Saturday, February 14, 2009

எனக்கு காதலி கிடைச்சுட்டா!!

நான் வாழ்க்கையிலே எவ்வளவோ பேரை காதலிச்சு இருக்கிறேன். அவங்க எல்லாம் என்னை ஒரு முறையாவது திரும்பி பார்க்க மாட்டாங்களான்னு ஏங்கி இருக்கிறேன், அவங்களை மனசுல சுமக்கிறதை பெருமையா நினைப்பேன், ஒவ்வொரு முறையும் காதல் தோல்வி அடையும் போது வேதனைப் படுவேன் ரெண்டு வாரத்துக்கு, அதற்க்கு அப்புறம் காலியான இடத்திலே இன்னொரு பெண்ணை வைத்து அவளை நினைக்க காதலிக்க ஆரம்பிப்பேன்.

நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்.என்னோட முதல் காதல் எப்ப வந்ததுன்னு என்னால சரியா சொல்ல முடியலை, மூனாம் வகுப்பு படிக்கும் போது என் ௬ட படிக்கும் தோழிக்கு காதல் கடிதம் எழுதினேன், அதை அவள் தன் வீட்டில் காட்டி விட ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிவிழும், அன்றைக்கு ஆரம்பித்த கதை இன்னும் முடியலை.

இன்னைக்கு காதலர் தினம் என்னோட இந்நாள் காதலிக்கு காதல் கடிதம் எழுதி வச்சி இருக்கேன் அதை கொடுக்கத்தான் போய்கிட்டு இருக்கேன்.இவள் என்னோட இருபதாவது காதலி.இதைத்தவிர அவசரக் காதலிகள் கணக்கில் அடங்கா


"மச்சான் நீ வாங்கிட்டு வந்த ரோசா பூ வை மறந்து விட்டுட்ட"


அதை எடுத்துக்கொண்டு "நன்றி மாப்ஸ்""சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா, இந்த தடவையாவது சொதப்பாம ஒழுங்கா சொல்லு""எல்லாம் ஞாபகம் இருக்கு மாப்ஸ்" என் நண்பர்கள் தான் எனக்கு நிறைய யோசனை சொல்லுவாங்க, அவங்களோட பலம் தான் என்னையும் என் காதலையும் வாழ வைக்கிறது.


மரத்தின் நிழலில் என் காதலி நின்று கொண்டு இருந்தாள், யாரும் அவளோடு இல்லை, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் காதலை சொல்லக் கிளம்பினேன். நான் அவளருகே போகும் முன் எனது வகுப்பு ராம் அவளோடு வந்து சேர்ந்து விட்டான். வேறு வழி இல்லாமல் அவர்கள் பேசுவதை சிறிது தூரத்திலே நின்றேன், இருந்தாலும் அவர்கள் பேசுவது என் காதில் விழுந்தது.


அவர்கள் உரையாடலில் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலே எனக்கும் தெரிந்தது அவனும் தன் காதலை அவளிடன் சொல்கிறான் என்று, அவள் அவன் காதலை ஏற்று கொள்கிறாளா என்று அறியா சற்று அருகில் சென்று கதை ௬ர்மையாக வைத்தேன். அவள் அவனிடன் சொன்ன இறுதி வார்த்தையிலே என் கடிதமும், பூ வும் என் கையை விட்டு நழுவி கிழே விழுந்தது. அதற்க்கு மேல் அங்கே நிற்க மனம் இல்லாமல் திரும்பி வந்தேன்."என்ன மச்சான் எடுத்திட்டு போன கடிதத்தையும், பூ வையும் அப்படியே கொண்டு வாரா, என்ன உன் ஆளு வரலையா? இல்ல வேர யாரவது துண்டை போட்டுட்டானா?


"இல்ல மாப்ஸ் அவளைப் பார்த்தேன் பேசினாள், வந்துவிட்டேன்"

"அப்புறம் என்ன கொடுக்கவேண்டியது தானே"

"அவ நம்ம கிளாஸ் ராம் கிட்ட பேசிக்கிட்டு இருந்தா, அதை ஒட்டுக் கேட்டேன்"

"இதுவும் போச்சா, அவன் சந்துல சிந்து பாடிட்டானா?"

"இல்ல மச்சான் அவன்கிட்ட, என்னைத்தான் காதலிக்கிறதா சொன்னா?"

"சூப்பர் மச்சான், கலக்கிட்ட கைய கொடு முதல்ல"

"என்னைத் தான் காதலிகிறேன்னு சொன்னதும்,அவள் மேல எனக்கு இருந்த காதல் காணாம போச்சு, சஸ்பென்ஸ் படத்திலே முடிச்சு அவிழ்ந்த உடனே இவ்வளவு தானான்னு எல்லோரும் சொல்லுகிறமாதிரி, காதல் இவ்வளவு தானான்னு தோன ஆரம்பித்து விட்டது.என்னைத்தான் காதலிக்கிறாள் என்று தெரிந்த பின்னே நான் எப்படி என் காதலை சொல்லமுடியும். "

"எதோ தத்துவம் பேசுற மாதிரி, தரித்திரம் பேசுற,இப்ப என்னடா சொல்ல வாரே?"

"இதுவரைக்கும் நானாத்தான் பெண்கள் பின்னால் அலைந்து இருக்கிறேன்."

"இப்ப தானா வந்ததினாலே,வேண்டாம்ன்னு சொல்லுற அப்படித்தானே?"

"தெரியலையே"


"டேய்.. உன்னை அடிக்காத துடைப்பத்தையும், செருப்பையும் ஊருக்குள்ளே வைக்க ௬டாது,உனக்கு இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது"


"மாப்ஸ் யாருடா இந்த பொண்ணு ரெம்ப அழகா இருக்கா?" தெருவிலே சென்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து.


"புதுசா நம்ம ஏரியாவுக்கு குடிவந்து இருக்கிறாள்"


"எனக்கு புது காதலி கிடைச்சுட்டா மாப்ஸ்"


"என்னை கொலைகாரன் ஆக்கிடாதே ஒவ்வொரு பெண்ணை பார்க்கும் போதும் இதையே தான் சொல்லுற" என திட்டிக்கொண்டே வெளியே கிளம்பினான்.


72 கருத்துக்கள்:

சின்னப் பையன் said...

me the 1st...

சின்னப் பையன் said...

இருங்க.. மெதுவா படிச்சிட்டு வர்றேன்...

:-))

சந்தனமுல்லை said...

ROTFL

சந்தனமுல்லை said...

//என்னைத்தான் காதலிக்கிறாள் என்று தெரிந்த பின்னே நான் எப்படி என் காதலை சொல்லமுடியும். "//

ஆகா....என்ன தத்துவம்!!

சின்னப் பையன் said...

அவ்வ்வ்.. மூணாங்கிளாஸ்லேந்தே இப்படி விவரமாத்தான் இருந்தீங்களா??????????????//

பழமைபேசி said...

//"எனக்கு புது காதலி கிடைச்சுட்டா மாப்ஸ்"//

நீர் இன்னமும் இதையேதான் சொல்லிட்டு இருக்கீரு.... யாரும் இன்னும் உங்க வீட்ல இதைப் பத்தி சொல்லலையாவே?

அப்துல்மாலிக் said...

அய்யா கலக்கல் வரிகள்

அப்துல்மாலிக் said...

//நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்.//

சரிதான்.. எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க இப்படி

அப்துல்மாலிக் said...

//"இல்ல மச்சான் அவன்கிட்ட, என்னைத்தான் காதலிக்கிறதா சொன்னா?"
//

ஹா ஹா ரசிச்ச வரிகள்

Anonymous said...

"டேய்.. உன்னை அடிக்காத துடைப்பத்தையும், செருப்பையும் ஊருக்குள்ளே வைக்க ௬டாது,உனக்கு இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது"
**************
கரக்டாதான் சொல்லிகீரான்

அப்துல்மாலிக் said...

//"எனக்கு புது காதலி கிடைச்சுட்டா மாப்ஸ்"
//

நல்ல எழுத்தோட்டம் உங்கள் பதிவில்

வாழ்த்துக்கள் இதேமாதிரி நிறைய காதலிகள் கிடைக்க‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

ஆதவா said...

ஏங்க.... உங்க அனுபவத்தை கதையா எழுதியிருக்கீங்க போல????

ஆதவா said...

நான் வாழ்க்கையிலே எவ்வளவோ பேரை காதலிச்சு இருக்கிறேன்.

எத்தனை பேருங்க?ஆதவா said...

இவள் என்னோட இருபதாவது காதலி.இதைத்தவிர அவசரக் காதலிகள் கணக்கில் அடங்கா

ஓ!!! அவசரக் காதலி வேறயா????  ஏங்க சார் இருபதை பேரஆ???/ நமக்கெல்லாம் ஒண்ணு கூட இல்லீங்க.....

ஆதவா said...

"என்னைத் தான் காதலிகிறேன்னு சொன்னதும்,
அவள் மேல எனக்கு இருந்த காதல் காணாம போச்சு,


அடடா!!! என்னே ஒரு தத்துவம்....  !!!!

ஆதவா said...

"என்னை கொலைகாரன் ஆக்கிடாதே


இதெல்லாம் ஓவருங்க.....  நாங்கல்லாம் ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்கோம்.. நீங்க என்னடான்னாக்கா, கிடச்சதையே விடறீங்களே!!!!

கதை நல்லா இருக்குங்க...  

அருமையான எழுத்து நடை.

CA Venkatesh Krishnan said...

இப்படியும் காதலர்கள். இது நீங்க இல்லைன்னு நான் நம்பறேன்.:)

கதைகள நம்ம அனுபவமா சொல்லும் போது நல்லா இருக்குது இல்லைங்களா?

CA Venkatesh Krishnan said...

இப்படியும் காதலர்கள். இது நீங்க இல்லைன்னு நான் நம்பறேன்.:)

கதைகள நம்ம அனுபவமா சொல்லும் போது நல்லா இருக்குது இல்லைங்களா?

அ.மு.செய்யது said...

அப்படியா..சொல்லவேயில்ல..

கிரி said...

உங்க அளவுக்கு நான் மோசமில்ல! :-))

S.R.Rajasekaran said...

\\நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்\\


அன்பு அதிகமா உள்ளவங்க எதையாவது காதலிப்பாங்க .அது ஆணாக இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம் ஏன் மிருகங்களைகூட காதலிப்பார்கள் .நாய் ,பூனை ......
அப்படிதான் இதுவும்ன்னு நினைக்கிறேன்

ஹேமா said...

நசரேயன்,கடவுளே....மூணு வயசிலயிருந்தா.....!சரி தொடரும் காதல்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

//நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்.//

கொஞ்சம் டேஞ்சரான ஆளோ நீங்க!

ஹேமா said...

//"என்னைத் தான் காதலிகிறேன்னு சொன்னதும்,அவள் மேல எனக்கு இருந்த காதல் காணாம போச்சு,//

அட.... பாருங்களேன்.

//"டேய்.. உன்னை அடிக்காத துடைப்பத்தையும், செருப்பையும் ஊருக்குள்ளே வைக்க ௬டாது,உனக்கு இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது"//

இதோட விட்டாங்களா.இது பத்தாதே.இன்னும் இதைவிட அபிஷேகங்கள் நிறைய கொடுக்கலாமே!

தாரணி பிரியா said...

மூணாவது படிக்கும் போதே :))))))))))))))

என்னா ஒரு தத்துவம் என்ன ஒரு விளக்கம்.

வாழ்க வேற என்ன சொல்ல நீங்களே சொல்லுங்க :)

அத்திரி said...

//நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்.என்னோட முதல் காதல் எப்ப வந்ததுன்னு என்னால சரியா சொல்ல முடியலை,//

))))))))))))))))))

அத்திரி said...

எல்லாம் ஓகே... புளியங்குடியில எத்தனை பேரை காதலிச்சீங்க..அமெரிக்காவுல எத்தனை பேரை காதலிச்சீங்க ??????????????//

ஸ்ரீதர்கண்ணன் said...
This comment has been removed by the author.
ஸ்ரீதர்கண்ணன் said...

அவள் அவனிடன் சொன்ன இறுதி வார்த்தையிலே என் கடிதமும், பூ வும் என் கையை விட்டு நழுவி கிழே விழுந்தது.

டமால்....

கார்த்திகைப் பாண்டியன் said...

இதல்லாம் ரொம்ப ஓவர் சாமி. அவனவன் இங்க ஒன்னு கிடைக்காம மண்டை காஞ்சு அலையுறோம்.. நீங்க என்னடான்னா..

வேத்தியன் said...

//"எனக்கு காதலி கிடைச்சுட்டா!!"//

வாழ்த்துகள்...

புதியவன் said...

//மூனாம் வகுப்பு படிக்கும் போது என் ௬ட படிக்கும் தோழிக்கு காதல் கடிதம் எழுதினேன்//

நீங்க ரொம்ப பெரிய ஆளா இருப்பீங்க போல...

Aero said...

innum koncham nalla eluthirukkalam....

touch -a illa pa....

ராஜ நடராஜன் said...

உஷ்!மெதுவாப் பேசுங்க!ராம் சேனாக்காரன் காதுல விழுந்துடப் போகுது:)

S.R.Rajasekaran said...

\\\மூனாம் வகுப்பு படிக்கும் போது என் ௬ட படிக்கும் தோழிக்கு காதல் கடிதம் எழுதினேன், அதை அவள் தன் வீட்டில் காட்டி விட ஒரு வாரத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிவிழும், \\

தப்பு தப்பா எழுதினா அடித்தான் விழும்

S.R.Rajasekaran said...

\\இன்னைக்கு காதலர் தினம் என்னோட இந்நாள் காதலிக்கு காதல் கடிதம் எழுதி வச்சி இருக்கேன் அதை கொடுக்கத்தான் போய்கிட்டு இருக்கேன்\\


இதையாவது ஒழுங்கா எழுதினியா

S.R.Rajasekaran said...

"மச்சான் நீ வாங்கிட்டு வந்த ரோசா பூ வை மறந்து விட்டுட்ட"


ரெம்ப முக்கியம்

S.R.Rajasekaran said...

"சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா, இந்த தடவையாவது சொதப்பாம ஒழுங்கா சொல்லு"அங்கதான் பாத்தவுடனே கைகால் எல்லாம் நடுங்கும் வாய் கொளரும் அப்புறம் எப்படி

S.R.Rajasekaran said...

\\அவங்களோட பலம் தான் என்னையும் என் காதலையும் வாழ வைக்கிறது.\\


அவங்க என்ன யூரியாவா

S.R.Rajasekaran said...

\\மரத்தின் நிழலில் என் காதலி நின்று கொண்டு இருந்தாள்\\\முருங்க மரத்துமேலையா நல்லா பாரு அது ஆவியா இருக்க போகுது

S.R.Rajasekaran said...

\\அவள் அவனிடன் சொன்ன இறுதி வார்த்தையிலே என் கடிதமும், பூ வும் என் கையை விட்டு நழுவி கிழே விழுந்தது.\\


அவ்வளவு கேவலமாவா சொன்னா

S.R.Rajasekaran said...

\\"அப்புறம் என்ன கொடுக்கவேண்டியது தானே"\\
அப்புறம் செருப்படி யாரு வாங்குறது

S.R.Rajasekaran said...

\\"புதுசா நம்ம ஏரியாவுக்கு குடிவந்து இருக்கிறாள்"\\


அந்த பக்கிக்கு வேற ஏரியாவே கிடைக்கலியா

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

:)))))))

Anonymous said...

அத்திரி said...
எல்லாம் ஓகே... புளியங்குடியில எத்தனை பேரை காதலிச்சீங்க..அமெரிக்காவுல எத்தனை பேரை காதலிச்சீங்க ??????????????//
//
-))

வில்லன் said...

//அன்றைக்கு ஆரம்பித்த கதை இன்னும் முடியலை.//

இப்ப இங்க யாருக்கு காதல் கடிதம் எழுதுறிங்க. இங்கிலிசுல எழுதுறது கொஞ்சம் கஷ்டமாச்சே!!!!!!!!!!! எப்படி சமாளிகிங்க???????????????

ஆமா இந்த சமாசாரம் எல்லாம் வேறுள தெரியுமா ??????????? இல்லன்னா கொஞ்சம் போட்டு குடுக்கத்தான்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//"டேய்.. உன்னை அடிக்காத துடைப்பத்தையும், செருப்பையும் ஊருக்குள்ளே வைக்க ௬டாது,உனக்கு இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது"//

என்ன கேட்டா உங்கள மாதிரி ஆள ஊருல இருக்க விடுறதே தப்பு. அதானோ என்னமோ தெரியல பிரேம்ஜி உங்கள இங்க அனுப்பிட்டார். தப்பிசிங்க போங்க.

வில்லன் said...

ஆமா இப்ப ஊருக்கு போனா என்ன பண்ணுவிங்க. லிவுல இருக்குற நாளுல எதாவது ஒன்ன பிராக்கெட் போடுருவிங்களா!!!!!!!!!!! ஊர்ருல பொண்ணுங்களே இருக்கவுடமாடிங்களா. இந்த கொடுமைய யாருமே கேட்கமாடிங்களா. யாருமே இந்த மனுஷன் ஊருல இருந்து இந்த "ப்லோக்" படிக்கிறது இல்லையா????

கொடுமைடா சாமி.

வில்லன் said...

ஆமா இப்ப ஊருக்கு போனா என்ன பண்ணுவிங்க. லிவுல இருக்குற நாளுல எதாவது ஒன்ன பிராக்கெட் போடுருவிங்களா!!!!!!!!!!! ஊர்ருல பொண்ணுங்களே இருக்கவுடமாடிங்களா. இந்த கொடுமைய யாருமே கேட்கமாடிங்களா. யாருமே இந்த மனுஷன் ஊருல இருந்து இந்த "ப்லோக்" படிக்கிறது இல்லையா????

கொடுமைடா சாமி.

வில்லன் said...

ஆமா இப்ப ஊருக்கு போனா என்ன பண்ணுவிங்க. லிவுல இருக்குற நாளுல எதாவது ஒன்ன பிராக்கெட் போடுருவிங்களா!!!!!!!!!!! ஊர்ருல பொண்ணுங்களே இருக்கவுடமாடிங்களா. இந்த கொடுமைய யாருமே கேட்கமாடிங்களா. யாருமே இந்த மனுஷன் ஊருல இருந்து இந்த "ப்லோக்" படிக்கிறது இல்லையா????

கொடுமைடா சாமி.

வில்லன் said...

எங்கே சுதன்..... உடனே நடவடிக்கை எடுக்க சொல்லுவோம்.

வில்லன் said...

//கடவுளே....மூணு வயசிலயிருந்தா.....!//

இதெல்லாம் ரொம்ப அநியாயம்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//"மாப்ஸ் யாருடா இந்த பொண்ணு ரெம்ப அழகா இருக்கா?" தெருவிலே சென்று கொண்டிருந்த அந்த பெண்ணைப் பார்த்து.

"புதுசா நம்ம ஏரியாவுக்கு குடிவந்து இருக்கிறாள்"

"எனக்கு புது காதலி கிடைச்சுட்டா மாப்ஸ்"//

கொடும கொடுமன்னு வேற எடம் தேடி போனா அங்க அதவிட கொடுமை

தேவன் மாயம் said...

/நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்.//

நல்லாயிருங்க.அடுத்தவனைக்கடுப்படிக்கிறியளே! நாயமா இது!

S.R.Rajasekaran said...

\\ஆமா இப்ப ஊருக்கு போனா என்ன பண்ணுவிங்க. லிவுல இருக்குற நாளுல எதாவது ஒன்ன பிராக்கெட் போடுருவிங்களா!!!!!!!!!!! ஊர்ருல பொண்ணுங்களே இருக்கவுடமாடிங்களா. இந்த கொடுமைய யாருமே கேட்கமாடிங்களா. யாருமே இந்த மனுஷன் ஊருல இருந்து இந்த "ப்லோக்" படிக்கிறது இல்லையா????\\\


நாங்கெல்லாம் ரெம்ப நல்லவங்க அப்படின்னு ஊரு நம்புது .நீங்க என்னதான் கூவினாலும் நீங்க சொல்றத யாரும் நாம மாட்டாங்க

"அட மெய்யாலுமே நாங்க ரெம்ப நல்லவங்க"!

gayathri said...

இதுவரைக்கும் நானாத்தான் பெண்கள் பின்னால் அலைந்து இருக்கிறேன்."
"இப்ப தானா வந்ததினாலே,வேண்டாம்ன்னு சொல்லுற அப்படித்தானே?"

mavana ithanala than ponuga ellam ungala alayavetranga

gayathri said...

டேய்.. உன்னை அடிக்காத துடைப்பத்தையும், செருப்பையும் ஊருக்குள்ளே வைக்க ௬டாது,உனக்கு இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது"

sariya than solli irukaru.unna yarachi love panna antha ponnu venamnu solla pora.nee love panra ponnu vera yarayavathu love panna pothu.ippa iruntha இந்த ஜென்மத்திலே காதலியும் கிடைக்காது, கல்யாணமும் நடக்காது

gayathri said...

vanthathu than vanthuten

gayathri said...

me they 60

வில்லன் said...

// S.R.Rajasekaran said...
\\ஆமா இப்ப ஊருக்கு போனா என்ன பண்ணுவிங்க. லிவுல இருக்குற நாளுல எதாவது ஒன்ன பிராக்கெட் போடுருவிங்களா!!!!!!!!!!! ஊர்ருல பொண்ணுங்களே இருக்கவுடமாடிங்களா. இந்த கொடுமைய யாருமே கேட்கமாடிங்களா. யாருமே இந்த மனுஷன் ஊருல இருந்து இந்த "ப்லோக்" படிக்கிறது இல்லையா????\\\


நாங்கெல்லாம் ரெம்ப நல்லவங்க அப்படின்னு ஊரு நம்புது .நீங்க என்னதான் கூவினாலும் நீங்க சொல்றத யாரும் நாம மாட்டாங்க

"அட மெய்யாலுமே நாங்க ரெம்ப நல்லவங்க"!
//

ராஜசேகரன் நீங்களுமா!!!!!!!!!!!!!!!!!!!! என்னால நம்பவே முடியல.

Poornima Saravana kumar said...

//எனக்கு காதலி கிடைச்சுட்டா!! //

ஆமா உங்களுக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கிறதா இல்ல நான் கெள்விப்பட்டேன்!!!

Poornima Saravana kumar said...

//அவள் அவன் காதலை ஏற்று கொள்கிறாளா என்று அறியா சற்று அருகில் சென்று கதை ௬ர்மையாக வைத்தேன்//

வயிற்றெரிச்சல்..

Poornima Saravana kumar said...

//என்னைத் தான் காதலிகிறேன்னு சொன்னதும்,அவள் மேல எனக்கு இருந்த காதல் காணாம போச்சு, சஸ்பென்ஸ் படத்திலே முடிச்சு அவிழ்ந்த உடனே இவ்வளவு தானான்னு எல்லோரும் சொல்லுகிறமாதிரி, காதல் இவ்வளவு தானான்னு தோன ஆரம்பித்து விட்டது.என்னைத்தான் காதலிக்கிறாள் என்று தெரிந்த பின்னே நான் எப்படி என் காதலை சொல்லமுடியும்//

இது புதுசா இருக்கே..

Poornima Saravana kumar said...

//எனக்கு புது காதலி கிடைச்சுட்டா மாப்ஸ்//

இதே தொழிலாதான் இருந்தீங்ளா??

Poornima Saravana kumar said...

//என்னை கொலைகாரன் ஆக்கிடாதே ஒவ்வொரு பெண்ணை பார்க்கும் போதும் இதையே தான் சொல்லுற//

முடியலை..

வில்லன் said...

இதனால சகலருக்கும் அறிவிக்குறது என்னன்னா............

நாளர வருஷம் கழிச்சி வில்லன் ரெண்டு வாரத்துல ஊற பாத்து (தாய் நாட்ட பாத்து) திரும்பி போறாரு...... ஊருக்கு போயி மத்த விவரம் சொல்லுவாரு.

Anonymous said...

நசரேயன் உங்க எழுத்து நடை அருமையாக இருக்கு. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கிறது. இதற்கு முந்தி நான் கடவுள்(வெளி வருவதற்கு முன்பே) கற்பனை விமர்சனமும் அருமையாக இருந்தது. கலக்கியிருக்கீங்க போங்க.

Arasi Raj said...

\*****"எதோ தத்துவம் பேசுற மாதிரி, தரித்திரம் பேசுற,இப்ப என்னடா சொல்ல வாரே?"
*****/
வி வி சி [LOL- விழுந்து விழுந்து சிரித்தேன்]

சரியான கப்சா மன்னன் போல இருக்கே நீங்க

தயா said...
This comment has been removed by the author.
தயா said...

வணக்கம், உங்கள் கதை எமது கவனத்தை ஈர்த்துள்ளது!
அதை குறும்படமாக்க விரும்புகின்றோம்.
உங்களுக்கு உடன் பாடாயின் தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும்
தொடர்பு:
யாழ் மீடியா இணையம்
ID : contact@yaalmedia.com

Nanri

அமுதா கிருஷ்ணா said...

//நான் காதலி இல்லாம இருந்த நாட்கள் ரெம்ப குறைவுன்னு சொல்லலாம்//

super...