Wednesday, December 9, 2009

மிக்கேலு சான்சரு ஆட்டம்

"மாப்ள கல்லூரியிலே இருந்து நடனபோட்டிக்கு கோவை போக அனுமதி கொடுத்து இருக்காங்க, நீயும் கலந்துக்குற, நாம ரெண்டு பேரும் போறோம்."

"டேய் எதாவது தெரிஞ்ச விஷயம் சொல்லு
கவிதை?,கதை?,கட்டுரை? எழுதுற மாதிரி "

"நீ கருப்பு மைக்கல் ஜாக்சன் மாதிரி இருக்க?,
அதனாலே எழுதி கொலை பண்ணாதே"

"அம்புட்டு அழகாவா இருக்கேன்"

"டேய் நிறத்திலே
தான் ஜாக்சன் உன்னைமாதிரி இருந்தாரு ,அப்புறமா ஒரு வெள்ளப்பன்கிட்ட தோலை கடன் வாங்கிட்டு என்னைய மாதிரி அழகா மாறிட்டாரு , நீ வந்தா நாமக்கு ரெண்டுநாள் விடுமுறை கிடைக்கும்."

"கல்லூரிக்கு போகாம இருக்க, நான் என்ன வேண்டுமுனாலும் செய்றேன்டா"

"முன்ன பின்ன நடனம் ஆடி இருக்கியா?"

"எங்க ஊரு நாடகத்திலே நான் தான் நடன புயல்"

"எங்க ஆடிக்காட்டு?"

நான் ஆடின ஆட்டத்தை பார்த்து,

"டேய் உன்னையப்பார்த்தா ஆட்டம் ஆடினவன் மாதிரி தெரியலை, திருவிழாவிலே ஆடுறவங்களுக்கு ஒரு ரூபா மாட்டி விடுற பையன் மாதிரியே இருக்கு.நான் உன்னைய எப்படி நடன புயலா மாத்தி காட்டுறேன்னு,இப்ப என்னைய பாருன்னு"

சொல்லிட்டு அவன் ஆடின ஆட்டத்திலே புழுதி எல்லாம் கிளம்பி என்னைய நல்ல நிறமாக்கி விட்டதுதான் மிச்சம்.
ஆடி முடிச்சதும் ரெண்டு பேரும் எங்கே நிற்கிறோம்முன்னே தெரியலை.அவன் வேத்து விறுவிறுத்து போய் நின்னான், நான் அவன் கிட்ட

"மச்சான், கொஞ்சம் சுலபமா இருக்கிற முறைய சொல்லி
க்கோடு"

சரிடா, ரெண்டே
ஸ்டெப், நல்லா கவனின்னு

அவன் ஆடினது, எனக்கு அடிபம்ப்ல தண்ணி அடிக்கிற மாதிரியும், பைப் பிடிச்சி நடக்குற மாதிரியும் எனக்கு இருந்தது.

மச்சான், இது எனக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு, தண்ணிய பைப்ல குடிக்கிற மாதிரியே இருக்கு.

கிறுக்குபயலே, இது மூன் வாக் நடன அசைவு

ஒ.. தண்ணி அடிச்சவன் மாதிரி ஆடினா, மூன் வாக்கா!!!!, மக்சான், நீ ஒண்ணும் கவலைப் படதே,நவீன மைக்கல் ஜாக்சன் பட்டம் எனக்குதான்.

ஆட்டத்துக்கு எங்களோட சில நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள், எல்லோரும் சேர்ந்து கல்லூரி முடிந்ததும் பயிற்சி செய்ய போனோம், என்னோட நடன திறமையபார்த்து
எங்க நடனகுழுவிலே இருந்த இன்னொரு நண்பன், அவன் உண்மையிலே ஆட்டக்காரன், நான் ஆட்டத்திலே இருந்தா அவன் ஆட்டைக்கு வரலைன்னு சொல்லிட்டான். அவன் கையிலே காலிலே விழுந்து எனக்கு கடைசி வரிசையிலே நின்னு ஆட ஒரு இடம் வாங்கி கொடுத்தான் சென்னைக்காரன்.

"எதுக்கு மச்சான் என்னைய மாப்ளை வரிசைக்கு மாத்தீட்டீங்க?"

"டேய் நீ மைக்கல் ஜான்சன் மாதிரி ஆடுன்னு சொன்னா, மிக்கேலு ஜான்சா மாதிரி ஆடுறியாம், அதனாலே உன் இடத்தை மாத்த வேண்டிய இருக்கு."


"சும்மா வந்து போய்கிட்டு இருந்த உன்னை கட்டை பீடி அடிக்கவும், கள்ளு குடிக்கவும் கத்து கொடுத்த எனக்கு நல்லாவே திருப்பி செய்யுறடா "

"மாப்ள நீ ஒன்னும் கவலைப் படாதே நான் உன்னை ஆடும் முன்னாடி மேடையிலே மைக்ல மைக்கல் ஜாக்சன் சொல்லிடுறேன்?"

"ஆனா நான் கடைசி வரிசையிலே நிற்ப்பேனே?"

"அதுக்கும் ஒரு யோசனை வச்சி இருக்கேன், நான் எல்லோருக்கும் சைக்கிள்ள காத்து அடிக்கிற மாதிரி ஒரு ஸ்டெப்
சொல்லி கொடுத்து இருக்கேன், அவங்க எல்லாம் காத்து அடிச்சிகிட்டு இருக்கும் போது நீ அந்த பைப் பிடிச்சி வார ஸ்டெப் போட்டு, அப்படியே முன்னாலே வந்திடு.அவங்க காத்து அடிச்சி முடிச்ச உடனே, நீ அடி பம்பிலே அடிக்க ஆரம்பித்துவிடு , நானும் உன்கிட்ட பைப் பிடிச்சி வந்து, அப்புறமா நாம ரெண்டு பெரும் சேர்ந்து கழுவுற மாதிரி ஒரு ஸ்டெப் இருக்குல்லா, அதை வச்சி ஆட்டத்தை தொடரலாம்."

"மச்சான் இதையெல்லாம் ஞாபகம் வச்சிக்க ரெம்ப கஷ்டமா இருக்கே."

"நல்லா கேட்டுக்கோ மூணு வரி, காத்தடி, பைப்புடி, பாத்திரம் கழுவுறது இது போதும் உனக்கு "

ஒரு வழியா பயிற்சி எல்லாம் முடிச்சி நடன போட்டிக்கு கோவை சென்றோம்,எனக்கு எல்லாம் நல்ல பெயிண்ட் அடிச்சி நிறத்தை மாத்தி, முடியை எல்லாம் முள்ளம்பன்னி மாதிரி மாத்தி விட்டாங்க,ஆட்ட நேரம் வந்தது என்னிடம் வந்த சென்னை நண்பன் மாப்ள ஆடும் போது சட்டைய நல்லா பறக்க விடனும், அப்பத்தான் காத்தை விட நீ வேகமா ஆடுற மாதிரி ஒரு உணர்வுவரும்.

"அதை பத்தி கவலை வேண்டாம், எப்படியும் நான் ஆடும் போது சட்டையும் நீங்க அடிச்ச பெயிண்டும் தானே தெரியும்."

மைக்கல் ஜாக்சன் ஆல்பத்திலே இருந்து ஒரு பாட்டை போட்டு ஆட்டத்தை ஆரம்பித்தோம், ஆட ஆரமித்த கொஞ்ச நேரத்திலே, பசங்க சைக்கிள்க்கு காத்து அடிக்கிற ஸ்டெப் போட ஆரம்பிச்சாங்க, நானும் பைப் பிடிச்சி முன்னாடி வந்தேன், சென்னை நண்பனும் என் ட வந்து சேர்ந்தான்.
நானும், சென்னைக்காரனும் நடனம் ஆடிட்டு இருக்கும் போதே கிழே இருந்து சத்தம், ஒரே ச்சல், என்னன்னு புரிபடலை, நான் கொஞ்சம் ர்ந்து கவனிச்சதிலே அவங்க

டேய் கழுவுறதை நிப்பாட்டு.. கழுவுறதை நிப்பாட்டு.. ன்னு ஒரு கத்தல்.


நான் அப்படியே ஆடிகிட்டு நண்பனை பார்த்தேன், அவன் நீ ஆடு மாப்ள கண்ணாலே சொன்னான். நான் உடனே மறுபடி ஆட ஆரம்பித்தேன், கொஞ்ச நேரத்திலே கிழே இருந்து தண்ணி
பாக்கெட் வீசுனாங்க, என் மேல விழல, பக்கத்திலே ஆடி கிட்டு இருந்த என் நண்பன் மேல விழுந்தது.

அவனை பார்த்திட்டு நான் திரும்புறதுக்குள்ளே, என் மேல ஒரு ஐம்பது தண்ணி பாக்கெட் விழுந்தது, எல்லாமே என் முகத்திலே விழுந்தது, உடைஞ்ச ரெண்டு மூணு பாக்கெட் இருந்து வந்தது குடிக்கிற தண்ணி மாதிரி இல்ல, நண்பன் ஒண்ணோட ஓடிபோயட்டான், நான் சும்மா நடந்து போனா மேடை நாகரிகமா இருக்காதேன்னு மறுபடி பைப் பிடிச்சி நடக்கிறது மாதிரியே போனேன், முதுகிலே வசமா விழுந்தது, விழுந்த வேகத்திலே கயறு அறுந்து ஓடுற கோயிலே காளையை மாதிரி ஓடியே போனேன்.

மேடைய விட்டு வெளியேஓடிவந்து
மைக்கல் ஜாக்சன் மேக்அப்ல பார்த்தா என்னைய கொலையே பண்ணிடுவாங்கன்னு, சட்டைய கழட்டி போட்டுட்டு ஒரு ஓரமா உட்கார்ந்து கட்ட பீடி அடிச்சி கிட்டு உட்கார்ந்தேன், சென்னைக்காரனும் எறிந்த தண்ணி பக்கெட்ல இருந்த தண்ணியை குடித்து கொண்டு வந்து சேர்ந்தான்.அவன் கிட்ட நான்

"எப்படா டிரஸ் மாத்தின?"

"ஓடின வேகத்திலே எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு புதுசு போட்டுட்டேன்,
கிறுக்கு பயலே அடி விழுதுன்னு தெரிஞ்சா ஓட வேண்டியதானே, அங்கே என்னடா பண்ணினே?"

"மாப்ள நாலு திசையிலே இருந்து வீசுறாங்க, நான் என்ன செய்ய?நான் உன்னைய திரும்பி பார்க்கும் முன்னே, என்னைய போட்டு தாக்கிட்டாங்க, நம்ம கும்பல்ல அவங்க வேற யாரையும் குறிவைக்கலைடா, உனக்கும் எனக்கும் மட்டும் தான் தண்ணி அடி, மதத்தவங்க எல்லாம் ஆடி முடிச்சிட்டு தான்வந்தாங்க"

"நாம ஆடி இருந்தா, முதல் பரிசு நமக்கு கிடைச்சி இருக்குமுன்னு பொறாமையா இருக்கும்,
ஆமா உன் மேல ஏன்டா பிண நாத்தம் அடிக்குது?" ன்னு சொல்லிட்டு தண்ணி பக்கெட் ல இருந்த தண்ணிய எல்லாம் குடிச்சி முடித்தான்

"தண்ணி பக்கெட் என்ன கலந்து எ
றிஞ்சாங்கன்னு தெரியலை மச்சான்"

"அட எழவு எடுத்தவனே, இதை நான் தண்ணியை குடிக்க முன்னாடியே சொல்ல வேண்டியாதானே"

"இல்லை மச்சான், எனக்கு அடிச்ச தண்ணியத்தான் உனக்கு அடிச்சாங்களுன்னு தெரிஞ்சிக்கலாமுன்னு சும்மா இருந்தேன், உனக்கும் அதே தண்ணிதான்."

"நாதாரி இரு உன்னைய வந்து கவனிச்சிக்குறேன்னு போனவன், ரெண்டு நாள் ஒரே வாந்தி"

திரும்பி வந்து ஒரு மாசத்து மேல கல்லூரியிலே இதை பத்தி ஆராட்சி, ஆனா இன்னைய வரைக்கும் கண்டு பிடிக்க முடியலை, அந்த தண்ணி
பாக்கெட் என்ன கலந்து இருந்தாங்கன்னு,அதோட நான் போட்ட ஆட்டம் எல்லாம் அடங்கி போச்சி,ஆனா இன்னும் இடுகைகள்ல போடுற ஆட்டம் அடங்கலை.


20 கருத்துக்கள்:

Anonymous said...

அது யாரு மிக்கேலு சான்சரு?

புலவன் புலிகேசி said...

//Blogger சின்ன அம்மிணி said...

அது யாரு மிக்கேலு சான்சரு?//

அதே கேள்விதான் எனக்கும்..

நினைவுகளுடன் -நிகே- said...

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

vasu balaji said...

அண்ணாச்சி திரும்ப வந்துட்டாரு. எழுத்துப் பிழையோட=)).கலக்கீருவோம்னு போனா கலக்கி அடிச்சிட்டாங்களா:)). காலையில வெறும் வயித்துல சிரிக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?

சந்தனமுல்லை said...

:-)))))) சைக்கிள் ஸ்டெப் - நினைச்சுப்பார்க்கவே அவ்ளோ காமெடியா இருக்கே..

Unknown said...

இந்தக் கண்ணாடியத் தள்ளுற ஸ்டெப்பு போடவேயில்ல போலருக்கே?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்டெப்ஸ் எல்லாம் சூப்பர்.. ஆனா முகிலன் கேக்கிறாப்ல ஏன் நீங்க கண்ணாடி தள்ளுர ஸ்டெப் .. படி இறங்கிற ஸ்டெப் எல்லாம் செய்யல.. ? :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))))

ஹேமா said...

//"மாப்ள நாலு திசையிலே இருந்து வீசுறாங்க, நான் என்ன செய்ய?//

நசரேயா...ஏன் இந்த மிக்கேலு ஆட்டம்.நாலு திசை இல்ல நாப்பது திசைல இருந்தும் வரும்.

வால்பையன் said...

//"நல்லா கேட்டுக்கோ மூணு வரி, காத்தடி, பைப்புடி, பாத்திரம் கழுவுறது இது போதும் உனக்கு "//


ஹாஹாஹாஹாஹா

aazhimazhai said...

நான் என் அலுவலகத்தில் சிரிச்ச சிரிப்பில் உங்க ப்ளாக் ரொம்ப பிரபலம் ஆகிடுது !!!!
அதுவும் அந்த நடன ஸ்டெப் ஒப்பீடு ரொம்ப அருமை

RAMYA said...

மிக்கேலு சான்சாரு உங்க ஆட்டம் அபாரம் போங்க

ஹையோ ஹையோ! சிரிச்சி சிரிச்சி வயறு வலிச்சி போச்சு:)

இதுக்கு நசரேயன் கம்பனிதான் பொறுப்பு..

உங்க பைப்பு நடன ஸ்டெப் அருமை!

அத்திரி said...

அண்ணாச்சி .....))))))))))

Unknown said...

கலக்கல்.. :-))))))

Chitra said...

"அதுக்கும் ஒரு யோசனை வச்சி இருக்கேன், நான் எல்லோருக்கும் சைக்கிள்ள காத்து அடிக்கிற மாதிரி ஒருஸ்டெப் சொல்லி கொடுத்து இருக்கேன், அவங்க எல்லாம் காத்து அடிச்சிகிட்டு இருக்கும் போது நீ அந்த பைப் பிடிச்சி வார ஸ்டெப் போட்டு, அப்படியே முன்னாலே வந்திடு.அவங்க காத்து அடிச்சி முடிச்ச உடனே, நீ அடி பம்பிலே அடிக்க ஆரம்பித்துவிடு , நானும் உன்கிட்ட பைப் பிடிச்சி வந்து, அப்புறமா நாம ரெண்டு பெரும் சேர்ந்து கழுவுற மாதிரி ஒரு ஸ்டெப் இருக்குல்லா, அதை வச்சி ஆட்டத்தை தொடரலாம்.".........
இந்த பதிவுக்கு ஏத்த மாதிரி அந்த டான்ஸ் வீடியோ இருந்தாலும் போடுங்க சார். நினைச்சு பாத்தாலே சிரிப்போ சிரிப்பு.

thiyaa said...

நல்ல பதிவு

பூங்குன்றன்.வே said...

அடுத்த முறை உங்கள் ப்ளாக்கை என் ஆபிசில் படிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் பாஸ்.என்ன சிரிப்புடா சாமி? சூப்பர் !

வில்லன் said...

//அடிபம்ப்ல தண்ணி அடிக்கிற மாதிரியும், பைப் பிடிச்சி நடக்குற மாதிரியும் எனக்கு இருந்தது.
மச்சான், இது எனக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு, தண்ணிய பைப்ல குடிக்கிற மாதிரியே இருக்கு.
கிறுக்குபயலே, இது மூன் வாக் நடன அசைவு//

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. ஏன் "நாய அடிப்பான எதையோ செமப்பான"

SUFFIX said...

//அவங்க காத்து அடிச்சி முடிச்ச உடனே, நீ அடி பம்பிலே அடிக்க ஆரம்பித்துவிடு , நானும் உன்கிட்ட பைப் பிடிச்சி வந்து, அப்புறமா நாம ரெண்டு பெரும் சேர்ந்து கழுவுற மாதிரி ஒரு ஸ்டெப் இருக்குல்லா, அதை வச்சி ஆட்டத்தை தொடரலாம்."//

மிக்கல் சானசரோட டீச்சரு செம செம..:)

சிங்கக்குட்டி said...

என்ன இது குஸ்பு தமிழ் பேசினமாதிரி //மிக்கேலு சான்சரு// ??!!