Wednesday, October 7, 2009

கரிபால்டி

சுமார் 10 வருசத்துக்கு முன்னாடி நடந்த வழக்கமான மொக்கை கதைதான் இது, அந்த கதையிலே ஒரு கருப்பு அழகனும், இன்னொரு அட்டு கருப்பு அழகனும் நண்பர்கள். அவங்களுக்குள்ளே எப்போதுமே ஒரு போட்டி இருக்கும், யாரு அழகு என்பதிலே இல்லை, யாரு கருப்பு என்பதிலே,ஆனா ரெண்டும் மஹா கழிசடைங்க.அஞ்சு காசுக்கு பிரையோசனப் படாது

டேய் கரிபால்டி

என்ன கருப்பா?

டேய் என்னை என்னவேனாலும் சொல்லி திட்டு,ஆனா கருப்பன்னு சொல்லாதே, உன் கலர் பாரு என் கலர் பாரு, நான் மாநிறம் நீ மக்கி போன குப்பை நிறம்.

டேய் நான் அட்டு கருப்பு, நீ கருப்பு.. ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும்.

இதுவே அவங்களுக்கு இடையே அடிக்கடி நடக்கும் சம்பாசனைகள்,அப்படி இருக்கும் போது கதையிலே ஒரு திருப்பு முனை. அந்த நாளிலே என்ன நடந்ததுன்னா



டேய் கரிபால்டி, நான் ஒரு வாரமா பாத்து கிட்டு தான் இருக்கேன்



என்ன மச்சான், உன் பீடியை எடுத்தது தெரிஞ்சு போச்சா?



. இப்படியெல்லாம் நடக்குதா, இந்த விசாரணைக்கு அப்புறமா வாரேன். உனக்கும் அந்த மெக்கானிக் டிபாட்மேன்ட் பொண்ணுக்கும் என்னாடா நடக்குது, உன்னையே பார்த்து கிட்டு இருக்கா, எங்களுக்கு தெரியாம துண்டு போட்டுடியா?

நம்ம கிளாஸ்லே என்னை பரிதாமா பார்க்கதுக்கு ௬ட ஆள் இல்லை, மெக் பசங்களுக்கு இருகிறதே அந்த ஒரு பொண்ணு தான், அங்கேயே பெரிய அடி தடி நடக்கிறது துண்டு போட, உள்ளுரிலே நான் விலை போகலை, எப்படி மச்சான் வெளியே விலை போவேன்.

டேய் சிலசமயம் சொந்த வீட்டைவிட பக்கத்து வீட்டிலேதான் உன்னோட அருமை தெரியும், நீ இப்படி எதுவுமே தெரியாத மாதிரி நல்லா நடிக்கிறடா, உண்மையிலே அவ உன்னை பார்க்கிறது தெரியலையா?

உண்மைதான் ௬ட நீ மட்டும் இருந்தானா, அவ எனக்கு தான் துண்டு போடுறன்னு நம்பி இருப்பேன், அந்த மெட்ராஸ்காரனும் ௬ட இருந்தான், ஒருவேளை அவனுக்கு துண்டு போடுறாளோன்னு அமைதியாகிட்டேன்.
மெட்ராஸ்காரன் தான் அந்த ஸ்ரீ ரங்கம் மாமி பொண்ணை உசார் பண்ணிட்டான்னு ஊருக்கு தெரியுமே.

கண்டிப்பா அது எனக்கு விழுந்த துண்டுன்னு சொல்லுறியா?

உன் கருப்பு மேல சத்தியம், நீ கருப்பா இருந்தாலும் களையா இருக்கடா, நீ ஒரு கருப்பு அழகன்.

சந்தடி சாக்கிலே ரெம்ப கருப்படிக்க காக்கா பயலே.

சரி விடு மாப்பிள்ளே, போட்ட துண்டை உறுதி படுத்த ஒரு லவ் லெட்டர் எழுது. நீ தாமதிச்ச வேற எவனாவது புகுந்துடுவான், ஏற்கனவே மெக் பசங்க எல்லாம் லெட்டர் வச்சிகிட்டே சுத்துறாங்க.



அப்படிங்கிற!!

ஆமா தூங்கிகிட்டு கற்பனை கழுதையை எழுப்பி ஒரு லெட்டர் எழுது, நாளைக்கே கொடுக்கிறோம்.

எனக்காக நீயா கொடுக்க போற?

அவ என்ன எனக்கா துண்டு போட்டா?, உனக்குத்தானே, கல்லூரியிலே காதல் கிளிகளா வலம் வரனுமுணா கொடு, இல்லை இப்படியே கரி கட்டையா அலை.

இன்னைக்கே எழுதி நாளைக்கு கொடுத்து விடுகிறேன்.

(ஒரு வாரம் கழித்து,கருப்பனும், சென்னை நண்பனும்)

டேய் கரிபால்டியை பாத்தியா, ஒரு வாரமா ஆளையே காணும்.

அவனை கடைசியா பாத்தது நீ தான், என்ன நடந்ததுன்னு நீ தான் சொல்லணும், நான் கேள்வி பட்ட வரையிலே, அவன் ரூம்க்கு எப்ப வாரான், எப்ப போறான்னு தெரியலை, ஆனா அவன் இங்கேதான் இருக்கான், வா நாம அவன் ரூம்லே போய் பார்க்கலாம்.



(கரிபால்டி அறை முன்னால்)



என்னமச்சான் பூட்டி இருக்கு.

இன்னும் வந்து இருக்க மாட்டான்.

கரிபால்டிக்கு பிடிச்ச குதிரை ரம் இருக்கு, அடிக்கலாமுனு பார்த்தா ஆளையே காணும்.

எங்கேடா?

(அறை கதவை திறந்து இன்னொரு குரல்) எங்க.. எங்க.. குதிரை ரம் எங்கே.

குதிரை சரக்குன்னதும், எப்படி குதிச்சி வாரான் பாரு, டேய் நீ துண்டு போட்டதினாலே எங்களை எல்லாம் பாத்தா ரெம்ப இளக்காரமா இருக்கோ, இல்ல அவ எங்க ௬ட எல்லாம் பேசக்௬டாதுன்னு சொல்லிட்டாளோ, அவகிட்ட சொல்லு இந்த யோசனையை கொடுத்ததே நான் தான்.

டேய் கருப்பு இவன் மூஞ்சை பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலை, உண்மையை சொல்லு எங்க போன ?

ஒரு வாரமா மாம்பழச்சாலை பாலத்துக்கு அடியிலே இருந்தேன் பகலிலே.

உன் ஆளு காலேஜ்க்கு வந்தாளே, நீ அங்கே தனியா என்ன பண்ணினே, உண்மைய சொல்லு, லெட்டர் கொடுத்தியே என்ன.. என்னாச்சி...




அதை பத்தி மட்டும் கேட்காதீங்க?



ஏன்டா கொடுத்தா லெட்டரை வாங்கலையா?



வாங்கிட்டா, அதுக்கு பதில் கடிதமும் தந்தா?



இனிமேல யாருக்கும் துண்டு போட முடியாதுன்னு கவலையா?




அவ எழுதின பதில் கடிதத்தை பாரு

அடப்பாவி,
நாற்பது பக்கத்துக்கு
கடிதம் எழுதிட்டியே, அது கண்டிப்பா நெடுங்காதல் கடிதமாத்தான் இருக்கும் என்பதிலே உன் காஞ்ச மாடு மூஞ்சை மட்டுமே வைத்து தெரிந்து கொண்டேன், உனக்கு துண்டு போடுவது எல்லாம் என் கனவில் ௬ட வருவதில்லை, அப்படி ஒருவேளை வந்தாலும் உன் ௬ட சுத்திகிட்டு இருக்கிற மாநிற மச்சான் மேலயே வரும்,மாநிற மச்சான் கிட்ட சொல்லு இன்னும் ஒரு வாரத்திலே பதில் வரைலனா, அவன் பட்டியலில் இருந்து தன்னால் கழட்டப்படுவான்.
தேதி : 1/
1/1995






கரிபால்டி யாருடா அந்த மாநிற மச்சான், மெட்ராஸ்காரா உனக்கு யாருன்னு தெரியுதா?



நீதான்டா அது!!!!




ஆமா நீதான், அவ உனக்கு துண்டு போடுவதை எல்லாம் விட உன்னை மாநிறமுனு சொன்னது தான் என்னாலே தாங்க முடியலை, அதுதான் இந்த இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லலை.




நான் மாநிறம்.. நான் மாநிறம் கேட்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு, நாளைக்கே நான் துண்டை போடுறேன்.







அது மட்டும் முடியாது, அவ கொடுத்த ஒரு வார கெடு இன்னையோட முடிஞ்சு போச்சி, இது உன் காதலுக்கு மட்டுமல்ல, உன் மாநிற கடிதத்துக்கும் கடைசி நாள், இந்த கடிதத்தை நான் முழுங்கிறதோட உன் காதலும் மூழ்கிடும்.




கரிபால்டி என் காதலை அழிச்சி போட்டுடியே!!



டேய் ரெண்டு பேருக்கும் காதல் தோல்வி, அதை சோகத்தை கொண்டாட கழுதை சரக்கு வாங்கி வச்சி இருக்கேன், உன் சோகம் சுகமாகனுமுனா வா






நானும் உங்க சோகத்திலே பங்கு கொள்கிறேன், கரிபால்டி இனிமேல இவன் கருப்பு இல்லை மாநிறம், வா மாப்ஸ் ஒரு பக்கம் காதல் தோல்வின்னாலும், இன்னொரு பக்கம் நீ மாநிறம் என்கிற உண்மை வெளியே வந்தத்க்காவாது குடிக்கலாம்.



நீ சொன்னதுக்கவே நான் வாரேன்.
டேய் கருப்பா.. நான் மாநிறம் டா




பொறுப்பு அறிவித்தல்:


தற்போது மாநிறத்துக்கு சொந்தக்காரர் சிங்கையிலே பிரபல பதிவரா இருக்கிறார்.


8 கருத்துக்கள்:

Anonymous said...

//தற்போது மாநிறத்துக்கு சொந்தக்காரர் சிங்கையிலே பிரபல பதிவரா இருக்கிறார்.//

என்னாதிது கிசுகிசு எல்லாம் போடறீங்க :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தேதி : 1/1/1995//

நல்லது..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இன்னும் ஒரு வாரத்திலே பதில் வரைலனா, அவன் பட்டியலில் இருந்து தன்னால் கழட்டப்படுவான்.//

நல்ல பொண்ணா இருக்கே தல..,

மணிகண்டன் said...

kalakkal nasreyan. trichyla padichi singaila irukkaravar yaaru :)-

அமுதா கிருஷ்ணா said...

தலைப்பினை பார்த்து விட்டு இத்தாலியின் கரிபால்டியை பற்றியாக்கும் என்று வந்தால்..,,,

ஹேமா said...

கறுப்பும் அழகுதானே !அது என்ன மாநிறம்.சும்மா கறுப்பானவங்க மன ஆறுதலுக்குத் தங்களை மாநிறம்ன்னு சொல்லிக்குவாங்க.கறுப்புத்தான் அழகு.

வில்லன் said...

//அவங்களுக்குள்ளே எப்போதுமே ஒரு போட்டி இருக்கும், யாரு அழகு என்பதிலே இல்லை, யாரு கருப்பு என்பதிலே,//

ச எதெதுக்கு போட்டி போடுறதுன்னே வெவஸ்தை இல்லாம போச்சுப்பா நாட்டுல..........

//ஆனா ரெண்டும் மஹா கழிசடைங்க.அஞ்சு காசுக்கு பிரையோசனப் படாது//
உங்களுக்கே தெரிஞ்சா சரி

வில்லன் said...

//தற்போது மாநிறத்துக்கு சொந்தக்காரர் சிங்கையிலே பிரபல பதிவரா இருக்கிறார்.//

யாருப்பா அது.... சிங்கை பதிவர்