Thursday, August 26, 2010

செவத்தியார்

நாலு லட்சத்தை நாலு நொடியிலே தயார் பண்ணுறவங்களும் இருக்காங்க, அதே நாலு லட்சத்தை ஆயுள் முழுவதும் சம்பாதிச்சா ௬ட அடைய முடியாத மக்களும் இருக்காங்க, இப்படி பலதரப்பட்ட மக்கள் நிறைந்த உலகத்திலே செவத்தியாருக்கும் ஒரு இடம் இருக்கு, கடந்த ஆறு மாத காலமா செலவு செய்த கணக்கை எல்லாம் தவிர இன்னும் நாலு லட்சத்துக்கு என்ன செய்ய என்ற சிந்தனையோட வீட்டுக்கு போய் கொண்டு இருக்கிறார்.

வழக்கம் போல இன்றாவது நல்ல சேதி சொல்வார் என்ற நம்பிக்கையிலே அவர் முகத்தைப் பார்த்ததும் புரிந்து கொண்ட அவர் மனைவி கேள்விகள் ஏதும் கேட்காத நிலையிலே கலங்கிய கண்களோட அடுப்பறைக்குள் சென்று விட்டாள்.அந்த கிராமத்திலே கொஞ்சம் சிகப்பா இருந்தாலே அவரோட உண்மையான பேரை விட்டுட்டு செவத்தியான்னு ௬ப்பிட ஆரம்பித்தார்கள்,திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் வாரிசு இல்லையேன்னு கோயில், குளமாய் ஏறி சலித்து விட்டு, குழந்தையை எல்லாம் மறந்து வழக்கமான வயல் வேலைகளில் நாட்டம் செலுத்தினார். விளைச்சலுக்கு செய்த செலவு போக, பொங்குகிற அளவுக்கு மிச்சம் இல்லைனாலும் , எடுக்கிற அளவுக்கு வந்த மிச்சத்தை வைத்து இருவரும் மகிழ்ச்சியாய் இருந்தனர்.மகிழ்ச்சி இரட்டிப்பு மகிழ்ச்சியானது கொஞ்ச காலத்திலேயே செவத்தியார் அப்பா ஆகிவிட்டார்.

அவருக்கு பையன் பிறந்ததை விட ஊருக்குள்ளே உன் பெண்சாதி இன்னும் சும்மா தான் இருக்காளோ என்று சமயம் கிடைக்கும் போது கேட்கப்படும் நச்சு கேள்விகளிலே இருந்து விடுதலை கிடைத்ததே மிகப்பெரிய சந்தோசம்.வாழ்கையிலே சந்தோசம் நிலையாகிட்ட வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ என்னவோ, அவரின் சந்தோசமும் நீண்ட நாள் நிலைக்கவில்லை,அவரோட பையனுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுதுன்னு மருத்துவரிடம் போனால், இதயத்திலே கோளாறு என்று சொன்னார்கள் பல மாதங்கள் வைத்தியம் பார்த்த பின்னால், அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலே பக்கத்து ஊரிலே இருந்த பெரிய மருத்துமனையிலே பையனை காட்டினர்.

பையனை ஒவ்வொரு முறையும் அழைத்து சென்று மருத்துவரிடம் காட்டிவிட்டு வர ஆனா செலவுகளிலே இருந்த நிலத்திலே பாதிக்கு மேல பறிபோனது, இருந்த வீட்டையும் விற்று வயலில் ஓரம் குடிசையைப் போட்டு தங்கி இருந்தார். போன மாதத்திலே செவத்தியாரின் பையன் நிலைமை மிக மோசமானதும், பக்கத்து ஊர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலே நெல்லை சென்று பெரிய மருத்துவ மனையிலே சேர்த்தார்கள், அவர்கள் பையனை ஆய்வு செய்ததிலே இதயத்திலே ஓட்டை இருக்கிறது எனவும் அதை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி நாலு லட்சம் வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், அது விசயமாக பலரை பார்த்தும், கடன் கேட்டும் பணம் சேராத நிலையிலே,வேறு வழி இல்லாமல் மருத்துவமனை மருத்துவரை சந்திக்க போய் விட்டு வந்தார்.

மருத்துவரிடம் தான் மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலம் அளிக்கவில்லை,நீங்க தான் என் பையனை எப்படியும் காப்பாத்தணும் என்று சொல்லும் போது அவர் நெஞ்சம் மட்டுமல்ல, கண்ணும் கலங்கி விட்டது, அவரு சில இடங்களை சொல்லி அங்கே உதவி கேட்க சொல்லியும், அதிலே பலன் ஒன்றும் இல்லை, அடுத்த வாரம் பையனுக்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வில்லை என்றால் நிலைமை கையை விட்டுப் போய்விடும் என்று என்று திட்டமாக
சொல்லிவிட அவர் வழி தெரியாது வீட்டுக்கு வந்து இருக்கிறார்.செவத்தியார் மனைவியும் பிள்ளை வரம் வேண்டி கோயில், குளம் போனதை விட பல மடங்கு அதிகமாகவே கோவில்களை சுத்தி இருப்பார்.

இந்த ஒரு வார காலமாக முட்டி மோதி அலைந்து திரிந்து புரட்டிய ஐம்பது ஆயிரம் ருபாயை எடுத்துக் கொண்டு பையனையும் அழைத்து கொண்டு நெல்லை சென்றார், மனைவியை அழைத்து சென்றால் அழுது ஆர்பாட்டம் பண்ணுவாள் என்று நினைத்து அவளை விட்டுவிட்டு சென்றார். மகனை அனுப்பி வைத்து விட்டு வாசலிலே நின்றவள், நின்று கொண்டே இருந்தாள், போனவர்கள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையிலே, அவளின் நம்பிக்கை வீண் போக வில்லை அடுத்த நாள் காலையிலே செவத்தியார் என்றும் இல்லாத சிவந்த முகத்திலே, சிரித்த புன்னகையோடு மகனோடு திரும்பி வந்தார்.

வந்தவர் வரும்போதே வடிவு உன் நம்பிக்கை வீண் போகலை, நீ கும்பிட்ட சாமி கை விடலை, பையனுக்கு ஒண்ணுமே இல்லைன்னு மருத்துவர் சொல்லிட்டாரு, அவனுக்கு இருந்த கோளாறு எல்லாம் சரியாகி விட்டதாம் என்று விடாம பேசி முடிக்கும் வடிவு பையனை ௬ப்பிட்டு கோவிலுக்கே போய்ட்டா. கதை இப்படியே முடிந்து இருந்தால் மனசு எவ்வளவு நிம்மதியா இருக்கும், ஆனா கதை வேறு வாழ்க்கை வேறு என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. மனைவி சென்றதும் உள்ளே சென்று கண் அயர சென்ற செவத்தியார் நேத்து நடந்ததை நினைக்காம இருக்க முடியலை

"மருத்துவர் ஐயா, என் கிட்ட ஐம்பது ஆயிரம் இருக்கு, இதை வச்சி எப்படியாது பையன் உடம்பை சரி பண்ணுங்க"

"நான் உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன், நாங்க என்ன வட்டிகடையா நடத்துறோம், தவணை முறையிலே சிகிச்சை கொடுக்க, நான் விலாசம் கொடுத்த கருணை இல்லங்களிலே எல்லாம் விசாரித்தீங்களா?"

"ஐயா அங்கே எல்லாம் கருணை கிடைக்காம தான், இங்கே வந்து நிக்கிறேன், உங்க காலிலே வேண்டுமுனாலும் விழுறேன், என் புள்ளைய காப்பாத்துங்க"

"என்னால ஒன்னும் செய்ய முடியாது"

"கருணை இல்லத்துக்கு அனுப்புற நீங்க கருணை பண்ண மாட்டீங்களா,எவன் எப்படி இருந்தாலும்  நோயாளிகளோட உடம்பை குணப்படுத்த யாரவது செலவை ஏற்கனுமுன்னு
கருணை எதிர் பார்க்கிற நீங்க, ஒரு தடவை கருணை செய்ய மாட்டீங்களா?"

"உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் உள்ளே விட்டதே தப்பு"

"கும்பிடுற சாமியை விட உங்களை  உசத்தியா நினைச்சது எங்க தப்புதான்,பெத்த புள்ளையவே ஏன் பிறந்தான்னு நினைக்க வச்ச உங்களை தேடி வந்தது தப்புதான், இவன் புறந்த நாள்ல இருந்து இவங்க அம்மா முகத்திலே சிரிப்பு செத்துப் போச்சி,அவ முகத்திலே ஒரு நாளாவது சந்தோசத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சது என் தப்புதான்,போதுமையா உங்க மருத்தும், மாத்திரையும் என் புள்ளைய நான் ஊருக்கே ௬ட்டிட்டு போய்டுறேன்"

நடந்ததை நினைத்து அயர்ந்தவரை வடிவு தட்டி எழுப்பினாள், எழுந்தவர் உடனே "என்னாச்சி வடிவு.. என்னாச்சி" என்று பதட்டத்துடன் கேட்க

"சீக்கிரமா வெளியே வாங்களேன்"

ஓட்டமாக ஓடி வெளியே வந்து பார்த்தால், செவத்தியார் மகன் வீட்டின் வெளியே இருந்த கோழி குஞ்சுகளை பிஞ்சி கைகளைக் கொண்டு விரட்டு கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தான், அவனின் சிரிப்பைகண்ட வடிவுவின் சிரிப்பு வானளாவில் இருந்தது, அவளின் புன்னகையிலே தெய்வத்தைக் கண்ட திருப்தி செவத்தியாருக்கு, துக்கத்தின் இருள் நீங்கி, மகிழ்ச்சியின் காலை பிறந்தாலும் மீண்டும் இரவு வரும் என்றாலும் அவர்கள் சந்தோஷ ஒளி நிலைக்கட்டும் என்ற மனநிலையோடு நாமும் செல்வோம்.


15 கருத்துக்கள்:

சிங்கக்குட்டி said...

1 - கதையாக படிக்கும் போது அருமை, ஆனால் அடுத்து இதுதான் என்று யூகிக்க முடிகிறது.

2 - இது செண்டிமெண்ட் கதை என்பதால், உங்கள் வழக்கமான இடுகைக்கான நக்கல் மிஸ்ஸிங்.

3 - மருத்துவரும் மனிதரே, நமக்கு உயிர் என்பது அவருக்கு தொழில், அதனால் அவர் தகுதிக்கு மீறி தன் தொழிலை தானமாக செய்வது என்பது தொழில் தர்மம் ஆகாது :-).

நன்றி!

நசரேயன் said...

அடுத்து நக்கல் இடுகைதான் ..

//தகுதிக்கு மீறி தன் தொழிலை தானமாக செய்வது என்பது தொழில் தர்மம் ஆகாது//

குறிச்சி வச்சிக்கிறேன்...

a said...

என்னா தள.......... திடீர்ன்ணு பீலிங்க்ஸ் பக்கம்?????

Unknown said...

செண்டிமெண்ட் பிழிஞ்சிருச்சி.. முதல் முத்தம் என்னாச்சி?

// மருத்துவரும் மனிதரே, நமக்கு உயிர் என்பது அவருக்கு தொழில், அதனால் அவர் தகுதிக்கு மீறி தன் தொழிலை தானமாக செய்வது என்பது தொழில் தர்மம் ஆகாது//

தொழில்தான் செய்யறோம்னு சொல்லிட்டுப் போகலாமே? எதாவது பிரச்சனைன்ன உடனே நாங்க செய்யறது சேவை. கடவுளுக்கு அடுத்தது நாங்கதாங்கிற ரேஞ்சுக்கு ஏன் பேசனும்?

அடுத்து, ஆபரேஷனுக்கு 4 லட்ச ரூபாய்க்கு என்ன செலவாகும்? அதில் எத்தனை சதவீதம் டாக்டரின் ஃபீஸ், எத்தனை சதவீதம் ஆபரேஷன் தியேட்டர், மருத்துவமனை பெட் வாடகை? எத்தனை சதவீதம் ஆப்பரேஷனுக்குத் தேவையான பொருட்கள் ?

ஐம்பதாயிரத்துக்குள்ள அந்த ஆன்சிலரி எக்ஸ்பென்ஸஸ் முடியாதா?

Chitra said...

"கும்பிடுற சாமியை விட உங்களை உசத்தியா நினைச்சது எங்க தப்புதான்,பெத்த புள்ளையவே ஏன் பிறந்தான்னு நினைக்க வச்ச உங்களை தேடி வந்தது தப்புதான், இவன் புறந்த நாள்ல இருந்து இவங்க அம்மா முகத்திலே சிரிப்பு செத்துப் போச்சி,அவ முகத்திலே ஒரு நாளாவது சந்தோசத்தைப் பார்க்கணுமுன்னு நினைச்சது என் தப்புதான்,போதுமையா உங்க மருத்தும், மாத்திரையும் என் புள்ளைய நான் ஊருக்கே ௬ட்டிட்டு போய்டுறேன்"


...... ஹலோ, இந்த செண்டிமெண்ட் கேள்வியெல்லாம் உங்கள் இடுகையிலா? சாரி..... அட்ரஸ் மாறி வந்துட்டேன் என்று நினைக்கிறேன்....

sakthi said...

வாழ்கையிலே சந்தோசம் நிலையாகிட்ட வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமோ என்னவோ

அண்ணா என்னாச்சு ஒரே தத்துவம்

vasu balaji said...

தளராதீங்க தளபதி. நல்லாத்தான் இருக்கு.

@@முகிலன்..சகவாச தோஷம்:)) ஒரே கேள்விமயம்

Mahi_Granny said...

பிடிச்சிருக்கு. esp . முடிவு . நல்லா இருக்கட்டும்

Vidhoosh said...

நல்லாருக்கு.. செண்டிமெண்டா இருந்தாலும்...
///நீ கும்பிட்ட சாமி கை விடலை, பையனுக்கு ஒண்ணுமே இல்லைன்னு மருத்துவர் சொல்லிட்டாரு, அவனுக்கு இருந்த கோளாறு எல்லாம் சரியாகி விட்டதாம்////
பொய் சொல்லிட்டாரோ?

'பரிவை' சே.குமார் said...

நல்லாத்தான் இருக்கு.

நட்புடன் ஜமால் said...

கண்கள் கலங்க வச்சிட்டீங்க

சாந்தி மாரியப்பன் said...

நல்லாத்தான் இருக்கு..

பவள சங்கரி said...

கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஹேமா said...

நசர்....எஅதாவது
விரதமிருக்கீங்களா.
ஓ...ரமழான் விரதமா !

Anonymous said...

செண்டிமெண்த் நல்லாத்தான் இருக்கு. தளபதி அடுத்த நக்கலுக்கு வெயிட்டிங்க்