Sunday, August 29, 2010

காதலும் வேதியியலும்

நான் ஒரு ஆங்கிலப் புலின்னு ஏறக்குறைய எல்லோருக்கும் தெரியும்,ஒரு  சில வார்த்தைகளை கேட்கும் போது அது புரிபடவே நிறைய நாள் ஆகும், அதுவும் துரைமார்களா இருந்தா என்ன சொன்னாலும் தலையை நல்லா கோயில் மாடு மாதிரி ஆட்டுவேன், அவன் திட்டினாக்௬டவும் இப்படித்தான், அவங்க பல நேரங்களிலே என்னிடம் கேட்பாங்க, நீ சந்தோசமா இருக்கியா, சோகமா இருக்கியான்னு கண்டு பிடிச்சி சொல்லுறவங்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு கொடுக்கலாமுன்னு சொல்லுவாங்க, அதுக்கும் தலையைத்தான் ஆட்டுவேன், இருந்தாலும் மனசுக்குள்ளே நினைச்சிக்குவேன் என்னைவச்சி வேலை வாங்குற உனக்கு ஆயிரம் டாலர் கொடுக்கணுமுன்னு.

இந்த நிலையிலே நான்  கேள்வி பட்ட வார்த்தை தான் வேதியியல் ,வேதியியல்  பாடத்திலே 186/200 மதிப்பெண் எடுத்து இருந்தாலும், இவங்க வேதியியல் கணக்கு என்னனு புரிபடலை, அதாவது துண்டு போட்டு துண்டு எடுத்த ரெண்டுபேரை பார்த்து உங்க வேதியல் நல்லா இருக்குன்னும், நடிக்கிற ரெண்டு பேரைப் பார்த்தும் சொல்லுறதும் தான் வேதியியல், ரெம்ப நாளாவே இதைப் பத்தி யோசித்தே தலையிலே பாதி முடி கொட்டிப் போச்சி, இனிமேலும் யோசித்தால் தலையிலே மூளை இல்லாது மாதிரி முடியே இல்லாம போய்டுமுன்னு வேதியியல் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.

ஏற்கனவே பல ஆராய்ச்சிகளை முடித்து விட்டுவிட்டு மருத்துவர் பட்டம் வாங்க துண்டு போட்டு காத்து இருக்கும் என்னுடைய கலைசேவையிலே மற்றும் ஒரு மைல் கல், கல்லுன்னு சொன்னதாலே கல்லை தூக்கி போட வேண்டாம் என்று அன்போட கேட்டுக்கொள்கிறேன். இன்னும் எம்புட்டு நாளா இந்த இப்படி கொலை வெறி ஆராய்ச்சி வருமோன்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது, இருந்தாலும் கலை, எழுத்துன்னு வரும் போது சொல்லவந்ததை சொல்லாமல் விட்டுவிட்டானே இந்த மொக்கை எழுத்தாளன் என்று வராலாறு பேசக்௬டாது என்ற நல்ணெண்ணெய் நல்லெண்ணம் தான் வேற ஒண்ணுமில்லை.

அதகாப்பட்டது காதலன் காதலியை பரக்கா வெட்டி மாதிரி பார்க்கிறதும், நாலு வருசமா சோறு தண்ணி இல்லாம இருந்தும் காதலியைப் பார்த்த உடனே ஊசிப் போன மெதுவடையை அப்படியே சாப்பிடுற மாதிரி பார்க்கிறதுமே வேதியலாமே(?),இவுக இங்கே இருந்து புருவத்தை ஆட்டுவதும், அவரு உடனே முட்டை கண்ணை திறந்து "என்னது பல வருசத்துக்கு அப்புறமா குளிச்சிட்டியா" ன்னு கேட்பதும், இவுக போடுற மொக்கையைப் பார்பவர்கள், என்ன ஒரு வேதியல்லுன்னு மெய் சிலிர்த்து, புல் அரித்து ஊரிலே இருக்கிற மாடுகளை மேய விடுவாங்களாம்.

இங்கிட்டு ஒரு கவுஜ சொல்லுறேன் கோவப்படாம கேட்கணும் சரியா

வயிற்றிலே நடக்கும் வேதியலுக்கு
உணவு காரணமாம்
மனதிலே நடக்கும் வேதியலுக்கு
காதல் காரணமாம்

ஈருயிர் ஈருடலா இருந்த ரெண்டு பேரு காதலிக்க ஆரமிச்ச உடனே இன்னொரு
உயிரை காக்கைக்கு போட்டுட்டு ஒரு உயிர் ஆகிடுவாங்களாம்.மனதாலே இணைந்த இருவர் சந்திக்கும் போது நடக்கும் வினைகளுக்கு வேதியியல் என்று பெயர்(?).வேதியியல் என்ற துறையை கொண்டு வந்தது வெள்ளைகார துரைமார்களாத்தான் இருக்கும், நாம இட்லி, தோசை என்று பல வயிற்று உணவுகளைக் கண்டு பிடித்த போது, செவி உணவுகளை கண்டு பிடித்தவர்கள் அவர்கள்.இந்த வேதியல் துறை வருவதற்கு முன்னே காதல் இல்லையா,அப்பவும் இருந்து இருக்கு, வேதியலுக்கு முன்னால் இயற்கை உரம் போட்டு வாழ்ந்த காதல், இப்ப வேதியல் வினையாலே வாழுது.மேற்கத்திய வைத்தியத்தாலே இந்தியாவிலே இருந்த சித்த வைத்தியம் எல்லாம் சிட்டுக் குருவி லேகியம் தயாரிப்பிலே தள்ளப்பட்ட நிலையிலே, இந்த காதலும் வேதியலுக்குள் தள்ளப்பட்டு இருக்கு.

இப்ப எல்லாம் இங்கிலிபிசுல பீட்டர் விடலைனா ஊரிலே வயல்ல நாத்து நடக்௬ட போகமுடியாத நிலைமையா இருக்கு. வேதியல்னு சொல்லுறதுக்கு முன்னாடி என்ன சொல்லி இருப்பாங்கன்னு யோசித்தா, பாசம், அன்னோனியம் இப்படி பல வார்த்தைகள் பயன் படுத்தி இருப்பாங்க

யாரோ ஒரு வெள்ளையப்பன் சொல்லி இருக்கணும், வேதியலுன்னு, அதையே நம்ம ஆளுங்க பிடிச்சிகிட்டு எங்கிட்டு போனாலும், வேதியல், வேதியலுன்னு சொம்பு அடிச்சிகிட்டு இருக்காங்க(?).இந்த வேதியல் பாடத்துக்கு முன்னாடி காதல் இருந்ததான்னு சந்தேகம் வருகிற அளவுக்கு வேதி வினை முத்திப் போய் இருக்கு.

காதலிலே வேதியல் மட்டுமா இருக்கு, பொருளாதாரம் இருக்கு, புவியல் இருக்கு, வரலாறு இருக்கு, அடிதடி இருக்கு, இப்படி பலதரப்பட்ட துறைகள் இருக்கும் போது ஏன் வேதியல்னு சொல்லணும், ஏன்னா துரைமார்கள் இன்னும் புதுசா இன்னும் ஒரு துறை கண்டு பிடிக்கலை. அவன் கண்டு பிடிக்காம விட்டுட்டானேன்னு,அதற்காக அவன் கண்டு பிடிச்சதெல்லாம் சரின்னு சொல்ல முடியுமா

உதரணமா,வேதியல்ல அடிப்படி விதி என்ன இடதுபக்கம் உள்ள சமன்பாடுகளின் ௬ட்டு, வலதுபக்கம் இருக்கிற சமன்பாடுகளின் ௬ட்டுக்கு சமம், ஆனா நிஜ வாழ்கையிலே எப்படி சரிவரும், இடதுபக்கமா ரெண்டை ௬ட்டினா, வலது பக்கமா மூனோ, நாலோ திறமைக்கேற்ப வரும். ஆக அடிப்படை விதியே தவறா இருக்கும் போது, வேதியலுக்கு சொம்பு அடிச்சி என்ன பிரயோசனம், இல்ல இந்த பறக்காவெட்டி வேதியியல் சோறு போடுமா? எழுதின எனக்கே வீட்டிலே ஒரு வாரமா சோறு இல்லை.

இப்படி ஒரு சிந்தனை சிற்பி கடைவைத்து கலவரம் பண்ணிக்கொண்டு இருக்கும் போது, சும்மா ஒரு வார்த்தை சொல்லிட்டு, எல்லாரும் சொம்பு அடிங்கன்னு சொல்லிட்டான் வெள்ளையப்பன், அதனாலே இனிமேல காதலையும், வேதியலையும் சம்பந்தப் படுத்தி சொம்பு அடிக்காம, அன்பு,பாசம்,பரிவு, கனிவு இவைகளை முன் நிறுத்தி சொம்பு அடிக்குமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கு நன்றி.


22 கருத்துக்கள்:

Anonymous said...

//துறைமார்களா இருந்தா என்ன//

பாத்து நசரேயன். அவங்க வேதியியல் துறையை சேர்ந்தவங்களா இருந்திடப்போறாங்க :)

//இங்கிட்டு ஒரு கவுஜ சொல்லுறேன் கோவப்படாம கேட்கணும் சரியா //

பதிவையே படிக்கிறோம். நாலு வரிக்கவிதை படிக்கறதா சங்கடம் :)

Anonymous said...

மேன்மேலும் உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள் :)

ஒங்களுக்கு கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் அவுட் ஆகுது ன்னு நிறைய தமிழ் சேனல்ல கேட்டுருக்கேன்....

உண்மையா ரெண்டு பேரு லவ் பண்ணும் போதும் இதே வார்த்தையத்தான் சொல்லுறானுக.......ரெண்டு பேரு நடிக்கும்போதும்(நடிக்கிறது மாதிரி) இதே வார்த்தையத்தான் சொல்லுறானுக..... ரெண்டுக்கும் எதாவது வித்தியாசம்(இல்ல உள்குத்து) இருக்கான்னு ஆராச்சி பண்ணி சொல்ல முடியுமா அண்ணா...

a said...

//
வயிற்றிலே நடக்கும் வேதியலுக்கு
உணவு காரணமாம்
மனதிலே நடக்கும் வேதியலுக்கு
காதல் காரணமாம்
//
தள : எங்கேருந்து புடிக்கிரீங்க..

Chitra said...

(Chemistry)2xy + (love)2xy = Nasareyan blog post

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ, அருமையான இடுகை நல்ல சிந்தனை, இது போல நிறைய எழுதுங்க :-)

அப்புறம் அது என்னப்பா இது நடுநடுவுல வேதியல், கெமிஸ்ட்ரி அப்படின்னு எதோ புரியாத வார்த்தை எல்லாம் வருது?

அது சரி //ஆங்கிலப் புலின்னு// சொன்னீங்க ஆனா .....புரிஞ்சு இருக்குமே ..அதேதான் அத சொல்லவேவேவே இல்ல?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\உயிரை காக்கைக்கு போட்டுட்டு ஒரு உயிர் ஆகிடுவாங்களாம்.// :)

\\இந்த வேதியல் பாடத்துக்கு முன்னாடி காதல் இருந்ததான்னு சந்தேகம் வருகிற அளவுக்கு வேதி வினை முத்திப் போய் இருக்கு.// :)
அட்டகாசம்ங்க நசரேயன்..

உங்களுக்கும் நகைச்சுவைக்கும் நல்ல கெமிஸ்ட்ரி
அதே போல உங்களுக்கும் ப்ளாகுக்கும் கூட நல்ல கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகுது.. இது என் ஜட்ஜ்மெண்ட்..

நீங்க வேதியியல் ல இவ்ளோ மார்க்கா.. ஆ.?

vasu balaji said...

//இவைகளை முன் நிறுத்தி சொம்பு அடிக்குமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கு நன்றி.//

வாய்ப்பளிச்சவன் மட்டும் சிக்கினானோ சின்னாபின்னம்தான்.

/நான் ஒரு ஆங்கிலப் புலி/

அய்ங்! அப்பத தமிளு?

Yoga.fr said...

எல்லாத்துக்கும் கெமிஸ்ட்ரி தான் காரணம்!ஒங்களுக்கு அது கொஞ்சம் ஏறுக்கு மாறா கலந்திடிச்சுன்னு நெனைக்கிறேன்!

sakthi said...

::))))

கலகலப்ரியா said...

||வயிற்றிலே நடக்கும் வேதியலுக்கு
உணவு காரணமாம்
மனதிலே நடக்கும் வேதியலுக்கு
காதல் காரணமாம் ||

முடியல..

கலகலப்ரியா said...

||வயிற்றிலே நடக்கும் வேதியலுக்கு
உணவு காரணமாம்
மனதிலே நடக்கும் வேதியலுக்கு
காதல் காரணமாம் ||

முடியல..

நட்புடன் ஜமால் said...

ட்ரெயின்ல யாரும் வடக்கத்தி வந்திச்சா

பதிவுல கெமிஸ் ஜாஸ்த்தியா இருக்கே

க ரா said...

வானம்பாடிகள் said...

//இவைகளை முன் நிறுத்தி சொம்பு அடிக்குமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கு நன்றி.//

வாய்ப்பளிச்சவன் மட்டும் சிக்கினானோ சின்னாபின்னம்தான்.

/நான் ஒரு ஆங்கிலப் புலி/

அய்ங்! அப்பத தமிளு?
---
ஹா ஹா ஹா...

கார்த்திகைப் பாண்டியன் said...

அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ அய்யோ

ஹேமா said...

நசர்....துறையா இல்ல துரையா !கருத்தே மாறிக்கிடக்கு.

//இனிமேல காதலையும், வேதியலையும் சம்பந்தப் படுத்தி சொம்பு அடிக்காம,அன்பு,பாசம்,பரிவு, கனிவு இவைகளை முன் நிறுத்தி சொம்பு அடிக்குமாறு தாழ்மையுடம் கேட்டுக்கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கு நன்றி.//

அட...அட...என்னா ஒரு அறிவுரை !

'பரிவை' சே.குமார் said...

ஆமா அண்ணே... அதுவும் சில நடன நிகழ்ச்சிகள்ல நடுவர்ங்கிற பேர்ல கெமிஸ்ட்ரி சரியில்லைன்னு அலம்புற அலம்பல் இருக்கே தாங்க முடியலை.

இப்ப ஒரு அம்மணி சங்கதி... சங்கதின்னு சொல்லுது... அதையும் ஆராய்ச்சி செய்யுங்களேன்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா.. உங்க கோவம் வேதியல் மேலயா இல்ல அது இருக்கராவங்க மேலயா... ஹா ஹா ஹா...
(தாழ்மையான வேண்டுகோள் - ஒரே ஒரு பதிவாச்சும் கற்பனை / புனைவுனு போடாம உண்மைய சொல்லுங்களேன்...ஹா ஹா ஹா)

பவள சங்கரி said...

ஓ, 186/200 மார்க்கா, அடடா, சூப்பர்ப்பா........என்னா தத்துவம்.... அருமை அருமை........

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\சே.குமார் said...

ஆமா அண்ணே...

இப்ப ஒரு அம்மணி சங்கதி... சங்கதின்னு சொல்லுது... அதையும் ஆராய்ச்சி செய்யுங்களேன்.//

நோட் செய்யுங்கப்பா அடுத்த வாய்ப்பளிக்கிறாரு இவரு.. :)))

Vijiskitchencreations said...

ungal research thodarattum.
romba nalla ezutharinga.
en machinel tamil font illai, thavaraka ninaikathinga. company machine.

'பரிவை' சே.குமார் said...

//நோட் செய்யுங்கப்பா அடுத்த வாய்ப்பளிக்கிறாரு இவரு.. :)))//

முத்துலெட்சுமி அக்கா...

அந்த வாய்ப்பை நீங்களே எடுத்துக்கோங்க...

நல்லா டிவி பாருங்க...

பதிவு எழுதணுமில்ல... ஹா.... ஹா... ஹாஹா

பா.ராஜாராம் said...

பின்னூட்டங்கள் ஜாலி.

மற்றபடி, உங்க பிராண்ட் இல்ல பாஸ்.