Wednesday, May 6, 2009

அன்புள்ள தென் சென்னை வேட்பாளர் சரத்பாபுவுக்கு

உங்களை தலைவர் படத்திலே பணக்கார முதலாளிக்கு பஞ்சம் வரமா இருக்க வருகிற படி அளக்கிற எஜமான் வேசத்திலே வருகிறவருன்னு நினச்சேன், வலை உலகத்தை பார்த்த அப்புறமாத்தான் தெரியும் நீங்க என்னைவிட ரெம்ப படிச்சவருன்னு ,நீங்க தென் சென்னையிலே எதுக்கோ நிக்குறீங்கன்னு

யாரு வேணுமுனாலும் அரசியல்ல நிக்கலாம் ஜனநாயம் என்று சொல்லி கொள்கிற நாட்டிலே, ஓட்டு போடுற அடிப்படை தகுதி எனக்கு இல்லன்னாலும், நானும் குடிமகன்களில் ஒருவன்,நம்ம ஊரு அரசியல்வாதிக்கு சில அடிப்படை தகுதிகள் இருக்குன்னு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.அந்த தகுதிகள் எல்லாம் உங்க கிட்ட இருக்கான்னு கேட்க வேண்டியது என் கடமை

தமிழினத்தலைவர் மாதிரி நடிக்க தெரியனும்,காலம் இருந்தாலும் முட்டு வலி, முதுகு வலி, மூக்கு வலி இன்ன பிற வழிகளை அடையாளம் கண்டு கொண்டு மருத்துமனையிலே படுத்து அனுதாப அலையை ஏற்படுத்து முயற்சி செய்யணும்,குடும்பத்துக்கு பதவி வேணுமுனா கட்சி கொள்கைகளை அடமானம் வச்சி கந்து வட்டிக்கு பதவி வாங்க தெரியனும்,வாயிலே கொழுப்பு அதிகம் இருந்தாலும் உடம்பிலே கொழுப்பு குறைக்க மருத்துவர் ஆலோசனை சொன்னதும் உண்ணாவிரதம் இருக்கணும். பசி அதிகம் ஆகிட்ட உண்ணா விரதத்தை பாதியிலே முடிக்கணும்.நலிவடைஞ்ச தபால் துறையை நிமிர்த்த நமக்கு நாமே தந்தி அடிக்க சொல்லணும் சுய வேலை வாய்ப்பு திட்டத்திலே.

ஆட்சியிலே இருந்தா அரசாங்க பேருந்துகளையும் ஆதரவுக்கு ௬ப்பிடனும், ஆட்சியிலே இல்லன்ன பேருந்தை எரிக்கணும் பயணிகளோட.கவுஜ எழுதனும் எழுதினவருக்கே புரியுற மாதிரி, அது இறை ஆண்மையை பாதிச்சா, குடும்ப கட்டுப்பாடு பண்ணனும் .

ஈழ தமிழ் பிரச்னையை பற்றி நல்லா படிச்சி வையுங்க அறிக்கை விடும் போது 1945 ல இருந்து ஆரம்பித்து புள்ளி விவரங்களை எல்லாம் அள்ளி விடனும், படிகிறவங்க படிச்ச உடனே நெஞ்சுல உங்க பேரை பச்சை குத்தனும்.அதை பத்தி பேசினாங்க, பேசுறாங்க, பேசிகிட்டே இருப்பாங்க ....

தொண்டர் படை கலையாம இருக்க நிமிஷத்து ஒரு போராட்ட அறிவிப்பு அறிக்கை கொடுத்து அரசியல் வகுப்பிலே வருகையை பதிவு செய்யனும்.தாய் நாட்டுக்கு தான் கொடி பிடிப்பேன், தான் சார்ந்த மக்களின் தாய் மொழியோ, இன மக்களையோ சல்லி காசுக்கு மதிக்க மாட்டன்னு பேசணும்.பக்கத்து வீடு பத்தி எரியும் போது கோடை இல்லா இடத்து போய் ஒய்வு எடுக்கணும்.


நானும் ஆட்டைக்கு வாரேன்..வாரேன்னு எல்லோரிடம் சொல்லிட்டு அம்புட்டு பேரையும் நடுத்தெருவிலே நிக்க விடத்தெரியனும்,தேர்தல் தேதி அறிவிக்கும் வரை செவிடன் காதிலே ஊதின சங்கு மாதிரி யாரு வீட்டுக்கு வந்த எழவோன்னு இருக்கணும்


தேர்தல் தேதி சொன்ன உடனே தமிழ் நாட்டு தமிழ் கொசு செத்தாலும் ரெண்டு நாளைக்கு வீரா வசனம் பேசி அறிக்கை விடனும், தமிழுக்கும், தமிழனுக்கும் உங்களை விட்டா வேறு நாதியே இல்லாத மாதிரி ஒரு மாயை உருவாக்கணும்,உங்க பாச மழையிலே நினைஞ்சி கத்தரி வெயிலேயும் குளிக்கணும் என்கிற நினைப்பே வரக்௬டாது.


அந்த காலகட்டத்திலே நடக்கிற பிரச்னையை கையிலே எடுதிகிட்டே பின்னி படல் எடுக்க தெரியணும்.சண்டைனு வந்தா நாலு பேரு சாகத்தான் செய்வான்னு சொல்லணும், அடுத்த நாள்ல ராணுவத்தை அனுப்பி சண்டையை நிறுத்தி தனி நாடு வாங்கி கொடுப்பேன்னு நாடி ஜோசியர் மாதிரி சொல்லணும்

தேர்தல் வார வரைக்கும் நடுநிலைவாதின்னு போர்வையை போத்திகிட்டு, பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டத்தெரியனும், தேர்தல் வந்த உடனே மதிலே மேல பூனை மாதிரி அங்கயா.. இங்கையான்னு யோசிக்கிற மாதிரி நடிச்சி அங்க ஒரு தடவை, இங்க ஒரு தடவைன்னு மாறி மாறி கும்மி அடிக்கணும்.வேலை வெட்டி இல்லன்னா மதுகடைகளை மூடப் போறேன்னு வெளி நட்டு சரக்கு வாங்கிட்டு உள் நட்டு கடைகளை மூடனுமுனு போராட்டம் பண்ணனும்.

நேரம் போகலைனா தெக்கூர் சினிமாக்காரங்களை கட்டம் கட்டி திட்டனும், வடக்கூர்க்கு போனா கட்டை விரலை வச்சி வாயை பொத்திகிட்டு அமைதியா போகணும்.தரிசனம் கிடைச்சா தேர்தல் இல்ல புறக்கனிப்புன்னு சொல்லணும்.

குறிப்பா ஈழ பிரச்சினையிலே யாருக்கும் பேரு போய்டக்௬டாது என்பதிலே உறுதியா இருக்கணும், பிரச்சனைய இடியாப்ப சிக்கலிலே மாட்டி விடனும், கடைசி தமிழனையும் அழித்து கடைகோடியிலே சிங்களன் மணிமண்டபம் கட்டும் வரைக்கும் பேசியே பிழைப்பை ஓட்டனும்.ஞாபக மறதி நல்லா வளர்க்கணும், அவங்களை ஒழிப்பேன்னு சொல்லிட்டு, அவங்க கையை பிடிச்சி கிட்டே ஓட்டு கேட்க போகணும்

இப்படிப்பட்ட ஆன்றோர்களும்,அறிஞ்சர்களும் நிறைந்த சபையிலே, காட்டுத்தீயை அணைக்க கண்ணீர்ரோடு புறப்பட்ட உங்களை வாழ்த்துவதா!!!
வருந்துவதான்னு தெரியலை, அரசியல் பாடத்திலே தேர்ச்சியே பெறாம நிற்கிற நீங்க ஓடனுமுனா மேல சொன்ன தகுதி வேண்டிய இருக்கு,வாக்கு சேகரிக்கும் போது முதல்ல உங்க குடும்ப வாக்கை மறந்திறாம சேகரியுங்க.

அவங்கதான் நின்னாலும், படுத்தாலும் ௬ட இருப்பாங்க.நான் உங்ககளை வச்சி ஒரு பதிவு போட்டு விட்டு என் பிழைப்பை பார்க்க போய்டுவேன், இதையும் மீறி நான் கள்ள ஓட்டு போட வரனுமுனா குவாட்டரும் கோழி பிரியாணியும் வேணும்.

அன்புடன்,
குடிமகன்


13 கருத்துக்கள்:

ரவி said...

ஓட்டுக்கு எட்டு முதல் பத்து ஆயிரம்யா...

காசோட சேர்த்து ஒரு நோக்கியா செல்போனு...

வருஷம் ஒருமுறை தேர்தல் வந்தாலே நாட்டில் உள்ள அத்தனை கருப்பு பணமும் வெளிவந்து, மக்களிடம் பண புழக்கம் ஏற்பட்டு, பொருளாதாரம் நிலையாக இருக்கும்...

ரவி said...

மீ த பர்ஸ்ட்டு அண்டு செக்கண்டு

ரங்குடு said...

//வருஷம் ஒருமுறை தேர்தல் வந்தாலே நாட்டில் உள்ள அத்தனை கருப்பு பணமும் வெளிவந்து, மக்களிடம் பண புழக்கம் ஏற்பட்டு, பொருளாதாரம் நிலையாக இருக்கும்...//

அதுக்கப்புறம் அடுத்த தேர்தல் வர்ரதுக்குள்ளே எல்லாப் பணத்தையும் எம்.பி க்களும் எம்.எல்.ஏக்களும் சுருட்டி விட மக்கள் அடுத்த தேர்தலுக்கு காத்திருக்க வசதியாக இருக்கும்.

தனி மரம் தோப்பாகுமா? ஒரு சரத் பாபுவுக்கு ஓட்டுப் போட்டு அவரை ஏன் அரசியல் சாக்கடையில் தள்ளிவிட வேண்டும்?

மேலும் தற்போதைய சாக்கடையில் உள்ள பன்றிகளுடன் போட்டி போட தம்பியும் இன்னொரு பன்றியாக இருக்க வேண்டாமோ?

தம்பி நிற்பது அவருக்கு நல்லதல்ல.
அவருக்கு ஓட்டுப் போடுவது மக்களுக்கு நல்லதல்ல. அவர் ஜெயித்தால் நாட்டுக்கு நல்லதல்ல.

தம்பி, நீங்க்க மாட்டுக்கு செவெனேன்னு ஒரு நல்ல வேலை தேடிக்கோங்க. கல்யாணம் (ஆகாமலிருந்தால்) பண்ணிக்கோங்க. அமெரிக்கா , ஐரொப்பான்னு வெளிநாட்டுலே வேலை மாத்திக்கோங்க. நிறைய சம்பாதிங்க (சிவாஜி மாதிரி). ஒரு 10 வருசம் கழிச்சு இந்தியா வந்து நாட்டுக்கு உங்க பணத்தின் மூலம் நல்லது செய்யப் பாருங்க.

புதியவன் said...

//வாக்கு சேகரிக்கும் போது முதல்ல உங்க குடும்ப வாக்கை மறந்திறாம சேகரியுங்க.//

நச்...வரிகள்...

Prabhu said...

புதுசா ஒருத்தர் வர்றாரு. அந்த மனுஷனயும், நான் தமிழீனத் தலைவர்னு சொல்ல வச்சிருவீங்க போலயே. பையன மிரட்டாதீங்கப்பா!

http://urupudaathathu.blogspot.com/ said...

உஸ்ஸ்ஸ்ஸ்...

முடியல

சின்னப் பையன் said...

எல்லாரையும் பிச்சி உதறியிருக்கீங்க...

S.R.Rajasekaran said...

மாப்பிள்ள நல்லா இருக்கியளா

S.R.Rajasekaran said...

சரியான காரம் .கொஞ்சம் சரக்கு இல்ல இல்ல சக்கர போட்டுட்டு வரேன்

ராஜ நடராஜன் said...

சின்னப் புள்ள.பயந்துடப் போகுது.இந்த விரட்டு விரட்டுறீங்க.ஒரு தடவ நின்னுதான் பார்க்கட்டுமே.அழைப்பு சரியா இருந்தா குடுகுடுப்பையார அடுத்த எலக்சன்ல நிறுத்தலாமில்ல.பழசுகளுந்தான் மக்களுக்கு எவ்வளவு நாள் உழைச்சு ஓடா தேய்வாங்க.

வில்லன் said...

//அன்புடன்,
குடிமகன்///

டாஸ்மார்க் குடிமகன்,....... அப்படின்னு போடணும் சரியா... அதான் பொருத்தமா இருக்கும் அப்பு..

வில்லன் said...

ஒரு படி மேல போயி... ஈழ தலைவர புடிச்சா தமிழ் நாட்டுல ரத்த ஆறு ஓடும்னு சொல்லணும். மானம் கெட்ட நாம அத கேட்டுட்டு சும்மா இருக்கணும். ஏன்னா அந்த ஈழ தலைவரு நம்ம நாட்டு இளம் பிரதமர கொன்ன நல்லவரு..... என்ன கேட்டா இந்த மாதிரி பேசுறவங்க ரத்தம் கண்டிப்பா ஆறா ஓடனும் தமிழ் நாட்டுல. அப்ப தான் பயம் வந்து இந்த மாதிரி பேசமாட்டனுங்க வரும் காலத்துல.

வில்லன் said...

இதெற்கெல்லாம் ஒரே தீர்வு ஒட்டு போடாம... வாக்கு சாவடிக்கு போயி "ஓட்டு போட விருப்பம் இல்லைன்னு எழுதி கொடுக்குறது தான்". அப்படி நெறைய பேரு எழுதி கொடுத்தா தேர்தல் கமிசன் ரொம்பவே யோசிக்கும். ஒரு வழி பிறக்கலாம் வரும் காலத்தில்.

தயவு செய்து சிரமம் பாக்காம ஓட்டு சாவடிக்கு போயி எழுதி கொடுங்க... இல்ல எந்த பரதேசி நாயாவது உங்க ஓட்ட கள்ள ஓட்ட போட்டுட்டு போய்டும். வரும் காலத்தி NRIக்கு onlineல ஓட்டு போட வழி செய்ய வேண்டும் கண்டிப்பாக....