Thursday, February 4, 2010

பசலை நோய்

பசலை நோய் ன்னு நான் பச்ச புள்ளையா இருக்கும் போது(இப்பவும் அப்படித்தான் இருக்கேன்) படிச்சி இருக்கேன், அந்த கால கட்டத்திலே எல்லாம் தலைவன், தலைவி, பசலை நோய் எல்லாம் கேள்வி பட்டு தலை சுத்தி கீழே விழுந்தது தான் மிச்சம்,புரியாத வயசு, அதுவும் இல்லாம என்னை நினைச்சி அந்த அளவுக்கு உருக ஆள் கிடைக்கலைங்கிறது வேற விஷயம்.

ரெம்ப நாளா பசலைன்னு  நோய் இருக்கு, அது வந்தா சீக்கு வந்த கோழி மாதிரி சுருண்டு விழுந்துவோம், உடம்பு எல்லாம் எலும்பு உருக்கி நோய் வந்த  மாதிரி உருகிடுவோம், காய்ச்ச வராமலே ரெட்டியும், பாலும் குடிச்சி கிட்டு இருப்பாங்கன்னு நினைச்சேன்.விபரம் தெரிஞ்ச உடனே தான் தெரிஞ்சது அது ஒரு காதல் நோய்ன்னு,அதாவது காதலி, காதலனை  நினைத்து வெண்ணை மாதிரி உருகுறதும், மெழுகு வர்த்தி மாதிரி உருகுறதும் தான் பசலை நோய்(?).

என்ன காரணமுன்னு தெரியலை  பசலை நோய் பெரும்பாலும் பெண்களின் மனநிலையே சொல்லுது, பெண்கள் தான் காலையிலே கண் முழிச்சதும் துண்டு போட்டவனை நினைச்சி கிட்டே இருப்பாங்க, ஆம்பளைங்க எல்லாம் தன்னை நினைக்க ஒரு ஆள் இருக்குன்னு வேற நினைப்பிலே ஊரை சுத்தி அலையுவாங்களான்னுதெரியலையே,முன்ன பின்ன செத்தா தானே சுடு காடு தெரியும் என்பதாலே எனக்கு இந்த சந்தேகம்,இல்ல பசலை நோய் பத்தி எழுதின பெருசு எல்லாம் ஆண்களே, அதனாலே அவங்க பெண்களை நினைத்து எழுதி இருக்கலாம்.

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பசங்க தான், துண்டு போடும் முன்னாடியும் சரி, துண்டு கிடைச்ச பின்னாடியும் சரி ஒரு காவல்காரன் மாதிரி அலையுறதை, ஒரு வேளை அந்த கால ஆம்பளைங்க எல்லாம் என்னை விட அழகு குறைவா இருப்பாங்களோ ?

இங்கேயும் ஒரு இலக்கிய(?) பசலை நோய் பத்தி சொல்ல போறேன்.அதனாலே விழுந்து அடித்து ஓட வேண்டாம்.இந்த சங்க கால கதையிலே எதிரி நாட்டு படைகளுடன் சண்டை போட்டு  நாட்டை காப்பாத்த  தலைவன்போன உடனே துண்டு போட்ட தலைவி என்ன செய்யன்னு  தெரியலை, தலைவரை மறக்க முடியாம குடலை புரட்டிகிட்டு வருது அவங்களுக்கு.

இப்படியே இருந்தா வீட்டிலே இருகிறவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய வருமுன்னு  தலைவரும்,தலைவியும் சந்திச்ச இடங்களுக்கு போறாங்க, முதல்ல ஆத்துக்கு போயிட்டு அவங்க ரெண்டு பெரும் மண் அள்ளி போட்டு விளையாண்ட இடத்திலே இருந்து இவங்க மட்டும் விளையாடுறாங்க.அவங்க பக்கத்திலே ஒரு குருவி வந்து உட்காருது, அதை பார்த்ததும் குருவிகிட்ட

"குருவியே உனக்கும் துணை இல்லை, எனக்கும் துணை இல்லை, வா நாம ரெண்டு பெரும் விளையாடலாம்"

கொஞ்ச நேரம் இருந்த குருவி தன்னோட துணை குருவி வந்ததும், பறந்து போகுது, போகும் போது அந்த குருவியோட இறக்கையிலே இருந்து மண் தலைவியோட தலையிலே விழுது.அந்த நேரத்திலே எதிரி நாட்டு படைகள் அவங்க நாட்டை ஜெயிக்க போறதா தகவல் கிடைக்க தலைவி,குருவி போட்ட மண்ணை எடுப்பதற்கு பதிலா, தன் தலையிலே மண் அள்ளி போட்டுகிட்டு இருக்காங்க.


இங்கே தலைவி தலையிலே மண் அள்ளி போட்டுக்கிட்டு  இங்கே சோக கீதம் ஓடிக்கொண்டு இருக்கும் போது   தலைவர் என்ன செய்யுறாருன்னு பார்க்கவேண்டிய நிலை, அவரு போர் களத்திலே சண்டை போட்டு களைப்பாய் இருக்கிறார் தோல்வி உறுதி என தெரிந்ததும் கொஞ்சம் முக வாட்டம் அதிகமாவே இருக்கு, இருக்கின்ற படை வீரர்களை வைத்து மன்னர் ஒரு ௬ட்டம் நடத்துகிறார், ௬ட்டத்தின் முடிவை கேட்டதும் தலைவர் உட்பட அனைவருக்கும் உற்சாகம், எதிரிகளைப் பார்த்து கொலை வெறியுடன் சென்று அவர்களை விரட்டி அடிக்கிறார்கள், தோல்வியிலே முடிய வேண்டிய யுத்தம் வெற்றியிலே முடிகிறது. எல்லோரும் வெற்றி மாலையோடு திருப்பி வருகிறார்கள்.

இந்த சந்தோஷ விஷயம் கேள்வி பட்டு தலையிலே  அள்ளி போட்ட மண்ணை ஆற்றிலே அலசி விட்டு வீட்டுக்கு வருகிறாள், வரும் வழியிலே போன குருவி மீண்டும் வருகிறது, உடனே குருவியிடம் "எனக்கும் என் துணை வரப் போகுது, நீ போகாலாம்" என்று குதுகுலத்தோடு திரும்பி வருகிறாள்.வந்ததும் திரும்பி வரும் படையிலே தலைவனும் வருகிறாரா என்று ஆவலுடன் வீரர்கள் வரவேற்பு விழாவிற்கு செல்கிறாள்,தலைவனும் வருகிறார், தலைவி தலைவனைப் பார்த்தும் தலை கால் புரியாத சந்தோசத்திலே கள்ளு குடித்த வண்டு போல ஆகிறாள்(?).      

நின்று போன காதல் சந்திப்பு மீண்டும் தொடர்கிறது, எந்த ஆத்தங்கரையிலே மண் அள்ளி போட்டு விளையான்டார்களோ மீண்டும் அதே ஆத்தங்கரைக்கு வருகிறார்கள். தலைவி முதல் கேள்வியாக

"நாதா, நம் படைகள் தோற்று விட்டன என்ற கோபக் கனலை எப்படி கொய்யாகனியாக மாற்றினீர்கள், என்னை நினைத்து கொண்டதாலே உங்கள்  பலம் அசுர பலம் ஆகிவிட்டதா?"

"இல்லை என கண்ணே.. கரும்பே(அப்படியே போய்கிட்டே இருக்கு) , மன்னர் எங்களை எல்லாம் எங்கள் எதிரிகளை நினைக்க சொன்னார்"

"அவர்கள் போர்களத்திலே தானே இருந்தார்கள்?"

"உள்ளூர் எதிரிகளை நினைக்கச்சொன்னார்"

"உள்ளுரிலே உங்களுக்கு எதிரியா?"

"ஏன் உங்க அப்பன் இல்லை, நீயும், நானும் சந்திப்பதை தடுக்கவே சிந்தித்து கொண்டே இருப்பவன், நம் காதலுக்கு எதிரி?"

"நாதா....தா...தா இந்த பகடி எல்லாம் வேண்டாம், உண்மையை சொல்லுங்க"

"உண்மைதான் அன்பே, உன் அப்பனை நினைத்தேன் எதிரிகள் எல்லாம் உன் அப்பன் போல ஆனார்கள், அவர்களை அடித்து விரட்டிவிட்டோம் அரை நாழிகையிலே, இவ்வளவு ஏன் மன்னரும் அவர் மாமனாரையே நினைத்தார் என்றால் பார்த்துகொள்ளேன்"

"பெண்ணை பெற்றவர்கள் என்றால் உங்களுக்கு எவ்வளவு இளக்காரம், போகட்டும் விடுங்கள், நான் அழியாதை மை ஒன்றை கண்டு பிடித்து உள்ளேன், அதை சோதனை செய்ய வேண்டும் உங்களிடம் உங்கள் கையை காட்டுங்கள் எனது பெயரை எழுதுகிறேன்."

"என கண்ணே, உனது பெயர் என நெஞ்சில் அல்லவா பத்திரமாக இருக்கிறது."

"அது எனக்கு மட்டும் தானே தெரியும், ஊருக்கு தெரிய வேண்டாமா, கையை கொடுங்கள்"

"என் உயிரையே கொடுக்கும் உனக்கு இந்த கைகள் எம்மாத்திரம், இதோ"

தலைவி அரை மணி நேரமா மூச்சை போட்டு எழுதி முடிக்கிறாங்க, எழுதி முடிச்சதும், தலைவர் அதை வாசிக்கிறார்.வந்த கோபத்தை அவரால அடக்க முடியலை

கோபத்திலே "இதற்குத்தான் என் கைகளை கேட்டாயோ"

"ஏன் கோபப்படுகிறீர்கள், நான் அப்படி என்ன எழுதிவிட்டேன்"

"என்ன எழுதி விட்டாயா, இ.வா என்று எழுதி இருக்கிறாய்?"

"உங்க அப்பா பெயரு இனியன், உங்க பெயரு வாழ்வன், சுருக்கமா இனா வானா?"

"அதையேதான் நானும் சொன்னேன், படிப்பவர்கள் இளிச்ச வாயன் என்றல்லவா பொருள் கொள்வார்கள்"

"இல்லையா பின்னே" என்று ௬றி தலைவி எழுந்து ஓடுகிறாள்,  தலைவர் பினனால் ஓடுகிறார்.

அந்த சம்பவத்திற்கு அப்புறம் தான் பச்சை குத்துவதும், இளிச்சவாயன் என்பதும் பிரபலம் அடைந்ததுன்னு சொன்னா நம்பவா போறீங்க


31 கருத்துக்கள்:

Unknown said...

கடைசியில ஒரு சங்கத்தமிழ்ப் பாடலை எதிர்பார்த்தேன்..

கவுத்திட்டிங்களே???

நல்லா இருந்திச்சி..

Anonymous said...

ஏன் இந்தக்கொலைவெறி :)

சந்தனமுல்லை said...

:-))))கற்பனை எப்படிங்க இப்படி ஊற்றெடுக்குது??? சிக்கன் புளிசாதத்தை திருடி சாப்பிட்டீங்களா?!!

goma said...

:-()()()()}}}}
என்ன சொல்றதுன்னே தெரியலை

ஆனாலும் இரண்டு வரிகளுக்கிடையே சிரிப்பை விதைத்திருக்கிறீர்கள்.

சந்தனமுல்லை said...

நேயர் விருப்பம் : மலையில் இருந்த தேன் குரங்கு சாப்பிட்டு அப்புறம் குரங்கு கை வழியா...கீழே சிந்தி ஓடை மாதிரி ஆச்சுன்னு ஒரு சங்க கால பாடலை எங்க டீச்சர் விம் போட்டு விளக்கினார்....அதையும் நீங்க டார்ச் லைட் போட்டு காட்டணும்னு கேட்டுக்கிறேன்..ஹிஹி

ராமலக்ஷ்மி said...

நல்ல கற்பனை:)!

வில்லன் said...

Romba busy. Appurama varen.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ முகிலன் said...
கடைசியில ஒரு சங்கத்தமிழ்ப் பாடலை எதிர்பார்த்தேன்.///

வர வர எங்க நம்பிக்கைக்கு அளவே இல்லாம போச்சு.. :)

நல்லா இருந்தது..

சாந்தி மாரியப்பன் said...

இது மாதிரி இன்னும் நெறைய்ய சங்கத்தமிழ் கதைகளை எழுதுங்க. :-)).

sathishsangkavi.blogspot.com said...

நன்றாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது...

Vidhoosh said...

வரலாறு முக்கியம் இளைய தளபதி. அதை அழியாமல் காத்ததற்கு உங்களை...
சரி போகட்டும் விடுங்க.. :P

Chitra said...

சரித்திரத்தில் இளிச்ச வாயர்களுக்கு இடம் இருப்பதை, தங்களது ஆராய்ச்சியில் கண்டு பிடித்து வெளிப்படுத்தியதற்கு நன்றி.

பித்தனின் வாக்கு said...

// அந்த சம்பவத்திற்கு அப்புறம் தான் பச்சை குத்துவதும், இளிச்சவாயன் என்பதும் பிரபலம் அடைந்ததுன்னு சொன்னா நம்பவா போறீங்க //
நான் கண்டிப்பா நம்புகின்றேன். இந்த பதிவு போட்ட நீங்க பச்சை குத்துவபர். படிச்ச நான் என்னவாம். ஆமா கல்யாணம் ஆன ஆண்கள் எல்லாம் இ தானாமே. உண்மையா?

பா.ராஜாராம் said...

:-))

vasu balaji said...

அட கடவுளே! இந்த அநியாயத்த கேக்க யாருமேயில்லையா? என்னதான் அமெரிக்கா போனாலும் சங்கப்பாடலை அங்கைக்கு ஏத்தா மாதிரி மாத்திடுறதா?

/அதாவது காதலி, காதலியை நினைத்து வெண்ணை மாதிரி உருகுறதும்,/

இப்பிடி எங்கள எல்லாம் இ.வா.ஆக்கினா எப்படி?=))

சரி சரி! எப்பவும் போல மாத்தி படிச்சா அசத்தல்.

க.பாலாசி said...

//"ஏன் உங்க அப்பன் இல்லை, நீயும், நானும் சந்திப்பதை தடுக்கவே சிந்தித்து கொண்டே இருப்பவன், நம் காதலுக்கு எதிரி?"//

எங்கப்பாத்தாலும் இதே தொல்லைங்கதாங்க...

//"இல்லையா பின்னே" என்று ௬றி தலைவி எழுந்து ஓடுகிறாள், தலைவர் பினனால் ஓடுகிறார்.//

இந்த பொம்பளைங்களையே நம்பக்கூடாதுங்க...இப்டித்தான் அப்பப்ப உண்மையச்சொல்லி கவுத்துடுவாங்க...

நல்ல இடுகை...நகையுடன் ரசித்தேன்.

Radhakrishnan said...

இந்த டெம்ப்ளேட் எப்படி செய்வதுனு செய்முறை விளக்கம் தர இயலுமா? நேற்று தேடி தேடி அலுத்துவிட்டேன். பசலை நோய் இன்னமும் படிக்கவில்லை. மிக்க நன்றி.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

23ம் புலிகேசி படம் வந்து ரொம்ப நாளாச்சே. இப்பப் போய் இப்புடிக்கும்மியடிக்கிறீங்களே.ஏதாச்சும் இருக்கும்.

Unknown said...

ஏ.இ.கொ.வெ. :-))))

ஹேமா said...

திரு இ.வா அவர்களே...

//முன்ன பின்ன செத்தா தானே சுடு காடு தெரியும் என்பதாலே//

ம்க்கும்...எங்களுக்குத் தெரியாதா பிச்சைக்காரிக்கு பாட்டுப் படிச்சதும் அதுக்கப்புறம் பசலை நோயில கிடந்ததும் !

ரவி said...

:)))))))))))))

கண்மணி/kanmani said...

:)))

என்னத்தைச் சொல்ல?இது எந்த எலக்கியத்துல வருது?

நசரேயன் said...

நன்றி முகிலன் :- தல பாட்டு போட்டா சரிவருமா?

நன்றி சின்ன அம்மிணி :- அவ்வ்வ்வ்வவ்வ்வ்

நன்றி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா

நன்றி சந்தனமுல்லை :- அட நீங்க வேற புளிசாதமே பாத்து பல வருஷம் ஆகிபோச்சி, சிக்கன் சிக்கன் புளிசாததுக்கு எங்க போக, ஆமா நேயர் விருப்பமுன்னு சொல்லி என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலியே

நன்றி goma அக்கா :- எதுனாலும் திட்டுங்க கேட்டுகிறேன்

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி வில்லன் :- யோவ் கும்மி அடிக்க முடியாம அப்படி என்ன வேலை

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi :- ஒரு மனுசனை ரவுடி ஆக்கமா விட மாட்டீங்க போல

நன்றி அமைதிச்சாரல் :- ஏன் சங்கத்தமிழ் நல்லா இருக்கிறது பிடிக்கலையா ?

நன்றி Sangkavi

நன்றி Vidhoosh :- பதக்கம் எல்லாம் வேண்டாம், பரிசு பணமுடிப்பா இருக்கணும்

நன்றி Chitra :- இன்னும் நிறைய ஆராய்ச்சி இருக்கு

நன்றி பித்தனின் வாக்கு :- அண்ணே அதையெல்லாம் சபையிலே சொல்ல முடியாது

நன்றி பா.ராஜாராம்

நன்றி வானம்பாடிகள் :- அண்ணே இப்ப மாத்திட்டேன்

நன்றி க.பாலாசி

நன்றி V.Radhakrishnan :- இணையத்திலே சுட்டு, கொஞ்சம் மாற்றங்கள் செய்தேன், உங்க மின் அஞ்சல் முகவரி கொடுங்க நான் டெம்ப்ளட் அனுப்பி வைக்கிறேன்

நன்றி க.நா.சாந்தி லெட்சுமணன். :- இது சங்க கால புலிகேசி


நன்றி திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). :- என் இந்த கொலை வெறி சரியா ?



நன்றி ஹேமா :- உண்மையெல்லாம் சபையிலே சொல்லப்புடாது



நன்றி செந்தழல் ரவி



நன்றி கண்மணி :- சங்க கடிக்கிற இலக்கியம் இது

ஷண்முகப்ரியன் said...

அற்புதம்,நச்ரேயன்.மிகப் பெரிய விஷயங்கள் பார்ப்பதற்கு முதலில் காமடியாகத்தான் தோன்றும்.
சங்க இலக்கியத்தை இது வரை நமது கிராமிய ஸ்டைலில் சொன்னதை நான் இதுவரை எங்குமே படித்த்ததில்லை.
பிரம்மித்துப் போனேன் என்பதே உண்மை.
மனமார்ந்த மிகப் பெரிய பாராட்டுக்கள்,நச்ரேயன்.

Unknown said...

Super :)

வில்லன் said...

/நான் பச்ச புள்ளையா இருக்கும் போது(இப்பவும் அப்படித்தான் இருக்கேன்) //

ஏழு கழுத வயசாகுது இன்னும் பச்ச புள்ளைய....அலும்பு தாங்க முடியல.... "அவமானம்" பகுதில எழுதுனாபுல உங்க மாமனார் பச்சப்புள்ளன்னு சொன்னதால இந்த அலும்பா? இதெல்லாம் நல்லா இல்ல தல.....

வில்லன் said...

//"உள்ளுரிலே உங்களுக்கு எதிரியா?"

"ஏன் உங்க அப்பன் இல்லை, நீயும், நானும் சந்திப்பதை தடுக்கவே சிந்தித்து கொண்டே இருப்பவன், நம் காதலுக்கு எதிரி?"//

கதையோட ஹய்லைட்டே இதான் தல........ அப்பா அந்த காலத்துலேயே இந்த கொலை வெறி இருந்துதுன்னு சொல்லுங்க!!!!!!!!!! உங்கள மாதிரி பெரியவங்க சொன்னதான எங்கள மாதிரி சின்ன பசங்களுக்கு (இளைய தலைமுறைக்கு) புரியும்........

வில்லன் said...

//அந்த சம்பவத்திற்கு அப்புறம் தான் பச்சை குத்துவதும், இளிச்சவாயன் என்பதும் பிரபலம் அடைந்ததுன்னு சொன்னா நம்பவா போறீங்க //

என்ன சொல்ல வாரீறு????????????? இத எழுதுன நீறு "பச்சை"னும்.... அத படிக்குற நாங்க "இளிச்சவாயன்" என்று சொன்னாலும் நாங்க என்ன நம்பவா போறோம்....

Radhakrishnan said...

ஹா ஹா! மிகவும் அருமையாக இருக்கிறது.

மிக்க நன்றி, டெம்ப்ளேட் தேடி கண்டுபிடித்துவிட்டேன், அலங்காரம் செய்வது எல்லாம் எளிதாக புரிந்துவிட்டது.

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ ...நல்லா இருக்கு இடுகை.

இதுல இவ்வளவு சங்கதி இருக்கா :-)....

நட்புடன் ஜமால் said...

பச்ச புள்ளைக்கு வந்திருச்சா பசலை

அடிக்கடி நீங்க ஒரு இலக்கியவியாதின்னு நிறுபிக்கிறீங்க

நீங்க தான் முதல் இ.வா-வா

ஹேமா என்னமோ சொல்றாங்களே

அதையும் எழுதுங்களேன் ...