Wednesday, September 23, 2009

மழலைப் படி

பாப்பா எங்க போறா?

நான் ஸ்கூல்க்கு போறேன்.

ஏன் போற?

நான் பிக் கேர்ள் ஆகிட்டேன், அதனாலே ஸ்கூல்க்கு போறேன், அப்பா என் பிரண்ட்ஸ் எல்லாம் ஸ்கூல்க்கு வரலை.

அவங்க இன்னும் பிக் கேர்ள் ஆகவில்லை, அதனாலே வரலை

அவங்க எல்லாம் இன்னும் பேபியா ?

ஆமா நீயும் அம்மாவும் ஸ்கூல்க்கு வரணும் ?

நாங்கதானே உன்னை ஸ்கூல்க்கு ௬ட்டுபோறோம்

ஸ்கூல்ல என்னை விட்டுட்டு நீயும் அம்மாவும் வீட்டுக்கு போக ௬டாது, என் ௬டவே இருக்கணும்.

ஏன் இருக்கணும்?

எனக்கு அங்க யாரையும் தெரியாது, அதனாலே நான் பயந்துருவேன், நான் குட்டி பொண்ணு அதனாலே நீங்களும் இருக்கணும்.


பள்ளி வகுப்பு அறையில்:

வணக்கம் என் பொண்ணு ஸ்கூல்க்கு வந்து இருக்கா, இது அவளோட சேர்க்கை கடிதம்.


ஒ.. அப்படியா.. நல்ல விஷயம், ஹலோ ஸ்வீட்டி எப்படி இருக்க?

ஏன் என்னைப் பார்த்து பின்னாலே போற?

அப்ப்பா எனக்கு பயமா இருக்கு

நானும் அம்மாவும் இங்கேதான் இருக்கோம் நீ பயப்பட ௬டாது,இவங்க உன் வகுப்பு ஆசிரியை, நீ இவங்களை பார்த்து வணக்கம் சொல்லு.


நீங்க இந்த பாரங்களை எல்லாம் பூர்த்தி செய்ங்க, நான் இதோ வருகிறேன்.


அம்மா அந்த குண்டு பையன் ஏன் அழுறான்?


அவங்க அம்மா, அப்பா அவனை ஸ்கூல்ல விட்டு விட்டு வீட்டுக்கு போய்ட்டாங்க, அதான் அவன் அழுகிறான்.


அவங்க அம்மா, அப்பா பேடு, என் அம்மா, அப்பா குட்.

ஹலோ இங்கே வாங்க, நீங்க நிரப்பிய பாரம்................, இதோ பிடிங்க.

ஆமா, என்கிட்டே எதுக்கு மறுபடியும் நான் நிரப்பிய பாரம் கொடுத்தாங்க.

அவங்க கொடுக்கிறதுக்கு முன்னாடி ஒண்ணு சொன்னா, அது என்னனு புரிஞ்சுதா?

புரிஞ்சா ஏன் வழக்கம் போல யா.. யா ன்னு சொல்லுறேன்

நீங்க நிரப்பினது எல்லாமே தப்பா இருக்காம், அதான் திருப்பி கொடுத்துட்டாங்க,அவங்க பார்க்கிற பார்வையிலே நீங்க எல்லாம் அமெரிக்காவுக்கு கள்ளத்தோணி ஏறி வந்து இருப்பிகன்னு நினைச்சி இருப்பாங்க.குடுங்க நான் திருத்தி தாரேன், தமிழும் ஒழுங்கா எழுத தெரியலை, இங்கிலீஷ்சும் ஒழுங்கா எழுத தெரியலை.

ஐந்து நிமிடம் கழித்து:

கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியா பதிலே சொல்லி இருக்கேன், இதை கொண்டு அவங்க கிட்ட கொடுங்க.

நான் ஒரு தடவை சரி பார்க்கட்டுமா?
சரி பார்த்து உங்க ஆங்கில மானத்தை மறுபடியும் இழக்க வேண்டாம், கொண்டு போய் கொடுங்க.

மேடம் நீங்க சொன்ன தவறுகளை எல்லாம் திருத்தி விட்டேன்.

ஒ.. அப்படியா ரெம்ப சந்தோசம், நீங்க கொஞ்சம் இருங்க நான் சரி பண்ணிட்டு சொல்லுறேன்.

இரண்டு நிமிடம் கழித்து:

எல்லாம் சரியா இருக்கு

இன்னும் வேற ஏதும் பாரம் நிரப்பனுமா?

இல்லை.. அவ்வளவு தான், நீங்க கிளம்பலாம்.. என்ன யோசிக்கிறீங்க..

என் பொண்ணு எங்களை விட்டு தனியா இருந்ததே கிடையாது, அதான் எப்படி தனியா இருப்பான்னு யோசிக்கிறேன்.

உங்களே மாதிரி தான் எல்லாம் பெற்றோரும்,இதோ பாருங்க அவங்க குழந்தைகளும் அழுறாங்க, கொஞ்சம் நேரம் அழுவாங்க, அப்புறம் எல்லாம் சரியாகி விடும்.

நாங்க இப்ப என்ன பண்ணனு தெரியலை, எப்படியும் போகும் முன்னே அழ ஆரம்பித்து விடுவாள்.

முதல்ல ஒருத்தர் போங்கோ, அப்புறமா கொஞ்ச நேரம் கழித்து இன்னொருத்தர் போங்கோ.

குட்டியம்மா, அம்மா போய் பாப்பா ஸ்ராலர் எடுத்திட்டு வாரேன்

ஏன் ஸ்ராலர் எடுக்கணும்?
வெளியே வெயில் அடிக்குது, அதனாலே உள்ளே எடுத்திட்டு வாரேன். அப்பா இங்கதான் இருப்பாங்க.

சரி, அப்ப நீ போயிட்டு வா..

அப்பா நீ வா நாம ரெண்டு பேரும் கலர் பண்ணலாம்.

சரி வா..

ஐந்து நிமிடம் கழித்து:

அம்மா எங்கேடா இன்னும் காணும், அப்பா போய் பாத்திட்டு வாரேன்.

இல்ல வேண்டாம்.. எனக்கு பயமா இருக்கும், அம்மா வருவா, நீ உக்காரு.

உங்க டீச்சர் எதோ உனக்காக எடுத்து வச்சி இருக்காங்க, வா பார்க்கலாம்.

ஹாய்.. உனக்கு டோரா பிடிக்குமா?

பதில் சொல்லு.. பிடிக்குமுன்னு..

நீங்க போங்கோ நான் பிடிச்சிகிறேன், வேற வழி இல்லை..

சரி.. பாப்பா அப்பா அம்மாவை ௬ப்பிட்டு உடனே வாரேன், நீ டீச்சர் கிட்ட இரு..

வேண்டாம்.. அப்பா போகாதீங்க.. போகாதீங்க...

ஐந்து நிமிடம் கழித்து :

ஹலோ மிஸ்டர்..பின் வாசல் கதவிலே நின்னு என்ன பண்ணுறீங்க?

என் பொண்ணு இன்னும் அழுகையை நிறுத்தலை..

அவங்க தன்னாலே சரியாகி விடுவாங்க, நீங்க கவலை படமா போங்கோ, இப்ப அழுரான்னு கஷ்டப்பட்டா,அவளோட எதிர்கால வாழ்க்கை கஷ்டமாகிடும்.இது வரைக்கும் உங்க தயவிலே இருந்த உங்க உங்க பொண்ணு, வாழ்கையிலே எடுத்து வைக்கும் முதல் படி, இது சந்தோஷ படவேண்டிய விஷயம்.இன்னையிலே இருந்து உங்க பொண்ணு ஒரு புது வுலகத்திலே காலடி எடுத்து வைக்கிறாள்.இது எதிர் காலத்திற்கான ஏணிப் படி. மனித வாழ்க்கை சுழற்சி முறையிலே முக்கிய கட்டம்.உங்களோட மன நிலையிலே தான் எல்லா பெற்றோரும் இருப்பாங்க, நீங்க உங்க மகளை பற்றி கவலை படவேண்டாம்.இன்னும் ஒரு வாரத்திலே சரியாகி விடும், மாற்றத்திற்கு ஏற்ற படி மனம் மாற கொஞ்ச நாள் ஆகும்.நீங்க சீக்கிரம் போங்கோ, இங்கே யாரையும் நிற்க அனுமதிப்பதில்லை.

என்னங்க அவங்க சொன்னது எதாவது புரிஞ்சுதா?

ம்.... நல்லா புரிஞ்சது

ரெண்டு வார்த்தைக்கு மேல இங்கிலீஷ் பேசினாலே அர்த்தம் கண்டு பிடிக்க நாலு மணி நேரம் யோசிப்பீங்க.

அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க..

அதெல்லாம் முடியாது

அதானே பார்த்தேன், நீங்க ஓணான் மாதிரியும், கோயில் மாடு மாதிரி தலை ஆட்டின வேகத்தை பார்த்தா, எங்கே புரிஞ்சி போச்சோன்னு நினைச்சேன்.இன்னைக்கும் என் கணக்கு தப்பலை


21 கருத்துக்கள்:

Anonymous said...

குழந்தையை முதல்முதல்ல ஸ்கூலுக்கு அனுப்பிச்சுட்டு குழந்தை அழுகும் முன்னாடி நீங்க அழுதிட்டு இருந்தீங்க போலிருக்கு.

Mahesh said...

சேம் ப்ளட்... நம்ம சோகம் யாருக்குப் புரியுது? (நான் இங்கிலீசைச் சொன்னேன்)

ராமலக்ஷ்மி said...

//பின் வாசல் கதவிலே நின்னு என்ன பண்ணுறீங்க?//

16 வருடம் முன்னே, மூடிய ஜன்னல் கதவின் ஒரே ஒரு இடுக்கின் வழியாக அத்தனை பெற்றோரும் முண்டியடித்து அந்த முதல்நாள் வகுப்பறைக்குள் கலவரமாய் எட்டிப் பார்த்து நின்ற நாளை நினைவுக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்:)!

vasu balaji said...

அட நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்க நசரேயன். தங்கமணிதான் அப்பப்ப ஒண்ணும் தெரியலைன்னு சொன்னாங்களே. இன்னொரு ஃபார்ம் வாங்கி மக கூடயே அதே வகுப்பில சேர்ந்திருக்கலாமே:))

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு..மழலைப் படி..உங்க நடையிலே!! ரெண்டு நாள்தான்..அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு வந்தா அழப்போறாங்க..அதனாலே கண்ணைத் தொடச்சிக்கோங்க ரெண்டு பேரும்!! :))))

ஆரூரன் விசுவநாதன் said...

நாம் முதன்முதலில் பள்ளிக்குச் சென்ற நாளில் நம் தந்தையும் இதே மனநிலையில் தான் இருந்திருப்பாரோ?

என் முதல் பள்ளிநாள் நினைவிற்கு வரவில்லை. ஆனால் குழந்தையின் முதல் பள்ளி நாளை மறக்கமுடிவதில்லை

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்

ராஜ நடராஜன் said...

//நான் ஸ்கூல்க்கு போறேன்.

ஏன் போற?

நான் பிக் கேர்ள் ஆகிட்டேன், அதனாலே ஸ்கூல்க்கு போறேன்//

புது மொழி (பிக் கேர்ள்) ஒன்று கற்றேன்!

ராஜ நடராஜன் said...

//ஏன் என்னைப் பார்த்து பின்னாலே போற?//

சரியான உற்றுநோக்கல்.

ராஜ நடராஜன் said...

//அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க..

அதெல்லாம் முடியாது //

:))))

கிரி said...

ஆஹா! ...

Prabhu said...

சொந்தக் கதை...?

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
அட நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்க நசரேயன். தங்கமணிதான் அப்பப்ப ஒண்ணும் தெரியலைன்னு சொன்னாங்களே. இன்னொரு ஃபார்ம் வாங்கி மக கூடயே அதே வகுப்பில சேர்ந்திருக்கலாமே:))
//

ஆமாஞ்சாமி!

ஹேமா said...

ஹாய் நசர்...எப்போ நீங்க பிக் போய் ஆகப்போறீங்க !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

என் க்ளாஸை அக்கா எட்டிப்பாத்தாளாமே.. அப்படி பாக்கக்கூடாதுன்னு சொல்லுன்னு என் பையன் சொல்லிட்டான் . அவன் ப்ரைவசி போகுதே.. :)) முல்லை சொன்னது தான் சரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை..:-))))))))

ஷண்முகப்ரியன் said...

Selection of the theme is nice.Good narration,Nasraeyan.

சிங்கக்குட்டி said...

//ரெண்டு வார்த்தைக்கு மேல இங்கிலீஷ் பேசினாலே அர்த்தம் கண்டு பிடிக்க நாலு மணி நேரம் யோசிப்பீங்க//

நல்லாருக்கு...கலக்குங்க :-))

அப்துல்மாலிக் said...

சூப்பர்

நானும் இதை அனுபவிச்சிருக்கேன்

அது சரி(18185106603874041862) said...

//
அதானே பார்த்தேன், நீங்க ஓணான் மாதிரியும், கோயில் மாடு மாதிரி தலை ஆட்டின வேகத்தை பார்த்தா, எங்கே புரிஞ்சி போச்சோன்னு நினைச்சேன்.இன்னைக்கும் என் கணக்கு தப்பலை
//

அதான....உங்களைப் பத்தி தெளிவா தெரிஞ்சி வச்சிருப்பாங்க போலருக்கே....

Unknown said...

நல்ல அனுபவம்ங்க..

வில்லன் said...

/குழந்தையை முதல்முதல்ல ஸ்கூலுக்கு அனுப்பிச்சுட்டு குழந்தை அழுகும் முன்னாடி நீங்க அழுதிட்டு இருந்தீங்க போலிருக்கு.//

ஆமா மொத மொதல்ல நீங்க ஸ்கூல் போகும் போது யாரு அழுதா!!!!!!!! உங்க அம்மாவ டீச்செரா ...

எங்க அம்மாவுக்கு அந்த சங்கடமே வரல... ஏன்னா எங்க அம்மாதான எனக்கு ஒண்ணாம் கிளாஸ் டீச்சரு............எப்படி

இருந்தாலும் எங்க வீட்டுல நாலு வருசத்துக்கு முன்னாடி நடந்தத சோகத்த அப்படியே கண்ணு முன்னால கொணாந்து நிருதிடீருவே....