Thursday, May 14, 2009

ஐ.டி அவலம் - அமெரிக்கா

முன்னாள் மொக்கைகள் பாகம் 1,பாகம் 2,பாகம் 3.
மத்தபடி நடப்பு மொக்கை கிழே
**************************************************************************************************************************
ஆட்டோகாரன் தெளிச்சி அடைந்து எழுந்திரிக்கும் முன் வீட்டுக்கு தெரு நாய் விரட்டினா ஓடுற வேகத்தை விட வேகமா ஓடி வந்து சேர்ந்தேன்.வந்து பார்த்தால் வீட்டு முன்னே போலீஸ் வந்து இருக்கு,தப்பு மேல தப்பு பண்ணி என்னை மட்டுமல்ல வாழ்க்கையையும் தொலைக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளான நான் ஒரு ஓரமா மறைந்து இருந்து போலீஸ் போன பத்து நிமிடம் கழித்து நான் போனேன், ஒரே பயத்தோட நண்பனிடம்

"என்ன மச்சான் போலீஸ் வந்தது, ஏதாவது பிரச்சனையா?"

"கவல துறை எப்போதும் களவாணிகளை தேடாது, சில சமயம் என்னை மாதிரி நல்லவங்களையும் தேடி வரும், கடவு சீட்டு விண்ணப்பத்துக்கு காவல்துறை தேடி வந்தாங்க"

போன உயிர் திரும்பி வந்த உணர்வு எனக்கு,நான் அவனிடம்

"மச்சான் எனக்கு வேலை போய்டுச்சு"

"ஒ..அப்படியா"

"என்ன மச்சான், நானே எவ்வளவு வேதனையிலே இருக்கேன், நீ ரெம்ப சாதாரணமா சொல்லுற"

"நீ போலீசை பாத்து அரண்டு போனதிலே நினைத்தேன், உன் வேலைக்கு சங்கு ஊதிட்டாங்கனு,அதுமட்டுமில்லை இதுக்கு எல்லாம் ஐ.டி ஆளுங்க புகார் கொடுக்க ஆரம்பித்தால் ஒரு நுனி நாக்கு அழகி நிரந்தரமா போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கணும்,காவல் துறையை பத்தி கவலை வேண்டாம்"

"வயத்து எரிச்சலை கிளப்பாதே மச்சான், நானே கொலை வெறியிலே இருக்கேன்"

"நீ என்னவோ இஸ்ரோவிலே இருந்து ஏவின ராக்கெட் உங்கிட்டே திரும்பி வந்தாலே உனக்கு வேலை போன மாதிரி வருத்தப்படுற, மச்சான் நீ ரெண்டு நாள் தாக்கு பிடிச்சதுக்கே ஒரு மாசம் லீவ் எடுக்கலாம்"

"இப்ப என்னடா பண்ண?"

"வேலை இருக்கவனுக்கு ஒரு வேலை,இல்லாதவனுக்கு ஆயிரம் வேலை, மறுபடி தேடிக்கலாம், காதல் தோல்வியா தாடி வச்சி யோசிக்க, இது தண்ணி அடிச்சி யோசிக்க வேண்டிய விஷயம்"

"ஐ.டி யை நம்பி இருக்கிற வேலையை விட்டு வந்தது, அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகி போச்சி டா"

"ஐ.டி உலகமே இப்படித்தான், வேண்டும் என்றால் தலையிலே தூக்கி வச்சு ஆடுவாங்க, தேவை இல்லைனா அப்படியே குப்பை தொட்டியிலே போட்டுட்டு போய்டுவாங்க,நீ பேசாம என் ௬ட அமெரிக்கா வந்துவிடு, நாம அங்கே போலாம்"

"டேய்.. உள்ளுர்லே விலை போகாத மாடு இது, நீ என்னவோ புளியங்குடியிலே இருந்து தென்காசிக்கு பஸ்ல போற மாதிரி சொல்லுற,அமெரிக்கா போகிற அளவுக்கு இன்னும் அறிவு வளரலை"

"அமெரிக்கா போகிற அளவுக்கு விசா எடுக்க அறிவு இருந்தா போதும், நம்ம மனவாடுகளை பார், குஜ்ஜுக்கும், சிங்கத்துக்கும் அடுத்த படியா அமெரிக்காவிலே இன்னைக்கு கொடியை நாட்டிகிட்டு இருக்காங்க,அதிலே கால் வாசி பேரு ஹைதரபாத் அமீர்பேட்டையிலே படிச்சவங்க"

"அண்ணா பல்கலைகழகம் மாதிரியா?"

"அதுக்கும் மேல மச்சான், அண்ணா பல்கலைகழகத்துக்கு சான்றிதல் அங்கே இருந்துதான் வருது, அவ்வளவு பெரிய பிரிண்டிங் பிரஸ் இருக்கு,நூறுக்கு இன்ஜினியர், இரு நூறுக்கு டாக்டர், ஐநுறுக்கு எம்.சி.ஏ ன்னு ௬வி..௬வி.. வித்துகிட்டு இருக்காங்க, அங்கே வாங்கிட்டு போய் அமெரிக்காவிலே பச்சை அட்டை வாங்கி நிறைய பேரு இருக்காங்க"

"மச்சான், நீ இன்னைக்கு தண்ணி போடலையோ, ரெம்ப சலம்பலா இருக்கு"

"எல்லாம் தயாரா இருக்கு, இங்க பாத்தியா,உனக்குத்தான் காத்து கிட்டு இருக்கேன்"

பக்கத்திலே இருந்த குவாட்டரை எடுத்து, அப்படியே வாயிலே ஊத்தினேன்.

"எனக்கு வேலை போன சோகத்திலே குடிச்சா குவாட்டர் ௬ட இனிக்குது"

"இனிக்காம என்ன செய்யும், குடிகார கட்ட கோவிந்தனை ஏமாத்த குவாட்டர் பாட்டிலே பெப்சி ஊத்தி வச்சி இருந்தேன், அதை தான் நீ குடிச்ச,மச்சான் உனக்கு பிடிச்ச பட்ட சாராயம், வெளி நாட்டு இறக்குமதி இந்தா குடி"


அந்த அரக்கனை வாங்கி அப்படியே குடித்தேன், இப்ப கொஞ்சம் தெம்பு வந்தது.


"அமெரிக்கா போக என்னடா செய்யணும்??"


"பட்ட சரக்கு.. பட்டைய கிளப்புது பாத்தியா, இதே ரெசியும் அப்படியே வச்சிக்கலாம், கொஞ்சம் நாக்கை சுழட்டி, சுழட்டி இங்கிலீஷ் பேசணும், அதாவது யாருக்குமே புரியாத மாதிரி பேசணும், நீ அமெரிக்காவிலே வேலை வாங்க அது போதும்"


"தண்ணி அடிச்சவன் மாதிரி இங்கிலிஷ்ல பேசினா வேலை இருக்குன்னு சொல்லுற"


"ஆமா.. ஆமா"


"மச்சான், எனக்கு ஒரு சந்தேகம்"


"அமெரிக்கா போகும் முன்னாலே உனக்கு சந்தேகம் வந்துவிட்டதா, நீ சீக்கிரமே ப்ராஜெக்ட் மேனேஜர் ஆகிடுவ மச்சான், கேள்வியை கேளு"


"இப்படி புறவாசல் வழியே போறதையும், சுவர் ஏறி குதிச்சி உள்ளே போகிற வழியே பத்தி யோசிக்கிற நீ மாட்டினா, தேசிய பாதுகாப்பு சட்டமா? குண்டர் சட்டமா?"


"டேய் போன வாரம் வரைக்கும் நான் நேர் வழியிலே தானே போனேன், இந்த ரெண்டாவது ஆட்டம் நீ வந்த பிறகுதான் கரிபால்டி, படிச்ச உடனே வேலை கிடைக்க நீயும் நானும் அண்ணா பல்கலை கழகமோ, ஆர்.ஈ.சி யோ இல்லை, ௬ரை கொட்டைகையிலே மண்ணை ௬ட்டி உக்கார்ந்து படிச்ச நாம எல்லாம் எந்த வேலைக்கு போனாலும் முன் அனுபவம் வேண்டும்னு சொல்லுறாங்க, நமக்கு தெரிஞ்ச முன் அனுபவம் சைட் அடிச்சி அடி வாங்கினதுதான்.இதை வச்சி ஜெயில்ல வேணா வேலை வாங்கலாம்.இப்ப நீ வேலைக்கு போறதுக்கு நான் செய்யுற குறுக்கு வழி நானா பண்ணலை, எனக்கு ஒருத்தன் சொல்லி குடுத்தான், அவரு இன்னைக்கு நாசாவிலே வேலை பார்க்கிறாரு, நான் உனக்கு சொல்லி குடுக்கேன்"


"என்னவோ அறிவியல் ஆராய்ச்சி மாதிரி சொல்லுற,எனக்கு நாம பண்ணுறது சுத்தமா பிடிக்கலை"


"இந்த உலகத்திலே அனுபவம் இல்லாம ஒரே ஒரு இடத்திலே தான் வேலை கிடைக்கும்"

"அது என்ன வேலை மச்சான்!!!"


"கல்யாண மாப்பிளை தான், நீ இப்ப இருக்கிற நிலைமையிலே ஊரிலே ஆடு மேய்கிற உங்க அத்தை மகள் ௬ட உன்னை கட்டிக்க மாட்டாள்.இப்ப உன்னை பார்த்த உடனே துண்டை தூக்கி கொண்டு ஓடுறவங்க எல்லாம்,நீ அமெரிக்கா போன உனக்கு துண்டு போட வரிசையா நிப்பாங்க, இன்னொரு முக்கியமான விஷயம்,யார்ட்டையும் சொல்லாதே"

"என்ன மச்சான் அது?"

உன் காதை கொண்டா "நம்ம ஊரு நடிகைகள் எல்லாம் அமெரிக்காவிலே தெருவிலே நின்று சுடு நாய் (ஹாட் டாக்) விக்கிற, அங்க இருக்கிற பெட்டி கடையிலே பான் பராக் விக்கிற அமெரிக்கா தொழில் அதிபர்களைத்தான் திருமணம் செய்வேன்னு ஒத்தை காலிலே நிக்காங்கலாம்.அவங்களுக்கே இப்படி அடிபிடி சண்டைனா, அமெரிக்கா ஐ.டி க்கு எப்படி இருக்கும்,உள்ளூர் அழகியிலே இருந்து உலக அழகி வரைக்கும் துண்டு போட காத்து இருப்பாங்க "

"நீ இது வரைக்கும் சொன்ன யோசனையை எல்லாம் விட கடைசி என்னக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு,மச்சான் நடிகையை கல்யாணம் முடிக்கவாது நான் அமெரிக்கா வாரேன்,ஆமா மச்சான் பாலிவுட் நடிகையா ? கோலிவுட் நடிகையா"

"இப்ப எல்லாம் வடக்க இருந்துதான் வருது, அதனாலே இங்கே முடிச்சாலும், அங்கே முடிச்சாலும் ஒன்னுதான்"

"மச்சான் எனக்கு தூக்கம் வருது, நாளைக்கு கலையிலே பார்க்கலாம்"

"டேய் போகும் முன்னாடி உன் முகத்தை கண்ணாடியிலே பாத்துக்கோ, நடிகை புருசனோட அழகை கண்ணாடியும் ரசிக்கட்டும்"

(நாளை வரும் வரை நானும்)


29 கருத்துக்கள்:

தாரணி பிரியா said...

மொத போணி நாந்தான். படிச்சுட்டு வாரேன்

தாரணி பிரியா said...

:)))))))

sakthi said...

உன் காதை கொண்டா "நம்ம ஊரு நடிகைகள் எல்லாம் அமெரிக்காவிலே தெருவிலே நின்று சுடு நாய் (ஹாட் டாக்) விக்கிற, அங்க இருக்கிற பெட்டி கடையிலே பான் பராக் விக்கிற அமெரிக்கா தொழில் அதிபர்களைத்தான் திருமணம் செய்வேன்னு ஒத்தை காலிலே நிக்காங்கலாம்.அவங்களுக்கே இப்படி அடிபிடி சண்டைனா, அமெரிக்கா ஐ.டி க்கு எப்படி இருக்கும்,உள்ளூர் அழகியிலே இருந்து உலக அழகி வரைக்கும் துண்டு போட காத்து இருப்பாங்க "

hhahahhaha

sakthi said...

கவல துறை எப்போதும் களவாணிகளை தேடாது, சில சமயம் என்னை மாதிரி நல்லவங்களையும் தேடி வரும், கடவு சீட்டு விண்ணப்பத்துக்கு காவல்துறை தேடி வந்தாங்க"

superb nasreyan anna

sakthi said...

வேலை இருக்கவனுக்கு ஒரு வேலை,இல்லாதவனுக்கு ஆயிரம் வேலை, மறுபடி தேடிக்கலாம், காதல் தோல்வியா தாடி வச்சி யோசிக்க, இது தண்ணி அடிச்சி யோசிக்க வேண்டிய விஷயம்"
:))))))))))))))

ஆளவந்தான் said...

//
"அதுக்கும் மேல மச்சான், அண்ணா பல்கலைகழகத்துக்கு சான்றிதல் அங்கே இருந்துதான் வருது, அவ்வளவு பெரிய பிரிண்டிங் பிரஸ் இருக்கு,நூறுக்கு இன்ஜினியர், இரு நூறுக்கு டாக்டர், ஐநுறுக்கு எம்.சி.ஏ ன்னு ௬வி..௬வி.. வித்துகிட்டு இருக்காங்க, அங்கே வாங்கிட்டு போய் அமெரிக்காவிலே பச்சை அட்டை வாங்கி நிறைய பேரு இருக்காங்க"
//

IAS Certificate கூட கிடைக்குமாமே :)))))

Prabhu said...

இருந்தாலும் ஐடிய ஓவராத் தான் கிழிக்கிறீங்க.நீங்களும் ஐடியா? ப்ரொமோஷன் கிடைக்காத கடுப்பா? இல்ல ஆன் சைட் கிடைக்காத காண்டா?

வினோத் கெளதம் said...

தல இந்த நிலைமை கூடிய விரைவில் மாறி விடுமா..

இருந்தாலும் உங்களுக்கு நோன்ப நக்கல் ஜாஸ்தி..

புதியவன் said...

//காதல் தோல்வியா தாடி வச்சி யோசிக்க, இது தண்ணி அடிச்சி யோசிக்க வேண்டிய விஷயம்"//

ஆஹா...என்ன ஒரு தத்துவம்...

புதியவன் said...

//"பட்ட சரக்கு.. பட்டைய கிளப்புது பாத்தியா, இதே ரெசியும் அப்படியே வச்சிக்கலாம், கொஞ்சம் நாக்கை சுழட்டி, சுழட்டி இங்கிலீஷ் பேசணும், அதாவது யாருக்குமே புரியாத மாதிரி பேசணும், நீ அமெரிக்காவிலே வேலை வாங்க அது போதும்"
//

கலக்கல் ஐடியா...

புதியவன் said...

//டேய் போகும் முன்னாடி உன் முகத்தை கண்ணாடியிலே பாத்துக்கோ, நடிகை புருசனோட அழகை கண்ணாடியும் ரசிக்கட்டும்"//

ஹா...ஹா...ஹா...

ஷண்முகப்ரியன் said...

"எனக்கு வேலை போன சோகத்திலே குடிச்சா குவாட்டர் ௬ட இனிக்குது"//

புதிய சொல்லாடல் நச்ரேயன்.
ஆனால் நீங்கள் சொல்வது போல் இப்போதெல்லாம் திருமண விஷயத்தில் எந்தப் பெண்ணும் ஏமாறுவதில்லை.ஏமாறுவதெல்லாம் ஆம்பளைப் பயலுகதான்.

கலையரசன் said...

நா கூட அமேரிக்கா போலாமுன்னு இருக்கேன்!
அதுக்கு முன்னாடி ஹைதரபாத் அமீர்பேட்டையிலே போகனுமோ?
பக்கா பக்கா!!

டைம் இருந்தா நம்ம பக்கத்திற்கும் வாங்க!

SUBBU said...

காதல் தோல்வியா தாடி வச்சி யோசிக்க, இது தண்ணி அடிச்சி யோசிக்க வேண்டிய விஷயம்

SUBBU said...

காதல் தோல்வியா தாடி வச்சி யோசிக்க, இது தண்ணி அடிச்சி யோசிக்க வேண்டிய விஷயம்..

:)))))))))))))))))

அ.மு.செய்யது said...

//"இப்படி புறவாசல் வழியே போறதையும், சுவர் ஏறி குதிச்சி உள்ளே போகிற வழியே பத்தி யோசிக்கிற நீ மாட்டினா, தேசிய பாதுகாப்பு சட்டமா? குண்டர் சட்டமா?"//

ஹா..ஹா..கலக்கல்.

Entertaining show !!!

சந்தனமுல்லை said...

ROTFL!

சந்தனமுல்லை said...

//அதுக்கும் மேல மச்சான், அண்ணா பல்கலைகழகத்துக்கு சான்றிதல் அங்கே இருந்துதான் வருது, அவ்வளவு பெரிய பிரிண்டிங் பிரஸ் இருக்கு,நூறுக்கு இன்ஜினியர், இரு நூறுக்கு டாக்டர், ஐநுறுக்கு எம்.சி.ஏ ன்னு ௬வி..௬வி.. வித்துகிட்டு இருக்காங்க, அங்கே வாங்கிட்டு போய் அமெரிக்காவிலே பச்சை அட்டை வாங்கி நிறைய பேரு இருக்காங்க"//

:-))))) நிஜமாவா!!!

சந்தனமுல்லை said...

ஹை..20!

சந்தனமுல்லை said...

//"இப்படி புறவாசல் வழியே போறதையும், சுவர் ஏறி குதிச்சி உள்ளே போகிற வழியே பத்தி யோசிக்கிற நீ மாட்டினா, தேசிய பாதுகாப்பு சட்டமா? குண்டர் சட்டமா?"//

ஆகா...!!!

//இப்ப நீ வேலைக்கு போறதுக்கு நான் செய்யுற குறுக்கு வழி நானா பண்ணலை, எனக்கு ஒருத்தன் சொல்லி குடுத்தான், அவரு இன்னைக்கு நாசாவிலே வேலை பார்க்கிறாரு, நான் உனக்கு சொல்லி குடுக்கேன்"//

அவ்வ்வ்வ்வ்வ்!!!

:-))

சந்தனமுல்லை said...

hilarious post!!!

வேத்தியன் said...

சிறிது வேலை..

அப்புறமா வரேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

"அது என்ன வேலை மச்சான்!!!"


"கல்யாண மாப்பிளை தான், நீ இப்ப இருக்கிற நிலைமையிலே ஊரிலே ஆடு மேய்கிற உங்க அத்தை மகள் ௬ட உன்னை கட்டிக்க மாட்டாள்.இப்ப உன்னை பார்த்த உடனே துண்டை தூக்கி கொண்டு ஓடுறவங்க எல்லாம்,நீ அமெரிக்கா போன உனக்கு துண்டு போட வரிசையா நிப்பாங்க, இன்னொரு முக்கியமான விஷயம்,யார்ட்டையும் சொல்லாதே"


ஹஹாஆஹா

நசரேயன் said...

நன்றி தாரணி பிரியா
நன்றி T.V.ராதாகிருஷ்ணன் ஐயா
நன்றி சக்தி -->--> தொடர் வருக்கைக்கு
நன்றி ஆளவந்தான்
நன்றி பப்பு
நன்றி vinoth gowtham
நன்றி புதியவன் --> தொடர் வருக்கைக்கு
நன்றி ஷண்முகப்ரியன் --> எனக்கும் அப்படித்தான் தோனுது, நல்ல வேலை நான் நடிகையை கல்யாணம் முடிக்கலை
நன்றி கலையரசன் --> முதல் வருக்கைக்கு, நானும் உங்க கடைப்பக்கம் வாரேன்
நன்றி SUBBU
நன்றி அ.மு.செய்யது --> தொடர் வருக்கைக்கு
நன்றி சந்தனமுல்லை -->தொடர் வருக்கைக்கு
நன்றி வேத்தியன் --> முடிச்சிட்டு மெதுவா வரவும், கடை 24 மணிநேரமும் இருக்கும்
நன்றி பிரியமுடன்.........வசந்த் -->தொடர் வருக்கைக்கு

Divya said...

ROTFL:))

u hv a hilarious flow of writing, amazing:))

வேத்தியன் said...

//தண்ணி அடிச்சவன் மாதிரி இங்கிலிஷ்ல பேசினா வேலை இருக்குன்னு சொல்லுற//

ஆஹா இது கலக்கல்...

வேத்தியன் said...

//அமெரிக்கா போகும் முன்னாலே உனக்கு சந்தேகம் வந்துவிட்டதா, நீ சீக்கிரமே ப்ராஜெக்ட் மேனேஜர் ஆகிடுவ மச்சான், கேள்வியை கேளு//

:-)))

வேத்தியன் said...

//நீ இப்ப இருக்கிற நிலைமையிலே ஊரிலே ஆடு மேய்கிற உங்க அத்தை மகள் ௬ட உன்னை கட்டிக்க மாட்டாள்.இப்ப உன்னை பார்த்த உடனே துண்டை தூக்கி கொண்டு ஓடுறவங்க எல்லாம்,நீ அமெரிக்கா போன உனக்கு துண்டு போட வரிசையா நிப்பாங்க//

உண்மை உண்மை...

வேத்தியன் said...

நசரேயன்..
அருமையான வரிகள்..

ரொம்ப ரசிச்சேன்..
நன்றி...