Tuesday, June 23, 2009

கேள்விகளுக்கு சில கேள்விகள்

முன் அறிவிப்பு:
என்னை சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்த கடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, கோமா,Keith Kumarasamy ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்(வேற யாரு பேராவது விடுபட்டு இருக்கானு தெரியலை),பரிச்சையிலே முன்னாலே இருக்கிற நண்பனை பார்த்து எழுதியே தேர்ச்சி பெற்ற ஒரு மாண்புமிகு மாணவன் நான் , கேள்விகளுக்கு சொந்தமா பதில் எழுதுறதை விட கஷ்டமான விஷயம் வேற ஒன்னும் இல்லை,இதெயெல்லாம் படிச்சிட்டு இவனைபோய் ௬ப்பிட்டோமேனு வருத்தப் படக்௬டாது, அதற்காக இந்த முன் அறிவிப்பு

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனக்கு வீட்டிலே வச்ச பேரு அதுதான், ஸ்கூல வாத்தியாருக்கு பேரு வாயிலே நுழையாததாலே, என் பேரை மாத்திட்டாரு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கலைனு சொன்னா ஆடோவிலே ஆள் அனுப்பி ஆட்டோகிராப் வாங்குவீங்களா ?

4.பிடித்த மதிய உணவு என்ன?
என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு
போட்டா சொல்லி அனுப்புங்க

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
ஒ.. தாரளமா ..காசா பணமா முடியாதுன்னு சொல்ல

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு நீச்சல் தெரியும் அதனாலே கடல்ல, குளத்திலே தான் குளிப்பேன் , குற்றால அருவியிலேயும் குளிப்பேன். அதுக்காக வீட்டிலே குளிக்க மாட்டேன்னு நினைச்சுக்காதீங்க

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?.
பார்க்கிற ஆளைப் பொறுத்தது

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?.
தன்னம்பிக்கை(+)
தன்னம்பிக்கை (-)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
வேலை வெட்டி இல்லாமல் பதிவு எழுவதற்கு திட்டுவதும், நல்லா இருந்தா பாராட்டுவதும்

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருன்னு சொன்னா என்ன செய்வீங்க ?

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ரெண்டு பேன்ட்,சட்டை எடுத்து கொடுக்கப் போறீங்களா ?

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தினமும் வீட்டுல வசவு பாட்டு தான்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு .

14.பிடித்த மணம்?
சொந்த தோட்டத்து மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

குடுகுடுப்பை - அனுபவத்தை காசு கேட்காம அள்ளி கொடுக்கும் வள்ளல்


vidhoosh
-கவிதை, கட்டுரை, கதை என பன்முகத்தன்மை கொண்டவர்

உருப்புடாதது_அணிமா - எவ்வளவு மொக்கை போட்டாலும் சலிக்காத ஆளு, நானும் அவரும் ஒரே நிறம்.


16.பிடித்த விளையாட்டு?

கில்லி, கோலிகுண்டு, பம்பரம்(தரையிலே விடுவது)

17.கண்ணாடி அணிபவரா?
இன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகலை

18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
படம் பார்த்ததுக்கு காசு கேட்காத எல்லா படங்களும் பிடிக்கும்.

19.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க

20.பிடித்த பருவ காலம் எது?
பள்ளி பருவம்

21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
எனக்கு மாத்த உரிமை இல்லை

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பதில் ஒன்பது - திருப்பி படிங்க
23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கனடா,அமெரிக்கா

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு, சொன்னா நம்ப மாட்டீங்க.
பதிவுகளில் கொலை வெறி கும்மி அடிப்பது தனித் திறமையா ?

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அல்லி பால் இருக்கும் போது அரளிப் பால் குடிப்பது .

26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே ஒரு சாத்தான், எனக்குள்ளே எப்படி சாத்தான் வரும்

27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
முந்தல் - புளியங்குடி (உண்மைதான் நம்புங்க)

28.எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படி வரைமுறை படிஎல்லாம் வாழ எனக்கு தெரியாது, எதையும் எதிர் பார்க்காம கிடைச்சதை வைச்சி சந்தோசமா வாழ முயற்சிப்பதுதான்

29.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
இது எனக்கு இல்லை

30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒரு ரெண்டு வருஷம் கழிச்சி ரெண்டு வரியிலே பதில் சொல்லட்டுமா ?

31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஒவ்வொருவருக்கும் தனிதன்னையும், திறமையும் இருக்கு, அதை பட்டியலிட்டால் நாலு முழு பதிவு போட வேண்டிய வரும்

32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?
புத்தகம் படிச்சி பல வருஷம் ஆகுது

பின் குறிப்பு : அடுத்த தடவை எல்லாம் கொஞ்சம் கேள்விகளை குறைங்க சாமிகளா


41 கருத்துக்கள்:

Tech Shankar said...

short and sweet answers

Anonymous said...

kanna kattule?

ILa

பழமைபேசி said...

//என்னை தொடர் பதிவுக்கு அழைத்த //

நீர் என்ன பெரிய அவரோ? சங்கிலித் தொடர் இடுகைக்குன்னு போட மாட்டீராக்கும்?

நட்புடன் ஜமால் said...

கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல\\


தகிரியம் ஜாஸ்தி தான் ...

நட்புடன் ஜமால் said...

20.பிடித்த பருவ காலம் எது?
பள்ளி பருவம் \\

நல்ல பதில்

நட்புடன் ஜமால் said...

மாட்டிக்கிட்டாரு

அணிமா

மாட்டிக்கிட்டாரு

http://urupudaathathu.blogspot.com/ said...

கலக்கல் பதில்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

///நட்புடன் ஜமால் said...

மாட்டிக்கிட்டாரு

அணிமா

மாட்டிக்கிட்டாரு///

ஏன் இந்த கொலவெறி??

http://urupudaathathu.blogspot.com/ said...

யோவ்... இங்க நான் பின்னூட்டம் கூட போட முடியாமல் ஆணி புடிங்கிட்டு இருக்கேன்.. இதுல நீர் வேற என்னை கோத்து விட்டா, நான் எங்கே போவேன்/???

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

///உருப்புடாதது_அணிமா - எவ்வளவு மொக்கை போட்டாலும் சலிக்காத ஆளு, நானும் அவரும் ஒரே நிறம்.///


நாங்க எல்லாம் கலரா மாறி ரொம்ப நாள் ஆச்சு...
அத தெரிஞ்சிக்கோங்க...

http://urupudaathathu.blogspot.com/ said...

/தன்னம்பிக்கை(+)
தன்னம்பிக்கை (-)///

ச்சோ ச்சோ.. ரியல் பீலிங்...

Mahesh said...

இஃகி... இஃகி !!!

ராமலக்ஷ்மி said...

'நச் என்று இருக்கின்றன பதில்கள் யாவும்:)!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அடுத்த சங்கிலி தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. உங்களை அழைக்கப் போகிறேன் தயாராக இருங்கள்

Unknown said...

மூன்றாவது , பத்தாவது , பதிநான்காவது , பதினாறு , பதினேழு , இருபது , இருபத்தி ஒன்பது கேள்விகளுக்கு விடைகள் இல்லை.........????


இத்தன கொஷ்டீன சாயிஸ்ல உட்டீங்கன்னா எப்புடி பாஸ் பண்ணுறது.....!!


பேசாம உங்குளுக்கு ரீ - எக்ஸாம் வெச்சுற வேண்டியதுதான்......!!!!



மற்ற பதிகள் சூப்பர்...!!!!!!

ஆ.சுதா said...

நையாண்டியான பதில்.
ரசனை

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...

'நச் என்று இருக்கின்றன பதில்கள் யாவும்:)!
///

ரிப்பிட்டேய்ய்ய்!

நச் நச்சுன்னு வித் நக்கல்ஸோட :)))

ஆ.ஞானசேகரன் said...

சில நையாண்டியுடன் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பு, நல்லா இருக்கு நண்பா

அ.மு.செய்யது said...

தெனாவட்டான பதில்கள்.கடும் கண்டனங்கள்.

உங்கள் பாணியிலே சிறப்பாக வந்திருக்கிறது நசரேயன்.

அப்புறம் நீங்களும் நானும் ஒரே கலரு..

Vidhoosh said...

கடைசியிலே கோத்து விட்டீங்களே நசரேயன். இதுதான் கைமாத்த (அது கைமாறோ?) திருப்பித் தர அழகா. இப்போ நான் பதில் சொல்லலைன்னா முந்தாநாள் கைமாத்தா வாங்கின அந்த ஒரு கோடிய திருப்பித் தர மாட்டீங்களா?

குடந்தை அன்புமணி said...

கேள்வி கேட்டா பதில் சொல்லணும்! அதை விட்டுட்டு... எகத்தாளத்த பாரு... குசும்ப பாரு.... சும்மா கலக்கிட்டீங்க தல! குசும்பர் திலகமே!

Anonymous said...

நகைச்சுவையாய் இருந்தது எல்லா பதில்களும்.....உங்க கதைகளுக்கு சிரிக்கிற மாதிரி இதுக்கும் சிரித்தேன்...

அப்துல்மாலிக் said...

குசும்பு ஜாஸ்தி எல்லா பதில்களேயும்

//கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல
/

உண்மைய இப்படி போட்டுடைத்துவிட்டீர்..

sakthi said...

இருக்குன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு, சொன்னா நம்ப மாட்டீங்க.
பதிவுகளில் கொலை வெறி கும்மி அடிப்பது தனித் திறமையா ?

பின்னே எவ்வள்வு பெரிய தனித்திறமையது....

sakthi said...

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ரெண்டு பேன்ட்,சட்டை எடுத்து கொடுக்கப் போறீங்களா ?

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தினமும் வீட்டுல வசவு பாட்டு தான்

ஹ ஹ ஹ


நல்ல பதில்கள்

ஆஹா ஓஹோ ...

அற்புதம்....

sakthi said...

அருமையான பதில்கள்

நசரேயன் அண்ணா

ராஜ நடராஜன் said...

பாஸாயிட்டீங்க!

வழிப்போக்கன் said...

4.பிடித்த மதிய உணவு என்ன?
என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு போட்டா சொல்லி அனுப்புங்க //

ஓ கண்டிப்பா...
:)))
வெளிப்படையான பதில்கள்...

Anonymous said...

பேசாம உங்குளுக்கு ரீ - எக்ஸாம் வெச்சுற வேண்டியதுதான்......!!!!
//

ரிப்பிட்டேய்ய்ய்!
--kadayam anand

சிநேகிதன் அக்பர் said...

//28.எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படி வரைமுறை படிஎல்லாம் வாழ எனக்கு தெரியாது, எதையும் எதிர் பார்க்காம கிடைச்சதை வைச்சி சந்தோசமா வாழ முயற்சிப்பதுதான்
//
சூப்பர்.
எதார்த்தமான பதில்கள்,
நானும் மீதி பதில்கள் போட்டிருக்கேன் பாருங்கள்.
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_24.html

ப்ரியமுடன் வசந்த் said...

//
பின் குறிப்பு : அடுத்த தடவை எல்லாம் கொஞ்சம் கேள்விகளை குறைங்க சாமிகளா //

அடுத்த தடவை வேறயா இந்த பதிவுலகம் தாங்காது சாமிகளா

மயாதி said...

வீடில இவ்வளவு அடி வாங்குவதையும் , கௌரவமா சொல்லுற ஆள் நீங்கதான்...

அண்ணி ! இவருக்கு வாய் கூடிப் போச்சு இன்னும் கொஞ்சம் கூடப் போடுங்க ..

வில்லன் said...

பதிலில் கொஞ்சம் திருத்தம்
=========================

பிடித்த மதிய உணவு என்ன?
என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு போட்டா சொல்லி அனுப்புங்க. எதோ ஒரு சீகிய கோவில்ல தைள்ய்சப்பாடு போடுறாங்களாம். வேலைய விட்டுட்டு அங்க குடி பெயர்ந்துற வேண்டியது தான!!!!!!!!

நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நமிசாவ இருந்தா நாங்க நட்ப்புவசுக்க ரொம்ப பிரியப்படுவோம்.

கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
வீட்டுல "பாத் டப்புல" நீச்சல் அடிச்சி குளிக்க புடிக்கும். ஹி ஹி ஹி

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடிக்காத விஷயம் - தண்ணி அடிச்சுட்டு வந்தா அடிக்குறது...... வேலை வெட்டி இல்லாமல் பதிவு எழுவதற்கு திட்டுவதும், நல்லா இருந்தா பாராட்டுவதும்

யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
நமீதா..... குஷ்பு.....

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ராமராஜன் கலருல "ஒளிரும் நிறத்தில்" உள்ள எல்லா சட்டையும் புடிக்கும். அப்பதான ஈசியா அடையாளம் கண்டுக்க முடியும்.

வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ராமராஜன் கலருல "ஒளிரும் நிறத்தில்" உள்ள எந்த கலரும்....

பிடித்த மணம்?
மாற்றான் தோட்டத்து மல்லிகை

பிடித்த விளையாட்டு?
"டிக்கிலோனா" - புரியலன்னா ஜென்டில்மேன் படம் பாக்கவும்.

கண்ணாடி அணிபவரா?
பொண்ணுக்கு வாங்குற கண்ணாடி வீனா போக கூடாதுன்னு அணிவது வழக்கம்

எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ஓசில பாக்குற எல்லா படமும். என்ன மட்டமா இருந்தாலும் கண் முழிச்சி பாக்க ரெடி

பிடித்த பருவ காலம் எது?
பள்ளி பருவம் (மூனாம் வகுப்பு.. ஏன்னா அப்பத்தான் முதல்காதல் மலர்ந்தது.... லெட்டர் கொடுத்து அடி வாங்கினது.......

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஓசியில் - கனடா,அமெரிக்கா
காசுகொடுத்து - பக்கத்துக்கு ஊரு புளியங்குடி....

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நக்கலா, காமெடியா பதிவு எழுதுறது.
அடுத்தவன நக்கல், நய்யாண்டி பண்ணுறது....

எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்.....

SUMAZLA/சுமஜ்லா said...

என்னமோ விரக்தி தெரியுதே, உங்க பதிலில்!

ஆனா படிக்க போரடிக்காம இருந்தது!

RAMYA said...

எல்லா கேள்விகளுக்கும் பதிகள் கலக்கலா சொல்லி இருக்கீங்க நசரேயன்.

நகைச்சுவை சும்மா சொல்லக்கூடாது சூப்பரா வருது உங்களுக்கு.


அந்த சாப்பாடு மேட்டர் சூப்பர்.

கேள்வி கேட்டா பதில் சொல்லாம எதிர் கேள்வியா கேக்கறீங்க :)

நல்ல மாணவனுக்கு என்ன அழகு? பதில் சொல்வதுதான்.

இங்கே பதில் சொல்லாம ஒரே கேள்விகளதான் :)

RAMYA said...

தப்பிக் கொண்டிருந்த அணிமாவை பார்த்து கேள்விகள் கேட்ட நசரேயன் வாழ்க!

மாட்டிக்கொண்ட அணிமாவிற்கும் மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

Anonymous said...

தப்பிக் கொண்டிருந்த அணிமாவை பார்த்து கேள்விகள் கேட்ட நசரேயன் வாழ்க!

ILA (a) இளா said...

கடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, கோமா,Keith Kumarasamy ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//

:))

goma said...

வாய்யா புளியங்குடிக்காரரே ஊர் பேரைக் காப்பாத்திட்டீர்...


கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல
..
குறிப்பா குத்துமதிப்பா எதையாவது சொல்லலாமே

goma said...

கில்லி, கோலிகுண்டு, பம்பரம்(தரையிலே விடுவது)

அதானே பார்த்தேன்

goma said...

31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஒவ்வொருவருக்கும் தனிதன்னையும், திறமையும் இருக்கு, அதை பட்டியலிட்டால் நாலு முழு பதிவு போட வேண்டிய வரும்....

எங்களையெல்லாம் ரொம்ப புகழாதீங்க நசரேன்
கடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, ,Keith Kumarasam சார்பில் கோமா