வயது மகனை தோளில் போட்டுகொண்டு, பாலர் பள்ளியின் வாயிலை அடைந்தார். வாயிலிலே பள்ளியின் விளம்பர பலகை "உங்கள் மழலையின் எதிர் காலத்தின் நுழைவு வாயில்" என்று எழுதி இருந்தது வெயில் பட்டு மின்னியதை  பார்த்து வெளியே சென்று கொண்டு இருந்தார்.



12 கருத்துக்கள்:

ராமலக்ஷ்மி said...

கற்பனை கதை மிக அருமை:))!

R. Gopi said...

பால்குடி மாறியே இருக்காத பச்சைக் குழந்தையிடம் போய் ஒழுக்கம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு,

நல்ல பதிவு நசரேயன்.

சாந்தி மாரியப்பன் said...

மிக அருமையான கதை...

வருண் said...

தள(ல): கெளப்பீட்டீங்க போங்க! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நல்லா இருக்க்கு

vasu balaji said...

/அப்பா, ௬ட படிக்கிற பசங்க எல்லாம் மாதவரம், பெரம்பூர்ல இருந்து வாராங்க, அவங்க கிட்ட எல்லாம் தமிழ்ல பேசாம/

எல்லாம் ஆப்பக்காரப் பசய்ங்க. பொளந்து கட்டுவானுவ. யார்ட்ட:))
/அப்பா அது சவாரி முடி, இழுத்த உடனே கையிலே வந்துருச்சு"/

ச்ச! ஒரு பிழை மூலமா டீச்சர் முதுகுல குதிரை ஓட்டினத குறியீடா சொல்லி பின் நவீனத்துவமாக்கிட்டீங்க எசமான். ரைட்டு.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு நசரேயன்.துண்டு, பக்கோடால்லாம் மிஸ்ஸிங்....ஆனாலும், க.மு/க.பிலே விடாம பிடிச்சுட்டீங்க!

ஹேமா said...

நசர்...உருப்படியா நல்ல விஷயம் சுருக்கமா நகச்சுவையா உங்க பாணியில எழுதியிருக்கீங்க.
உண்மையாவே ரசிச்சேன்.

ஆனாலும் இப்பிடி ஒரு அப்பா இருந்தா பிள்ளை உருப்பட்டமாதிரித்தா.
வால் வளந்திடும் !

க ரா said...

நச் கதை நசர் அண்ணாச்சி :) கலக்கிடட்டிங்க

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையான கதை...

sakthi said...

நசர் அண்ணா நகைச்சுவையோடு நல்ல பதிவு :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//"அப்பா, ௬ட படிக்கிற பசங்க எல்லாம் மாதவரம், பெரம்பூர்ல இருந்து வாராங்க, அவங்க கிட்ட எல்லாம் தமிழ்ல பேசாம, இங்கிலாந்திலே இருந்து வந்தவங்க மாதிரி இங்கிலிபிசு பேசணுமா?"//
இது பாயிண்ட்டு...

சூப்பர் கதை...கலக்கல்...