Wednesday, June 16, 2010

ராவணன்



காத்து கொண்டு இருந்து கை கடிகாரத்தைப் பார்த்து பல்லை கடித்து கொண்டு இருந்த நேரம், எனக்கு பின்னால் இருந்து 

"மன்னிச்சிகோடா செல்லம், கொஞ்சம் தாமதமாகி விட்டது"

அவள் என்னை செல்லம் என்று சொல்லும் போது இன்னும் கொஞ்ச மாட்டாளா என்று ஆசை மனதிலே இருந்தாலும்

"எனக்கு கொஞ்சம் நெருடலா இருக்கு, நீங்க இப்படி சொல்லும் போது" ன்னு சொன்னேன் 

"மரியாதையா பேசினா எனக்கு பிடிக்காது,எத்தனை தடவை சொல்லி இருக்கேன், என்னை நீங்கன்னு சொல்லக் ௬டாதுன்னு" 

"உங்களை மாதிரி அழகானா பெண்ணோட வெளியே சுத்துறது காதல்னு யாரும் தப்பா 
நினைச்சிட்டா?"

"காதலியா இருந்தாத்தான் கூட சுத்துவீங்களோ?"

பல கோணங்களிலே அழகியா இருந்தாலும், சில கோணங்களிலே கொஞ்சம் சப்பை பிகரு தான், ஆனா நேராக பார்த்தா தேவதை மாதிரி இருப்பா, நான் அவளை சந்தித்ததே அலுவலக உயர் தூக்கியிலே, ௬ட்டம் நிறைந்த உயர் தூக்கியிலே ஒரு நாள் கதவு அடைபடும் முன்னால் தனது வெள்ளரி கைகளை கொண்டு தடுக்க முயன்ற அவளின் கரங்களின் அழகுக்கு களங்கம் வந்து விடக்௬டாது என்பதற்காக மீண்டும் கதவை திறந்து விட்ட என்னைப் பார்த்து சொன்ன முதல் நன்றியே எங்கள் நட்பின் ஆரம்பம்.     

"சரி இனிமேல சொல்லலை"

"நாம எங்கே போறோம்?"

"என்னோட வீட்டிலே ஒரு சின்ன வேலை, முடிச்சிட்டு படத்துக்கு போறோம்"

"சரி"

சொல்லிவிட்டு தலையை ஆட்டினேன், அடுத்த அரை மணி நேரத்திலே அவளோட வீட்டின் முன்னே இருந்தோம், உள்ளே போக தயக்கமாக இருந்த என்னை கையைப் பிடித்து அழைத்து 
சென்றாள்.இவ்வளவு பெற வீட்டிலே அவளைத்தவிர யாருமே இல்லை என்பது எனக்கு ஆச்சரியாமா இருந்தது. எனக்கு குடிக்க பழரசம் கொடுத்து விட்டு உள்ளே சென்றாள்.

கால் மணி நேரம் கழித்து உடையை மாற்றி விட்டு வந்தாள், என்னைப் பார்த்து சிறிது ஆச்சரியப் பட்டதைப் போல 

"நீ இன்னும் ஜீஸ் குடிக்கலையா?"

"இல்லை, கையிலே எடுத்து குடிக்கும் முன்னே கீழே விழுந்து விட்டது" என்று சொல்லி முடிக்கும் முன் அழைப்பு மணியும், அலைபேசி மணியும் ஒரே நேரத்திலே அடித்தது.

அலைபேசியை எடுத்த உடனே "இன்னும் தயார் இல்லை கொஞ்ச நேரம் ஆகும்"

அவள் பேசி கொண்டு இருக்கும் போதே கதைவை திறந்து ஒருவர் உள்ளே வந்தார், எனக்கு அவரைப் பார்த்தும் என்ன சொல்லன்னு தெரியலை, ஒரு புன்னகையோட முடித்தேன்.அவள்  அலைபேசியை அனைத்து விட்டு என்னிடம் 

"இவரு என் வீட்டுக்கு எதிர் வீடு,என்ன வேண்டும் சாம்?" 

"இல்லை சும்மாதான் வந்தேன், படிக்க புத்தகம் ஏதும் இருக்குமான்னு"

"நான் அவசரமா வெளியே போயிட்டு இருக்கேன், நீ நாளைக்கு வா" என சொல்லி விட்டு, அவனை வாசல் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தாள்.

"போகும் முன் இவரு தான் நீ சொன்ன அவரா?"

"ஹும்" என்று சொல்லி கிட்டு கதவை சாத்தினாள்

அவள் வருமுன் கீழே விழுந்த பாட்டிலை எடுத்து அதிலே ஜூஸ் ஊத்தி வைத்து கொண்டு இருந்தேன்,அதை பார்த்த என்னிடம் 

"சீக்கிரம் குடி போகலாம்"

"இது எனக்கு இல்லை உனக்குத்தான்" 

"எனக்கு வேண்டாம்"

"இதிலே என்ன கலந்து இருக்கு?"

"என்ன சொல்லுற!!!!"

"நீதான் சொல்லணும்?"

"நீ சொல்லுறதைப் பார்த்தா நான் எதோ உன்னை மயக்க இதிலே மயக்க மருந்து கலக்கி இருக்கிற மாதிரி சந்தேகப் படுற?"

"ஆமா, நீ என்னை மயக்கத்தான் வந்து இருக்க, நானும் உன்னை பல முறை கவனிச்சி இருக்கேன், உன்னோட நடவடிக்கைகள் எல்லாம் சரி இல்லை,அலுவலத்திலே உயர் தூக்கியிலே நுழைகிற நீ, திரும்பி எப்படி போறன்னு தெரியலை,இப்பக்௬ட தொலைபேசியிலே தயார் இல்லைன்னு யாரிடமோ என்னைப் பற்றிதானே பேசின?"

"ஹும்.. உடம்பிலே கொழுப்பு அதிகம் ஆகிடுச்சின்னு, படி வழியா இறங்குவேன்,வந்தும் 
உன்னைப் பார்த்து விட்டு தானே போறேன்,அலைபேசி அலுவலக வேலை விசயமா"

"அதையே தான் நானும் கேட்கிறேன், உன் ௬ட வேலை பார்க்கிற, என்னை விட அழகான பையங்க இருக்கும் போது என்னை மட்டும் ஏன் பார்க்கணும்,பேசணும்"

"நீ இருக்கிற மூளைக்கு அதிகமா யோசிக்கிற?"

"உன்னை மாதிரி மேனா மினிக்கிக்கு எல்லாம், உயர் தூக்கியிலே வேலை செய்யும் என்னைப் எப்படி பிடிக்குது?, உண்மையை சொல்லு, நீ கிட்னி திருடுற கும்பலா, இல்லை ஆள் கடத்தல் கும்பலா, உன் ௬ட்டாளி இப்ப வந்தவன் எங்கே நிற்கிறான்?"

என்று சொல்லி முடிக்கும் போது, அவள் வெளியே அனுப்பிய ஆள் மீண்டும் கதவை திறந்து உள்ளே வந்தான்.

"என்னாச்சி பூரணி"

"பூட்டின கதவை எப்படி இவன் திறந்து வந்தான்?"

"நீங்க ரெண்டு பேரும் பேசுற சத்தம் கேட்டு வந்தேன்"

"சத்தம் கேட்டு வந்தியா.. இல்லை சத்தம் இல்லாம முடிக்க வந்தியா?"

"சாம், இவனுக்கு என்னவோ ஆகிப் போச்சி.. நீ போன உடனே சந்தேகப் பட ஆரம்பித்தவன், இன்னும் முடிக்கலை"

"ஆமா, உனக்கு இன்னும் என் கதையை முடிக்கலையேன்னு கவலை" 

"போதுமட சாமி உன் சகவாசம், நீ இனிமேல என் முகத்திலே முழிக்காதே, உன்னை மாதிரி நாயை எல்லாம் ௬ட்டிட்டு வந்து நடு வீட்டிலே உட்கார வைத்த என்னை என் செருப்பை கழட்டியே அடிக்கணும்"  

"நீயும், இந்த சாம்பராணி சாமும் செருப்பை வைச்சி மாறி மாறி அடிங்க, நான் போறேன்" என்று சொல்லி விட்டு அவள் வீட்டை விட்டு வெளியேறினேன்.

எங்க போகன்னே தெரியலை, ஆனா போகும் போது மனசிலே சொன்னது யாருடைய காதிலே விழுந்து இருக்க வாய்ப்பு இல்லை. 

"என்னை மன்னிச்சிடு பூரணி, உன்னை மாதிரி அழகும், வசதியும் உள்ள பெண், என்னை மாதிரி ௬லிகளிடம் காதல் என்ற மாயையிலே விழுந்து, உன்னோட வாழ்க்கை பாழாக விரும்பலை, உன்னை காயப் படுத்தாம கழட்டி விட என் அறிவுக்கு எதுவுமே எட்டலை, இன்றைக்கு உன் மனசு புண்பட்டு இருந்தாலும், உன் எதிர் காலம் நல்லா இருக்கும்,உனக்கு காதல் தகுதி இல்லாம வரலாம், ஆனா அதை ஏத்துக்கிற அளவுக்கு நான் இன்னும் தகுதி பெறலை"



22 கருத்துக்கள்:

Chitra said...

"என்னை மன்னிச்சிடு பூரணி, உன்னை மாதிரி அழகும், வசதியும் உள்ள பெண், என்னை மாதிரி ௬லிகளிடம் காதல் என்ற மாயையிலே விழுந்து, உன்னோட வாழ்க்கை பாழாக விரும்பலை, உன்னை காயப் படுத்தாம கழட்டி விட என் அறிவுக்கு எதுவுமே எட்டலை, இன்றைக்கு உன் மனசு புண்பட்டு இருந்தாலும், உன் எதிர் காலம் நல்லா இருக்கும்,உனக்கு காதல் தகுதி இல்லாம வரலாம், ஆனா அதை ஏத்துக்கிற அளவுக்கு நான் இன்னும் தகுதி பெறலை"


..... ஆஹா..... தியாக செம்மல்! :-)

goma said...

கதையில் இப்படி எல்லாம் ஹேர்பின் பெண்டு வருமா....எழுதிப் பார்க்கணும்..

உயர்தூக்கி நிஜமாகவே அவனை உயர்தூக்கி விட்டது

ஹேமா said...

இருக்கிற மூளைக்கு அதிகமா யோசிக்கிறீங்க நசர் !

உயர் தூக்கி....என்ன ஒரு அழகு தமிழ்ச் சொல் !

அலைபேசியா தொலைபேசியா சரியானது ?

நசரேயன் said...

//..... ஆஹா..... தியாக செம்மல்! :-)//


பாராட்டு விழா வேணும்

//
கதையில் இப்படி எல்லாம் ஹேர்பின் பெண்டு வருமா...
//

அப்படியா !!

//
அலைபேசியா தொலைபேசியா சரியானது ?
//

அலைந்து கொண்டே பேசுறதாலே அலைபேசி .. தொலைவிலே இருந்தே பேசினா தொலைபேசி .. விளக்கம்
புரியுதா?

sathishsangkavi.blogspot.com said...

அழகான நடையில்..... வித்தியாசமான சிந்தனையில்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

"என்னை மன்னிச்சிடு பூரணி, உன்னை மாதிரி அழகும், வசதியும் உள்ள பெண், என்னை மாதிரி ௬லிகளிடம் காதல் என்ற மாயையிலே விழுந்து, உன்னோட வாழ்க்கை பாழாக விரும்பலை, உன்னை காயப் படுத்தாம கழட்டி விட என் அறிவுக்கு எதுவுமே எட்டலை, இன்றைக்கு உன் மனசு புண்பட்டு இருந்தாலும், உன் எதிர் காலம் நல்லா இருக்கும்,உனக்கு காதல் தகுதி இல்லாம வரலாம், ஆனா அதை ஏத்துக்கிற அளவுக்கு நான் இன்னும் தகுதி பெறலை"

///

வித்தியாசமான சிந்தனையில்....

ராஜ நடராஜன் said...

ரத்தக்காட்டேரிய விட்டுட்டு ராவணன் முதல் ஆளா பார்த்துட்டீங்களோன்னு நினைச்சு வந்தேன்.

ராஜ நடராஜன் said...

//இவ்வளவு பெற வீட்டிலே அவளைத்தவிர யாருமே இல்லை என்பது எனக்கு ஆச்சரியாமா இருந்தது//

என்னாதிது?

ராஜ நடராஜன் said...

எந்த தமிழ் சினிமாவுலருந்து சுட்டது?

ராஜ நடராஜன் said...

//அலைந்து கொண்டே பேசுறதாலே அலைபேசி .. தொலைவிலே இருந்தே பேசினா தொலைபேசி .. விளக்கம்
புரியுதா?//

செம்மொழி மாநாட்டுக்கு ஆள் மாட்டிகிச்சு.

வால்பையன் said...

அந்த பொண்ணு அவனை மென்டல்னு நினைச்சிருப்பா, காதலை நிராகரிக்க வேறு வழியே தெரியலையாக்கும் உங்களுக்கு!

kunthavai said...

கதை வித்தியாசமா இருக்கு.

M. Azard (ADrockz) said...

கதையில் என்ன ஒரு திருப்பம் ... வித்தியாசமாக உள்ளது ... வாழ்த்துக்கள்

vasu balaji said...

ஒரு துண்டுன்னு சொல்லிட்டு ரெண்டு துண்டு போட்டீரு:))

Anonymous said...

எம்புட்டு நல்லவரு எங்க தளபதி :)

அப்துல்மாலிக் said...

இருந்தாலும் இது ரொம்பதேன் ஓவரு..

கயல் said...

ஆஹா! சில கோணங்களில் சப்பை பிகரு ... அண்ணாச்சி இன்னாதிது? இத மனசுல வச்சிட்டு தானா அவன் அப்பீட்டு? ஹா ஹா! நல்லாருக்கு.

கோவி.கண்ணன் said...

//"என்னை மன்னிச்சிடு பூரணி, உன்னை மாதிரி அழகும், வசதியும் உள்ள பெண், என்னை மாதிரி ௬லிகளிடம் காதல் என்ற மாயையிலே விழுந்து, உன்னோட வாழ்க்கை பாழாக விரும்பலை, உன்னை காயப் படுத்தாம கழட்டி விட என் அறிவுக்கு எதுவுமே எட்டலை, இன்றைக்கு உன் மனசு புண்பட்டு இருந்தாலும், உன் எதிர் காலம் நல்லா இருக்கும்,உனக்கு காதல் தகுதி இல்லாம வரலாம், ஆனா அதை ஏத்துக்கிற அளவுக்கு நான் இன்னும் தகுதி பெறலை"//

தேவயானி-பார்த்திபன்-பிரகாஷ்ராஜ் ஒரு படத்துல.....பேரு சுவர்ணமுகினு நினைக்கிறேன். அதில கடைசி காட்சிகள் இப்படித்தான் இருக்கும்

நசரேயன் said...

//
தேவயானி-பார்த்திபன்-பிரகாஷ்ராஜ் ஒரு படத்துல.....பேரு சுவர்ணமுகினு நினைக்கிறேன். அதில கடைசி காட்சிகள் இப்படித்தான் இருக்கும்
//
அண்ணே எனக்கும் இதேதான் தோணுச்சி, வேறு மாதிரி முடிக்கனுமுன்னு நினைத்தேன்.

புளியங்குடி said...

நசரேயன் அண்ணா, இந்தச் செய்தியைப் படியுங்கள்...


புளியங்குடியில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்களைத் தாக்கியதாக 3 பேரை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
புளியங்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள கோவிந்தப்பேரி குளத்தில் சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் காலாடி தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் அழகுதுரை (18), ரெங்க கருப்பன் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்லத்துரை (18) ஆகியோரை டி.என். புதுக்குடி பகுதியைச் சேர்ந்த ஜோன்ஸ் துரைபாண்டியன் மகன் கிங்ஸ்லி (17), நடராஜன் மகன் செல்வக்குமார் (18), வெள்ளத்துரை மகன் கருப்பசாமி (20) ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த அழகுதுரை, செல்லத்துரை இருவரும் புளியங்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் கஸ்தூரி செல்வக்குமார், கருப்பசாமி,கிங்ஸ்லி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சாந்தி மாரியப்பன் said...

இந்த கதையிலே ராமர் யாரு.. ராவணன் யாரு....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ராவணன் படம் விமர்சனம் வரும் வரும்னு கடைசி லைன் வரிக்கும் படிச்சேன்... இப்படி ஏமாத்திட்டீங்களே... ஞாயமா இது ஞாயாமா? சரி, இது எப்படி "ராவணன்"? சாரிங்க , நான் கொஞ்சம் அப்பாவி... பின் நவீனத்துவம் எல்லாம் புரியற அளவுக்கு மண்டைல சரக்கு இல்லைங்கோ...


Jokes apart - nice story, nice narration...