Thursday, March 19, 2009

தற்கொலைக் கடிதம்

காதலின் இறுதி கட்டத்திலும் தோல்வி அடைந்த நான் தோல்விகளால் துவண்டு விட்ட எனக்கு வாழ்க்கையும் தோல்வி ஆகி விட்டது, நான் காதலில் விளம்பை விட்டு விட்டு மரணத்தின் விளிம்பை தொடப்போகிறேன் .இந்த முடிவில் நீ என்னை தோற்கடிக்க முடியாது, அதிலே நான் நிச்சயம் உன்னை வெல்வேன்.

இந்த வெற்றியில் என்னை மலர் மாலை சூடி வழி அனுப்பினாலும், இம்முறையும் நான் தனியே போவேன்,உன்னை மீண்டும் துணைக்கு ௬ப்பிட போறதில்லை.உன்னைக் கண்டேன், உன்னையே கண்டேன், என்னில் உன்னை கண்டேன்,கண்டு உன்னை வைக்க என்னை நினைவை தொலைத்தேன், என்னையும் தொலைத்தேன், என் என்பையும் தொலைக்கப்போகிறேன்

கரைப்பார் கரைய கல்லும் கரையும் என்பதை மனதில் கொண்டு கல்லான உன் மனதை கரைக்கத் துணிவேடுத்தேன், துணிவு துச்சமாகி துவண்டு அச்சமாகி, ஐயமாகி, முடியாத ஒரு முடிவாகிவிட்டது.எனவே நான் என்னை முடிக்க முடிவெடுத்தேன்.

மனம் உன்னை வெறுக்க வில்லை, என்னை வெறுத்தது, தன்னை வெறுத்தது, தன் நினைவை வெறுத்தது, ஆதலால் நான் என்னை வெறுத்தேன், என்னை தொலைக்க முடிவெடுத்தேன்

"டைரக்டர் சார்.. டைரக்டர் சார்.. கதாநாயகி மயங்கி விழுந்துட்டாங்க."

"காட்சி படி இந்த கடிதம் படிச்ச உடனே அவங்க மயங்கி விழனும்"

"அவங்க விழுந்த வேகத்தைப் பார்த்தால் மண்டைய போட்ட மாதிரி இருக்கு"

"நானே கதாநாயகியோட நடிப்பை பார்த்து பிரமிச்சி போய் நிற்கிறேன், நீ வேற விவரங்கெட்ட தனமா பேசிகிட்டு இருக்கே.நிச்சயம் இதுக்கு ஆஸ்கார் கிடைக்கும்."

"ஆஸ்கார் கிடைக்குதோ இல்லையோ உங்களுக்கு களி கிடைக்கும்"

"என்ன சொல்லுறீங்க"

"ஆமா உண்மையைத்தான் சொல்லுறேன், கதா நாயகி கதையை விட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே போய்ட்டாங்க"

கதாநாயகி யின் அம்மா
"அடப்பாவி பேயலை.. என் பொண்ணு தமிழ் படத்திலே கதாநாயகி க்கு வேலையே இருக்காதுன்னு நினைச்சி நடிக்க வந்தா பக்கம் பக்கம் மாக எழுதி என் மகளுக்கு பாடை கட்டிட்டுயே"

டைரக்டர் "யாரவது டாக்டர்ரை ௬ப்பிடுங்க"

"நான் இங்கேயே தான் இருக்கேன், ஒரு வாரமா"

"ஒரு வாரமா வா?!!! "

"உங்க கதை இணைய தளத்திலே வெளியான நாளில் இருந்து, நானும் காத்து கிட்டு தான் இருக்கேன், இதுல நடிக்கும் போதே யாராவது மண்டையை போடுவாங்கன்னு, இன்னைக்கு தான் நடந்து இருக்கு"

"வயத்துல புளியை கரைக்காம, பாத்து சொல்லுங்க டாக்டர்"

"பாக்க தேவை இல்லை, மேல டிக்கெட் வாங்கியாச்சி"

"எதோ பஸ் டிக்கெட் வாங்கின மாதிரி சொல்லுறீங்க"

நான் சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை, நீதி பதிதான் சொல்லுவாரு

நீதிபதி "டைரக்டர் நசரேயன் மேல, என்ன குற்றம்?"

அரசாங்க வக்கீல் "ஐயா, இவரு எழுதின வசனத்தை படிக்க முடியாம, கதாநாயகி இறந்துட்டாங்க" இதோ அந்த வசனம்

வசனத்தை வாங்கி பார்த்த நீதிபதி "இந்த வசனத்தை எழுதிய உங்களுக்கு" ன்னு சொல்லி முடிக்கலை, நீதிபதியும் காலாவதி ஆகி விட்டார்

மத்திய சிறை ஜெயில் அறையில்

"என்ன எம டைரக்டர் நசரேயன், உங்க கடிதத்தை படிச்சா, செலவே இல்லாம சங்கு ஊது வாங்கலாமே, நாட்டுல மக்கள் தொகையை குறைக்க அரசாங்கமே உங்க கடிதத்தை அரசுடமை ஆக்க திட்டம் போடுறாங்களாம் "

ஜெயிலர் ஐயா நடந்த சம்பவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, ஒரே நேரத்தில் நடந்ததால் நான் உள்ள இருக்கேன்.இது ஒரு Coincidence .

ஜெயிலர் ஐயா, ரெண்டு நாளைக்கு முன்னாடி இவரு கடிதம் படிச்ச பக்கிரி மேல போய்ட்டான்

"ஐயா கடிதம் எழுதின எனக்கு இன்னும் ஒன்னும் ஆகலை, அப்படி இருக்கும் போது இதை எப்படி நம்ப முடியும்"

உங்க கேள்வி நியாயம் தான், ஆனா சட்டத்துக்கு அது தெரியாது, உங்க மேல இருக்கிற வழக்குகளை இருந்து விடுதலை ஆக இன்னும் கன காலம் இருக்கு, அதுவரைக்கும் கதை, வசனம்னு சொல்லி எங்க குடியை கெடுக்காம இருங்க.நாங்க கொஞ்ச காலமாவது நிம்மதியா இருந்துகிறோம்

57 கருத்துக்கள்:

அப்துல்மாலிக் said...

ஹா ஹா ஹா
தல தயவுசெய்து அந்த டயலாக்கை பிளாக்குலே விட்டுடாதீங்க, அப்புறம் ......??? நான் சொல்வதற்கு ஒன்னுமில்லை

அப்துல்மாலிக் said...

நிறைய தேவையில்லாத அரசியல் வாதிகள் இந்த நாட்டுலே உலவுவதா கேள்வி, அவங்களிடம் உங்க டயலாக்கை கொடுத்து (அட எலக்ஷன் பிரசாரமாதான்) படிக்க சொல்லுங்க.....

சின்னப் பையன் said...

ஹா ஹா ஹா

சின்னப் பையன் said...

நம்ம ஊர் அரசியல்வாதிங்க எல்லாரையும் நடிக்க கூப்பிடுங்க தல....

Anonymous said...

ஹா ஹா ஹா

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha ..ha...haaa

ஆதவா said...

ஹாஹா... நல்ல கற்பனை!

அந்த டயலாக் என்னங்க??? (வலைப்பதிவர்களைக் குறைக்க ஒரு ஐடியா... ஹி ஹி)

Anonymous said...

கலக்கல்! ஹிஹிஹிஹிஹி

ஸ்ரீதர்கண்ணன் said...

"உங்க கதை இணைய தளத்திலே வெளியான நாளில் இருந்து, நானும் காத்து கிட்டு தான் இருக்கேன், இதுல நடிக்கும் போதே யாராவது மண்டையை போடுவாங்கன்னு, இன்னைக்கு தான் நடந்து இருக்கு"

படிக்கும்போது :)

ஸ்ரீதர்கண்ணன் said...

"என்ன எம டைரக்டர் நசரேயன், உங்க கடிதத்தை படிச்சா, செலவே இல்லாம சங்கு ஊது வாங்கலாமே, நாட்டுல மக்கள் தொகையை குறைக்க அரசாங்கமே உங்க கடிதத்தை அரசுடமை ஆக்க திட்டம் போடுறாங்களாம் "

ஹய்யோ ஹய்யோ :)))))))))

பழமைபேசி said...

நம்ம ஊர் அரசியல்வாதிங்க எல்லாரையும் நடிக்க கூப்பிடுங்க! கூப்பிடுங்க!! கூப்பிடுங்க!!!

கிரி said...

:-)))))

செம இயக்குனர் தான் தெரியும் இது என்ன எம இயக்குனர்

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி..

தளபதி இயக்குனர் ஆனால் இதுதான் கஷ்டம் போல இருக்கு.

RAMYA said...

//
காதலின் இறுதி கட்டத்திலும் தோல்வி அடைந்த நான் தோல்விகளால் துவண்டு விட்ட எனக்கு வாழ்க்கையும் தோல்வி ஆகி விட்டது
//

ஐயோ பாவம் ஏதோ சொல்ல வராரு என்னான்னு பார்க்கலாம்!!

RAMYA said...

//
நான் காதலில் விளம்பை விட்டு விட்டு மரணத்தின் விளிம்பை தொடப்போகிறேன் .இந்த முடிவில் நீ என்னை தோற்கடிக்க முடியாது, அதிலே நான் நிச்சயம் உன்னை வெல்வேன்.
//

உங்களை ஏன் தோற்கடிக்கனும் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்காங்களாம்!!

RAMYA said...

//
இந்த வெற்றியில் என்னை மலர் மாலை சூடி வழி அனுப்பினாலும், இம்முறையும் நான் தனியே போவேன்
//

கூப்பிட்டாலும் வரமாட்டாங்களாம்!!

RAMYA said...

//
உன்னை மீண்டும் துணைக்கு ௬ப்பிட போறதில்லை.உன்னைக் கண்டேன், உன்னையே கண்டேன்,
//

அது சரி இதே கேட்டு அவங்க முறைக்க போறாங்க!!

RAMYA said...

//
என்னில் உன்னை கண்டேன்,கண்டு உன்னை வைக்க என்னை நினைவை தொலைத்தேன், என்னையும் தொலைத்தேன், என் என்பையும் தொலைக்கப்போகிறேன்
//

அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு எனக்கு.

அப்படீன்னு அவங்க சொல்லராங்கலாம்.

RAMYA said...

//
கரைப்பார் கரைய கல்லும் கரையும் என்பதை மனதில் கொண்டு கல்லான உன் மனதை கரைக்கத் துணிவேடுத்தேன், துணிவு துச்சமாகி துவண்டு அச்சமாகி, ஐயமாகி, முடியாத ஒரு முடிவாகிவிட்டது.எனவே நான் என்னை முடிக்க முடிவெடுத்தேன்.
//

அய்யய்யோ நான் இப்போ எங்கே இருக்கேன் நானே என் தலையிலே கல்லை தூக்கி போட்டு கிட்டேனோ?? :)).

இவ்வளவு பெரியா டயலாகா??

RAMYA said...

//
மனம் உன்னை வெறுக்க வில்லை, என்னை வெறுத்தது, தன்னை வெறுத்தது, தன் நினைவை வெறுத்தது, ஆதலால் நான் என்னை வெறுத்தேன், என்னை தொலைக்க முடிவெடுத்தேன்
//

படிச்சவங்களும் சுயநினைவை இழந்து என்னவெல்லாமோ ஆகிவிட்டார்களாம்!!

என்னா ஒரே வெறுப்புதான் :))

RAMYA said...

//
"டைரக்டர் சார்.. டைரக்டர் சார்.. கதாநாயகி மயங்கி விழுந்துட்டாங்க."
//

Late Reaction!!

RAMYA said...

//
காட்சி படி இந்த கடிதம் படிச்ச உடனே அவங்க மயங்கி விழனும்"
//

காட்சியாவது ஒன்னாவது நடிக்கிறதுக்கு பதிலா மயங்கிடலாம்னு நினைச்சுட்டாங்க போல இருக்கு.

RAMYA said...

//

"அவங்க விழுந்த வேகத்தைப் பார்த்தால் மண்டைய போட்ட மாதிரி இருக்கு"
//

மண்டைய போடலைன்னா தான் அதிசயம். ஏன்னா படத்தோட பூஜையின் போதே பணிக்கர் சொல்லிட்டாரு.

ஆரம்பிக்கும்போதே கசமுசா நடக்கும்ன்னு :))

RAMYA said...

//
"நானே கதாநாயகியோட நடிப்பை பார்த்து பிரமிச்சி போய் நிற்கிறேன், நீ வேற விவரங்கெட்ட தனமா பேசிகிட்டு இருக்கே.நிச்சயம் இதுக்கு ஆஸ்கார் கிடைக்கும்."
//

கிடைக்கும் கிடைக்கும் நான் கூடா அப்படிதான் நினைச்சேன்!!

RAMYA said...

//
"ஆஸ்கார் கிடைக்குதோ இல்லையோ உங்களுக்கு களி கிடைக்கும்"
//

அது தெரிஞ்ச விஷயம்தானே!!

RAMYA said...

//
என்ன சொல்லுறீங்க"

"ஆமா உண்மையைத்தான் சொல்லுறேன், கதா நாயகி கதையை விட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே போய்ட்டாங்க"
//

போகளைன்னாதான் அதிசயம், படிக்கறவங்க மண்டையே சுத்துதே :))

RAMYA said...

//
கதாநாயகி யின் அம்மா
"அடப்பாவி பேயலை.. என் பொண்ணு தமிழ் படத்திலே கதாநாயகி க்கு வேலையே இருக்காதுன்னு நினைச்சி நடிக்க வந்தா பக்கம் பக்கம் மாக எழுதி என் மகளுக்கு பாடை கட்டிட்டுயே"
//

பேசாமே அவங்க அம்மாவை நடிக்க வச்சுடுங்க!!

RAMYA said...

//
டைரக்டர் "யாரவது டாக்டர்ரை ௬ப்பிடுங்க"

"நான் இங்கேயே தான் இருக்கேன், ஒரு வாரமா"

"ஒரு வாரமா வா?!!! "
//

நசரேயன் கதைன்னா சும்மாவா??

மே மாத கத்தரி மாதிரி அதான் சொல்லுவாங்களே!!

முன்னேழு பின்ஏழுன்னு அதான் நடக்குது இங்கே :))

RAMYA said...

//
உங்க கதை இணைய தளத்திலே வெளியான நாளில் இருந்து, நானும் காத்து கிட்டு தான் இருக்கேன், இதுல நடிக்கும் போதே யாராவது மண்டையை போடுவாங்கன்னு, இன்னைக்கு தான் நடந்து இருக்கு"
//

நல்ல வேலை கதை படிச்ச டாக்டர் தப்பிச்சாரு!!

RAMYA said...

//
"வயத்துல புளியை கரைக்காம, பாத்து சொல்லுங்க டாக்டர்"

"பாக்க தேவை இல்லை, மேல டிக்கெட் வாங்கியாச்சி"

"எதோ பஸ் டிக்கெட் வாங்கின மாதிரி சொல்லுறீங்க"

//

ஹா ஹா சூப்பர்!!

RAMYA said...

//
நான் சொல்லுவதற்கு ஒன்னும் இல்லை, நீதி பதிதான் சொல்லுவாரு

நீதிபதி "டைரக்டர் நசரேயன் மேல, என்ன குற்றம்?"
//

எடுத்தவுடனே தண்டனைன்னு சொல்லாமே விட்டாரே :))

RAMYA said...

//
அரசாங்க வக்கீல் "ஐயா, இவரு எழுதின வசனத்தை படிக்க முடியாம, கதாநாயகி இறந்துட்டாங்க" இதோ அந்த வசனம்
//

நல்ல வேலை இந்த பெர்ப்பறை வாங்கினவரு படிக்கலை. தப்பிச்சாரு :)

RAMYA said...

//
வசனத்தை வாங்கி பார்த்த நீதிபதி "இந்த வசனத்தை எழுதிய உங்களுக்கு" ன்னு சொல்லி முடிக்கலை, நீதிபதியும் காலாவதி ஆகி விட்டார்

மத்திய சிறை ஜெயில் அறையில்
//

ஹையோ அந்த டைரக்டரை வெளியே விடலாமா:))

RAMYA said...

//
என்ன எம டைரக்டர் நசரேயன், உங்க கடிதத்தை படிச்சா, செலவே இல்லாம சங்கு ஊது வாங்கலாமே, நாட்டுல மக்கள் தொகையை குறைக்க அரசாங்கமே உங்க கடிதத்தை அரசுடமை ஆக்க திட்டம் போடுறாங்களாம் "
//

சுலபமா வழி சொல்லித்தரீங்கலாக்கும்
அது சரி ஜனத்தொஅகை மாற்றம்.

ம்ம்ம் ஒன்னும் சரி இல்லை:))

RAMYA said...

//
ஜெயிலர் ஐயா நடந்த சம்பவங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, ஒரே நேரத்தில் நடந்ததால் நான் உள்ள இருக்கேன்.இது ஒரு Coincidence .
//

சொல்லிக்க வேண்டியதுதான் இல்லேன்னா முட்டிக்கு முட்டி தட்டிடுவாங்க இல்லே!!

அதான் சமாளிக்கரீங்களா?? :))

RAMYA said...

//
ஜெயிலர் ஐயா, ரெண்டு நாளைக்கு முன்னாடி இவரு கடிதம் படிச்ச பக்கிரி மேல போய்ட்டான்
//

ஐயோ பாவம்!!

RAMYA said...

//
ஐயா கடிதம் எழுதின எனக்கு இன்னும் ஒன்னும் ஆகலை, அப்படி இருக்கும் போது இதை எப்படி நம்ப முடியும்"
//

அதானே இது கூட சரியாதானே இருக்கு:))

RAMYA said...

//
உங்க கேள்வி நியாயம் தான், ஆனா சட்டத்துக்கு அது தெரியாது, உங்க மேல இருக்கிற வழக்குகளை இருந்து விடுதலை ஆக இன்னும் கன காலம் இருக்கு, அதுவரைக்கும் கதை, வசனம்னு சொல்லி எங்க குடியை கெடுக்காம இருங்க.நாங்க கொஞ்ச காலமாவது நிம்மதியா இருந்துகிறோம்
//

அருமையான அறிவுரை, டைரக்டர் திருந்துவாரா??

அப்படீன்னு எல்லாரும் கேக்கறாங்களாம்.

அதென்னா கன காலம்??

நல்ல கதையை சொல்லி பீதியை கிளப்பரீங்கப்பா:))

அது சரி(18185106603874041862) said...

மச்சான்...இது வரை நீ எழுதுனதுலேயே இது தான் டாப்பு....நானே சிரிச்சிட்டேன்...:0))

ஹேமா said...

நசரேயன், கதை எழுதியே நீங்க கொல்றீங்களே !

கதைலயும் அதுதானே நடக்குது !

ஹேமா said...

நம்ம நாட்டில கொஞ்சப் பேர் இருக்காங்க.அனுப்பி வைக்கிறேன் உங்ககிட்ட.

நட்புடன் ஜமால் said...

ஐயா!

சிரிக்க முடியலை

அம்புட்டு சிறப்பு ...

புதியவன் said...

ரொம்ப சீரியஸான பதிவுனு பார்த்தா சிரிச்சு சிரிச்சு நாம சீரியஸ் ஆகிடுவம் போல...

Mahesh said...

படிச்ச என்னமாவது ஆயிடுமோன்னு பயந்து படிக்கவேயில்ல... ஆனா சிப்பு சிப்பா வருது !!

அ.மு.செய்யது said...

//"டைரக்டர் சார்.. டைரக்டர் சார்.. கதாநாயகி மயங்கி விழுந்துட்டாங்க."//

நல்ல டிவிஸ்ட்...அடங்கப்பா..

புல்லட் said...

உங்கட கற்பனைவளத்துக்கு ஒரு சலாம்...
நகைச்சுவைய அதோட கொர்த்ததுக்கு இன்னொரு சலாம்...

சூப்பர் நசார் சூப்பர் ... சிரிச்சு முடியல ...:)

வேத்தியன் said...

சூப்பர்...
அருமையான கற்பனை...

முரளிகண்ணன் said...

:-)))))))))))))))))))))

http://urupudaathathu.blogspot.com/ said...

49

http://urupudaathathu.blogspot.com/ said...

ஃஅம்பது

http://urupudaathathu.blogspot.com/ said...

லேட்டா வந்த்தாலும் எப்படி போட்டேன் பாருங்க அம்பது

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹையோ ஹையோ

http://urupudaathathu.blogspot.com/ said...

தமாசு தமாசு

Unknown said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா :))))

அத்திரி said...

ஹா ஹா ஹா:-)))))))))))))))))))))

- இரவீ - said...

ஏன் ??? ஏன் இப்படி???
சிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்குது (எனக்கு ஒன்னும் ஆய்டாதே?)

உங்க உதவி தேவைப்படலாம் எனக்கு - உங்க தொடர்பு விபரங்களை பகிர்ந்துக்கொங்கோ.

வில்லன் said...

இப்பவும் உங்க பதிவ படிச்சுட்டு எத்தன பேரு போய் சேந்தன்களோ தெரியல.... ஏன்னா பின்னுட்டம் போட ஆளு உசிரோட இருக்கணுமே!!!!!!!!!!