Wednesday, April 21, 2010

விலையுயர்ந்த பிறந்த நாள்

பிறந்த நாள் அப்படின்னு ஒண்ணு இருக்கு, புது சட்டை துணி எல்லாம் எடுத்து மிட்டாய் கொடுப்பாங்கன்னு எனக்கு ரெம்ப நாளா தெரியாது.நான் மூணாம் வகுப்பு படிக்கும் போது கூட படிச்ச பையன் எல்லோருக்கும் மிட்டாய்  கொடுத்தான்.

வகுப்பிலே இருந்த எல்லோருக்கும் கொடுத்த மிட்டாய் போக மீதம் இருந்ததை எல்லாம் அவனுக்கு தெரியாம ஆட்டையை போட்டுட்டு கேட்டேன்  "இன்னைக்கு என்னடா விசேசம்?"

"எனக்கு பிறந்தநாள்" 

அந்த வார்த்தையை ஞாபகம் வச்சிக்கிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து 

"அம்மா எனக்கு எப்ப பிறந்தநாள்?"

"நீ ஆணியிலேயோ, மாசியிலையே பிறந்த?"

"அது எப்படிம்மா ரெண்டு மாசத்திலே பிறக்க முடியும்?"

"நீ பிறந்தப்பத்தான் இருந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு போனோம், அந்த கஷ்ட காலத்திலேயே, உன் பிறந்த நாள் எல்லாம் ஞாபகம் வைக்க எங்களுக்கு நேரம் இல்லை."

அதோட பிறந்த நாள் நினைப்பை விட்டுவிட்டேன், பத்தாம் வகுப்பு முடித்த உடனே பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் அட்டையிலே உள்ள பிறந்த நாளை காட்டி அம்மாவிடம் 

"நான் இந்த தேதியிலேயா பிறந்தேன்".

"டேய், நீ ரெம்ப நல்லா படிப்பன்னு, பள்ளிக்௬டம் சேர்க்கும் போது உன் வயசை ௬ட்டி சேத்து கிட்டாரு வாத்தியாரு, ஆனா நீ எட்டாம் வகுப்பிலே ரெண்டு வருஷம், ஒன்பதாம் வகுப்பிலே ரெண்டு வருஷம் இருந்து கஷ்டப் பட்டு இப்பத்தான் பத்து பாஸ் ஆகி இருக்க"  அதோட பேச்சை நிறுத்திட்டு போயிட்டேன். 


பண்ணிரெண்டு முடித்து விட்டு கல்லூரி சென்றேன், நிறைய பிறந்த நாள் விழாக்களிலே கலந்து ஓசி சரக்கு கிடைத்தது,கொஞ்ச நாள் கழித்து கொண்டாட குடிக்கிறாங்களா? குடிக்க கொண்டாடுறாங்களான்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. எல்லாரிடம் ஓசி சரக்கு வாங்கி குடிக்கிறேன்னு தெரிஞ்ச நண்பர்கள் என்கிட்டே உனக்கு எப்ப பிறந்தநாள் ன்னு கேட்டாங்க.

நான் என்னோட சோகக்கதையை சொன்னேன், சான்றிதழ் படி என்ன தேதின்னு கேட்டாங்க, சொன்னேன். நாட்காட்டியிலே பார்த்தால் அது அன்னைக்கு தான், உடனே என்னோட பிறந்த நாள் கொண்டாடியே ஆக வேண்டும் என என் ௬ட ஓசியிலே குடிக்கிற இன்னொரு நண்பன் கட்டளையிட்டான். கட்டளை எல்லாம் சரி காசுக்கு எங்க போகன்னு கேட்டேன்.

யாராவது கடன் கொடுங்க, நான் அடுத்த மாசம் திருப்பி தாரேன்னு சொன்னேன்,யாரிடமும் காசு  இல்லை, சென்னை நண்பன் கையிலே மோதிரம் போட்டு இருந்தான், குடிக்க உதவாத மோதிரம் எதுக்குன்னு கோபத்திலே சேட்டு கடையிலே அடமானம் வைத்து காசு வாங்கி வந்தான். கருப்பா உன்னைய நம்பி தான் அடகு வைத்து இருக்கேன், மறக்காம திருப்பி தா ன்னு சொன்னான்.சரக்கும், அடகு சரக்கும்  காலி ஆகும் வரை சந்தோசமா இருந்தோம், அடுத்த நாளிலே இருந்து கல்லூரி முடியும் வரை அந்த மோதிரத்தை மீட்டு எடுக்க முடியாமல் கடைசியிலே அது முங்கியே போனது.மோதிரம் அடமானம் வச்சி என்னால திருப்ப முடியலைன்னு விவரம் தெரிஞ்ச உடனே என்கிட்டே பிறந்த நாள் கொண்டாட்டம் பத்தி பேசவே மாட்டாங்க.இன்னும் சென்னை நண்பனுக்கு அந்த கடனை திருப்பி தரலை 

அதோட நானும் பிறந்த நாள் கொண்டாடுவதை விட்டு விட்டேன், கொஞ்ச வருஷம் கழித்து கனடாவுக்கு அலுவலக விசயமா வந்தேன், என்னோட அறையிலே தங்கி இருந்த மனவாடு ரெம்ப நல்லவரு. அவரு பிறந்த நாளுக்கு நான் சரக்கு வாங்கி கொடுத்தேன்னு என் மேல கொலை வெறி பாசம் வந்து எனக்கு பிறந்த நாள் கொண்டாடனுமுன்னு முடிவு பண்ணினார், நானும் என் பழைய கதையை சொன்னேன், அதை எல்லாம் அவரு காதிலே வாங்கலை, சாம்பார்வாடு பிறந்த நாளுக்கு கேக் வாங்கி கொண்டாடியே ஆகணுமுன்னு ஒத்தை காலிலே நின்னாரு.

பிறந்த நாள் தினத்தன்று கேக், சரக்கு எல்லாம் வாங்கி வந்து விட்டார்,கேக் வெட்டும் முன்னாடி பாட்டிலை திறக்க மூடியை எடுக்க பணப்பையை திறக்க, அதிலே இருந்த வங்கி கடன் அட்டையை காணவில்லை,வீடு முழுவுதும் தேடினோம் எங்கும் கிடைக்க வில்லை, ரெண்டு மணி நேரம் ஆச்சி, நேரம் வேற பன்னிரண்டு மணி ஆகப் போனது, எனக்கு வாங்கின சரக்கையும் குடிக்க முடியலை, கேக்கையும்  சாப்பிட முடியலை யலைன்னு வருத்தம்.

ஒரு வழியா கேக் வெட்ட சம்மதித்தார், கேக் வெட்டினோம், வெட்டி கொஞ்ச நேரத்திலே மீதம் இருந்ததை எல்லாம் வங்கி கடன் அட்டை காணாம போன கோவத்திலே என் மேல கல்லை கொண்டு எரியுற மாதிரி கேக் கட்டியை கொண்டு எறிந்தார், நான் அப்படி எல்லாம் முன்ன பின்ன பார்த்தது கிடையாது.அப்படி கொண்டாடினாத்தான் பிறந்த நாளுக்கே மதிப்பாம்.

வாங்கி வந்த சரக்கு, கேக் எல்லாத்தையும் காலி பண்ணிட்டு மட்டை ஆகிட்டோம், காலையிலே எழுந்து மீண்டும் வங்கி கடன் அட்டையை தேட ஆரம்பித்தோம் கிடைக்கவே இல்லை, மனவாடோட அக்கௌன்ட் ல லாகின் பண்ணி பார்த்தான், ஆயிரம் டாலரை ஏற்கனவே ஆட்டையைப் போட்டு இருந்தாங்க, உடனே வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு அட்டையை முடக்கினோம்.

மனவாடு ரெம்ப சிகப்பா இருப்பாரு, கோவத்திலே அவரு முகம் என்னை விட கருத்துவிட்டது,கீழே கிடந்த ஒண்ணு ரெண்டு கேக் துண்டுகளை எல்லாம் ஒன்னா சேத்து மறுபடியும் என்னை பார்த்து எறிந்தான், நேத்து எறியும் போது அர்த்தம் தெரியலை, இப்ப எரியும் அர்த்தம் நல்லாவே  தெரிந்தது.சாம்பார்வாடுக்கு  இப்படி ஒரு விலையர்ந்த பிறந்த நாள் கொண்டாடி காசை காணாம அடித்து விட்டோமே என்று அடுத்த நாளே ரூமை காலி பண்ணிட்டு ஓடியே போய்ட்டான், அதற்கு பின் என் ௬ட பேசுறதே இல்லை, நானும் பிறந்த நாள் கொண்டாடுறதை மீண்டும் மறந்தே விட்டேன். இப்பவும் யாராவது காசு அதிகமா இருந்து என்ன செய்ய யோசித்து கிட்டு இருந்தீங்கன்னா சொல்லி அனுப்புங்க என் பிறந்த நாள் கொண்டாடலாம்.  


31 கருத்துக்கள்:

ஹேமா said...

நசர்...இண்ணைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா !எதுக்கும் சொல்லி வைக்கிறேன்.மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் நீங்க நிறைய நாள் எழுதிட்டே இருக்கணும்.

பாருங்க நீங்க எவ்ளோ கெட்டிக்காரார்ன்னு.எட்டாம் வகுப்பில ஒன்பதாம் வகுப்பில இரண்டு இரண்டு வருஷம் இருந்தாலும் கல்லூரி கனடா ன்னு போயிருக்கீங்க.
அப்புறம் என்ன !

அதென்ன நசர்
"மட்டை"ஆயிட்டோம்ன்னா ?

vasu balaji said...

=)). முடியல அண்ணாச்சி! இதெல்லாம் நெம்ப ஓவரு. பதினஞ்சு நாளா காணாம போனது இப்படி தினம் ஒக ஸ்டோரி செப்பந்துக்கா சாம்பார்வாடா:)). கதலு பாகனே உன்னாயி நாயனா:))சம்புதுன்னாவு மனுஷினி:))

பா.ராஜாராம் said...

:-))) செம ஜாலி பாஸ்.

ஹேமா...

மட்டை?

மட்டை = bat = tab = atb = டைட்ம = ட்மடை = (ம)டைட் =(ம) = மனிதன்.

புரியலைல? அது போதும். :-)

ILA (a) இளா said...

பொறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி! ட்ரீட் எப்போ?

சந்தனமுல்லை said...

:))))

பிறந்தநாள் வாழ்த்துகள்,நசரேயன்!!இடுகை வழக்கம் போலவே கலக்கல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்! வாழ்த்துகள்

RAMYA said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நசரேயன்!

முன்னாடியே சொல்லவே இல்லே, நாங்களும் கொண்டாடிருப்போம்மில்லே:)

வழக்கம் போலவே பதிவு சூப்பர், நிறைய நகைச்சுவை இழையோடுது, ஆனால் இந்த பிறந்த நாளில் வந்த குழப்பம் இப்போது தீர்ந்ததா இல்லே தொடருதா?

எல்லா வகுப்பிலேயும் ரெண்டு ரெண்டு வருஷமா? ஐயோ அப்போ நீங்க எப்போதான் கல்லூரி முடிச்சீங்க?

அப்போ நீங்க ரொம்ப பெரியவர்ன்னு சொல்லுங்க :)

மட்டை இது எந்த மொழிக்குச் சொந்தம் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் நசரேயன்..

(வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிட்டு எல்லாரும் எஸ்கேப்பாகிக்கனுங்கறீங்களா? :)) )

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நசரேயன்:)!

//"அது எப்படிம்மா ரெண்டு மாசத்திலே பிறக்க முடியும்?"//

:)))!!!

Unknown said...

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் கட்சியின் க.கா.அணித் தலைவருக்கு வாழ்த்துகள்...

காசு எங்கிட்ட இல்லாததால நான் அங்க வராம இங்கயே தண்ணி அடிச்சி மட்டை ஆகிக்கிறேன்..

Chitra said...

HAPPY BIRTHDAY! Have a blast! :-)

செ.சரவணக்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

ராஜ நடராஜன் said...

திரும்ப வந்ததற்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

நான் எல்லாம் ஆவணி & செப்டம்பர் அப்படின்னு ரெண்டு மாசத்திலதான் பிறந்தேனாக்கும்

எல் கே said...

வாழ்த்துக்கள் தல வாங்க நம்ம இந்த சனிக்கிழமை கொண்டாடுவோம்

ராமலக்ஷ்மி said...

@ தாரணி பிரியா,

உங்க பின்னூட்டம் அருமை:))!

pudugaithendral said...

நானும் ஆவணி $ செப்டம்பர்னு ரெண்டு மாசத்துலதான் பிறந்தேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நசரேயன்.

நசரேயன் said...

சத்தியமா எனக்கு பிறந்த நாள் இல்லை

Vidhoosh said...

ஆணிகென்றே ஆவணியில் பிறந்த தானை தலைவா!!!

அம்மா வீட்டுக்கு போயிட்டாளா? வளவளத்தாளை சீக்கிரம் வரச்சொல்லுங்க...

Vidhoosh said...

நசரேயா... நீங்க பிறந்தநாள் கொண்டாடி அது குழப்பமில்லாம இருந்தாத்தானே ஆச்சரியம்...

கேக் கலர்ல "பிரவுன்" அழகி யாரும் கிடைக்கலையா?

Vidhoosh said...

எல்லா வகுப்பிலேயும் ரெண்டு ரெண்டு வருஷமா?


அப்போ மரத்தடி ச்சூள்ள மூணாப்பு படிக்கையில என் கூட ஆறு வருஷம் எருமை மேய்ச்சதெல்லாம் எந்த கணக்குல சேத்தீங்கோ...?

Vidhoosh said...

///ஆயிரம் டாலரை ஏற்கனவே ஆட்டையைப் போட்டு இருந்தாங்க///

சத்தியமாச் சொல்லுங்க... அந்த யாரோ நீங்கதானே!!

ஆயிரம் டாலரை ஆட்டையப் போட்ட ஆயிரத்தில் ஒருவன் வாழ்க வாழ்க

நசரேயன் said...

நன்றி ஹேமா :- மட்டைனா கிட்டத்தட்ட மயங்கி விழுறது.. எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் இல்லை.. படிப்பிலே நான் ரெம்ப கெட்டிகாரன் ஹேமா நம்புங்க

நன்றி வானம்பாடிகள் :- அவுனா?

நன்றி பா.ராஜாராம் :- உங்க மட்டை விளக்கம் படிச்சே நான் மட்டை ஆகிட்டேன்

நன்றி ILA(@)இளா :- நேரிலே பார்க்கும் பொது

நன்றி சந்தனமுல்லை :- ஒரு பொறுப்பு அறிவித்தல் போட்டு இருக்கலாமோ எனக்கு பிறந்த நாள் இல்லைன்னு

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா

நன்றி RAMYA :- மட்டை சரக்கு மொழி க்கு சொந்தம்

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi அக்கா :- ஆமா எல்லோரும் வாழ்த்து சொல்லி எஸ்கேப் ஆகிட்டாங்க

நன்றி ராமலக்ஷ்மி அக்கா

நன்றி முகிலன் :- யோவ் பிறந்த நாள் இல்லை சாமி

நன்றி Chitra டீச்சர் :- வாழ்த்தை சேமித்து வையுங்க

நன்றி செ.சரவணக்குமார்

நன்றி கடையம் ஆனந்த் :- எப்படி இருக்கீங்க?

நன்றி தாரணி பிரியா :- ஒ.. அப்படியும் சொல்லாமா ?

நன்றி LK :- கண்டிப்பா வீட்டுக்கு வாங்க

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி சின்ன அம்மிணி :- அம்மணி புது இடுகை ஒண்ணையும் காணும், உலகமகா ஆணியோ?

நன்றி Vidhoosh(விதூஷ்) :-அல்லோ கும்மி ரெம்பவே அதிகமா இருக்கு, நான் படிப்பிலே ரெம்ப கெட்டிக்காரனாக்கும், சபையிலே மானத்தை வாங்கியாச்சி இப்ப திருப்தியா?

நசரேயன் said...

நன்றி ஹேமா :- மட்டைனா கிட்டத்தட்ட மயங்கி விழுறது.. எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் இல்லை.. படிப்பிலே நான் ரெம்ப கெட்டிகாரன் ஹேமா நம்புங்க

நன்றி வானம்பாடிகள் :- அவுனா?

நன்றி பா.ராஜாராம் :- உங்க மட்டை விளக்கம் படிச்சே நான் மட்டை ஆகிட்டேன்

நன்றி ILA(@)இளா :- நேரிலே பார்க்கும் பொது

நன்றி சந்தனமுல்லை :- ஒரு பொறுப்பு அறிவித்தல் போட்டு இருக்கலாமோ எனக்கு பிறந்த நாள் இல்லைன்னு

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா

நன்றி RAMYA :- மட்டை சரக்கு மொழி க்கு சொந்தம்

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi அக்கா :- ஆமா எல்லோரும் வாழ்த்து சொல்லி எஸ்கேப் ஆகிட்டாங்க

நன்றி ராமலக்ஷ்மி அக்கா

நன்றி முகிலன் :- யோவ் பிறந்த நாள் இல்லை சாமி

நன்றி Chitra டீச்சர் :- வாழ்த்தை சேமித்து வையுங்க

நன்றி செ.சரவணக்குமார்

நன்றி கடையம் ஆனந்த் :- எப்படி இருக்கீங்க?

நன்றி தாரணி பிரியா :- ஒ.. அப்படியும் சொல்லாமா ?

நன்றி LK :- கண்டிப்பா வீட்டுக்கு வாங்க

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி சின்ன அம்மிணி :- அம்மணி புது இடுகை ஒண்ணையும் காணும், உலகமகா ஆணியோ?

நன்றி Vidhoosh(விதூஷ்) :-அல்லோ கும்மி ரெம்பவே அதிகமா இருக்கு, நான் படிப்பிலே ரெம்ப கெட்டிக்காரனாக்கும், சபையிலே மானத்தை வாங்கியாச்சி இப்ப திருப்தியா?

சாந்தி மாரியப்பன் said...

ரெண்டு தரம் மறுமொழி கொடுத்திருக்கிறதிலேயே தெரியுது,உலக மகா மட்டை ஆகிட்டீங்கன்னு.

சிநேகிதன் அக்பர் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! அப்படியா

வாழ்த்துகள் நசர்!

குலவுசனப்பிரியன் said...

அருமை. உங்கள் எழுத்துக்கள் யதார்த்தம் நிறைந்த நகைச்சுவை புனைவுகள். பதிவு உலகம் பற்றி யாருக்கும் அறிமுகம் செய்வதென்றால் உங்கள் இடுகைகளைத்தான் முதலில் காண்பிக்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, என்னங்க எல்லாரும் மட்டைக்கு விளக்கம் கேக்கிறாங்க. அதுக்காக ஒரு லைவ் நிகழ்ச்சி காட்டியிரலாம், அதுக்காக ஒரு பார்ட்டி வையுங்க அண்ணே. நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க. வருஷம் பூரா என் பாங்க் பேலன்சும்,பாக்கெட்டும் காலியாகத்தான் இருக்கும். ஆலார்ட் ஆறுமுகம் மாதிரி ஆட்டையைப் போடுவதுதான் தொழில். அதுனால நீங்க எனக்கு பார்ட்டி வைச்சா ஒன்னும் லாஸ் ஆகாது.(இருந்தால்தானே). ஹா ஹா