Wednesday, June 10, 2009

காதலனும்,காதலியும்

"ஹெல்ல்லோஓஓஓஒ .. கேட்குதா.."

"ம்ம்ம்ம்ம்ம்ம்.. எதிர்பார்த்தேன்"

"ரெம்ப நேரமாவா?"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

"உங்க மாமன் தொல்லை தாங்கலை,காலையிலே இருந்து ரீ-சார்ஜ் பண்ண காசு கொடுக்கலை."

"ஓஓஓஒ"

"ஹேய்.. உனக்கு தெரியுமா நேத்து என்ன நடந்துன்னு!!!"

"என்னா ஆச்சி !!!!!!!!!!!!"

"நான் ஒரு கொசுவை அடிச்சிட்டேன் தெரியுமா"

"வாஆஆஆ வாவ், என்னாலே நம்பவே முடியலை"

"எல்லாம் உன்னை காதலிச்ச அப்புறம் தான் .."

"ஸோஓஓஓஒ ச்வீஈட்,ஐ மிஸ் யு ...."

"உண்மையாவா வா !!!"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

"ஹேய்.. நேத்து முடி வெட்டுனது கை ரெம்ப வலிக்குதா?"

"வலிச்சது, ஆனா இப்ப இல்ல"

"ஏன்?"

"உன்௬ட பேசிகிட்டு இருந்தா நகம் வெட்டினாக்௬ட வலி தெரியாது"

"ஸோஓ ஓஓஓ ஸ்வீ ட்டத் , ஐ மிஸ் யு டூ"

"சாப்பிட்டயா ?"

"ம்ம்ம்..ஹும், பசியில்லை"

"ஏன்?"

"உன்னை நினைச்சேன்.. சோத்தை மறந்தேன், உன்கிட்ட பேசினேன்.. உலகம் மறந்தேன்"

"வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நீ கவிதை எல்லாம் எழுதுவியா.. என்னால நம்பவே முடியலை"

"எல்லாம் உன்னாலே தான்..இன்னும் ஒன்னு சொல்லவா ?"

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

அன்பே உன் ௬ந்தல் அலச வரும்
ஷாம்பூக்கு ௬ட தெரிகிறது
குடம் குடமாக கொட்டினாலும்
உன் தலைக்கு
விமோசனம் கிடைப்பதில்லை
என
அதனாலே
உன் குளியல் அறையிலே
தூங்குகிறது
கை படாத கன்னியைப் போல

ஹா... ஹா...ஹா...ஹா (அஞ்சு நிமிஷம் விடாம சிரிக்கிறாங்க..)

"சிரிச்சி முடிச்சிட்டு சொல்லு அப்புறம் நான் பேசுறேன்..ஹேய்.. என்னாச்சி .."

"விழுந்து விழுந்து சிரிச்சதிலே.. கிழே விழுந்திட்டேன்"

"ஆர் யு ஒகே.. எனக்கு ரெம்ப கவலையா இருக்கு, இனிமேல நான் போன்ல ஜோக் சொல்ல மாட்டேன், இது உன் மேல சத்தியம்.."

"ஹேய்.. நான் கிழே விழலை.. பெட்டுல தான் விழுந்தேன்.

உன்னை நினைச்சி கிட்டே
விழுந்த்தாலே காத்தா விழுந்து
அலையா எழுந்தேன்"

"வொவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீ ௬ட கவிதை சொல்லுற,ப்ளீஸ் இன்னொன்னு சொல்லேன்"

"அக்னி வெயிலே
தெரியாத
உன் முகத்தை
அம்மாவாசை இரவில்
பார்ப்பதற்கு
நான்

பாளுங்கிணற்றிலே
விழலாம்"

ஹா... ஹா...ஹா...ஹா (அஞ்சு நிமிஷம் விடாம சிரிக்கிறாங்க..)

"ம்ம்ம்ம்ம்.. எல்லாம் உன்னாலே தான், ஐ வவ் யு"

"என்ன சொன்ன..சரியா கேட்கலை"

"ஐ வவ் யு"

"வவ் யு ?????????"

"விழுந்து சிரிச்சதிலே என பல் செட் கிழே விழுந்து விட்டது, அதை எடுத்து மாட்டிக்கிறேன், ஐ லவ் யு ன்னு சொன்னேன்"

"மீ டூ.. ஐ வவ் யு"

"ஹெல்ல்லோ உன் பல் செட்டும் கிழே விழுந்து இருக்கு"

"ஆமா.. இதோ சரி பண்ணுறேன். ஐ லவ் யூ சரியா?"

"டங்.. டங்.."

ஹலோ.. என்னாச்சி.. ஹும் இன்னைக்கும் பத்து ரூபாய் க்கு தான் ரீ-சார்ஜ் பண்ணி இருக்கான்.

பொறுப்பு அறிவித்தல் :
ம்ம்ம்ம்ம்ம்ம், வொவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஓஓஓ எல்லாம் பின்னூட்டத்திலே தடை பண்ணி இருக்குன்னு சொன்னா கேட்கவா போறீங்க


36 கருத்துக்கள்:

பழமைபேசி said...

இஃகிஃகி!

Anonymous said...

ஹா... ஹா...ஹா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நெஜமாவே தாத்தா பாட்டி கதைதானா.., இல்லை சும்மா கேலி பேசிக்கறாங்களா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு

மயாதி said...

MMMMMMMMMMMMMM.....

வால்பையன் said...

சொந்த கதையை இப்படியா அப்பட்டமா எழுதுறது!

RAMYA said...

ஹையோ ஹையோ! நசரேயன் உங்களுக்கு அவ்வளவு வயசா ஆகிடிச்சு இப்படி போட்டு தாக்கிட்டீங்க?

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, ரொம்ப அருமையா கனவு கண்டிருக்கீங்க

கனவுலே கூட நல்ல கனவா இருக்கே. சரி சரி நல்லா கனவு காணுங்கப்பா எங்களுக்கும் நிறைய கதைகள், பேச்சு பரிமாற்றங்கள் கிடைக்கும்.

ஏதோ பீச்சுக்கு போய் யாரோ பேசினதை ஒட்டு கேட்ட மாதிரி இருக்கு. சரியா?

அ.மு.செய்யது said...

ஆஹா..இங்க‌யும் காமெடி டிராக்கா ???

ந‌ச‌ரேய‌ன் செம்ம‌ ஃபார்ம்ல‌ இருக்கீங்க‌...

விழுந்து விழுந்து சிரித்த‌தில் நானும் கீழ‌ விழுந்துட்டேன்ங்க‌..

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் தாத்தா பாட்டி காமடியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha..ha..haa

Unknown said...

///சொந்த கதையை இப்படியா அப்பட்டமா எழுதுறது!///
ரிப்பீட்டோஓஓஓஓஓஓஒய்

ராஜ நடராஜன் said...

//"விழுந்து விழுந்து சிரிச்சதிலே.. கிழே விழுந்திட்டேன்"//

"கொஞ்சம் சும்மா இருக்குறீங்களா?"உங்களையல்ல!வீட்ல சிரிச்ச சிரிப்புல எனக்கு முறைப்பு:)

vasu balaji said...

இத்தன குசும்பு ஆகாது சாமிகளா!

ILA (a) இளா said...

சொந்த கதையை இப்படியா அப்பட்டமா எழுதுறது!

நட்புடன் ஜமால் said...

இம்பூட்டு வயசாகியும் உங்க நாட்ல உங்கள வேலைக்கு வச்சிருக்காங்களே ஆச்சர்யம் ...

Mahesh said...

ம்ம்ம்...ரிடையர் ஆனப்பறம் ரொமான்ஸ் சாஸ்தி ஆயிடுச்சு போல !!! என்சாய் என்சாய்....

புதியவன் said...

//உன்னை நினைச்சேன்.. சோத்தை மறந்தேன், உன்கிட்ட பேசினேன்.. உலகம் மறந்தேன்"//

கலக்கல்...

புதியவன் said...

//அன்பே உன் ௬ந்தல் அலச வரும்
ஷாம்பூக்கு ௬ட தெரிகிறது
குடம் குடமாக கொட்டினாலும்
உன் தலைக்கு
விமோசனம் கிடைப்பதில்லை
என
அதனாலே
உன் குளியல் அறையிலே
தூங்குகிறது
கை படாத கன்னியைப் போல

ஹா... ஹா...ஹா...ஹா (அஞ்சு நிமிஷம் விடாம சிரிக்கிறாங்க..)//

ஹா... ஹா...ஹா...ஹா... நாங்களும் தான்...

புதியவன் said...

//"அக்னி வெயிலே
தெரியாத
உன் முகத்தை
அம்மாவாசை இரவில்
பார்ப்பதற்கு
நான்
பாளுங்கிணற்றிலே
விழலாம்"

ஹா... ஹா...ஹா...ஹா (அஞ்சு நிமிஷம் விடாம சிரிக்கிறாங்க..)//

ஹா... ஹா...ஹா...ஹா...இப்ப நாங்க பத்து நிமிசம்...

ஷண்முகப்ரியன் said...

o.k.

ராமலக்ஷ்மி said...

//ம்ம்ம்ம்ம்ம்ம், வொவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஓஓஓ//

சொல்லி விட்டு... சொல்றேன்...

அருமை, கலக்கல்:)!

சந்தனமுல்லை said...

ம்ம்ம்ம்ம்ம்ம்!

வொவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

ஓஓஓ !!!

:-))

கிரி said...

வயசான கடலையா! ;-)

கார்த்திகைப் பாண்டியன் said...

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இது ஓகேவா...:-))))

Vidhoosh said...

இவங்களுக்கு மாமா வேறயா ரீசார்ஜ் பண்ணிக் கொடுக்க. அதுவும் பத்து ரூவாக்கி.

:))நீங்கல்லாம் சேந்து கனகாபிஷேகம் பண்ணுங்கப்பா.

Anonymous said...

வால்பையன் said...
சொந்த கதையை இப்படியா அப்பட்டமா எழுதுறது!

அட பார் பா....

Anonymous said...

RAMYA said...
ஹையோ ஹையோ! நசரேயன் உங்களுக்கு அவ்வளவு வயசா ஆகிடிச்சு இப்படி போட்டு தாக்கிட்டீங்க?

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, ரொம்ப அருமையா கனவு கண்டிருக்கீங்க

கனவுலே கூட நல்ல கனவா இருக்கே. சரி சரி நல்லா கனவு காணுங்கப்பா எங்களுக்கும் நிறைய கதைகள், பேச்சு பரிமாற்றங்கள் கிடைக்கும்.

ஏதோ பீச்சுக்கு போய் யாரோ பேசினதை ஒட்டு கேட்ட மாதிரி இருக்கு. சரியா?

சரியாச் சொன்ன ரம்யா

Anonymous said...

அன்பே உன் ௬ந்தல் அலச வரும்
ஷாம்பூக்கு ௬ட தெரிகிறது
குடம் குடமாக கொட்டினாலும்
உன் தலைக்கு
விமோசனம் கிடைப்பதில்லை
என
அதனாலே
உன் குளியல் அறையிலே
தூங்குகிறது
கை படாத கன்னியைப் போல

ஹா... ஹா...ஹா...ஹா (அஞ்சு நிமிஷம் விடாம சிரிக்கிறாங்க...)

நாங்க இன்னும் சிரிச்சிகிட்டே தான் இருக்கோம்.....ஹிஹிஹிஹி......

கலையரசன் said...

செம காமெடி சென்ஸ் உங்களுக்கு! உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் பதிவுலகில் முழுமையாய் படித்து சிரித்த பதிவு இதுதான்!
சூப்பர்..
சூப்பர்..
சூப்பர்..

கலையரசன் said...

செம காமெடி சென்ஸ் உங்களுக்கு! உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் பதிவுலகில் முழுமையாய் படித்து சிரித்த பதிவு இதுதான்!
சூப்பர்..
சூப்பர்..
சூப்பர்..

http://urupudaathathu.blogspot.com/ said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ராஜ நடராஜன் said...

இடுகை மறுபடியும் கண்ணுல பட்டுருச்சா!தலைப்பை பார்த்தவுடன்:)))

வழிப்போக்கன் said...

முடியல...
:)))

சின்னப் பையன் said...

வாய்ப்பே இல்லே... தொடர்ந்து சிரிச்சிக்கிட்டிருக்கேன்.... :-)))))))))))))

வில்லன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
நெஜமாவே தாத்தா பாட்டி கதைதானா.., இல்லை சும்மா கேலி பேசிக்கறாங்களா..,//

தலைவர் பாணில சொன்னா இதுவும் ஒரு வகை கள்ள காதல். கெலடுகளின் கள்ள காதல்.... கருமம் கருமம்..

வில்லன் said...

எல்லாரும் கனவு கானுறாங்க..... தலைவர் காலாம் இந்தியாவ பத்தி கனவுகண்டார்... தலைவர் நசரேயன் கள்ள காதல,கெலட்டுகாதல் பத்திகனவு கண்டார்.....

உங்க கனவுல என்னல்லாமோ தென்படுது... என்னோட கனவுல ஒரு கருமமும் வரமட்டங்கிது.........அதுக்கும் ஒரு யோகம் வேணும் போல!!!!!!!.