Saturday, May 15, 2010

குடுகுடுப்பை ஏன் சொரூபா பிந்தினியானார்


குடுகுடுப்பையார் பெயரை மாத்தினதாலே கு.ஜ.மு.க கட்சி தொண்டர்கள் அனைவரும் கு,ஜ.மு.க தலைமையை யாரோ கைப்பற்றி விட்டதாக கனவு காண வேண்டாம்..

இந்த உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் காரணம்,தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பது போல  கு.ஜ.மு.க மாணவர்(?) அணி செயலர் அண்ணன் வானம்பாடிகளின் கவலையாகிய ஜக்கம்மா யார்? என்ற கேள்வியும் அமைகிறது,கட்சியின் ஆரம்ப கால அடிப்படை உறுப்பினர் என்ற முறையிலே எனக்கு தெரிந்த உண்மை இதுதான், அண்ணே ஜக்கம்மா என்பது கற்பனை பாத்திரம், குடுகுடுப்பை உடுக்கு அடிக்கும் போது தலை ஆட்ட ஆள் கிடைக்காத காரணத்தினால், இவரே உருவாக்கின கதாபாத்திரம் ஜக்கம்மா.ஆனா விதி பாருங்க எப்படி எல்லாம் விளையாடுது.

ஜக்கமாவாலே இன்றைக்கு குடுகுடுப்பையை பேய் பிடிச்சிருச்சு, எந்த பேய்ன்னு கேட்க்குறீங்க, ஊரு நாட்டையெல்லாம் பொன் மொழிகள் உதிர்த்து உலுக்கிய யாருக்கும் அடங்கா பேய்.

நேத்து வரைக்கும் நடமாடிக்கிட்டு இருந்தவங்க, எப்படியா பேய் ஆகிட்டங்கன்னு நீங்க கேட்பீங்க, கட்டி வந்திருக்கு, சர்க்கரை கட்டி இல்லை, மூளையிலே கட்டி, அப்படி கட்டி வார அளவுக்கு என்ன வேலை செய்தாங்கன்னு கேளுங்க, மூளையை அளவுக்கு அதிகமா உபயோகிச்சிட்டாங்க.


அதாவது உங்க பேரு தமிழ்ல இருந்தா, அதுக்கு இங்கிலிபிசிலே, ஜெர்மன்ல, பிரெஞ்சுல என்ன அர்த்தமுன்னு கண்டு பிடிகிறது,ஆம்புளை எப்படி பொம்பளை மாதிரி நடிச்சி குழாய்யடி சண்டை, தெரு சண்டை எல்லாம் போடுறது. இதெல்லாம் அவங்க மூளையோட தனித்தன்மைகள்.  

ஆனா பாவங்க டெல்லி போகுமுன்னே, காட் பாடியிலே ஆள் டெட் பாடி ஆகிவிட்டதாம், ஆளு மண்டையைப் போட்டாலும், அவங்க மூளை மட்டும் மண்டையைப் போடக்௬டாதுன்னு மேல போன அஞ்சு நிமிசத்திலே ஆள் பேயாகியாச்சி.

பதிவுலகிலே சாமி வந்த ஆள் யாருன்னு கேட்டா சின்ன புள்ளை கூட சொல்லிவிடும் ,விசா இல்லாம, கடவுச்சீட்டு இல்லாம, நேர அவங்க வீட்டு கதவை தட்டி இருக்காங்க,ஆனா அவங்க இப்ப  எல்லாம் அலுவலகத்திலே அளவு கடந்த வேலையிருக்கு, கடமைன்னு வந்துட்டா சாமி எல்லாம் கிட்டவே வராது, ஓய்வு கிடைக்கும் போது சொல்லி அனுப்புறேன்னு சொல்லிட்டாங்க. ஒரே ஊர் காரங்க, மொழி பேசுறவங்கன்னு பல பாச கயிறுகளைப் போட்டாலும் அம்மணி அசரலை, அடிச்சி விரட்டி கதவை அடைச்சிட்டாங்க.

வனத்திலே தான் மேய முடியாது, வலையிலே மேயுறேன்னு நினைச்சிகிட்டு கடைகடையாப் போய் பார்த்தப்ப குடுகுடுப்பை உடுக்கைப் படம் பார்த்த உடனே "ஒரு ஆள் சிக்கிட்டாரு, அவரும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு போல தெரியுதுன்னு நினைச்சி, நேர அமெரிக்கா விலே மாடு மேய்ச்சி கிட்டு இருந்தவரை பிடிச்சி என்ன எதுன்னு கேட்காம நேர உள்ளே புகுந்து, அதை கொண்டாட இடுகையும் போட்டாச்சி.
    
இனிமே இலக்கிய இடுகைகள் வரலாம், பொன் மொழிகள் வரலாம், எதிர் இடுக்கைகள் வரலாம், சும்மா உடுக்கை அடிச்சி கும்மி அடிச்சிகிட்டு இருந்தவரை சொரூபா பிந்தினி ஆவி என்ன பாடு படுத்தப் போகுதோ.

உன்னையைத்தான் கட்சி விட்டே விலக்கி விட்டார்களே உனக்கு ஏன் இந்த அக்கறைன்னு கேட்கலாம், என் தம்பி பாசாகாரப் பய புளியங்குடிக்கும் இந்த ஆவியினாலே எதும் பிரச்சனை வரக்௬டாது என்ற விழிப்புணர்வு இடுகைதான்.

சொரூபா பிந்தினியை  விரட்டிட்டு மறுபடியும் குடுகுடுப்பையாரை அரியணையிலே எப்படி ஏத்துவதுன்னு தெரியலை, இல்லாத மூளையை கசக்கி யோசிக்கிறேன்.. யோசித்து கொண்டே இருப்பேன்.19 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

என்ன நடக்குது இங்கே,நிம்மல் எழிதிருக்கிறது என்னான்னே பிரியல , அது யாரூ சொரூபா பிந்தினி?

Unknown said...

//உன்னையைத்தான் கட்சி விட்டே விலக்கி விட்டார்களே உனக்கு ஏன் இந்த அக்கறைன்னு கேட்கலாம்//

என்னது கட்சிய விட்டு நீக்கிட்டாங்களா??

இது எப்ப? இலக்கியத்துறையை கலந்தாலோசிக்கிறதே இல்லையா??

Jerry Eshananda said...

ஓம் சொருபாய நமஹா.

vasu balaji said...

/கு.ஜ.மு.க மாணவர்(?) அணி செயலர் அண்ணன் வானம்பாடிகளின் கவலையாகிய ஜக்கம்மா யார்? என்ற கேள்வியும் அமைகிறது//

அதென்ன கேள்விக்குறின்னேன். தலைவரே ஜக்கம்மா சொல்றததான் சொல்றேன்னு சொல்லிட்டிருந்தாரு. அப்புறம் எதுக்கு தனியா சொரூபா பிந்தினி என்பதுதான் கேள்வி. :))

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

//சொரூபா பிந்தினியை விரட்டிட்டு மறுபடியும் குடுகுடுப்பையாரை அரியணையிலே எப்படி ஏத்துவதுன்னு தெரியலை, இல்லாத மூளையை கசக்கி யோசிக்கிறேன்.. யோசித்து கொண்டே இருப்பேன்.//

அண்ணாச்சி! தலைவர் உங்கள கட்சிய விட்டு தூக்கினது தப்புதான். ஆனா அரசியல்ல இதெல்லாம் சாதாரணம். எந்த பதவியிலிருந்து தூக்கினாரோ அதை ஆயுட்காலப் பதவியாக்கிக்குங்க. கைவசம் தொழிலிருக்க கலங்குவதேன் இல்லாத மூளையைக் கசக்கி. வடக்கூராளையும், வெள்ளச்சியையுமே அலற அலற ஓட்டிய துண்டு உம் துண்டு.வீசும் துண்டை. விரட்டும் சொருபாவை. மீட்டெடும் தலைவரை:))). எப்புடீஈஈஈ

Anonymous said...

சொரூபா பிந்தினி
u mean
சொரூபா பிணந்தின்னி. that sound nice

ஹேமா said...

நசர்....எனக்குப் புரியல.அரசியலா ?
குடுகுடுப்பை ஐயா
பேர் மாத்திக்கிட்டாரா !

ராஜ நடராஜன் said...

மொதல்ல இடுகை எனக்கே பிரியல!பிரியாதவங்களுக்கும்,மண்டைய
நோண்டுறவங்களுக்கும்...

//அடங்கொய்யால நானும் ஒரு பொண்ணு பேருல பதிவு எழுதலாம்னு நெனச்சேன், கருமம் நாட்டுக்குள்ள இருக்கிறதால மனுசப்பதறுகள் மாதிரிதான் அறிவு இருக்கு, //

நன்றி ஜக்கம்மா!

கார்த்திகைப் பாண்டியன் said...

Main kaun hoon? main kahan hoon?

நசரேயன் said...

கோவி அண்ணே சுட்டிக் காட்டியதற்கு நன்றி... வரிகளோட உங்கள் பின்னூட்டத்தையும் நீக்கி விட்டேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன் நான் said...

புரியலையே....!!!

கோவி.கண்ணன் said...

//கோவி அண்ணே சுட்டிக் காட்டியதற்கு நன்றி... வரிகளோட உங்கள் பின்னூட்டத்தையும் நீக்கி விட்டேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.//

மிக்க நன்றி !

பழமைபேசி said...

//// சுட்டிக் காட்டியதற்கு நன்றி... வரிகளோட உங்கள் பின்னூட்டத்தையும் நீக்கி விட்டேன்.//

அட...ச்ச்சே.... அதென்ன அந்த வரிகள்? அது என்னவா இருந்திருக்கும்.... இப்படி எல்லாம் நாங்க நினைச்சு...உடுப்பைக் கிழிச்சித் தொங்கப்போட்டுட்டு அலையணும்னுதானே நினைக்கீங்க.... காலம் மாறிப் போச்சு இராசா.... காலம் மாறிப் போச்சு..... இஃகிஃகி!!

Anonymous said...

என்ன ஏதுன்னு விளக்கமா சொல்லணும். இல்லாட்டி என்ன மாதிரி குழாய் விளக்கு ஆசாமிங்களுக்கு ஒண்ணும் புரியாது!!!!!!!!

MinMini.com said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

வில்லன் said...

பேர மட்டும் இல்ல உடல் உறுப்பு மற்றும் உடையை கூட மாத்திட்டா நம்ம குடுகுடுப்பையாய் இருந்த "சொரூபா பிந்தினி" ..... மனுசி சேலைல என்னமா தூக்கலா இருக்கா தெரியுமா.... நானே APPLICATION போடலாம்னு இருக்கேன்........

வில்லன் said...

//சொரூபா பிந்தினி said...

என்ன நடக்குது இங்கே,நிம்மல் எழிதிருக்கிறது என்னான்னே பிரியல , அது யாரூ சொரூபா பிந்தினி?//

வாம்மா சொரூபா பிந்தினி மின்னல்..
நசரேயன் துண்டு அனுப்பினாக.....
நம்ம பழமை பழம் அனுப்பினாக.....
நம்ம முகிலன் முறுக்கு அனுப்பினாக,.....
நம்ம வானம்பாடிகள் கவிதை அனுப்பினாக....
நம்ம சந்தன முல்லை முல்லைப்பூ அனுப்பினாக...
எதுக்கெல்லாம் மயங்காம வேலை போகாம எனக்காகவே காதிருக்கும் உன்னை காவ வியாழகிழமை ஓடோடி வந்துருவேன் என் ராஜாத்தி.....கொஞ்சம் பொறு "வந்து வச்சுக்கறேன்' உனக்கு வேட்டு....

"உனக்காக!!! எல்லாம் உனக்காக!!!! இந்த உடலும் உயிரும் ஒட்டியிருப்பது உனக்காக....

ரவி said...

ரத்த பூமியில் வந்து சுண்டல் விக்கிற பார்த்தியா ?

///MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..///