Tuesday, February 2, 2010

அமெரிக்க குடிமகன்

ஐந்து வருடத்திற்கு பிறகு இந்தியா செல்கிறேன்.இந்த தொலை தூர பயணத்திலே என் நினைவுகளை சற்று பின்னோக்கி திரும்பி பார்க்கிறேன். 


அமெரிக்காவை பற்றி ஐந்தாம் வகுப்பிலே படிக்கும் போதே அங்கே செல்ல வேண்டும் என்று கனவு கண்டேன், அதற்கு ஏற்ற படி என்னுடுடைய மேல் படிப்பை தேர்ந்து எடுத்தேன்.படித்து முடித்து வேலையிலே சேர்ந்தேன், அமெரிக்கா செல்ல எப்படி உழைக்க வேண்டுமோ அதை மனதிலே கொண்டு கடின உழைப்பை மேற்கொண்டேன்.


எனது வேலையின் வேகம் என்னை அமெரிக்கா கொண்டு செல்ல தீர்மானித்தது, அலுவலக செலவிலே மூன்று மாத வேலையாக  அமெரிக்கா வந்தேன், வந்ததும் திரும்பி செல்ல மனம் இல்லாமல், அழைத்து வந்த அலுவலகத்திற்கு தெரியாமல் அடுத்த அலுவலகத்திற்கு மாறினேன். 


அலுவலகம்  மாறிய தினத்திலே இருந்து அமெரிக்காவிலே நிரந்தமாக தங்க வேண்டிய வழிகளில் வேலை செய்ய ஆரம்பித்தேன், எனது சுய நலத்திற்காக நான் செய்யும் செயல் எல்லாம், என் வாழ்கையில் முன்னேற பெரிதும் துணையாய் இருந்தது. இருந்த அலுவலகம் வழியாகவே எனக்கு பச்ச அட்டைக்கு விண்ணப்பம் செய்தார்கள்.இதற்கிடையே என்  திருமணமும் நடந்து மனைவியும் என்னோடு வந்து சேர்ந்தாள். 


பச்சை அட்டைக்கு விண்ணப்பம் செய்து விட்டு, அதிலே உள்ள பல்வேறு நிலைகளிலே உள்ளது தான் இந்த   I-485 .அப்போது தான் எனது தந்தை இறந்ததாக செய்தி வந்தது, குடும்பத்திற்கு தலைமகனாக இருந்தும், ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய ஈம சடங்குகளை செய்ய முடியாத நிலை. I-485 யில் இருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியே போனால் என்னுடைய பச்ச அட்டை விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள் என்று நண்பர்கள் பலர் ௬ற, அமெரிக்க கனவு கானல் நீராகிவிடும் என்ற நம்பிக்கையிலே நான் ஊருக்கு செல்ல  வில்லை. 




அப்பா இறந்து ரெண்டு வருஷம் கழித்து பச்சை அட்டை வாங்கிய பிறகு  ஊருக்கு சென்றேன், அம்மாவை  பார்த்து பேச முடியாத ஒரு குற்ற உணர்வு, தான் கண் மூடும் முன்னே என்னைய பார்த்து விடலாம் என்பதே அப்பாவோட கடைசி ஆசையாக இருந்தது, அவரோட கடைசி ஆசை நிராசை ஆனதை அம்மா சொல்லி குறைபட்டாள்.அம்மாவின் நிலையை பார்த்து தப்பு பண்ணிவிட்டதாக நினைத்தாலும், வாழ்ந்து முடித்த அவர்களை விட,நல்ல நிலையிலே வழ நான் எடுத்த முடிவு சரியே என்று மனதை சமாதானப் படுத்தி கொண்டேன். 


எனது அமெரிக்கா கனவை நினைவு ஆக்குவதிலே உறுதுணையாய் என் தந்தை எனக்கு இருந்தார், அவர் இன்று எங்களோட இல்லாவிட்டாலும்,அவரின் நினைவுகள் மட்டும் என்னோடு இருக்கிறது.மீண்டும் திரும்பி வந்து வழக்கம் போல பணிகளை செய்ய ஆரம்பித்தேன், இந்த முறை அமெரிக்க குடியுரிமை வாங்குவதற்காக, வேண்டியது கிடைத்தது.   


இந்த சுழலிலே ஊரிலே இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது அம்மாவிற்கு உடம்புக்கு சரி இல்லை என்று,இந்த முறை எந்த அசம்பாவாதங்களும் நடந்து விடக் ௬டாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக என் அம்மாவின் நிலை கவலை கிடம் என்று தெரிந்த உடனே கிளம்பிவிட்டேன்.அம்மாவிடம்  நினைவு இருக்கும் போது ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்ற ஆசையிலே எனது பயணமும் தொடர்ந்தது. முடிவில்லா உலகிலே இருக்கும் எனது தொலை தூர பயணமும் முடிவுக்கு வந்தது, விமானம் சென்னையிலே தரை இறங்கியது.


விமானம் சென்னையிலே தரை இறங்கியதும் உள்ளூர் உறவினரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் சொன்ன செய்தியை கேட்டு வேகமாக பெட்டிகளை எடுத்துக்கொண்டு கிளம்பினேன், மனைவியையும் துரிதப் படுத்தினேன். சலிப்பு அடைந்த அவள் சட்டை செய்யாமல் இருந்த அவளிடம் உண்மையை  சொன்னேன். "அம்மா தவறீட்டாங்களாம் இப்ப தான் போன் வந்தது" 


 எனக்கு ஆறுதல் சொல்லும் நிலையில்  அவளும் , என்னை தேற்ற துணை வேண்டும் என்ற நிலையில் நானும்  இல்லாததால், அமைதியாக குடியேற்ற துறை க்கு செல்லும் வரிசையிலே நின்றோம்


என் சுய நலத்திற்காக எனது வாழ்க்கை வளைவுகள் இல்லாமல் வேகமாக சென்றாலும், நான் குடியேற்ற துறையை கடந்து துக்க வீட்டிற்கு செல்லும் வரிசை மெதுவாகவே சென்றது.குடியேற்ற அதிகாரிகள் தன்னுடைய வேலைகளை எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக முடித்து கொண்டு இருந்தனர், என் முறை வந்ததும் நான் எங்களிடம் உள்ள கடவு சீட்டுகளை கொடுத்தேன். அதை எடுத்து ஒவ்வொன்றாக சோதனை செய்தார்.


சோதனை செய்து முடித்த பின்  "உங்க விசா எங்கே ?" 


"என்ன?"


"எங்க நாட்டிலே நுழைய உங்களுக்கான அனுமதி எங்கே?" என என்னோட அமெரிக்க கடவுச்சீட்டை காட்டி கேட்டார்.


அமெரிக்கா எனது தாய் நாடு, இங்கே உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன், என் தாய் நாட்டை தாயைப் போல நேசிப்பேன் என்று உறுதி மொழி எடுத்துகொண்டது ஞாபகம் வந்தது.தாய் நாட்டுக்கு வருவதைப்போல வந்தேன், என் தாய் நாடு இது இல்லை என்பதை மறந்து.தாய் ஒரு நாட்டிலே இருந்தாலும் தனக்கு தாய் நாடு வேறு என்பதை நினையாமல் இந்தியாவிற்கு செல்ல விசா வாங்க மறந்து விட்டதை உணர்ந்தான்.   


ஒரு நிமிடம் என்ன செய்ய வேண்டும் என்று தோன்ற வில்லை என்றாலும், அதிகாரியிடம் 


"ஐயா நானும் இந்தியன் தான்"

"இல்லை.. நீங்க இந்தியர் இல்லை, அமெரிக்கா கடவுச்சீட்டு வைத்து இருக்கும் நீங்க எப்படி இந்தியன் ஆக முடியும்?" 

"எங்க அம்மா இறந்து விட்டார்கள் நான் எப்படியாவது போக வேண்டும்,என்னை தயவு செய்து அனுமதியுங்கள்"  

"அனுமதிக்கிறேன் நீங்க போயிட்டு விசா வாங்கிட்டு வாங்க"

"ப்ளீஸ் சார்.. ப்ளீஸ்"  சொல்லும் போதே என் கண் கலங்கி என்னை அறியாமலே கண்கள் பனித்தது,வெகு நாட்களாக காணமல் போன கண்ணீர் ஒரு குழந்தையை போல ஒட்டிக் கொண்டது. 

"ஐ யம்  சாரி"  என்ற பதிலை சொல்லி விட்டு

பின்னால் இருந்த ௬ட்டத்தை பார்த்த அதிகாரி,அருகிலே இருந்த காவல் துறை அதிகாரியிடம் என்னை மீண்டும் எனது கனவு தேசமாக இருந்து இன்று என் தாய் தேசமாக இருக்கும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பும் பணியை செய்ய ஏவினார்.என்னுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற்றி கொடுத்த என் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல்,   
சொந்தங்கள் நிறைந்த  நாட்டிலே அந்நியன் ஆக்கப்பட்டு தனித்து விடப்பட்ட அனாதைகள் போல நானும் என் மனைவி மக்களும் வேறு வழி இல்லாமல் காவலரின் பின் சென்றோம்.



41 கருத்துக்கள்:

ஹேமா said...

நசர்...உண்மையாவே கற்பனையா ?இப்படி எங்கள் வாழ்வில் நான் நிறைய கண்டு அனுபவித்திருக்கிறேன்.
என்றாலும் மனம் தவித்து அடங்காமல்தான் !

வில்லன் said...

ஐயா நான் தான் மொதல்ல......

வில்லன் said...

//எனது கனவு தேசமாக இருந்து இன்று என் தாய் தேசமாக இருக்கும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பும் பணியை செய்ய ஏவினார்.என்னுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற்றி கொடுத்த என் பெற்றோர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல்,

சொந்தங்கள் நிறைந்த நாட்டிலே அந்நியன் ஆக்கப்பட்டு தனித்து விடப்பட்ட அனாதைகள் போல நானும் என் மனைவி மக்களும் வேறு வழி இல்லாமல் காவலரின் பின் சென்றோம்.//

உண்மைலேயே ஒவ்வொரு பச்சை அட்டை செகப்பு அட்டை என பல அட்டை உள்ளவங்களை சிந்திக்க வைக்கும் பகுதி.....

"ரியல்லி" சூப்பரு அப்பு..... அசத்துங்க..... கண்டிப்பா கனவுல தென்பட்டதே..... சந்தேகம் இல்ல.... ஏன்னா உங்க கிட்ட பச்சை அட்ட செகப்பு அட்டை எதுவுமே இல்லையே....

ப்ரியமுடன் வசந்த் said...

நசர் நிஜமா ? இப்பிடி ஒரு நிலை எந்த மனுசனுக்கும் வரக்கூடாதுடா சாமீய்ய்........அமெரிக்கா பாஸ்போர்ட் இருந்தா இந்தியாவர விசா வாங்கணுமா அய்யைய்யோ என்ன ஒரு சட்டம்டா?

அது சரி(18185106603874041862) said...

//
குடும்பத்திற்கு தலைமகனாக இருந்தும், ஒரு தந்தைக்கு செய்ய வேண்டிய ஈம சடங்குகளை செய்ய முடியாத நிலை. I-485 யில் இருக்கும் போது அமெரிக்காவை விட்டு வெளியே போனால் என்னுடைய பச்ச அட்டை விண்ணப்பத்தை நிராகரித்து விடுவார்கள் என்று நண்பர்கள் பலர் ௬ற, அமெரிக்க கனவு கானல் நீராகிவிடும் என்ற நம்பிக்கையிலே நான் ஊருக்கு செல்ல வில்லை.
//

//
அவளிடம் உண்மையை சொன்னேன். "அம்மா தவறீட்டாங்களாம் இப்ப தான் போன் வந்தது"
//

இது உண்மையா இல்லை புனைவான்னு தெரியலை நசரேயன்...ஆனா, வெளிநாட்டில் இருக்கும் பலரின் நைட்மேர்.... உள்ளே அழுது கொண்டே வெளியே வழக்கம் போல இருக்கும் பலருண்டு....

//
"இல்லை.. நீங்க இந்தியர் இல்லை, அமெரிக்கா கடவுச்சீட்டு வைத்து இருக்கும் நீங்க எப்படி இந்தியன் ஆக முடியும்?"
//

இதுக்கு ஓ.சி.ஐ. கார்டு எடுத்துக்கலாம்...விசா தேவைப்படாது!

அது சரி(18185106603874041862) said...

//
பிரியமுடன்...வசந்த் said...
நசர் நிஜமா ? இப்பிடி ஒரு நிலை எந்த மனுசனுக்கும் வரக்கூடாதுடா சாமீய்ய்........அமெரிக்கா பாஸ்போர்ட் இருந்தா இந்தியாவர விசா வாங்கணுமா அய்யைய்யோ என்ன ஒரு சட்டம்டா?
//

வசந்த்,

சட்டம் அது தான்...அமெரிக்க பாஸ்போர்ட் வாங்கிய நிமிடம் நீங்கள் அன்னிய பிரஜை ஆகிறீர்கள்...உங்களுக்கும் மற்ற அமெரிக்கர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...

Anonymous said...

பச்சை அட்டை வேற.... பாஸ்போர்ட் வேற... என்னதான் கதை எழுதினாலும், உண்மைன்னு ஒன்னு இருக்கில்லையா?

Thekkikattan|தெகா said...

கதை மிக நேர்த்தியாக செல்கிறது. இது போன்று சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்துவிடுவதுண்டுதான், அதனால் யாரை குற்றம் சொல்வது. இது ஒரு சிக்கலான வாழ்வமைவு.

//அப்பா இறந்து ரெண்டு வருஷம் கழித்து பச்சை அட்டை வாங்கிய பிறகு ஊருக்கு சென்றேன், //

கொஞ்சம் லாஜிக் இடிக்குது, பச்சை அட்டையில் இருக்கும் வரையில் இந்திய கடவு அட்டையில்தான் இருக்கிறோம். பின்பு அமெரிக்கா குடிமகனாக ஆகும் பட்சத்தில் இந்திய குடியுரிமை இழக்கிறோம். ஆனால், ஒரு நான்கு வருடங்களுக்கு முன்னாலோ அதற்கு முன்போ OCI (Overseas Cititzen of India) என்ற சட்ட திருத்தத்தின் பேரில் இப்பொழுது இரட்டை குடியுரிமைக்கு நிகராக விசா இல்லாமலேயே எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் போகலாம், வரலாம். இது ஒரு செய்திக்காகவே, இங்கே இடுகிறேன்...

பழமைபேசி said...

தளபதி... அடிச்சு ஆடுங்க....

sriram said...

அன்பின் நசரேயன்,
விஜய் படம் மாதிரி லாஜிக் இல்லாம கதை சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற எந்த இந்தியரும், இந்தியா வருவதற்கு விசா வாங்குவதில்லை. PIO (person of Indian origin) அட்டை வாங்கி கடவுச் சீட்டுடன் இணைத்துக் கொள்வார்கள், 485 ஸ்டேஜல இந்தியா போகக் கூடாதுன்னு நெனச்சவருக்கு இது தெரியாதுன்னு சொன்னா நம்ப முடியல..

நாட்டுக்குள்ள விடலன்னு சொன்னதுக்கு பதிலா, வெளிநாட்டவருக்கு உரித்தான நீண்ட வரிசையில் நிக்க வெச்சிட்டாங்கன்னு சொல்லியிருந்தா சரியா இருந்திருக்குமோ??


என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

நல்லவேளை. கற்பனைன்னு போட்டீங்க.

எந்த நாட்டு பாஸ்போர்ட் இருக்குன்னு கூட ஞாபகம் இல்லாம இப்படியா அசட்டையா இருக்கறது

துளசி கோபால் said...

நானும் என் பங்குக்கு ஒன் னு சொல்லிட்டுப் போறேன்.

இப்போ இந்தியாவுலே விஸா ஆன் அரைவல்ன்னு ஆரம்பிச்சு இருக்கு. இது ஒரு 7 நாடுகளுக்குச் செல்லுமாம். அதுலே நியூஸியும் ஒன்னு.

இங்கே வந்து இறங்குனதும் விஸா இல்லைன்னா அங்கேயே 60 அமெரிக்கன் டாலர் கட்டி வாங்கிக்கலாம். டெம்ப்ரரி விஸா கிடைக்கும். மூணு மாசத்துக்குன்னு நினைக்கிறேன்.

உங்களை உக்கார்த்திவச்சு ஏர்ப்போர்ட்லேயே இண்டர்வ்யூ செஞ்சுதான் கொடுப்பாங்களாம்.

தனியா ஒரு முழ நீள ஃபாரம் ஃபில் அப் செய்யணும்.

கொசுறுத்தகவல்: ஏகப்பட்ட கேள்வி கேப்பாங்க. பேசாம நீங்க அங்கிருந்தே விஸா வாங்கிட்டு வந்துட்டீங்கன்னா நல்லதுன்னு அங்கே இருந்த 'அதிகாரி' சொன்னார்.

ராமலக்ஷ்மி said...

விசா விதிமுறை இவை தாண்டி சொல்ல வந்திருக்கும் உணர்வுகள் புரிகிறது.

Unknown said...

நல்ல கதை.. உணர்வுகள் புரிகிறது..

ஓ.சி.ஐ வாங்க பெற்றோர்களில் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். பெற்றோர் இருவரும் இந்தியக் குடியுரிமை உள்ளோரெனில் பி.ஐ.ஓ தான் பெற முடியும்... (லேட்டஸ்ட் ரூல்ஸ்.. முகிலனுக்கு எடுக்கும் போது தெரிய வந்தது)

ஆ.ஞானசேகரன் said...

கர்ப்பனையானாலும் உண்மை நிலை இதுதான்....

குலவுசனப்பிரியன் said...

விமான நிலையத்தில் நுழைவு சீட்டு, சுமைகள் மட்டுமன்றி போகுமிடத்திற்கான விசாவையும் சரிபார்த்தபின் தான் இருக்கை சீட்டே தருகிறார்கள்.

நானும் எனக்கு முன் அமெரிக்கா வந்துவிட்ட நண்பர்களிடம், இந்தியா புண்ணிய பூமி என்று தத்துபித்தென்று உளறி இருக்கிறேன்.

இங்கே வந்த பின்புதான் நம்நாட்டில் பெற்றோர் முதற்கொண்டு சமூகம், கல்வி, அரசு என எல்லா தளத்திலும் நம்மை எப்படியெல்லாம் அறியாமை இருளிலேயே வைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது.

சந்தனமுல்லை said...

உங்க கதைன்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சேன்.../அமெரிக்கா செல்ல எப்படி உழைக்க வேண்டுமோ அதை மனதிலே கொண்டு கடின உழைப்பை மேற்கொண்டேன்.
/ இந்த இடத்தில் உண்மை தெரிந்துவிட்டது!! :-)))

சந்தனமுல்லை said...

அப்போ ட்யூயல் சிட்டிசன்ஷிப் ??

சந்தனமுல்லை said...

தி.கு.ஜ.மு.க பணிகள் எந்த அளவிலே இருக்கு? :-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கதை

அரங்கப்பெருமாள் said...

சோகமானக் கதை என்பதைத் தவிர சொல்லும்படியாக இல்லை...

அரங்கப்பெருமாள் said...

அமெரிக்காவுல இருக்கிற சில (கவனிக்க... சில) இந்தியப் பெண்களைப் பற்றிச் சொல்லலாம். அடிக்க வருவாய்ங்க. டிபெண்டெண்ட் விசாவுல இருக்க சில அம்மணிகள் அடிக்கும் லூட்டிகள்...... அய்யோ... (சிந்துபைரவி ஜனகராஜ் போல என் தலை இருக்கு).

Muthu said...

I-485 நிலையில் வெளிதேசம் செல்லலாம். பச்சை அட்டை விண்ணப்பம் இதனாலெல்லாம் நிராகரிக்கப்படமாட்டது. இதற்காகத்தான் AP என்று சொல்லப்படும் Advance Parole என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். $350 கட்டி விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொண்டால் அது காலாவதி ஆகும் வரை (2 ஆண்டுகள்) அமெரிக்காவை விட்டு வெளியே போய்வரலாம்.

என் I-485 pending-ல் இருந்தபோது நான் குடும்பத்தோடு அப்படித்தான் சென்று வந்தேன்.

Chitra said...

கற்பனை கதை - பிரச்சினையின் தாக்கம் நிஜம்.

goma said...

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்றிருக்கும் [ஆறு எது சேறு எது என்பது அவரவர்கள் மனப்போக்கில்..]
இந்தியர்களின் அவல நிலை அழகாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள்.[கருத்தை மட்டும் எடுத்து வாசிப்போம். ]

ராஜ நடராஜன் said...

வெளி நாட்டுக் கதைக்காவது வாழ்க்கையில சமரசம் என்ற வார்த்தை இருக்கிறது.ஆனா இந்தியாவிலிருந்து கொண்டே அப்பா,அம்மாக்களை தவிக்க விடுவதற்கு என்ன தீர்வு இருக்கிறது?

முன்பு இல்லாத முதியோர் இல்லங்கள் எல்லாம் எப்படி முளைத்தன?
முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலேயெதான் வாழ்கிறார்களா?

இதுபற்றி அறிந்தவர்கள் யாராவது பின்னூட்டமிட்டால் புரிதலுக்கு உதவும்.நன்றி.

vasu balaji said...

கதைக் கரு நல்லாருக்கு.:)

அண்ணாமலையான் said...

கதயோட முக்யமான கட்டமே ஆடுதே...பாஸ்டன் ஸ்ரீராம் கமெண்ட்ல..

SUFFIX said...

பலரது வாழ்க்கை இப்படி தான் ஓடிக்கொண்டு இருக்கிறது, கதையானாலும் மனதை தொட்டுவிட்டது நணபரே!!

நசரேயன் said...

நன்றி ஹேமா

நன்றி வில்லன்

நன்றி வசந்த் :- ஒரு கற்பனை தான் உண்மையிலே நடக்க சாத்திய கூறுகள் மிக குறைவு

நன்றி அது சரி :- ஆமா ஓ.சி.ஐ. கார்டு இருக்கு

நன்றி Anonymous :- ஆமா ரெண்டுமே வேறுதான்

நன்றி Thekkikattan|தெகா :- ஓ.சி.ஐ. இருக்கு

நன்றி மணி அண்ணே

நன்றி sriram : - நீங்க சொல்வது உண்மைதான், ஆனா இரண்டு நடந்த சம்பவங்கள் காரணம் கதையிலே சொல்லப்பட்டதில்லை, ஒரு சோக இழையோட முடிக்கணும் என்பதற்காக எழுதப் பட்டது. இன்னொரு கொசுறு தகவல் என்னோட முந்திய இடுகை "மேலாளர் வேலைக்கு விண்ணப்பம்" உங்களிடம் இருந்து சுட்டதுதான்.

நன்றி சின்ன அம்மிணி :-௦100௦ சதவீதம் கற்பனையே

நன்றி துளசி கோபால் டீச்சர்

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி முகிலன்

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி குலவுசனப்பிரியன்

நன்றி சந்தனமுல்லை :- இப்படி உண்மையெல்லாம் சபையிலே சொல்லுவேன்னு தான் நான் அதிகம் பேசுறதே இல்லை. தி.கு.ஜ.மு.க பணிகள் விரைவிலே

நன்றி T.V.Radhakrishnan ஐயா

நன்றி அரங்கப்பெருமாள் :- நீங்க சொன்னதை வச்சி தனியா இன்னொரு இடுகை போடலாம்

நன்றி Muthu :- உண்மை

நன்றி Chitra

நன்றி goma அக்கா

நன்றி ராஜ நடராஜன் :- இன்னும் அந்த நிலைமை எனக்கு வரலை

நன்றி வானம்பாடிகள்

நன்றி அண்ணாமலையான் :- விளக்கம் கொடுத்து இருக்கேன்

நன்றி SUFFIX

sriram said...

அன்பின் நசரேயன்..
கதை நல்லா இருந்தது, லாஜிக் இடிக்குதுன்னுதான் சுட்டிக்காட்டினேன், புரிந்தமைக்கு நன்றி..

மேலாளர் - மொழியாக்கம் முன்னரே படித்தேன், நல்லா இருந்தது.. எனக்கும் அது சுட்ட பழம்தான்.. மேலும் நான் எழுதியதை (காப்பி அடித்ததை??) நீங்களும் எழுதியதை சுட்டிக் காட்ட விரும்பவில்லை, இப்போ நீங்க சொன்னதால சொன்னேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

//
sriram said...
அன்பின் நசரேயன்..
கதை நல்லா இருந்தது, லாஜிக் இடிக்குதுன்னுதான் சுட்டிக்காட்டினேன், புரிந்தமைக்கு நன்றி..

மேலாளர் - மொழியாக்கம் முன்னரே படித்தேன், நல்லா இருந்தது.. எனக்கும் அது சுட்ட பழம்தான்.. மேலும் நான் எழுதியதை (காப்பி அடித்ததை??) நீங்களும் எழுதியதை சுட்டிக் காட்ட விரும்பவில்லை, இப்போ நீங்க சொன்னதால சொன்னேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

நீங்க சுட்ட பழம்ன்னு போட்டதாலே, உங்க இணைப்பு கொடுக்கவா வேண்டாமா என ரெம்ப யோசித்து சுட்ட பழத்தை சுட்டதை சொல்லலை

ILA (a) இளா said...

கதை நல்லா இருக்கு. ஆனா Logicல பெரிய ஓட்டை இருக்கே. Dual Citizenship இந்தியர்களுக்கு உண்டே...

அன்புடன் மலிக்கா said...

உண்மைகள் சுடுகின்றன..நல்ல இடுகை


/தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்/

நல்லயிருக்கு இந்த வரிகள்

துளசி கோபால் said...

நல்லா இருக்கு வரி. ஆனா.... புரியலை.

அதான் தடியை எடுப்பதை விட்டுட்டோமே. அப்புறம் நீ எடுத்த தடி.....

ஓ...நான் எடுக்க வேணாமுன்னு விட்டதை.... இன்னொருத்தர் எடுத்து அது வளர்ந்து விண்ணை முட்டுமா?

கேக்கணுமுன்னு நினைச்சது விட்டுப்போச்சு. இப்ப மலிக்கா பின்னூட்டம் பார்த்து உடனே கேட்டுட்டேன்.

Vidhoosh said...

///வகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை///
உஸ்ஸ். அப்பாடி நல்ல வேளை கதை கற்பனைதான்... :(

Vidhoosh said...

///சட்டம் அது தான்...அமெரிக்க பாஸ்போர்ட் வாங்கிய நிமிடம் நீங்கள் அன்னிய பிரஜை ஆகிறீர்கள்...உங்களுக்கும் மற்ற அமெரிக்கர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...///
அது சரி. சட்டம் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். but are you being treated like that there???

நசரேயன் said...

நன்றி இளா :-தலைவரே எனக்கு தெரிந்த வரை பி.ஐ.ஒ கார்டு தான் இருக்கிறது, அதையே Dual சிடிசன்ஷிப் ஆக வச்சிக்கலாம், ஆனா அதற்கும் நீங்க விண்ணப்பம் செய்யவேண்டும். பி.ஐ.ஒ கார்டு இல்லாம விசா விலே இந்திய சென்று வருகிறவர்களும் இருக்கிறார்கள்.

நன்றி அன்புடன் மலிக்கா

நன்றி டீச்சர் : இதுக்கு தான் உங்க வகுப்புக்கு ஒழுங்கா வரணுமுன்னு சொல்லுறது

கார்த்திகைப் பாண்டியன் said...

கதை நல்லாவே இருக்கு நண்பா

நசரேயன் said...

நன்றி Vidhoosh :-

என்னைய மாதிரி கருப்பு அண்ணாச்சி மார்கள், போறப்ப வாரப்ப எல்லாம் ஒரு டாலர் கொடுன்னு மரியாதையா கேட்டு வாங்கிக்குவாங்க

நன்றி வாத்தியார்

சிங்கக்குட்டி said...

என்ன சொல்றதுன்னு தெரியல நசரேயன் :-(