Monday, September 14, 2009

தங்கமணி குறிப்புகள்

குறிப்பு ஒன்று:

அட உங்களைத்தான், என்னத்த இப்படிப் புரட்டி பார்க்குறீங்க, இது என்ன காதல் கடிதமா?,இது குறிப்பு கடிதம். எழுதினது நான் தான் சந்தேகப்பட்டு என்னை தொந்தரவு செய்தால் விளைவு என்ன வாகும் என்பதை முக்கிய குறிப்பிலே கூறியுள்ளேன்.சரி விசயத்துக்கு வாரேன், முதல்ல பிரிட்ஜ்யை திறந்து மேல் தட்டிலே இருக்கிற பாத்திரத்திலே காப்பி என்று பெயர் எழுதப்பட்ட கோப்பை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் வைக்கவும், மறக்காமல் சர்க்கரை, பால், காப்பி பொடி, தண்ணி உங்களுக்கு ஏத்த விதத்திலே கலக்கவும்.கலக்கும் போது உங்கள் மனசிலே காப்பி கலவையிலே ஏதும் குறை இருந்தால், மறக்காமல் பிரிட்ஜ் கதவிலே இருக்கும் எனது புகைப் படத்தை பார்க்கவும், நீங்க கலக்கும் போது குறைவாக தெரியும் அன்பு இப்போது காப்பியோடு கலந்து விடும்.இனிமேல இந்த குறிப்பு அவ்வளவு தான், அடுத்த குறிப்பு அடுப்பிலே கவிழ்த்து இருக்கும் வேற்று பாத்திரத்திலே இருக்கிறது, மறக்காமல் முக்கிய குறிப்பை படிக்கவும்.



குறிப்பு இரண்டு:


இரண்டாம் குறிப்பை படிக்கும் முன் முதல் குறிப்பிலே இருக்கும் விசத்தை முடிக்கவும், காப்பியை கையிலே எடுத்து கொண்டு இதை படிக்கவும் மீதம் இருக்கும் காப்பியை அதே காப்பி என்று எழுதப்பட்டு இருக்கும் பாத்திரத்தில் வைத்து பிரிட்ஜ்ல் வைக்கவும்.வைத்து விட்டு பிரிட்ஜ்ல் இருக்கும் முட்டை பெட்டியை எடுத்து அதிலே இரண்டு முட்டைகளை எடுத்து அடுப்பிலே உள்ள பாத்திரத்திலே உடைத்து ஊத்தவும். மீண்டும் பிரிட்ஜ்யை திறந்து பிரட் பையை எடுக்கவும்.இதற்கும் காப்பியை குடித்து முடித்து விட்டால் கழுவி வைக்கவும். பிரட் பையிலே பிரட் இல்லை என்றால் துண்டு பிரட்கள் எங்கேயோ வைத்த ஞாபகம் மறக்காமல் தேடி எடுக்கவும்.இதோடு இந்த குறிப்பு முடிகிறது, அடுத்த குறிப்பு அலமாரியிலே இருக்கிறது.

குறிப்பு மூன்று:

இதற்குள் ரோட்டியையோ, ரொட்டி துண்டையோ கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்போது முட்டையுடன் ரொட்டி துண்டுகளை போட்டு கலக்கவும், நீங்கள் கலக்கும் முன் அடுப்பு பத்த வைக்க வழக்கம் போல மறந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.தீயை பத்த வைத்து விட்டு கலவையை நன்கு கலக்கவும். முடிந்தால் உபரியாக உப்பு, புளி, மிளகாய் இவற்றை சேர்த்து கொள்ளவும். ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு பின் பிரிட்ஜ்ல் உள்ள லஞ்ச் பாக்ஸ் என்று பெயர் எழுதப்பட்ட பாத்திரத்திலே அனைத்தையும் போடவும், இப்போது அன்பு குறைவாய் இருந்தால் என புகைபடத்தை பார்க்கவும். முட்டை கலவையை சிந்தாமல் சிதறாமல் அள்ளி லஞ்ச் பாக்ஸ்சிலே போடவும், மீதம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை முக்கிய குறிப்பிலே எழுதியுள்ளேன்.இனி முக்கிய குறிப்புக்கு செல்லலாம். அது உங்க பேன்ட்,சட்டை, மடிகணனி பை, பணப்பை ஆகிய இடங்கள் மட்டுமில்லாமல் கிழே கிடக்கும் அனைத்து துண்டு தாள்களிலும் உள்ளது, எதாவது ஒன்றை எடுக்கவும்.

முக்கிய குறிப்பு:

கடிகார மணி காலை 12 மணிக்கு அடிக்கு மாறு வைத்துள்ளேன், அந்த நேரத்தை மாற்றி மதியம் நான்கு மணிக்கு அடிக்கு மாறு வைக்கவும். முக்கிய குறிப்பு தவறினால் இன்று கண்டிப்பாக என் சமையல் என்பதை யாராலும் தடுக்க முடியாது.அலுவலகம் செல்லும் போது ஏதும் குறையாக தென்பட்டால் என் புகைப் படத்தை பார்க்கவேண்டாம், கடைமை செய்ய கிளம்பும் போது காதல் குறுக்கே நிறைக்க ௬டாது என்ற நல்ல எண்ணத்திலே உங்க பணப்பையிலே இருக்கும் எங்க அப்பா படத்தை பார்த்து விட்டு செல்லவும்.


14 கருத்துக்கள்:

Anonymous said...

ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. :)

Anonymous said...

ஹை, மீத பர்ஸ்டு

சந்தனமுல்லை said...

தங்கமணியோட நிலைமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!! இப்படி குறிப்பு எழுதியே நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க போல இருக்கே!! :)

ஷண்முகப்ரியன் said...

Concept is superb,Nasraeyan.
உண்மையில் திரைப்படத்துக்கே ஓபனிங் சீனுக்குத் தகும்.
பாராட்டுக்கள்.

vasu balaji said...

இத தங்கமணி படிச்சாங்களா?:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ சந்தனமுல்லை said...
தங்கமணியோட நிலைமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!! இப்படி குறிப்பு எழுதியே நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க போல இருக்கே!! :)//

வழிமொழிகிறேன்ப்பா :))

ஹேமா said...

//அலுவலகம் செல்லும் போது ஏதும் குறையாக தென்பட்டால் என் புகைப் படத்தை பார்க்கவேண்டாம், கடைமை செய்ய கிளம்பும் போது காதல் குறுக்கே நிறைக்க ௬டாது என்ற நல்ல எண்ணத்திலே உங்க பணப்பையிலே இருக்கும் எங்க அப்பா படத்தை பார்த்து விட்டு செல்லவும்.//

நசரேயன்,எப்பிடியெல்லாம் சொன்ன பேச்சுக் கேக்கிறீங்க.உங்களைப் பாத்து பழகிக்கணும்.பாவம்தான் தங்கமணி அக்கா.

pudugaithendral said...

\\ சந்தனமுல்லை said...
தங்கமணியோட நிலைமை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!! இப்படி குறிப்பு எழுதியே நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க போல இருக்கே!! :)//

வழிமொழிகிறேன்ப்பா :))//

me too. :)))))))

ராஜ நடராஜன் said...

பாதி படம் ஓடி முடிஞ்ச பிறகு தியேட்டருக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்குது எனக்கு!தொடர் குறிப்புகளா இது!ஒண்ணுமே பிரியல.

பின்னால சீட்டுக்குப் போயிட்டு வாரேன்.

Prabhu said...

என்ன ஆச்சு!?

Prabhu said...

என்ன ஆச்சு!?

SUFFIX said...

குறிப்புகள் பயங்கரமா இருக்கே, ஃபால்லோ பண்ணுவத நினைச்சா ஆச்சர்யமா இருக்கு.

நட்புடன் ஜமால் said...

குறிப்புக்கு ஏகப்பட்ட செலவு ஆயிருக்கும் போல ...

(டாக்டர் செலவு)

அப்துல்மாலிக் said...

என்ன கொடும சார் இது
ஆண் குறிப்பா கணவர் வர்க்கம் இந்த நிலமைக்கு தள்ளப்பட்டுவிட்டதா

இது கற்பனையா இருந்தாலும் நினைத்தாலே வயித்தகலக்குது தல‌

முழுதும் ரசித்தேன்