Tuesday, June 15, 2010

அமெரிக்க கருப்பு அண்ணாச்சியின் அலும்பு



ஆறு மணிக்கு அலுவலத்திலே இருந்து கிளம்புறதே பெரிய விஷயம், பல வருஷம் கழிச்சி எங்க டமேஜெர் ஐந்து மணிக்கு கிளம்பி விட, நான் அவரு போன அரை மணி நேரத்திலே பெட்டியைக் கட்டிக்கிட்டு கிளம்பினேன்.

இப்படி சீக்கிரமா அலுவலகத்திலே இருந்து கிளம்பியதாலே பல மில்லியன் டாலர்கள் இழப்பு வருமேன்னு யோசித்துகிட்டே பாதாள ரயில் நிலையம் நோக்கி போய் கொண்டு இருந்தேன், ரயில் நிலையத்துக்கு பக்கத்திலே செல்லும் போது யாரோ தண்ணி குடிக்கிற மாதிரி சத்தம் கேட்டது, சத்தம் வந்த திசையைப் பார்த்தேன், அங்கே கருப்பு அண்ணாச்சி சுவத்திலே தலையை மண்டிகிட்டு இருந்தார், அந்த சுவத்திலே யாரு தண்ணி குழாய் வைத்ததுன்னு,ஒரு ஆர்வத்திலே பக்கத்திலே போய் எட்டிப் பார்த்தேன், அண்ணாச்சிக்கு பின்னாடி கருப்பம்மா இருந்தாங்க, இவங்க முத்தம் கொடுக்கிற சத்தம் தான், எனக்கு எதோ குழியிலே தண்ணி மண்டுற சத்தம் மாதிரி கேட்டு இருக்கு.

என்னையை ரெண்டு பேரும் திரும்பி பார்த்தாங்க, எனக்கு ரெம்ப அவமானமாப் போச்சி, அவங்க என்னை ஒரு நொடி மட்டும் பார்த்து விட்டு, மறுபடியும் அவங்களோட வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள், இந்த மாதிரி ஓசி படம் எல்லாம் வெயில் காலத்திலேயே நடக்கிறது சாதாரணம் என்பது எனக்கு தெரிய வந்தது,நானும் நடக்கிறதை பார்க்காதது மாதிரி கிளம்பி வீட்டுக்கு போயிட்டேன்.

 அடுத்த நாள் மீண்டும் அலுவலகம் வந்து வேலை எல்லாம் முடித்து விட்டு கிளம்பி போனேன் ரயில் நிலையத்துக்கு, என்ன சத்தம் கேட்டாலும் திரும்பி பார்க்க௬டாது அப்படி ஒரு முடிவு எடுத்து கிட்டு குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி அக்கம் பக்கம் பார்க்காம போனேன், நிலையம் பக்கம் போனேன் யாருமே இல்லை,பயணச் சீட்டு வாங்கிட்டு ரயிலைப் பிடிக்க உள்ளே போனா அங்க நிக்குறாங்க நான் நேத்து பார்த்த காதல் ஜோடிகள்.    

இன்றைக்கும் நேத்து பார்த்த அதே காட்சிதான்,ரயில் நிலைய நடை மேடையிலே வெளியே நின்று கொண்டு கருப்பம்மா வாயிலே மோதிரத்தை தொலைத்து விட்டு தேடுற மாதிரி தேடிகிட்டு இருந்தனர், நான் ரயில் பெட்டிக்குள்ளே போயிட்டேன், கொஞ்ச நேரத்திலே அவங்களும் நான் இருந்த ரயில் பெட்டிக்கு வந்தார்கள். 

பேசாமலே வாயை இவ்வளவு அருமையைப் பயன் படுத்த முடியுமான்னு ஆச்சரியம் எனக்கு, நானும் இப்படி ஒரு வாழ்க்கை முறைப் பாடத்தை இலவசமா சொல்லி கொடுக்கிற அண்ணாச்சிகிட்ட இருந்து கத்துக்கலாமுன்னு, அப்படி என்னதான் செய்யுறாங்கன்னு பட்டிகாட்டுகாரன் மிட்டாய் கடையப் பார்த்து மாதிரி பார்த்து கொண்டு இருந்தேன்.

கொஞ்ச நேரத்திலே நான் பார்க்கிறதைப் பார்த்து விட்ட அண்ணாச்சி ஆள் காட்டி விரலை மடக்கி அலவங் காட்டினார்,நல்லவேளை அவரு நடு விரலை காட்டலை. மறுபடியும் ரெம்ப 
அவமானப் போச்சி, வீட்டுக்கு போனா சோறு  தண்ணி இறங்கலை.அவமானத்தோட மறுநாளும் அலுவலகம் வந்தேன், மீண்டும் மாலையிலே புறப்பட்டேன்.

ரயில் நிலையம் பக்கம் போனேன், நான் பார்க்கிற வரை அண்ணாச்சி சும்மாதான் இருந்தாரு, நான் அவரைப் பார்க்கிறேன்னு தெரிஞ்சதும், மறுபடியும் கருப்பம்மா வாயிலே மோதிரத்தை  போட்டு தேடுறது போல மண்ட ஆரம்பித்தாரு, நான் ஒரே ஓட்டமா ஓடியே போயிட்டேன், இந்த பிரச்சனையிலே இருந்து எப்படி வெளிவரன்னு யோசித்தேன், ஒரு வழியும் தெரியலை. ஓசியிலே படம் பார்க்க நினைத்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ன்னு அடுத்த நாளும் அலுவலகம் சென்றேன்.

 ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்தேன், நிலைய வாசலிலே வெள்ளையம்மா ஒரு பலகையிலே "எனக்கு வேலை போய் விட்டது, வேலை வேண்டும் என எழுதி, தனது விவரங்களையும், முன்னனுபவங்கள் அடங்கிய கோப்பை போகிற வருகிறவர்களுக்கும் கொடுத்து கொண்டு இருந்தார், எனக்கும் ஒரு கோப்பு கொடுத்தாள், வாங்கும் போது அவள் முகத்தைப் பார்த்தேன், கருப்பு நிறக் கண்ணாடி அணிந்து இருந்தாள். 

வேலை இல்லா வெள்ளையம்மா எனக்கு கண்ணாடி வழியா எனக்கு புது வழியை கொடுத்தாள், அன்றைக்கே கடைக்கு போய் கண்ணாடி வாங்கி விட்டேன், மாலையிலே வீட்டுக்கு போகும் போது புதுசா வாங்கின கண்ணாடியை போட்டுக்கொண்டு போனேன், கடந்த ஒரு வாரமா பயந்து பயந்து வேகமா போன நான், மெதுவா எல்லோரையும் பார்த்து கொண்டு போனேன், கருப்பு அண்ணாச்சியும் இருந்தாரு, அவரு என்னைப் பார்ப்பது எனக்கு தெரிந்தது, நான் அவரைப் பார்த்தது அவருக்கு தெரியலை.


16 கருத்துக்கள்:

ஹேமா said...

வேணும் வேணும்.வேலை எப்படா முடியும்ன்னு வேலை டைம்க்கு முன்னமே புறப்பட்டு உடன வீட்டுக்குப் போகாம ரோட்டெல்லாம் பிராக்குப் பார்த்தா
இப்பிடித்தான் ஆகும்.

வேலை போனதுக்கும்
கருப்பு அண்ணாச்சிக்கும்
என்ன சம்பந்தம் நசர் ?

நசரேயன் said...

//வேலை போனதுக்கும்
கருப்பு அண்ணாச்சிக்கும்
என்ன சம்பந்தம் நசர் ?//

யாருக்கு வேலை போச்சி ஹேமா பாட்டி?

Chitra said...

இருந்தாலும் நீங்க ரொம்ப பாவம்ங்க...... அந்த கருப்பு கண்ணாடி மட்டும் இல்லைனா, நீங்க இன்னும் எவ்வளவு "கஷ்டப்"பட்டு இருப்பீங்க...... !!!

ஹேமா said...

ஓ...அவங்களுக்கு மட்டுமா வேலை போச்சு.ச்ச..!

என்ன அடகு வைக்க எல்லா இடமும் ஏதாச்சும் தேடிகிட்டு இருக்கீங்க?
நடா கிட்ட உங்களுக்குப் பரிந்துரை பண்ணிட்டு வந்திருக்கேன்.
தாத்தா தாத்தா !

பழமைபேசி said...

இரயிலடி இரங்கப்பரின் அனுபவங்கள் இன்னும் தொடரும்னு சொல்லுங்க... இஃகிஃகி!!

பழமைபேசி said...

// கற்பனை//

புனைவு?? நம்பிட்டோம்!!!

goma said...

’கருப்பண்ணன் கருப்பம்மா கருப்புக் கண்ணாடி’பாரதிராஜாவுக்கு டைட்டில் ரெடி....

வெள்ளையன் வெள்ளையம்மாவைப் பார்க்க வெள்ளைக் கண்ணாடியா?

நசரேயன் said...

//இருந்தாலும் நீங்க ரொம்ப பாவம்ங்க...... அந்த கருப்பு கண்ணாடி மட்டும் இல்லைனா, நீங்க இன்னும் எவ்வளவு "கஷ்டப்"பட்டு
இருப்பீங்க...... !!!//

உங்களுக்கு தெரியுது ஊருக்கு தெரியலையே !!!

//
என்ன அடகு வைக்க எல்லா இடமும் ஏதாச்சும் தேடிகிட்டு இருக்கீங்க?//

அரை கிலோ தங்கம் அனுப்பி வையுங்க, நான் பத்திரமா வச்சிக்கிறேன்

/// கற்பனை//

புனைவு?? நம்பிட்டோம்!!//
மணி அண்ணே .. நம்பலையா

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Anonymous said...

ரோட்டில பராக்கு பாக்காம போகணும். இல்லாட்டி கருப்பம்மா ஒரு தட்டு தட்டபோறாங்க ஜாக்கிரதை :)

vasu balaji said...

/நல்லவேளை அவரு நாடு விரலை காட்டலை./

கருப்பு அண்ணாச்சிக்கு ஆறு விரலோ?

/வேலை இல்லா வெள்ளையம்மா எனக்கு கண்ணடி வழியா எனக்கு புது வழியை கொடுத்தாள், //

ஆஹா! சிக்கிரிச்சா? துண்டு போட்டாச்சா?

/மெதுவா எல்லோரையும் பார்த்து கொண்டு போனேன், கருப்பு அண்ணாச்சியும் இருந்தாரு, அவரு என்னைப் பார்ப்பது எனக்கு தெரிந்தது, நான் அவரைப் பார்த்தது அவருக்கு தெரியலை.//

இப்பத் தெரியுதா? துண்டு மேல தப்பில்ல. நமக்குத்தான் வெவரம் போதாதுன்னு. கண்ணடிச்ச வெள்ளையம்மாவை விட்டுட்டு கருப்புக் கண்ணாடி வாங்கப் போனாராம்.

கலகலப்ரியா said...

ச்சே... இப்டி ஓசில படம் பார்க்கற ஆளுங்களால.. மிக்ரெய்ன்னு சன்கிளாஸ் மாட்டுற எனக்கும் கெட்ட பேரு...

Unknown said...

// கலகலப்ரியா said...
ச்சே... இப்டி ஓசில படம் பார்க்கற ஆளுங்களால.. மிக்ரெய்ன்னு சன்கிளாஸ் மாட்டுற எனக்கும் கெட்ட பேரு..//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்

Ganesh-Vasanth said...

தல,

இப்பதான் தெரியுது நீங்க ஏன் கண்ணாடிய போடறீங்கன்னு

ஆனா அந்த கண்ணாடில வெள்ளகாரிய பார்த்தாலே கருப்பாதான் தெரியும் , இதுல கருப்பமாவ எப்படி பாத்திங்களோ சரி அத விடுங்க எந்த ஸ்டேசன்ல அந்த படம் ஓடுது.. விலாசம் ...விலாசம்

நசரேயன் said...

//தல,

இப்பதான் தெரியுது நீங்க ஏன் கண்ணாடிய போடறீங்கன்னு

ஆனா அந்த கண்ணாடில வெள்ளகாரிய பார்த்தாலே கருப்பாதான் தெரியும் , இதுல கருப்பமாவ எப்படி பாத்திங்களோ சரி அத விடுங்க எந்த ஸ்டேசன்ல அந்த படம் ஓடுது.. விலாசம் ...விலாசம்
//
WTC path

Paleo God said...

/// கற்பனை//

புனைவு?? நம்பிட்டோம்!!//
மணி அண்ணே .. நம்பலையா//

////
WTC path//

கன்ஃபார்ம். புனைவேதான் :)))

--
ஹேமா கடை வாசல்லயே கம்போட காத்துக்கிட்டே இருக்காங்க போல!! :))