Tuesday, June 2, 2009

தமிழ்மண திரட்டிமேம்பட

முன் பொறுப்பு அறிவித்தல் :கிளம்பிட்டான்..பெட்டியை கட்டிக்கிட்டு என்று குமுறுகிறவர்கள் தயவு செய்து அமைதி காக்கவும்.

மாற்றம் ஒன்றே மாறாதது எங்கோ படித்த ஞாபகம்,தமிழ்மணத்திலே சமிபகாலமாக முகப்பு பகுதியிலே பல மாற்றங்கள் நடை பெறுகிறது, வெட்டுவதும் ஒட்டுவதுமாக, சூடான இடுக்கை சென்னை வானிலை அறிக்கை மாதிரி வருது போகுது, அதிலே பெரிய பிரச்சனையே செய்திகளை வெட்டி ஒட்டி வரும் பதிவுகள் ஆக்கிரமிப்பதே என்பதாக வாதம்.முகப்பிலே ஒரு பொறுப்பு அறிவித்தல் வைத்து, நீங்க செய்திகளில் இருந்து சுடும் போது குறிச்சொற்கள் "செய்தி, செய்திகள்" என் இருக்க வேண்டும், அப்படி இருந்தா அந்த பதிவு செய்திக்கு பிரிவுக்கு ஓடிவிடும், அப்படி செய்யாமல் என்னை மாதிரி குறுக்கு வழியிலே வரும் நண்பர்களுக்கும் சேத்து இன்னும் ஒன்னையும் செய்யணும், உங்க பதிவு செய்தியிலே இருந்து ஒட்டுனதுன்னு எங்களுக்கு தெரிய வந்தது என்றால் அந்த பதிவு தமிழ் மணத்தை விட்டு நீக்குவோம் ன்னு சொல்லிடுங்க.நீக்குறீங்களோ இல்லையே குறைந்த பட்சம் பதிவு label லபெலிலே குறிச்சொற்க்களை சேர்க்க வாய்ப்பு இருக்கு.இதை சரி பண்ணினால் பிரச்சனை சரியாகுமா இல்லை அதிகமாத்தான் இருக்கும்.அதுக்கும் சில யோசனைகள் இருக்கு.

முகப்பிலே என் அறிவுக்கு எட்டிய சில மாற்றங்கள்,இது அறிவுரையோ அழுவின உரையே அல்ல, தமிழ்மண வாசகன் என்பதால் மனதில் பட்டவை.

1) தமிழ் மண முகப்பிலே 30 பதிவுகள் வரைதான் காட்ட முடியுது, பதிவுகளை காட்டும் இடத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைத்து குறைத்தது 50 பதிவுகளை காட்டலாம்.

2) பதிவு முதல் பக்கத்தை கடந்து விட்டால், இந்தியப் பெருங்கடலில் விழுந்த ஒரு கல்லைப் போல ஆகிவிடுகிறது, கடலிலே கலக்கும் நதியை தடுக்க அணை கட்டி காப்பது போல,முதல் பக்கத்திலே paging உபயோகித்து,AJAX முறையை பயன் படுத்தினால், முகப்பை விட்டு கடந்து செல்லாமல் படிப்பதற்கு வசதியாக இருக்கும்,கிணற்றிலே விழுந்த கல்லை தேடுவது போல எளிதாக தேட வழி வகுக்கும்.

3) "வாசகர் பரிந்துரை" யிலே ஒரு லிங்க் கொடுத்து வாசகர் பரிந்துரையிலே வந்த அனைத்து பதிவுகளை வரிசைப்படுத்தல்லாம்.

4) சூடான இடுக்கைகளிலும் ஒரு லிங்க் கொடுத்து சூடான இடுக்கையிலே வந்த அனைத்து பதிவுகளை வரிசைப்படுத்தல்லாம். பதிவுகள் எண்ணிக்கை அதிகம் ஆகும் போது database சிலே இருந்து load ஆக அதிக நேரம் எடுக்கும் எனவே அதை சரி செய்ய 3,4 க்கு caching பயன் படுத்தலாம், ஒரு நாளைக்கு ஒருமுறை cache refresh செய்து புது பதிவுகளை சேர்த்து கொள்ளலாம்.


பின் பொறுப்பு அறிவித்தல் : எங்க அலுவலகத்திலே "so called architect" எல்லாம் இந்த வேலையைத்தான் செய்யுறாங்க, ஹும்..என்ன செய்ய .. எனக்கு வாய்ப்பு கிடைக்கலை, அதனாலே நானே வாய்ப்பு உருவாக்கி கிட்டேன்.அதனாலே மேல சொன்னது எல்லாம் மொக்கையாகவோ, மரண மொக்கையாகவோ இருந்தால் நான் பொறுப்பு அல்ல


31 கருத்துக்கள்:

பழமைபேசி said...

ஏ நாங்களும் பொட்டி தட்டிதான்...நாங்களும் பொட்டி தட்டிதான்....

ILA (a) இளா said...

ada. kelambittaaygyaa

தினேஷ் said...

ஏ நாங்களும் தான் நாங்களும் தான் பொட்டி தட்டி எல்லாரும் பாத்துக்கோங்க.

குடுகுடுப்பை said...

ஆக்சுவலி ஐ ஹேவ் அ பிளான்.
ரியலி யூ நோ வாட் , ஐ டோண்ட் நோ.

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னுடைய இப் பதிவையும் படிக்கவும்
http://tvrk.blogspot.com/2009/01/blog-post_6565.html

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பதிவு முதல் பக்கத்தை கடந்து விட்டால், இந்தியப் பெருங்கடலில் விழுந்த ஒரு கல்லைப் போல ஆகிவிடுகிறது,//

சில நேரங்களில் ரொம்ப யோசிச்சு எழுதியது கண்டு கொள்ளப் படாமல் போயிருக்கிறது.

ஆனால் அவசரத்தில் முளைத்த புல்லு போன்ற மொததமாக மூன்று நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்ட பதிவுகள் சூடான இடுகைக்குச் சென்றிருக்கின்றன..,

தவிர பாலியல், காமம், விஜய் போன்ற வார்த்தைகளுடன் கூடிய தலைப்புகளை வைத்தால் சூடான இடுகையில் வந்து நிற்கின்றன.

சந்தனமுல்லை said...

மூன்றுமே நல்ல வேலிட் பாயிண்ட்ஸ்! 2வது சூப்பர்!!

முரளிகண்ணன் said...

நல்ல யோசனை

sakthi said...

முகப்பிலே என் அறிவுக்கு எட்டிய சில மாற்றங்கள்,இது அறிவுரையோ அழுவின உரையே அல்ல, தமிழ்மண வாசகன் என்பதால் மனதில் பட்டவை.

ஓ அப்படியா

sakthi said...

ஒரு நாளைக்கு ஒருமுறை cache refresh செய்து புது பதிவுகளை சேர்த்து கொள்ளலாம்.

நல்ல யோசனை தான் நசரேயன் அண்ணா

ஆ.ஞானசேகரன் said...

நல்ல யோசனைதான் நண்பா

ஆ.சுதா said...

நல்ல யோசனைதான்.

புதியவன் said...

இந்த யோசனைகளை தமிழ்மணம்
நிர்வாகத்திற்கு மின் மடலிடலாமே...

நட்புடன் ஜமால் said...

புதியவன் சொன்னதை கவணிங்கோ அண்ணா

40 பின்னூட்டங்களுக்கு மேல் போய்விட்டால்

கடல்ல போட்ட கல் இல்லை, மில்க்கி வேயில் போட்ட கல்

இதுக்கும் எதுனா வழி சொல்லுங்கோ

சென்ஷி said...

//ILA said...

ada. kelambittaaygyaa
//

repeateye :)

vasu balaji said...

நல்ல ஆலோசனைகள்.

Athisha said...

ஆஹா கெளம்பிட்டாங்கய்யா ..

ஆனா ஐடியா தமாசுக்கு சொல்லிருந்தாலும் நல்லாத்தான் இருக்கு..

Suresh said...

சூப்பர் ஐடியாஸ் பாஸ் ;) அந்த கடல் மேட்டர் :-)

Anonymous said...

//1) தமிழ் மண முகப்பிலே 30 பதிவுகள் வரைதான் காட்ட முடியுது, பதிவுகளை காட்டும் இடத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைத்து குறைத்தது 50 பதிவுகளை காட்டலாம்.//

என்னய்யா இது, இவ்வளவு அல்பமான யோசனை,


ஏன் ? இடத்தைக் குறைக்காம 50 பதிவுகளைப் பட்டியல் இட முடியாதா ? இது என்ன காகிதமா ? இடத்தைக் கொறைச்சா காசு மிச்சம்பண்ண... நல்ல ஆளுங்கய்யா ..

பேஜ் லோடாக டைம் ஆகும். அதுக்குத்தான் 30 லேயே சிறுத்திக்கிறது...

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல யோசனைதான் நண்பா:-)))

அ.மு.செய்யது said...

WAT AN IDEA SIR GEE !!!

அப்துல்மாலிக் said...

நல்ல ஐடியா தல‌

பார்ப்போம் செய்றாங்களானு

Suresh Kumar said...

கலக்கல் ஐடியா ஒரு ஒட்டு தான் போட முடியுது இல்லைனா இரண்டு ஒட்டு போட்டிருப்பேன்

அத்திரி said...

அண்ணாச்சி அமெரிக்கா போன உடனேயே நல்லா வேலை செய்றீங்க போல.......

Anonymous said...

நல்ல யோசனைதான் நண்பா

வில்லன் said...

ஹே எவனோ code எழுதுறவன் (பொட்டி தட்டுறவன்)மொக்கை எழுத வந்துட்டாண்டோ...... மொதல்ல அவன வெளிய அடிச்சி தொரதுங்க. இல்ல மொத மொக்கையும் கெடுதுரும் இது..

வில்லன் said...

இப்படி எல்லாம் மொக்கை எழுதுனா நானும் என்னோட பொட்டி தட்டுற வேலைய பத்தி பெரிய பதிவே போடா ஆரம்பிச்சுருவேன்.

வில்லன் said...

அதுபோல நானும் என்னோட சொந்த கருத்துகள சொல்லி இப்படி எழுதினா நல்லா இருக்கும் அப்படி எழுதினா நல்லா இருக்கும் என வீனா (விகடன் விமர்சன குழு போல - மொத்ததுல சொத்தை, வெத்து வேட்டு அப்படி இப்படின்னு பின்னுட்டம் போட்டு கருத்து சொல்ல ஆரம்பிச்சுருவேன் ) அதிக பிரசங்கி தனமா பேச ஆரம்பிச்சுருவேன்.

வில்லன் said...

என்ன சரக்கெல்லாம் தீந்து போச்சா........ஒரே அலும்பா இருக்கு பொட்டி தட்டுறத பத்தி

S.R.Rajasekaran said...

நானும் பொட்டிய தட்டலாம்ன்னு பாக்குறேன் முடியல

ஆதவா said...

நல்ல யோசனைகள்.. அந்த துறையில் இருப்பதால் உங்களூக்கு நன்கு தெரிந்திருக்கிறது