Monday, December 7, 2009

இந்தியாவின் தாய்மொழி இந்தி?

தமிழ் நாட்டை விட்டு வெளியே போனால் ஹிந்தி இல்லாம தண்ணி ௬ட கிடைக்காதுன்னு நினைச்சா, வடக்கூர்காரங்க எல்லாம் நம்ம ஊரிலே பத்து வருசமா இருக்கிறவங்க எல்லாம் "எனக்கு தமிழ் நகி மாலும்" ன்னு மட்டுமே சொல்லியே பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்காங்க.இங்கே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை இருந்தும் அவங்க ஊருக்கு போய் ஓட்டு போட்டுட்டு வந்துடுறாங்க.ஆனா இங்கே தமிழ் நாடு எக்ஸ்ப்ரெஸ்ல போக இந்தி தெரியலையேன்னு வருத்தப்பட வேண்டிய நிலை,இது ஊரு நாட்டு கதை இப்ப நம்ம கதைக்கு வருவோமா


போன மொக்கையிலே அமெரிக்க பொருளாதாரம் சரிய ஆரம்பித்ததும், என்னையும், நான் தமிழ் சொல்லி கொடுத்த வடக்கூர்காரிக்கும் வேலைக்கு சங்குஊதிட்டாங்க, அவள் ஆண் நண்பியோட மும்பைக்கே போய்ட்டா, நானும்பொழைப்பை ஓட்ட மைசூர் போயிட்டேன், அங்கே பெரும்பாலும் கன்னட மொழிதான், அதனாலே
அதை கத்துகிட்டேன்.நான் தமிழ் எப்படி எழுதுறனோ, அதேமாதிரி பேசுவேன், ஒரு வருஷம் பொருளாதாரம் மேல வரும் வரைக்கும் பன்னிகுட்டி மாதிரி மைசூர்ல இருந்தேன்.

மறுபடி வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்த உடன மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு பெங்களூர்ல ஒரு கம்பனிக்கு வந்தேன்,
அறிமுகப்படலம் மனித வள மேம்பட்டு துறையாலே கொடுத்தாங்க, எல்லாம் முடிஞ்ச உடனே கடைசியிலே முக்கிய விஷயம் கண்டிப்பா அலுவலகத்துக்குள்ளே இருக்கும் போது இங்கிலிபிசு தவிர வேற எந்த மொழியும் பேசக்௬டாது சம்ஜே ன்னு சொன்னாங்க.

அவங்க சொல்லிட்டு போன அப்புறமா எனக்கு ஒரே யோசனை சம்ஜே அப்படின்னு இங்கிலிபிசுல வார்த்தை இருக்கான்னு சந்தேகம், கூகிள்
ஆண்டவர்ட்ட கேட்டேன், அவரு சமோசா இருக்கு, ஆனா சம்ஜே இல்லன்னு சொல்லிட்டாரு

மனித வளம் எதுக்கு என்னைய சமோசா சாப்பிட சொல்லுறாங்கன்னு யோசித்தேன், ஒண்ணும் புரியலை, சென்னைக்காரன்னு
க்கு போன் போட்டேன்.

"மச்சான் சம்ஜே இங்கிலிபிசுல இருக்கா"

"கிறுக்குபெயலே சம்ஜேன்னா இந்திடா, அப்படின்னா புரியுதான்னு அர்த்தம்"

"அப்புறம் எதற்கு மனித வளம் இங்கிலிபிசு பேசனுமுன்னு ஹிந்தியிலே சொல்லுறாங்க"

"மாப்ள பொட்டி தட்டி விதிகளை ஆக்குறதும் அவங்கதான், உடை
க்கிறதும் அவங்க தான், அதனாலே அவங்க எது சொன்னாலும் கையை கட்டி காதை நீட்டி கேட்டுக்கணும்."


சரி மச்சான், நான் அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டு முடிச்சேன், அடுத்தநாள் நான் சந்திக்க வேண்டியவ
ரிடம் என்னை அறிமுகப் படுத்தினர் , நான் எங்கே இருக்க வேண்டும் என இருப்பிடத்தை சொன்னார், சொல்லிட்டு போனவரு அதற்கு அப்புறம் ரெண்டு வாரத்துக்கு என் பக்கத்திலே வரலை, என்னைத் தவிர எல்லாருடம் கொஞ்சி குலவிகிட்டு இருந்தாரு.

ஒரு கடின உழைப்பாளி, செய்யும் தொழிலை தெய்வத்துக்கு மேலக மதிக்கிற நான்,
வேலை இல்லாமல் எப்படி இருக்கன்னு நான் நினைக்கலை, வேலையே கொடுக்காம வச்சி இருந்து பொட்டியை கட்டிட்டு வீட்டுக்கு போக சொல்லிடுவாங்களோன்னு பயந்து
அவர்ட்ட போனேன்

"ஹலோ மிஸ்டர் யார் எப்படி இருக்கீங்க"

"அவரு உடனே யாரு யாரு?"

நான் உடனே " பெரிய பொட்டி தட்டி கம்பெனியிலே அமெரிக்க துர மார்கள் மாதிரி கடைசி பெயரை வச்சி ௬ப்பினடுமுனு
நினைச்சி உங்களை யார் சொல்லி ௬ப்பிட்டேன், மன்னிச்சிடுங்க சாலே"


"என்னது சாலேயா? "

"நீங்க சல்லியா ?"

"என் பேரு யாரும் இல்லை,சாலேயும் இல்லை,சல்லியும் இல்லை"

"அப்புறம் ஏன் உங்க ௬ட பேசின எல்லோரும் யார்ன்னு கடைசியிலே முடிக்கிறாங்க, முதல்ல சாலே ன்னு ஆரம்பிக்கிறாங்க"

"நீ தமிழ் நாடா ?"

"எப்படி தெரியும்?"

"சாலே,யாரு ன்னு பேரு இருக்குன்னு யோசிக்கும் போதே இந்த முகர கட்டை தமிழ் நாட்டிலே இருந்து வந்து இருக்குன்னு
தெரியுது "

தமிழ் வாழ்கன்னு நினைச்சிகிட்டேன்.

இந்தியாவோட தாய்மொழி இந்தி தெரியாம எப்படி இருக்கீங்க ன்னு ஒரு அணுகுண்டு கேள்வியை கேட்டுபுட்டார்.

தமிழ் தாயே நீ இருக்கும் போது ஓர் மாற்றாளை தாய் என சொல்லுகிறானே, இந்திய தாய்மொழி இந்தி என்றால் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டிய அவசியம் என்ன? ஒவ்வொரு மாநிலத்திலும் இரு மொழி கொள்கை, மும் மொழி கொள்கை இருக்க வேண்டிய அவசியம் என்ன? இப்படி பல கேள்விகள் வந்தாலும் வழக்கம் போல கேட்கலை.அதை இங்
கிலிபிசில கேட்கத்தெரியாது என்பது வேற விஷயம்

நான் "ஒ அப்படியா என்கிட்டே சொல்லவே இல்லை" ன்னுசொன்னேன்.
என்னை இளக்காரமா பார்த்துட்டு

"உனக்கு சீக்கிரம் வேலை கொடுக்கிறேன், நீங்க உங்க இடத்துக்கு போகலாமுன்னு சொன்னாங்க.திரும்பி வந்துட்டேன்"

நான் எப்போதுமே தொலைபேசியிலே பேசினால் நாலு ஊருக்கு கேட்கிற மாதிரி பேசுவேன், அப்படித்தான் என்னோட இருக்கையிலே இருந்து அரை மணி நேரம் பேசினேன் நண்பனிடம், பேசி முடித்து விட்டு போன் வைத்த திரும்பி பார்த்தா மொத்த ௬ட்டமும் என்னையே பார்க்குது.அவங்க பார்த்த பார்வையிலே நான் எதோ தப்பு பண்ணின மாதிரி எனக்கே ஒரு உணர்வு. நான் பேசினதை மனிதவளமும் கேட்டு கிட்டு இருந்து இருக்கு அவங்க நேர என்னிடம் வந்து

"நீங்க பிராந்திய மொழி எல்லாம் பேசக்
டாது, இங்கே தமிழ் தெரியாதவங்க நிறைய பேர்
இருக்காங்க, அவங்களுக்கு எல்லாம் தொந்தரவா இருக்கும்"

"தில் சாத்தாகே,டீ குடியேகே, ஆயகே, போயகேன்னு இங்கே நிறைய பேரு பேசுறதும் எனக்கு புரியலை, இருந்தாலும் நானும் சகிச்சுகிறேன்"

"அவங்க எல்லாம் இந்தியிலே பாத் காரங்க, அது எல்லோருக்குமே புரியும்"

"அப்படின்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படி?,
நான் இந்தி கார பாத் கிடையாது "

"இப்ப என்ன செய்யன்னும்முன்னு சொல்லுறீங்க ?"

"மணிரத்தினம் டைரக்சன்ல கமல் நடிச்ச நாயகன் பாத்து இருக்கீங்களா?"

"ஆமா இந்தி டப்பிங் பார்த்து இருக்கேன், அதுக்கு என்ன இப்ப ?"

"அவங்களை நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்."

நான் ஏதோ அலுவலக விதிய பிடிச்சிட்டேன்னு நினைச்சாங்களோ, இவன் தலைய அப்புறம் கட்டலாமுன்னு நினைச்சாங்களோ, அமைதியாகிட்டாங்க, என்கிட்டே

"நீங்க தமிழ் நாட்டிலே எந்த ஊரு."

"நெல்லை பக்கம்"

"ஒ. நாங்களும் தஞ்சாவூர் பக்கம்தான், நாங்க ரெம்ப நாளைக்கு முன்னே மும்பைக்கு போய்ட்டோம், எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்,
எனக்கு கொஞ்சம் தமிழ் கத்துகொடுக்க முடியுமான்னு கேட்டாங்க"

மனித வளமே பாடம் படிக்க தயாரா இருக்கும் போது, வேண்டாமுன்னு சொல்ல முடியலை, நல்ல வேளை அவங்க என்னை எழுத படிக்க சொல்லி கொடுக்க சொல்லலை. பாடம் எப்படி போச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.


22 கருத்துக்கள்:

Anonymous said...

//பாடம் எப்படி போச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.//

மொக்கை தொடருதா, தொடருங்க :)

லெமூரியன்... said...

\\"அவங்களை நிறுத்த சொல்லுங்க, நான் நிறுத்துறேன்......"//

வேலை போயிருக்கும்னு நெனச்சேன்........ஆனா இப்டி ஒரு ட்விஸ்ட் பினால வரும்னு நெனைக்கவே இல்லை...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

சந்தனமுல்லை said...

:-)))

துளசி கோபால் said...

ஸப் ஸமஜ் கயா.............

ஃபிர் க்யா ஹுவா?

bபோலியே.............

ஆ.ஞானசேகரன் said...

//பாடம் எப்படி போச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.//

கண்டிப்பா பார்க்கலாம்

Chitra said...

மனித வளமே படம் படிக்க தயாரா இருக்கும் போது, வேண்டாமுன்னு சொல்ல முடியலை, நல்ல வேளை அவங்க என்னை எழுத படிக்க சொல்லி கொடுக்க சொல்லலை. பாடம் எப்படி போச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம். ....... eagerly waiting to read more. இந்தியாவின் மொழி ஹிந்தி என்றும் அதை ஏன் நான் கற்று கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் நிறைய "ஹிந்தியர்கள்" comment அடிப்பது உண்டு. அவங்க தொல்லை தாங்க முடியவில்லை. நல்லா கருத்தை யோசித்து எழுதியிருக்கீங்க.

Anonymous said...

I feel the same this post of your experience. and your all previous post about Hindi problem.
now I am in OMAN here also same problem. but national language is Arabic

vasu balaji said...

எனக்கென்னவோ இந்த மொக்கையில அங்கங்க இந்தி வரத பார்த்தா பாடம் படிச்சிகிட்டா மாதிரிதான் தோணுது.:))

துளசி கோபால் said...

பல பிள்ளைகளுக்கு ஒரு தாய் சகஜம்.

ஆனால் தாய்மொழி ஹிந்தின்னு சொல்றதைப் பார்த்தால் பல தாய்கள் ஒரு இந்தியனுக்கு இருக்காங்களே.

அவரவர் மாநிலமொழி தாய்மொழின்னா.... மற்ற மாநிலமொழிகள் எல்லாம் சித்திகளா?

அதுலே ஹிந்திச் சித்தி மட்டும் அதிகார பலம் உள்ள பணக்காரச் சித்தி!

ஏழை சொல் அம்பலம் ஏறாதாமே(-:

என்னவோ போங்க.

இந்தியாபோன்ற பலமொழிகள் உள்ள நாட்டுலே இதெல்லாம் கொஞ்சம் 'பேஜார்' புடிச்சுக்கிடக்கு.

SUFFIX said...

இப்போ எப்படி அச்சா பாத் காரரிங்களா? தமிழ் டியூஷன் பதிவை ஜல்தியா போடுங்க, சென்னையில் இருந்த மட்டும் ஹிந்திப் படம் புரியாம பார்ப்பதோடு சரி, இப்போ இங்கே சவுதியில் வந்தவுடன் குச் குச் பாத் கத்துக்கிட்டாச்சு!! அது போதும், நாம என்ன ஹிந்தியில கவுஜையா எழுதப்போறோம்.

ஹேமா said...

எனக்கு இந்தி தெரில நசர்.அதனால ஒண்ணும் புரில.
[தமிழே சரியா வரல இதில...!]

சிங்கக்குட்டி said...

என்னாங்க கன்னடம் எல்லாம் பேசுறீங்க, ஆனா இந்தி கத்துகிறதா உங்களுக்கு பெரிசு?

தொடருங்க...தொடருங்க...நல்ல இடுகை :-)

ஜோதிஜி said...

திருப்பூர் நிலவரங்கள் குறித்து மனதிற்கு இதே போல் பலவற்றை நினைத்து இருந்தேன். ஆனால் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்தீர்கள். அற்புதம்.

புலவன் புலிகேசி said...

செம மொக்கை....

"உழவன்" "Uzhavan" said...

தமிழ்நாட்டைத் தாண்டுனாத்தான் இந்த மொழிப் பிரச்சனை இருக்குதுனு பார்த்தா, சில சமயங்கள்ல இங்கேயே ஆபிசுலேயும் இந்தப் பிரச்சனை வந்துருது :-)

கிரி said...

ஆனாலும் இந்த ஹிந்தி காரங்க இம்சை தாங்க முடியல.... ஆனா அவங்க மொழி பற்றி நம்ம கிட்ட இல்லைங்கறதையும் ஒப்புக்க வேண்டியதா இருக்கு!

அத்திரி said...

அண்ணாச்சி வழக்கம்போல் ஹாஹாஹா ))))))

நசரேயன் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கு நன்றி

வில்லன் said...

அடுத்த மொக்கைக்கு மலையாள பட தலைப்பு வைக்கவும்.

உதாரணம் :
===========
புடிக்கிட்டா புள்ளி
அஞ்சரைக்குள்ள வண்டி
மலையத்தி பெண்
யாருண்டு இவிடம் சோதிக்கான்

அப்படியே உங்கள் போரையும் நசறேயனுக்கு பதிலா "கள்ளகாதல்" நசறேயன்னு மாத்திக்கலாம்.....

வில்லன் said...

அடுத்த மொக்கைக்கு மலையாள பட தலைப்பு வைக்கவும்.

உதாரணம் :
===========
புடிக்கிட்டா புள்ளி
அஞ்சரைக்குள்ள வண்டி
மலையத்தி பெண்
யாருண்டு இவிடம் சோதிக்கான்

அப்படியே உங்கள் போரையும் நசறேயனுக்கு பதிலா "கள்ளகாதல்" நசறேயன்னு மாத்திக்கலாம்.....

Anonymous said...

நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன், ஆனா உங்கள முறைச்சு பார்க்கல. யார்னு தெரியுதா?