Tuesday, January 26, 2010

மணல் சிற்பி

காலையிலே எழுந்து என்ன வேலை செய்யணுமுன்னு தெரியலைனாலும் நேராக மெரீனா கடற்கரைக்கு போக ஆயத்தமானேன், போகும் முன் மாற்று சட்டைக்கு வழி இல்லாத பையன் இனிமேல பள்ளிக்கு சொல்வதில் என்று நேற்று இரவு வெகு நேரம் அழுது கொண்டே தூங்கி இருந்தவன் இன்னும் ஆள் உறக்கத்திலே இருப்பதைப் பார்த்தேன்.


தூங்கி எழுந்தும், எழும்பி செய்ய வேலை இல்லாமல், துகில்வது போல நடிக்கும் மனைவியிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்து கொண்டே முந்தாநாள் பெய்த மழையின் மிச்சத்திலே கொஞ்சத்தை குடித்து விட்டு கிளம்பினேன்.


கடற்கரைக்கு ஓடி வேகமாக ௬ட்டம் வரும் முன்னே வேலையை ஆரம்பித்தேன், முதலில் காந்தியை  மண் சிற்பத்தால் செய்தேன். பின்னர் உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை சிலையாய் செய்தேன், கொஞ்ச நேரத்திலே ௬ட்டம் வந்தது, அனைவரும் ரசித்தனர், அருகே நின்று புகைப் படம் எடுத்து கொண்டனர்.அனைவரின் பாராட்டு  பசியை கடல் கடந்து தள்ளியது.

கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். இப்படி எதிர் பாராமல் நடந்த மகிழ்ட்சி விபத்துகளால் நிலை குலைந்து தான் போனேன்.

ஒரு கலைஞரின் வெற்றி அடுத்தவரின் பாராட்டிலே இல்லை என்றாலும், பாராட்டப் படும் போது வெற்றியின் விளிம்பை தொட்ட ஒரு ஆனந்தம்.அனைவரின் பாராட்டு மழையிலே நனைந்து நான் யாசிக்க வந்தேன் என்பதை மறந்து, வாசகர் வட்டத்திலே விழுந்து நான் சிற்பக் கடவுளானேன். 


நேரம் கடந்தது கடற்கரை  ௬ட்டமும்  குறைய ஆரம்பித்தது மாலையும் நெருங்கியது ,அந்தி மாலையிலே சூரியனை காணாத மேகம் மழையா விழுந்தது,  காற்று படும் போது ௬ட உடையாமல் பார்த்து கொண்ட மணல் சிற்பங்கள் எல்லாம் மழையிலே கரைந்து, மண்ணோடு மண்ணாகிப் போனது.

மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.



கொஞ்ச நேரத்திலே மழையும் நின்றது, எட்டி நின்ற பசியும் வந்து ஒட்டிக் கொண்டது, எதுவும் இல்லை என்றாலும் எனக்கான இருப்பிடமான என் குடிசையை நோக்கி நடந்தேன்.

பின் குறிப்பு :
அடுத்த மாதத்திலே எனது சிற்பங்கள் மின் அஞ்சல் வழியாக அனைவரின் முகவரிகளையும் தட்டி கொண்டு இருந்தது, பூட்டு  இல்லாத கதவு இருந்தும் என் வீட்டை தட்ட எவருமில்லை.


36 கருத்துக்கள்:

ராமலக்ஷ்மி said...

அற்புதம் நசரேயன்.

பின்குறிப்பு நெகிழ்வு.

vasu balaji said...

சிங்கம் களமிருங்கிருச்சேஏஏஏய். சூப்பர்ப்.

சந்தனமுல்லை said...

கலக்கல்! பின்குறிப்பு நச்!!

goma said...

மணற்சிற்பிக்கு
வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

இன்று அடிக்கடி ஒளிபரப்பாகிய, டைம்ஸ் க்ரூப் & ஜூம் டிவி தயாரிப்பாகிய ‘மிலே சுர் மேரா துமாரா
சுர் பனே ஹமாரா’ பாடலில் வரும் மணல் சிற்பமும், அதுபோல ஈடுபாட்டுடன் அதை பல இடங்களில் செய்து வரும் சிற்பிகளும் மனதில் வருகிறார்கள்.

Unknown said...

தல, உங்க மேல பல விமர்சனங்களை வச்சவுங்கள கிழிச்சி தொங்கப் போட்டுட்டிங்க..

சூப்பர் பதிவு

கலகலப்ரியா said...

v.nice...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையாக உள்ளது

ப்ரியமுடன் வசந்த் said...

பின்குறிப்பு படிச்சதும் வெளங்குச்சு நசர்... சூப்பர்ப்...!

ஹேமா said...

நசர்....குடியரசு தினமா !அசத்திட்டீங்க.நல்ல கற்பனை.பிற்குறிப்பு இன்னும் நெகிழ்வு.வாழ்த்துக்கள்.

என் பக்கத்தின் உங்கள் 2010ன் கும்மி பார்த்து ஒருவர் உங்கள் கற்பனையும் எழுத்தின் திறமையும் பார்த்துப் பாராட்டினார்.

பழமைபேசி said...

தளபதி கைவண்ணம்

Chitra said...

மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.
................வாசிக்கும் பொழுது, மனதை என்னவோ செய்தது.

அண்ணாமலையான் said...

அருமையா இருக்கு..

Anonymous said...

அடேங்கப்பா, அருமையா இருக்கு தளபதி.

நட்புடன் ஜமால் said...

நல்லா குத்திச்சி பின்(குறிப்பு)

வித்தியாசமானதொரு இடுக்கை (இத்தளத்தில்) - இரசித்தேன்.

Anonymous said...

படிக்க இதமா இருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றாக இருக்கிறது நசரேயன்..

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..

அப்துல்மாலிக் said...

பின் குறிப்பு ஏதோதோ யோசிக்க வைக்குது

சொல்லப்பட்ட விதம் அருமை

Vidhoosh said...

TEMPLATE ரொம்ப நல்லா இருக்குங்க.
SPELLING MISTAKE குறைஞ்சாப்ல இருக்கு..

!!!!
ஆனா ஏதோ விஷயம் இருக்குன்னு மட்டும் புரியுதுங்க. இலக்கியவாதியாகிட்டீங்க. :))

Unknown said...

நல்லாருக்குங்க..

பனித்துளி சங்கர் said...

அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி !

வில்லன் said...

அண்ணன் குடுகுடுப்பையை கொஞ்ச நாளாக காணவில்லை....... கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..........

வில்லன் said...

//மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, கொஞ்ச நேரத்திலே மழையும் நின்றது, எட்டி நின்ற பசியும் வந்து ஒட்டிக் கொண்டது, எதுவும் இல்லை என்றாலும் எனக்கான இருப்பிடமான என் குடிசையை நோக்கி நடந்தேன். //

நோக்காட்டு காரன் செத்தான் வியாதியும் ஒழிந்தது...

போன மச்சான் திரும்பிவந்தான் வெறும் கையோட!!!!!!!!!!!!!

வில்லன் said...

//மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.//

ஹலோ ஒரு குடியரசு தெனமும் அதுமா இப்படியா இத்துப்போன கதையா எழுதுறது....

நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, அதனால் தான் நானும் நீரும் இங்க இப்படி ஜாலியா கண்ட கண்ட நாடும் சுத்த முடியுது... அத நெனச்சி பெருமைபடனும்.....

S.R.Rajasekaran said...

நெஞ்சை தொட்ட அற்புதமான சிறுகதை .

வில்லன் said...

"கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். "

தொலைக் காட்சி நிறுவனம் எதாவது நடிகைங்க அவுத்து போட்டுட்டு போடுற குதாட்டத்த படம்புடிச்சு நேரடி ஒலிபரப்பு செய்ய வந்துருப்பான்.... ஆனா அந்த நடிகை வேற எங்கயாவது கவுந்து விழுந்து படுத்திருப்பா..... அதனால போனா போகுதுன்னு வீணா போன "பரதேசி" பேட்டியை ஒளி பரப்பிருப்பான்....

தாராபுரத்தான் said...

கலைஞர்களின் கலையை பார்பவர்கள் வயிற்றை பார்பதில்லைதான்.அதுதானே.

அத்திரி said...

அண்ணாச்சி இதை எழுதியது நீங்கதானா?


கலக்கல்

RAMYA said...

வணக்கம் நசரேயன், நல்லா எழுதி இருக்கீங்க.

RAMYA said...

//
கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். இப்படி எதிர் பாராமல் நடந்த மகிழ்ட்சி விபத்துகளால் நிலை குலைந்து தான் போனேன்.
//

நானும் நிலைகுலைந்துதான் போனேன் :) மகிழ்ச்சியில் எழுதிய வார்த்தைகள் அருமை!

RAMYA said...

//பின் குறிப்பு :
அடுத்த மாதத்திலே எனது சிற்பங்கள் மின் அஞ்சல் வழியாக அனைவரின் முகவரிகளையும் தட்டி கொண்டு இருந்தது, பூட்டு இல்லாத கதவு இருந்தும் என் வீட்டை தட்ட எவருமில்லை.
//

இதை படிக்கும்போது கண்கள் பனித்தன.

நச்சுன்னு தெறித்த வார்த்தை பிரயோகம்!

Radhakrishnan said...

உணர்வினை படம் பிடித்த விதம் கொள்ளை அழகு.

கண்மணி/kanmani said...

//என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.//

யதார்த்தமான கதை.


இப்பத்தான் டெம்ப்லேட்டும் பதிவுகளும் தெளிவாயிருக்கு.

கண்மணி/kanmani said...

பின் குறிப்பு டாப்பு

சிங்கக்குட்டி said...

அருமையா இருக்கு நசரேயன்.