Tuesday, October 26, 2010

இலக்கிய விவரிப்புகள்

காலைப் பொழுதுகள் எப்போதுமே கண்ணுக்கு சரக்கு அடிக்காத விருந்தா இருக்கும், இரவு சரக்கு அடிச்சிட்டு பகல் முழுவதும் பனிக்கரடி மாதிரி துங்குறவங்களுக்கு இதை ரசிக்கும் பாக்கியம் மிக குறைவுதான். காலை பொழுதை கடல் கரையிலே கடலையை திண்ணுகிட்டோ, கடலை போட்டுகிட்டோ ரசிக்கனுமுன்னு ஆசைதான், இருந்தாலும் எங்க ஊரிலே கடலும் இல்லை, கடலை போட ஆளும் இல்லை.அதாவது சட்டியும் இல்லை, ஆப்பையும் இல்லை.  இருந்தாலும் அதிகாலையிலே எழுந்து சட்டையைப் போட்டுட்டு, பல்லு ௬ட விளக்காம, கையிலே ஒரு நோட்டு புத்தகத்தையும், பேனாவையும் எடுத்துகிட்டு வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற சொல்லே எனக்கு பிடிக்காமல், கிழக்காம போனேன்.   


என்னை காலையிலே எழவு வீட்டு ௬ப்பாடு போட்டு எழுப்பி விட்ட சேவல் எதுவாக இருக்கும், ஆட்டையப் போட்டு குழம்பு வச்சா எப்படி இருக்கும் என்று சமூக நெறி யோசனையோட இலக்கியப் பயணத்தை தொடர்ந்தேன். போகும் வழி எல்லாம் பச்சை நிற புற்கள் எல்லாம் புல் அடிக்காம, மப்பிலே மண்டையை கீழே போட்டு கொண்டு இருந்தது,  இப்படி எல்லாம் வித்தியாசமா வர்ணனை செய்யணுமுன்னு ஆசைதான், என்ன செய்ய ஊருக்குள்ளே மழை வந்து ஆறு வருஷம் ஆச்சி, கண்ணுக்கு எட்டின தூரம் வரை மரமே இல்லாத போது புல் எப்படி இருக்கும், நான் புல்லா நினச்ச இடம் எல்லாம் புழுதியா இருக்கு, இந்த புழுதியிலே கால் வைத்தா என் கால் அழுக்காகுமுன்னு நிக்கலை.பாவம் தரைக்கு வலிக்குமே என்று ஒத்தை காலை வைக்கவா வேண்டாமா என்று அதிதீவிர சிந்தனையிலே இருக்கும் போது, அந்த வழியா வந்த நிலத்தை உழ வந்த விவசாயி 


"தம்பி என்ன சீக்கு வந்த கோழி மாதிரி ஒத்தை காலை ஆட்டுவீங்க" என்றவரை கோபக்கனல் பார்வையை வீசிய என்னைப் பார்த்து "முகத்துக்கும் முடிக்கும் வித்தியாசம் தெரியாம  முஞ்சை மறைச்சிகிட்டு இருக்கிற அந்த கோரப் புல் முடியை என் அருவாளை வச்சி அறுக்கவா" என்று கேட்ட கேள்வியிலே காலை பின்னங்கால் பிடதிவரை தெறிக்க புழுதியிலே உழுதுகொண்டே ஓடினேன்.

பொழுதிலே புழுதியை உழ நீ 
பொழுதிலே பொழுது போகாமல் 
மனப் புழுதியை உழ நான் 
உனக்கு கோவணமும்
எனக்கு கோவமும் தான் மிச்சம் 

என்று கவுஜை காட்டாற்று வெள்ளம் போல வருகிறது என்று அவரிடம் சொல்லி இருந்தால், எனக்கு செலவில்லாமல் சமாதி கட்டி இருப்பார் என்று தெரியும். 

இந்த கவுஜை ஓடையிலே நனைந்து,நான் தினமும் அமர்ந்து கற்பனை கழுதைகளைப் பறக்க விடும் இளவட்டக் கல்லிலே காலை வைத்தேன், மேல் வாட்டை பார்த்து நாடியை பிடித்துக்கொண்டு சூரியனைப் பார்த்து முறைத்துக் கொண்டு வைட்டமின் டி யை டீ குடிக்காமல் வாங்கிகொண்டு இருந்தேன்.இந்த டீ யை அதிகமாக குடித்ததினாலோ என்னவோ மாநிறமாக இருந்த நான், எருமை நிறமாக மாறிவிட்டேன் என்ற உண்மையை பகிரங்கமா ஒத்துகொள்ள ஆசைப்படுகிறேன். 


காலை வெயில் உடம்புக்கும், காலை கற்பனை மனதுக்கும் நல்லது என்பது  தமிழ் கூறும் நல்லொழுக்கம் என்று அறிந்த நான் என் கற்பனை கழுதைகளை அச்சிலே ஏற்ற வேண்டும் என்று, என் எழுதாத பக்கங்களுக்கு வர்ணமாய் என் கற்பனை கழுதைகளை முத்தமிட வைக்க வேண்டும் என்று பேனாவை எடுத்தேன். மேல சொன்னதை வரி வரியாக எழுதி இருந்தால் கவுஜை ஆகி இருக்கும் என்ற சூத்திரம் தெரியாமலே ஒரு தாளை  கிழித்து கீழே போட்டேன்.    

அந்த வழியே வந்த நல்லவர் ஒருவர் 

"ஏலே எருவ மாட்டுப் பயலே, நீ கிழிச்சி போடுற தாளை தின்னு என் எருமைக்கு வயத்தால வந்துட்டது, இனிமேல தாளைக் கீழே போட்ட உன்னை காளைச் சாணியாக்கிடுவேன்" என்று சொன்னது  இரும்பை காய்ச்சி காதிலே ஊத்தியதுபோல இருந்தது,எனக்கே அடி வயறு கலங்கி விட்டது , இருந்தாலும் பல் விளக்காத வாயை காட்டி புன்னகை பூ வை அள்ளி வீசினேன், மூக்கை பிடித்துக் கொண்டு ஓடியே போய் விட்டார். மீண்டும் மேல் வாட்டைப் பார்த்துகொண்டு இலக்கியத்துக்கு வந்த எருவ மாட்டு சோதனையை எண்ணி உள்ளம் கொதித்தது, இந்த நிலையிலே என்னை எட்டிப் பார்த்த இன்னொரு கவுஜையைத் தீட்ட பேனாவை எடுத்தேன், எழுதுமுன் பேனா முள் ஒடிந்து, என் கற்பனையிலே இடி விழுந்து விட்டது, இதை மட்டும் நேரிலே நீங்கள் பார்த்து இருந்தால், என் விரலை மட்டுமல்ல என் கையயுமல்லவா வெட்டி இருப்பீர்கள்.
   
கற்பனை கழுதையை பறக்கவிடாமல் முள் ஒடிந்து, கால் ஒடிந்தது போல இருந்த எனக்கு என்ன செய்ய செய்வதென்றே தெரியவில்லையே, இவ்வளவு நேரமும் தற்குறித்தனமாக பேசி, உங்கள் மனதிலே கொலைவெறியை தூண்டிய நான் வழக்கம் போல்  வெறுமையாய் வீட்டுக்கே வந்தேன், வந்தவன் மணி 8.30 என்று தெரிந்து கொண்டு பல்லை விளக்கி, குளித்து முடித்து செலவும் கடை திறக்க சரியாக இருந்தது,இவ்வளவு நேரமும் இலக்கிய எண்ணத்திலே மிதந்த நான் சரக்கு வெள்ளத்திலே மிதக்கப் போகிறேன், ஒரு கை குறையுது நீங்களும் வாரியளா?
    


23 கருத்துக்கள்:

ஜோதிஜி said...

ராஜ நடராஜன் மேடைக்கு சோடா கொண்டு வரவும்.

சந்தனமுல்லை said...

me the joot...coz me no ilakiyavaathi! :-))

Paleo God said...

ஒரு கை குறையுது நீங்களும் வாரியளா?//

சைட் டிஷ் எதுவுமே இல்லியா? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\பொழுதிலே புழுதியை உழ நீ
பொழுதிலே பொழுது போகாமல்
மனப் புழுதியை உழ நான்
உனக்கு கோவணமும்
எனக்கு கோவமும் தான் மிச்சம் //
எப்படிங்க இப்படில்லாம்.. :)

R. Gopi said...

நல்லா இருக்கு

vasu balaji said...

ங்கொய்யால அங்க பழய லேப்டாப்புக்கும், செல் ஃபோனுக்குமே போட்டு தள்றாய்ங்களாம். 20$ குடுத்தா கண்டெய்னர்ல போட்டு அனுப்பிறுவாங்க தூத்துக்குடிக்கு:)). ஆமா! கவுஜல கோவணம்னு வருதே. தலைவர்கிட்ட காபிரைட் பர்மிஷன் வாங்கியாச்சா?

sakthi said...

காலைப் பொழுதுகள் எப்போதுமே கண்ணுக்கு சரக்கு அடிக்காத விருந்தா இருக்கும், இரவு சரக்கு அடிச்சிட்டு பகல் முழுவதும் பனிக்கரடி மாதிரி துங்குறவங்களுக்கு இதை ரசிக்கும் பாக்கியம் மிக குறைவுதான்.


அண்ணே இப்படி ஒரு காலை பொழுதை விவரிக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை அண்ணா உங்களைதவிர

Anonymous said...

//என்னை காலையிலே எழவு வீட்டு ௬ப்பாடு போட்டு எழுப்பி விட்ட சேவல் எதுவாக இருக்கும், ஆட்டையப் போட்டு குழம்பு வச்சா எப்படி இருக்கும் என்று சமூக நெறி யோசனையோட இலக்கியப் பயணத்தை தொடர்ந்தேன்.//

நல்ல சமூக நெறி... ..உங்கள் சமூக நெறி எங்கும் பரவட்டும் :)

//இவ்வளவு நேரமும் இலக்கிய எண்ணத்திலே மிதந்த நான் சரக்கு வெள்ளத்திலே மிதக்கப் போகிறேன், ஒரு கை குறையுது நீங்களும் வாரியளா? //

தொட்டுகிற என்ன இருக்கு...

கலகலப்ரியா said...

||முகிலன் said...
right||

repeat...

Thenammai Lakshmanan said...

பொழுதிலே புழுதியை உழ நீ
பொழுதிலே பொழுது போகாமல்
மனப் புழுதியை உழ நான்
உனக்கு கோவணமும்
எனக்கு கோவமும் தான் மிச்சம்
//

ஹாஹாஹா கவுஜ வேறயா..பேனா தற்கொலை பண்ணிக்கிருச்சா.. ஹாஹா முடியல நசர்..:))

Chitra said...

இலக்கியம்.... ஆஹா.... இலக்கியம்.... எஸ்கேப் ஆகி ஓடுது!

Anonymous said...

வேணாம் அழுதிடுவோம்ம்ம்ம்ம்ம்

Radhakrishnan said...

மிகவும் ரசித்தேன்.

குடுகுடுப்பை said...

ஒரு பீருக்கே வாசப்படில விழுந்து கெடக்கிறவனெல்லாம் 8:30 க்கு தண்ணி அடிக்கானாம், என்ன கருமம்யா இதெல்லாம்.

அரசூரான் said...

இலக்கிய விவரிப்புதான்... ஒன்பது கவிதை (பின்ன ஒவ்வொரு பத்தியும் ஒரு இலக்கிய கவிதையாயில்ல் வந்திருக்கு) எழுதியிருக்கீங்க... படித்து முடித்த பின் என்(கோ)மனம் பறக்கிறது...:)

ராஜ நடராஜன் said...

//என்னை காலையிலே எழவு வீட்டு ௬ப்பாடு போட்டு எழுப்பி விட்ட சேவல் எதுவாக இருக்கும், ஆட்டையப் போட்டு குழம்பு வச்சா எப்படி இருக்கும் என்று சமூக நெறி யோசனையோட இலக்கியப் பயணத்தை தொடர்ந்தேன். //

இன்னைக்குத்தான் கோழி பிடிக்கிற நூரா பின்லேடன் பதிவு போட்டேன்.குழம்பு எப்படின்னு அவர்கிட்ட கேட்டா உங்களுக்கு சரியா ப்தில் சொல்லிடுவார்.

அலன் வசலன்னு சவுதி அரேபியாக்காரன் வணக்கம் சொன்னதுக்கே கோழிய விட்டு கொத்த விட்டவர் நூரா பின்லேடன்.நீங்க குழம்பு வேற கேட்கிறீங்க:)

க ரா said...

சொக்கி போய் உக்காந்திருக்கேன் உங்க இலக்கிய விவரிப்புல :)

ராஜ நடராஜன் said...

//ராஜ நடராஜன் மேடைக்கு சோடா கொண்டு வரவும்.//

வேற ஆள் கிடைக்கலியா ஜோதிஜி!நானே நூரா பின்லேடன் கூட சேர்ந்து கோழி வித்துகிட்டிருக்கேன்:)

சாந்தி மாரியப்பன் said...

உள்ளேன் ஐயா..

Anonymous said...

இடுகையிலே, இலக்கியம், நுரையாகப் பொங்கி, கோப்பையின் ஓரம் வடியும் திரவமாக, உருவெடுக்கிறது! சிறப்பான இடுகைக்கு எமது வாழ்த்துகள்!

பழமைபேசி said...

அஃகஃகா!

வருண் said...

***பொழுதிலே புழுதியை உழ நீ
பொழுதிலே பொழுது போகாமல்
மனப் புழுதியை உழ நான்
உனக்கு கோவணமும்
எனக்கு கோவமும் தான் மிச்சம்**

அர்த்தமான கோபம் விலைமதிப்பில்லாதுனு சொல்லுவாக. யார் மேலே கோபம்? உங்க மனதில் புழுதியை அள்ளிக்கொட்டியவர்கள் மேலேயா?

ஏன் இப்படி மனச திறந்து வச்சுக்கிட்டு இருந்தீக? இனிமேல் கவனமா மனசை மூடி வைங்க!

பவள சங்கரி said...

ம்ம்ம்ம்ம் நடத்துங்க.....