Monday, July 6, 2009

உச்சி வெயில்

உச்சி வெயிலின் உக்கிர வெப்பம் தாங்காமல் எழுந்தேன், எழுந்தவன் எழுந்த இடம் தெரியாமல் கண்ணை சுற்றினேன், சாக்கடையிலே எலி செத்த துர் நாற்றம் எனக்கு தெரியவில்லை காரணம் என் வாயின் துர் நாற்றம், ஒவ்வொரு முறை இரவு கடைக்கு சென்று மறு நாள் காலை எங்காவது விழுந்து எழும் போது நான் எடுக்கும் வழக்கமான முடிவு தான், இருந்தாலும் அந்தி மாலையிலே ஆதவன் மறையும் போது என் முடிவும் என்னை விட்டு மறையும், நான் மீண்டும் அதே கடைக்கு செல்லும் முன்.

வெயில் வெப்பம் தாங்காமல் தலையை தொட்டு பார்த்தேன், முடிகள் ஒன்றோடு ஓன்று ஒட்டி இருந்தது, அதை இழுக்கும் போது ஏற்படுத்திய வலியை உணரும் அளவுக்கு நான் இன்னும் தெளிச்சி அடைய வில்லை, கைகளை பார்த்தேன் கரும்சிகப்பு நிறத்திலே திட்டுக்கள் ஆங்க்காங்கே, இரவு விழுந்ததிலே தரை என் தலைக்கு தண்டனை கொடுத்து இருக்கும் என,நேற்று இரவு நான் மனதுக்கு அளித்த உணவு தீர்ந்த நிலையிலே வயற்றிக்கு உணவு அளிக்க வேண்டிய கட்டயாத்தை உணர்த்தியது, எனக்கு உணவின் உறைவிடமாக இருக்கும் வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டிற்கு செல்லும் போது உடையின் அலங்கோலத்தையும், ரத்தம் உறைந்த தலையையும் பார்த்து யாரும் பரிதாப படவில்லை, இது தினமும் நடக்கும் வழக்கமான நிகழ்வு என்பதால் என் கோலத்திலே அவர்கள் வீட்டு முன் இட்டு இருக்கும் கோலம் அழியாமல் பார்த்து கொள்வார்கள்.அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள் என்று என் சுய நினவு என்னை வற்புறுத்தும் அளவுக்கு நான் இடம் கொடுப்பத்தில்லை,அதை புரிந்து கொள்ளும் முன் இரவு வந்து விடுவதே காரணம்.

வீட்டின் முன் வந்தேன், என்னை வரவேற்க யாரும் இல்லாமல் வீடு வெறிச்சோடி இருந்தது, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன்,சமையல் அறையில் எனக்கு உணவை தேடினேன், வயற்றின் வெறுமை பாத்திரங்களின் வெறுமையைப் பார்த்து கோபத்தை தூண்டியது,வழக்கமாக இரவு நேரங்களில் நான் பயன் படுத்தும் ஆயுதங்கள் கண்ணில் தென் படாமல் போக ஒரு காலி பாத்திரத்தை எடுத்து கொண்டு என் மனைவியை தேடினேன் .அடுத்த அறையின் விசும்பல் ஓசையை கேட்டவுடன் ஆத்திரத்துடன் சென்றேன்.


அவள் முகத்தை தலை முடி மறைத்துக்கொள்ள கீழ் நோக்கி இருந்த அவளின் அழுகையை மட்டும் கேட்டேன், நான் உடம்பின் முழு வலிமையையும் பயன்படுத்தி காலி பாத்திரத்தால் அவளை அடிக்க ஓங்கினேன், நான் ஓங்கவும் வெளியே கார் வரவும் சரியாக இருந்தது, வண்டி வந்த திசையைப் பார்த்தேன், அதன் நிறம் கண்டு அது காவல் துறைக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டேன்.

வண்டியிலே இருந்து இறங்கியவர்கள் என்னை நோக்கி வரவும் நான் பின்னால் இருந்த கதைவை திறந்து வெளியே ஓடி மறைந்து கொண்டேன், ஓடிவிட உடலில் தெம்பு இல்லாததால் அங்கே மூச்சை உள்ளேயும் வெளியேயும் இழுத்து கொண்டு நின்றேன், ஓடுவதற்கு பதில் அவர்களிடம் பிடி படுவதே நலம் என்ற முடிவில்,வந்தவர்கள் என் மனைவியின் இருப்பிடம் வந்து நின்றார்கள், அவள் அவர்களை கண்டு பயந்ததாக தெரியவில்லை அவர்களை எதிர் பார்த்தது போல எழுத்தாள், பின்புறம் இருந்த சன்னல் வழியாக பார்த்தேன், அவர்கள் பேசுவது லேசாக காதிலே விழுந்தது.

காரில் வந்த பெண் காவல் துறை அதிகாரி மற்ற காவலர்களுக்கு உத்தரவு கொடுத்து கொண்டு இருந்தார், வீட்டிற்கு முன் ௬ட்டம் ௬டாமல் பார்த்து கொள்ள வேண்டும், மருத்துவ வாகனம் இன்னும் இரண்டு நிமிடத்திலே இங்கே இருக்கும் என்று சொன்னார்.அவர்கள் பேசிய உடனே மீண்டும் அழுது என் பக்கம் திரும்பிய போதுதான் நான் அவள் முகத்தை கவனித்தேன், அவள் முகத்திலும் ரத்தம் திட்டுக்களாய், நேற்று இரவு நான் அவள் கன்னத்திலோ, தலையிலோ அடித்து இருக்க வேண்டும் என் நினைத்தேன், இது தினமும் நடக்கும் நிகழ்வு, இதற்கு காவல்துறையின் அவசியம் என்ன இருக்கிறது என்று எண்ணமிட்டேன்.

அதற்குள் மருத்துவ வாகனம் வீட்டு முன் நின்றது, அதிலே இருந்து வெண் சீருடை அணிந்தவர்கள் இறங்கி கையிலே நோயாளிகளை கிடத்தி கொண்டு செல்லும் பொருளுடன் என் மனைவி இருந்த அறைக்கு வந்தார்கள், அங்கே இருந்த பெண் காவல் அதிகாரி ஒரு மூலையை நோக்கி கையை காட்டினார், வந்தவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அங்கே என்ன இருக்கிறது என்ற ஆர்வம் தொற்றி கொள்ள நானும் பின்னால் இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தேன்.அந்த மூலையிலே முகம் குப்புற ஒரு ஆள் படுத்து கிடந்தான், அவன் யாராக இருக்கும் என்று யோசிக்கும் முன் மருத்துவ காவலர்கள் அவன் முகத்தை திருப்பினார்கள்.

அவனை பார்த்தும் நான் அதிர்சியிலே உறைந்தேன், தலையிலே காயங்களுடன் ஆங்காங்கே ரத்த திட்டுகளுடன் இருந்தாலும் அந்த முகத்தை கண்டு சுலபமாக கண்டு பிடித்தேன், அது வேறு யாருமல்ல நானே தான். என்னை எடுத்து மருத்துவ படுக்கையிலே கிடத்தினார்கள், நான் இங்கு நிற்கும் போது என் உருவிலே எப்படி என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்தேன்.இதற்குள் பெண் காவலர் மருத்துவ அதிகாரிகளை நோக்கி, அந்த பொருளை தொட வேண்டாம் அதை நாம் பத்திரப் படுத்த வேண்டும், அதிலே உள்ள கை ரேகைகள் பதிவு செய்ய படவேண்டும் என்றார், அது நான் வழக்கமாக இரவு நேரங்களில் பயன் படுத்தும் பொருள், அதற்குள் என்னை கிடத்தி இருந்த என் முகத்தை ஒரு வெண் துணியால் மூடினார்கள்.அதை எடுத்து கொண்டு கிளம்பு ஆரம்பித்தார்கள்.

காவல் துறை பெண் அதிகாரி என் மனைவிடம்

"உனக்கு இந்த குடிகாரன் கிட்ட இருந்து நிரந்தர விடுதலை கிடைத்தாலும், சட்டத்திலே இருந்தது உனக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு இல்லை"

அதை கேட்டு அவள் அழவில்லை, அவளின் கண்ணீர் நிச்சயம் வற்றி இருக்கும், அவள் அவர்களோடு நடந்து சென்றாள், வீட்டின் முன் ௬டிய ௬ட்டத்தை பார்க்க முடியாமல் முகத்தை மூடி கொண்டு சென்றாள், எனக்கு அடக்க முடியாத அழுகை வந்தது,காலம் கடந்து வந்த இந்த நிரந்தர அழுகையை நிறுத்தும் முன் நான் நிரந்தர நித்திரை அடைந்து விட்டேனே என நினைத்து


33 கருத்துக்கள்:

sakthi said...

என்ன அண்ணா திடீர்ன்னு இவ்வளவு சீரியசா ஒரு கதை

sakthi said...

நேற்று இரவு நான் மனதுக்கு அளித்த உணவு தீர்ந்த நிலையிலே வயற்றிக்கு உணவு அளிக்க வேண்டிய கட்டயாத்தை உணர்த்தியது, எனக்கு உணவின் உறைவிடமாக இருக்கும் வீட்டை நோக்கி நடந்தேன்.

நடை வித்தியாசமாய் உள்ளது

ILA (a) இளா said...

பட்ட, லவங்கம் எல்லாத்தையும் கிளப்பிட்டீங்கன்னு சொல்லலாம். ஆனா கடைசி பாராவ சரியா புரியும்படி செய்யுங்க. அடிச்சு கொன்னது மாதிரி ஒரு சீன் வெச்சிருந்தா சூப்ப்பர்.

Prabhu said...

அட, வித்தியாசமா இருக்கு. பட் ஒன் கொஸ்டின்! ஆவி அழுமா?

குடுகுடுப்பை said...

வணக்கம்னே படிக்க நல்லா இருந்துச்சு.

Mahesh said...

//என்ன அண்ணா திடீர்ன்னு இவ்வளவு சீரியசா ஒரு கதை//

ர்ரிப்பிட்ட்.....

பழமைபேசி said...

போடு...போட்டுத் தாக்குங்க தள்பதி!

வில்லன் said...

//வீட்டின் முன் வந்தேன், என்னை வரவேற்க யாரும் இல்லாமல் வீடு வெறிச்சோடி இருந்தது,//

ஆமா துப்பு கெட்டவனுக்கு வரவேற்ப்பு வேற வேண்டிக்கெடக்காக்கும்..... வெளக்குமாதால நாலு சாத்து சாத்தனும்

வில்லன் said...

//அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள் என்று என் சுய நினவு என்னை வற்புறுத்தும் அளவுக்கு நான் இடம் கொடுப்பத்தில்லை,அதை புரிந்து கொள்ளும் முன் இரவு வந்து விடுவதே காரணம்.//

அனேகமாக எல்லா குடிகாரன் வீட்டிலும் நடக்குற விஷயம் தான். நெனச்சாலே மனசு வலிக்கு சார்......

வில்லன் said...

// sakthi said...
என்ன அண்ணா திடீர்ன்னு இவ்வளவு சீரியசா ஒரு கதை//

அதான் தலைப்பே சொல்லிடுச்சே....."உச்சி வெயில்"

தலைவர் ஊருல இப்ப "உச்சி வெயில்" கொஞ்சம் அதிகம். அதான் கொஞ்சம் மண்ட கோளாறு......

Anonymous said...

//போடு...போட்டுத் தாக்குங்க தள்பதி!//

ரிப்பீட்டேய்

நட்புடன் ஜமால் said...

சிக்ஸ்த்து சென்ஸ் படம் பார்த்த மாதிரிக்கீது ...


அருமை நண்பரே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

Unknown said...

தலைவரே.... அருமை.... அருமை....!! சிந்திக்க வைக்கும் கதை.......!! வாழ்த்துக்கள்...!!


பயபுள்ள செத்ததுக்கு அப்புறம் யோசிச்சுப் பாக்குரானே..??? முன்னாடியே யோசிச்சிருந்தா தலைவருக்கு இப்புடி ஒரு கதை கெடைக்காம போயிருக்கும்....!!!!


இது கதை அல்ல ... கருத்து....!!! இப்புடி கருது கந்தசாமி ஆயிட்டீங்களே .....!!! நல்லாருக்கு தோழரே.....!!!!

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்வ்!! ஆவியா இவ்வளவு நேரம் கதை சொன்னது...

நல்ல முயற்சி..:-)!!

அ.மு.செய்யது said...

சாரி..வ்ராங் நம்பர்.

அ.மு.செய்யது said...

////அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள் என்று என் சுய நினவு என்னை வற்புறுத்தும் அளவுக்கு நான் இடம் கொடுப்பத்தில்லை,அதை புரிந்து கொள்ளும் முன் இரவு வந்து விடுவதே காரணம்.//
//

நீங்க இப்படியெல்லாம் கூட எழுதுவீங்களா ??

ஆ.ஞானசேகரன் said...

//அதை புரிந்து கொள்ளும் முன் இரவு வந்து விடுவதே காரணம்.//

அப்படிபோடு..

நல்ல ஆவி கதையா இருக்கு பாராட்டுகள் நண்பா

Vidhoosh said...

//அழுத்தமான வரிகள், இதயம் கனத்தது//

//சான்சே இல்லை, நான் இன்னும் அந்த "க்" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்//

//கடைசி வரி இன்னும் மனசிலே இருக்கு//

//பெண்ணாதிக்கம் உள்ள இடுகை//

//எனக்கு இப்பவே வயத்தை கலக்குது?//

//வாவ்வ்.. (இவ்வளோ குடிச்சிட்டும்) எப்படி இப்படி தெளிவா சொல்லுறீங்க//

//கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது//

=====================
(எனக்கு பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. அதான் உங்க template-டையே use பண்ணிட்டேன். ஆமா...அங்க halloween இப்போ பிடிக்காதே.. இன்னும் நாள் இருக்கே..)

///கூல் டவுன்..கூல் டவுன்.. என் இவ்வளவு உணர்ச்சி படுறீங்க.. (உச்சி வெய்யில்ல ) என்னாச்சு?///

வால்பையன் said...

நல்லாயிருக்கு ஆனா செத்து போனவன் ஏன் தெருவில் போய் கிடந்தான்!

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு

தேவன் மாயம் said...

அவ்வ்வ்வ்வ்வ்!! ஆவியா இவ்வளவு நேரம் கதை சொன்னது...
///
ரிப்பீட்டிக்கிறேன்!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு நண்பா..

அப்துல்மாலிக் said...

சற்றும் எதிர்ப்பார்க்காத வித்தியாசமான நடையில் எழுத்தோட்டம் அதிகம் ஈர்த்த கதை

படிக்க படிக்க விறுவிறுப்பு

குடந்தை அன்புமணி said...

சிரிஸ் போய் சீரியஸ் கதைகள்... நல்லாருக்கு நண்பா. அதற்காக உங்க வழக்கத்தை ஒரேயடியா மாற்றிடாதீங்க...

ராமலக்ஷ்மி said...

நல்ல நடை. முடிவில் எதிர்பாராத திருப்பம்.

RAMYA said...

நசரேயனா இப்படி எழுதினது
இல்லை இல்லை நம்ப முடியவில்லை!

RAMYA said...

அருமையான எழுத்து நடை ஆனால் நிரம்ப வலி நிறைந்த சோகம் :(

ஆவியான பாவி எவ்வளவு லேட் திங்கிங் வெரி பாட்.

நல்ல புதுவிதமான சிந்தனை.

♫சோம்பேறி♫ said...

நல்லாயிருக்கு கதை..

SUFFIX said...

கருத்துள்ள கதை.

ஹேமா said...

//"உனக்கு இந்த குடிகாரன் கிட்ட இருந்து நிரந்தர விடுதலை கிடைத்தாலும், சட்டத்திலே இருந்தது உனக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு இல்லை"//

நசரேயன் உங்கள் ஆவிக்கதைகளிடமிருந்தும் எங்களுக்கு விடுதலை இல்லை.என்றாலும் ரசித்தேன்.கற்பனை அபாரம்.
தொடருங்கள்.

நான் தவறவிட்ட உங்கள் பதிவுகளை இன்னும் பார்க்கவில்லை.பார்ப்பேன்.

சிநேகிதன் அக்பர் said...

கதை ரொம்ப நல்லாருக்கு,

வித்தியாசமான நடை.

கடவுள் said...

நல்ல கலைஞன் உருவாவதை இங்கே பார்க்க முடிகிறது. அது என்னவோ தெரியல உங்க பெயரு மனசுல நிக்கமாட்டுக்குது. உண்மையான பெயரே இது தானா?