Thursday, December 3, 2009

கவுஜ வாங்கலையோ கவுஜ

யோவ் என்ன வேலை நடக்குது..


ஒரு மனுசனை நிம்மதியா வேலை பார்க்க விட மாட்டீங்களே, இப்ப என்ன விவகாரம்?

தலைவரே எதோ கவுஜ போட்டி இருக்காம், அதிலே கலந்துக்கலாமா யோசிக்கிறேன், தனியா போக ௬ச்சமா இருக்கு, அதான் உங்களையும் துணைக்கு ௬ப்பிடுறேன்.

யோவ் நீ என்ன பொண்ணா பார்க்க போற..

இதுநாள் வரைக்கும் இந்த எழுத்தாளர் (?)

என்னது எழுத்தாளரா யாரு எங்க.. எங்க..

நான் என்னையை சொன்னேன்..

சொல்லிட்டு சொல்லணும் , எனக்கு ரத்த கொதிப்பு அதிகம், எதுக்கும் எழுத்தாளருக்கு முன்னாடி ஒரு மொக்கைய போடுங்க

சரி.. ஒரு மொக்கையன் என்ற முறையிலே, ஒரு எட்டு போய் பார்க்கலாமுன்னு

நீங்க எட்டிக்கிட்டு போங்க, இல்லை எட்டாம போங்க, ஆனா என்னை ஆளை விடுங்க, எனக்கு வீட்டிலே ரெண்டு கிலோவுக்கு வேலை இருக்கு.

அது என்ன ரெண்டு கிலோ வேலை

ம்ம்.. அரை கிலோ உளுந்து, ஒண்ணரை கிலோ அரிசி யாரு ஆட்டுவா?

அங்கேயும் அப்படித்தானா!!!, நான் இப்பத்தான் ஒரு கிலோ முடிச்சேன்.நம்ம தோசை மாவு ஆணியை விடுங்க, நீங்களும் பின்நவினத்துவ கவஜ எல்லாம் எழுதி இருக்கீங்க.

முகத்துக்கு பின்னாடி இருக்கிற முதுகை பத்தி எழுதினேன், அதை நீங்க பின்னவினத்துவமுனு நினச்சா என் முதுகை எங்கே போய் சொறிய?, போட்டி நல்லா நடக்கனுமுனா, நீ, நான் எல்லாம் அந்த பக்கம் தலையே வச்சி படுக்க ௬டாது.

ஆர்வத்திலே ஒண்ணு எழுதுட்டேன்.

ஒழுங்காத்தானே துண்டு போட்டுக்கிட்டு இருந்தீங்க, நாம எல்லாம் களத்திலே குதிக்காத வரையிலே பதிவுலகம் நல்லாவே இருந்தது, பதிவுலத்துக்கு ஏழரை ஆரம்பித்ததே நாம எல்லாம் எழுத வந்த பிறகு தான்.

தலைவரே நான் அந்த காலத்திலேயே கவுஜ எல்லாம் எழுதி பரிசு எல்லாம் வாங்கி இருக்கேன்.

இப்ப என்ன சாமி உன் பிரச்சனை, சொல்லி தொலை, மனுசனை நிம்மதியா மாவட்ட விட மாட்டீங்களே.

உன்

மை விழி பார்வையிலே மயங்கினேனே

மது உண்ட மாதுவை போல.

உன்

௬ந்தல் காட்டிலே என்

மூச்சி காற்றால் புல்லாங்குழல்

வாசிக்க, வசிக்க விரும்புகிறேன்.

எப்படி இருக்கு, நாம்ம சரக்கு

எல்லாம் சரிதான், குழல் வாசிக்கும் போது கொஞ்சம் எட்டியே நில்லு, அங்கே உள்ள பேன் எல்லாம் உன் வழுக்கை தலைக்கு வரப் போகுது.கவுஜ எழுதும் போது எதையும் நேர சொல்ல௬டாது, இன்னும் ஏதும் சரக்கு இருக்கா??

இல்லை இனிமேல தான் வாங்கணும், காலி ஆகிடுச்சி.

யோவ் நான் உன் கவுஜ சரக்கை சொல்லுறேன்.

இருகிறதிலே நல்ல சரக்கு இதுதான். இனிமேல யோசிக்கணுமே!!!!

பூமி தாயே

உன் கோபக்கனலாலே

உன் ரத்தம் கொதித்து

உன்னை வெப்பமாக்காதே

நான் விட்டு விடுகிறேன்.

எழுதுறதையா ? இல்லை மூச்சையா, இன்னைக்கு என் முகத்திலே முழிச்சது தப்பா போச்சி, உங்க கவுஜை கேட்டு நான் மேல போயிருவேன் போல இருக்கே, கவுஜைன்னா நீ கவுஜன்னு சொல்லுற வரைக்கும் அடுத்தவங்களுக்கே தெரியக்௬டாது

யோவ் இம்புட்டு வாய் கிழிய பேசுற நீங்க ஒரு கவுஜ சொல்லுங்க.

எனக்கு பின்நவினத்துவம் தான் தெரியும், நல்லா கேட்டுக்கோ

"இரும்படிக்கிற இடத்திலே ஈ க்கு என்ன வேலை"

ஈ இருக்கட்டும் கவுஜ சொல்லுங்க.

அதான் சொன்னேன்லா

யோவ் உன் பின் மண்டையிலே போடணும்

விளக்கம் சொல்லுறேன், நாம்ம மணி அண்ணன் மாதிரி
இரும்படிக்கிற பிரிச்சா இரு + படிக்கிற அப்படின்னு ஒரு பொருள் வரும்.ஆக இன்னொரு முறையிலே இருந்து படிக்கிற இடத்திலே ஈ க்கு என்ன வேலை.

ரெம்ப சரிதான், ரெண்டு விளக்கம் நல்ல இருக்கு, ஆமா இது நீங்க என்ன சொல்லவாறீங்க?

அந்த ஈ ங்கிறது நீயும் நானும் தான், அவனவன் உயிரை பிழிஞ்சி, உண்ணாம தின்னாம கவுஜை எழுதினா, நீ அங்கே போய் மொக்கை அடிப்ப, என்ன எழுதி இருக்காங்கன்னு புரிஞ்சி இருந்தா நல்லா இருக்குன்னு நீ சேவ் பண்ணி இருக்கிற பின்னூட்ட பதில்ல இருந்து ஒண்ணு போட்டு இருப்ப, கவுஜை எல்லாம் நல்லத்தான் போய்கிட்டு இருக்கு, அதனாலே அதிலே கால் வைக்காம வீட்டிலே போய் தோசைக்கு சட்னி வைக்க வழியை பாரு

இனிமேல கவுஜ எழுதுறேன்னு சொன்ன ஆட்டோ இல்ல அணுகுண்டு தான் வீடு தேடி வரும்.

.......................................................

யோவ் என்ன பேச்சி மூச்சை காணும்.

ஒண்ணும் இல்லை, அளவுக்கு அதிகமா வசனம் பேசிட்டீங்க, அதனாலே அதை வேகமா தமிழ்ல பதிவு செய்ய நேரம் ஆகி விட்டது.

பதிவு செஞ்சி என்ன செய்ய???

கலையிலே எழுந்து என் கடைப் பக்கமா வாங்க தெரியும்.

பொறுப்பு அறிவித்தல் :
இந்த உரையாடலில் கலந்து கொண்ட பதிவர்களை கண்டு பிடித்து கொடுபவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு


32 கருத்துக்கள்:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Anonymous said...

தளபதி, ஒரே எழுத்துப்பிழை. அவசரமா தட்டச்சினீங்களா?

//அங்கே உள்ள பேனை //

பேன் எல்லாம்

//கோபக்கனளாலே //

கோபக்கனலாலே

//வெப்பமாக்கதே //

வெப்பமாக்காதே

சந்தனமுல்லை said...

:-))))

சின்ன அம்மிணி...அவ்வ்வ்வ்...டெரரா இருக்கீங்களே..தளபதியை விட!! :-)))

Unknown said...

nasareyan
pazamai pesi

Chitra said...

"இனிமேல கவுஜ எழுதுறேன்னு சொன்ன ஆட்டோ இல்ல அணுகுண்டு தான் வீடு தேடி வரும்."ஹி,ஹி,ஹி,....

vasu balaji said...

/நாம்ம மணி அண்ணன் மாதிரி இரும்படிக்கிற பிரிச்சா /

இது பழமைபேசிங்க அண்ணாச்சி.

மத்தது என்ன வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே!

நீங்க அனுப்புன ஆட்டோவ திருப்பி விட்டிருக்கேன். =))

ப்ரியமுடன் வசந்த் said...

அட்டகாசம் பண்றீங்களே தல...

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
மத்தது என்ன வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே!//

mee tooooooooo!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவர்களை கண்டுபிடிக்கனுமா? கவிதை எழுதிட்டு அதன்விளைவுக்கு பயந்து தலைமறைவானவங்களையா.. இல்ல கவிதை படிச்சிட்டு காணாப்போனவங்களையா? :)

Prathap Kumar S. said...

கவிதை எல்லாம் நல்லாவே இருக்கு ஹீஹீஹீ... தல பயங்கர
"எலுத்துப் பிலை" :-)

சிங்கக்குட்டி said...

//தனியா போக ௬ச்சமா இருக்கு, அதான் உங்களையும் துணைக்கு ௬ப்பிடுறேன்//

ஹ ஹ ஹ...

அதுலயும் நீங்க பொண்ணு பாக்க மட்டும் தான் வருவேன்னு சொல்லறது...

அங்கயும் ஏதாவது துண்டு போட பிளானா??

cheena (சீனா) said...

இரு படிக்க்ற வேலை இரும்படிக்கற வேலையா - நல்ல கற்பனை - நலலாவே எழுதி இருக்கீங்க

அநத ரெண்டு பேரு யாருன்னு சொல்லிடூங்களே பிளீஸ்

நல்வாழ்த்துகள் நசரேயன்

சத்ரியன் said...

//கவுஜ எழுதும் போது எதையும் நேர சொல்ல௬டாது, இன்னும் ஏதும் சரக்கு இருக்கா??

இல்லை இனிமேல தான் வாங்கணும், காலி ஆகிடுச்சி.//

நசரேயா,

நான் வருவேன்னு முன்னமே தெரியுமா "( ந)ஸ்ரேயா"

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
தளபதி, ஒரே எழுத்துப்பிழை. அவசரமா தட்டச்சினீங்களா?
//

ஒன்னே ஒன்னுன்னு சொல்லச் சொன்னாருங்களா தளபதி? இதுல எதோ மறைமுக கொடுக்கல் வாங்கல் இருக்கு போல....அவ்வ்வ்.......

Vidhoosh said...

///சின்ன அம்மிணி said...
தளபதி, ஒரே எழுத்துப்பிழை. அவசரமா தட்டச்சினீங்களா?
//

ஒன்னே ஒன்னுன்னு சொல்லச் சொன்னாருங்களா தளபதி? இதுல எதோ மறைமுக கொடுக்கல் வாங்கல் இருக்கு போல....அவ்வ்வ்.......///

நசரேயன் தமிழுக்கே சயனைட் கொடுக்குற தலங்க. சொள் அலகன் வந்தாக் கூட அடங்க மாட்டாரு தளபதி. :)) சொள் அலகன் கூட இவரு கிட்ட பம்முராருன்னா பாத்துக்கோங்க..



--வித்யா

ரவி said...

இந்தா புடி ஓட்டு !!!!!!!


)))))))))))))))))

தேவன்மாயம் said...

அவனவன் உயிரை பிழிஞ்சி, உண்ணாம தின்னாம கவுஜை எழுதினா, நீ அங்கே போய் மொக்கை அடிப்ப, ஏன் எழுதினது புரிஞ்சி இருந்தா நல்லா இருக்குன்னு நீ சேவ் பண்ணி இருக்கிற பின்னூட்ட பதில்ல இருந்து ஒண்ணு போட்டு இருப்பா, கவுஜை எல்லாம் நல்லத்தான் போய்கிட்டு இருக்கு, அதனாலே அதிலே கால் வைக்காம வீட்டிலே போய் தோசைக்கு சட்னி வைக்க வழியை பாரு
/

அனாயசமா எழுதியிருக்கீங்க!! சொல் சரளமா இருக்கு!!

goma said...

என்ன ஆச்சு எங்க ஊர் காரருக்கு...?யாராவது அந்தோணிசாமி தோப்பிலிருந்து ஒரு கூடை எலுமிச்சம் பழம் கொண்டுவாங்களே....கவுஜ வாடையெல்லாம் போக்கணும்

goma said...

இன்றிலிருந்து நம்ம நசரேயன் ‘கவுஜரேயன்’என்ற புனை பெயரில் உலா வருவார்

RAMYA said...

நசரேயன் நல்லாத்தான் எழுதி இருக்கீங்க. அந்த பேணு விஷயம் ஒரே சிரிப்பு போங்க :))

உங்க கொடியை மறந்துட்டீங்களே :)

அதான் கவிதை குளத்திலே தொபுகட்டீர்னு குதிச்சிட்டீங்களா :) அது சரி.

நல்லாத்தான் போய்கிட்டு இருந்திச்சு :) என்னமோ இப்ப எல்லாம் இப்படி எழுத ஆரபிச்சிட்டீங்க :))

நண்பர்கள் உரையாடலும் அருமை, உங்கள் கவுஜையும் அருமை.....

தாரணி பிரியா said...

:) mudiyalai sami

நசரேயன் said...

நன்றி ஐயா,
நன்றி சின்ன அம்மிணி : - ஆமா ஒரே பிழைதான், கொஞ்சம் திருத்திட்டேன்.

நன்றி புது வெட்டி ஒபிசெர் சந்தனமுல்லை

நன்றி முகிலன் : இல்ல நசரேயன், குடுகுடுப்பை

நன்றி சித்ரா :- உண்மையிலே ஆட்டோ தான் வருமா

நன்றி வானம்பாடிகள் அண்ணாச்சி :- அண்ணே உங்களை வச்சி காமெடி பண்ணுற அளவுக்கு நான் இன்னும் வளரலை.

நன்றி பிரியமுடன்...வசந்த்

நன்றி ஈரோடு கதிர் : வானம்பாடிகள் பதிலை பார்க்கவும்

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi :- கவுஜை படிச்சிட்டு காணாம போய்ட்டா, நான் இலக்கியவாதி ஆகிடுவேன்.

நன்றி நாஞ்சில் பிரதாப் :- பேசமா கவுஜைக்கு எழுதின பிழைகளை கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுத்து இருக்கலாம்.

நன்றி சிங்கக்குட்டி :- இல்லைங்க இப்ப எல்லாம் நான் நல்ல பையன் ஆகிட்டேன்

நன்றி cheena (சீனா) ஐயா, சும்மா ஒரு கற்பனை தான், நானும், குடுகுடுப்பையாரும் பேசுற மாதிரி

நன்றி சத்ரியன் :- அடுத்த முறை வரும் போது சொல்லுங்க, சரக்கு வாங்கி வைச்சி இருக்கேன்.

நன்றி பழமைபேசி இனிமேல பிழை விடாம எழுதுறேன்.

நன்றி விதூஷ்/வித்யா .. இன்னும் பல பெயர்கள் போடலாம், இதோட நிறுத்திக்கிறேன்.யாரு அந்த சொள் அளகன்?

நன்றி ரவி

நன்றி தேவா சார்

நன்றி goma அக்கா, அந்தோணிச்சாமி தோப்புக்கு போக வேண்டாம், எங்க தோப்பிலே இருக்கு எலுமிச்சம் பழம்.

நன்றி "ரம்" யா :- கொடி அடுத்த இடுகையிலே வரும்.

பழமைபேசி said...

//நன்றி பழமைபேசி இனிமேல பிழை விடாம எழுதுறேன்.//

தளபதிக்கு ஏன் இந்தக் கொலைவெறி? இனிமேலும் பிழை விடாம எழுதுவீங்களா? அவ்வ்வ்வ்........

ஆ.ஞானசேகரன் said...

//இந்த உரையாடலில் கலந்து கொண்ட பதிவர்களை கண்டு பிடித்து கொடுபவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு //

அய்யா சாமி எனக்கு தெரியாது..

கமலேஷ் said...

அய்யய்யோ.....நண்பரே....
என்னால இதுக்குமேல சிரிக்க முடியாது...
ரொம்ப அழகா இருக்கு...
ரசிச்சி படிக்க முடியுது...
படிச்சா பெறகும் சிரிக்க முடியுது...

ஹேமா said...

நசர்,உங்ககூட கலந்துகிட்டு கவிதையைப் பத்தி கலந்து கதைச்சு எழுதிக் கிழிச்சது வால்பையன் தான்.அவரேதான்.

Vidhoosh said...

சொள் அலகன்
கூகிளிட்டுத் தேடவும்

Vidhoosh said...

என்னலாம் பேரு வச்சுருக்கீங்க. அவ்வவ்... என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே

--வித்யா

நசரேயன் said...

நன்றி தாரணி பிரியா :- முடியலையா இன்னும் நிறைய சரக்கு இப்படி இருக்கு

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி கமலேஷ்

நன்றி ஹேமா :- ஆனா நானும் அதே மாதிரி தான்

மறு நன்றி Vidhoosh : சொள் அளகன் ரெம்ப சோக்கு, அப்புறம் உங்களுக்கு கவிதாயினி/இலக்கியவாதின்னு பேரு இருக்குன்னு சொல்ல வந்தேன்

வில்லன் said...

//இந்த உரையாடலில் கலந்து கொண்ட பதிவர்களை கண்டு பிடித்து கொடுபவர்களுக்கு நிச்சயம் பரிசு உண்டு //

சத்தியமா நானும் நீரும் இல்ல....... ஏன்னா எப்படி வெட்டியா பேசி பொழுத கழிக்க எனக்கு விருப்பம் இல்ல.

வேல வெட்டி இல்லாம சும்மா வெட்டியா கவுஜ, மொக்கன்னு எழுதுற ரெண்டு வெட்டி பசங்க ஒன்னு நீறு இன்னொன்னு அண்ணாச்சி குடுகுடுப்பை...... இதுல அநியாயத்துக்கு துட்ட கரியாக்க போன் வேற .......

இது கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் தான்....

வில்லன் said...

//!!!!//
///சின்ன அம்மிணி said...
தளபதி, ஒரே எழுத்துப்பிழை. அவசரமா தட்டச்சினீங்களா?
//

ஒன்னே ஒன்னுன்னு சொல்லச் சொன்னாருங்களா தளபதி? இதுல எதோ மறைமுக கொடுக்கல் வாங்கல் இருக்கு போல....அவ்வ்வ்.......///

நசரேயன் தமிழுக்கே சயனைட் கொடுக்குற தலங்க. சொள் அலகன் வந்தாக் கூட அடங்க மாட்டாரு தளபதி. :)) சொள் அலகன் கூட இவரு கிட்ட பம்முராருன்னா பாத்துக்கோங்க..
-வித்யா//!!!!//

வித்யா
நசரேயன் ஒரு தமிழ் புலவர் (குட்டி கலைஞர்).... அப்படிதான் எழுதுவாரு!!!!!!!!!!!!!! உங்களுக்கு புரியலன்னா!!! வேணும்னா நீங்க ஒரு translator வச்சுக்குங்க.... மயில்சாமி ஒரு படத்துல translate பண்றமாதிரி பண்ண!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//
பழமைபேசி said...
//நன்றி பழமைபேசி இனிமேல பிழை விடாம எழுதுறேன்.//

தளபதிக்கு ஏன் இந்தக் கொலைவெறி? இனிமேலும் பிழை விடாம எழுதுவீங்களா? அவ்வ்வ்வ்........//


பழமை

நீங்க புலவர்....... நீங்க புத்தகம் எழுதணும்..... நாங்க பேச்சுதமிழ் கவிதை கவிதை எழுதரோம்ம்... திருவிளையாடல்ல நாகேஷ் சொன்ன மாதிரி பிழை இருந்தால் இருக்கும் பிழை அளவுக்கு கொறச்சுட்டு பரிசா கொடுத்துருங்க........