Thursday, February 18, 2010

மாதுவின் காதலன்

கல்லூரி முடிச்சிட்டு சென்னையிலே வேலை தேடி கே.கே நகர்ல அடுக்கு மாடி குடி இருப்பிலே இரண்டாவது மாடியிலே இருந்தேன்.எதாவது நேர் முகத்தேர்வுக்கும், வேலை தேடி விண்ணம் அனுப்புவதும் தான் வேலை எனக்கு, என் ௬ட கல்லூரியிலே என்னுடன் படித்த நண்பனும் தங்கி இருந்தான்.மாசத்திலே பாதி நாள் வீட்டிலே தான் இருப்போம், கடையிலே சாப்பிட்டா அதிகம் செலவு ஆகிறது என்பதாலே நாங்களே சமைக்க ஆரம்பித்தோம்.


சமையல்  முடிந்தது போக மற்ற நேரங்களிலே வரண்டாவிலே நின்று கட்டை பீடி அடிச்சிகிட்டு இருப்போம்.ரெம்ப நல்ல பையனா இருந்த அவனுக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்தா சிகரட் குடிக்க ஆரம்பிச்சிட்டான்.


இப்படி கதையை ஓட்டிகிட்டு இருக்கும் போது ஒரு நாள் வழக்கம் போல இந்திய தபால் துறையினர் கீழ் வீட்டுக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தை எங்க வீட்டுக்கு கொடுத்தாங்க, விலாசத்திலே பெண்ணோட பெயர் இருந்தததினாலே, இந்த விஷயத்தை ௬ட இருந்த நண்பன் கிட்ட சொல்லவே இல்லை.



அவன் கிட்ட சொன்னா, அவன் நானும் வருவேன்னு சொல்லிட்டா ஒரு பொன்னான வாய்ப்பு வீணாப் போயிடுமேன்னு ஒரு நல்ல எண்ணத்திலே இப்படி ஒரு சம்பவம் நடந்ததா காட்டிக்கவே இல்லை. நண்பன் வெளியே போன நேரம் பார்த்து அவசர அவசரமா கடிதத்தை எடுத்துகிட்டு கீழே போனேன்.

கதவை தட்டினேன், கொஞ்ச நேரம் யாருமே திறக்க வில்லை, மறுபடி தட்டினேன், ஒரு கை மட்டும் வெளியே வந்து என்ன என்று கேட்டது, பதில் ஏதும் சொல்லாம கடிதத்தை வைத்து விட்டு வந்து விட்டேன்.அளவுக்கு அதிகமா எதிர்பார்ப்போட போன எனக்கு நடந்த சம்பவம் மன வருத்தம் தந்தாலும், முயற்சியை கை விட முடியலை, அவ கை அம்புட்டு அழகா இருந்தது, அடுத்த முறை தபால் துறை அவங்க வீட்டுக்கு போட்ட கடிதத்தை நான் எடுத்திட்டு வந்திட்டேன்.

அடுத்த நாளே போய் கதவை தட்டினேன், மறுபடியும் கை வந்தது, கடிதத்தை வைத்தேன், கதவு திறந்தது, என் மனக்கதவும் திறந்தது,என்னைய மேலும் கீழும் பார்த்தாள். அப்படி ஒரு சிரிப்பு அவளுக்கு, நான் ௬ட முதல்ல என் அழகிலே மயங்கி தான் சிரிக்கிறாளோன்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்திலே தெரிந்தது நான் சில்லரைத்தனம் பண்ணினது தெரிஞ்சி போச்சோன்னு எனக்கு சந்தேகம் வந்தது.

அன்றையிலே இருந்து நான் போகும் போதும் வரும் போதும் அவளைப் பார்த்து சிரிப்பேன், அவளும் தான். நாங்க சமைக்க ஆரம்பித்த புதுசிலே என்ன சமைக்கிறோம் என்பதே தெரியாமல் இருந்தாலும் , கொஞ்ச நாள்ல  உணவு கட்டுப்பாட்டு கழகம் சான்றிதழ் தரும் அளவுக்கு சமையல் வளர்ந்தது.

ஒரு நாள் இப்படித்தான் சாம்பார் வைத்து விட்டு பக்கத்து தெருவிலே இருந்த நண்பன் ஒருவனுக்கு எடுத்து செல்லும் போது, என்னோட கோலத்தை பார்த்து,  வெளியே போய் உட்கார்ந்து கை நீட்ட தான் சொம்பு எடுத்திட்டு போறேன்னு அவ நினைச்சி கேட்க, சாம்பார்ன்னு சொல்லியும் அவ நம்பாததாலே கொஞ்சம் ருசி பார்க்க கொடுத்தேன், அப்படியே சொம்பை எடுத்து வச்சி கிட்டா, சொம்பு போனாலும் சாம்பாரிலே சங்கமம் ஆகிட்டேன்னு நினைக்கும் போது சந்தோசமே.

நான் இப்படி காதல் நோயிலே இருந்ததாலே அக்கம் பக்கம் நடக்கிறதை கண்டு பிடிக்க முடியலை, என் அறை நண்பனுக்கு ஒரே சந்தேகம் அவளைப் பற்றி, என்கிட்டயும் சொன்னான்.

"மச்சான், அவ எங்கையும் வேலைக்கு போன மாதிரி தெரியலை, ஆனா பகல்ல ஆள் வெளியே வருவது கிடையாது, இரவு ஏழு மணிக்கு மேல யார், யாரோ வாராங்க அவ வீட்டுக்கு"

"எவ்வளவு நாளா இப்படி நடக்குது" 

"ரெம்ப நாளாவே இப்படித்தான் நடக்குது"

அவ அழகுக்கு என்னைய மாதிரி ரெம்ப பேரு துண்டு போட வருவாங்களோன்னு நினைச்சாலும், வீட்டுக்குள்ளே எப்படி போக முடியும்ன்னு யோசித்தேன்.

அடுத்த நாள் இரவு நானும் கவனித்தேன், அவ வீட்டுக்கு யாரும் வந்த மாதிரி தெரியலை, இருந்த பீடி காலியாகி விட்டதாலே கடைக்கு போனேன், போகும் வழியிலே அவளைப் பார்த்தேன், சிரிச்சிட்டு உள்ளே வா என்று கை காட்டினாள்.

வரவேற்பு அறையிலே இருந்த மேசையிலே பார்த்தா சரக்கு பாட்டில் இருக்கு, என்னைய நாற்காலிலே உட்கார சொல்லிவிட்டு ஒரு  கிளாஸ்ல ஊத்தினாள், எல்லாத்தையும் கலந்து அவளே குடிச்சிகிட்டா, நான் பொம்பளை தண்ணி அடிகிறதை முன்ன பின்ன பார்த்தது கிடையாது, என்ன சொல்லன்னு தெரியாம இருந்தேன், அவ என்கிட்டே கேட்டாள். தண்ணி அடிப்பியான்னு, ஓசியிலே என்ன கிடைத்தாலும் குடிப்பேன்னு மனசிலே நினைச்சிகிட்டாலும், ஆமான்னு  தலையை ஆட்டினேன். எனக்கும் ஒரு கிளாஸ் வந்தது, குடித்தேன்.

குடிச்ச கொஞ்ச நேரத்திலே நான் என்ன கேள்வி கேட்க தயங்கினேனோ, அதையெல்லாம் சரளமா  கேட்டேன், அடுத்த கிளாஸ் போன உடனே, பதில் சொல்லலைன்னா நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு சொன்னேன்.பதில் சொன்னாள், சொன்ன பதிலை கேட்டு போதைஎல்லாம் தலை தெரிக்க ஓடிப்போச்சி, அதற்குள் பாட்டிலும் காலி ஆகி விட்டது, வீட்டுக்கு வந்து அவளைப் பத்தியே யோசித்து கொண்டு தூங்கி விட்டேன்.

உண்மை என்னன்னு தெரிஞ்சாலும், ஏனோ துண்டை எடுத்து கீழே வைக்க முடியலை, வேலை வெட்டி இல்லாம வீட்டிலே இருந்து அவளைப் பத்தியே யோசித்தேன். அவளிடம் நிறைய பேச ஆரம்பித்தேன், ஓசி சரக்கும் நிறைய கிடைத்து, அரை மூடி குடித்தாலே அரை நாளுக்கு சலம்புற நான் அவ ௬ட குடிக்கும் போது கல் காளை மாதிரி இருப்பேன். அவ நெஞ்சை பிச்சிகிட்டு நிறைய விசயங்கள் வெளிவரும், எல்லாம் முடிஞ்ச உடனே எனக்கு வாயை பிச்சிகிட்டு வெளியே வரும், பெரும்பாலும் நான் மட்டை ஆகி தான் வீட்டுக்கு வருவேன். அவளைப் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன், தன்னோட காதலனை நம்பி வந்தவளை, அவன் ஏமாற்றி யாரிடமோ விற்று விட்டான் என்றும், அவன் சூறையாடிய கற்பை எல்லோருக்கும் பகுந்து கொடுத்தும்  இருக்கிறான், ஆரம்ப காலங்களில் உடல் வலி போக்க தண்ணி அடிக்க ஆரம்பித்தவள், இப்போ மன நிம்மதிக்கு தண்ணி அடிக்கிறாள்.

என்னவோ என்கிட்டே எல்லாத்தையையும் சொன்னாள், இந்த தொழிலை விட்டு விடலாமேன்னு கேட்டால், அதற்கு எப்போதுமே பதில் வராது அழுகையைத் தவிர.காசு கொடுத்து நொங்கு திங்கிற இடத்திலே, நான் நோகாம நொங்கு தான் திங்க முடியலை, இப்படி நோகாம சரக்கு அடிக்க முடியுதேன்னு, நானும் அவ என்ன சொன்னாலும் கேட்டுக்குவேன்.

ஒரு மாசம் கழித்து மீதும் சரக்கு அடிக்கும் போது என்னிடம் கேட்டாள்,

"என்னை தேடி வருகிறவர்களுக்கு தோணுறது உனக்கு தோணலையா?"

"தோணும், அதற்கான விலை என்கிட்டே இல்லை" 

"உனக்கு தேவை இல்லை" சொல்லி அடுத்த நிமிசமே தேதியும் குறிச்சாச்சி. அந்த நாளும் வந்தது, அவ வீட்டுக்கு போனேன், வழக்கத்துக்கு மாறாக அவள் ரெம்ப அழகா தெரிஞ்சா, வீட்டுக்குள்ளே போய் கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தேன். ரெண்டு பேருக்குமே சரக்கு பத்தி ஞாபகம் வரலை. வந்த வேலையை பார்க்கலாமுன்னு படுக்கை அறையை நோக்கி போனோம். கதவு தட்டப் படும் சத்தம் கேட்டது. என்னை இருக்க சொல்லி விட்டு கதவை திறந்தாள். காவல் துறையினர் வாசலிலே, அவளிடம் அனுமதி கேட்காமல் வீட்டுக்குள்ளே வந்தனர். நானும் பயத்திலே வெளியே வந்தேன்.

"தினமும் புது புது ஆளுங்களை வச்சி, தொழில் பண்ணுறியா?"  அவள் ஒண்ணும் பதில் சொல்லலை. என்கிட்டே கேட்டாங்க.

"எவ்வளவுடா கொடுத்த?" 

"இல்லை சார்"

"என்ன நொள்ள, நடங்க ஸ்டேஷன்க்கு" 

"சார், இந்த பையன் மேல் வீட்டிலே தங்கி இருக்கிறான், அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை" ன்னு சொன்னா,அதை நம்பின மாதிரி தெரிஞ்சது, என்னை போக சொல்லிட்டாங்க, ஓடியே போயிட்டேன்.

அடுத்த நாள் தினசரிகளில் விபச்சாரி கைது, அவளின் புகைப் படத்துடன், அந்த படத்தை வெட்டினேன், நண்பன் வீட்டிலே சாமி படம் இல்லைன்னு அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது. 


32 கருத்துக்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ன்ணா..,

Chitra said...

உங்கள் புத்தக வெளியீட்டு விழா எப்போ?

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

தளபதி, உங்க வீட்டுத் தங்கமணிக்கு இந்த இடுகை பார்சல் செய்யப்போறனே? இஃகிஃகி!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Jerry Eshananda said...

ரசிக்கத்தக்க எழுத்து நடை

அகநாழிகை said...

நல்லாயிருக்குங்க.

Unknown said...

வாவ்... கலக்கல் கதை பாஸ்..

Unknown said...

//அடுத்த நாள் தினசரிகளில் விபச்சாரி கைது, அவளின் புகைப் படத்துடன், அந்த படத்தை வெட்டினேன், நண்பன் வீட்டிலே சாமி படம் இல்லைன்னு அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.//

இதை ரொம்பவே ரசிச்சேன்..

vasu balaji said...

அண்ணாச்சி! சூப்பரண்ணாச்சி:))

Anonymous said...

//அவளின் புகைப் படத்துடன், அந்த படத்தை வெட்டினேன், நண்பன் வீட்டிலே சாமி படம் இல்லைன்னு அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.//

இப்படி நிறைய இருக்கு அவளை கடவுளாக்கியது அழகு

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

நட்புடன் ஜமால் said...

மாது - தூள்

ஹேமா said...

பார்வைகளில் வித்தியாசப்படுகிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு.
உங்கள் பார்வையில் அவர் கடவுளாகிறார்.நல்லாயிருக்கு நசர்.

Anonymous said...

// பழமைபேசி said...

தளபதி, உங்க வீட்டுத் தங்கமணிக்கு இந்த இடுகை பார்சல் செய்யப்போறனே? இஃகிஃகி!!//

:)

சந்தனமுல்லை said...

/நாங்க சமைக்க ஆரம்பித்த புதுசிலே என்ன சமைக்கிறோம் என்பதே தெரியாமல் இருந்தாலும் , கொஞ்ச நாள்ல உணவு கட்டுப்பாட்டு கழகம் சான்றிதழ் தரும் அளவுக்கு சமையல் வளர்ந்தது./

சைக்கிள் கேப்லே லாரி-ன்னா இதுதானா??! அவ்வ்வ்!

சந்தனமுல்லை said...

/தன்னோட காதலனை நம்பி வந்தவளை, அவன் ஏமாற்றி யாரிடமோ விற்று விட்டான் என்றும், அவன் சூறையாடிய கற்பை எல்லோருக்கும் பகுந்து கொடுத்தும் இருக்கிறான்,
/

:-(

க.பாலாசி said...

//அடுத்த நாள் தினசரிகளில் விபச்சாரி கைது, அவளின் புகைப் படத்துடன், அந்த படத்தை வெட்டினேன், நண்பன் வீட்டிலே சாமி படம் இல்லைன்னு அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.//

என்னமோ போங்க.....

ரசனைக்குகந்த கதை....

அன்புடன் நான் said...

கதைதானுங்களே..... வடிவா இருக்கு (கதை)

கண்மணி/kanmani said...

:))))))))))))))))

சினிமாவுக்கு கதை எழுதலாம்.

goma said...

கதையின் முடிவு கதையை மறுபடியும் வாசிக்கத் தூண்டியது..........

வேலை கிடைத்து வாழ்க்கையில் செட்டில் ஆவதற்குமுன் ஆண்கள் எத்தனை சோதனைகளுக்கு உள்ளாகிறார்கள் ,சிரமப் படுகிறார்கள் ,என்பது அருமையாக சொல்லப் பட்டிருக்கிறது
வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

இஃகி, கொடுத்த வச்சவங்க நீங்க!

வில்லன் said...

//கொஞ்ச நாள்ல உணவு கட்டுப்பாட்டு கழகம் சான்றிதழ் தரும் அளவுக்கு சமையல் வளர்ந்தது.//

யோவ் உணவு கட்டுப்பாட்டு கழகம் ஒன்னும் சமைக்குற சாப்பாட்டுக்கு சான்றிதழ் தராது???????? அப்படின்ன நீங்க உணவ சமசிங்கலா இல்ல "சமைக்க வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்னு" சாப்பிடின்களா.... என்னமோ போங்க.......

வில்லன் said...

//முகிலன் said...


//அடுத்த நாள் தினசரிகளில் விபச்சாரி கைது, அவளின் புகைப் படத்துடன், அந்த படத்தை வெட்டினேன், நண்பன் வீட்டிலே சாமி படம் இல்லைன்னு அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.//

இதை ரொம்பவே ரசிச்சேன்..//


நானும் "அந்த" அழகி படத்தை "தலை" நசறேயனோட "பர்ஸ்ல" பார்த்து ரொம்பவே ரசித்தேன்........அவர் நண்பன் வீடுலன்னு சொன்னது அல்வா.....அந்த நண்பன் வேறு யாரும் அல்ல "தல" நசரேயன் தான்.......

வில்லன் said...

// பழமைபேசி said...


தளபதி, உங்க வீட்டுத் தங்கமணிக்கு இந்த இடுகை பார்சல் செய்யப்போறனே? இஃகிஃகி!!//
பார்சல் அனுப்பினா நாள் ஆகும் அண்ணாச்சி... அதான் எங்க வீடு தங்கமணிய விட்டு "தல" வீட்டு தங்கமணிக்கு போன் பண்ண வச்சுட்டேன்.......கண்டிப்பா கொறஞ்சது இன்னைக்கு இரவு "தல" வெளில தான் படுக்கணும்......

வில்லன் said...

///தன்னோட காதலனை நம்பி வந்தவளை, அவன் ஏமாற்றி யாரிடமோ விற்று விட்டான் என்றும், அவன் சூறையாடிய கற்பை எல்லோருக்கும் பகுந்து கொடுத்தும் இருக்கிறான்,//

நல்ல கொணம்..... அத விடுட கூடாதுன்னு அவ அப்புறமும் அப்படியே "கண்டினு" பண்ணிருக்கா......

வில்லன் said...

// goma said...


கதையின் முடிவு கதையை மறுபடியும் வாசிக்கத் தூண்டியது..........///
தல இப்படி "சல்சா" கதை எழுதினா ஏன் படிக்க தோணாது பலமுறை.....!!!!!!!

வில்லன் said...

///அடுத்த முறை தபால் துறை அவங்க வீட்டுக்கு போட்ட கடிதத்தை நான் எடுத்திட்டு வந்திட்டேன்.//

ச!!! இவளவோ மோசமாவா நடந்துக்குறது.....கொஞ்சம் விட்டா தபால்காரனா வேஷம் போட்டுருவீறு போல.....

வில்லன் said...

//"எவ்வளவுடா கொடுத்த?"
"இல்லை சார்"
"என்ன நொள்ள, நடங்க ஸ்டேஷன்க்கு"
"சார், இந்த பையன் மேல் வீட்டிலே தங்கி இருக்கிறான், அவன் அப்படிப்பட்ட ஆள் இல்லை" ன்னு சொன்னா,அதை நம்பின மாதிரி தெரிஞ்சது, என்னை போக சொல்லிட்டாங்க, ஓடியே போயிட்டேன்.//

நம்ம என்ன காசு குடுத்து "நொங்கு" திங்குற ஆளா???...அடுத்தவன் தின்னுட்டு போட்ட கூந்தல எடுத்து ஓசில நக்குற ஆளாச்சே!!!!!!
சரி ஒன்னு தெரியுமா????பனமரத்துக்கு கீழ இருந்து பால குடிச்சாலும் கல்லு (பனம்பால் - உபயம் அண்ணாச்சி குடுகுடுப்பை) குடிச்சதாதான் அர்த்தம்...... சும்மா சொல்லாதீரும்... எத்தன நாலு இருந்தீரு ஸ்டேஷன்ல!!!!!!!!!!!!!!

ராமலக்ஷ்மி said...

நல்ல நடை. வித்தியாசமாய் முடித்திருக்கிறீர்கள்.

SUFFIX said...

கதையின் முடிவு நல்லா இருக்கு.

க ரா said...

நல்ல கதை. நல்ல முடிவு.