Thursday, June 11, 2009

என் காதலிக்கு கல்யாணம்

"உன்னை எனக்கு பிடிக்கலை.. ஆளும் மூஞ்சியும், நீ பெரிய உலக அழகின்னு நினைப்போ, ரெம்ப அலட்டிக்கிற,உன்னையெல்லாம் காக்கா ௬ட திரும்பி பார்க்காது.நீ கட்டி இருக்கிற புடவையிலே சோளக்கொல்லை பொம்மை மாதிரியே இருக்கு, இனிமேல உன் மூஞ்சியிலே முழிச்சா எனக்கு சோறு தண்ணி கிடைக்காது, அப்படியே முழிச்சாலும் உன் செருப்பையும், இந்த வளவளத்தா செருப்பையும் சேத்து என்னை அடி"

அப்படின்னு கடகடன்னு சொல்லிட்டு வேகமா திரும்பி பார்க்காம இடத்தை விட்டு ஓடிட்டேன், பார்த்தா அடி கிடி விழுமோனு பயத்திலே.

மறுநாள் காலையிலே கல்யாணம், இப்படி ஒரு அபச்சொல்லை கேட்டதும் மணமகள் துடிச்சி போகலை, ஒடிஞ்சி போகலை, கண் கலங்கி போகலை, அவள் முகம் அப்படித்தான் காட்டி கொடுக்குது, அவ மனசிலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா நான் இதை எழுதியே இருக்க முடியாது.

நான் போன பின்னே வளவளத்தா விடம்

"அடியே நீ ஷூ போட்டு இருக்கே, அவனை எப்படி செருப்பால அடிக்கமுடியும்?"

அவளை பார்த்து முறைத்து விட்டு வளவளத்தா

"அடியே.. நானே அவன் ஏன் இப்படி வார்த்தையிலே எலி மருத்தை வச்சி பேசிட்டு போறான்னு யோசித்து கிட்டு இருக்கேன்"

"அதான்ம்பா எனக்கும் புரியலை, இவ்வளவு நாளும் நல்லாத்தான் இருந்தான், இன்னைக்கு என்னவோ லூசு மாதிரி பேசுறான்"

"இந்த ஆம்பிளை பசங்களே இப்படித்தான், ஆத்து தண்ணியா இருக்கிற வரைக்கும் மீன் பிடிக்க துண்டை எடுத்து கிட்டு தினமும் ஓடி வருவாங்க, கிணத்து தண்ணி ஆனா உடனே குட்டையை கலக்க ஓடி வருவாங்க" என்று அழைப்பு ஆணை இல்லாம சாட்சி சொன்னாள் சாவித்ரி

"என்ன சாவி சொல்லுற? எனக்கு ஒண்ணுமே புரியலை, ஏய் வளவளத்தா உன் மரமண்டைக்கு ஏதாவது ???"

"சாவி சொல்லுறா, அவன் உன்னை காதலிக்கிறானாம்!! ,எத வச்சி சொல்லுரப்பா "

சம்பவம் ஒண்ணு : ஆடி 10, 1999:
"நாய் கடித்து விட்டதுன்னு கல்லூரியே அவனை ஒதுக்கி வச்ச போது, நீ அவனை நாயின்னு பார்க்காம உன் பக்கத்திலே பேருந்திலே இடம் கொடுத்தியே"

சம்பவம் ரெண்டு : ஆவணி 10, 2000:
நீயும், நானும் வளவளத்தா வை பார்க்க வரும் போது, நீ அவனை பார்த்து நாய்.. நாய் ன்னு சொன்னதும், முதல்ல உன்னை முறைத்த அவன், நாயை பார்த்ததும், அவன் உன்னை திரும்பி பார்த்த பார்வைக்கு ஆயிரம் அர்த்தம் இருந்தது.உன்னைய பார்த்தவன் என்னையைப் பார்த்து இருந்தால் விவரம் விவகாரமா இந்த அளவுக்கு வந்து இருக்காது.

சம்பவம் மூணு : மார்கழி 10, 2001:
நீ ஸ்ரீ ரங்கத்திற்கு சாமி கும்பிடப் போகும் போது, சுட்டுட்டு வந்த புது செருப்பு மன்னிக்கணும் பழக்க தோசத்திலே உண்மையை சொல்லிட்டேன், அந்த செருப்பு உன்னை கடித்து விட்டதேன்னு உன்னை நாய் கடிச்ச மாதிரியே ஒரு பார்வை பார்த்தானே அந்த பார்வைக்கு பத்தாயிரம் அர்த்தம் இருந்தது

ஆக இந்த மூன்று சம்பவங்களையும் வச்சி பார்க்கும் போது அந்த தறுதலை உன்னை ஒரு தலையா காதலிக்கிறான் என முடிவு செய்கிறாள் இந்த சாவி

"ஏய் வளவளத்தா, சாவி சொல்லுறது உண்மையா, இதுக்கெல்லாமாடி காதல் வரும்!!!"

"காதல் நம்ம தலைவர் மாதிரி எப்ப வரும், எப்படி வருமுன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வந்தும் தொலைக்காது.எனக்கு என்னவோ சாவி சொல்லுறது உண்மைனு தோனுது,சரி விடு அதை தெரிஞ்சு இனிமேல என்ன பலன், காலையிலே கல்யாணத்தை வச்சிக்கிட்டு "

"எனக்கு உண்மை தெரிஞ்சாவனும், எடு வண்டிய, விடு அவன் வீட்டுக்கு"

"அடியே மணி 11 இன்னும் ஆறு மணிநேரத்திலே கல்யாணம் உனக்கு"

"நீ இப்ப என் ௬ட வாரியா? வரலையா?,வரலைனா நான் தனியாவே போய்டுவேன்"

"சரி.. சரி வந்து தொலைக்கிறேன், ஏய் சாவி நீ இங்கேயே இரு, எல்லாம் உன்னாலேதான், உன்னை திரும்பி வந்து கவனிச்சிக்கிறேன்"

அதிகாலை மணி 3:

"டேய் எழுதிருடா.. பண்ணுறதையும் பண்ணிட்டு பூனை மாதிரி படித்து கிடக்கான் பாரு"

"மெதுவா எழுப்பு வளவளத்தா"

எழுந்தவன் முன்னால் நின்ற இருவரையும் பார்த்து கணக்கு வாத்தியார் கணக்கு சொல்லிகொடுக்கும் போது புரியாமல் இருப்பது போல இருந்தேன்.

"தாலி கட்டுற இடத்தை மாத்தி விட்டீங்களா, இங்கே நிற்க்குறீங்க"

"ரெம்ப தண்ணி அடிச்சவன் மாதிரி நடிக்காதே, உனக்கு ஓசியிலே வாங்கி குடுக்க யாரும் இல்லன்னு தெரியுது"

"ஸ்ஸ்ஸ்ஸ். கொஞ்சம் அமைதியா இரு வளவளத்தா நான் பேசி முடிச்சுக்கிறேன், நீ சொன்னதெல்லாம் உண்மையா, இப்ப சொல்லு என்னைப் பார்த்து சொல்லு"

"இல்லை நான் சொன்னது பொய் தான், உண்மை என்னனா, இப்ப உன்னிலே நானும், என்னில் நீயும் தெரியுற, நான் நம்மோட கரு விழியை சொன்னேன், நீ சாப்பிட்ட தட்டை கேட்டுப்பார், அது சொல்லும் நான் உன்னை எப்படி காதலிகிறேன்னு, நீ உட்கார்ந்து செல்லும் இருக்கையை கேள், அது சொல்லும் உன்னை காதலிகிறேன்னு"

"அடப்பாவி இப்பத்தானே தெரியுது, மெஸ் மாடசாமியும், பஸ் ஓனர் ரங்கசாமியும் எப்படி திவால் ஆனாங்கன்னு"

"வளவளத்தா!!!!!, உன் திரு வாய்க்கு ஒரு பூட்டு போடு.ம்ம்ம் நீ மேல சொல்லு"

"உன்னை என் வாழ்க்கை விட அதிகமா நேசிக்கிறேன், இவ்வளவு பக்கத்திலே வந்த நீ என் வாழ்கையின் பக்கத்திலே வந்தால், இமயமலைய எருக்கம் பாலிலே பாலாபிசேகம் பண்ணுவேன், வங்காள விரிகுடாவை விலைக்கு வாங்கி, அதிலே நெல் நாத்து நடுவேன்"

"கச்சத்தீவை விலைக்கு வாங்கி கள்ளு கடை வைப்பியோ??"

"வளவளத்தா !!"

"இவன் பேச்சை கேட்டா வாய் அரிக்குது என்ன செய்ய"

"உன் பேச்சு எல்லாம் சரி, பேசும் போது நீ தங்கமுனு நினச்சி அடிச்ச கல்யாணி கவரிங் வளையலை கொடு"

"நானா அடிக்கலை உன்னை மாதிரி தானா வந்தது, தள்ளி விட மனசு இல்லை, அதனாலே வச்சி கிட்டேன், இந்த வளையல் சாட்சியா, வளவளத்தா சாட்சியா நான் கட்டிக்கவா என்னை தேடி வந்த தேவதையை, தாலி கட்டிக்கவான்னு சொல்ல வந்தேன் "

"வளவளத்தா நாம வந்த வேலை முடிந்தது, வா போகலாம்"

"என்னப்பா மூச்சி விடாம வசனம் பேசினவனை முச்சந்தியிலே விட்டுட்டு போற"

"கல்லூரில் எல்லாம் படிச்சி இருக்கே, ஒருத்தர் ௬ட உன்னை காதலிச்சதில்லையோன்னு என் வருகால கணவர் கேட்டார், அவருக்கு பதில் சொல்ல முடியாம எனக்கு எவ்வளவு அவமானப் போச்சு தெரியுமா, நான் அழகா இல்லையோன்னு எனக்கே ஒரு தாழ்வு மனப் பான்மை வந்துட்டது, இனிமேல தைரியமா சொல்லுவேன் அவரிடம், என்னையும் துண்டு போட்ட ஆள் ஒருத்தர் இருக்காருன்னு,சரி முகூர்த்தத்துக்கு நேரமாச்சி வா போகலாம்"

"என்னடி கொலை வெறி கோபத்தை தூண்டி விட்டுட்டு அக்னியை சுத்தி வாரா மணப்பெண் மாதிரி நடந்தா எப்படி?"

"அடிச்ச ஆப்பை எடுக்க அரை மணி நேரமாவது ஆகும், அதுக்குள்ளே நாம போய்டலாம் "

"அடியே வண்டிக்கு வேகமா ஓடு..அங்கே பாரு அருவாளை!!!"

"உன்னை கொல்லாம விடமாட்டேன்.. உன் சாவு என்கையிலே தான்.. " என் அலறிக்கொண்டு கையிலே அரிவாளோடு தொலைவிலே நான்


31 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

நாந்தான் படிக்காம பின்னூட்டம் போட்டாச்சு. தலைப்ப பாத்தா விசயம் நல்லதா தெரியுது.

பழமைபேசி said...

இஃகி இஃகி

வனம் said...

வணக்கம் நசரேயன்

முடியல சிரிச்சி சிரிச்சி இங்க என் அறையில் எல்லோரும் ஒரு மாதிரியா என்னை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க

இராஜராஜன்

rapp said...

நீங்களும் பழமைப்பேசியும் பேசிவெச்சிக்கிட்டு தலைப்பு போட்டீங்களா?:):):)

நசரேயன் said...

//
rapp said...

நீங்களும் பழமைப்பேசியும் பேசிவெச்சிக்கிட்டு தலைப்பு போட்டீங்களா?:):):)
//
இல்ல நான் பதிவு போட்ட அப்புறம் தான் கவனிச்சேன் :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ஷண்முகப்ரியன் said...

//"உன்னை என் வாழ்க்கை விட அதிகமா நேசிக்கிறேன், இவ்வளவு பக்கத்திலே வந்த நீ என் வாழ்கையின் பக்கத்திலே வந்தால், இமயமலைய எருக்கம் பாலிலே பாலாபிசேகம் பண்ணுவேன், வங்காள விரிகுடாவை விலைக்கு வாங்கி, அதிலே நெல் நாத்து நடுவேன்.’

"கச்சத்தீவை விலைக்கு வாங்கி கள்ளு கடை வைப்பியோ??"//

’டயலாக் பஞ்ச்’கள் சூப்பர்,நச்ரேயன்.
நீங்கள் போட்டிக்கு அனுப்பியதால் இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல முடியாமல் கட்டி விட்டீர்கள்.
வெற்றி பெற வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

//"நானா அடிக்கலை உன்னை மாதிரி தானா வந்தது, தள்ளி விட மனசு இல்லை, அதனாலே வச்சி கிட்டேன், இந்த வளையல் சாட்சியா, வளவளத்தா சாட்சியா நான் கட்டிக்கவா என்னை தேடி வந்த தேவதையை, தாலி கட்டிக்கவான்னு சொல்ல வந்தேன் "//
ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்..
வாழ்த்துகள்

இவன் said...

//"உன்னை கொல்லாம விடமாட்டேன்.. உன் சாவு என்கையிலே தான்.. " என் அலறிக்கொண்டு கையிலே அரிவாளோடு தொலைவிலே நான்//


இது நாங்க உங்களப்பார்த்து சொல்ல வேண்டிய வசனம்....
நல்லா இருந்துச்சு

புதியவன் said...

//உன்னை நாய் கடிச்ச மாதிரியே ஒரு பார்வை பார்த்தானே அந்த பார்வைக்கு பத்தாயிரம் அர்த்தம் இருந்தது//

இந்த அர்த்தமெல்லாம் எந்த அகராதியில போட்டிருக்கு...?

புதியவன் said...

//எழுந்தவன் முன்னால் நின்ற இருவரையும் பார்த்து கணக்கு வாத்தியார் கணக்கு சொல்லிகொடுக்கும் போது புரியாமல் இருப்பது போல இருந்தேன்.
//

ஹா...ஹா...ஹா...இது கலக்கல்...

புதியவன் said...

//"உன் பேச்சு எல்லாம் சரி, பேசும் போது நீ தங்கமுனு நினச்சி அடிச்ச கல்யாணி கவரிங் வளையலை கொடு"//

அண்ணே முடியல...

Mahesh said...

யார் யாருக்கு எதிர் பதிவு போட்டா? அவரு "மனைவிக்கு திருமணம்" இங்க "காதலிக்கு கல்யாணம்"... அடுத்தது "சின்னவீட்டுக்கு சடங்கா"?

அ.மு.செய்யது said...

சம்பவம் 1

சம்பவம் 2

சம்பவம் 3 விஜய் டிவிக்கு ரேஞ்சுக்கு என்னா கொலவெறி ??

செம்ம சிப்பு...

SUMAZLA/சுமஜ்லா said...

அதென்னங்க? ‘வளவளத்தா’?
ஆசை காட்டி மோசம் பண்ணிய கதை, அதானே? இப்ப தான் கொஞ்சம் புரிஞ்சாப்புல இருக்குது!

கார்த்திகைப் பாண்டியன் said...

உரையாடலுக்கா? வெற்றி பெற வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

சம்பவங்களாக பிரித்து அடிச்சி மேஞ்சிக்கீறீங்க ...

அண்ணே காமெடி இரயில் ஜோர்!

என்ன தான் இருந்தாலும் ஏதோ ஒரு சோகம் இழையோடுதே உண்மையாவா


(ஏதோ நம்மால முடிஞ்சது ...)

நட்புடன் ஜமால் said...

ஓஹ்! இது போட்டிக்காகவா

வாழ்த்துகள் அண்ணே!

Vidhoosh said...

அதென்ன "வளவளத்தா" ... பேரு ரொம்ப நல்லா இருக்கே. :))
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Anonymous said...

யப்பா இப்பத்தான் இந்த ராகவா அண்ணா பதிவை படிச்சிட்டு இங்க வந்தா முடியலை சாமி....

மனம் விட்டு சிரிச்சேன்...

அதிலும் நம்பர் போட்டு flash back இதையெல்லாம் வச்சி பாக்கும் போது, உன்னை கொல்லாமா விடமாட்டேன்.....ஹைய்யோ செம ரகளை....அரிவாள் கையிலேயே இருக்கட்டும் போட்டி முடிவு வரும் வரை.......

நசரேயன் said...

நன்றி குடுகுடுப்பை --> யோவ் நீர் என்னைக்கு தான் பதிவ படிச்சி பதில் போட்ட

நன்றி வனம்

நன்றி T.V.Radhakrishnan ஐயா

நன்றி ஷண்முகப்ரியன் --> ஐயா, இதை நான் உரையாடல் போட்டிக்கு அனுப்பலை,எனக்கே நல்ல தெரியும் இந்த பதிவைப்பத்தி, நான் அனுப்பியது "தாவணி தேவதை"

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி இவன் --> அப்ப இனிமேல ஆட்டோ கிடையாதா

நன்றி புதியவன் --> அர்த்தம் எல்லாம் தாயார் ஆகுது

நன்றி Mahesh --> ஆமா அடுத்து அதேதான்

நன்றி அ.மு.செய்யது --> ஆமா கொலை வெறிதான்

நன்றி SUMAZLA/சுமஜ்லா --> சும்மா எப்போதும் மொக்கை போடுறதாலே பேருக்கு வள வள ன்னு பேசுற வளவளத்தா, போதுமா இந்த விளக்கம், இல்ல ஒரு பதிவு போட்டு சொல்லனுமா

நன்றி கார்த்திகைப் பாண்டியன் --> இது உரையாடலுக்கு இல்லை

நன்றி நட்புடன் ஜமால் --> காதல்னாலே சோகம் தானே, இது போட்டிக்கு இல்லை

நன்றி விதூஷ் --> இது போட்டிக்கு இல்லை.. போட்டிக்கு இல்லை..போட்டிக்கு இல்லை.. போதுமா

நன்றி தமிழரசி--> இது போட்டிக்கு இல்லை, தனி பதிவா போட்டு தான் விளக்கனும் போல

வில்லன் said...

//என் காதலிக்கு கல்யாணம் //

என்னையா எப்பவுமே வில்லங்கமான தலைப்பு தானா...... என் காதலிக்கு கல்யாணம்... திருட்டு பூனைகள்......ஆனாலும் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு வாழ்த்துக்கள்.

வில்லன் said...

நசரேயன் said...
//
rapp said...

நீங்களும் பழமைப்பேசியும் பேசிவெச்சிக்கிட்டு தலைப்பு போட்டீங்களா?:):):)
//
இல்ல நான் பதிவு போட்ட அப்புறம் தான் கவனிச்சேன் :)//

என்ன!!!! அண்ணாச்சி பழமையும் இப்படி மலையாளபட டைட்டில் வைக்க ஆரம்பிச்சுட்டாரா.... என்ன ஆச்சு.. கட வியாபாரம் ஆகலையா...

வில்லன் said...

!!!! இவன் said...
//"உன்னை கொல்லாம விடமாட்டேன்.. உன் சாவு என்கையிலே தான்.. " என் அலறிக்கொண்டு கையிலே அரிவாளோடு தொலைவிலே நான்//


இது நாங்க உங்களப்பார்த்து சொல்ல வேண்டிய வசனம்....
நல்லா இருந்துச்சு!!!!!

பின் குறிப்பு: எதெல்லாம் கனவுல தென்பட்டது. நேருல நாங்க நீர் எதிர்மாறா இருப்போம்...

வில்லன் said...

//"இந்த ஆம்பிளை பசங்களே இப்படித்தான், ஆத்து தண்ணியா இருக்கிற வரைக்கும் மீன் பிடிக்க துண்டை எடுத்து கிட்டு தினமும் ஓடி வருவாங்க, கிணத்து தண்ணி ஆனா உடனே குட்டையை கலக்க ஓடி வருவாங்க" என்று அழைப்பு ஆணை இல்லாம சாட்சி சொன்னாள் சாவித்ரி//

யோவ் கண்டிப்பா..... ஆத்து தண்ணியா இருக்கிற வரைக்கும்தான் நாயீ, பேயி எல்லாம் அள்ளிகுடிக்க முடியும். யாரையும் கேக்க வேண்டியதில்ல. அதுவே கெணத்து தண்ணியா ஆனப்புறம் கேக்காம கைய வெச்சா!!! கெணத்துக்கு சொந்தக்காரன் வெட்டிருவான்???? தலைய....

வில்லன் said...

//சம்பவம் ஒண்ணு : ஆடி 10, 1999:
"நாய் கடித்து விட்டதுன்னு கல்லூரியே அவனை ஒதுக்கி வச்ச போது, நீ அவனை நாயின்னு பார்க்காம உன் பக்கத்திலே பேருந்திலே இடம் கொடுத்தியே"//

அடடா புல்லரிக்குதுப்பா உங்க காதல் அட்டூழியம்............

வில்லன் said...

//சம்பவம் ஒண்ணு : ஆடி 10, 1999:
"நாய் கடித்து விட்டதுன்னு கல்லூரியே அவனை ஒதுக்கி வச்ச போது, நீ அவனை நாயின்னு பார்க்காம உன் பக்கத்திலே பேருந்திலே இடம் கொடுத்தியே"//

இதைதான் நாயக்காதல்ன்னு சொல்லுவாங்களோ....

வில்லன் said...

"எனக்கு உண்மை தெரிஞ்சாவனும், எடு வண்டிய, விடு அவன் வீட்டுக்கு"

எத!!!!!!!!!!!!!! அந்த எருமை வண்டியையா

வில்லன் said...

//இவ்வளவு பக்கத்திலே வந்த நீ என் வாழ்கையின் பக்கத்திலே வந்தால், இமயமலைய எருக்கம் பாலிலே பாலாபிசேகம் பண்ணுவேன், வங்காள விரிகுடாவை விலைக்கு வாங்கி, அதிலே நெல் நாத்து நடுவேன்"

"கச்சத்தீவை விலைக்கு வாங்கி கள்ளு கடை வைப்பியோ??"//

சோ..... எதெல்லாம் நடக்காத காரியம் அது போல உம்ம நாய் காதலும் நடக்காதுன்னுசொல்லாம சொல்லாம சொல்லிட்டிறு... எம காதகம்ப்பா நீறு.....

வில்லன் said...

//"உன் பேச்சு எல்லாம் சரி, பேசும் போது நீ தங்கமுனு நினச்சி அடிச்ச கல்யாணி கவரிங் வளையலை கொடு"//

அதான பாத்தேன்...... சோழியன் குடும்மிசும்மா ஆடாதேன்னு... வளையல ஆட்டைய போட்டிருந்திருக்கிரறு அத வாங்கிட்டு போக வந்திருக்கா... இத எங்க கேடுருவாளோன்னு நீறு நாடகம் ஆடி இருக்கீரு.....சரியான காமெடி போங்க..

செத்தவன் சொமந்தவன் தல மேல........

வில்லன் said...

நோக்காட்டுகாரன் செத்தான் வியாதி ஒழிஞ்சது..... கோவேரிங் நகை வந்தது காதல் ஒழிஞ்சது.....ஹி ஹி ஹி... அருமையோ அருமை