Tuesday, November 3, 2009

வெள்ளைக்காரியும் குரோடன்சும்

என்ன மாப்ள வீட்டிலே பார்க்கிற எல்லா பெண்ணையும் வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டு திரியுரியாமுல்லா, ஏன் அடிக்கடி இங்க இரவு நடன விடுதிக்கு போறியா?

மாமா அது இல்லாம அமெரிக்காவிலே என் பொழைப்பு ஓடாது.சல்சவையும், சரக்கையும் கலக்கி ஆடலைனா தூக்கம் வர மாட்டேங்குது

விடிய விட வெள்ளையம்மா ௬ட சல்சா ஆடிட்டு, காலையிலே வீட்டிலே அனுப்பிய பெண்ணோட போட்டோ பார்த்தா எப்படி பிடிக்கும்

அது என்னவோ உண்மைதான் மாம்ஸ், இங்கே வெள்ளையம்மா ௬ட குடியோட குடித்தனம் பண்ணிட்டு, காலையிலே நம்ம ஊரு பெண்களை பார்த்தால் நிற குருடிலே எல்லாமே கருப்பு மயமா இருக்கு, இதை எல்லாம் பார்க்கும் பொது பேசாம ஒரு வெள்ளையாம்மவுக்கு துண்டு போடலாமுன்னு இருக்கேன்.

அளவுக்கு அதிகமா ஆடதேடா

ஆட்டத்தோட அருமை உனக்கு எப்படி தெரியும், நீ அடங்கி போன கட்டை

அந்த காலத்திலேயே நான் போகாத கிளப்பா ? நான் போடாத துண்டா, நான் போன வேகத்துக்கு கிளப்க்கு வாட்ச் மேன் வேலை பார்கிறனோன்னு நிறைய பேருக்கு சந்தேகம் வந்து விட்டது, நான் அங்கே செலவழிச்ச காசுக்கு அண்ணா சாலையிலே ஒரு கட்டடம் விலைக்கு வாங்கி இருப்பேன்.


ஏதாவது தேறுச்சா?

வெள்ளையம்மா எல்லாம் என்னைப் பார்த்து இந்த மாதிரி ஆகிடுவாங்க, என்னை பார்த்து பரிதாப்பட்டு ஒரு கருப்பம்மா தான் ஓசியிலே ரெண்டு பீர் வாங்கி கொடுத்தது, அதுக்கு நான் இருநூறு பீர் வாங்கி கொடுத்ததுக்கு அப்புறமா?


நான் பரவாஇல்லை ரெண்டு வெள்ளைக்காரிக்கு பீர் வாங்கி கொடுத்து உசார் பண்ணிட்டேன்.

உசார் பண்ணிட்டியா?

அப்புறம் என்ன நடந்தது?

ஒன்னும் நடக்கலை, நன்றின்னு சொல்லிட்டு அவ பாய் பிரண்ட் ௬ட ஆடப்போயிட்டா.இன்னும் கொஞ்ச நாள்ல பாரு, பின்னி படல் எடுப்பேன்அதானே பார்த்தேன், நீ எங்கே என்னை விட ஒரு படி மேல போயிட்டோன்னு நினைத்தேன்.


மாம்ஸ் உன்னையும் என்னையும் தயவு செய்து ஒப்பிட்டு பேசாதே, உனக்கு பீர் வாங்கி கொடுத்த தெத்து பல் காரி இன்னும் வந்து கிட்டு இருக்கா


மாப்ள அது ஒரு காலம், அந்த காலத்திலேயே இப்ப இருக்கிறதை விட கொஞ்சம் அழகு குறைவா இருந்தேன், அதனாலே என்னை வெள்ளையம்மா எல்லாம் கண்டுக்கலை, இப்ப அளவுக்கு அதிகமா அழகா இருக்கிறதாலே என்னை பார்த்து எல்லோரும் ஒதுங்கி விடுறாங்க.

மாம்ஸ் அது அப்படி இல்லை, வயசான ஆளு ஒருத்தர் வார வழியிலே வழுக்கி அவங்க மேல விழுந்து அவங்க இரவை நாசப் படுத்த ௬டாதுன்னு ஒதுங்கி இருப்பாங்க.என்னைய பாரு சல்லிப் பயலா இருந்த நான், சல்சாவிலே ஆடுற ஆட்டத்திலே எல்லோரையும் கிறங்கடிக்கிறேன்.

ஏன் அவுத்து போட்டுட்டு ஆடுதியோ?

நீ எல்லாம் சினிமாவிலே பாட்டு போட்டா எழுந்து தம் அடிக்கப் போறவன், உனக்கு என்ன தெரியும் ஆட்டத்தோட அருமை.நானும் முதல்ல அப்படித்தான் போய் பட்டிகாட்டுகாரன் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி இருப்பேன், அப்புறமா ஆட்டத்தை கத்துகிட்டேன், அதுதான் என்னை ஆட்டி வைக்குது, ஆனா வெள்ளையம்மா எல்லாம் நம்ம ஊரு புள்ளைகா மாதிரி நிற வித்தியாசமோ, அழகோ பார்ப்பதில்லை

மாப்பிள்ளை வெள்ளையம்மா எல்லாம் குரோட்டன்ஸ் மாதிரி அவங்க எல்லாம் வீட்டுக்கு முன்னாடி வைக்கிறதுக்கு தான் நல்லா இருக்கும், அதே மாதிரி அதுகளோட பராமரிப்பு செலவு ரெம்ப அதிகம், அவங்களுக்கு முகச்சாயம், நகச்சாயம் போடுவதற்கு உன் மாத சம்பளம் பத்தாது.ஆனா நீ எதிர் பார்க்கிற வெள்ளையம்மா மாதிரி குரோட்டன்ஸ் செடி நம்ம ஊரிலே இருக்குமான்னு தேடினால் கிடைக்காது, ஏன்னா நம்ம ஊரு குரோடன்ஸ் சோடி எல்லாம் கண்ணிலே படாது, அவங்களுக்கு எல்லாம் பாலிவுட் நடிகரையோ, ஹாலிவுட் நடிகரையோ நினைத்து கனவு காணவே நேரம் சரியா இருக்கும்.

மாம்ஸ் இங்கே இருக்க வெள்ளையப்பன்,கருப்பு அண்ணாச்சி எல்லாம் வெள்ளையம்மா ௬டத்தானே சுத்துதான்.

மாப்ள இவங்க கலாச்சாரம் அப்படி, சின்ன வயசிலே இருந்து அதிலே வளர்ந்து வந்தாலே இவங்களுக்கு ஒரு செடியை பார்த்ததும், அது குரோடன்ஸ் செடியா இல்லை கள்ளி செடியானு நல்லா தெரியும், நாம அப்படியா சொந்த வீட்டை தவிர வேற எல்லா வீட்டு புள்ளைகளும் எப்படி வேணுமுனாலும் இருக்கலாம்னு நினைக்கிறவங்க,புற அழகாய் பார்த்து மயங்குகிறதை விட, அக அழகாய் ரசிக்க பழகிக்கோ.

மாம்ஸ் தண்ணி போட்டு இருக்கியா, ஒரு அருவை மழையை கொட்டுற, நீ கொஞ்ச நாள் இப்படித்தான் காஞ்ச மாடு மாதிரி துண்டை கையிலே வச்சி அலைந்தாய், ஒண்ணும் தேரலை, நான் எங்கே வெள்ளையம்மாவை உசார் பண்ணி உம்மா கொடுத்து விடுவேன்னோன்னு பொறாமை உனக்கு, ஒழுங்கா வாயை அடக்கி வாசித்தா அளவுக்கு அதிகமா மீன் கிடைக்கிற அன்றைக்கு உனக்கு ஒரு துண்டு இனாமா தருவேன்.

டேய் சத்தமா பேசாதே டா, உன் ௬ட ௬ட்டு சேர்ந்து விட்டேன்னு எனக்கு ஒரு வாரமும், மெய்த மாட்டை கெடுக்கிற மெனக்கெட்ட மாடுன்னு உனக்கு ஒரு வாரமும் அடி விழப் போகுது,அது எல்லாம் ஒரு பருவ கோளாறு தான், விடக் சேவல் மாதிரி அலைந்த நான், பல்லு போன பாம்பு ஆகி விட்டேன்.எனக்கும் இப்படித்தான் ஒரு காலத்திலேயே அறிவுரை கொடுத்தாங்க, கேட்டு திருத்தவே இல்லை பட்டுத்தான் திருந்தினேன், அதனாலே நீயும் பட்டு திருந்துவன்னு நம்பிக்கை இருக்கு,அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு புரியுற காலம் வரும்

சூப்பர் மாம்ஸ்.. சூப்பர் மாம்ஸ்


நல்லா இருந்ததா, உன் மனசு மாறிப் போச்சா, நான் ௬ட அதிகமாவே பேசிட்டனோன்னு நினச்சேன்.


அட நீ வேற போன வாரம் ஓசியிலே பீர் வாங்கி கொடுத்த வெள்ளையம்மா இன்னைக்கு கிளப் க்கு வாறியான்னு sms அனுப்பி இருக்கா, அவ பாய் பிரண்ட் வரைலையாம், சும்மா சொல்லக் ௬டாது, பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு


மாப்ள நான் இன்னும் பேசி முடிக்கலை.


உன் பேச்சை கேட்க எல்லாம் நேரம் இல்லை, எதுவா இருந்தாலும் ரெண்டு நாள் கழிச்சி பேசலாம்


14 கருத்துக்கள்:

கபீஷ் said...

//பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு
//
:-):-):-)

சந்தனமுல்லை said...

/பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு /

:-)))))

JesusJoseph said...

ரெம்ப நாளுக்கு அப்ப்புறம் இப்பத்தான் கனவில் தென்பட்டிருக்க??

ஆட்டத்தோட அருமை உனக்கு எப்படி தெரியும், நீ அடங்கி போன கட்டை

நல்ல இருக்கு

ஜோசப்

ஹேமா said...

ம்ம்ம்...இவ்ளோ புத்தி சொல்ல ஒரு மனுசர் இருந்தும் நான் இப்பிடித்தான் இருப்பேன்னு அடம் பிடிக்கிறவங்களை ஒண்ணுமே பண்ணமுடியாது நசரேயா.

Unknown said...

//புற அழகாய் பார்த்து மயங்குகிறதை விட, அக அழகாய் ரசிக்க பழகிக்கோ.//

இதென்ன இப்பூடி நடுவில பன்ச் வேற வைக்க ஆரம்பிச்சாச்சு?

-வித்யா

அத்திரி said...

வெள்ளையம்மா மேட்டரை விடவே மாட்டீங்களா அண்ணாச்சி

அத்திரி said...

தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.......விரைவில் எழுதவும்........

ஆ.ஞானசேகரன் said...

என் பக்கத்திற்கு வந்துவிட்டு செல்லுங்கள் அன்புடன் ஆ.ஞானசேகரன்

SUFFIX said...

:):)ஹி..ஹி

சிங்கக்குட்டி said...

//ஒரு வெள்ளையாம்மவுக்கு துண்டு போடலாமுன்னு இருக்கேன்//

பாத்துங்க வெள்ளையாம்மா பெரிய பில்லா போட்டு வெரும்கையோட ஊருக்கு திரும்ப அனுப்பிட போகுது :-)

பழமைபேசி said...

வட அமெரிக்க வலைஞர் தளபதி வாழ்க!

வில்லன் said...

//அதானே பார்த்தேன், நீ எங்கே என்னை விட ஒரு படி மேல போயிட்டோன்னு நினைத்தேன்.//

அதான தமிழன் ஒருவன் முன்னேறிட்டா அடுத்தவனுக்கு பொறுக்காதே..... நண்டு அடுத்த நண்டு மேல ஏற விடாம கால புடிச்சு இழுக்குற மாதிரி இழுத்து விடுறதுல கை தேந்தவங்க..... வாழ்க தமிழ் இனம்......

வில்லன் said...

//பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு //

சபாஸ் சரியான வஞ்சபுகழ்ச்சி அணி...... பன்னின்னு நெனச்சு பண்ணி காச்சல் தடுப்பூசி போட்டுற போறாங்க..... பாத்து....

Anonymous said...

//பின்னி படல் எடுப்பேன்//

ஒழுங்கா பழமைபேசி பதிவுகளைப்படிக்கறீங்கன்னு தெரியுது.