Friday, October 23, 2009

காவல் துறையின் குற்றப் பத்திரிக்கை

குற்றவாளி௧ள் மூவரும் சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு செல்லாமல் பேருந்து நிலையத்திலே முகாம் மிட்டு இருந்தனர். முகாமிட்ட முரட்டு ஆசாமிகள் அங்கு வந்து போய் கொண்டு இருக்கும் கல்லூரி பெண்களை எல்லாம் கிண்டலும் கேலியும் பண்ணி கொண்டு இருந்தனர்.நீங்க எல்லாம் எங்கே போறீங்க, நாங்களும் அங்கே வரவான்னு ஓய்வு எடுக்கவரும் அறைக்கு ஓய்வு எடுக்க ஆண்களை பார்த்து நயன பாசையிலே பேசினார்கள் என சாட்சி ஒன்னு நாயர் சொல்லுறாரு.

பக்கத்திலே இருந்த டாஸ்மாக் கடையிலும் புகுந்து, கம்பிகளை எண்ணிக் கொண்டு இருந்த கடை மேலாளரை பார்த்து "என்ன படிச்சா உங்க வேலைக்கு வரலாம்" என் கேட்டு அவரை தீராத மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, குடிக்கிற பாட்டிலோடு குடித்தனம் பண்ணினாலும் குடிக்காதவரை ரெண்டு சொட்டு பீர் குடிக்க வைத்து விட்டார்கள், குடிந்த வாடை வீட்டுக்கு போனால் தெரியும் என்பதற்காக அவரோட தங்கமணிக்கு பயந்து இன்னும் ஊரை சுத்தி வருகிறார் என் சாட்சி ரெண்டு பிச்சை எடுக்கும் கோடிஸ்வரன் சொல்லுறாரு.

சம்பவம் நடந்த அன்று பெய்த மழையிலே இவர்கள் நனைந்து கொண்டு ஆட்டம் போட்டதைப் பார்த்து

"என் தம்பிகளா இப்படி, மழையிலே ஆட்டம்" ன்னு கேட்டவரை

"மழையிலே ஆடினாலும் தப்பு, குத்தால மலையிலே ஆடினாலும் தப்பு, நீ என்ன குடை விற்கிறவரா இல்லை குடைச்சல் கொடுககிறவரா" என கொலைவெறி நக்கலில் நாக்கை காட்டி பேசினார்கள் என குடை விற்கும் பாலைவனம் சாட்சி மூணு சொல்லுறாரு.

அதுமட்டுமில்லாமல் ஒரு அரசாங்க அதிகாரியான பேருந்து ஓட்டுனரை பார்த்து
"டிரைவர்ங்க பொம்பளைங்களைப் பார்த்தா குதிச்சி குதிச்சி ஓட்டுறார், இனிமேல இவங்களை எல்லாம் குதிப்பினர்ன்னு ௬ப்பிடனும்" என்ற அபச்சொல்லை கேட்ட எமராஜா சுவத்திலே அறைந்த ஆணியை போல அன்றைக்கு ஆணி பிடுங்க முடியலைன்னு சொல்லுறாரு சாட்சி நாலு.

இப்படி அரசாங்க அதிகாரியின் வேலையை கெடுத்தல், பொது மக்களுக்கு பங்கம் விளைக்கும் படி நடந்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடு பாட்டவர்கள். இதோடு நின்றார்களா

பதிக்கப் பட்ட பெண்ணை மானவங்கம் படுத்தாத குறையாக நடந்து கொண்டு இருக்கிறார்கள், பேருந்திலே இறங்கும் போது வழிக்கு விழுந்த பெண்ணைப் பார்த்து "உன்னை தூக்கி விட நான் எவ்வளவு முறையானாலும் விழுவேன்" என்று அவள் கையை பிடித்து தூக்கி விட்டு இருக்கின்றனர், மேலும் அவள் விழுந்த பயத்தில் அவள் விட்டு சென்ற துப்பட்டாவை எடுத்து கொண்டு அவளை பின் துரத்தி சென்று

நீங்க உன் துப்பட்டாவை விட்டுவிட்டு

என் தூக்கத்தை

எடுத்திட்டு போறீங்க


இந்த


மழை சகதியை போல


என் மனசிலே புதைஞ்சுட்டீங்க


மண் சகதி காய வெயில் இருக்கு


என் மன சகதி காய என்ன இருக்கு ???


என்று கவிதை எல்லாம் பேசி கிண்டல் செய்து இருக்கிறார்கள்.இளம்பெண் கையை பிடித்தது மட்டுமில்லாமல், அவளை துப்பட்டாவையும் எடுத்து இருகின்றனர், இந்த கோர சம்பவத்தை பார்த்த அனைவரும் 'ஐயோ' 'ஐயோ' என்று குய்யோ முறையாக கதறி சிதறி ஓடோடி ஓடினார்கள் என மாலைக்கண் மருது சொல்லுகிறார் இவரு சாட்சி ஐந்து.

பெண்ணை கேலி செய்தல், மன உளைச்சலுக்கு ஆளாக்குதல்,ஆள் கடத்தல், திட்டமிட்டு தடவுதல் ஆகிய பல விதிகளின் கீழே வழக்கு தொடர பட்டுஉள்ளது, இவர்கள் அனைவரும் ஒரு மாத காலத்திற்கு காவல் நிலையம் சென்று காலையிலே மாலையிலே கை எழுத்து இட வேண்டும்.

நடந்த உண்மைசம்பவம் :

அன்றைக்கு காந்தி ஜெயந்தி, புதுப்படம் பார்க்க கல்லூரியை கட் அடித்து விட்டு தியேட்டர் செல்ல பேருந்துக்கு காத்து இருக்கும் போது, அதிலே இருந்து இறங்கிய கிழவி கீழே விழுந்து விட்டது, அது விழுந்த வேகத்திலே எழுந்த சத்தத்திலே வெடி குண்டுதான் என எல்லோரும் சிதறி அடித்து ஓடினார்கள், இவர்கள் மட்டும் கிழவியை தூக்கி விட்டு விட்டு வேகமாக ஓடும் போது குடைக்காரன் கடையிலே கை பட்டு குடை எல்லாம் கிழே விழுந்து விட்டது, இவர்கள் ஓடும் போது எதிரே வந்த பேருந்து நிலையத்திலே இருந்து குண்டும் குழியிலே பட்டு பேருந்து தஞ்சாவூர் பொம்மை போல தலை ஆட்டிக்கொண்டு வந்தது,உடனே நின்ற நண்பனில் ஒருவன் பாட்டி பல் செட் தன் பையிலே விழுந்து விட்டதென ௬றி வேகமாக ஓடி வந்து பாட்டியிடம் கொடுத்து வந்தான். நல்ல படம் பார்க்க முடியாம மழை சதிபண்ணி விட்டதேன்னு நாயர் டீ கடையிலே டீ குடித்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்


7 கருத்துக்கள்:

Anonymous said...

அடப்பாவிகளா!!! காவல்துறை ஒரு பெரிய சினிமாவே இல்ல குற்றப்பத்திரிக்கைங்கற பேர்ல குடுத்துருக்கு.

ராமலக்ஷ்மி said...

வலுவாக ஐந்து சாட்சிகள் இருந்தும், இப்படியா? மனசாட்சி இல்லாத இந்த மடையர்களைத் திருத்த காலை மாலை கையெழுத்தெனும் தண்டனை போதுமா:(?

சிங்கக்குட்டி said...

//காவல் நிலையம் சென்று காலையிலே மாலையிலே கை எழுத்து இட வேண்டும்.//

என்னாங்க தண்டனை இது, வச்சு லாடம் கட்டமா...

ஈரோடு கதிர் said...

ஏன்னே...

போலீசு டேசன்ல ரைட்டரா இருந்தீகளோ

புலவன் புலிகேசி said...

நீங்க காவல் துறையில பணி புரிந்தவரோ...

vasu balaji said...

யதார்த்தம் எப்பவும் த்ரில்லே இல்லாம சப்புன்னு தான் இருக்கும் போல.

ஊடகன் said...

தாமதத்திற்கு வருந்துகிறேன்.......

கலக்குங்க.............