Monday, January 4, 2010

வட்டக் காதல்(circle love) - பாலிவுட் பட விமர்சனம்

இந்தி'ய திரை உலகத்திலே ஹாலிவுட் படங்களின் தாக்கம்  அதிகமா இருப்பதால் முந்திய காலங்களில் ஹாலிவுட் படங்களை சுடும் போது பெரும்பாலும் நமக்கு தெரிவதில்லை, இப்போ படத்தின் போஸ்டர் பார்த்து அது எந்த ஹாலிவுட் படம் என்பதை கண்டு பிடித்துவிடலாம், அதனாலே இப்போ எல்லோரும் வட கொரியா, ஜப்பான் போன்ற மொழி படங்களை அதிக அளவிலே சுடுகிறார்கள்.அதையும் சப்ப மூக்கனுக்கு தெரியாம ஹாலிவுட் காரங்க கிட்ட போட்டு காட்டி எப்படி ஆஸ்கார் வாங்கலாமுன்னு யோசித்து கிட்டு இருக்காங்க,இது நடக்கிற கதை, இனி நடக்க போற கதையை பார்ப்போமா?


 
காதல்ல முக்கோணம், சதுரம், செவ்வகம், நாற்கோணம்,காலச்சார முன்னோடிகள் என எடுத்துரைக்க பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் என்றும் இப்படி பல கோணங்களில் சொல்ல இந்திய திரை உலகிலே பாலிவுட் காரங்களை மிஞ்ச முடியாது, அதற்கு அங்கே இருக்கும் நடிகர்கள், நடிகைகள் எல்லோரும் பஞ்சம் இல்லாம நடிச்சி கொடுப்பாங்க.நம்ம ஊரிலே ஒரு படத்திலே ரெண்டு நடிகர்கள் நடித்ததால், அதற்கு பின் ஆயுசுக்கும் அவங்க பேசுறது கிடையாது, அந்த அளவுக்கு ஒற்றுமையா? இருக்கிறோம்.


 
நான் எழுதிய இந்த கதைக்கு(?) நிறைய நடிகர்கள் தேவைப் படுவதால் கதை(?) கோலிவுட் தாண்டி ரெக்கை முளைத்து பாலிவுட் பறக்கிறது. இந்த கதையும் உலக திரைப் படங்களிலே சொல்லப் படவில்லை, அப்படி சொல்லி இருந்தாலும் அது என் கதையா இருக்க வாய்ப்பே இல்லை என்பது நான் எழுதும் மொக்கை மீது சத்தியம். அங்கே சாலை ஓரங்களிலே உள்ள மலர்களை( நம்ம ஊரு தத்தா செடிதான்) அனுமதி இல்லாமல் படம் பிடித்து காட்டுவதாலே என்னவோ இந்தி'ய படங்களை உலகம் இன்னும் வியந்து பார்க்கிறது.


இதும் ஒரு காதல் கதைதான், அதாவது வட்டக்காதல் என்ற பொன்னான கருத்தை உள்ளடக்கியது, இதற்கு நடிகர்கள் இங்கிட்டு நாலுபேரு, அங்கிட்டு நாலு பேரு போட்டுக்கணும், அங்கிட்டு இருக்கிற நாலு பேரும், இங்கிட்டு இருக்கிற நாலு பேருக்கும் துண்டு போடுறாங்க, கதை போகும் போக்கிலே யார், யாருக்கு துண்டு போட்டு இருக்கிறார்கள் என்பதை படம் பார்க்கும் சினிமா ரசிகர்கள் கண்டு பிடிக்க முடியாத ஒரு நிலைக்கு செல்லும், படம் பார்க்கிறவங்களுக்கு குழப்பம்முனா படம் எம்புட்டு நாள் ஓடுமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.


இந்திய படம் என்று டைட்டில் மட்டுமே சொல்லும் படங்களைப் போல இந்த படமும் எல்லா காட்சிகளும் வெளி நாடுகளிலே எடுக்கப் படுகிறது, வெளிநாட்டிலே படம் எடுத்தால் தான் இந்தியா வல்லரசு ஆகும் என்பதை குறிக்கோள் காட்டும் உலக தரம் வாய்ந்த படம்.
 
குறிப்பாக ஒரு காட்சியிலே வட்டக்காதலில் ஒரு நாயகியை அழைத்து கொண்டு வெளிநாட்டிலே இருக்கும் பனை மரத்தை காட்டி அவளோட பிறந்த நாள் பரிசுக்கு தான் கொடுக்கும் அதிர்ச்சி வெகுமதி என்று சொல்லுகிறார். அதை கண்டதும் அந்த நாயகி இந்த உலகத்திலே காணததை கண்டதைப் போல வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாள், பட்டிகாட்டு காரி மிட்டாய் கடையை பார்க்கிறது போல நாயகனைப் பார்த்து ஐ லைக் யு என்று சொல்லுகிறாள், படத்திலே ஐ லவ் யுக்கும், ஐ லைக் யுக்கும்   பத்தாயிரம் மைல் தூரம் என்பதை புரிந்து கொள்ளும் பொருட்டாக இந்த வசனம் பத்தாயிரம் தடவை வரும்.


இன்னொரு காட்சியிலே இன்னொரு நாயகிக்கு ஒரு வெளிநாட்டு வாய்க்கா தண்ணியை காட்டிவிட அதை பார்த்து ஆனந்த சந்தோசத்திலே தண்ணிர் அவள் கண்களிலே இருந்து தாரை தாரையாய் வந்து அந்த வாய்க்கா அளவுக்கு இன்னொரு கண்ணிர் வாய்க்கா வாக ஓடுகிறது, இப்படி பல காதல் ரசம் நிறைந்த  காட்சிகள் உண்டு.இப்படி போய் கொண்டு இருக்கும் வட்டக்காதலிலே ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்து உடைந்தது போல உடைந்து வெளியிலே இருந்து திபு திபு என ஒரு ௬ட்ட நடிகர்களின் அறிமுகத்திலே கதை இடியாப்ப சிக்கலில் சிக்கி கொள்கிறது.
 
(இங்கே இடைவெளி விட்டு ரசிகர்களுக்கு இடியாப்பம் இலவசமாக வழங்கப் படுகிறது.)
 
இரண்டாம் பாதியிலே இடியாப்ப சிக்கலை உடைத்து இட்லி சிக்கல் போல மாற்றி படம் இறுதிக்கு வரும் முன்னே தோசையாகி தொங்க விடப்படும், இந்த இடத்திலே இருந்து அடுத்த பாகத்திற்கு போக வழி வகை செய்ய, கடைசியிலே வட்டத்திலே இருந்த பல வேறு நடிகர்களை கழட்டி விடும் படியாக காட்சிகளை வெளிநாட்டிலே அமைத்து வெட்டி விட்டு கதை இரும்பை கண்ட காந்தம் போல இல்லாமல் கரும்பை கண்ட எறும்பு போல நகர்கிறது.

இறுதி  காதல் காட்சியிலே நாயகிக்கு வெளி நாட்டிலே கள்ளி செடி பரிசாய் கொடுக்க, அதைப் பார்த்து என்ன செடி என்ற கேள்விக்கு அரைமணி நேரம் கள்ளியின் பெருமைகளை அந்த கள்ளியிடம் எடுத்துரைக்க, வசனத்தின் முடிவிலே பேசிய அந்த நடிகரையும், பேசச் சொல்லி கொடுத்த டைரக்டர், கதாசிரியர் அனைவருக்கு கள்ளிப் பால் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு படம் பார்பவர்களுக்கு வரும் என்பதிலே ஐயமே இல்லை.  
 

கள்ளியின் பெருமைகளை சொன்னாலும், அந்த கள்ளியின் கல் மனம் கரையவில்லை, இப்படிப்பட்ட அறிய செடியை ஏன் இந்தியாவிலே பார்க்க முடிய வில்லை என்ற கொலை வெறி கேள்வியை கேட்க கொதித்து எழும் நாயகன் இந்தியாவிலே வளர்ந்த கள்ளி செடியை பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால் அவை எல்லாம் எதோ செவ்வாய் கிரகத்திலே இருந்து வந்ததைபோல  உங்கள் முகத்திலே அப்படி ஒரு ஆச்சர்யம்


இப்படி ஆரம்பித்து இன்னொரு அரைமணி நேர உணர்ச்சி பூர்வமான  வசனம் பேசி முடித்து கள்ளி செடியை கிள்ளி எறிந்து விட்டு போகிறார் கடைசி நாயகன், நாயகின் நெற்றிப் போட்டிலே உள்ள புள்ளியை பார்த்து கேமரா நகர்கிறது, புள்ளியிலே படம் முடிகிறது, புள்ளியும் வட்டம் தானே என்பதை மறைமுகமாக சினிமா வாசகர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்தகாட்சி.

காதலின் மறுபரினாமாகிய இந்த வட்டக்காதலுக்கு ஆஸ்கார் கிடைக்குமா, இல்லை ஆள் இல்லாப் படம் என்று விருது கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
  


23 கருத்துக்கள்:

Unknown said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்னு இருக்கு...

வீட்டுக்குப் போயி மறுபடி பொறுமையா படிக்கணும்.

தாரணி பிரியா said...

//(இங்கே இடைவெளி விட்டு ரசிகர்களுக்கு இடியாப்பம் இலவசமாக வழங்கப் படுகிறது.) //

இந்த டீலிங் ஒகே :)))))))))

குடுகுடுப்பை said...

இடியாப்பத்துகு பின்னூட்டமிட்ட தாரணி அக்காவ என்னன்னு சொல்றது.

- இரவீ - said...

யப்பா தாங்கலடா சாமி....

//இரண்டாம் பாதியிலே இடியாப்ப சிக்கலை உடைத்து இட்லி சிக்கல் போல மாற்றி படம் இறுதிக்கு வரும் முன்னே தோசையாகி தொங்க விடப்படும்,//
படம் பாக்க வந்தவன தான.

//கதாசிரியர் அனைவருக்கு கள்ளிப் பால் கொடுக்க வேண்டும் //
உங்கலயும் சேத்துகிட்ட பெருந்தன்மைக்கு பாராட்டு.

ஹேமா said...

நசர் இப்ப என்னதான் சொன்னீங்க.
வட்டம் சதுரம்ன்னு.இடியாப்பம் மட்டும் புரிஞ்சுது !

vasu balaji said...

அண்ணாச்சி ஓடிருங்க. சன் பிக்சர்ஸ் காரன் தேடிட்டிருக்கான். ஒட்டு மொத்த பதிவுலகமும் உங்கள கிழிச்சி ஒட்டீரும். :))

அது சரி(18185106603874041862) said...

//
இதும் ஒரு காதல் கதைதான், அதாவது வட்டக்காதல் என்ற பொன்னான கருத்தை உள்ளடக்கியது, இதற்கு நடிகர்கள் இங்கிட்டு நாலுபேரு, அங்கிட்டு நாலு பேரு போட்டுக்கணும், அங்கிட்டு இருக்கிற நாலு பேரும், இங்கிட்டு இருக்கிற நாலு பேருக்கும் துண்டு போடுறாங்க, கதை போகும் போக்கிலே யார், யாருக்கு துண்டு போட்டு இருக்கிறார்கள் என்பதை படம் பார்க்கும் சினிமா ரசிகர்கள் கண்டு பிடிக்க முடியாத ஒரு நிலைக்கு செல்லும், படம் பார்க்கிறவங்களுக்கு குழப்பம்முனா படம் எம்புட்டு நாள் ஓடுமுன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
//

அண்ணா...எனக்கு தல சுத்துதுங்ணா....சீக்கிரமா எதுனா ஒரு க்வாட்டரை ஒடச்சி வாயில...உங்க வாய்ல இல்ல என் வாய்ல ஊத்துங்க...

அது சரி(18185106603874041862) said...

//
இறுதி காதல் காட்சியிலே நாயகிக்கு வெளி நாட்டிலே கள்ளி செடி பரிசாய் கொடுக்க, அதைப் பார்த்து என்ன செடி என்ற கேள்விக்கு அரைமணி நேரம் கள்ளியின் பெருமைகளை அந்த கள்ளியிடம் எடுத்துரைக்க, வசனத்தின் முடிவிலே பேசிய அந்த நடிகரையும், பேசச் சொல்லி கொடுத்த டைரக்டர், கதாசிரியர் அனைவருக்கு கள்ளிப் பால் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு படம் பார்பவர்களுக்கு வரும் என்பதிலே ஐயமே இல்லை.
//

ஐயமே இல்லை...கதாசிரியருக்கு கண்டிப்பா கள்ளிப்பால் பத்து லிட்டர் குடுக்கணும்....ஆமா, கதாசிரியர் நீங்க தான??

Anonymous said...

ஒண்ணுமே புரியலை

நட்புடன் ஜமால் said...

மிக சிறந்த படம் என அவார்ட் கொடுக்கிறேன்.

பார்த்து ராஸா மென்பொருள் எழுதும் இடத்தில் இப்படி இடியாப்பத்தை போட்டுடாதீங்கோ ...

வில்லன் said...

//காதலின் மறுபரினாமாகிய இந்த வட்டக்காதலுக்கு ஆஸ்கார் கிடைக்குமா, இல்லை ஆள் இல்லாப் படம் என்று விருது கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.//

ஆள் இல்லாப் படம் என்று விருது கெடைக்குமோ இல்லையோ ஆளில்லா கடை என்ற பேரு கெடைக்கும் இம்மோட இடுக்கைக்கு.... ஜாக்கிரதை!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//இப்படி ஆரம்பித்து இன்னொரு அரைமணி நேர உணர்ச்சி பூர்வமான வசனம் பேசி முடித்து கள்ளி செடியை கிள்ளி எறிந்து விட்டு போகிறார் கடைசி நாயகன், நாயகின் நெற்றிப் போட்டிலே உள்ள புள்ளியை பார்த்து கேமரா நகர்கிறது, புள்ளியிலே படம் முடிகிறது,//

புள்ளி நாயகி நெத்தில இல்ல "தல" ஒம்மோட நெத்தில. அதுவும் கள்ளிபாலால இல்ல....... துப்பாக்கியால........ கொலை விழும் இப்படி எல்லாம் எந்த பரதேசியாவது கேனதனமா படம் எடுத்தா.......ஆடோல வந்து ஆளு வச்சு வெட்டுவோம் ஒவ்வொரு பாகமா!!!! எங்கள இப்படி படம் எடுத்து சிதிரவதை பண்ணினத்துக்கு .....

வில்லன் said...

//(இங்கே இடைவெளி விட்டு ரசிகர்களுக்கு இடியாப்பம் இலவசமாக வழங்கப் படுகிறது.) //

இடியாப்பதுக்கு "பாயா" யாரு கொடுப்பா... தியேட்டர்காரனா??????

சந்தனமுல்லை said...

avvvvvvv! உங்க புதிய கண்டுபிடிப்புக்கு ஆஸ்கார் கிடைக்கட்டும்! ஹிஹி

ஷங்கி said...

நசரேயன், தங்கள் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகள்.

கண்ணகி said...

எனக்கும் புரியலே....

ராஜ நடராஜன் said...

கோடம்பாக்கத்துல கதை சொல்றதுக்கு ஆள் தேவையாம்.போய் ஒரு ரவுண்டு விடுங்க.இல்லைன்னா ஒரு நல்ல PRO பாருங்க பேரரசு போன்ற உலக இயக்குநர்களை அணுக.

ராஜ நடராஜன் said...

பாலிவுட்டும் பரிட்சார்த்தமா படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.இணைய சிபாரிசில் இதுவரை பார்த்த பாலிவுட் படங்கள் நசுருதீனீன் நடித்த தி வெட்னஸ்டே மற்றும் 3 இடியட்ஸ்.

ராஜ நடராஜன் said...

கடையை விட்டு வெளியே ஓடுனா இடுகை வாசகர் பரிந்துரையில் இருக்குதே!!!

மொக்கை தமிழ் இயக்குநர்கள் வெற்றி பெறும் ரகசியத்தை யாராவது கண்டு பிடிச்சு சொல்லுங்களேன்!

கண்மணி/kanmani said...

இன்னும் புது மாதிரியா டிரபிஸ்யம் [இணைகரம்]காதல்னு வைக்கலாம்.
மேலும் ஆலோசனைக்கு அணுகவும்:))))))))

Vidhoosh said...

எப்பா... யாருப்பா அங்க.
எஸ்கேப்.

--வித்யா

புலவன் புலிகேசி said...

ஒரே குழப்பமா இருக்குங்க....

Chitra said...

காதலின் மறுபரினாமாகிய இந்த வட்டக்காதலுக்கு ஆஸ்கார் கிடைக்குமா, இல்லை ஆள் இல்லாப் படம் என்று விருது கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.......... Award goes to Nasareyen!