Wednesday, July 8, 2009

பெண் பார்க்க போறேன்

டேய்.. உனக்கு பெண்ணு பார்க்க போறேம், ஒரு பேன்ட், சட்டை போடக்௬டாது, இப்பவும் அரை டவுசரோட வரணுமா?

"என்னங்க அவன் பெண்ணு பார்க்க சமதிச்சதே பெரிய விஷயம், இன்டர்நெட் வழியாவே கல்யாணம் முடிக்கலாமுன்னு இருந்தவன், கொஞ்சம் மனசு மாறி இருக்கான், நீங்க எதையாவது பேசி கெடுத்து விடாதீர்கள்."

"டாட், இதுதான் லேட்டஸ்ட் பேஷன்"

"என்ன பேஷன் வீட்டு உள்ள போடுறதை எல்லாம் வெளியே போடுற"

"கொஞ்சம் பேச்சை நிப்பாட்டுறீங்களா, பொண்ணு வீடு வந்தாச்சு"

பொண்ணு வீட்டுக்குள் நுழைந்ததும் வழக்கமான பச்சி,வடை, காபி எல்லாம் பரிமாறப்பட்டது, பையன் மட்டும் ஏதும் சாப்பிடலை,அதுக்கு காரணம் நாகரிகம் இல்லை, அவனுக்கு பிடிச்ச சுடு நாயும், பிசாவும் இல்லை,எல்லோரும் பேசுறதை காதிலே வாங்காம பொண்ணோட பேசுறதிலே பையன் ஆர்வமா இருந்தான் காஞ்ச மாடு மாதிரி,எல்லா பெருசுகளும் பேசி முடித்தவுடன்

"நான் பொண்ணு ௬ட கொஞ்சம் பேசணும்"

"நீங்க வெளிநாட்டுல வெள்ளைக்கார துரைகிட்ட வேலை பார்க்கிறதாலே, இப்படி எல்லாம் கேட்பீங்கன்னு தெரியும், அடுத்த அறையிலே நீங்க ரெண்டு பேரும் பேசலாம்"

"மன்னிக்கணும் நான் வெளிநாட்டு வாழ் தமிழன் எதையும் ஒளிவு மறைவு இல்லாம பேசுவேன், அதனாலே நான் இங்கே தான் பேசுவேன்"

"டேய்.. இதெல்லாம் .."

"அம்மா அப்பாவை கொஞ்சம் அடக்குங்க"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" இதை கேட்டு அவரு வழக்கம் போல அமைதி சொருபி ஆகிவிட்டார்

"உங்களுக்கு சாப்ட்வேர் தெரியுமா ?"

"அது என்ன ஆணிவேர்?..என் பொண்ணு ரெம்ப பேசமாட்டா அதானலே நான் பதில் சொன்னேன்.அவளுக்கு வரலாறு தெரியும்"

"இல்ல அவங்களே பதில் சொல்லட்டும்." தெரியாதுன்னு வேகமாக தலையை ஆட்டுகிறாள்.

"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு"

"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு"


"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு, இந்த கேள்விக்கான காரணம்?"

"நான் எப்போதும் மூடியை மோந்து பார்த்த உடனே கீழே விழுந்துவிடுவேன், தண்ணி ஒரு டாலர், என்னை அள்ளிப்போட்டு கொண்டு வார டாக்ஸிக்கு ஐம்பது டாலர் கொடுத்து கட்டுபடிஆகலை, அதனாலே குடும்பமா தண்ணி அடிச்சா செலவை குறைக்க இந்த சிறப்பு கேள்வி,என்னோட கேள்விகள் முடித்து விட்டது, நீங்க ஏதாவது கேட்க விரும்புறிங்களா, என்னை பற்றி,என் வேலையை பற்றி"

"ம்ம்"

"தாரளமா கேளுங்க.."

"உங்களுக்கு சமைக்க தெரியுமா?"

"தெரியாது.. நான் தமிழ் பையன்"

"உங்களுக்கு புடவையை எப்படி துவைக்கிறதுன்னு தெரியுமா?"

"தெரியாது.. நான் தமிழ் பையன்"

உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா ?

தெரியும்.. நான் தமிழ் பையன்

"நான் அந்த தண்ணிய சொல்லலை, அடி பம்ப்ல அடிக்கிற தண்ணிய சொன்னேன்"

"தெரியாது.. நான் தமிழ் பையன்"

"உங்களுக்கு மாமியார் மருமகள் சண்டைனா என்னனு தெரியுமா ?"

"அப்படின்னா ?"

"எனக்கு தெரியும்" இது பொண்ணோட அப்பா

"எனக்கு தெரியும்" இது பொண்ணோட அம்மா

"எனக்கு தெரியும்" இது பையனோட அம்மா

"எனக்கு தெரியும்" இது பையனோட அப்பா

"எனக்கு தெரியும்" ... (இப்படி எல்லோரும் சொல்லி முடிக்க அரைமணி நேரம் ஆகி விட்டது)

"உலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..
தமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..
வெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..
ஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ஒரு முறை வேலைதேடி அலையுற நீங்க.
பொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..
இப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க"


"என் வருகால மனைவியா வர தகுதிகள் என்ன இருக்குன்னு சோதனை பண்ணுறேன்,அதுக்கு தான் இப்படி கஷ்டமான கேள்விகள் கேட்டேன் "

"அப்படின்னா நீங்க பொண்ட்டாடி வேண்டுமென கடையிலே ஆர்டர் கொடுக்க வேண்டியதானே, இங்கே ஏன் வந்தீங்க"

இதை கேட்டு பொண்ணோட அப்பா
"நீ என்னவோ என்னையே மாதிரி உமையாவே காலம் தள்ளுவியோன்னு நினைச்சேன், நீ உங்க அம்மாவை விட ஒரு படி மேல, உன்னை நினைத்து எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு, ஒரு பூவை புலியாக்கிய உங்களுக்கு நன்றி"

"டேய் வா, அடுத்த தெருவிலே இன்னொரு பொண்ணு இருக்கிறதா தரகர் சொல்லுறாரு, அங்கே போகலாம்"

"கொஞ்சம் இருக்குங்க நான் ஒரு முடிவு பண்ணீட்டேன்" சொல்லிட்டு பொண்ணோட முன்னாடி முட்டிகால் போட்டு அவளோட கையை பிடிச்சி கிட்டு

"என் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து முடியலை, இது வரைக்கும் ஒரு ஆயிரம் பெண்ணை பார்த்து விட்டேன், இப்படியே போனால் தமிழ் நாட்டுல மட்டுமல்ல, இந்தியாவிலேயும் பெண்ணு கிடைக்காது, சுண்டுனா ரத்தம் வார நிறத்திலே இருந்த நான் நிலக்கரி மாதிரி ஆகிவிட்டேன், தயவு செய்து என்னை கணவனா ஏத்துக்கோங்க"

"அப்பா டவுசர் பாண்டி எதோ சொல்லுறாரு?"

"நான் என்ன சொல்ல இருக்கு எல்லாம் உன் முடிவு தான், நான் ஒரு தமிழ் அப்பா"

"என் தேனே, இனிப்பே"

"ஹனி,ஸ்வீட்டி யைத்தன் அப்படி சொல்லுறா, அவ தமிழ் பொண்ணு"

"இன்றைக்கு உன் கையை பிடிச்ச நான் வாழ்விலும் தாழ்விலும் உன் கையை விட மாட்டேன்.இந்த கைகட்டு,கால் கட்டு போட்ட அப்புறமும் தொடர்ந்து இருக்கும்"

"இந்த வசனம் பேசினால் எதாவது கையிலே கொடுக்கணும்."

"அப்பா, என் கையை தானே அவரு பிடிச்சி இருக்காரு, அதனாலே ஒரு ரூபா எடுத்து நெத்தியிலே ஒட்டி விடுகிறேன்."


"கல்யாணம் பண்ணுறதும் அதும் ஒண்ணுதான் தான், நடு நெத்தியிலே வச்சி நல்லா ஒட்டி விடு"ஆறு மாதத்திற்கு பிறகு
****************************
"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு"

"நான் வெளிநாட்டு பெண்"

"கொஞ்சம் தள்ளி நில்லுங்க உங்க தொப்பை மறைக்குது"

"என்னங்க அவரு சொல்லுறாரு இல்லை, கொஞ்சம் தள்ளி நிற்கிறது."

"அவரு சொன்னது என்னை இல்லை உன்னை"

"சார் நான் ஒண்ணு,ரெண்டு,மூணு சொல்லி போட்டோ எடுக்கிறேன், நீங்க கொஞ்சம் சிரிங்க"

"சிரிப்பு போய் ஆறு மாசம் ஆச்சி"


48 கருத்துக்கள்:

vasu balaji said...

ஏஞ்சாமி என்னதான் நக்கலுன்னாலும் கலியாணப் பேச்சுல நடுநெத்தில ஒத்த ரூவா உறுத்துது. =))..இப்பிடி சிரிப்ப தொலைக்கத் தானா கைய கால புடிச்சி அந்த பாடு. யாரு அந்த அப்பாவி?

Prabhu said...

என்ன கல்யாணத்துக்கு அவசரம். இன்னும் நாலு பொண்ணுங்கள சைட் அடிச்சிட்டு கல்யாணம் பண்ணலாமே!

~ நான் தமிழ் பையன்.

அப்துல்மாலிக் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா

முழுதும் ரசிச்சேன்.. அட எழுத்தோட்டத்தை சொல்றேனப்பூ ‍‍‍

--நான் தமிழ் பயன்

வால்பையன் said...

//"உங்களுக்கு சமைக்க தெரியுமா?"
"தெரியாது.. நான் தமிழ் பையன்"
"உங்களுக்கு புடவையை எப்படி துவைக்கிறதுன்னு தெரியுமா?"
"தெரியாது.. நான் தமிழ் பையன்"
உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா ?
தெரியும்.. நான் தமிழ் பையன்//

ஆணுக்குறிய தகுதி ஒண்ணே ஒண்ணு தான் இருக்கு!
சமைக்காம,துவைக்காம என்ன ஆம்பளை நீங்க!?

எம்.எம்.அப்துல்லா said...

ரூம் போட்டு யோசிப்பியளோ??

இரசித்துச் சிரித்தேன்

:))

தினேஷ் said...

கும்தலக்கடி ... கும்மா ...

வில்லன் said...

//"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" இதை கேட்டு அவரு வழக்கம் போல அமைதி சொருபி ஆகிவிட்டார்//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்" இதை கேட்டு அவரு வழக்கம் போல நாய் மாதிரி் பம்மி விட்டார்.....


நல்ல சிந்தனை.....நல்ல நடை ... நல்ல இளக்கிய நயம்.... வாழ்த்துக்கள்..

வில்லன் said...

"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா ?"

சல்சா நடனம் தெரியாது.... நியூயார்க் "தொடையாட்டம்" தெரியும்........

"தொடையாட்டம்" நு ..பேரு.. வச்ச புண்ணியவான் வாழ்க.....

வில்லன் said...

//"என்ன பேஷன் வீட்டு உள்ள போடுறதை எல்லாம் வெளியே போடுற"//

அப்படி இல்ல தல!!! என்ன பேரன் போடுறதா எல்லாம் நீபோடுற?????? இதுதான் சரியான எழுது நட ஹி ஹி ஹி

வில்லன் said...

//"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா ?"//

அதென்ன "சுடு நாய்". எனக்கு சுடு நாய் எல்லாம் தெரியாது தெருநாய் மட்டும்தான் தெரியும், சமச்சி தரவா!!!!!!!!!!!!!!!!!!!!!. கேள்விய பாரேன்>>>>>

வில்லன் said...

"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா ?"

தெரியும்.... பைபடில நல்லா "குடுமி பிடி" சண்ட போடவும் தெரியும்....ஏன் அங்க வந்து குழாய் அடி சண்டை போடனுமா.... நான் ரெடி.....

வில்லன் said...

//"உலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..
தமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..
வெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..
ஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ஒரு முறை வேலைதேடி அலையுற நீங்க.
பொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..
இப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க"//

எங்க மானத்த இதுக்கு மேல எவனாலயும் வாங்கவே முடியாது. இப்படி நாதுறேற எங்க மானத்த.... கண்டிப்பா வழக்கு போட்டே ஆகனும்.... எவன் பொண்ணு தருவான் இதெல்லாம் படிச்ச பொறகு.. நல்ல வேல எனக்கு கலயம் ஆய்டுச்சி இல்ல கொலையே பண்ணிருப்பேன் உம்ம......

வில்லன் said...

//"கொஞ்சம் தள்ளி நில்லுங்க உங்க தொப்பை மறைக்குது"
"என்னங்க அவரு சொல்லுறாரு இல்லை, கொஞ்சம் தள்ளி நிற்கிறது."
"அவரு சொன்னது என்னை இல்லை உன்னை"//

பொம்பளைக்கு தொப்பையா.... புதுசா இருக்கே...........

வில்லன் said...

//"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு"

"நான் வெளிநாட்டு பெண்"//

சபாஸ் சரியான அடி. வந்தது நடமாடும் ஆப்பு..... வாழ்க எலிசபெத் டெய்லர் காஸ்மெடிக் கம்பெனி....

வில்லன் said...

//"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு"

"நான் வெளிநாட்டு பெண்"//

அதெப்படி முடியும். கெழவிக்கு மஞ்சள் பூசினாலும்... கெழவி கெழவிதான்.... கொமரி ஆகவே முடியாது. தலைக்கு கலர் அடிச்சாலும், மொகத்துக்கு மைகேல் ஜாக்சன் போல ப்ளீச் பண்ணினாலும், ஒரு நாயும் நம்மள சீண்டாது இங்க... இது தெரியாம இங்க வந்த உடனே ரம்பா மாதிரி குட்ட பாவடையும் கண்ட எழவையும் போட்டுட்டு தறி கெட்டு திரியுதுங்க ........கருமம் கருமம்.

ராஜ நடராஜன் said...

எப்படித்தான் இத்தனைப் பூக்கள் பூக்கிறதோ:)

வில்லன் said...

//"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு"

"நான் வெளிநாட்டு பெண்"//

அதெப்படி முடியும். கெழவிக்கு மஞ்சள் பூசினாலும்... கெழவி கெழவிதான்.... கொமரி ஆகவே முடியாது. தலைக்கு கலர் அடிச்சாலும், மொகத்துக்கு மைகேல் ஜாக்சன் போல ப்ளீச் பண்ணினாலும், ஒரு நாயும் நம்மள சீண்டாது இங்க... இது தெரியாம இங்க வந்த உடனே ரம்பா மாதிரி குட்ட பாவடையும் கண்ட எழவையும் போட்டுட்டு தறி கெட்டு திரியுதுங்க........கருமம் கருமம். அவங்களுக்கு (வெள்ளை அம்மாவுக்கு) அது நல்லா இருக்கும். நம்ம மக்களுக்கு, அண்டாவுக்கு எதோ கட்டிவிட்டாப்புல கேவலமா இருக்கும் அதையும் போட்டுட்டு கண்டுக்காம அலையும்க.....

புலிய பாத்து பூனை சூடு போட்டுகிச்சாம் புலி போல ஆகனும்னு..... சூடு போட்டு உடம்பு புண்ணானது தான் மிச்சம்....அந்த கததான் நடக்கு இங்க.......

S.R.Rajasekaran said...

பொண்ணு பாக்க போனதுக்கு இந்த கூத்தா

S.R.Rajasekaran said...

\\\அவனுக்கு பிடிச்ச சுடு நாயும், பிசாவும் இல்லை\\\


புது வகையான ஐட்டமா இருக்கு

ஒருவேளை சுடுகஞ்சி மாதிரி .....

S.R.Rajasekaran said...

"நான் பொண்ணு ௬ட கொஞ்சம் பேசணும்"
அவனுக்கு அவனே வச்சுக்கிட்ட மொதல் ஆப்பு

S.R.Rajasekaran said...

"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா ?"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

S.R.Rajasekaran said...

"அப்பா டவுசர் பாண்டி எதோ சொல்லுறாரு?


அடப்பாவி ஒரு மனுசன இப்படியா கொமைக்கிறது

S.R.Rajasekaran said...

\\நான் வாழ்விலும் தாழ்விலும் உன் கையை விட மாட்டேன்\\


சர்ச்-ல அடிமை சாசனம் வாசிக்கிற மாதிரியே இருக்கு

S.R.Rajasekaran said...

\\நடு நெத்தியிலே வச்சி நல்லா ஒட்டி விடு\\


ஓகோ பொண்ணுங்களுக்கு காலில் மெட்டி போடுற மாதிரி ...

S.R.Rajasekaran said...

\\\சார் நான் ஒண்ணு,ரெண்டு,மூணு சொல்லி போட்டோ எடுக்கிறேன்\\\


கல்யாணத்துல போட்ட மூணு முடிச்ச திரும்பவும் நாபகபடுத்துரானே ?

S.R.Rajasekaran said...

இனிமேல இது வயது வந்தவர்களுக்கு மட்டும் அப்படின்னு ஒரு போர்ட் மாட்டுங்க.ஏன்னா கல்யாணம் முடிக்காத ,முடிக்க போற பசங்க இத படிச்சிட்டு வயத்த கலக்கிட்டு ...அப்புறம் பின் விளைவுகள் பெருசா ஆகிரப்புடாது

S.R.Rajasekaran said...

----------நல்லாஇருக்கு --------

கயல்விழி said...

சுடுநாய் = ஹாட்டாக்? LOL

ஹேமா said...

நசரேயன் எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிச்சு எழுத உங்களுக்கு மட்டும் இவ்ளோ நேரம் கிடைக்குது...!கொஞ்சம் சிரிக்க....

Unknown said...

ஹாட்டாக்கை வைத்து

நல்ல தொரு


hot talk செய்துட்டீங்க


இருந்தாலும் உங்கட கனவில பொண்ணு பார்ப்பது - இப்படியெல்லாம் தென்படுதா ...

sakthi said...

சுடு நாய் அப்படின்னா கண்டிப்பா விளக்கம் தேவை நசரேயன் அண்ணா

sakthi said...

உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு"

"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு"


"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா ?"

"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு,

அது சரி

sakthi said...

உலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..
தமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..
வெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..
ஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ஒரு முறை வேலைதேடி அலையுற நீங்க.
பொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..
இப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க"

அடேங்கப்பா என்ன ஒரு வீரம்

Unknown said...

தலைவரே.... கத செம சூப்பரு...!!

அ.மு.செய்யது said...

//டேய்.. உனக்கு பெண்ணு பார்க்க போறேம், ஒரு பேன்ட், சட்டை போடக்௬டாது, இப்பவும் அரை டவுசரோட வரணுமா?//

அந்த‌ பொண்ணு பேரு செண்ப‌க‌மா ??

//சுடு நாய் சாப்பிட தெரியுமா ?"//

யு மீன் ஹாக்டாக் ( Hogdog ?? )

Anonymous said...

அண்ணா நீங்க தமிழ் நாட்டு அண்ணா..

வீட்டில் இதை படிச்சிட்டு நான் தனியா சிரிக்கிறதை யாரும் பார்க்கலை பார்த்திருந்தா என் கதை எங்கே செல்லும் இந்தப் பாதை தான்...

செம காமெடியா இருந்தது....காலையில் என்னை சிரிக்கவைத்து புண்ணியம் கட்டிக்கிட்டீங்க.....

Unknown said...

:)) நல்லா இருக்குங்க..
:)))

S.A. நவாஸுதீன் said...

நல்லா பீதிய கெளப்புறாங்கப்பா. இதை படிச்சிட்டு நிறைய பேர நெத்திய தடவ வச்சிட்டீங்களே நசரேயன். (காசு இருக்கானு பார்க்குரதுக்குதான்)

சுடு நாய் (hot dog) - சூப்பர் தல

குடந்தை அன்புமணி said...

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...

தமிழ். சரவணன் said...

தலைவா! திருமணம் செய்யப்போறதுக்கு முன்னாடி இதையும் கொஞ்சம் தெருஞ்சிக்குங்கோ...


திருமணத்திற்கு முன்பு 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வண்முறை சட்டம் (D V case)போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளங்கள்... மற்றும் அரசியல் வாதி மகளாக இருந்தால் முன் ஜாமின் (AB) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்... இது எல்லாம் நகைச்சுவைக்கக எழுதுவது அல்ல...

தற்பொழுது சிறுசிறு குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புக்கெல்லம் இதபோல் சட்டங்கள் மணமகன் வீட்டாரின் மீதுப்போடப்படுகின்றன... இதுவரைக்கும் சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் விசாரணைக்கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்... மற்றும் சுமார் வருடத்திற்கு 20,000 குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது

வருமுன் காப்போம்...

அன்புடன்,

தமிழ். சரவணன்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

SUFFIX said...

"சூப்பர் மிக்சிங்" அதுதான் "செம கலக்கல்"னு சொல்ல வர்ரேன் ஏன்னா நான் தமிழ்ப்பையன்.

RAMYA said...

ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லே, வர வர உங்க கனவு ரொம்ப விலாவரியா வில்லங்கமா போகுது. கொஞ்சம் உங்க கனவை கன்ட்ரோல் பண்ணி வையுங்கோ :))

Anonymous said...

அம்சம்.. விழுந்து விழுந்து சிரிச்சேன்.. :-)))))))

சிராப்பள்ளி பாலா said...

கொஞ்ச நாள்ல பொண்ணு பார்க்க போகலாம்னு வீட்ல சொல்லிகிட்டு இருக்காங்க.
இந்த நேரத்துல இப்படி ஓரு பதிவ போட்டு, "நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை!"

SUMAZLA/சுமஜ்லா said...

அசால்ட்டா அதே சமயம் அர்த்தமா பதிவு போடறீங்க! ஆனால், அடிக்கடி கல்யாணம் பற்றி பதிவிடுவதின் ரகசியம் என்ன?

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரியலி சூப்பர்

நல்லா இருக்கு

விக்னேஷ்வரி said...

ஐயோ, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. எப்படி இப்படியெல்லாம் எழுதுறீங்க....