Monday, June 8, 2009

கனவுக் கன்னி

எங்க ஊர் வரலாற்றிலே முதல் தடவையா சினிமா சூட்டிங் நடக்குது, அதிலே நடிக்கிறது எனக்கு ரெம்ப பிடிச்ச நடிகை, ஆரம்ப காலத்திலேயே இருந்து அவங்க நடிச்ச ஒரு படத்தையும் தவற விட்டதில்லை.அதுவரைக்கும் தொந்தியும் தொப்பையுமா பாமிலி பாக்( Family pack) வச்சி இருந்த நான் உடையிலே இருக்கிற சதந்திரத்தை தவிர வேற எதையும் தெரியாத ஒரு சதந்திர தின பேட்டியிலே தனக்கு கட்டு மஸ்தான ஆளு தான் பிடிக்கும், ரெம்ப நகைச்சுவையா பேசுறவரையும் தான் பிடிக்கும்னு, வேலை சோலிக்கு போகாம கடினமா உடற்பயற்சி செய்து சிக்ஸ் பாக்(six pack) வச்சேன்.

பத்திரிக்கைகள்ல வார சிரிப்புகளையெல்லாம் படிப்பேன், சிரிப்பே வரலைன்னாலும் வலுக்கட்டாயமா சிரிப்பேன், என்னைய பார்த்து நாலு பேரு சிரிப்பாங்க,நானும் இது தான் நகைச்சுவை போலன்னு நினைச்சுகுவேன்.சிரிப்பே கிடைக்கலைனா தினத்தந்தி சிந்துபாத் கதையெல்லாம் பாத்து சிரிச்சி இருக்கேன்.

கருவாட்டு பானையிலே வச்ச மாதிரி சட்டைகளை போட்ட நான் இஸ்திரி போட்டு சட்டைகளை போட ஆரம்பித்தேன்.


இந்தி தமிழ் நாட்டுக்கு வந்ததுனா சட்டையை கழட்டி தார் சட்டியை எடுத்து அழிக்க கிளம்புறோம், அதே இந்தி நடிகைகள் வந்தா துண்டு போட சட்டையை கழட்டி கிட்டு கிளம்புறோம், அவங்களுக்கு கோயில் கட்டுறோம், கும்பாபிசேகம் நடத்துறோம். இந்தி மொழிங்கிற பொம்பளைக்கு சிகப்பு கொடி, இந்தி மொழி பேசுற பொம்பளைக்கு சிகப்பு கம்பளம் விறிக்கிறோம், இந்த விதிக்கு தமிழனாகிய நானும் விதி விளக்கு அல்ல.தலைவர் படத்தை வேணுமுனாலும் திருட்டு வி.சி.டி யிலே பார்ப்பேன், ஆனா அந்த நடிகையோட படத்தை தியேட்டர்ல தான் பார்ப்பேன்.

அந்த நடிகையோட யாரையாவது இணைச்சி கிசுகிசு வந்தா என்னவோ நான் துண்டு போட்டு வச்ச ஆளை யாரோ கவ்விகிட்டு போகிற மாதிரி வருத்தப் படுவேன். பல் இருக்கவன் பக்கடா தின்பானு பொக்க வாயை வச்சி கிட்டு சும்மா இருக்க முடியலை.

இப்பேர்ப்பட்ட நடிகையை தரிசிக்கலாமுனு சூட்டிங் நடக்கிற இடத்துக்கு காலங்காத்தாலே போனேன், அங்கே போனா கட்டுகடங்கா ௬ட்டம், நான் ௬ட்டதிலே ரெம்ப அழகா இருப்பேன்னு நினைச்சிகிட்டு போனா, என்னைத்தவிர எல்லோருமே அழகா இருந்தாங்க, சூட்டிங் நடக்கிற இடத்து பக்கத்து குள்ளே போறதுக்கு ஒரு மணி நேரம் ஆச்சி, டைரக்டர், மத்த ஆளுங்க எல்லாம் அவங்க வேலையை பார்த்து கிட்டு இருந்தாங்க, ஆனா நடிகையைத் தான் காணும், உள்ளே நின்ற வேனிலே நடிகை அவங்க அம்மாவோட மூணு சீட்டு விளையாடிகிட்டு இருக்கிறதா சொன்னாங்க.

நான் நின்னு அரை மணி நேரம் கழித்து வேன் கதவு திறந்தது உடனே பாலப்பழத்தை மொய்க்க கிளம்பின ஈ ௬ட்டம் மாதிரி நடிகையை பார்க்க ௬ட்டம் ஒரே ஓட்டமா ஓடியது, போனவங்க எல்லாம் நடிகையை சுத்தி மொய்க்க ஆரம்பித்தார்கள், அவங்களால ஈ பத்தி முடியலை, ஒரு வழியா காவல் துறை நிலமைய கட்டுக்குள் கொண்டு வந்தது, இடிபாடுகளில் சிக்கி நான் போட்டு இருந்து வெள்ளை சட்டை மஞ்ச சட்டை ஆகிப்போச்சி, கடைசி வரைக்கும் நடிகை பக்கத்திலே ௬ட போகமுடியலை.


நடிகைக்கு அம்புட்டு கோபம் எங்கே இருந்து வந்ததுன்னு தெரியலை, அவங்க ௬ட்டத்தை பார்த்து வசனம் பேச ஆரமித்தார்கள்.

"நான் என்ன அரசாங்க தண்ணி லாரியா, தமில் பெண்க தண்ணி பிடிக்க கொடம் வச்சி அடிதடி நடத்துற மாதிரி, நீங்க எல்லாம் துண்டு போட அடிதடி சண்டை போடுது.நான் தொழிலுக்காக கையை, காலை பிடிக்குது, நீங்க வேலை சோலி இல்லாம இங்கே வந்து என தொழிலை கெடுக்குது, என கையையும் காலையும் பிடிக்குது.மீட்டர் வட்டிக்கு காசு வாங்கி படம் எடுக்குது, நீங்க எனக்கு மீட்டர் போடுது.நமிள்க்கு மராத்தி தாய் மழியா இருந்தாலும், இந்தி சின்னா ஆமை, டமில் எனக்கு பெரிய ஆமை."

"மேடம் அது சின்னம்மா, பெரியம்மா" என உதவியாளர் சொல்ல

"நிம்மளுக்கே நாம சொல்லுறது பிரியுது, அவங்களுக்கு பிரியாதா ?"

"நான் காசுக்கு நடிக்குது, நீ துட்டு குடுத்து பாக்குது, நான் சினிமாவிலே தான் அரைகுறையா டிரஸ் போட்டு நடிக்குது, ஆனா வெளியே வந்த பொத்திகிட்டு தான் வாரேன்.டைரக்டர் சொல்லுது, நான் நடிக்குது. என் சூத்திரம் சினிமாவிலே தான், ஆனா வெளியிலே நான் காதி."

"மேடம் அது சுதந்திரம், கைதி" என உதவியாளர் சொல்ல..


"தும் வாயை பொத்து கரோ, நானே கோபத்திலே கொதிக்குது, நீ பாணி ஊத்திர"


"நாம வடக்கே இருந்து வந்தாலும், இங்கே இருந்து யாரவது துண்டி போட்டா வாங்கிக்கிறோம், துண்டு வாங்கின உடனே டமில் கலாச்த்திக்கு(காலச்சாரத்திற்கு) மாறுகிறோம், நீங்க எல்லாம் ஒரே நேரத்திலே துண்டு கொண்டு வந்தா, எதை வாங்க? எதை எடுக்க? , நானும் ஒரு பெண்தான் உங்க சொந்தக்காரங்க மாதிரி, என் படத்தை தியேட்டர் போய் ரசிங்க, அதுதான் ஒரு நல்ல காலா ரசிகருக்கு அழவு"

எட்டி இருந்து கேட்ட எனக்கு அவங்க பேசுனுது எல்லாம் உண்மைனு பட்டது, நான் தான் வேலை வெட்டி இல்லாம சினிமா சூட்டிங் பார்க்க போறேன்,அவங்க எல்லாம் விவரமாத்தான் சினிமா நடிக்கிறாங்க, போகும் போது ரெண்டு பேரு பேசுறது காதிலே விழுந்தது

"ஏல மாப்பிள்ளை.. அவ என்னடா நம்மை செவுட்டுல அடிச்சிட்டு விரா வசனம் பேசுறா?"

"நான் ௬ட ரெண்டு அடி அடிக்காம, ஒரே அடியிலே விட்டுட்டாளேன்னு வருத்ததிலே இருக்கேன்"

"ஏன் மாப்பிள்ளை?"

"நடிகைகிட்ட அடி வாங்குறது, எவ்வளவு பெரிய விஷயம்?"

நான் போகும் போது மறுபடியும் சூட்டிங் இடத்திலே நடந்த இன்னொரு பேச்சு என் காதிலே விழுந்திருக்க வாய்ப்பு இல்லை


"மேடம், வெற்றி.. வெற்றி.. காட்சி நல்லா தத்துருபமா வந்து இருக்கு,நிச்சயமா உங்களுக்கு தேசிய விருது கிடைக்கும், உங்க ஒத்துழைப்புக்கு நன்றி"

"நன்றின்னு சொல்லி மங்கலம் பாட முடியாது டைரக்டர்,என் பொண்ணை சூட்டிங் பார்க்க வந்தவங்க எல்லாம் கையை வச்சி இருக்கு, தயாரிப்பாளர்ட்ட சொல்லி இந்த காட்சிக்கு தனியா காசு கொடுக்கணும்.என் பொண்ணு ஓசியிலே கலைச்சேவை செய்ய வரலை"

"மம்மி சத்தம் போடுது, டைரக்டர் சார், இது நீங்க துட்டு தரலைனா அடுத்த காட்சிக்கு கட் சொல்ல உடாது, நீங்க தயாரிப்பாளர்ட்ட சொல்லுங்க"

வீட்டுக்கு வரும் போது புது படம் ஒன்றின் போஸ்டர் பார்த்தேன், அதிலே இருந்த கதாநாயகியின் படத்தை பார்த்தேன், எனக்குள்ளே சொல்லிகொண்டேன்

"இவள் அவளை விட அழகு"


39 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

அந்த இந்தி நடிகை யாரு நர்கீஸ் தத்தா??

பழமைபேசி said...

அருமைங்க... தளபதியா, கொக்கா?

ILA (a) இளா said...

அடுத்த விசால் படத்துக்கு நீங்க வசனம் எழுதலாமே

ப்ரியமுடன் வசந்த் said...

//என்னைய பார்த்து நாலு பேரு சிரிப்பாங்க//

ஹி..ஹி..ஹி..

வில்லன் said...

// குடுகுடுப்பை said...
அந்த இந்தி நடிகை யாரு நர்கீஸ் தத்தா??//


இல்ல இல்ல குண்டு பூ குஷ்பூ

வில்லன் said...

//"ஏல மாப்பிள்ளை.. அவ என்னடா நம்மை செவுட்டுல அடிச்சிட்டு விரா வசனம் பேசுறா?"

"நான் ௬ட ரெண்டு அடி அடிக்காம, ஒரே அடியிலே விட்டுட்டாளேன்னு வருத்ததிலே இருக்கேன்"//


சீ அடிவாங்கிட்டு வெக்கமா இல்ல. அதுவும் ஒரு பொம்பள கையாள. தங்கமணின்னா கூட பரவாயில்ல.... ஒரு நடிக ச.....இதையும் போயி பெருமையா வெளில சொல்லிட்டு........

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

அ.மு.செய்யது said...

//நானே கோபத்திலே கொதிக்குது, நீ பாணி ஊத்திர" //

ஹா..ஹா..

அது எப்படிங்க தமிழையும் ஹிந்தியையும் கலந்து ஒரு ஃபூயூஷன் பழமொழியா ??

சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சந்தனமுல்லை said...

:-)))

//ஆனா வெளியிலே நான் காதி."
"மேடம் அது சுதந்திரம், கைதி" என உதவியாளர் சொல்ல..
//

அவ்வ்வ்வ்!

சந்தனமுல்லை said...

//இந்தி மொழிங்கிற பொம்பளைக்கு சிகப்பு கொடி, இந்தி மொழி பேசுற பொம்பளைக்கு சிகப்பு கம்பளம் //


ஆகா..:-) கலக்கீட்டீங்க..என்னா தத்துவம்!!

Mahesh said...

கனவுல கன்னி... கண்ணுல தண்ணி... ரொம்பத் தூங்காதீங்கன்னு சொன்னா கேக்கறதில்லை??

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்கு நண்பா

ஷண்முகப்ரியன் said...

நடிகையின் பெயரை நீங்கள் சொல்லாத வரை வெகுவாக ரசித்தேன்.
ஆனால் குஷ்பூ என்று நீங்கள் எழுதியுதும்தான் ஒரு சந்தேகம்.
குஷ்பூ இவ்வளவு ஃப்யூஷன் தமிழ் பேசி நான் பார்த்ததே இல்லையே,நச்ரேயன்.பாட்டுக்கு நான் படத்திலேயே என்னிடம் மட்டும்தான் ஆங்கிலம்.மற்றவர்களிடம் நல்ல தமிழிலேயே பேசுவார்கள்.
Anyway your narration is hilarious.Good.

அத்திரி said...

அண்ணாச்சி கலக்கல்

vasu balaji said...

:)).ரசிகனா இருக்கிறதில இவ்ளோ கஷ்டமிருக்கா?

புதியவன் said...

//இந்தி தமிழ் நாட்டுக்கு வந்ததுனா சட்டையை கழட்டி தார் சட்டியை எடுத்து அழிக்க கிளம்புறோம், அதே இந்தி நடிகைகள் வந்தா துண்டு போட சட்டையை கழட்டி கிட்டு கிளம்புறோம், அவங்களுக்கு கோயில் கட்டுறோம், கும்பாபிசேகம் நடத்துறோம். //

அண்ணே கலக்கல் தத்துவம் எப்படி இப்படியெல்லாம்...?

vasu balaji said...

நல்லாத்தான் இருக்கு கேள்வியெல்லாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு..:-)

புல்லட் said...

ஹாஹாஹா! அவளை விட இவள் அழகு... எப்பிடித்தான் நாமளும் பல வருசமா பல பேர பாத்து நமக்கு நாமே சொல்லிக்கறோம்... ஹிஹிஹி!

அப்துல்மாலிக் said...

//இந்தி தமிழ் நாட்டுக்கு வந்ததுனா சட்டையை கழட்டி தார் சட்டியை எடுத்து அழிக்க கிளம்புறோம், அதே இந்தி நடிகைகள் வந்தா துண்டு போட சட்டையை கழட்டி கிட்டு கிளம்புறோம், அவங்களுக்கு கோயில் கட்டுறோம், கும்பாபிசேகம் நடத்துறோம். இந்தி மொழிங்கிற பொம்பளைக்கு சிகப்பு கொடி, இந்தி மொழி பேசுற பொம்பளைக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறோம்//

சவட்டியாலே அடிச்சாமாதிரி இருந்தது தல‌

அப்துல்மாலிக் said...

//நமிள்க்கு மராத்தி தாய் மழியா இருந்தாலும், இந்தி சின்னா ஆமை, டமில் எனக்கு பெரிய ஆமை."

"மேடம் அது சின்னம்மா, பெரியம்மா" என உதவியாளர் சொல்ல
//

ஹா ஹா எழுத்துநடை கலக்கல்

புது ஹிந்தி நடிகைகளின் தமிழ் பேச்சு

ராஜ நடராஜன் said...

//"நான் என்ன அரசாங்க தண்ணி லாரியா, தமில் பெண்க தண்ணி பிடிக்க கொடம் வச்சி அடிதடி நடத்துற மாதிரி, நீங்க எல்லாம் துண்டு போட அடிதடி சண்டை போடுது.நான் தொழிலுக்காக கையை, காலை பிடிக்குது, நீங்க வேலை சோலி இல்லாம இங்கே வந்து என தொழிலை கெடுக்குது, என கையையும் காலையும் பிடிக்குது.மீட்டர் வட்டிக்கு காசு வாங்கி படம் எடுக்குது, நீங்க எனக்கு மீட்டர் போடுது.நமிள்க்கு மராத்தி தாய் மழியா இருந்தாலும், இந்தி சின்னா ஆமை, டமில் எனக்கு பெரிய ஆமை."//

கதை அதுபாட்டுக்கு பிச்சிகிட்டு போய்கிட்டு இருக்குது:)எங்க நம்ம கருத்தை சொல்றதுன்னே தெரியல.இங்க வந்தும் இதுக்கும் கீழேயும் ஜிவ் தான்.அதென்னமோ தரமணி பக்கமெல்லாம் சுத்தும் போது சினிமாவுக்கு ஆள் புடிக்க வருவாங்க.நமக்கு குப்புறப் படுத்து தூங்கறதில இருக்குற சொகம் சூட்டிங் ஸ்பாட்ல இல்லாம போயிடுச்சு.இல்லைன்னா இந்த மாதிரி இடுகைகள் நாங்களுமில்ல இடுவோம்!

(ஆனா இடுகையோட உண்மையை ஒரு விசயம் தெரிஞ்சவர் போட்டு உடைச்சிட்டாரே!)

வழிப்போக்கன் said...

"நடிகைகிட்ட அடி வாங்குறது, எவ்வளவு பெரிய விஷயம்?"//

ஆமா, ஆமா ர்ர்ர்ரொம்ப பெரிய விஷயம்....
:)))

நசரேயன் said...

நன்றி குடுகுடுப்பை --> யோவ்.. அது கனவு நடிகை

நன்றி பழமைபேசி
நன்றி ILA --> வாய்ப்பு கிடைச்சா சந்தோசமே

நன்றி பிரியமுடன்.........வசந்த்
நன்றி வில்லன் --> குஸ்பு எல்லாம் அந்த காலம்
நன்றி T.V.Radhakrishnan ஐயா
நன்றி அ.மு.செய்யது
நன்றி ச்சின்னப் பையன்
நன்றி சந்தனமுல்லை
நன்றி பிரியமுடன்.........வசந்த்
நன்றி பிரியமுடன்.........வசந்த்
நன்றி சந்தனமுல்லை
நன்றி Mahesh
நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி ஷண்முகப்ரியன் --> ஐயா, குஸ்பு ன்னு நான் சொல்லவே இல்லை, அது நண்பரோட கனவு

நன்றி அத்திரி அண்ணாச்சி
நன்றி புதியவன்
நன்றி பாலா.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி புல்லட் பாண்டி
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி ராஜ நடராஜன்
நன்றி வழிப்போக்கன்

Poornima Saravana kumar said...

ILA said...
அடுத்த விசால் படத்துக்கு நீங்க வசனம் எழுதலாமே

//

:))

Poornima Saravana kumar said...

தும் வாயை பொத்து கரோ, நானே கோபத்திலே கொதிக்குது, நீ பாணி ஊத்திர

//

நல்லா சிரிச்சேன் அண்ணாச்சி:))

Poornima Saravana kumar said...

இவள் அவளை விட அழகு//


வாய்ப்பு கொஞ்சம் கம்மிதான்....
திருந்த:(

RAMYA said...

//
அதுவரைக்கும் தொந்தியும் தொப்பையுமா பாமிலி பாக்( Family pack) வச்சி இருந்த நான்
//

ஹா ஹா இது ரொம்ப நல்லா இருக்கு.

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அந்த இந்தி நடிகை யாரு நர்கீஸ் தத்தா??
//

பாவம் குடுகுடுப்பையார் ரொம்ப வெள்ளையா இருக்காரு :)

RAMYA said...

//என்னைய பார்த்து நாலு பேரு சிரிப்பாங்க//


ஹி..ஹி..ஹி.. நாங்களும் சிரிப்போமில்லே :)

RAMYA said...

//
பத்திரிக்கைகள்ல வார சிரிப்புகளையெல்லாம் படிப்பேன், சிரிப்பே வரலைன்னாலும் வலுக்கட்டாயமா சிரிப்பேன், என்னைய பார்த்து நாலு பேரு சிரிப்பாங்க,நானும் இது தான் நகைச்சுவை போலன்னு நினைச்சுகுவேன்.
//

இல்லே அவங்க வேறே மாதிரி நினைச்சு சிரிச்சிருப்பாங்க :)

RAMYA said...

//
சிரிப்பே கிடைக்கலைனா தினத்தந்தி சிந்துபாத் கதையெல்லாம் பாத்து சிரிச்சி இருக்கேன்.

கருவாட்டு பானையிலே வச்ச மாதிரி சட்டைகளை போட்ட நான் இஸ்திரி போட்டு சட்டைகளை போட ஆரம்பித்தேன்.

//


ha ha ha ha super :-)

RAMYA said...

//
ஆனா அந்த நடிகையோட படத்தை தியேட்டர்ல தான் பார்ப்பேன்.
//

அது................

RAMYA said...

//
அந்த நடிகையோட யாரையாவது இணைச்சி கிசுகிசு வந்தா என்னவோ நான் துண்டு போட்டு வச்ச ஆளை யாரோ கவ்விகிட்டு போகிற மாதிரி வருத்தப் படுவேன்.
//

அது சரி :))


//
பல் இருக்கவன் பக்கடா தின்பானு பொக்க வாயை வச்சி கிட்டு சும்மா இருக்க முடியலை.
//

இந்த ஐடியா ரொம்ப சூபரா இருக்கே:)

RAMYA said...

//
"தும் வாயை பொத்து கரோ, நானே கோபத்திலே கொதிக்குது, நீ பாணி ஊத்திர"
//

அருமை அருமை, நபருக்கு பல பாஷை தெரியும் போல இருக்கு!

RAMYA said...

//
"ஏல மாப்பிள்ளை.. அவ என்னடா நம்மை செவுட்டுல அடிச்சிட்டு விரா வசனம் பேசுறா?"
//

பாவம் அவருக்கு இப்போவாவது புரிஞ்சுதே :(

RAMYA said...

//
வீட்டுக்கு வரும் போது புது படம் ஒன்றின் போஸ்டர் பார்த்தேன், அதிலே இருந்த கதாநாயகியின் படத்தை பார்த்தேன், எனக்குள்ளே சொல்லிகொண்டேன்
"இவள் அவளை விட அழகு"
//

அது சரி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :)

Anonymous said...

நண்பா சும்மா சொல்லக்கூடாது. உங்கள கையில வார்த்தை விளையாடுது...அட செமையா எழுதுறீங்க. பல இடங்களில் காமெடி தர்பார் தான். ரொம்ப ரசிச்சு. அழகான வார்த்தையில் கொடுப்பதில் நீங்கள் சகலகலா வல்லவன் என்பதை நிருபித்து விட்டீர்கள் போங்க. வாழ்த்துக்கள் நண்பா. நல்ல எழுத்தாளராக வர வேண்டியவர் நீங்கள்....வருவீர்கள்.