Monday, April 19, 2010

பக்தி பார்வை



"மச்சான் நாங்க பக்தி படம் பார்க்க போறோம், நீ வாரியா?"


"என்ன படம் திருவிளையாடலா? கந்தன் கருணையா?"

"அது பழைய படம், புதுசா ஒரு ஆங்கில படம் வந்து இருக்கு?"

"துரைமார்கள் எல்லாம் எப்படா பக்தி பழமா மாறுனாங்க!!!!!!!!" 

"அவங்க கிட்ட எப்போதுமே பக்தி இருக்கு மச்சான், நமக்கு தான் சரியா தெரியலை?"

"எந்த தியேட்டர் மச்சான்?"

"பாலக்கரை தியேட்டர்ல?, படம் நூறு நாள் ஆகியும் இன்னும் ஹவுஸ் புல்"

"என்னது நூறு நாளா?, பாலக்கரையிலே ஒரே படம் அலெக்ஸ்சாண்டரா, அது பக்திப்படம் இல்லையே பலனா படமுன்லா கேள்விபட்டேன்"

"பார்காதவங்களுக்கு பலான படம், பார்த்தவங்களுக்கு பக்திப் படம்."

"நான்,கருப்பன், வெள்ளையன் போறேம், நீ வாறியா?"

பக்திமணம் படம் பார்க்க இழுத்தாலும், என்னவோ எனக்கு படத்துக்கு போக பிடிக்கலை, கோவிலே சந்தித்த அந்த பெண் ஒரு காரணமாக இருக்கலாம்.நண்பர்களை அனுப்பிவிட்டு, நான் மாம்பழச்சாலையிலே இருந்த எங்கள் விடுதிக்கு சென்றேன், அவள் சொன்ன ஏழுமணி எனக்குள் மணியாய் ஒலித்துக்கொண்டு இருந்தது, புத்தகத்தை எடுத்தேன் படிக்க முடியலை, மறுபடி படிச்சேன் ஒண்ணுமே புரியலை, நான் படிக்கிறது தெலுங்கு புத்தகமுன்னு கூட தெரியலை, புத்தகத்தை கீழே வைத்தேன், மணியை பார்த்தேன் 6:35 எனக் காட்டியது, முகம், கை, கால்களை அலம்பி விட்டு கீழே வந்தேன், எங்க விடுதிக்கு பின்னால் காவிரி ஆறு ஓடுகிறது, பல வருடங்களுக்கு பின்னால் காவிரி நதியிலே வெள்ளம் வருவதை எல்லோரும் ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தார்கள். வெள்ளம் போல நானும் போய் வெள்ளம் பார்க்க சென்றேன்.வெள்ள ஓட்டத்தைப் பார்த்து என் மன ஓட்டத்தை சுழற்றினேன்.

அவ ௬ப்பிட்டா போகனுமா?, போகலைனா என்ன ஆகும், உயிர் பலி, கொலைப் பலி, எதுவும் நடக்கப் போறதில்லை, போகலைனா இதயத்தை யாரும் இடம் மாத்தி வைக்கிறதில்லை, போனா கிட்னியை இலவசமா யாரும் கொடுக்க மாட்டாங்க, போனாலும், போகாவிட்டாலும் வயறு பசிச்சா சாப்பிடனும், பொம்பளை சொன்ன உடனே நாய்க்குட்டி மாதிரி பெட்டியை கட்டிக்கிட்டு ஓடினது போதும் என்று நான் மனசிலே நினைத்துக் கொண்டேன், நினைச்சதை எல்லாம் சத்தம் போட்டு பேசி இருந்தா கிறுக்குப் பயன்னு என்னை ஆத்திலே தள்ளி விட்டு இருப்பார்கள், நான்   பதட்டப் படுகிற அளவுக்கு ஒண்ணும் பழக்கம் இல்லை, ஒரு பக்திமானா திருவரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட போன என்னையே பார்த்து கொண்டு இருந்த அவள், நிம்மதியா சாமி கும்பிட முடியாமல் செய்து விட்டாள்.

ஒருத்தரோட பார்வையை வைத்து அர்த்தம் கண்டு பிடிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலை, அதுமில்லாமல் மனசில் பட்டதை நேரிலே கேட்டுவிடுகிற பழக்கம் இருந்ததாலே, நான் அவகிட்ட கேட்டேன்.

"நீங்க என்னை பார்த்தீர்களா?,அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன?"

"நீங்க பச்ச புள்ள மாதிரி இருக்கீங்க, ரெம்ப பக்தி பழமா சாமி கும்புடுறதைப் பார்த்தால்,அப்படி என்ன கவலையோ யோசித்து ஆர்வமாப் பார்த்தேன்."

நான் என்ன கேட்டேன்னு இவளுக்கு தெரிஞ்சு இருக்குமோன்னு நினைத்தேன், இருந்தாலும் நான் போட்ட துண்டை வாங்க ஆள் வேண்டும் என வேண்ட வில்லை என்பதாலே

"நான் என்ன வேண்டிக்கிட்டேன்னு தெரியுமா உங்களுக்கு?"

"தெரியாது, ஆனா தெரிஞ்சிக்கனுமுன்னு கொள்ளை ஆசை,இப்ப சரியா பேச முடியலை சாயங்காலம் ஏழு மணிக்கு வரமுடியுமா?" என்று கேட்டாள்.

"பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.அவள் சொன்ன ஆசை எனக்கே ஆசையை வரவழைத்ததாலே கோவிலே இருந்து திரும்பி வந்ததிலே இருந்து என் மனம் கோவிலே இருந்தது, மணியைப் பார்த்தேன் மணி ஏழை தாண்டிவிட்டது,பசி வயிற்றை கிள்ளியது,  மீண்டும் விடுதிக்கே சென்று விட்டேன். படம் பார்த்து விட்டு நண்பர்கள் அனைவரும் சாப்பாட்டை முடித்து விட்டு அயர்ந்த நித்திரையிலே இருந்தார்கள், ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. நெடு நேரம் முழித்து இருந்து எப்ப தூங்கினேன் என்று தெரியவில்லை, காலையிலே எழுத்து குளித்து முடித்து விட்டு கோவிலுக்கு சென்றேன், ௬ட்டமே இல்லை, நேற்று சந்தித்தவளை காணவில்லை கல்லூரி சென்று விட்டு மீண்டும் மாலையிலே கோவிலுக்கு சென்றேன், அவள் வந்து இருக்கிறாளா என்று தேடித் பார்த்தேன், அவளை காணவில்லை, சாமி கும்பிடவும் மனம் இல்லை, அவளிடம் நேற்று பேசிய இடத்திற்கு வந்தேன், யாருமே இல்லை.அன்று இரவும் அவளைப் பற்றியே நினைத்து கொண்டு இருந்தேன், அவளை சந்தித்து இருக்கலாம் நேற்று என்று என்னை நானே கேள்வி கேட்டேன்,பரிசையிலே கேட்கும் கேள்விகளுக்கு எப்படி விடை தெரியாதோ, அதே மாதிரி இதுக்கும் விடை தெரியலை,அடுத்த நாளும் போனேன், ஆனால் அவள் வரவில்லை, அடுத்த ஒரு வாரத்திலே அவள் நினைவுகளை மறந்தேன், அடுத்த மாதத்திலே அவளையே மறந்தேன்.

இதுக்கு மேல என்ன எழுதன்னே மறந்தேன், போகிற போக்கிலே ஒண்ணை சொல்லிட்டு போறேன், எல்லா உடல் வலிகளுக்கும் மருந்து இருந்தாலும், மனதின் வலியை போக்க சிறந்த சர்வலோக நிவாரணி காலமே என்பதை சொல்லி சிறுகதையை முடித்துக் கொள்கிறேன், சோடா கொடுக்கிற சாக்கிலே சோடா பாட்டிலை எடுத்து வர வேண்டாம்.

இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது மட்டுமே பிரதான வேலையை இருந்தது, எனது பக்தியைப் பார்த்து மீண்டும் யாரும் என்னைப் பார்க்கிறார்களா என்று எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை.


12 கருத்துக்கள்:

vasu balaji said...

OOPS:))

அத்திரி said...

இதே மாதிரி எத்தனை சாமிய கும்பிட்டீங்க?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Unknown said...

துண்டு போட்டது போக சாமி கும்பிடுறது வேறயா?

சாந்தி மாரியப்பன் said...

துண்டுக்கு சாமிகிட்டயே ரெகமண்டேஷனா.. நடத்துங்க.. :-)))

Chitra said...

புத்தகத்தை எடுத்தேன் படிக்க முடியலை, மறுபடி படிச்சேன் ஒண்ணுமே புரியலை, நான் படிக்கிறது தெலுங்கு புத்தகமுன்னு கூட தெரியலை, புத்தகத்தை கீழே வைத்தேன்,

.....ha,ha,ha,ha,ha..... hilarious!
:-)

ஜெய்லானி said...

:-)))

பனித்துளி சங்கர் said...

////////இதுக்கு மேல என்ன எழுதன்னே மறந்தேன், போகிற போக்கிலே ஒண்ணை சொல்லிட்டு போறேன், எல்லா உடல் வலிகளுக்கும் மருந்து இருந்தாலும், மனதின் வலியை போக்க சிறந்த சர்வலோக நிவாரணி காலமே என்பதை சொல்லி சிறுகதையை முடித்துக் கொள்கிறேன்,//////////


ஏலே மக்கா இது எல்லாம் பக்தி படம் பார்த்ததால் வந்ததால . பார்த்துல அங்கே பக்தி வருதோ இல்லையோ கத்தி வருதாம் இப்பெல்லாம் .

ஏலே மீண்டும் வருவோம்ல பக்தி படம் திருட்டு சீடி இருக்கானு கேக்க

Anonymous said...

//வருடங்களுக்கு பின்னால் காவிரி நதியிலே வெள்ளம் வருவதை எல்லோரும் ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தார்கள்.//

அப்ப இது பூர்வ ஜென்ம கதையா :)

ஹேமா said...

//இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது மட்டுமே பிரதான வேலையை இருந்தது, எனது பக்தியைப் பார்த்து மீண்டும் யாரும் என்னைப் பார்க்கிறார்களா என்று எப்போதும் திரும்பிப் பார்ப்பதில்லை.//

நசர்...ஒவ்வொரு கதையை முடிக்கிறப்போ எல்லாம் இப்பிடியே சொல்றீங்க.அப்புறம் அப்பிடியேதான் !

சந்தனமுல்லை said...

:-))))

ராஜ நடராஜன் said...

நசரேயன் எங்க உங்கள ஆளக் காணோம்?

காந்தி கையெழுத்த உத்துப்பார்த்துகிட்டு இருந்த போது பின்னாலேயே துரத்திட்டு வந்துட்டேன்.

கடை என்ன காத்து வாங்குது?இரண்டு நாளா கல்லாவுல ஆள் உட்கார்லன்னா ஆளுக அடுத்த கடையப் பார்த்து ஓடிறாங்க இல்ல!